பாடல் 12 · ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை · உறையூர் தே. பெரியசாமி பிள்ளை
ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை 12 · ஆசிரியப்பா
குருவென வந்து குவலயந் தன்னில்இருவினை நீக்கி யெனையரு கிருத்திமுப்பொரு ளுண்மை மெய்ப்படக் கிளத்துவம்வாட்டமொன்றின்றி கேட்டிநீ யென்றுசிவமே சீவன் சேரிருண் மலமேமாயை யிரண்டென் றாயவோ ராறும்அனாதியே யுளவென் றெனாதுள மொப்பநன்றெடுத் தியம்பி மன்றமற் றவையுடன்முற்பொருள் யாமே புற்கல னீயேசெம்பிற் களிம்பும் பம்பிய வாறேநின்னிடை நீங்கா மன்னிருட் கட்டேஅவற்றுள்சிவமா மெம்மியற்செப்புங்காலைநித்திய நின்மல நிரஞ்சன நிராமயநிர்க்குண நிச்சல நிர்விகா ரம்பரம்சுத்தம் முதன்மை தொலைவில் வியாபகம்ஏகஞ் சுதந்தர மின்பநிர் விடையம்சத்துவ மகண்டிதந் தத்துவா தீதம்ஆமிவை முதலாந் தோமறு மியல்பினம்அதா அன்று.ஆன்ம விலக்கண மறையுங் காலைஎந்நிறஞ் சாரு மந்நிற மேயாய்விளங்குந் தூய பளிங்கு போலஎம்மைச் சாரி னெம்மியல் பேய்ந்தும்மலத்தைச் சாரின் மலத்தியல் வாய்ந்தும்கண்ணுஞ் சார்ந்ததன் வண்ணமே யாயும்சத்தைச் சார்வுழி சத்தே யாயும்அசத்தைச் சார்வுழி யசத்தே யாயும்தயங்குந் திறனாற் சதசத் தாயும்அறிவித் தன்றி யறியா தாயும்யாமென் றுளமோ தாமன் றுளவாய்எண்ணிறந் தனவாய் நண்ணுவியா பகமாய்தனவய மிலவாய்த் தலைவனை யுளவாய்ச்சிற்றறி வோடு சிறுதொழி லினவாய்மலத்தடை யினவாய் வல்வினைக் கீடாய்ப்பல்வே றுடலந் தொல்பே ருலகில்எடுத்தெடுத் தெய்க்கு மியல்பின வாயும்ஆயபல் லியலு மேயவான் மாவேஅவைதாம்ஆணவ மொன்றே யமைவிஞ் ஞானகலர்க ளென்னச் சிலருள ரவரேஅநாதியே யொருமல மமைந்தோ ரென்றும்விஞ்ஞா னாதி விளம்புமை வகையால்ஏனைய விருமல மிரிந்தோ ரென்றும்இருவகை யாக வியம்பப் படுமேஅதா அன்றுஆணவங் கன்ம மமையும் பிரளையாகலர்க ளென்னச் சிலருள ரவரேஅநாதியே யிருமல மமைந்தோ ரென்றும்பிரளையத் தான்மல பெந்தம் பெயர்ந்தேஇருமல முடையா ரென்று மென்றும்இருவித மாக வியம்பப் படுமேஅதா அன்றுஆணவங் கன்ம மார்தரு மாயைஎனுமும் மலங்களு மியற்கையி னுளராய்சகல ரென்னத் தயங்குனர் பலரேஅதா அன்றுபாச விலக்கணம் பகருங் காலைஆணவங் கன்ம மாயைமா யேயம்திரோதை யென்னத் திகழுமை வகையாய்அவற்றுள்ஆணவ மேகமா யாருயிர் தோறும்வெவ்வே றாகி விரகையுந் தொழிலையும்மறைத்து நின்றே மருவிய தத்தங்கால வெல்லையிற் கடக்கு மநேகசத்திக ளுடைத்தாய்ச் சடமா கும்மேகன்மமோ வவ்வணுக் கண்மனம் வாக்குக்காயமென் றியம்ப வாயமூன் றானும்இயற்றிய புண்ணிய மிருமபா வம்மேஇவைதாம்எய்திய பிறப்பி லியற்றிய பொழுதில்ஆகா மியமென் றடைபவந் தோறும்இங்ஙன மாக வீட்டப் பெற்றுப்பக்குவ முறும்வரை பகர்மதி தத்துவம்ஆதர வாக வமைமா யையிலேகிடக்கும் பொழுது கிளர்சஞ் சிதமெனறிவற்றுள் பக்குவ மெய்திய வைதாம்மேல்வரு முடலையு மெய்யது கொண்டுதுய்க்கப் பெறுஞ்சுக துன்பங் களையுந்தந்துப யன்படு ததிபிரா ரத்தம்என்றபி தான மேற்கு மென்பஇனியேமாயையோ விந்து மோகினி மானேஎனமூ வகையா மிவைகளி னுள்ளேமுன்னவை யிரண்டு மொழியினித் தியமேபின்னது பின்னதிற் பிறத்தலா வநித்தம்அவற்றுள்சுத்தம்நித் தியமாய்த் துலங்குவியா பகமாய்அருவமாய்ச் சடமா யான்றசொல் வடிவும்சுத்தமா கியபொருள் வடிவுந் தோன்றற்காதிகா ரணமா யலமரல் செயாதாய்ஒருமல முடையார்க் குறுதநு முதலாய்வயங்கு மசுத்த மாயையோ வென்னில்நித்தம் வியாபக நிகழரு வஞ்சடயஎனுநான் கியலோ டியம்பு பிரளையாகலர்க்குத் தநுவொடு கரண புவனபோகஞ் சுத்தா சுத்தமாய்ப் பொருந்திமயக்குஞ் செய்வதாய் மருவுமென்பபகுதியின் பான்மை பசருங் காலைவிந்துமே லாகி விளங்கி யிருப்பதானதின் கீழாய்த் தணிந்த மோகினியின்தூலமா கியபரி ணாமம தாகிமும்மலத் தினர்க்கே மொழிதநு கரணபுவனபோ கம்மாய்ப் பொருந்தி நாளும்ஆன்ம வறிவோ டவர்த் தொழி லிவற்றைஏகதே சத்தன வாக வியற்றிமயக்கமே செய்யும் வைந்தவம் விந்தின்காரிய மாகிக் கலந்திடு முயிரைத்திரோதையா தென்னச் செப்புங் காலைஆணவங் கன்ம மார்தரு மாயைஎனுமும் மலங்களை யிருந்தொழிற் படுத்திபாகம் வருத்தெம் பகரொடு சத்தியேஇவையே முப்பொரு ணவையி லிலக்கணம்எனினும்வண்ணான் புடவையின் மாசினை க்கூட்டிமுன்னுள மாசையு முடிப்பதே பொருவயாமேகாரண மதனுக் கியைகா ரியமாய்மாயை கன்ம மருவறச் சேர்த்துவன்மலப் பகையை மாற்றுவ நுமக்கேஇதனால்பக்குவ மெய்திய பான்மையோர் பலமே*அதனால்ஒருமல முடையார்க் குணர்விற் குணர்வாய்இருமல முடையார்க் கீரிரு புயமும்காள கண்டமுங் கண்ணுறு நுதலும்உறுமோ ருருவோ டுற்றுநன் கருள்வோம்மானைக் காட்டி மான்பிடிப் பதுபோல்மூழ்குநும் போலு மும்மலத் தார்க்கேஅருள்வான் வேண்டி யருளா லினையமானிட வடிவம் வகித்தீண் டெழுந்தனம்என்று பலவா யெடுத்தெடுத் தியம்பிகன்றிய மலநோய்க் கட்டகன் றெய்தும்ஒன்றி யொன்றா வுண்மையு முரைத்தேபுழுத்த நாயினும் புன்மையே னாயகல்லா வறிவிற் கடைப்பட் டேனைத்தன்னடி போற்றுந் தரத்தி னிறீஇஇன்னருள் வழங்கி யேன்று கொண்டனன்கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பிகாமரம் பாடும் பூமரச் சோலைவளமெலாங் குலவு மிளமர்நற் பதியில்ஓங்கொளி ஞானப் பிழம்பாய்வயங்குமெய் கண்ட மாதவ நிதியே