பாடல் 16 · ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை · உறையூர் தே. பெரியசாமி பிள்ளை

ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை 16 · ஆசிரியப்பா

நூல்பல தேர்ந்த நுண்புல முடையசெந்தமிழ் மக்காள் செப்புவங் கேண்மோவினையி னீங்கி விளங்கிய வறிவின்முனைவனாகிய முக்கண் மூர்த்திஆதி நாளி லருளிய முதனூல்இருக்கு யெசுரு சாம மதர்வம்என்றெடுத் தியம்பு மீரிரு மறையுங்காமிகம் யோகஜஞ் சிந்தியங் காரணம்அசிதந் தீப்தஞ் சூக்குமஞ் சகச்சிரம்அஞ்சுமான் சுப்பிர பேதம் விசயம்நிச்சுவா சஞ்சுவா யம்புவ மாக்கினேயம் வீரம் ரௌரவ மகுடம்விமலஞ் சந்திர ஞான முகவிம்பம்புரோற் கீதம் லளிதஞ் சித்தம்சந்தா னஞ்சர் வோக்தம் பாரமேச்சுரங் கிரணம் வாதுல மென்னநாலே ழாக நவிலா கமமும்எனவிரு வகையா யிலகு மென்பஅவற்றுள்உண்மைப் பொருளை யொரேவழி யுணர்த்தாதவரவர் பக்குவத் தளவிற் கேற்பபலதே வரையும் பாற்பட வகுத்தேகரும காண்டங் கஞலுஞ் ஞானகாண்ட மென்ன வீண்டிரு வகையாய்விளங்குந் திறனால் வேதம் பொதுவாய்புவியோர்க் குரிய பூருவ மாமேஅதனால்ஒன்றே பதியவ் வொன்றுஞ் சிவமேஎன்றெடுத் தியம்பி யெண்ணி லாருயிர்கள்அப்பொரு ளெய்துபு வரும்பெறல் வாழ்வில்தலைப்படு நெறியாஞ் சரியை கிரியாயோக ஞான வொழுக்கங் களையும்இன்றி யமையா வேனைய பிறவும்செப்புந் திறனாற் சிவாகமஞ் சிறப்பாய்சத்தினி பாதத் துத்தமர்க் குரியசித்தாந்த மாகித் திகழ்ந்ததை யன்றேஅங்ஙன மாய வவ்வா கமமும்வடமொழி நன்கு வல்லார்க் கன்றிஏனை யோருக் கெட்டுணை யேனும்பயப்பா டிலவாம் பான்மை யோர்ந்தேமுப்பொரு ளுண்மை முறைபெற வகுத்துக்கரதலா மலகங் கடுப்பக் காட்டித்திடமுறு மொழியாந் திராவிட மொழியில்நாற்பா னெறியின் மேற்பா லவற்கேசெவ்விதி னொருநூற் றிகழ்தர வளித்தான்.அது தான்தன்பெய ரொருகாற் றாலுறச் சாற்றினும்வன்பவப் பகையை மாற்று மருந்தாம்சிவஞான போதமென் றெய்வத நூலேஇனியேஅந்நூ லருளிய வருட்பெருங் கொண்மூஆர்கொ லென்னி லடியே முய்யப்பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ப் பதிதான்கைதவ மிலாது செய்தவப் பயனான்முந்நூன் மொழிந்த முழுமுதற் பொருளேஇந் நூற் பொருட்டா யிருகண் மூர்த்தியாய்திருவவ தாரஞ் செய்தருள் செம்மல்மெய்கண்ட நாம மேவுசிந் தாமணிகற்றவ ருண்ணுங் கற்பக நறுங்கனிமற்றவ ரறியா மாணிக்க மாமலைஎளியே னுளமு மிளமர்ப் பதியும்ஒருவா துறையு மொப்பிலாச் சுடரேஆதலின்ஞான காண்ட நன்னூ லாயசாத்திர மதனைத் தமியே முணர்ந்துஎங்ஙனம் வீடுபே றெய்துவ மென்னஉறுபெருங் கவலை யொழிமி னொழிமின்அன்னூற் சிரமிசை யமைவிற் றாங்கிஇன்னோ னமரு மிருந்தளி சூழ்ந்துதிருமுன் னின்று செங்கை கூப்பிஆனா வமுதே வருவே வுருவேஞானா கரனே நன்றே வொன்றேஊனே வுயிரே வுணர்வே வுளமேதேனே பாகே திருவே குருவேகண்ணே மணியே கதியே நிதியேஎன்றெடுத் தேத்தி யிருகணீர் வாரநெஞ்சநெக் குருகி நிற்பீ ராகில்மலபரி பாகம் வாய்ப்பஎண்ணிய வெண்ணியாங் கெய்துவிர் நன்கே
பகிர்