நூற்பா 258 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்

எழுத்ததிகாரம் · உயிர்மயங்கியல் · பாடல் 52 / 93

தொல்காப்பியம் 258 · உயிர்மயங்கியல்

உகர இறுதி அகர இயற்றே.
பகிர்

விளக்கம்

இஃது உகர ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது.

இ -ள்: உகர இறுதி அகர இயற்று--உகர ஈற்றுப் பெயர் அல்வழிக்கண் அகர ஈற்று இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும்; எ - று.

எ - டு; கடுக்குறிது சிறிது தீது பெரிது என வரும். (52)