நூற்பா 261 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்

எழுத்ததிகாரம் · உயிர்மயங்கியல் · பாடல் 55 / 93

தொல்காப்பியம் 261 · உயிர்மயங்கியல்

சுட்டு முதல் இறுதி இயல்பு ஆகும்மே.
பகிர்

விளக்கம்

இஃது இவ் வீற்றுட் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கி இயல்பு கூறுகின்றது.

இ - ள்: சுட்டு முதல் இறுதி -- சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகர ஈற்றுப் பெயர், இயல்பாகும் -- முற்கூறிய வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும். ; எ - று.

எ - டு: அதுகுறிது இதுகுறிது உதுகுறிது சிறிது தீது பெரிது என வரும்.

முற்கூறியவை சுட்டுமாத்திரை, இவை கூட்டுப்பெயராக உணர்க (55)