நூற்பா 263 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்
எழுத்ததிகாரம் · உயிர்மயங்கியல் · பாடல் 57 / 93
தொல்காப்பியம் 263 · உயிர்மயங்கியல்
வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே.
விளக்கம்
இஃது இவ் வீற்றுப்பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுகின்றது.
இ - ள்: வேற்றுமைக் கண்ணும் -- உகர ஈற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக் கண்ணும், அதனோரற்று -- அகர ஈற்று அல்வழியோடு ஒருதன்மைத்தாய் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்குமுடியும்; எ - று.
எ - டு: கடுக்காய் செதிள் தோல் பூ எனவும், கடுக்கடுமை எனவும் வரும். (57)