படலம் 1 / 39 · யுத்த காண்டம் · கம்பர்

கடல் காண் படலம்

Kadal Kaan Padalam · 11 பாடல்கள் · 6190–6200

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 6190

வானரம் படை தென்கடற்கரையிற் சென்று தங்குதல்

ஊழி திரியும் காலத்தும் உலையாநிலைய உயர்கிரியும்வாழி வற்றா மறிகடலும் மண்ணும் வடபால் வான் தோயபாழித் தெற்கு உள்ளன கிரியும் நிலனும் தாழப் பரந்து எழுந்தஏழு பத்தின் பெருவெள்ளம் மகர வெள்ளத்து இறுத்ததால்.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 6191

இராமன் கடலைக் காணுதல்

பொங்கிப் பரந்த பெருஞ்சேனை புறத்தும் அகத்தும் புடைசுற்றச்சங்கின் பொலிந்த கையாளைப் பிரிந்த பின்பு தமக்கு இனமாம்கொங்கின் பொலிந்த தாமரையின் குழுவும் துயில்வு உற்று, இதழ் குவிக்கும்கங்குல் பொழுதும் துயிலாத கண்ணன் கடலைக் கண்ணுற்றான்.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 6192

அலைப்பரப்பின் தோற்றம்

சேய காலம் பிரிந்து அகலத் திரிந்தான், மீண்டும் சேக்கையின் பால்மாயன் வந்தான், இனி வளர்வான் என்று கருதி, வரும் தென்றல்,தூய மலர்போல் நுரைத் தொகையும் முத்தும் சிந்திப் புடை சுருட்டிப்பாயல் உதறிப் படுப்பதே ஒத்த திரையின் பரப்பு; அம்மா!
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 6193

தென்றலால் இராமன் வருந்தல்

வழிக்கும் கண்ணீர் அழுவத்து வஞ்சி அழுங்க வந்து அடர்ந்தபழிக்கும், காமன் பூங்கணைக்கும் பற்றாநின்றான் பொன் தோளைச்சுழிக்கும் கொல்லன் ஒல் உலையில் துள்ளும் பொறியின் சுடும் அன்னே!கொழிக்கும் கடலின் நெடும் திரைவாய்த் தென்றல் தூற்றும் குறுந்து திவலை.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 6194
நென்னல் கண்ட திருமேனி இன்று பிறிது ஆய், நிலைதளர்வான்தன்னைக் கண்டும் இரங்காது தனியே கதறும் தடம் கடல்வாய்ப்பின்னல் திரைமேல் தவழ்கின்ற பிள்ளைத் தென்றல், கள் உயிர்க்கும்புன்னைக் குறும் பூ நறுஞ்சுண்ணம் பூசாது ஒருகால் போகாதே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 6195

பவளம் தோன்றுதல்

சிலை மேல் கொண்ட திரு நெடும் தோட்கு உவமை மலையும் சிறிது ஏய்ப்பநிலை மேற்கொண்டு மெலிகின்ற நெடியோன் தன்முன் படி ஏழும்தலை மேல் கொண்ட கற்பினாள், மணிவாய் என்னத் தனிதோன்றிக்கொலைமேற் கொண்டு, ஆர் உயிர் குடிக்கும் கூற்றம் கொல்லோ கொடிப் பவளம்.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 6196

முத்து வெளிப்படல்

தூரம் இல்லை மயில் இருந்த சூழல் என்று மனம் செல்ல,வீரம் வில்லி, நெடுமானம் வெல்ல நாளும் மெலிவானுக்கு,'ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு'ஏழைமூரல் முறுவல் குறி காட்டி, முத்தே! உயிரை முடிப்பாயோ?
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 6197

கடலின் தோற்றம்

இந்து அன்ன நுதல் பேதை இருந்தாள் நீங்கா இடர் கொடியேன்தந்த பாவை தவப்பாவை தனிமை தகவோ? எனத் தளர்ந்துசிந்துகின்ற நறும் தரளக் கண்ணீர் ததும்பத் திரைத்து எழுந்துவந்து வள்ளல் மலர்த் தாளில் வீழ்வது ஏய்க்கும், மறி கடலே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 6198
பள்ளி அரவில் பேர் உலகம் பசுங்கல் ஆகப் பனிக் கற்றைதுள்ளி நறு மென் புனல்தெளிப்பத் தூ நீர்க் குழவி முறை சுழற்றி,வெள்ளி வண்ண நுரைக் கலவை வெதும்பும் அண்ணல் திருமேனிக்குஅள்ளி அப்பத் திரைக் கரத்தால் அரைப்பது ஏய்க்கும் அணி ஆழி.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 6199
கொங்கைக் குயிலைத் துயர் நீக்கி, இமையோர்க்கு உற்ற குறை முற்ற,வெம் கைசிலையன் தூணியினன் விடாத முனிவின் மேல் செல்லும்கங்கைத் திருநாடு உடையானைக் கண்டு நெஞ்சம் களி கூரஅம் கைத் திரைகள் எடுத்து ஓடி, ஆர்த்தது ஒத்தது அணி ஆழி.
பாடலின் தனிப் பக்கம்
11 பாடல் 6200

இராமன் மேல்விளைவு எண்ணிக் கடற்கரையில் தங்குதல்

இன்னது ஆய கருங்கடலை எய்தி அதனுக்கு எழுமடங்குதன்னது ஆய நெடுமானம் துயரம் காதல் இவை தழைப்பஎன்னது ஆகும் மேல்விளைவு? என்று இருந்தான் இராமன்; இகல் இலங்கைப்பின்னது ஆய காரியமும் நிகழ்ந்த பொருளும் பேசுவாம்.
பாடலின் தனிப் பக்கம்