பாடல் 11 · ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை · உறையூர் தே. பெரியசாமி பிள்ளை

ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை 11 · விருத்தம்

தவமே புரிந்து னடிபேணு மன்பர் தமையே யடைந்து தமியேன்,பவமே தவிர்ந்து பரபோக மாய பயனே திளைக்க வருள்வாய்,அவமே திரிந்து தினமேகழித்து னடியேன் வருந்த லறமோ,நவமே பொருந்து மிளமர்ப் பதிக்க ணவிலுண்மை கண்ட குருவே.
பகிர்