பதிகம் 1 / 100 · ஏழாம் திருமுறை · சுந்தரர்

திருவெண்ணெய்நல்லூர்

Thiruvenneynalloor · 10 பாடல்கள் · 7296–7305

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 7296

பண் · இந்தளம்

பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளாஎத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைவைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்அத்தாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 7297
நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப்பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன்வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ஆயாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 7298
மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப்பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்திமின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்அன்னேஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 7299
முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீகொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீசெடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்அடிகேளுனக் காளாயினி அல்லேன்என லாமே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 7300
பாதம்பணி வார்கள்பெறும் பண்டமது பணியாய்ஆதன்பொரு ளானேன்அறி வில்லேன்அரு ளாளாதாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ஆதீஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 7301
தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீஎண்ணார்புரம் மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்அண்ணாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 7302
ஊனாய்உயிர் ஆனாய்உடல் ஆனாய்உல கானாய்வானாய்நிலன் ஆனாய்கடல் ஆனாய்மலை ஆனாய்தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ஆனாயுனக் காளாயினி அல்லேன்என லாமே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 7303
ஏற்றார்புரம் மூன்றும்எரி உண்ணச்சிலை தொட்டாய்தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வானீர்ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ஆற்றாயுனக் காளாயினி அல்லேன்என லாமே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 7304
மழுவாள்வலன் ஏந்தீமறை ஓதீமங்கை பங்காதொழுவார்அவர் துயர்ஆயின தீர்த்தல்உன தொழிலேசெழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்அழகாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 7305
காரூர்புனல் எய்திக்கரை கல்லித்திரைக் கையாற்பாரூர்புகழ் எய்தித்திகழ் பன்மாமணி உந்திச்சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ஆரூரனெம் பெருமாற்காள் அல்லேன்என லாமே.
பாடலின் தனிப் பக்கம்