பதிகம் 77 / 100 · ஏழாம் திருமுறை · சுந்தரர்

திருவையாறு

Thiruvaiyaaru · 11 பாடல்கள் · 8076–8086

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 8076
பரவும் பரிசொன் றறியேன்நான் பண்டே உம்மைப் பயிலாதேன்இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன்நான்கரவில் அருவி கமுகுண்ணத் தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலைஅரவந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 8077
எங்கே போவே னாயிடினும் அங்கே வந்தென் மனத்தீராய்ச்சங்கை யொன்றும் இன்றியே தலைநாள் கடைநாள் ஒக்கவேகங்கை சடைமேற் கரந்தானே கலைமான் மறியுங் கனல்மழுவுந்தங்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 8078
மருவிப் பிரிய மாட்டேன்நான் வழிநின் றொழிந்தேன் ஒழிகிலேன்பருவி விச்சி மலைச்சாரற் பட்டை கொண்டு பகடாடிக்குருவி ஓப்பிக் கிளிகடிவார் குழன்மேல் மாலை கொண்டோட்டந்தரவந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 8079
பழகா நின்று பணிசெய்வார் பெற்ற பயனொன் றறிகிலேன்இகழா துமக்காட் பட்டோர்க்கு வேக படமொன் றரைச்சாத்திகுழகா வாழைக் குலைத்தெங்கு கொணர்ந்து கரைமேல் எறியவேஅழகார் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 8080
பிழைத்த பிழையொன் றறியேன்நான் பிழையைத் தீரப் பணியாயேமழைக்கண் நல்லார் குடைந்தாட மலையும் நிலனுங் கொள்ளாமைக்கழைக்கொள் பிரசங் கலந்தெங்குங் கழனி மண்டிக் கையேறிஅழைக்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 8081
கார்க்கொள் கொன்றைச் சடைமேலொன் றுடையாய் விடையாய் கையினால்மூர்க்கர் புரமூன் றெரிசெய்தாய் முன்னீ பின்னீ முதல்வன்நீவார்க்கொள் அருவி பலவாரி மணியும் முத்தும் பொன்னுங்கொண்டார்க்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 8082
மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப் பற்றி உலகம் பலிதேர்வாய்சிலைக்கொள் கணையால் எயிலெய்த செங்கண் விடையாய் தீர்த்தன்நீமலைக்கொள் ளருவி பலவாரி மணியும் முத்தும் பொன்னுங்கொண்டலைக்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 8083
போழும் மதியும் புனக்கொன்றைப் புனல்சேர் சென்னிப் புண்ணியாசூழும் அரவச் சுடர்ச்சோதீ உன்னைத் தொழுவார் துயர்போகவாழு மவர்கள் அங்கங்கே வைத்த சிந்தை உய்த்தாட்டஆழுந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 8084
கதிர்கொள் பசியே ஒத்தேநான் கண்டேன் உம்மைக் காணாதேன்எதிர்த்து நீந்த மாட்டேன்நான் எம்மான் றம்மான் றம்மானேவிதிர்த்து மேகம் மழைபொழிய வெள்ளம் பரந்து நுரைசிதறிஅதிர்க்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 8085
கூசி அடியார் இருந்தாலுங் குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்தேச வேந்தன் திருமாலும் மலர்மேல் அயனுங் காண்கிலாத்தேச மெங்குந் தெளித்தாடத் தெண்ணீர் அருவி கொணர்ந்தெங்கும்வாசந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.
பாடலின் தனிப் பக்கம்
11 பாடல் 8086
கூடி அடியார் இருந்தாலுங் குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்ஊடி இருந்தும் உணர்கிலேன் உம்மைத் தொண்டன் ஊரனேன்தேடி யெங்குங் காண்கிலேன் திருவா ரூரே சிந்திப்பன்ஆடுந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.
பாடலின் தனிப் பக்கம்