பதிகம் 42 / 100 · ஏழாம் திருமுறை · சுந்தரர்

திருவெஞ்சமாக்கூடல்

Thiruvenjjamaakkoodal · 10 பாடல்கள் · 7720–7729

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 7720
எறிக்குங் கதிர்வே யுதிர்முத் தமொடு மிலவங்கந் தக்கோலம் இஞ்சிசெறிக்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித் திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்முறிக்குந் தழைமா முடப்புன்னை ஞாழல் குருக்கத்திகள் மேற்குயில் கூவலறாவெறிக்குங் கலைமா வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 7721
குளங்கள் பலவுங் குழியுந் நிறையக் குடமாமணி சந்தனமும் அகிலுந்துளங்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித் திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்வளங்கொள் மதில்மா ளிகைகோ புரமும் மணிமண்டபமும் இவைமஞ்சு தன்னுள்விளங்கும் மதிதோய் வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 7722
வரைமான் அனையார் மயிற்சாயல் நல்லார் வடிவேற்கண் நல்லார்பலர் வந்திறைஞ்சத்திரையார் புனலுட் பெய்துகொண்டு மண்டித் திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்நிரையார் கமுகும் நெடுந்தாட் டெங்குங் குறுந்தாட்பலவும் விரவிக் குளிரும்விரையார் பொழில்சூழ் வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 7723
பண்ணேர் மொழியா ளையோர்பங் குடையாய் படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய்தண்ணா ரகிலுந் நலசா மரையும் அலைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்மண்ணார் முழவுங் குழலும் இயம்ப மடவார் நடமாடு மணியரங்கில்விண்ணார் மதிதோய் வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 7724
துளைவெண் குழையுஞ் சுருள்வெண் டோ டுந் தூங்குங்காதிற் றுளங்கும் படியாய் களையே கமழும் மலர்க்கொன் றையினாய் கலந்தார்க்கருள் செய்திடுங் கற்பகமே பிளைவெண் பிறையாய் பிறங்குஞ் சடையாய் பிறவாதவனே பெறுதற் கரியாய் வெளைமால் விடையாய் வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 7725
தொழுவார்க் கெளியாய் துயர்தீர நின்றாய் சுரும்பார் மலர்க்கொன்றை துன்றுஞ்சடையாய்உழுவார்க் கரிய விடையேறி ஒன்னார் புரந்தீயெழ ஓடுவித்தாய் அழகார்முழவா ரொலிபா டலோடா டலறா முதுகாடரங்கா நடமாட வல்லாய்விழவார் மறுகின் வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 7726
கடமா களியா னையுரித் தவனே கரிகாடிடமா அனல்வீசி நின்றுநடமா டவல்லாய் நரையே றுகந்தாய் நல்லாய் நறுங்கொன்றை நயந்தவனேபடமா யிரமாம் பருத்துத்திப் பைங்கண் பகுவாய் எயிற்றோடழ லேஉமிழும்விடவார் அரவா வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 7727
காடும் மலையுந் நாடு மிடறிக் கதிர்மாமணி சந்தனமும் அகிலுஞ்சேட னுறையும் மிடந்தான் விரும்பி திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேற்பாடல் முழவுங் குழலு மியம்பப் பணைத்தோளியர் பாடலோ டாடலறாவேடர் விரும்பும் வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 7728
கொங்கார் மலர்க்கொன் றையந்தா ரவனே கொடுகொட்டி யோர்வீணை யுடையவனேபொங்கா டரவும் புனலுஞ் சடைமேற் பொதியும்புனிதா புனஞ்சூழ்ந் தழகார்துங்கார் புனலுட் பெய்துகொண்டு மண்டித் திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்வெங்கார் வயல்சூழ் வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 7729
வஞ்சிநுண் ணிடையார் மயிற்சாய லன்னார் வடிவேற்க ணல்லார்பலர் வந்திறைஞ்சும்வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதி யேயென்று தான்விரும்பிவஞ்சியா தளிக்கும் வயல்நா வலர்கோன் வனப்பகையப்பன் வன்றொண்டன் சொன்னசெஞ்சொற்றமிழ் மாலைகள் பத்தும் வல்லார் சிவலோகத் திருப்பது திண்ணமன்றே.
பாடலின் தனிப் பக்கம்