பதிகம் 58 / 100 · ஏழாம் திருமுறை · சுந்தரர்

திருக்கழுமலம்

Thirukkazhumalam · 10 பாடல்கள் · 7888–7897

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 7888
சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத் தன்னருள் தந்தஎந் தலைவனை மலையின்மாதினை மதித்தங்கோர் பால்கொண்ட மணியை வருபுனல் சடையிடை வைத்தஎம் மானைஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை எண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக்காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 7889
மற்றொரு துணையினி மறுமைக்குங் காணேன் வருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன்சுற்றிய சுற்றமுந் துணையென்று கருதேன் துணையென்று நான்தொழப் பட்டஒண் சுடரைமுத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளுங் காட்டிக்கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 7890
திருத்தினை நகர்உறை சேந்தன் அப்பன்என் செய்வினை அறுத்திடுஞ் செம்பொனை அம்பொன்ஒருத்தனை அல்லதிங் காரையும் உணரேன் உணர்வுபெற் றேன்உய்யுங் காரணந் தன்னால்விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி விழித்தெங்குங் காணமாட் டாதுவிட் டிருந்தேன்கருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலைக் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 7891
மழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னானை வளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன்பிழைத்தொரு கால்இனிப் போய்ப்பிற வாமைப் பெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார்குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன்கழைக்கரும் புங்கத லிப்பல சோலைக் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 7892
குண்டலங் குழைதிகழ் காதனே என்றுங் கொடுமழு வாட்படைக் குழகனே என்றும்வண்டலம் பும்மலர்க் கொன்றையன் என்றும் வாய்வெரு வித்தொழு தேன்விதி யாலேபண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப் பசுபதி பதிவின விப்பல நாளுங்கண்டலங் கழிக்கரை ஓதம்வந் துலவுங் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 7893
வரும்பெரும் வல்வினை என்றிருந் தெண்ணி வருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன்விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர்ப் பெய்தி வேண்டிநின் றேதொழு தேன்விதி யாலேஅரும்பினை அலரினை அமுதினைத் தேனை ஐயனை அறவனென் பிறவிவேர் அறுக்குங்கரும்பினைப் பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 7894
அயலவர் பரவவும் அடியவர் தொழவும் அன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன்முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை படுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணிப்புயலினைத் திருவினைப் பொன்னின தொளியை மின்னின துருவை என்னிடைப் பொருளைக்கயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 7895
நினைதரு பாவங்கள் நாசங்க ளாக நினைந்துமுன் தொழுதெழப் பட்டஒண் சுடரைமலைதரு மலைமகள் கணவனை வானோர் மாமணி மாணிக்கத் தைம்மறைப் பொருளைப்புனைதரு புகழினை எங்கள தொளியை இருவரும் ஒருவனென் றுணர்வரி யவனைக்கனைதரு கருங்கடல் ஓதம்வந் துலவுங் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 7896
மறையிடைத் துணிந்தவர் மனையிடை இருப்ப வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாயத்துறையுறக் குளித்துள தாகவைத் துய்த்த உண்மை யெனுந்தக வின்மையை ஓரேன்பிறையுடைச் சடையனை எங்கள்பி ரானைப் பேரரு ளாளனைக் காரிருள் போன்றகறையணி மிடறுடை அடிகளை அடியேன் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 7897
செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும் விரவிய சடைமுடி அடிகளை நினைந்திட்டழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால் அறிவரி தவன்றிரு வடியிணை இரண்டுங்கழுமல வளநகர்க் கண்டுகொண் டூரன் சடையன்றன் காதலன் பாடிய பத்துந்தொழுமலர் எடுத்தகை அடியவர் தம்மைத் துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே.
பாடலின் தனிப் பக்கம்