வடிவுடை மழுவேந்தி மதகரி உரிபோர்த்துப்பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடுங்கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றூரில்அடிகளிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
பாடலின் தனிப் பக்கம்
பாடல்கள் The verses
வையகம் முழுதுண்ட மாலொடு நான்முகனும்பையர விளவல்குற் பாவையொ டும்முடனேகொய்யணி மலர்ச்சோலைக் கூடலை யாற்றூரில்ஐயனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
பாடலின் தனிப் பக்கம்
ஊர்தொறும் வெண்டலைகொண் டுண்பலி இடுமென்றுவார்தரு மென்முலையாள் மங்கையொ டும்முடனேகூர்நுனை மழுவேந்திக் கூடலை யாற்றூரில்ஆர்வனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
பாடலின் தனிப் பக்கம்
சந்தண வும்புனலுந் தாங்கிய தாழ்சடையன்பந்தண வும்விரலாள் பாவையொ டும்முடனேகொந்தண வும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில்அந்தணன் வழிபோந்த அதிசயம் அறியேனே.
பாடலின் தனிப் பக்கம்
வேதியர் விண்ணவரும் மண்ணவ ருந்தொழநற்சோதிய துருவாகிச் சுரிகுழல் உமையோடுங்கோதிய வண்டறையுங் கூடலை யாற்றூரில்ஆதியிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
பாடலின் தனிப் பக்கம்
வித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டுமுத்தன வெண்முறுவல் மங்கையொ டும்முடனேகொத்தல ரும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில்அத்தனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
பாடலின் தனிப் பக்கம்
மழைநுழை மதியமொடு வாளர வஞ்சடைமேல்இழைநுழை துகிலல்குல் ஏந்திழை யாளோடுங்குழையணி திகழ்சோலைக் கூடலை யாற்றூரில்அழகனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
பாடலின் தனிப் பக்கம்
மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும்பிறைநுதல் மங்கையொடும் பேய்க்கண முஞ்சூழக்குறள்படை யதனோடுங் கூடலை யாற்றூரில்அறவனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
பாடலின் தனிப் பக்கம்
வேலையின் நஞ்சுண்டு விடையது தானேறிப்பாலன மென்மொழியாள் பாவையொ டும்முடனேகோலம துருவாகிக் கூடலை யாற்றூரில்ஆலனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
பாடலின் தனிப் பக்கம்
கூடலை யாற்றூரிற் கொடியிடை யவளோடும்ஆடலு கந்தானை அதிசயம் இதுவென்றுநாடிய இன்றமிழால் நாவல வூரன்சொற்பாடல்கள் பத்தும்வல்லார் தம்வினை பற்றறுமே.
பாடலின் தனிப் பக்கம்