வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்கூழை ஏறுகந் தானிடங் கொண்டதுங் கோவலூர்தாழை யூர்தக டூர்தக்க ளூர்தரு மபுரம்வாழை காய்க்கும் வளர்மரு கல்நாட்டு மருகலே.
பாடலின் தனிப் பக்கம்
பாடல்கள் The verses
அண்டத் தண்டத்தின் அப்புறத் தாடும் அமுதனூர்தண்டந் தோட்டந்தண் டங்குறை தண்டலை யாலங்காடுகண்டல் முண்டல்கள் சூழ்கழிப் பாலை கடற்கரைகொண்டல் நாட்டுக்கொண் டல்குறுக் கைநாட்டுக் குறுக்கையே.
பாடலின் தனிப் பக்கம்
மூல னூர்முத லாயமுக் கண்ணன் முதல்வனூர்நால னூர்நரை ஏறுகந் தேறிய நம்பனூர்கோல நீற்றன்குற் றாலங் குரங்கணின் முட்டமும்வேல னூர்வெற்றி யூர்வெண்ணிக் கூற்றத்து வெண்ணியே.
பாடலின் தனிப் பக்கம்
தேங்கூ ருந்திருச் சிற்றம் பலமுஞ் சிராப்பள்ளிபாங்கூர் எங்கள் பிரானுறை யுங்கடம் பந்துறைபூங்கூ ரும்பர மன்பரஞ் சோதி பயிலுமூர்நாங்கூர் நாட்டுநாங் கூர்நறை யூர்நாட்டு நறையூரே.
பாடலின் தனிப் பக்கம்
குழலை வென்ற மொழிமட வாளையோர் கூறனாம்மழலை யேற்று மணாளன் இடந்தட மால்வரைக்கிழவன் கீழை வழிப்பழை யாறு கிழையமும்மிழலை நாட்டு மிழலைவெண் ணிநாட்டு மிழலையே.
பாடலின் தனிப் பக்கம்
தென்னூர் கைம்மைத் திருச்சுழி யல்திருக் கானப்பேர்பன்னூர் புக்குறை யும்பர மர்க்கிடம் பாய்நலம்என்னூர் எங்கள் பிரானுறை யுந்திருத் தேவனூர்பொன்னூர் நாட்டுப்பொன் னூர்புரி சைநாட்டுப் புரிசையே.
பாடலின் தனிப் பக்கம்
ஈழ நாட்டுமா தோட்டந்தென் னாட்டிரா மேச்சுரம்சோழ நாட்டுத் துருத்திநெய்த் தானந் திருமலைஆழி யூரன நாட்டுக்கெல் லாம்அணி யாகியகீழை யில்லர னார்க்கிடங் கிள்ளி குடியதே.
பாடலின் தனிப் பக்கம்
நாளும் நன்னிலந் தென்பனை யூர்வட கஞ்சனூர்நீள நீள்சடை யான்நெல்லிக் காவு நெடுங்களங்காள கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர்வேளார் நாட்டுவே ளூர்விளத் தூர்நாட்டு விளத்தூரே.
பாடலின் தனிப் பக்கம்
தழலும் மேனியன் தையலோர் பாகம மர்ந்தவன்தொழலுந் தொல்வினை தீர்க்கின்ற சோதிசோற் றுத்துறைகழலுங் கோவை யுடையவன் காதலிக் கும்மிடம்பழனம் பாம்பணி பாம்புரந் தஞ்சைதஞ் சாக்கையே.
பாடலின் தனிப் பக்கம்
மைகொள் கண்டனெண் டோ ளன்முக் கண்ணன் வலஞ்சுழி பைகொள் வாளர வாட்டித் திரியும் பரமனூர் செய்யில் வாளைகள் பாய்ந்துக ளுந்திருப் புன்கூர்நன் றையன் மேய பொழிலணி ஆவடு துறையதே.
பாடலின் தனிப் பக்கம்
பேணி நாடத னிற்றிரி யும்பெரு மான்றனைஆணை யாவடி யார்கள் தொழப்படும் ஆதியைநாணி ஊரன் வனப்பகை யப்பன்வன் றொண்டன்சொல்பாணி யாலிவை யேத்துவார் சேர்பர லோகமே.
பாடலின் தனிப் பக்கம்