மருவார் கொன்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோலவருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழத்திருமால் பிரமன் இந்திரற்குந் தேவர் நாகர் தானவர்க்கும்பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
பாடலின் தனிப் பக்கம்
பாடல்கள் The verses
விண்ணோர் தலைவர் வெண்புரிநூல் மார்பர் வேத கீதத்தர்கண்ணார் நுதலர் நகுதலையர் கால காலர் கடவூரர்எண்ணார் புரமூன் றெரிசெய்த இறைவ ருமையோ ரொருபாகம்பெண்ணா ணாவர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
பாடலின் தனிப் பக்கம்
காயும் புலியின் அதளுடையர் கண்டர் எண்டோட் கடவூரர்தாயுந் தந்தை பல்லுயிர்க்குந் தாமே யாய தலைவனார்பாயும் விடையொன் றதுவேறிப் பலிதேர்ந் துண்ணும் பரமேட்டிபேய்கள் வாழும் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
பாடலின் தனிப் பக்கம்
நறைசேர் மலரைங் கணையானை நயனத் தீயாற் பொடிசெய்த இறையா ராவர் எல்லார்க்கும் இல்லை யென்னா தருள்செய்வார் பறையார் முழவம் பாட்டோ டு பயிலுந் தொண்டர் பயில்கடவூர்ப் பிறையார் சடையார் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
பாடலின் தனிப் பக்கம்
கொத்தார் கொன்றை மதிசூடிக் கோள்நா கங்கள் பூணாகமத்த யானை உரிபோர்த்து மருப்பும் ஆமைத் தாலியார்பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆடப் பலிகொள்ளும்பித்தர் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
பாடலின் தனிப் பக்கம்
துணிவார் கீளுங் கோவணமுந் துதைந்து சுடலைப் பொடியணிந்துபணிமே லிட்ட பாசுபதர் பஞ்ச வடிமார் பினர்கடவூர்த்திணிவார் குழையார் புரமூன்றுந் தீவாய்ப் படுத்த சேவகனார்பிணிவார் சடையார் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
குறிப்பு பஞ்சவடியாவது மயிர்ப்பூணநூல். இது மாவிரதியரென்னும் உட்சமயத்தாரணிவது. மேலும் அவர்களணியுமணி எலும்பினாலாகிய மணிகள். இவற்றை மானக்கஞ்சாறநாயனார் புராணத்து 23-வது திருவிருத்தத்தானுமுணர்க.
பாடலின் தனிப் பக்கம்காரார் கடலின் நஞ்சுண்ட கண்டர் கடவூர் உறைவாணர்தேரார் அரக்கன் போய்வீழ்ந்து சிதைய விரலா லூன்றினார்ஊர்தான் ஆவ துலகேழும் உடையார்க் கொற்றி யூராரூர்பேரா யிரவர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
பாடலின் தனிப் பக்கம்
வாடா முலையாள் தன்னோடும் மகிழ்ந்து கானில் வேடுவனாய்க்கோடார் கேழற் பின்சென்று குறுகி விசயன் தவமழித்துநாடா வண்ணஞ் செருச்செய்து ஆவ நாழி நிலையருள்செய்பீடார் சடையார் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
பாடலின் தனிப் பக்கம்
வேழம் உரிப்பர் மழுவாளர் வேள்வி அழிப்பர் சிரமறுப்பர்ஆழி அளிப்பர் அரிதனக்கன் றானஞ் சுகப்பர் அறமுரைப்பர்ஏழைத் தலைவர் கடவூரில் இறைவர் சிறுமான் மறிக்கையர்பேழைச் சடையர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
பாடலின் தனிப் பக்கம்
மாட மல்கு கடவூரில் மறையோ ரேத்தும் மயானத்துப்பீடை தீர அடியாருக் கருளும் பெருமா னடிகள்சீர்நாடி நாவ லாரூரன் நம்பி சொன்ன நற்றமிழ்கள்பாடு மடியார் கேட்பார்மேற் பாவ மான பறையுமே.
பாடலின் தனிப் பக்கம்