பதிகம் 81 / 100 · ஏழாம் திருமுறை · சுந்தரர்

திருக்கழுக்குன்றம்

Thirukkazhukkundram · 10 பாடல்கள் · 8117–8126

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 8117
கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவேநின்ற பாவம் வினைகள் தாம்பல நீங்கவேசென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடங்கன்றி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 8118
இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியேபிறங்கு கொன்றைச் சடையன் எங்கள் பிரானிடம்நிறங்கள் செய்த மணிகள் நித்திலங் கொண்டிழிகறங்கு வெள்ளை அருவித் தண்கழுக் குன்றமே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 8119
நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத்தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்காள கண்டன் உறையுந் தண்கழுக் குன்றமே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 8120
வெளிறு தீரத் தொழுமின் வெண்பொடி ஆடியைமுளிறி லங்குமழு வாளன் முந்தி உறைவிடம்பிளிறு தீரப் பெருங்கைப் பெய்ம்மதம் மூன்றுடைக்களிறி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 8121
புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன்இலைகொள் சூலப் படையன் எந்தை பிரானிடம்முலைகள் உண்டு தழுவிக் குட்டி யொடுமுசுக்கலைகள் பாயும் புறவில் தண்கழுக் குன்றமே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 8122
மடமு டைய அடியார் தம்மனத் தேஉறவிடமு டைய மிடறன் விண்ணவர் மேலவன்படமு டைய அரவன் றான்பயி லும்மிடங்கடமு டைய புறவில் தண்கழுக் குன்றமே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 8123
ஊன மில்லா அடியார் தம்மனத் தேஉறஞான மூர்த்தி நட்ட மாடிநவி லும்மிடந்தேனும் வண்டும் மதுவுண் டின்னிசை பாடியேகான மஞ்சை உறையுந் தண்கழுக் குன்றமே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 8124
அந்த மில்லா அடியார் தம்மனத் தேஉறவந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன்சிந்தை செய்த மலர்கள் நித்தலுஞ் சேரவேகந்தம் நாறும் புறவில் தண்கழுக் குன்றமே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 8125
பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன்குழைகொள் காதன் குழகன் றானுறை யும்மிடம்மழைகள் சாலக் கலித்து நீடுயர் வேயவைகுழைகொள் முத்தஞ் சொரியுந் தண்கழுக் குன்றமே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 8126
பல்லில் வெள்ளைத் தலையன் றான்பயி லும்மிடம்கல்லில் வெள்ளை அருவித் தண்கழுக் குன்றினைமல்லின் மல்கு திரள்தோள் ஊரன் வனப்பினாற்சொல்லல் சொல்லித் தொழுவா ரைத்தொழு மின்களே.
பாடலின் தனிப் பக்கம்