பதிகம் 16 / 100 · ஐந்தாம் திருமுறை · திருநாவுக்கரசர்

திருப்பேரெயில் - திருக்குறுந்தொகை

Thiruppereyil Thirukkurundhogai · 11 பாடல்கள் · 5454–5464

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 5454
மறையு மோதுவர் மான்மறிக் கையினர்கறைகொள் கண்ட முடைய கபாலியார்துறையும் போகுவர் தூயவெண் ணீற்றினர்பிறையுஞ் சூடுவர் பேரெயி லாளரே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 5455
கணக்கி லாரையுங் கற்றுவல் லாரையும்வணக்கி லாநெறி கண்டுகொண் டாரையுந்தணக்கு வார்தணிப் பாரெப் பொருளையும்பிணக்கு வாரவர் பேரெயி லாளரே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 5456
சொரிவிப் பார்மழை சூழ்கதிர்த் திங்களைவிரிவிப் பார்வெயிற் பட்ட விளங்கொளிஎரிவிப் பார்தணிப் பாரெப் பொருளையும்பிரிவிப் பாரவர் பேரெயி லாளரே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 5457
செறுவிப் பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள்உறுவிப் பார்பல பத்தர்கள் ஊழ்வினைஅறுவிப் பாரது வன்றியும் நல்வினைபெறுவிப் பாரவர் பேரெயி லாளரே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 5458
மற்றை யாரறி யார்மழு வாளினார்பற்றி யாட்டியோர் ஐந்தலைப் பாம்பரைச்சுற்றி யாரவர் தூநெறி யால்மிகுபெற்றி யாரவர் பேரெயி லாளரே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 5459
திருக்கு வார்குழற் செல்வன சேவடிஇருக்கு வாய்மொழி யாற்றனை யேத்துவார்சுருக்கு வார்துயர் தோற்றங்க ளாற்றறப்பெருக்கு வாரவர் பேரெயி லாளரே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 5460
முன்னை யார்மயி லூர்தி முருகவேள்தன்னை யாரெனிற் றானோர் தலைமகன்என்னை யாளும் இறையவ னெம்பிரான்பின்னை யாரவர் பேரெயி லாளரே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 5461
உழைத்துந் துள்ளியும் உள்ளத்து ளேயுருஇழைத்து மெந்தை பிரானென் றிராப்பகல்அழைக்கும் அன்பின ராய அடியவர்பிழைப்பு நீக்குவர் பேரெயி லாளரே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 5462
நீரு லாநிமிர் புன்சடை யாவெனாஏரு லாவனங் கன்றிறல் வாட்டியவாரு லாவன மென்முலை யாளொடும்பேரு ளாரவர் பேரெயி லாளரே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 5463
பாணி யார்படு தம்பெயர்ந் தாடுவர்தூணி யார்விச யற்கருள் செய்தவர்மாணி யாய்மண் ணளந்தவன் நான்முகன்பேணி யாரவர் பேரெயி லாளரே.
பாடலின் தனிப் பக்கம்
11 பாடல் 5464
மதத்த வாளரக் கன்மணிப் புட்பகஞ்சிதைக்க வேதிரு மாமலைக் கீழ்ப்புக்குப்பதைத்தங் கார்த்தெடுத் தான்பத்து நீண்முடிபிதக்க வூன்றிய பேரெயி லாளரே.
பாடலின் தனிப் பக்கம்