பதிகம் 45 / 100 · ஐந்தாம் திருமுறை · திருநாவுக்கரசர்

திருத்தோணிபுரம் - திருக்குறுந்தொகை

Thirutthoniburam Thirukkurundhogai · 10 பாடல்கள் · 5751–5760

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 5751
மாதி யன்று மனைக்கிரு வென்றக்கால்நீதி தான்சொல நீயெனக் காரெனுஞ்சோதி யார்தரு தோணி புரவர்க்குத்தாதி யாவன்நா னென்னுமென் தையலே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 5752
நக்கம் வந்து பலியிடென் றார்க்கிட்டமிக்க தையலை வெள்வளை கொள்வதுதொக்க நீர்வயல் தோணி புரவர்க்குத்தக்க தன்று தமது பெருமைக்கே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 5753
கெண்டை போல்நய னத்திம வான்மகள்வண்டு வார்குழ லாளுட னாகவேதுண்ட வான்பிறைத் தோணி புரவரைக்கண்டு காமுறு கின்றனள் கன்னியே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 5754
பாலை யாழ்மொழி யாளவள் தாழ்சடைமேல ளாவது கண்டனள் விண்ணுறச்சோலை யார்தரு தோணி புரவர்க்குச்சால நல்லளா கின்றனள் தையலே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 5755
பண்ணின் நேர்மொழி யாள்பலி யிட்டவிப்பெண்ணை மால்கொடு பெய்வளை கொள்வதுசுண்ண மாடிய தோணி புரத்துறைஅண்ண லாருக்குச் சால அழகிதே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 5756
முல்லை வெண்ணகை மொய்குழ லாயுனக்கல்ல னாவ தறிந்திலை நீகனித்தொல்லை யார்பொழில் தோணி புரவர்க்கேநல்லை யாயிடு கின்றனை நங்கையே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 5757
ஒன்று தானறி யாருல கத்தவர்நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பிலர்துன்று வார்பொழில் தோணி புரவர்தங்கொன்றை சூடுங் குறிப்பது வாகுமே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 5758
உறவு பேய்க்கணம் உண்பது வெண்டலைஉறைவ தீமம் உடலிலோர் பெண்கொடிதுறைக ளார்கடல் தோணி புரத்துறைஇறைவ னார்க்கிவள் என்கண்டன் பாவதே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 5759
மாக யானை மருப்பேர் முலையினர்போக யானு மவள்புக்க தேபுகத்தோகை சேர்தரு தோணி புரவர்க்கேஆக யானு மவர்க்கினி யாளதே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 5760
இட்ட மாயின செய்வாளென் பெண்கொடிகட்டம் பேசிய காரரக் கன்றனைத்துட்ட டக்கிய தோணி புரத்துறைஅட்ட மூர்த்திக்கு அன்பது வாகியே.
பாடலின் தனிப் பக்கம்