பதிகம் 89 / 100 · ஐந்தாம் திருமுறை · திருநாவுக்கரசர்

தனி - திருக்குறுந்தொகை

Thani Thirukkurundhogai · 10 பாடல்கள் · 6176–6185

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 6176
ஒன்று வெண்பிறைக் கண்ணியோர் கோவணம்ஒன்று கீளுமை யோடு முடுத்ததுஒன்று வெண்டலை யேந்தியெம் முள்ளத்தேஒன்றி நின்றங் குறையும் ஒருவனே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 6177
இரண்டு மாமவர்க் குள்ளன செய்தொழில்இரண்டு மாமவர்க் குள்ளன கோலங்கள்இரண்டு மில்லிள மானெமை யாளுகந்திரண்டு போதுமென் சிந்தையுள் வைகுமே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 6178
மூன்று மூர்த்தியுள் நின்றிய லுந்தொழில்மூன்று மாயின மூவிலைச் சூலத்தன்மூன்று கண்ணினன் தீத்தொழில் மூன்றினன்மூன்று போதுமென் சிந்தையுள் மூழ்குமே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 6179
நாலின் மேன்முகஞ் செற்றது மன்னிழல்நாலு நன்குணர்ந் திட்டது மின்பமாம்நாலு வேதஞ் சரித்தது நன்னெறிநாலு போலெம் அகத்துறை நாதனே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 6180
அஞ்சு மஞ்சுமோ ராடி யரைமிசைஅஞ்சு போலரை யார்த்ததின் றத்துவம்அஞ்சு மஞ்சுமோ ரோரைஞ்சு மாயவன்அஞ்சு மாமெம் அகத்துறை ஆதியே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 6181
ஆறு கால்வண்டு மூசிய கொன்றையன்ஆறு சூடிய அண்ட முதல்வனார்ஆறு கூர்மையர்க் கச்சம யப்பொருள்ஆறு போலெம் அகத்துறை ஆதியே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 6182
ஏழு மாமலை ஏழ்பொழில் சூழ்கடல்ஏழு போற்றுமி ராவணன் கைந்நரம்பேழு கேட்டருள் செய்தவன் பொற்கழல்ஏழுஞ் சூழடி யேன்மனத் துள்ளவே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 6183
எட்டு மூர்த்தியாய் நின்றிய லுந்தொழில்எட்டு வான்குணத் தீசனெம் மான்றனைஎட்டு மூர்த்தியு மெம்மிறை யெம்முளேஎட்டு மூர்த்தியு மெம்மு ளொடுங்குமே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 6184
ஒன்ப தொன்பதி யானை யொளிகளிறொன்ப தொன்பது பல்கணஞ் சூழவேஒன்ப தாமவை தீத்தொழி லின்னுரைஒன்ப தொத்துநின் றென்னு ளொடுங்குமே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 6185
பத்து நூறவன் வெங்கண்வெள் ளேற்றண்ணல்பத்து நூறவன் பல்சடை தோண்மிசைபத்தி யாமில மாதலின் ஞானத்தாற்பத்தி யானிடங் கொண்டது பள்ளியே.
பாடலின் தனிப் பக்கம்