மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை வீர்க்கெலாங் கேட்டுப் பள்ளிகண் டீர்கெடு வீரிது ஓட்டுப் பள்ளிவிட் டோ ட லுறாமுனங் காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே.
பாடலின் தனிப் பக்கம்
பாடல்கள் The verses
மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளேநாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர்கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமேகாட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே.
பாடலின் தனிப் பக்கம்
தேனை வென்றசொல் லாளொடு செல்வமும்ஊனை விட்டுயிர் போவதன் முன்னமேகான வேடர் கருதுங்காட் டுப்பள்ளிஞான நாயக னைச்சென்று நண்ணுமே.
பாடலின் தனிப் பக்கம்
அருத்த முமனை யாளொடு மக்களும்பொருத்த மில்லை பொல்லாதது போக்கிடுங்கருத்தன் கண்ணுதல் அண்ணல்காட் டுப்பள்ளித்திருத்தன் சேவடி யைச்சென்று சேர்மினே.
பாடலின் தனிப் பக்கம்
சுற்ற முந்துணை யும்மனை வாழ்க்கையும்அற்ற போதணை யாரவ ரென்றென்றேகற்ற வர்கள் கருதுங்காட் டுப்பள்ளிப்பெற்ற மேறும் பிரானடி சேர்மினே.
பாடலின் தனிப் பக்கம்
அடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமுந்துடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான்கடம்பன் தாதை கருதுங்காட் டுப்பள்ளிஉடம்பி னார்க்கோர் உறுதுணை யாகுமே.
பாடலின் தனிப் பக்கம்
மெய்யின் மாசுடை யாருடல் மூடுவார்பொய்யை மெய்யென்று புக்குடன் வீழன்மின்கையின் மானுடை யான்காட்டுப் பள்ளியெம்ஐயன் றன்னடி யேயடைந் துய்மினே.
பாடலின் தனிப் பக்கம்
வேலை வென்றகண் ணாரை விரும்பிநீர்சீலங் கெட்டுத் திகையன்மின் பேதைகாள்காலை யேதொழுங் காட்டுப்பள் ளியுறைநீல கண்டனை நித்தல் நினைமினே.
பாடலின் தனிப் பக்கம்
இன்று ளார்நாளை இல்லை யெனும்பொருள்ஒன்று மோரா துழிதரும் ஊமர்காள்அன்று வானவர்க் காக விடமுண்டகண்ட னார்காட்டுப் பள்ளிகண் டுய்ம்மினே.
பாடலின் தனிப் பக்கம்
எண்ணி லாவரக் கன்மலை யேந்திடஎண்ணி நீண்முடி பத்து மிறுத்தவன்கண்ணு ளார்கரு துங்காட்டுப் பள்ளியைநண்ணு வாரவர் தம்வினை நாசமே.
பாடலின் தனிப் பக்கம்