கொடிகொள் செல்வ விழாக்குண லையறாக்கடிகொள் பூம்பொழிற் கச்சிஏ கம்பனார்பொடிகள் பூசிய பூந்துருத் திந்நகர்அடிகள் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
பாடலின் தனிப் பக்கம்
பாடல்கள் The verses
ஆர்த்த தோலுடை கட்டியோர் வேடனாய்ப்பார்த்த னோடு படைதொடு மாகிலும்பூத்த நீள்பொழிற் பூந்துருத் திந்நகர்த்தீர்த்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
பாடலின் தனிப் பக்கம்
மாதி னைமதித் தானொரு பாகமாக்காத லாற்கரந் தான்சடைக் கங்கையைப்பூத நாயகன் பூந்துருத் திந்நகர்க்காதி சேவடிக் கீழ்நா மிருப்பதே.
பாடலின் தனிப் பக்கம்
மூவ னாய்முத லாயிவ் வுலகெலாங்காவ னாய்க்கடுங் காலனைக் காய்ந்தவன்பூவின் நாயகன் பூந்துருத் திந்கர்த்தேவன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
பாடலின் தனிப் பக்கம்
செம்பொ னேயொக்கும் மேனியன் தேசத்தில்உம்ப ராரவ ரோடங் கிருக்கிலும்பொன்பொ னார்செல்வப் பூந்துருத் திந்நகர்நம்பன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
பாடலின் தனிப் பக்கம்
வல்லம் பேசி வலிசெய்மூன் றூரினைக்கொல்லம் பேசிக் கொடுஞ்சரம் நூறினான்புல்லம் பேசியும் பூந்துருத் திந்நகர்ச்செல்வன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
பாடலின் தனிப் பக்கம்
ஒருத்த னாயுல கேழுந் தொழநின்றுபருத்த பாம்பொடு பான்மதி கங்கையும்பொருத்த னாகிலும் பூந்துருத் திந்நகர்த்திருத்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
பாடலின் தனிப் பக்கம்
அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர்கருத நின்றவர் காண்பரி தாயினான்பொருத நீர்வரு பூந்துருத் திந்நகர்ச்சதுரன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
பாடலின் தனிப் பக்கம்
செதுக றாமனத் தார்புறங் கூறினுங்கொதுக றாக்கண்ணி னோன்பிகள் கூறினும்பொதுவின் நாயகன் பூந்துருத் திந்நகர்க்கதிபன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
பாடலின் தனிப் பக்கம்
துடித்த தோல்வலி வாளரக் கன்றனைப்பிடித்த கைஞ்ஞெரிந் துற்றன கண்ணெலாம்பொடிக்க வூன்றிய பூந்துருத் திந்நகர்ப்படிக்கொள் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
பாடலின் தனிப் பக்கம்