பதிகம் 43 / 100 · ஐந்தாம் திருமுறை · திருநாவுக்கரசர்

திருநல்லம் - திருக்குறுந்தொகை

Thirunallam Thirukkurundhogai · 10 பாடல்கள் · 5730–5739

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 5730
கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால்இல்லத் தார்செய்ய லாவதென் ஏழைகாள்நல்லத் தான்நமை யாளுடை யான்கழல்சொல்லத் தான்வல்லி ரேற்றுயர் தீருமே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 5731
பொக்கம் பேசிப் பொழுது கழியாதேதுக்கந் தீர்வகை சொல்லுவன் கேண்மினோதக்கன் வேள்வி தகர்த்த தழல்வண்ணன்நக்கன் சேர்நல்லம் நண்ணுதல் நன்மையே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 5732
பிணிகொள் வார்குழற் பேதையர் காதலாற்பணிகள் மேவிப் பயனில்லை பாவிகாள்அணுக வேண்டில் அரனெறி யாவதுநணுகு நாதன் நகர்திரு நல்லமே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 5733
தமக்கு நல்லது தம்முயிர் போயினால்இமைக்கும் போதும் இராதிக் குரம்பைதான்உமைக்கு நல்லவன் றானுறை யும்பதிநமக்கு நல்லது நல்ல மடைவதே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 5734
உரைத ளர்ந்துட லார்நடுங் காமுனம்நரைவி டையுடை யானிடம் நல்லமேபரவு மின்பணி மின்பணி வாரொடேவிரவு மின்விர வாரை விடுமினே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 5735
அல்ல லாகஐம் பூதங்க ளாட்டினும்வல்ல வாறு சிவாய நமவென்றுநல்லம் மேவிய நாத னடிதொழவெல்ல வந்த வினைப்பகை வீடுமே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 5736
மாத ராரொடு மக்களுஞ் சுற்றமும்பேத மாகிப் பிரிவதன் முன்னமேநாதன் மேவிய நல்லம் நகர்தொழப்போது மின்னெழு மின்புக லாகுமே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 5737
வெம்மை யான வினைக்கடல் நீங்கிநீர்செம்மை யாய சிவகதி சேரலாஞ்சும்மை யார்மலர் தூவித் தொழுமினோநம்மை யாளுடை யானிடம் நல்லமே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 5738
கால மான கழிவதன் முன்னமேஏலு மாறு வணங்கிநின் றேத்துமின்மாலும் மாமல ரானொடு மாமறைநாலும் வல்லவர் கோனிடம் நல்லமே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 5739
மல்லை மல்கிய தோளரக் கன்வலிஒல்லை யில்லொழித் தானுறை யும்பதிநல்ல நல்லம் எனும்பெயர் நாவினாற்சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே.
பாடலின் தனிப் பக்கம்