பதிகம் 6 / 100 · ஐந்தாம் திருமுறை · திருநாவுக்கரசர்

திருவாரூர் - திருக்குறுந்தொகை

Thiruvaaroor Thirukkurundhogai · 10 பாடல்கள் · 5353–5362

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 5353
எப்போ தும்மிறை யும்மற வாதுநீர்முப்போ தும்பிர மன்றொழ நின்றவன்செப்போ தும்பொனின் மேனிச் சிவனவன்அப்போ தைக்கஞ்சல் என்னும்ஆ ரூரனே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 5354
சடையின் மேலுமோர் தையலை வைத்தவர்அடைகி லாவர வைஅரை யார்த்தவர்படையின் நேர்தடங் கண்ணுமை பாகமாஅடைவர் போல்இடு காடர்ஆ ரூரரே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 5355
விண்ட வெண்டலை யேகல னாகவேகொண்ட கம்பலி தேருங் குழகனார்துண்ட வெண்பிறை வைத்த இறையவர்அண்ட வாணர்க் கருளும்ஆ ரூரரே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 5356
விடையும் ஏறுவர் வெண்டலை யிற்பலிகடைகள் தோறுந் திரியுமெங் கண்ணுதல்உடையுஞ் சீரை உறைவது காட்டிடைஅடைவர் போல்அரங் காகஆ ரூரரே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 5357
துளைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர்வளைக்கை யாளையோர் பாக மகிழ்வெய்தித்திளைக்குந் திங்கட் சடையிற் திசைமுழுதளக்கஞ் சிந்தையர் போலும்ஆ ரூரரே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 5358
பண்ணின் இன்மொழி யாளையோர் பாகமாவிண்ணி னார்விளங் கும்மதி சூடியேசுண்ண நீறுமெய்ப் பூசிச் சுடலையின்அண்ணி யாடுவர் போலும்ஆ ரூரரே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 5359
மட்டு வார்குழ லாளொடு மால்விடைஇட்ட மாவுகந் தேறும் இறைவனார்கட்டு வாங்கங் கனல்மழு மான்றனோடட்ட மாம்புய மாகும்ஆ ரூரரே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 5360
தேய்ந்த திங்கள் கமழ்சடை யன்கனல்ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்ஆய்ந்த நான்மறை யோதும்ஆ ரூரரே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 5361
உண்டு நஞ்சுகண் டத்துள் அடக்கியங்கிண்டை செஞ்சடை வைத்த இயல்பினான்கொண்ட கோவண ஆடையன் கூரெரிஅண்ட வாணர் அடையும்ஆ ரூரரே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 5362
மாலும் நான்முக னும்மறி கிற்கிலார்கால னாய அவனைக் கடந்திட்டுச்சூல மான்மழு வேந்திய கையினார்ஆலம் உண்டழ காயஆ ரூரரே.
பாடலின் தனிப் பக்கம்