சிந்தை வாய்தலு ளான்வந்து சீரியன்பொந்து வார்புலால் வெண்டலைக் கையினன்முந்தி வாயதோர் மூவிலை வேல்பிடித்தந்தி வாயதோர் பாம்பர்ஐ யாறரே.
பாடலின் தனிப் பக்கம்
பாடல்கள் The verses
பாக மாலை மகிழ்ந்தனர் பான்மதிபோக ஆனையின் ஈருரி போர்த்தவர்கோக மாலை குலாயதோர் கொன்றையும்ஆக ஆன்நெய்அஞ் சாடும்ஐ யாறரே.
பாடலின் தனிப் பக்கம்
நெஞ்ச மென்பதோர் நீள்கயந் தன்னுளேவஞ்ச மென்பதோர் வான்சுழிப் பட்டுநான்துஞ்சும் போழ்துநின் நாமத் திருவெழுத்தஞ்சுந் தோன்ற அருளும்ஐ யாறரே.
பாடலின் தனிப் பக்கம்
நினைக்கும் நெஞ்சினுள் ளார்நெடு மாமதில்அனைத்தும் ஒள்ளழல் வாயெரி யூட்டினார்பனைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர்அனைத்து வாய்தலுள் ளாரும்ஐ யாறரே.
பாடலின் தனிப் பக்கம்
பரியர் நுண்ணியர் பார்த்தற் கரியவர்அரிய பாடலர் ஆடல ரன்றியுங்கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கெலாம்அரியர் தொண்டர்க் கெளியர்ஐ யாறரே.
பாடலின் தனிப் பக்கம்
புலரும் போது மிலாப்பட்ட பொற்சுடர்மலரும் போதுக ளாற்பணி யச்சிலர்இலரும் போதும் இலாதது மன்றியும்அலரும் போதும் அணியும்ஐ யாறரே.
பாடலின் தனிப் பக்கம்
பங்க மாலைக் குழலியோர் பால்நிறக்கங்கை மாலையர் காதன்மை செய்தவர்மங்கை மாலை மதியமுங் கண்ணியும்அங்க மாலையுஞ் சூடும்ஐ யாறரே.
பாடலின் தனிப் பக்கம்
முன்னை யாறு முயன்றெழு வீரெலாம்பின்னை யாறு பிரியெனும் பேதைகாள்மன்னை யாறு மருவிய மாதவன்தன்னை யாறு தொழத்தவ மாகுமே.
பாடலின் தனிப் பக்கம்
ஆனை யாறென ஆடுகின் றான்முடிவானை யாறு வளாயது காண்மினோநான்ஐ யாறுபுக் கேற்கவன் இன்னருள்தேனை யாறு திறந்தாலே யொக்குமே.
பாடலின் தனிப் பக்கம்
அரக்கின் மேனியன் அந்தளிர் மேனியன்அரக்கின் சேவடி யாளஞ்ச அஞ்சலென்றரக்கன் ஈரைந்து வாயும் அலறவேஅரக்கி னானடி யாலும்ஐ யாறனே.
பாடலின் தனிப் பக்கம்