படையும் பூதமும் பாம்பும்புல் வாயதள்உடையுந் தாங்கிய உத்தம னார்க்கிடம்புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம்அடைய வல்லவர்க் கல்லலொன் றில்லையே.
பாடலின் தனிப் பக்கம்
பாடல்கள் The verses
பறப்பை யும்பசு வும்படுத் துப்பலதிறத்த வும்முடை யோர்திக ழும்பதிகறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர்தருசிறப்பு டைத்திரு வாஞ்சியஞ் சேர்மினே.
பாடலின் தனிப் பக்கம்
புற்றி லாடர வோடு புனல்மதிதெற்று செஞ்சடைத் தேவர் பிரான்பதிசுற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்பற்றிப் பாடுவார்க் குப்பாவ மில்லையே.
பாடலின் தனிப் பக்கம்
அங்க மாறும் அருமறை நான்குடன்தங்கு வேள்வியர் தாம்பயி லுந்நகர்செங்கண் மாலிட மார்திரு வாஞ்சியந்தங்கு வார்நம் மமரர்க் கமரரே.
பாடலின் தனிப் பக்கம்
நீறு பூசி நிமிர்சடை மேற்பிறைஆறு சூடும் அடிகள் உறைபதிமாறு தானொருங் கும்வயல் வாஞ்சியந்தேறி வாழ்பவர்க் குச்செல்வ மாகுமே.
பாடலின் தனிப் பக்கம்
அற்றுப் பற்றின்றி யாரையு மில்லவர்க்குற்ற நற்றுணை யாவான் உறைபதிதெற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியங்கற்றுச் சேர்பவர்க் குக்கருத் தாவதே.
பாடலின் தனிப் பக்கம்
அருக்கன் அங்கி நமனொடு தேவர்கள்திருத்துஞ் சேவடி யான்றிக ழுந்நகர்ஒருத்தி பாக முகந்தவன் வாஞ்சியம்அருத்தி யாலடை வார்க்கில்லை யல்லலே.
பாடலின் தனிப் பக்கம்