பண் · இந்தளம்
செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்த்துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே.
பாடலின் தனிப் பக்கம்
பண் · இந்தளம்
செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்த்துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே.
பாடலின் தனிப் பக்கம்
எற்று தெண்டிரை யேறிய சங்கினொ டிப்பிகள்பொற்றி கழ்கம லப்பழ னம்புகு பூந்தராய்ச்சுற்றி நல்லிமை யோர்தொழு பொன்கழ லீர்சொலீர்பெற்ற மேறுதல் பெற்றிமை யோபெரு மானிரே.
பாடலின் தனிப் பக்கம்
சங்கு செம்பவ ளத்திரள் முத்தவை தாங்கொடுபொங்கு தெண்டிரை வந்தலைக் கும்புனற் பூந்தராய்த்துங்க மால்களிற் றின்னுரி போர்த்துகந் தீர்சொலீர்மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே.
பாடலின் தனிப் பக்கம்
சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர்பூம ணங்கம ழும்பொழில் சூழ்தரு பூந்தராய்ச்சோம னும்மர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர்காமன் வெண்பொடி யாகக் கடைக்கண் சிவந்ததே.
பாடலின் தனிப் பக்கம்
பள்ள மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயனபுள்ளும் நாடொறுஞ் சேர்பொழில் சூழ்தரு பூந்தராய்த்துள்ளும் மான்மறி யேந்திய செங்கையி னீர்சொலீர்வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே.
பாடலின் தனிப் பக்கம்
மாதி லங்கிய மங்கைய ராடம ருங்கெலாம்போதி லங்கம லமது வார்புனற் பூந்தராய்ச்சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர்காதி லங்குழை சங்கவெண் தோடுடன் வைத்ததே.
பாடலின் தனிப் பக்கம்
குறிப்பு இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று.
பாடலின் தனிப் பக்கம்வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள் தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த் துரக்கும் மால்விடைமேல்வரு வீரடி கேள்சொலீர் அரக்க னாற்றல் அழித்தரு ளாக்கிய ஆக்கமே.
பாடலின் தனிப் பக்கம்
வரிகொள் செங்கயல் பாய்புனல் சூழ்ந்த மருங்கெலாம்புரிசை நீடுயர் மாடம் நிலாவிய பூந்தராய்ச்சுருதி பாடிய பாணியல் தூமொழி யீர்சொலீர்கரிய மாலயன் நேடியு மைக்கண் டிலாமையே.
பாடலின் தனிப் பக்கம்
வண்ட லங்கழ னிம்மடை வாளைகள் பாய்புனற்புண்ட ரீகம லர்ந்து மதுத்தரு பூந்தராய்த்தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர்குண்டர் சாக்கியர் கூறிய தாங்குறி யின்மையே.
பாடலின் தனிப் பக்கம்
மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப்புகலி ஞானசம் பந்தன் எழில்மிகு பூந்தராய்ப்பகவ னாரைப் பரவுசொல் மாலைபத் தும்வல்லார்அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே.
பாடலின் தனிப் பக்கம்