பண் · காந்தாரம்
மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர்கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார்பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே.
பாடலின் தனிப் பக்கம்
பண் · காந்தாரம்
மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர்கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார்பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே.
பாடலின் தனிப் பக்கம்
துன்னு கடற்பவ ளஞ்சேர் தூயன நீண்டதிண் டோள்கள்மின்னு சுடர்க்கொடி போலும் மேனியி னாளொரு கங்கைக்கன்னி களின்புனை யோடு கலைமதி மாலை கலந்தபின்னு சடைப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.
பாடலின் தனிப் பக்கம்
கங்கைக்கன்னிகளின் புனையோடு - என்பதனுக்கு கங்கை யாறுகளாகிய மாலையுடனெனப்பொருள் தோன்றுகின்றது.கள்ள மதித்த கபாலங் கைதனி லேமிக ஏந்தித் துள்ள மிதித்துநின்றாடுந் தொழிலர் எழில்மிகு செல்வர் வெள்ள நகுதலை மாலை விரிசடைமேல்மிளிர் கின்ற பிள்ளை மதிப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.
பாடலின் தனிப் பக்கம்
ஆட லிலையம் உடையார் அருமறை தாங்கியா றங்கம்பாட லிலையம் உடையார் பன்மை யொருமைசெய் தஞ்சும்ஊட லிலையம் உடையார் யோகெனும் பேரொளி தாங்கிபீட லிலையம் உடையார் பெரும்புலி யூர்பிரி யாரே.
பாடலின் தனிப் பக்கம்
தோடுடை யார்குழைக் காதிற் சுடுபொடி யாரன லாடக்காடுடை யாரெரி வீசுங் கையுடை யார்கடல் சூழ்ந்தநாடுடை யார்பொரு ளின்ப நல்லவை நாளு நயந்தபீடுடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.
பாடலின் தனிப் பக்கம்
கற்ற துறப்பணி செய்து காண்டுமென் பாரவர் தங்கண்முற்றி தறிதுமென் பார்கள் முதலியர் வேதபு ராணர்மற்றி தறிதுமென் பார்கள் மனத்திடை யார்பணி செய்யப்பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலி யூர்பிரி யாரே.
பாடலின் தனிப் பக்கம்
மறையுடை யாரொலி பாடல் மாமலர்ச் சேவடி சேர்வார்குறையுடை யார்குறை தீர்ப்பார் குழகர் அழகர் நஞ்செல்வர்கறையுடை யார்திகழ் கண்டங் கங்கை சடையிற் கரந்தார்பிறையுடை யார்சென்னி தன்மேற் பெரும்புலி யூர்பிரி யாரே.
பாடலின் தனிப் பக்கம்
உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடெளி தாகித்துறவியுங் கூட்டமுங் காட்டித் துன்பமும் இன்பமுந் தோற்றிமறவியென் சிந்தனை மாற்றி வாழவல் லார்தமக் கென்றும்பிறவி யறுக்கும் பிரானார் பெரும்புலி யூர்பிரி யாரே.
பாடலின் தனிப் பக்கம்
சீருடை யாரடி யார்கள் சேடரொப் பார்சடை சேரும்நீருடை யார்பொடிப் பூசு நினைப்புடை யார்விரி கொன்றைத்தாருடை யார்விடை யூர்வார் தலைவரைந் நூற்றுப்பத் தாயபேருடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.
பாடலின் தனிப் பக்கம்
உரிமை யுடையடி யார்கள் உள்ளுற வுள்கவல் லார்கட்கருமை யுடையன காட்டி அருள்செயும் ஆதி முதல்வர்கருமை யுடைநெடு மாலுங் கடிமல ரண்ணலுங் காணாப்பெருமை யுடைப் பெருமானார் பெரும்புலி யூர்பிரி யாரே.
பாடலின் தனிப் பக்கம்
பிறைவள ரும்முடிச் சென்னிப் பெரும்புலி யூர்ப்பெரு மானைநறைவள ரும்பொழிற் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன்மறைவள ருந்தமிழ் மாலை வல்லவர் தந்துயர் நீங்கிநிறைவளர் நெஞ்சின ராகி நீடுல கத்திருப் பாரே.
பாடலின் தனிப் பக்கம்