பண் · செவ்வழி
கூனல்திங்கட் குறுங்கண்ணி கான்றந்நெடு வெண்ணிலாவேனற்பூத்தம் மராங்கோதை யோடும்விரா வுஞ்சடைவானநாடன் னமரர் பெருமாற் கிடமாவதுகானல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
பாடலின் தனிப் பக்கம்
பண் · செவ்வழி
கூனல்திங்கட் குறுங்கண்ணி கான்றந்நெடு வெண்ணிலாவேனற்பூத்தம் மராங்கோதை யோடும்விரா வுஞ்சடைவானநாடன் னமரர் பெருமாற் கிடமாவதுகானல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
பாடலின் தனிப் பக்கம்
விலங்கலொன்று சிலையா மதில்மூன்றுடன் வீட்டினான்இலங்குகண்டத் தெழிலாமை பூண்டாற் கிடமாவதுமலங்கியோங்கிவ் வருவெண் டிரைமல்கிய மால்கடற்கலங்கலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
பாடலின் தனிப் பக்கம்
வெறிகொளாருங் கடற்கைதை நெய்தல்விரி பூம்பொழில்முறிகொள்ஞாழல் முடப்புன்னை முல்லைம்முகை வெண்மலர்நறைகொள்கொன்றைந் நயந்தோங்கு நாதற் கிடமாவதுகறைகொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
பாடலின் தனிப் பக்கம்
வண்டுபாடவ் வளர்கொன்றை மாலைம்மதி யோடுடன்கொண்டகோலங் குளிர்கங்கை தங்குங்குருள் குஞ்சியுள்உண்டுபோலும் மெனவைத் துகந்தவ்வொரு வற்கிடம்கண்டல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
பாடலின் தனிப் பக்கம்
வார்கொள்கோலம் முலைமங்கை நல்லார்மகிழ்ந் தேத்தவேநீர்கொள்கோலச் சடைநெடுவெண் டிங்கள்நிகழ் வெய்தவேபோர்கொள்சூலப் படைபுல்கு கையார்க் கிடமாவதுகார்கொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
பாடலின் தனிப் பக்கம்
விடையதேறிவ் விடவர வசைத்த விகிர்தரவர்படைகொள்பூதம் பலபாட ஆடும் பரமாயவர்உடைகொள்வேங்கை யுரிதோ லுடையார்க் கிடமாவதுகடைகொள்செல்வங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
பாடலின் தனிப் பக்கம்
பொய்துவாழ்வார் மனம்பாழ் படுக்கும்மலர்ப் பூசனைசெய்துவாழ்வார் சிவன்சே வடிக்கேசெலுஞ் சிந்தையார்எய்தவாழ்வார் எழில்நக்க ரெம்மாற்கிட மாவதுகைதல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
பாடலின் தனிப் பக்கம்
பத்திரட்டி திரள்தோ ளுடையான்முடி பத்திறஅத்திரட்டி விரலா லடர்த்தார்க் கிடமாவதுமைத்திரட்டிவ் வருவெண் டிரைமல்கிய வார்கடல்கைத்திரட்டுங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
பாடலின் தனிப் பக்கம்
நல்லபோதில் லுறைவானும் மாலும்நடுக் கத்தினால்அல்லராவ ரெனநின்ற பெம்மாற் கிடமாவதுமல்லலோங்கிவ் வருவெண் டிரைமல்கிய மால்கடல்கல்லலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
பாடலின் தனிப் பக்கம்
உயர்ந்தபோதின் னுருவத் துடைவிட்டுழல் வார்களும்பெயர்ந்தமண்டை யிடுபிண்ட மாவுண்டுழல் வார்களும்நயந்துகாணா வகைநின்ற நாதர்க் கிடமாவதுகயங்கொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
பாடலின் தனிப் பக்கம்
மல்குதண்பூம் புனல்வாய்ந் தொழுகும்வயற் காழியான்நல்லகேள்வித் தமிழ்ஞான சம்பந்தன் நல்லார்கள்முன்வல்லவாறே புனைந்தேத்துங் காரோணத்து வண்டமிழ்சொல்லுவார்க்கும் மிவைகேட் பவர்க்குந்துய ரில்லையே.
பாடலின் தனிப் பக்கம்