பதிகம் 3 / 122 · இரண்டாம் திருமுறை · திருஞானசம்பந்தர்

திருத்தெளிச்சேரி

Thiruttheliccheri · 11 பாடல்கள் · 1515–1525

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 1515

பண் · இந்தளம்

பூவ லர்ந்தன கொண்டுமுப் போதுமும் பொற்கழல்தேவர் வந்து வணங்கு மிகுதெளிச் சேரியீர்மேவ ருந்தொழி லாளொடு கேழற்பின் வேடனாம்பாவ கங்கொடு நின்றது போலுநும் பான்மையே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 1516
விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவ ரேத்தவேதிளைக்குந் தீர்த்த மறாத திகழ்தெளிச் சேரியீர்வளைக்குந் திண்சிலை மேலைந்து பாணமுந் தானெய்துகளிக்குங் காமனை யெங்ஙனம் நீர்கண்ணிற் காய்ந்ததே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 1517
வம்ப டுத்த மலர்ப்பொழில் சூழ மதிதவழ்செம்ப டுத்த செழும்புரி சைத்தெளிச் சேரியீர்கொம்ப டுத்ததொர் கோல விடைமிசை கூர்மையோடம்ப டுத்தகண் ணாளொடு மேவல் அழகிதே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 1518
காரு லாங்கட லிப்பிகள் முத்தங் கரைப்பெயுந்தேரு லாநெடு வீதிய தார்தெளிச் சேரியீர்ஏரு லாம்பலிக் கேகிட வைப்பிட மின்றியேவாரு லாமுலை யாளையொர் பாகத்து வைத்ததே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 1519
பக்க நுந்தமைப் பார்ப்பதி யேத்திமுன் பாவிக்குஞ்செக்கர் மாமதி சேர்மதில் சூழ்தெளிச் சேரியீர்மைக்கொள் கண்ணியர் கைவளை மால்செய்து வௌவவேநக்க ராயுல கெங்கும் பலிக்கு நடப்பதே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 1520
தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழநற்றிவள மாமணி மாடந் திகழ்தெளிச் சேரியீர்குவளை போற்கண்ணி துண்ணென வந்து குறுகியகவள மால்கரி யெங்ஙனம் நீர்கையிற் காய்ந்ததே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 1521
கோட டுத்த பொழிலின் மிசைக்குயில் கூவிடுஞ்சேட டுத்த தொழிலின் மிகுதெளிச் சேரியீர்மாட டுத்த மலர்க்கண்ணி னாள்கங்கை நங்கையைத்தோட டுத்த மலர்ச்சடை யென்கொல்நீர் சூடிற்றே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 1522
கொத்தி ரைத்த மலர்க்குழ லாள்குயில் கோலஞ்சேர்சித்தி ரக்கொடி மாளிகை சூழ்தெளிச் சேரியீர்வித்த கப்படை வல்ல அரக்கன் விறற்றலைபத்தி ரட்டிக் கரம்நெரித் திட்டதும் பாதமே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 1523
காலெ டுத்த திரைக்கை கரைக்கெறி கானல்சூழ்சேல டுத்த வயற்பழ னத்தெளிச் சேரியீர்மால டித்தல மாமல ரான்முடி தேடியேஓல மிட்டிட எங்ஙன மோருருக் கொண்டதே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 1524
மந்தி ரந்தரு மாமறை யோர்கள் தவத்தவர்செந்தி லங்கு மொழியவர் சேர்தெளிச் சேரியீர்வெந்த லாகிய சாக்கிய ரோடு சமணர்கள்தந்தி றத்தன நீக்குவித் தீரோர் சதிரரே.
பாடலின் தனிப் பக்கம்
11 பாடல் 1525
திக்கு லாம்பொழில் சூழ்தெளிச் சேரியெஞ் செல்வனைமிக்க காழியுள் ஞானசம் பந்தன் விளம்பியதக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தடமுடித்தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே.
பாடலின் தனிப் பக்கம்