பதிகம் 42 / 122 · இரண்டாம் திருமுறை · திருஞானசம்பந்தர்

திருஆக்கூர்

Thiruaakkoor · 11 பாடல்கள் · 1943–1953

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 1943

பண் · சீகாமரம்

அக்கிருந்த ஆரமும் ஆடரவும் ஆமையுந்தொக்கிருந்த மார்பினான் தோலுடையான் வெண்ணீற்றான்புக்கிருந்த தொல்கோயில் பொய்யிலா மெய்ந்நெறிக்கேதக்கிருந்தார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 1944
நீரார வார்சடையான் நீறுடையான் ஏறுடையான்காரார்பூங் கொன்றையினான் காதலித்த தொல்கோயில்கூராரல் வாய்நிறையக் கொண்டயலே கோட்டகத்திற்தாராமல் காக்கூரில் தான்தோன்றி மாடமே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 1945
வாளார்கண் செந்துவர்வாய் மாமலையான் றன்மடந்தைத்தோளாகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில்வேளாள ரென்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்குந்தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 1946
கொங்குசேர் தண்கொன்றை மாலையினான் கூற்றடரப்பொங்கினான் பொங்கொளிசேர் வெண்ணீற்றான் பூங்கோயில்அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்விதங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 1947
வீக்கினான் ஆடரவம் வீழ்ந்தழிந்தார் வெண்டலையென்பாக்கினான் பலகலன்க ளாதரித்துப் பாகம்பெண்ஆக்கினான் தொல்கோயில் ஆம்பலம்பூம் பொய்கைபுடைத்தாக்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 1948
பண்ணொளிசேர் நான்மறையான் பாடலினோ டாடலினான்கண்ணொளிசேர் நெற்றியினான் காதலித்த தொல்கோயில்விண்ணொளிசேர் மாமதியந் தீண்டியக்கால் வெண்மாடந்தண்ணொளிசேர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 1949
வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவியவாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சுந் தொல்கோயில்பாங்கினார் நான்மறையோ டாறங்கம் பலகலைகள்தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 1950
கன்னெடிய குன்றெடுத்தான் தோளடரக் காலூன்றி இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல்கோயில் பொன்னடிக்கே நாடோ றும் பூவோடு நீர்சுமக்குந் தன்னடியார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 1951
நன்மையான் நாரணனும் நான்முகனுங் காண்பரியதொன்மையான் தோற்றங்கே டில்லாதான் தொல்கோயில்இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையென்னா தீந்துவக்குந்தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 1952
நாமருவு புன்மை நவிற்றச் சமண்தேரர்பூமருவு கொன்றையினான் புக்கமருந் தொல்கோயில்சேன்மருவு பங்கயத்துச் செங்கழுநீர் பைங்குவளைதாமருவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
பாடலின் தனிப் பக்கம்
11 பாடல் 1953
ஆடல் அமர்ந்தானை ஆக்கூரில் தான்தோன்றிமாடம் அமர்ந்தானை மாடஞ்சேர் தண்காழிநாடற் கரியசீர் ஞானசம் பந்தன்சொல்பாடலிவை வல்லார்க் கில்லையாம் பாவமே.
பாடலின் தனிப் பக்கம்