பதிகம் 97 / 122 · இரண்டாம் திருமுறை · திருஞானசம்பந்தர்

சீகாழி - திருவிராகம்

Seegaazhi Thiruviraagam · 11 பாடல்கள் · 2550–2560

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 2550

பண் · நட்டராகம்

நம்பொருள்நம் மக்களென்று நச்சிஇச்சை செய்துநீர்அம்பரம்அ டைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம்உம்பர்நாதன் உத்தமன் ஒளிமிகுத்த செஞ்சடைநம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 2551
பாவமேவும் உள்ளமோடு பத்தியின்றி நித்தலும்ஏவமான செய்துசாவ தன்முனம் மிசைந்துநீர்தீபமாலை தூபமுஞ் செறிந்தகைய ராகிநந்தேவதேவன் மன்னுமூர் திருந்துகாழி சேர்மினே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 2552
சோறுகூறை யின்றியே துவண்டுதூர மாய்நுமக்கேறுசுற்றம் எள்கவே யிடுக்கணுய்ப்ப தன்முனம்ஆறுமோர் சடையினான் ஆதியானை செற்றவன்நாறுதேன் மலர்ப்பொழில் நலங்கொள்காழி சேர்மினே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 2553
நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல நாளையும்உச்சிவம் மெனும்முரை உணர்ந்துகேட்ப தன்முனம்பிச்சர்நச் சரவரைப் பெரியசோதி பேணுவார்இச்சைசெய்யும் எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 2554
கண்கள்காண் பொழிந்துமேனி கன்றியொன் றலாதநோய்உண்கிலாமை செய்துநும்மை யுய்த்தழிப்ப தன்முனம்விண்குலாவு தேவருய்ய வேலைநஞ் சமுதுசெய்கண்கள்மூன் றுடையவெங் கருத்தர்காழி சேர்மினே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 2555
அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற் கவத்தமே பிறந்துநீர்எல்லையில் பிணக்கினிற் கிடந்திடா தெழும்மினோபல்லில்வெண் டலையினிற் பலிக்கியங்கு பான்மையான்கொல்லையேற தேறுவான் கோலக்காழி சேர்மினே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 2557
பொய்மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு சொல்லுநீர்ஐமிகுத்த கண்டரா யடுத்துரைப்ப தன்முனம்மைமிகுத்த மேனிவா ளரக்கனை நெரித்தவன்பைமிகுத்த பாம்பரைப் பரமர்காழி சேர்மினே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 2558
காலினோடு கைகளுந் தளர்ந்துகாம நோய்தனால்ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்ப தன்முனம்மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலாநீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 2559
நிலைவெறுத்த நெஞ்சமோடு நேசமில் புதல்வர்கள்முலைவெறுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முனந்தலைபறித்த கையர்தேரர் தாந்தரிப் பரியவன்சிலைபிடித்தெ யிலெய்தான் திருந்துகாழி சேர்மினே.
பாடலின் தனிப் பக்கம்
11 பாடல் 2560
தக்கனார் தலையரிந்த சங்கரன் றனதரைஅக்கினோ டரவசைத்த அந்திவண்ணர் காழியைஒக்கஞான சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர்மிக்கஇன்ப மெய்திவீற் றிருந்துவாழ்தல் மெய்ம்மையே.
பாடலின் தனிப் பக்கம்