பண் · நட்டராகம்
விருது குன்றமா மேருவில் நாணர வாவனல் எரியம்பாப்பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் றுறைபதி யெந்நாளுங்கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ் பொழிலணி மாதோட்டங்கருத நின்றகே தீச்சரங் கைதொழக் கடுவினை யடையாவே.
பாடலின் தனிப் பக்கம்
பண் · நட்டராகம்
விருது குன்றமா மேருவில் நாணர வாவனல் எரியம்பாப்பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் றுறைபதி யெந்நாளுங்கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ் பொழிலணி மாதோட்டங்கருத நின்றகே தீச்சரங் கைதொழக் கடுவினை யடையாவே.
பாடலின் தனிப் பக்கம்
பாடல் வீணையர் பலபல சரிதையர் எருதுகைத் தருநட்டம்ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ் சுண்டிருள் கண்டத்தர்ஈட மாவது இருங்கடற் கரையினில் எழில்திகழ் மாதோட்டம்கேடி லாதகே தீச்சரங் கைதொழக் கெடுமிடர் வினைதானே.
பாடலின் தனிப் பக்கம்
பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர் அறைகழல் சிலம்பார்க்கச்சுண்ண மாதரித் தாடுவர் பாடுவர் அகந்தொறும் இடுபிச்சைக்குண்ண லாவதோர் இச்சையி னுழல்பவர் உயர்தரு மாதோட்டத்தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க் கருவினை யடையாவே.
பாடலின் தனிப் பக்கம்
பொடிகொள் மேனியர் புலியத ளரையினர் விரிதரு கரத்தேந்தும்வடிகொள் மூவிலை வேலினர் நூலினர் மறிகடல் மாதோட்டத்தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம் பரிந்தசிந் தையராகிமுடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல் மொய்த்தெழும் வினைபோமே.
பாடலின் தனிப் பக்கம்
நல்ல ராற்றவும் ஞானநன் குடையர்தம் மடைந்தவர்க் கருளீயவல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர் மலிகடல் மாதோட்டத்தெல்லை யில்புகழ் எந்தைகே தீச்சரம் இராப்பகல் நினைந்தேத்திஅல்லல் ஆசறுத் தரனடி யிணைதொழும் அன்பராம் அடியாரே.
பாடலின் தனிப் பக்கம்
பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப் பொருந்தவைத் தொருபாகம்மாழை யங்கயற் கண்ணிபா லருளிய பொருளினர் குடிவாழ்க்கைவாழை யம்பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டக்கேழல் வெண்மருப் பணிந்தநீள் மார்பர்கே தீச்சரம் பிரியாரே.
பாடலின் தனிப் பக்கம்
பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல் லுலகினில் உயிர்வாழ்க்கைகண்ட நாதனார் கடலிடங் கைதொழக் காதலித் துறைகோயில்வண்டு பண்செயு மாமலர்ப் பொழில்மஞ்ஞை நடமிடு மாதோட்டந்தொண்டர் நாடொறுந் துதிசெய அருள்செய்கே தீச்சர மதுதானே.
பாடலின் தனிப் பக்கம்
தென்னி லங்கையர் குலபதி மலைநலிந் தெடுத்தவன் முடிதிண்டோள்தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த தலைவனார் கடல்வாயப்பொன்னி லங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத்துன்னி யன்பொடும் அடியவ ரிறைஞ்சுகே தீச்சரத் துள்ளாரே.
பாடலின் தனிப் பக்கம்
பூவு ளானுமப் பொருகடல் வண்ணனும் புவியிடந் தெழுந்தோடிமேவி நாடிநின் அடியிணை காண்கிலா வித்தக மென்னாகும்மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா தோட்டநன் னகர்மன்னித்தேவி தன்னொடுந் திருந்துகே தீச்சரத் திருந்தஎம் பெருமானே.
பாடலின் தனிப் பக்கம்
புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர் புறனுரைச் சமணாதர்எத்த ராகிநின் றுண்பவ ரியம்பிய ஏழைமை கேலேன்மின்மத்த யானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர் மாதோட்டத்தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே தீச்சரம் அடைமின்னே.
பாடலின் தனிப் பக்கம்
மாடெ லாமண முரசெனக் கடலின தொலிகவர் மாதோட்டத்தாட லேறுடை அண்ணல்கே தீச்சரத் தடிகளை யணிகாழிநாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல் நவின்றெழு பாமாலைப்பாட லாயின பாடுமின் பத்தர்காள் பரகதி பெறலாமே.
பாடலின் தனிப் பக்கம்