பண் · இந்தளம்
சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர்வாரார் முலைமங்கை யொடும் முடனாகிஏரா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்காரார் கடல்நஞ் சமுதுண்ட கருத்தே.
பாடலின் தனிப் பக்கம்
பண் · இந்தளம்
சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர்வாரார் முலைமங்கை யொடும் முடனாகிஏரா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்காரார் கடல்நஞ் சமுதுண்ட கருத்தே.
பாடலின் தனிப் பக்கம்
தொழலார் கழலேதொழு தொண்டர்கள் சொல்லீர்குழலார் மொழிக்கோல் வளையோ டுடனாகிஎழிலா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்கழல்தான் கரிகா னிடையாடு கருத்தே.
பாடலின் தனிப் பக்கம்
அன்பா லடிகை தொழுவீ ரறியீரேமின்போல் மருங்குல் மடவா ளொடுமேவிஇன்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே.
பாடலின் தனிப் பக்கம்
நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர்கச்சிப் பொலிகாமக் கொடியுடன் கூடிஇச்சித் திரும்பூளை யிடங்கொண்ட ஈசன்உச்சித் தலையிற் பலிகொண் டுழலூணே.
பாடலின் தனிப் பக்கம்
சுற்றார்ந் தடியே தொழுவீ ரிதுசொல்லீர்நற்றாழ் குழல்நங்கை யொடும் முடனாகிஎற்றே யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்புற்றா டரவோடென்பு பூண்ட பொருளே.
பாடலின் தனிப் பக்கம்
தோடார் மலர்தூய்த் தொழுதொண்டர் கள்சொல்லீர்சேடார் குழற்சே யிழையோ டுடனாகிஈடா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்காடார் கடுவே டுவனான கருத்தே.
பாடலின் தனிப் பக்கம்
குறிப்பு இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
பாடலின் தனிப் பக்கம்ஒருக்கும் மனத்தன்ப ருள்ளீ ரிதுசொல்லீர்பருக்கை மதவேழ முரித்துமை யோடும்இருக்கை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்அரக்கன் உரந்தீர்த் தருளாக் கியவாறே.
பாடலின் தனிப் பக்கம்
துயரா யினநீங்கித் தொழுந்தொண்டர் சொல்லீர்கயலார் கருங்கண்ணி யொடும் முடனாகிஇயல்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்முயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே.
பாடலின் தனிப் பக்கம்
துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண்டர் கள்சொல்லீர்பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகிஇணையில் லிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்அணைவில் சமண்சாக் கியமாக் கியவாறே.
பாடலின் தனிப் பக்கம்
எந்தை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்சந்தம் பயில்சண்பை யுண்ஞான சம்பந்தன்செந்தண் தமிழ்செப் பியபத் திவைவல்லார்பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே.
பாடலின் தனிப் பக்கம்