பதிகம் 46 / 122 · இரண்டாம் திருமுறை · திருஞானசம்பந்தர்

திருநாலூர்த்திருமயானம்

Thirunaaloortthirumayaanam · 11 பாடல்கள் · 1986–1996

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 1986

பண் · சீகாமரம்

பாலூரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும்மேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான்நாலூர் மயானத்து நம்பான்றன் அடிநினைந்துமாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 1987
சூடும் பிறைச்சென்னி சூழ்கா டிடமாகஆடும் பறைசங் கொலியோ டழகாகநாடுஞ் சிறப்போவா நாலூர் மயனத்தைப்பாடுஞ் சிறப்போர்பாற் பற்றாவாம் பாவமே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 1988
கல்லால் நிழல்மேவிக் காமுறுசீர் நால்வர்க்கன்றெல்லா அறனுரையும் இன்னருளாற் சொல்லினான்நல்லார் தொழுதேத்தும் நாலூர் மயானத்தைச்சொல்லா தவரெல்லாஞ் செல்லாதார் தொன்னெறிக்கே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 1989
கோலத்தார் கொன்றையான் கொல்புலித்தோ லாடையான்நீலத்தார் கண்டத்தான் நெற்றியோர் கண்ணினான்ஞாலத்தார் சென்றேத்து நாலூர் மயானத்திற்சூலத்தா னென்பார்பாற் சூழாவாந் தொல்வினையே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 1990
கறையார் மணிமிடற்றான் காபாலி கட்டங்கன்பிறையார் வளர்சடையான் பெண்பாகன் நண்பாயநறையார் பொழில்புடைசூழ் நாலூர் மயானத்தெம்இறையானென் றேத்துவார்க் கெய்துமாம் இன்பமே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 1991
கண்ணார் நுதலான் கனலா டிடமாகப்பண்ணார் மறைபாடி யாடும் பரஞ்சோதிநண்ணார் புரமெய்தான் நாலூர் மயானத்தைநண்ணா தவரெல்லாம் நண்ணாதார் நன்னெறியே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 1992
கண்பாவு வேகத்தாற் காமனைமுன் காய்ந்துகந்தான்பெண்பாவு பாகத்தான் நாகத்தோ லாகத்தான்நண்பார் குணத்தோர்கள் நாலூர் மயானத்தைஎண்பாவு சிந்தையார்க் கேலா இடர்தானே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 1993
பத்துத் தலையோனைப் பாதத் தொருவிரலால்வைத்து மலையடர்த்து வாளோடு நாள்கொடுத்தான்நத்தின் ஒலியோவா நாலூர் மயானத்தென்அத்தன் அடிநினைவார்க் கல்லல் அடையாவே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 1994
மாலோடு நான்முகனும் நேட வளரெரியாய்மேலோடு கீழ்காணா மேன்மையான் வேதங்கள்நாலோடும் ஆறங்கம் நாலூர் மயானத்தெம்பாலோடு நெய்யாடி பாதம் பணிவோமே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 1995
துன்பாய மாசார் துவராய போர்வையார்புன்பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்நண்பாற் சிவாயவெனா நாலூர் மயானத்தேஇன்பா யிருந்தானை யேத்துவார்க் கின்பமே.
பாடலின் தனிப் பக்கம்
11 பாடல் 1996
ஞாலம் புகழ்காழி ஞானசம் பந்தன்றான்நாலு மறையோது நாலூர் மயானத்தைச்சீலம் புகழாற் சிறந்தேத்த வல்லாருக்கேலும் புகழ்வானத் தின்பா யிருப்பாரே.
பாடலின் தனிப் பக்கம்