பதிகம் 15 / 122 · இரண்டாம் திருமுறை · திருஞானசம்பந்தர்

திருக்காறாயில்

Thirukkaaraayil · 11 பாடல்கள் · 1648–1658

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 1648

பண் · இந்தளம்

நீரானே நீள்சடை மேலொர் நிரைகொன்றைத்தாரானே தாமரை மேலயன் தான்றொழுஞ்சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில்ஊரானே யென்பவர் ஊனமி லாதாரே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 1649
மதியானே வரியர வோடுடன் மத்தஞ்சேர்விதியானே விதியுடை வேதியர் தாந்தொழும்நெதியானே நீர்வயல் சூழ்திருக் காறாயிற்பதியானே யென்பவர் பாவமி லாதாரே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 1650
விண்ணானே விண்ணவ ரேத்திவி ரும்புஞ்சீர்மண்ணானே மண்ணிடை வாழுமு யிர்க்கெல்லாங்கண்ணானே கடிபொழில் சூழ்திருக் காறாயில்எண்ணானே யென்பவர் ஏதமி லாதாரே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 1651
தாயானே தந்தையு மாகிய தன்மைகள்ஆயானே ஆயநல் லன்பர்க்க ணியானேசேயானே சீர்திக ழுந்திருக் காறாயில்மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 1652
கலையானே கலைமலி செம்பொற் கயிலாயமலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்தசிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில்நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 1653
ஆற்றானே ஆறணி செஞ்சடை யாடரவேற்றானே ஏழுல கும்மிமை யோர்களும்போற்றானே பொழில்திக ழுந்திருக் காறாயில்நீற்றானே யென்பவர் மேல்வினை நில்லாவே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 1654
சேர்த்தானே தீவினை தேய்ந்தறத் தேவர்கள்ஏத்தானே யேத்துநன் மாமுனி வர்க்கிடர்காத்தானே கார்வயல் சூழ்திருக் காறாயில்ஆர்த்தானே யென்பவர் மேல்வினை யாடாவே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 1655
கடுத்தானே காலனைக் காலாற் கயிலாயம்எடுத்தானை யேதமா கம்முனி வர்க்கிடர்கெடுத்தானே கேழ்கிள ருந்திருக் காறாயில்அடுத்தானே யென்பவர் மேல்வினை யாடாவே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 1656
பிறையானே பேணிய பாடலோ டின்னிசைமறையானே மாலொடு நான்முகன் காணாதஇறையானே யெழில்திக ழுந்திருக் காறாயில்உறைவானே யென்பவர் மேல்வினை ஓடுமே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 1657
செடியாரும் புன்சமண் சீவரத் தார்களும்படியாரும் பாவிகள் பேச்சுப் பயனில்லைகடியாரும் பூம்பொழில் சூழ்திருக் காறாயில்குடியாருங் கொள்கையி னார்க்கில்லை குற்றமே.
பாடலின் தனிப் பக்கம்
11 பாடல் 1658
ஏய்ந்தசீ ரெழில்திக ழுந்திருக் காறாயில்ஆய்ந்தசீ ரானடி யேத்தி யருள்பெற்றபாய்ந்தநீர்க் காழியுள் ஞானசம் பந்தன்சொல்வாய்ந்தவா றேத்துவார் வானுல காள்வாரே.
பாடலின் தனிப் பக்கம்