பண் · காந்தாரம்
பெண்ணமர் மேனியி னாரும் பிறைபுல்கு செஞ்சடை யாருங்கண்ணமர் நெற்றியி னாருங் காதம ருங்குழை யாரும்எண்ணம ருங்குணத் தாரும் இமையவ ரேத்த நின்றாரும்பண்ணமர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
பாடலின் தனிப் பக்கம்
பண் · காந்தாரம்
பெண்ணமர் மேனியி னாரும் பிறைபுல்கு செஞ்சடை யாருங்கண்ணமர் நெற்றியி னாருங் காதம ருங்குழை யாரும்எண்ணம ருங்குணத் தாரும் இமையவ ரேத்த நின்றாரும்பண்ணமர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
பாடலின் தனிப் பக்கம்
தனைக்கணி மாமலர் கொண்டு தாள்தொழு வாரவர் தங்கள்வினைப்பகை யாயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார் நிரைவளை மங்கை நடுங்கப்பனைக்கைப் பகட்டுரி போர்த்தார் பாண்டிக் கொடுமுடி யாரே.
பாடலின் தனிப் பக்கம்
சடையமர் கொன்றையி னாருஞ் சாந்தவெண் ணீறணிந் தாரும்புடையமர் பூதத்தி னாரும் பொறிகிளர் பாம்பசைத் தாரும்விடையம ருங்கொடி யாரும் வெண்மழு மூவிலைச் சூலப்படையமர் கொள்கையி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
பாடலின் தனிப் பக்கம்
நறைவளர் கொன்றையி னாரும் ஞாலமெல் லாந்தொழு தேத்தக்கறைவளர் மாமிடற் றாருங் காடரங் காக்கன லேந்திமறைவளர் பாடலி னோடு மண்முழ வங்குழல் மொந்தைபறைவளர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
பாடலின் தனிப் பக்கம்
போகமு மின்பமு மாகிப் போற்றியென் பாரவர் தங்கள்ஆகமு றைவிட மாக அமர்ந்தவர் கொன்றையி னோடும்நாகமுந் திங்களுஞ் சூடி நன்னுதல் மங்கைதன் மேனிப்பாகமு கந்தவர் தாமும் பாண்டிக் கொடுமுடி யாரே.
பாடலின் தனிப் பக்கம்
கடிபடு கூவிளம் மத்தங் கமழ்சடை மேலுடை யாரும்பொடிபட முப்புரஞ் செற்ற பொருசிலை யொன்றுடை யாரும்வடிவுடை மங்கைதன் னோடு மணம்படு கொள்கையி னாரும்படிபடு கோலத்தி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
பாடலின் தனிப் பக்கம்
ஊனமர் வெண்டலை யேந்தி உண்பலிக் கென்றுழல் வாருந்தேனம ரும்மொழி மாது சேர்திரு மேனியி னாருங்கானமர் மஞ்ஞைக ளாலுங் காவிரிக் கோலக் கரைமேல்பானல நீறணி வாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
பாடலின் தனிப் பக்கம்
புரந்தரன் தன்னொடு வானோர் போற்றியென் றேத்த நின்றாரும்பெருந்திறல் வாளரக் கன்னைப் பேரிடர் செய்துகந் தாருங்கருந்திரை மாமிடற் றாருங் காரகில் பன்மணி யுந்திப்பரந்திழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக் கொடுமுடி யாரே.
பாடலின் தனிப் பக்கம்
திருமகள் காதலி னானுந் திகழ்தரு மாமலர் மேலைப்பெருமக னும்மவர் காணாப் பேரழ லாகிய பெம்மான்மருமலி மென்மலர்ச் சந்து வந்திழி காவிரி மாடேபருமணி நீர்த்துறை யாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
பாடலின் தனிப் பக்கம்
புத்தரும் புந்தியி லாத சமணரும் பொய்ம்மொழி யல்லால்மெய்த்தவம் பேசிட மாட்டார் வேடம் பலபல வற்றால்சித்தருந் தேவருங் கூடிச் செழுமலர் நல்லன கொண்டுபத்தர்கள் தாம்பணிந் தேத்தும் பாண்டிக் கொடுமுடி யாரே.
பாடலின் தனிப் பக்கம்
கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன்பலமல்கு வெண்டலை யேந்திப் பாண்டிக் கொடுமுடி தன்னைச்சொலமல்கு பாடல்கள் பத்துஞ் சொல்ல வல்லார் துயர்தீர்ந்துநலமல்கு சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே.
பாடலின் தனிப் பக்கம்