பாடல் 4466 · தேவாரம் · திருநாவுக்கரசர்
நான்காம் திருமுறை · திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை · பாடல் 1 / 10
திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.24.1
இரும்புகொப் பளித்த யானை ஈருரி போர்த்த ஈசன்கரும்புகொப் பளித்த இன்சொற் காரிகை பாக மாகச்சுரும்புகொப் பளித்த கங்கைத் துவலைநீர் சடையி லேற்றஅரும்புகொப் பளித்த சென்னி அதிகைவீ ரட்ட னாரே.