பாடல் 6921 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஆறாம் திருமுறை · திருக்கன்றாப்பூர் - திருத்தாண்டகம் · பாடல் 1 / 10

திருக்கன்றாப்பூர் – திருத்தாண்டகம் · 6.61.1

மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா மதிசூடி வானவர்கள் தங்கட் கெல்லாம்நாதனே யென்றென்று பரவி நாளும் நைந்துருகி வஞ்சகமற் றன்பு கூர்ந்துவாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு வைகல் மறவாது வாழ்த்தி யேத்திக்காதன்மையாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
பகிர்