காதை 25 · ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை
காதை 25
அரசன் உரிமையோடு அப் பொழில் புகுந்துதருமசாவகன் தன் அடி வணங்கிஅறனும் மறனும் அநித்தமும் நித்தத்திறனும் துக்கமும் செல் உயிர்ப் புக்கிலும்சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும்ஆரியன் அமைதியும் அமைவுறக் கேட்டு'பெண் இணை இல்லாப் பெரு வனப்பு உற்றாள்கண் இணை இயக்கமும் காமனோடு இயங்காஅங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும்இங்கு இணை இல்லாள் இவள் யார்?' என்னகாவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன்'நாவல் அம் தீவில் இந் நங்கையை ஒப்பார்யாவரும் இல்லை இவள் திறம் எல்லாம்கிள்ளிவளவனொடு கெழுதகை வேண்டிக்கள் அவிழ் தாரோய்! கலத்தொடும் போகிகாவிரிப் படப்பை நல் நகர் புக்கேன்மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்தாங்குஓதினன் என்று யான் அன்றே உரைத்தேன்ஆங்கு அவள் இவள்! அவ் அகல் நகர் நீங்கிஈங்கு வந்தனள்' என்றலும் இளங்கொடி'நின் கைப் பாத்திரம் என் கைப் புகுந்ததுமன் பெருஞ் செல்வத்து மயங்கினை அறியாய்அப் பிறப்பு அறிந்திலைஆயினும் ஆ வயிற்றுஇப் பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ?மணிப்பல்லவம் வலம் கொண்டால் அல்லதுபிணிப்புறு பிறவியின் பெற்றியை அறியாய்ஆங்கு வருவாய் அரச! நீ' என்று அப்பூங் கமழ் தாரோன்முன்னர்ப் புகன்றுமை அறு விசும்பின் மடக்கொடி எழுந்துவெய்யவன் குடபால் வீழாமுன்னர்வான் நின்று இழிந்து மறி திரை உலாவும்பூ நாறு அடைகரை எங்கணும் போகிமணிப்பல்லவம் வலம் கொண்டு மடக்கொடிபிணிப்பு அறு மாதவன் பீடிகை காண்டலும்தொழுது வலம் கொள்ள அத் தூ மணிப்பீடிகைப்பழுது இல் காட்சி தன் பிறப்பு உணர்த்த'காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரைமாயம் இல் மாதவன் தன் அடி பணிந்துதருமம் கேட்டு தாள் தொழுது ஏத்திபெருமகன் தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம்'விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும்கலங்கு அஞர்த் தீவினை கடிமின் கடிந்தால்தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர்ஆகலின் நல்வினை அயராது ஓம்புமின்புலவன் முழுதும் பொய் இன்று உணர்ந்தோன்உலகு உயக் கோடற்கு ஒருவன் தோன்றும்அந் நாள் அவன் அறம் கேட்டோர் அல்லதுஇன்னாப் பிறவி இழுக்குநர் இல்லைமாற்று அருங் கூற்றம் வருவதன் முன்னம்போற்றுமின் அறம்' எனச் சாற்றிக் காட்டிநாக் கடிப்பு ஆக வாய்ப் பறை அறைந்தீர்அவ் உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்தவெவ் உரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின்"பெரியவன் தோன்றாமுன்னர் இப் பீடிகைகரியவன் இட்ட காரணம் தானும்மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கியஎன் பிறப்பு உணர்த்தலும் என்?" என்று யான் தொழ"முற்ற உணர்ந்த முதல்வனை அல்லதுமற்று அப் பீடிகை தன்மிசைப் பொறாஅதுபீடிகை பொறுத்த பின்னர் அல்லதுவானவன் வணங்கான் மற்று அவ் வானவன்பெருமகற்கு அமைத்து 'பிறந்தார் பிறவியைத்தரும பீடிகை சாற்றுக' என்றேஅருளினன் ஆதலின் ஆய் இழை பிறவியும்இருள் அறக் காட்டும்" என்று எடுத்து உரைத்ததுஅன்றே போன்றது அருந் தவர் வாய்மொழிஇன்று எனக்கு' என்றே ஏத்தி வலம் கொண்டுஈங்கு இவள் இன்னணம் ஆக இறைவனும்ஆங்கு அப் பொழில் விட்டு அகநகர் புக்குதந்தை முனியா தாய் பசு ஆகவந்த பிறவியும் மா முனி அருளால்குடர்த் தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர்அடர்ப் பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும்மா முனி அருளால் மக்களை இல்லோன்பூமிசந்திரன் கொடுபோந்த வண்ணமும்ஆய் தொடி அரிவை அமரசுந்தரி எனும்தாய் வாய்க் கேட்டு தாழ் துயர் எய்திஇறந்த பிறவியின் யாய் செய்ததூஉம்பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து'செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்கஅரைசு வீற்றிருந்து புரையோர்ப் பேணிநாடகம் கண்டு பாடல் பான்மையின்கேள்வி இன் இசை கேட்டு தேவியர்ஊடல் செவ்வி பார்த்து நீடாதுபாடகத் தாமரைச் சீறடி பணிந்துதே மரு கொங்கையில் குங்குமம் எழுதிஅம் கையில் துறு மலர் சுரி குழல் சூட்டிநறு முகை அமிழ்து உறூஉம் திரு நகை அருந்திமதி முகக் கருங் கண் செங் கடை கலக்கக்கருப்பு வில்லி அருப்புக் கணை தூவதருக்கிய காமக் கள்ளாட்டு இகழ்ந்துதூ அறத் துறத்தல் நன்று' எனச் சாற்றி'தௌிந்த நாதன் என் செவிமுதல் இட்ட வித்துஏதம் இன்றாய் இன்று விளைந்ததுமணிமேகலை தான் காரணம் ஆக' என்றுஅணி மணி நீள் முடி அரசன் கூற'மனம் வேறு ஆயினன் மன்' என மந்திரிசனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி'எம் கோ வாழி! என் சொல் கேண்மதிநும் கோன் உன்னைப் பெறுவதன் முன் நாள்பன்னீராண்டு இப் பதி கெழு நல் நாடுமன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்குஈன்றாள் குழவிக்கு இரங்காளாகிதான் தனி தின்னும் தகைமையது ஆயதுகாய் வெங் கோடையில் கார் தோன்றியதெனநீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்!தோன்றிய பின்னர் தோன்றிய உயிர்கட்குவானம் பொய்யாது மண் வளம் பிழையாதுஊன் உடை உயிர்கள் உறு பசி அறியாநீ ஒழிகாலை நின் நாடு எல்லாம்தாய் ஒழி குழவி போலக் கூஉம்துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீஉயர் நிலை உலகம் வேட்டனை ஆயின்இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ!பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே!தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும்மன் உயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால்மதி மாறு ஒர்ந்தனை மன்னவ!' என்றேமுதுமொழி கூற முதல்வன் கேட்டு'மணிபல்லவம் வலம் கொள்வதற்கு எழுந்ததணியா வேட்கை தணித்தற்கு அரிதால்அரசும் உரிமையும் அகநகர்ச் சுற்றமும்ஒரு மதி எல்லை காத்தல் நின் கடன்' என'கலம் செய் கம்மியர் வருக' எனக் கூஉய்இலங்கு நீர்ப் புணரி எறி கரை எய்திவங்கம் ஏறினன் மணிபல்லவத்திடைதங்காது அக் கலம் சென்று சார்ந்து இறுத்தலும்புரை தீர் காட்சிப் பூங்கொடி பொருந்திஅரைசன் கலம் என்று அகம் மகிழ்வு எய்திகாவலன் தன்னொடும் கடல் திரை உலாவும்தே மலர்ச் சோலைத் தீவகம் வலம் செய்து'பெருமகன்! காணாய் பிறப்பு உணர்விக்கும்தரும பீடிகை இது' எனக் காட்டவலம் கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்குஉலந்த பிறவியை உயர் மணிப் பீடிகைகைஅகத்து எடுத்துக் காண்போர் முகத்தைமை அறு மண்டிலம் போலக் காட்ட'என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன்தென் தமிழ் மதுரைச் செழுங் கலைப் பாவாய்!மாரி நடு நாள் வயிறு காய் பசியால்ஆர் இருள் அஞ்சாது அம்பலம் அணைந்து ஆங்குஇரந்தூண் வாழ்க்கை என்பால் வந்தோர்க்குஅருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில்"நாடு வறம் கூரினும் இவ் ஓடு வறம் கூராதுஏடா! அழியல் எழுந்து இது கொள்க" எனஅமுதசுரபி அங்கையில் தந்து என்பவம் அறுவித்த வானோர் பாவாய்!உணர்வில் தோன்றி உரைப் பொருள் உணர்த்தும்மணி திகழ் அவிர் ஒளி மடந்தை! நின் அடிதேவர் ஆயினும் பிரமர் ஆயினும்நா மாசு கழூஉம் நலம் கிளர் திருந்து அடிபிறந்த பிறவிகள் பேணுதல் அல்லதுமறந்து வாழேன் மடந்தை!' என்று ஏத்திமன்னவன் மணிமேகலையுடன் எழுந்துதென் மேற்காகச் சென்று திரை உலாம்கோமுகி என்னும் பொய்கையின் கரை ஓர்தூ மலர்ப் புன்னைத் துறை நிழல் இருப்பஆபுத்திரனோடு ஆய் இழை இருந்ததுகாவல் தெய்வதம் கண்டு உவந்து எய்தி'அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டுபெருந் துயர் தீர்த்த அப் பெரியோய்! வந்தனைஅந் நாள் நின்னை அயர்த்துப் போயினர்பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கிநின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர்ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண்ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர்ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவை காண்ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்பஆய் மலர்ப் புன்னை அணி நிழல் கீழால்அன்பு உடை ஆர் உயிர் அரசற்கு அருளியஎன்பு உடை யாக்கை இருந்தது காணாய்நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கிப்பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய்கொலைவன் அல்லையோ? கொற்றவன் ஆயினை!பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்தியமடவரல் நல்லாய்! நின் தன் மா நகர்கடல் வயிறு புக்கது காரணம் கேளாய்நாக நல் நாடு ஆள்வோன் தன் மகள்பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள்பனிப் பகை வானவன் வழியில் தோன்றியபுனிற்று இளங் குழவியொடு பூங்கொடி பொருந்தி இத்தீவகம் வலம் செய்து தேவர் கோன் இட்டமா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழிகம்பளச் செட்டி கலம் வந்து இறுப்பஅங்கு அவன்பால் சென்று அவன் திறம் அறிந்து"கொற்றவன் மகன் இவன் கொள்க" எனக் கொடுத்தலும்பெற்ற உவகையன் பெரு மகிழ்வு எய்திபழுது இல் காட்சிப் பைந்தொடி புதல்வனைத்தொழுதனன் வாங்கி துறை பிறக்கு ஒழியகலம் கொண்டு பெயர்ந்த அன்றே கார் இருள்இலங்கு நீர் அடைகரை அக் கலம் கெட்டதுகெடு கல மாக்கள் புதல்வனைக் கெடுத்ததுவடி வேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்பமன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன்நல் மணி இழந்த நாகம் போன்றுகானலும் கடலும் கரையும் தேர்வுழிவானவன் விழாக் கோள் மா நகர் ஒழிந்ததுமணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள்"அணி நகர் தன்னை அலை கடல் கொள்க" எனஇட்டனள் சாபம் பட்டது இதுவால்கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்தவடி வேல் தடக் கை வானவன் போலவிரிதிரை வந்து வியல் நகர் விழுங்கஒரு தனி போயினன் உலக மன்னவன்அருந் தவன் தன்னுடன் ஆய் இழை தாயரும்வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர்பரப்பு நீர்ப் பௌவம் பலர் தொழ காப்போள்உரைத்தன கேட்க உறுகுவை ஆயின் நின்மன் உயிர் முதல்வனை மணிமேகலா தெய்வம்முன் நாள் எடுத்ததும் அந் நாள் ஆங்கு அவன்அற அரசு ஆண்டதும் அறவணன் தன்பால்மறு பிறப்பாட்டி வஞ்சியுள் கேட்பை' என்றுஅந்தரத் தீவகத்து அருந் தெய்வம் போய பின்மன்னவன் இரங்கி மணிமேகலையுடன்துன்னிய தூ மணல் அகழத் தோன்றிஊன் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கித்தான் பிணி அவிழாத் தகைமையது ஆகிவெண் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்தபண்பு கொள் யாக்கையின் படிவம் நோக்கிமன்னவன் மயங்க மணிமேகலை எழுந்து'என் உற்றனையோ இலங்கு இதழ்த் தாரோய்?நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்ததுமன்னா! நின் தன் மறு பிறப்பு உணர்த்திஅந்தரத் தீவினும் அகன் பெருந் தீவினும்நின் பெயர் நிறுத்த நீள் நிலம் ஆளும்அரசர் தாமே அருளறம் பூண்டால்பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு?"அறம் எனப்படுவது யாது?" எனக் கேட்பின்மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம்உண்டியும் உடையும் உறையுளும் அல்லதுகண்டது இல்' எனக் காவலன் உரைக்கும்'என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும்நல் நுதல்! உரைத்த நல் அறம் செய்கேன்என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனைநின்திறம் நீங்கல் ஆற்றேன் யான்' என'புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின்மன் பெரு நல் நாடு வாய் எடுத்து அழைக்கும்வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன்' என்றுஅந்தரத்து எழுந்தனள் அணி இழை தான் என்
காதை 25