காதை 14 · மணிமேகலை · சீத்தலைச்சாத்தனார்

மணிமேகலை 14 · ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

'மா பெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அருளியஆபுத்திரன் திறம் அணி இழை! கேளாய்வாரணாசி ஓர் மறை ஓம்பாளன்ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன்பார்ப்பனி சாலி காப்புக் கடைகழிந்துகொண்டோற் பிழைத்த தண்டம் அஞ்சிதென் திசைக் குமரி ஆடி வருவோள்சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடைஈன்ற குழவிக்கு இரங்காள்ஆகிதோன்றாத் துடவையின் இட்டனள் நீங்கதாய் இல் தூவாக் குழவித் துயர் கேட்டு ஓர்ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீரநாவான் நக்கி நன் பால் ஊட்டிபோகாது எழு நாள் புறங்காத்து ஓம்பவயனங்கோட்டில் ஓர் மறை ஓம்பாளன்இயவிடை வருவோன் இளம்பூதி என்போன்குழவி ஏங்கிய கூக் குரல் கேட்டுக்கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்து ஆங்கு"ஆ மகன் அல்லன் என் மகன்" என்றேகாதலி தன்னொடு கைதொழுது எடுத்து"நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை!" எனதம் பதிப் பெயர்ந்து தமரொடும் கூடிமார்பிடை முந்நூல் வனையாமுன்னர்நாவிடை நல் நூல் நன்கனம் நவிற்றிஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம்நாத் தொலைவு இன்றி நன்கனம் அறிந்த பின்அப் பதி தன்னுள் ஓர் அந்தணன் மனைவயின்புக்கோன் ஆங்குப் புலை சூழ் வேள்வியில்குரூஉத் தொடை மாலை கோட்டிடைச் சுற்றிவெரூஉப் பகை அஞ்சி வெய்து உயிர்த்துப் புலம்பிக்கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சிவலையிடைப் பட்ட மானே போன்று ஆங்குஅஞ்சி நின்று அழைக்கும் ஆத் துயர் கண்டுநெஞ்சு நடுக்குற்று நெடுங் கணீர் உகுத்து"கள்ள வினையின் கடுந் துயர் பாழ்படநள் இருள் கொண்டு நடக்குவன்" என்னும்உள்ளம் கரந்து ஆங்கு ஒரு புடை ஒதுங்கிஅல்லிடை ஆக் கொண்டு அப் பதி அகன்றோன்கல் அதர் அத்தம் கடவாநின்றுழிஅடர்க் குறு மாக்களொடு அந்தணர் எல்லாம்கடத்திடை ஆவொடு கையகப்படுத்தி"ஆ கொண்டு இந்த ஆர் இடைக் கழியநீ மகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய்புலைச் சிறு மகனே! போக்கப்படுதி" என்றுஅலைக் கோல் அதனால் அறைந்தனர் கேட்பஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியைக்கோட்டினில் குத்திக் குடர் புய்த்துறுத்துக்காட்டிடை நல் ஆக் கதழ்ந்து கிளர்ந்து ஓடஆபுத்திரன் தான் ஆங்கு அவர்க்கு உரைப்போன்"நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்விடு நில மருங்கில் படு புல் ஆர்ந்துநெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம்பிறந்த நாள் தொட்டும் சிறந்த தன் தீம் பால்அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்இதனொடு வந்த செற்றம் என்னைமுது மறை அந்தணிர்! முன்னியது உரைமோ?""பொன் அணி நேமி வலம் கொள் சக்கரக் கைமன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளியஅரு மறை நல் நூல் அறியாது இகழ்ந்தனைதெருமரல் உள்ளத்துச் சிறியை நீ அவ்ஆ மகன் ஆதற்கு ஒத்தனை அறியாய்நீ மகன் அல்லாய் கேள்" என இகழ்தலும்"ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கிபுலி மகன் விரிஞ்சி புரையோர் போற்றும்நரி மகன் அல்லனோ கேசகம்பளன்ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்றுஓங்கு உயர் பெருஞ் சிறப்பு உரைத்தலும் உண்டால்ஆவொடு வந்த அழி குலம் உண்டோநான்மறை மாக்காள் நல் நூல் அகத்து?" எனஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும்"ஈங்கு இவன் தன் பிறப்பு யான் அறிகுவன்" என"நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள்வடமொழியாட்டி மறை முறை எய்திகுமரி பாதம் கொள்கையின் வணங்கிதமரின் தீர்ந்த சாலி என்போள் தனை'யாது நின் ஊர்? ஈங்கு என் வரவு?' எனமா மறையாட்டி வரு திறம் உரைக்கும்'வாரணாசி ஓர் மா மறை முதல்வன்ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான்பார்ப்பார்க்கு ஒவ்வாப் பண்பின் ஒழுகிகாப்புக் கடைகழிந்து கணவனை இகழ்ந்தேன்எறி பயம் உடைமையின் இரியல் மாக்களொடுதெற்கண் குமரி ஆடிய வருவேன்பொன் தேர்ச் செழியன் கொற்கை அம் பேர் ஊர்க்காவதம் கடந்து கோவலர் இருக்கையின்ஈன்ற குழவிக்கு இரங்கேனாகித்தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன்செல் கதி உண்டோ தீவினையேற்கு?' என்றுஅல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன்சொல்லுதல் தேற்றேன் சொல் பயம் இன்மையின்புல்லல் ஓம்பன்மின் புலை மகன் இவன்" எனஆபுத்திரன் பின்பு அமர் நகை செய்து"மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோமுது மறை முதல்வன் முன்னர்த் தோன்றியகடவுள் கணிகை காதல் அம் சிறுவர்அரு மறை முதல்வர் அந்தணர் இருவரும்புரி நூல் மார்பீர்! பொய் உரை ஆமோ?சாலிக்கு உண்டோ தவறு?' என உரைத்துநான்மறை மாக்களை நகுவனன் நிற்ப"ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான்" என்றேதாதை பூதியும் தன் மனை கடிதர"ஆ கவர் கள்வன்" என்று அந்தணர் உறைதரும்கிராமம் எங்கணும் கடிஞையில் கல் இடமிக்க செல்வத்து விளங்கியோர் வாழும்தக்கண மதுரை தான் சென்று எய்திசிந்தா விளக்கின் செழுங் கலை நியமத்துஅந்தில் முன்றில் அம்பலப் பீடிகைத்தங்கினன் வதிந்து அத் தக்கணப் பேர் ஊர்ஐயக் கடிஞை கையின் ஏந்திமை அறு சிறப்பின் மனைதொறும் மறுகி'காணார் கேளார் கால் முடப்பட்டோர்பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர்யாவரும் வருக' என்று இசைத்து உடன் ஊட்டிஉண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்துகண்படைகொள்ளும் காவலன் தான் என்
பகிர்
கதை

காதை 13 · ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

காதை 13