பாலகாண்டம் · உலாவியற் படலம் · பாடல் 29 / 54
முகக் குறிகளால் ஒருத்தி காதல் புலப்படுதல்
புனம் கொள் கார் மயில் போலும் ஒர் பொன் கொடி,மனம் கொள் காதல் மறைத்தலை எண்ணினாள் ;அனங்கள் வேள் அது அறிந்தனன்; அற்றம் தான்,மனங்கள் போல முகமும் மறைக்கும் ஏ?