இலம்பகம் 11 · சீவக சிந்தாமணி · திருத்தக்க தேவர்

பூமகள் இலம்பகம்

சீவக சிந்தாமணி 11 · பூமகள் இலம்பகம்

2327. கண்ணாடி யன்ன கடிமார்பன் சிவந்து நீண்டகண்ணாடி வென்று களங்கண்டு நியம முற்றிக்கண்ணாடி வண்டு பருகுங்கமழ் மாலை மூதூர்க்கண்ணாடி யானை யவர்கைதொழச் சென்று புக்கான்.2328. கூடார் புலியு முழைக்கோளரி யேறு மன்னகூடார் மெலியக் கொலைவேனினைந் தானை யேத்திக்கூடார மாலைக் குவிமென்முலைக் கோதை நல்லார்கூடார மாட மயில்போலக் குழீயி னாரே.2329. மாலைச் செற்றான் மக்களொ டெல்லா முடனேயிம்மாலைச் செற்றான் வைந்நுனை யம்பின் னிவனென்பார்மாலைக் கின்றே மாய்ந்தது மாயாப் பழியென்பார்மாலைக் கேற்ற வார்குழல் வேய்த்தோண் மடநல்லார்.2330. நாகந் நெற்றி நன்மணி சிந்தும் மருவிபோனாகந் நெற்றிந் நன்மணி யோடை நறவிம்முநாகந் நெற்றிந் நன்மலர் சிந்நி நளிர்செம்பொனாகந் நெற்றி மங்கைய ரொத்தார் மடநல்லார்.2331. கோடிக் கொடுங் கூம்புயர் நாவாய் நெடுமாடங்கோடிப் பட்டிற் கொள்கொடி கூடப் புனைவாருங்கோடித் தானைக் கொற்றவற் காண்பா னிழைமின்னக்கோடிச் செம்பொற் கொம்பரின் முன்முன் றொழுவாரும்.2332. அம்புகை வல்லில் லார்கழன் மள்ளர் திறலேத்தவம்புகைக் கொண்டா லாரிவற் கீண்டு நிகராவாரம்புகை யார்ந்த வந்துகி லல்குல் லவிர்கோதாயம்புகைக் காணா மையனைக் கையிற் றொழுதென்பார்.2333. மைத்துன நீண்ட மாமணி மாடம் மிசையேறிமைத்துன நீண்ட வாட்டடங் கண்ணார் மலர்தூவமைத்துன மன்னர் மால்களி றேறிப் புடைசூழமைத்துன நீண்ட மாமணி வண்ண னவனொத்தான்.2334. ஊது வண்டரற் றும்முயர் தாமரைப்போது பூங்கழு நீரொடு பூத்துடன்வீதி மல்கின போன்மிளிர் வேற்கணுமாத ரார்முகப் பூவு மலர்ந்தவே.2335. வீணை வித்தகன் வேந்தடு வீங்குதோள்காணுங் காரிகை யார்கதிர் வெம்முலைப்பூணு மாரமு மீன்றுபொன் பூத்தலர்ந்தியாண ரூரம ராபதி போன்றதே.2336. தேம்பெய் கற்பகத் தாரவன் சேர்தலும்பூம்பெய் கோதைப் புரிசைக் குழாநலமோம்பு திங்க ளுலந்து சுடர்கண்டவாம்ப லாய்மலர்க் காடொத் தழிந்ததே.2337. மாகம் முழக்கின் மணிநாகம் பதைப்ப வேபோலாகம் மறவ ரகன்கோயில்புக் கம்பொன் மாலைத்தோகைம் மடவார் துவர்வாய் துடித் தஞ்ச வெம்பாவேகம் முடைத்தாய் விழியாத்தொழித் தேகுகென்றார்.2338. செய்பாவை யன்னார் சிலம்பார்க்கு மென் சீற டியார்செய்பூந் தவிசின் மிசையல்லது சேற லில்லார்மையார்ந்த கண்ணீர் மணிப்பூண்முலை பாய விம்மாவெய்தா மடவார் வெறுவெந்நிலத் தேகி னாரே.2339. நெருப்புற்ற போல நிலமோந்துழிச் செய்ய வாகிப்பருக்கென்ற கோல மரற்பல்பழம் போன்று கொப்புள்வருத்தம் மிழற்றிப் பசும்பொற்சிலம் போசை செய்யச்செருக்கற்ற பஞ்சி மலர்ச்சீறடி நோவச் சென்றார்.2340. பொற்பூண் சுமந்து பொருகோட்டை யழித்து வெம்போர்கற்பா னெழுந்த முலையார்களங் கண்டு நீங்கிநற்பூ ணணிந்த முலையார்நிலை கால்ச ரிந்துநெற்றிந் நிறுத்து வடம்வைத்த முலையி னாரும்.2341. செங்காற் குழவி தழீயினார்திங்கள் புக்க நீராரங்கான் முலையி னரும்பால்வரப் பாயினாரும்பைங்காசு முத்தும் பவழத்தொடு பைம்பொ னார்ந்தபொங்கார் முலையார் திருமுற்ற நிறைந்து புக்கார்.2342. பெய்யார் முகிலிற் பிறழ்பூங்கொடி மின்னின் மின்னாநெய்யார்ந்த கூந்த னிழற்பொன்னரி மாலை சோரக்கையார் வளையார் புலிகண்ணுறக் கண்டு சோராநையாத் துயரா நடுங்கும்பிணை மான்க ளொத்தார்.2343. வட்டம் மலர்த்தா ரவனாலருள் பெற்று வான்பொற்பட்டம் மணிந்தா ளிவர்தங்களுள் யாவ னென்னமட்டா ரலங்க லவன்மக்களுந் தானு மாதோபட்டா ரமருட் பசும்பொன்முடி சூழ வென்றார்.2344. மாலே றனையா னொடுமக்களுக் கஃதோ வென்னாவேலேறு பெற்ற பிணையின்னனி மாழ்கி வீழ்ந்துசேலேறு சின்னீ ரிடைச்செல்வன போன்று செங்கண்மேலேறி மூழ்கிப் பிறழ்ந்தாழ்ந்த விறந்து பட்டாள்.2345. ஐவா யரவி னவிராரழல் போன்று சீறிவெய்யோ னுயிர்ப்பின் விடுத்தேனென் வெகுளி வெந்தீமையா ரணல மணிநாகங் கலுழன் வாய்ப்பட்டுய்யா வெனநீ ருடன்றுள்ள முருகல் வேண்டா.2346. மண்கேழ் மணியி னுழையுந்துகி னூலின் வாய்த்தநுண்கேழ் நுசுப்பின் மடவீர்நம்மை நோவ செய்யேனொண்கேழ்க் கழுநீ ரொளிமுத்த முமிழ்வ தேபோற்பண்கேழ் மொழியீர் நெடுங்கண்பனி வீழ்த்தல் வேண்டா.2347. என்னுங்கட் குள்ள மிலங்கீர்வளைக் கையி னீரேமன்னிங்கு வாழ்வு தருதும்மவற் றானும் வாழ்மின்பொன்னிங்குக் கொண்டு புறம்போகியும் வாழ்மின்னென்றான்வின்னுங்க வீங்கி விழுக்கந்தென நீண்ட தோளான்.2348. தீத்தும்மும் வேலான் றிருவாய்மொழி வான்மு ழக்கம்வாய்த்தங்குக் கேட்டு மடமஞ்ஞைக் குழாத்தி னேகிக்காய்த்தெங்கு சூழ்ந்த கரும்பார்தம் பதிகள் புக்கார்சேய்ச்செந் தவிசி நெருப்பென்றெழுஞ் சீற டியார்.2349. காதார் குழையுங் கடற்சங்கமுங் குங்கு மமும்போதா ரலங்கற் பொறையும்பொறை யென்று நீக்கித்தாதார் குவளைத் தடங்கண்முத் துருட்டி விம்மாமாதார் மயிலன் னவர்சண்பகச் சாம்பலொத்தார்.2350. ஆய்பொற் புரிசை யணியாரகன் கோயி லெல்லாங்காய்பொற் கடிகைக் கதிர்க்கைவிளக் கேந்தி மள்ளர்வேய்பொன் னறையும் பிறவும்விரைந் தாய்ந்த பின்றைச்சேய்பொற் கமல மகள்கைதொழுச் சென்று புக்கான்.2351. முலையீன்ற பெண்ணைத் திரடாமங்க டாழ்ந்து முற்றுமலையீன்ற மஞ்சின் மணிப்பூம்புகை மல்கி விம்மக்கலையீன்ற சொல்லார் கமழ்பூவணைக் காவல் கொண்டார்கொலையீன்ற வேற்கண் ணவர்கூடிய மார்பற் கன்றே.2352. போர்க்கோல நீக்கிப் புகழ்ப்பொன்னி னெழுதப் பட்டவார்க்கோல மாலை முலையார்மண் ணுறுப்ப வாடிநீர்க்கோலஞ் செய்து நிழல்விட்டுமிழ் மாலை மார்பன்றார்க்கோல மான்றேர்த் தொகைமாமற் றொழுது சொன்னான்.2353. எண்கொண்ட ஞாட்பி னிரும்பெச்சிற் படுத்த மார்பர்புண்கொண்டு போற்றிப் புறஞ்செய்கெனப் பொற்ப நோக்கிப்பண்கொண்ட சொல்லார் தொழப்பாம்பணை யண்ணல் போலமண்கொண்ட வேலா னடிதைவர வைகி னானே.2354. வாள்க ளாலே துகைப்புண்டுவரைபுண் கூர்ந்த போல்வேழநீள்கால் விசைய நேமித்தேரிமைத்தார் நிலத்திற் காண்கலாத்தாள்வல் புரவி பண்ணவிழ்த்தயானை யாவித் தாங்கன்னகோள்வா யெஃக மிடம்படுத்தகொழும்புண் மார்ப ரயாவுயிர்த்தார்.2355. கொழுவாய் விழுப்புண் குரைப்பொலியுங்கூந்தன் மகளிர் குழைசிதறியழுவா ரழுகைக் குரலொலியுமதிர்கண் முரசின் முழக்கொலியுங்குழவாய்ச் சங்கின் குரலொலியுங்கொலைவல் யானைச் செவிப்புடையுமெழுவார் யாழு மேத்தொலியுமிறைவன் கேளாத் துயிலேற்றான்.2356. தொடித்தோண் மகளி ரொருசாரார்துயரக் கடலு ளவர்நீந்தவடிக்கண் மகளி ரொருசாரார்வரம்பி லின்பக் கடனீந்தப்பொடித்தான் கதிரோன் றிரைநெற்றிப்புகழ்முப் பழநீர்ப் பளிங்களைஇக்கடிப்பூ மாலை யவரேந்தக்கமழ்தா மரைக்கண் கழீஇயினான்.2357. முனைவற் றொழுது முடிதுளக்கிமுகந்து செம்பொன் கொளவீசிநினைய லாகா நெடுவாழ்க்கைவென்றிக் கோல விளக்காகப்புனையப் பட்ட வஞ்சனத்தைப்புகழ வெழுதிப் புனைபூணான்கனைவண் டார்க்கு மலங்கலுங்கலனு மேற்பத் தாங்கினான்.2358. முறிந்த கோல முகிழ்முலையார்பரவ மொய்யார் மணிச்செப்பிலுறைந்த வெண்பட் டுடுத்தொளிசேர்பஞ்ச வாசங் கவுட்கொண்டுசெறிந்த கமுநீர்ப் பூப்பிடித்துச்சேக்கை மரீஇய சிங்கம்போலறிந்தார் தமக்கு மநங்கனாயண்ணல் செம்மாந் திருந்தானே.2359. வார்மீ தாடி வடஞ்சூடிப்பொற்பார்ந் திருந்த வனமுலையாரேர்மீ தாடிச் சாந்தெழுதியிலங்கு முந்நீர் வலம்புரிபோற்கார்மீ தாடிக் கலம்பொழியுங்கடகத் தடக்கைக் கழலோனைப்போர்மீ தாடிப் புறங்கண்டபுலால்வேன் மன்னர் புடைசூழ்ந்தார்.2360. தொல்லை நால்வகைத் தோழருந்தூமணி நெடுந்தேர்மல்லற் றம்பியு மாமனுமதுவிரி கமழ்தார்ச்செல்வன் றாதையுஞ் செழுநகரொடுவள நாடும்வல்லைத் தொக்கது வளங்கெழுகோயிலு ளொருங்கே.2361. துளங்கு வெண்மதி யுகுந்தவெண்கதிர்தொகுத் ததுபோல்விளங்கு வெள்ளியம் பெருமலையொழியலந் தெழிலார்வளங்கொண் மாநகர் மழகதிர்குழீஇயின போலக்களங்கொண் டீண்டினர் கதிர்முடிவிஞ்சையர் பொலிந்தே.2362. எண்ண மென்னினி யெழின்முடியணிவது துணிமின்கண்ண னாரொடு கடிகையும்வருகென வரலும்பண்ணி னார்முடி பழிச்சியமணிபொனிற் குயிற்றியண்ண லாய்கதி ரலமவரப்புலமக ணகவே.2363. விரியு மாலையன் விளங்கொளி முடியினன் றுளங்கித்திருவின் மால்வரைக் குலவிய தனையதோர் தேந்தாரகுலி போல்வதோ ராரமு மார்பிடைத் துயலவெரியும் வார்குழை யிமையவ னொருவன்வந் திழிந்தான்.2364. கொம்மை யார்ந்தன கொடிபட வெழுதின குவிந்தவம்மை யார்ந்தன வழகிய மணிவட முடையவெம்மை செய்வன விழுத்தகு முலைத்திட முடையபொம்மெ லோதியர் பொழிமின்னுக் கொடியென விழிந்தார்.2365. மையல் யானையின் படுமதங்கெடப்பகட் டரசன்செய்த மும்மதம் போற்றிசைதிசைதொறுங் கமழுந்தெய்வ வாசத்துத் திருநகர்வாசங்கொண் டொழியவெய்யர் தோன்றினர் விசும்பிடைச்சிறப்பொடும் பொலிந்தே.2366. வெருவி மாநகர் மாந்தர்கள் வியந்துகை விதிர்ப்பப்பருதி போல்வன பாற்கட னூற்றெட்டுக் குடத்தாற்பொருவில் பூமழை பொன்மழை யொடுசொரிந் தாட்டியெரிபொ னீண்முடி கவித்தனன் பலித்திரற் றொழுதே.2367. தேவ துந்துபி தேவர்கட் கோகையுய்த் துரைப்பானாவி யம்புகை யணிகிளர் சுண்ணமோ டெழுந்தநாவி னேத்தின ரரம்பையர் நரம்பொலி யுளர்ந்தகாவன் மன்னருங் கடிகையுங் கடவது நிறைத்தார்.2368. திருவ மாமணிக் காம்பொடுதிரள்வடந் திளைக்குமுருவ வெண்மதி யிதுவெனவெண்குடை யோங்கிப்பரவை மாநில மளித்ததுகளிக்கயன் மழைக்கட்பொருவில் பூமகட் புணர்ந்தனனிமையவ னெழுந்தான்.2369. மின்னுங் கடற்றிரையின் மாமணிக்கைவெண்கவரி விரிந்து வீசப்பொன்னங் குடைநிழற்றப் பொன்மயமாமுழைக்கலங்கள் பொலிந்து தோன்றமன்னர் முடியிறைஞ்சி மாமணியங்கழலேந்தி யடியீ டேத்தச்சின்ன மலர்க்கோதைத் தீஞ்சொலார்போற்றிசைப்பத் திருமால் போந்தான்.2370. மந்தார மாமாலை மேற்றொடர்ந்துதழுவவராத் தாம மல்கியந்தோவென் றஞ்சிறைவண் டேக்கறவின்புகைபோய்க் கழுமி யாய்பொற்செந்தா மரைமகளே யல்லதுபெண்சாராத திருவின் மிக்கசிந்தா மணியேய்ந்த சித்திரமாமண்டபத்துச் செல்வன் புக்கான்.2371. பைங்க ணுளையெருத்திற் பன்மணிவாளெயிற்றுப் பவள நாவிற்சிங்கா சனத்தின்மேற் சிங்கம்போற்றேர்மன்னர் முடிகள் சூழமங்குன் மணிநிற வண்ணன்போல்வார்குழைகடிருவில் வீசச்செங்கட் கமழ்பைந்தார்ச் செஞ்சுடர்போற்றேர்மன்ன னிருந்தா னன்றே.2372. வார்பிணி முரச நாணவானதிர் முழக்க மேய்ப்பத்தார்பிணி தாம மார்பன்றம்பியை முகத்து ணோக்கியூர்பிணி கோட்டஞ் சீப்பித்துறாதவ னாண்ட நாட்டைப்பார்பிணி கறையி னீங்கப்படாமுர சறைவி யென்றான்.2373. கடவுள ரிடனுங் காசில்கணிபெறு நிலனுங் காமர்தடவளர் முழங்குஞ் செந்தீநான்மறை யாளர் தங்களிடவிய நிலத்தோ டெல்லாமிழந்தவர்க் கிரட்டி யாகவுடனவை விடுமி னென்றானொளிநிலா வுமிழும் பூணான்.2374. என்றலுந் தொழுது சென்னிநிலனுறீஇ யெழுந்து போகிவென்றதிர் முரசம் யானைவீங்கெருத் தேற்றிப் பைம்பொற்குன்றுகண் டனைய கோலக்கொடிநெடு மாட மூதூர்ச்சென்றிசை முழங்கச் செல்வன்றிருமுர சறைவிக் கின்றான்.2375. ஒன்றுடைப் பதிளை யாண்டைக்குறுகட னிறைவன் விட்டானின்றுளீ ருலகத் தென்றுமுடனுளீ ராகி வாழ்மின்பொன்றுக பசியு நோயும்பொருந்தலில் பகையு மென்னமன்றல மறுகு தோறுமணிமுர சார்ந்த தன்றே.2376. நோக்கொழிந் தொடுங்கி னீர்க்குநோய்கொளச் சாம்பி னீர்க்கும்பூக்குழன் மகளிர்க் கொண்டான்புறக்கணித் திடப்பட் டீர்க்கும்கோத்தரு நிதியம் வாழக்கொற்றவ னகரோ டென்னவீக்குவார் முரசங் கொட்டிவிழுநக ரறைவித் தானே.2377. திருமக னருளப் பெற்றுத்திருநிலத் துறையு மாந்தரொருவனுக் கொருத்தி போலவுளமகிழ்ந் தொளியின் வைகிப்பருவரு பகையு நோயும்பசியுங்கெட் டொழிய விப்பாற்பெருவிறல் வேந்தர் வேந்தற்குற்றது பேச லுற்றேன்.
பகிர்