இலம்பகம் 13 · சீவக சிந்தாமணி · திருத்தக்க தேவர்
முத்தி இலம்பகம்
சீவக சிந்தாமணி 13 · முத்தி இலம்பகம்
2599. நீரேந்தி நெய்ம்மிதந்து நிணம்வாய்ப் பில்கி யழல்விம்மிப்போரேந்திப் பூவணிந்து புலவுநாறும் புகழ்வேலோன்காரேந் திடிமுரச மார்ப்பக் காய்பொற் கலன்சிந்திப்பாரேந்திச் செல்லுநாட் பட்ட தாநாம் பகர்வதே.2600. விண்பாற் சுடர்விலக்கி மேகம் போழ்ந்து விசும்பேந்திமண்பாற் றிலகமாய் வான்பூத் தாங்கு மணிமல்கிப்பண்பால் வரிவண்டுந் தேனும்பாடும் பொழிற்பிண்டியெண்பா லிகந்துயர்ந்தாற் கிசைந்த கோயி லியன்றதே.2601. அடிசிற் கலங் கழீஇக் கருனை யார்ந்த வினவாளைமடுவின் மதத்துணரா வாழைத் தண்டிற் பலதுஞ்சுநெடுநீர்க் கழனிசூழ் நியமஞ் சேர்த்தி விழவ யர்ந்துவடிநீர் நெடுங்கண்ணார் கூத்தும் பாட்டும் வகுத்தாரே.2602. அல்லி யரும்பதமுமடகுங்காயுங் குளநெல்லுநல்ல கொழும்பழனுங்கிழங்குந்தந்து நவைதீர்த்தார்க்கில்லையே கைம்மாறென்றின்பமெல்லா மவர்க்கீந்தாள்வில்லோன் பெருமாட்டிவிளங்குவேற்கண் விசயையே.2603. தனியே துயருழந்து தாழ்ந்து வீழ்ந்த சுடுகாட்டுளினியா ளிடர்நீக்கி யேமஞ்சேர்த்தி யுயக்கொண்டகனியார் மொழியாட்கு மயிற்குங் காமர் பதிநல்கிமுனியாது தான்காண மொய்கொண்மாடத் தெழுதுவித்தாள்.2604. அண்ணல் பிறந்தாங் கைஞ்ஞாற்றைவர்க் களந்தான்பால்வண்ணச் சுவையமுதல் வைகநாளுங் கோவிந்தன்வெண்ணெ யுருக்கிநெய் வெள்ளமாகச் சொரிந்தூட்டப்பண்ணிப் பரிவகன்றாள் பைந்தார்வேந்தற் பயந்தாளே.2605. தோடார் புனைகோதை சுநந்தை சேர்ந்து தொழுதாளைப்பீடார் பெருஞ்சிறுவற் பயந்தீர் வம்மி னெனப்புல்லிநாடார் புகழாளை நாண மொழிகள் பலகூறிக்கோடாக் குருகுலத்தை விளக்கிட் டாளை விளக்கினாள்.2606. மறையொன் றுரைப்பனபோன்மலர்ந்து நீண்டு செவிவாய்வைத்துறைகின்ற வோடரிக்கணுருவக் கொம்பி னெண்மருமிறைவி யடிபணியவெடுத்துப் புல்லி யுலகாளுஞ்சிறுவர்ப் பயந்திறைவற்றெளிவீ ரென்றா டிருவன்னாள்.2607. பொங்கு மணிமுடிமேற்பொலிந்தெண் கோதைத் தொகையாகிக்கங்குற் கனவகத்தேகண்ணுட் டோன்றி வந்தீர்நீரெங்கும் பிரியற்பீரென்று கண்கண் மலர்ந்திருந்துகொங்கு ணறும்பைந்தார்க்கோமா னிங்கே வருகென்றாள்.2608. சிங்க நடப்பதுபோற் சேர்ந்துபூத்தூய்ப் பலர்வாழ்த்தத்தங்கா விருப்பிற்றம் பெருமான்பாத முடிதீட்டியெங்கோ பணியென்னா வஞ்சாநடுங்கா விருவிற்கட்பொங்க விடுதவிசி லிருந்தான்போரே றனையானே.2609. கொற்றவி மகனைநோக்கிக்கூறின ளென்ப நுங்கோக்குற்றத்தைப் பிறர்கள்கூறவுணர்ந்தனை யாயி னானுமிற்றென வுரைப்பக் கேண்மோவிலங்குபூ ணலங்கன் மார்பிற்செற்றவர்ச் செகுத்த வைவேற்சீவக சாமி யென்றாள்.2610. நாகத்தால் விழுங்கப் பட்டநகைமதிக் கடவுள் போலப்போகத்தால் விழுங்கப் பட்டுப்புறப்படான் புன்சொ னாணானாகத்தா னமைச்சர் நுண்ணூற்றோட்டியா லழுத்தி வெல்லும்பாகர்க்குந் தொடக்க நில்லாப்பகடுபோற் பொங்கி யிட்டான்.2611. நுண்மதி போன்று தோன்றாநுணுகிய நுசுப்பி னார்தங்கண்வலைப் பட்ட போழ்தேகடுநவை யரவோ டொக்கும்.பெண்மையைப் பெண்மை யென்னார்பேருணர் வுடைய நீராரண்ணலைத் தெருட்ட றேற்றாதமைச்சரு மகன்று விட்டார்.2612. கற்சிறை யழித்து வெள்ளங்கடற்கவா யாங்குக் கற்றோர்சொற்சிறை யழித்து வேந்தன்றுணைமுலை துறத்தல் செல்லான்விற்சிறை கொண்ட போலும்புருவத்து விளங்கு வேற்கணற்சிறைப் பட்டுநாடு நகரமுங்காவல் விட்டான்.2613. பிளிறுவார் முரசத் தானைப்பெருமகன் பிழைப்பு நாடிக்களிறுமென் றுமிழப் பட்டகவழம்போற் றகர்ந்து நில்லாதொளிறுவேற் சுற்ற மெல்லாமுடைந்தபி னொருவ னானான்வெளிறுமுன் வித்திப் பின்னைவச்சிரம் விளைத்த லாமோ.2614. வனைகலக் குயவ னாணின்மன்னரை யறுத்து முற்றிக்கனைகுர லுருமி னார்ப்பக்காவல னின்னை வேண்டிவினைமயிற் பொறியி னென்னைப்போக்கிவிண் விரும்பப் புக்கான்புனைமுடி வேந்த போவல்போற்றென மயங்கி வீழ்ந்தான்.2615. சீதநீர் தெளித்துச் செம்பொற்றிருந்துசாந் தாற்றி தம்மான்மாதரார் பலரும் வீசவளர்ந்தெழு சிங்கம் போலப்போதொடு கலங்கள் சோரவெழுந்துபொன் னார மார்பன்யாதெனக் கடிகண் முன்னேயருளிய தென்னச் சொன்னாள்.2616. பிறந்துநாம் பெற்ற வாணாளித்துணை யென்ப தொன்றுமறிந்திலம் வாழ்து மென்னுமவாவினு ளழுந்து கின்றாங்கறந்துகூற் றுண்ணு ஞான்றுகண்புதைத் திரங்கி னல்லாலிறந்தநாள் யாவர்மீட்பாரிற்றெனப் பெயர்க்க லாமே.2617. சுமைத்தயிர் வேய்ந்த சோற்றிற்றுய்த்தினி தாக நம்மையமைத்தநா ளென்னு நாகம்விழுங்கப்பட்ட டன்ன தங்கணிமைத்தகண் விழித்த லின்றியிறந்துபா டெய்து கின்றாமுமைத்துழிச் சொறியப் பெற்றாமூதியம் பெரிதும் பெற்றாம்.2618. கடுவளி புடைக்கப் பட்டகணமழைக் குழாத்தி னாமும்விடுவினை புடைக்கப் பாறிவீற்றுவீற் றாயி னல்லாலுடனுறை பழக்க மில்லையொழிமதி யத்தை காதல்வடுவுடைத் தென்று பின்னுமாபெருந் தேவி சொன்னாள்.2619. முருந்தனைய தூமுறுவன் முற்றிழையார் சேரியிருந்திளமைக் கள்ளுண் டிடைதெரித லின்றிக்கருந்தலைகள் வெண்டலைக ளாய்க்கழியு முன்னேயருந்தவமுந் தானமு மாற்றுமினே கண்டீர்.2620. உடற்றும் பிணித்தீ யுடம்பினுயிர் பெய்திட்டடுத்துணர்வு நெய்யாக வாற்றறுவை யாகக்குடித்துண்ணுங் கூற்றங் குடில்பிரியா முன்னேகொடுத்துண்மின் கண்டீர் குணம்புரிமின் கண்டீர்.2621. உழந்தாலும் புத்தச்சொன் றிட்டூர்த றேற்றாதிழந்தார் பலரா லிடும்பைநீர் யாற்றுளழுந்துமா லப்பண்டி யச்சிறா முன்னேகொழுஞ்சீலங் கூலியாக் கொண்டூர்மின் பாகீர்.2622. பிறந்தவர்க ளெல்லா மவாப்பெரிய ராகித்துறந்துபுகழ் வேண்டாரோர் துற்றவிழு மீயாரறங்கரிது சேய்த்தென்ப தியாதுமறி யாரேல்வெறும்பொருள தம்மா விடுத்திடுமி னென்றாள்.2623. முல்லை முகைசொரிந்தாற் போன்றினியபாலடிசின் மகளி ரேந்தநல்ல கருனையா னாள்வாயும்பொற்கலத்து நயந்துண் டார்களல்ல லடைய வடகிடுமினோட்டகத்தென் றயில்வார்க் கண்டுஞ்செல்வ நமரங்கா ணினையன்மின்செய்தவமே நினைமின் கண்டீர்.2624. அம்பொற் கலத்து ளடுபாலமர்ந்துண்ணா வரிவை யந்தோவெம்பிப் பசிநலிய வெவ்வினையின்வேறாயோ ரகல்கை யேந்திக்கொம்பிற் கொளவொசிந்து பிச்சையெனக்கூறி நிற்பாட் கண்டுநம்பன்மின் செல்வ நமரங்காணல்லறமே நினைமின் கண்டீர்.2625. வண்ணத் துகிலுடுப்பின் வாய்விட்டழுவதுபோல் வருந்து மல்குனண்ணாச் சிறுகூறை பாகமோர்கைபாக முடுத்து நாளுமண்ணாந் தடகுரீஇ யந்தோவினையேயென் றழுவாட் கண்டுநண்ணன்மின் செல்வ நமரங்காணல்லறமே நினைமின் கண்டீர்.2626. மைதிரண்ட வார்குழன்மேல் வண்டார்ப்பமல்லிகைமென் மாலை சூடிக்கைதிரண்ட வேலேந்திக் காமன்போற்காரிகையார் மருளச் சென்றாரைதிரண்டு கண்டங் குரைப்பவோர்தண்டூன்றி யறிவிற் றள்ளிநெய்திரண்டாற் போலுமிழ்ந்து நிற்குமிளமையோ நிலையா தேகாண்.2627. என்றலுஞ் சுநந்தை சொல்லுமிறைவிதான் கண்ட தையாநன்றுமஃ தாக வன்றேயாயினு மாக யானுமொன்றினன் றுறப்ப லென்னவொள்ளெரி தவழ்ந்த வெண்ணெய்க்குன்றுபோல் யாது மின்றிக்குழைந்துமெய்ம் மறந்து நின்றான்.2628. ஓருயி ரொழித்திரண் டுடம்பு போவபோலாரிய னொழியவங் கௌவை மார்கடாஞ்சீரிய துறவொடு சிவிகை யேறினார்மாரியின் மடந்தைமார் கண்கள் வார்ந்தவே.2629. நன்மயிற் பொறியின்மேற் போயா நாளினும்புன்மையுற் றழுகுரன் மயங்கிப் பூப்பரிந்திந்நகர் கால்பொரு கடலி னெங்கணுமன்னனி லாகுல மயங்கிற் றென்பவே.2630. அழுதுபின் னணிநகர் செல்ல வாயிரந்தொழுதகு சிவிகைகள் சூழப் போயபினிழுதமை யெரிசுடர் விளக்கிட் டன்னவள்பழுதில்சீர்ப் பம்மைதன் பள்ளி நண்ணினாள்.2631. அருந்தவக் கொடிக்குழாஞ் சூழ வல்லிபோலிருந்தறம் பகர்வுழி யிழிந்து கைதொழுதொருங்கெமை யுயக்கொண்மி னடிக ளென்றனள்கருங்கய னெடுந்தடங் கண்ணி யென்பவே.2632. ஆரழன் முளரி யன்ன வருந்தவ மரிது தானஞ்சீர்கெழு நிலத்து வித்திச் சீலநீர் கொடுப்பிற் றீந்தேன்பார்கெழு நிலத்து ணாறிப் பல்புக ழீன்று பின்னாற்றார்கெழு தேவரின்பந் தையலாய் விளைக்கு மென்றாள்.2633. அறவுரை பின்னைக்கேட்டு மடிகண்மற் றெமக்குவல்லேதுறவுதந் தருளு கென்னத் தூநக ரிழைத்து மேலானறவிரி தாம நாற்றி வானகம் விதானித் தாய்ந்துதிறவிதிற் றவிசு தூபந் திருச்சுடர் விளக்கிட் டாரே.2634. பாலினாற் சீறடி கழுவிப் பைந்துகினூலினா லியன்றன நுனித்த வெண்மையகாலனைக் கண்புதைத் தாங்கு வெம்முலைமேல்வளாய் வீக்கினார் விதியி னென்பவே.2635. தேனுலா மாலையுங் கலனுஞ் சிந்துபுபானிலாக் கதிரன வம்மென் பைந்துகிறானுரலாய்த் தடமுலை முற்றஞ் சூழ்ந்தரோவேனிலான் வருநெறி வெண்முள் வித்தினார்.2636. முன்னுபு கீழ்த்திசை நோக்கி மொய்ம்மலர்நன்னிறத் தவிசின்மே லிருந்த நங்கைமாரின்மயி ருகுக்கிய விருந்த தோகையபன்மயிற் குழாமொத்தார் பாவை மார்களே.2637. மணியியல் சீப்பிடச் சிவக்கும் வாணுதலணியிருங் கூந்தலை யௌவை மார்கடாம்பணிவிலர் பறித்தனர் பரமன் சொன்னநூற்றுணிபொருள் சிந்தியாத் துறத்தன் மேயினார்.2638. கன்னிய ராயிரர் காய்பொற் கொம்பனார்பொன்னியற் படலிகை யேந்திப் பொன்மயிர்நன்னிலம் படாமையே யடக்கி நங்கைமார்தொன்மயி ருகுத்தநன் மயிலிற் றோன்றினார்.2639. பொற்குடந் திருமணி பொழியப் பெய்தபோலெற்புடம் பெண்ணிலாக் குணங்க ளானிறைத்துற்றுட னுயிர்க்கருள் பரப்பி யோம்பினார்முற்றுட னுணர்ந்தவ னமுத முன்னினார்2640. புகழ்ந்துரை மகிழ்ச்சியும் பொற்பில் பல்சனமிகழ்ந்துரைக் கிரக்கமு மின்றி யங்கநூலகழ்ந்துகொண் டரும்பொருள் பொதிந்த நெஞ்சினார்திகழ்ந்தெரி விளக்கெனத் திலக மாயினார்.2641. அலைமணிக் கவரி மான்றே ரடுகளி யானை பாய்மாநிலநெளி கடலந் தானை நிரந்துபூச் சுமப்ப மன்னன்சிலமலர் தானு மேந்திச் சென்றுசீர் பெருக வாழ்த்தியிலமலர்ப் பஞ்சிப் பாதத் தெழின்முடி தீட்டி னானே.2642. கடியவை முன்பு செய்தேன்கண்ணினாற் காணச் சின்னாலடிகளிந் நகரி னுள்ளேயுறைகென வண்ணல் கூறமுடிகெழு மன்னற் கொன்றுமறுமொழி கொடாது தேவிபடிமம்போன் றிருப்ப நோக்கிப்பம்மைதான் சொல்லி னாளே.2643. காதல னல்லை நீயுங் காவல நினக்கி யாமுமேதில மென்று கண்டா யிருந்தது நங்கை யென்னத்தாதலர் தாம மார்ப னுரிமையுந் தானு மாதோபோதவிழ் கண்ணி யீர்த்துப் புனல்வரப் புலம்பி னானே.2644. ஏதில னாயி னாலுமிறைவர்தம் மறத்தை நோக்கக்காதல னடிக ளென்னக்கண்கனிந் துருகிக் காசின்மாதவ மகளி ரெல்லாமாபெருந் தேவி யாரையேதமொன் றில்லை நம்பிக்கின்னுரை கொடுமி னென்றார்.2645. திரைவள ரிப்பி யீன்றதிருமணி யார மார்பின்வரைவளர் சாந்த மார்ந்தவைரக்குன் றனைய திண்டோள்விரைவளர் கோதை வேலோய்வேண்டிய வேண்டி னேமென்றுரைவிளைத் துரைப்பக் காளையுள்ளகங் குளிர்ந்து சொன்னான்.2646. அடிகளோ துறக்க வொன்றுமுற்றவர் யாது மல்லர்சுடுதுய ரென்கட் செய்தாய்சுநந்தைநீ யௌவை யல்லைகொடியைநீ கொடியை செய்தாய்கொடியையோ கொடியை யென்னாவிடருற்றோர் சிங்கந் தாய்முனிருந்தழு கின்ற தொத்தான்.2647. சென்றதோ செல்க விப்பாற்றிருமக ளனைய நங்கையின்றிவ டுறப்ப யானின்னரசுவந் திருப்பே னாயினென்றெனக் கொழியு மம்மாபழியென விளங்கு செம்பொற்குன்றனான் குளிர்ப்பக் கூறிக்கோயில்புக் கருளு கென்றாள்.2648. பந்தட்ட விலலி னார்தம்படாமுலை கிழித்த பைந்தார்நந்தட்டன் றன்னை நோக்கிநங்கையா ரடிகள் சொன்னார்நொந்திட்டு முனிய வேண்டாதுறந்தில நும்மை யென்னக்கந்தட்ட திணிதிண் டோளான்கற்பக மலர்ந்த தொத்தான்.2649. துறந்த விந்நங்கை மார்தந்தூம லரனைய பாதமுறைந்தவென் சென்னிப் போதின்மிசையவென் றொப்ப வேத்திக்கறந்தபா லனைய கந்திக்கொம்படுத் துருவப் பைம்பூண்பிறங்குதார் மார்பன் போந்துபெருமணக் கோயில் புக்கான்.2650. வடிநிரை நெடிய கண்ணார்மாமிமார் விடுப்ப வேகிக்கடிநிரை சிவிகை யேறிக்கதிர்மணிக் குடைபின் செல்லவுடைதிரைப் பரவை யன்னவொளிறுவேன் மறவர் காப்பக்கொடிநிரைக் கோயில் புக்கார்குங்குமக் கொடிய னாரே.2651. முழுதுல கெழிலேத்து மூரிவேற் றானை மன்னன்றொழுதகு பெருமாட்டி தூமணிப் பாவை யன்னாள்பொழிதரு மழைமொக்குட் போகம்விட் டாசை நீக்கிவழிவரு தவமெய்தி வைகின டெய்வ மன்னாள்.2652. உடைதிரை முத்தஞ் சிந்த வோசனிக் கின்ற வன்னம்படர்கதிர்த் திங்க ளாகப் பரந்துவான் பூத்த தென்னாவடர்பிணி யவிழு மாம்ப லலைகடற் கானற் சேர்ப்பன்குடைகெழு வேந்தற் கிப்பா லுற்றது கூற லுற்றேன்.2653. துறவின்பாற் படர்த லஞ்சித்தொத்தொளி முத்துத் தாமமுறைகின்ற வுருவக் கோலச்சிகழிகை மகளி ரின்பத்திறைவனை மகிழ்ச்சி செய்துமயங்குவா னமைச்ச ரெண்ணிநிறையநீர் வாவி சாந்தங்கலந்துடன் பூரித் தாரே.2654. நீரணி மாட வாவிநேர்ம்புணை நிறைத்து நீணீர்ப்போரணி மாலை சாந்தம்புனைமணிச் சிவிறி சுண்ணம்வாரணி முலையி னார்க்குமன்னற்கும் வகுத்து வாவியேரணி கொண்ட விந்நீரிறைவகண் டருளு கென்றார்.2655. கணமலை யரசன் மங்கை கட்டியங் கார னாகப்பணைமுலை மகளி ரெல்லாம் பவித்திரன் படைய தாகவிணைமலர் மாலை சுண்ண மெரிமணிச் சிவிறி யேந்திப்புணைபுறந் தழுவித் தூநீர்ப் போர்த்தொழி றொடங்கி னாரே.2656. தூமலர் மாலை வாளாச் சுரும்பெழப் புடைத்துந் தேன்சோர்தாமரைச் சதங்கை மாலை சக்கர மென்ன வீழ்த்துங்காமரு கணைய மாகக் கண்ணிக ளொழுக விட்டுந்தோமர மாகத் தொங்கல் சிதறுபு மயங்கி னாரே.2657. அரக்குநீர்ச் சிவிறி யேந்தியாயிரந் தாரை செல்லப்பரப்பினாள் பாவை தத்தைபைந்தொடி மகளி ரெல்லாந்தரிக்கிலா ராகித் தாழ்ந்துதடமுகிற் குளிக்கு மின்போற்செருக்கிய நெடுங்கண் சேப்பச்சீதநீர் மூழ்கி னாரே.2658. தானக மாட மேறித்தையலார் ததும்பப் பாய்வார்வானகத் திழியுந் தோகைமடமயிற் குழாங்க ளொத்தார்தேனின மிரியத் தெண்ணீர்க்குளித்தெழுந் திருவி னன்னார்பான்மிசை சொரியுந் திங்கள்பனிக்கடன் முளைத்த தொத்தார்.2659. கண்ணிகொண் டெறிய வஞ்சிக்காறளர்ந் தசைந்து சோர்வார்சுண்ணமுஞ் சாந்தும் வீழத்தொழுதன ரிரந்து நிற்பாரொண்மலர் மாலை யோச்சவொசிந்துகண் பிறழ வொல்கிவெண்ணெயிற் குழைந்து நிற்பார்வேற்கணா ராயி னாரே.2660. கூந்தலை யொருகை யேந்திக்குங்குமத் தாரை பாயப்பூந்துகி லொருகை யேந்திப்புகுமிடங் காண்டல் செல்லார்வேந்தனைச் சரணென் றெய்தவிம்முறு துயர நோக்கிக்காய்ந்துபொற் சிவிறி யேந்திக்கார்மழை பொழிவ தொத்தான்.2661. வீக்கினான் றாரை வெய்தாச்சந்தனத் தளிர்நன் மாலையோக்கினார் கண்ணி சுண்ணமுடற்றினா ருருவச் சாந்திற்பூக்கமழ் துகிலுந் தோடுமாலையுஞ் சொரியப் போர்தோற்றாக்கிய வநங்கன் சேனையாறலா றாயிற் றன்றே.2662. அன்னங்க ளாகி யம்பூந்தாமரை யல்லி மேய்வார்பொன்மயி லாகிக் கூந்தல்போர்த்தனர் குனிந்து நிற்பாரின்மலர்க் கமல மாகிப்பூமுகம் பொருந்த வைப்பார்மின்னுமே கலையுந் தோடுங்கொடுத்தடி தொழுது நிற்பார்.2663. பண்ணுரை மகளிர் மாலைபைந்துகில் கவர்ந்து கொள்ளக்கண்ணுரை மகளிர் சோர்ந்துகாரிருட் டிவளு மின்போற்பெண்ணுரைப் பிடிக்கைக் கூந்தற்பொன்னரி மாலை தாழவெண்ணுரை யுடுத்து நின்றார்வேந்தனோக் குண்ண நின்றார்.2664. தன்படை யுடையத் தத்தைசந்தனத் தாரை வீக்கியொன்பது முகத்தி னோடியுறுவலி யகலம் பாயப்பொன்படு சுணங்கு போர்த்தபொங்கிள முலையிற் றூவான்முன்படு குலிகத் தாரைமுழுவலி முறுக்க லுற்றான்.2665. மெய்ப்படு தாரை வீழினோமிவட் கென்ன வஞ்சிக்கைப்படை மன்ன னிற்பக்கதுப்பயன் மாலை வாங்கிச்செப்பட முன்கை யாப்பத்திருமகன் றொலைந்து நின்றான்பைப்புடை யல்கு லாளைப்பாழியாற் படுக்க லுற்றே.2666. அடுத்தசாந் தலங்கல் சுண்ணமரும்புனல் கவர வஞ்சியுடுத்தபட் டொளிப்ப வொண்பொன்மேகலை யொன்றும் பேசாகிடப்பமற் றரச னோக்கிக்கெட்டதுன் றுகின்மற் றென்னமடத்தகை நாணிப் புல்லிமின்னுச்சேர் பருதி யொத்தான்.2667. விம்மகிற் புகையின் மேவியுடம்பினை வேது செய்துகொம்மென நாவி நாறுங்கூந்தலை யுலர்த்தி நொய்யவம்மல ருரோமப் பூம்பட்டுடுத்தபி னனிச்ச மாலைசெம்மலர்த் திருவி னன்னார்சிகழிகைச் சேர்த்தி னாரே.2668. கார்கொள் குன்றன கண்கவர் தோளினானீர்கொ ணீரணி நின்று கனற்றலின்வார்கொண் மென்முலை வம்பணி கோதையாரேர்கோள் சாயலுண் டாடுமற் றென்பவே.2669. வேனில் வாய்க்கதிர் வெம்பலின் மேனிலைத்தேனு லாங்குளிர் சந்தனச் சேற்றிடைத்தானு லாய்த்தட மென்முலைத் தங்கினான்பானி லாக்கதிர் பாய்தரு பள்ளியே.2670. முழுது மெய்ந்நல மூழ்கலி னீர்சுமந்தெழுது கண்ணிரங் கப்புரு வக்கொடிதொழுவ போன்முரி யச்சொரி பூஞ்சிகையழுவ போன்றணி நித்தில முக்கவே.2671. எழுத்தின் பாடலு மாடலு மென்றிவைபழத்த கற்பகப் பன்மணிக் கொம்பனாரழுத்தி யன்ன வணிவளைத் தோண்மிசைக்கழிக்கு மைங்கணைக் காமற்குங் காமனே.2672. நீர்து ளும்பு வயிற்றின் னிழன்முகில்பார்து ளும்ப முழங்கலிற் பல்கலையேர்து ளும்ப வெரீஇயிறை வற்றழீஇக்கார்து ளும்புகொம் பிற்கவி னெய்தினார்.2673. இழிந்து கீழ்நிலை யின்னகிற் சேக்கைமேற்கிழிந்து சாந்தழி யக்கிளர் மென்முலைதொழிந்து மட்டொழு கத்துதை தார்பொரவழிந்த மேகலை யஞ்சிலம் பார்த்தவே.2674. தேனி றாலன தீஞ்சுவை யின்னடையான றாமுலைப் பாலமு தல்லதொன்றானு மேவல ரச்சுற வெய்தியமான றாமட நோக்கிய ரென்பவே.2675. கூதிர்வந் துலாவலிற் குவவு மென்முலைவேதுசெய் சாந்தமும் வெய்ய தேறலும்போதவிழ் மாலையும் புகையுஞ் சுண்ணமுங்காதலித் தார்கருங் குவளைக் கண்ணினார்.2676. சுரும்புநின் றறாமலர்த் தொங்க லார்கவினரும்புகின் றார்கட லமிர்த மேயெனாவிரும்புகின் றானிள வேனில் வேந்தனைஞ்சரங்கள்சென் றழுத்தலிற் றரணி மன்னனே.2677. குழைமுக மிடவயிற் கோட்டி யேந்தியவழனிறத் தேறலுண் மதிகண் டையெனநிழன்முகப் பகைகெடப் பருகி நீள்விசும்புலலெனா நோக்குவாண் மதிகண்டூடினாள்.2678. பருகினேற் கொளித்துநீ பசலை நோயொடுமுருகிப்போ யின்னுமற் றுளையென் றுள்சுடக்குருதிகண் கொளக்குண மாலை யூடினாளுருவத்தா லுறத்தழீஇ யுடற்றி நீக்குவான்2679. நங்கைநின் முகவொளி யெறிப்ப நன்மதியங்கதோ வுள்கறுத் தழகிற் றேய்ந்ததுமங்கைநின் மனத்தினால் வருந்த லென்றவள்பொங்கிள வனமுலை பொருந்தி னானரோ.2680. கொங்கு விம்முபூங் கோதை மாதரார்பங்க யப்பகைப் பருவம் வந்தெனவெங்கு மில்லன வெலிம யிர்த்தொழிற்பொங்கு பூம்புகைப் போர்வை மேயினார்.2681. கூந்த லின்புகைக் குவவு மென்முலைச்சாந்த மேந்திய தமால மாலையுமாய்ந்து தாங்கின ரரவ மேகலைகாய்ந்து நித்திலங் கடிய சிந்தினார்.2682. அளிந்த தீம்பழ மிஞ்சி யார்ந்தநீர்விளைந்த வல்விளை வரிசி வேரியும்வளைந்த மின்னனார் மகிழ்ந்து சண்பகமுளைந்து மல்லிகை யொலியல் சூடினார்.2683. தொத்து டைம்மலர்த் தொங்கல் கண்பொரமுத்து டைம்முலைக் கண்க ணொந்தவென்றெய்த்த டிச்சிலம் பிரங்கு மின்குரல்கைத்தெ டுத்தலிற் காமந் தாழ்ந்ததே.2684. பொன்ப னிப்புறும் பொற்பி னார்நலமன்ப னித்தலை யணங்க வத்தலைமுன்ப னித்தலை முழுது நீங்கிப்போய்ப்பின்ப னித்தலை பேண வந்ததே.2685. வெள்ளி லோத்திரம் விளங்கும் வெண்மலர்க்கள்செய் மாலையார் கண்கொ ளாத்துகிலள்ளி யேந்திய வரத்த வல்குலாரொள்ளெ ரிம்மணி யுருவப் பூணினார்2686. செந்நெ ருப்புணுஞ் செவ்வெ லிம்மயிரந்நெ ருப்பள வாய்பொற் கம்பலமன்ன ருய்ப்பன மகிழ்ந்து தாங்கினாரென்ன ரொப்புமில் லவர்க ளென்பவே.2687. ஆட லின்சுவை யமர்ந்து நாடொறும்பாடன் மெய்ந்நிறீப் பருகிப் பண்சுவைத்தோடு மாமதி யுரிஞ்சு மொண்பொனின்மாடக் கீழ்நிலை மகிழ்ந்து வைகினார்.2688. புரிக்குழன் மடந்தையர் பொம்மல் வெம்முலைதிருக்கழற் குருசிறார் திளைக்கும் போரினுட்செருக்குரற் சிறுபறை சிலம்பு கிண்கிணியரிப்பறை மேகலை யாகி யார்த்தவே.2689. ஏச்செயாச் சிலைநுத லேழை மார்முலைத்தூச்செயாக் குங்குமந் துதைந்த வண்டினம்வாய்ச்சியா லிட்டிகை செத்து மாந்தர்தம்பூச்செயா மேனிபோற் பொலிந்து தோன்றுமே.2690. குரவம் பாவை கொப்புளித்துக்குளிர்சங் கீர்ந்த துகளேபோன்மரவம் பாவை வயிறாரப்பருகி வாடை யதுநடப்பவிரவித் தென்றல் விடுதூதாவேனி லாற்கு விருந்தேந்திவரவு நோக்கி வயாமரங்களிலையூழ்த் திணாபுன் றலர்ந்தனவே.2691. இளிவாய்ப் பிரசம் யாழாகவிருங்கட் டும்பி குழலாகக்களிவாய்க் குயில்கண் முழவாகக்கடிபூம் பொழில்க ளரங்காகத்தளிர்போன் மடவார்தணந்தார்தந்தடந்தோள் வளையு மாமையும்விளியாக் கொண்டிங் கிளவேனில்விருந்தா வாட றொடக்கினான்.2692. வேனி லாடும் விருப்பினால்வியன்காய் நெல்லிச் சாந்தரைத்துநான வெண்ணெய் கதுப்புரைத்துநறுநீ ராடி யமிர்துயிர்க்குந்தேனா ரகிலின் புகைசேர்த்திவகுத்து நாவிக் குழம்புறீஇயானாப் பளித நறுஞ்சுண்ணமுகிரி னுழுதாங் கணிந்தாரே.2693. முத்தார் மருப்பி னிடைவளைத்தமுரண்கொள் யானைத் தடக்கையினொத்தே ருடைய மல்லிகையினொலியன் மாலை யுறுப்படக்கிவைத்தார் மணிநூற் றனவைம்பால்வளைய முடித்து வான்கழுநீருய்த்தாங் கதனுட் கொளவழுத்திக்குவளைச் செவித்தா துறுத்தாரே.2694. புகையார் வண்ணப் பட்டுடுத்துப்பொன்னங் கலைகள் புறஞ்சூழ்ந்துநகையார் கவுள கிண்கிணியுஞ்சிலம்பு நாய்நாச் சீறடிமேற்பகைகொண் டார்போற் சுமாஅய்க்கண்பின்பரூஉக்காம் பனைய கணைக் கால் சூழ்ந்தகையார்ந் திலக்கும் பரியகந்தாமே கவினச் சேர்த்தினார்.2695. பிடிக்கை வென்று கடைந்தனபோற்பஞ்சி யார்ந்த திரள் குறங்குகடித்துக் கிடந்து கவின்வளருங்காய்பொன் மகரங் கதிர்முலைமேலுடுத்த சாந்தின் மிசைச்செக்கரொளிகொண் முந்நாட் பிறையேய்ப்பத்துடிக்குங் குதிர் சேர் துணைமுத்தந்திருவில் லுமிழ்ந்து சுடர்ந்தனவே.2696. குழியப் பெரிய கோன்முன்கைமணியார் காந்தட் குவிவிரன்மேற்கழியப் பெரிய வருவிலையசிறிய மணிமோ திரங்கனலத்தழியப் பெரிய தடமென்றோட்சலாகை மின்னத் தாழ்ந்திலங்கும்விழிகண் மகர குண்டலமுந்தோடுங் காதின் மிளிர்ந்தனவே.2697. நாணுள் ளிட்டுச் சுடர்வீசுநன்மா ணிக்க நகுதாலிபேணி நல்லார் கழுத்தணிந்துபெருங்கண் கருமை விருந்தூட்டிநீணீர் முத்த நிரைமுறுவல்கடுச்சுட் டுரிஞ்சக் கதிருமிழ்ந்துதோணீர்க் கடலுட் பவளவாய்த்தொண்டைக் கனிக டொழுதனவே.2698. மாலை மகளி ரணிந்ததற்பின்பஞ்ச வாசங் கவுட்கொண்டுசோலை மஞ்ஞைத் தொழுதிபோற்றோகை செம்பொ னிலந்திவளக்காலிற் சிலம்புங் கிண்கிணியுங்கலையு மேங்கக் கதிர்வேலுநீலக் குவளை நிரையும்போற்கண்ணார் காவி லிருந்தாரே.2699. மணிவண் டொன்றெ நலம்பருகமலர்ந்த செந்தா மரைத்தடம்போலணிவேன் மன்ன னலம்பருகவலர்ந்த வம்பார் மழைக்கண்ணார்பணியார் பண்ணுப் பிடியூர்ந்துபரூஉக்காற் செந்நெற் கதிர்சூடித்தணியார் கழனி விளையாடித்தகைபா ராட்டத் தங்கினார்.2700. எண்ணற் கரிய குங்குமச்சேற்றெழுந்து நான நீர்வளர்ந்துவண்ணக் குவளை மலரளைஇமணிக்கோல் வள்ளத் தவனேந்தவுண்ணற் கினிய மதுமகிழ்ந்தாரொலியன் மாலை புறந்தாழக்கண்ணக் கழுநீர் மெல்விரலாற்கிழித்து மோந்தார் கனிவாயார்.2701. இவ்வா றெங்கும் விளையாடியிளையான் மார்பி னலம்பருகிச்செவ்வாய் விளர்த்துத் தோண்மெலிந்துமணிக்கோல் வள்ளத் தவனேந்தசெய்ய முலையின் முகங்கருகியனிச்ச மலரும் பொறையாகியொவ்வாப் பஞ்சி மெல்லணைமேலசைந்தா ரொண்பொற் கொடியன்னார்.2702. தீம்பால் சுமந்து முலைவீங்கித்திருமுத்தீன்ற வலம்புரிபோற்காம்பேர் தோளார் களிறீன்றார்கடைக டோறுங் கடிமுரசந்தாம்பாற் பட்ட தனிச்செங்கோற்றரணி மன்னன் மகிழ்தூங்கியோம்பா தொண்பொன் சொரிமாரியுலக முண்ணச் சிதறினான்.2703. காடி யாட்டித் தராய்ச் சாறுங்கன்னன் மணியு நறுநெய்யுங்கூடச் செம்பொன் கொளத்தேய்த்துக்கொண்டு நாளும் வாயுறீஇப்பாடற் கினிய பகுவாயுங்கண்ணும் பெருக வுகிருறுத்தித்தேடித் தீந்தேன் றிப்பிலிதேய்த்தண்ணா வுரிஞ்சி மூக்குயர்த்தார்.2704. யாழுங் குழலு மணிமுழவுமரங்க மெல்லாம் பரந்திசைப்பத்தோழன் விண்ணோ னவட்டோன்றிவயங்காக் கூத்து வயங்கியபின்காழார் வெள்ளி மலைமேலுங்காவன் மன்னார் கடிநகர்க்கும்வீழா வோகை யவன்விட்டான்விண்பெற் றாரின் விரும்பினார்.2705. தத்த நிலனு முயர்விழிவும்பகையு நட்புந்தந்தசையும்வைத்து வழுவில் சாதகமும்வகுத்த பின்னர்த் தொகுத்தநாட்சச்சந் தணனே சுதஞ்சணனேதரணி கந்துக் கடன்விசயன்றத்தன் பரதன் கோவிந்தனென்று நாமந் தரித்தாரே.2706. ஐயாண் டெய்தி மையாடியறிந்தார் கலைகள் படைநவின்றார்கொய்பூ மாலை குழன்மின்னுங்கொழும்பொற் றொடுங் குண்டலமுமையன் மார்க டுளக்கின்றியாலுங் கலிமா வெகுண்டூர்ந்தார்மொய்யா ரலங்கன் மார்பற்குமுப்ப தாகி நிறைந்ததே.2707. பூநிறை செய்த செம்பொற்கோடிகம் புரையு மல்குல்வீநிறை கொடிய னாரும்வேந்தனு மிருந்த போழ்திற்றூநிறத் துகிலின் மூடிப்படலிகை கொண்டு வாழ்த்திமாநிறத் தளிர்நன் மேனிமல்லிகை மாலை சொன்னாள்.2708. தடமுலை முகங்கள் சாடிச்சாந்தகங் கிழிந்த மார்பிற்குடவரை யனைய கோலக்குங்குமக் குவவுத் தோளாய்தொடைமலர் வெறுக்கை யேந்தித்துன்னினன் வேனில் வேந்தனிடமது காண்க வென்றாளிறைவனு மெழுக வென்றான்.2709. முடித்தலை முத்த மின்னுமுகிழ்முலை முற்ற மெல்லாம்பொடித்துப் பொன் பிதிரிந்த வாகத்திளையவர் புகழ்ந்து சூழக்கடுத்தவாள் கனல வேந்திக்கன்னியர் காவ லோம்பவிடிக்குரற் சீய மொப்பானிழையொளி விளங்கப் புக்கான்.2710. இலங்குபொன் னார மார்பி னிந்திர னுரிமை சூழக்கலந்தபொற் காவு காண்பான் காமுறப் புக்க தேபோலலங்குபொற் கொம்பு னாரு மன்னனு மாட மாதோநலங்கவின் கொண்ட காவு நல்லொளி நந்திற் றன்றே.2711. புலவியுண் மகளிர் கூந்தற்போதுகுக் கின்ற தேபோற்குலவிய சிறகர்ச் செங்கட்கருங்குயில் குடையக் கொம்பர்நிலவிய தாது பொங்கநீண்மலர் மணலிற் போர்த்துக்கலவியிற் படுத்த காய்பொற்கம்பல மொத்த தன்றே.2712. காசுநூல் பரிந்து சிந்திக்கம்பலத் துக்க தேபோன்மூசுதேன் வண்டு மொய்த்துமுருகுண்டு துயில மஞ்ஞைமாசில்பூம் பள்ளி வைகிவளர்ந்தெழு மகளி ரொப்பத்தூசுபோற் சிறக ரன்னந்தொழுதியோ டிரியச் சேர்ந்தார்.2713. காதிக்கண் ணரிந்து வென்றவுலகுணர் கடவுள் காலத்தாதிக்கண் மரங்கள் போன்றவஞ்சொலீ ரிதனி னுங்கள்காதலிற் காண லுற்றவிடமெலாங் காண்மி னென்றானீதிக்க ணின்ற செங்கோனிலவுவீற் றிருந்த பூணான்.2714. வானவர் மகளி ரென்னவார்கயிற் றூச லூர்ந்துங்கானவர் மகளி ரென்னக்கடிமலர் நல்ல கொய்துந்தேனிமிர் குன்ற மேறிச்சிலம்பெதிர் சென்று கூயுங்கோனமர் மகளிர் கானிற்குழாமயில் பிரிவ தொத்தார்.2715. நெடுவரை யருவி யாடிச்சந்தன நிவந்த சோலைப்படுமதங் கவரும் வண்டுபைந்தளிர்க் கவரி யேந்திப்பிடிமகிழ்ந் தோப்ப நின்றபெருங்களிற் றரசு நோக்கிவடிமதர் மழைக்க ணல்லார்மன்னனை மகிழ்ந்து நின்றார்.2716. கொழுமடற் குமரி வாழைத்துகிற்சுருள் கொண்டு தோன்றச்செழுமலர்க் காம வல்லிச்செருக்கயல் சிற்ப மாகக்கழுமணிச் செம்பொ னாழிக்கைவிர லுகிரிற் கிள்ளிவிழுமுலைச் சூட்டி நின்றார்விண்ணவர் மகளி ரொத்தார்.2717. கடைதயிர்க் குரல வேங்கைகண்ணுறச் சென்று நண்ணிமிடைமயிர்க் கவரி நல்லான்கன்றுணக் கண்டு நிற்பார்புடைதிரண் டெழுந்த பொம்மல்வனமுலை பொறுக்க லாற்றார்நடைமெரிந் திகலி யன்னநன்னடை நயந்து நிற்பார்.2718. எம்வயின் வருக வேந்தனிங்கென விரங்கு நல்லியாழ்வெம்மையின் விழையப் பண்ணியெஃகுநுண் செவிகள் வீழச்செம்மையிற் கனிந்த காமத்தூதுவிட் டோத முத்தம்வெம்முலை மகளிர் வீழ்பூம்பொதும்பருள் விதும்பி னாரே.2719. பிடிமரு ணடையி னார்தம்பெருங்கவின் குழையப் புல்லித்தொடைமலர்க் கண்ணி சேர்த்திச்சு ரும்புண மலர்ந்த மாலையுடைமது வொழுகச் சூட்டியுருவத்தார் குழைய வைகிக்கடிமலர் மகளி ரொத்தார்காவலன் களிவண் டொத்தான்.2720. இழைந்தவர் நலத்தை யெய்தியினந்திரி யேறு போலக்குழைந்ததார் நெகிழ்ந்த தானைக்கொற்றவன் பெயர்ந்து போகிவழிந்துதேன் வார்ந்து சோரும்வருக்கையி னீழல் சேர்ந்தான்விழைந்தவக் கடுக னாங்கோர்மந்தியை விளித்த தன்றே.2721. அளித்திள மந்தி தன்னையார்வத்தால் விடாது புல்லியொளித்தொரு பொதும்பர்ச் சேர்ந்தாங்கொருசிறை மகிழ்ச்சி யார்ந்துதளிர்த்தலைப் பொதும்பர் நீங்கித்தம்மின மிரண்டுஞ் சேர்ந்தகளித்தலைக் கூட்டங் காதன்மந்திகண் டிருந்த தன்றே.2722. பரத்தையர்த் தோய்ந்த மார்பம்பத்தினி மகளிர் தீண்டார்திருத்தகைத் தன்று தெண்ணீராடிநீர் வம்மி னென்னவுரைத்ததென் மனத்தி லில்லையுயர்வரைத் தேனை யுண்பார்வருத்துங்காஞ் சிரமும் வேம்பும்வாய்க்கொள்வார் யாவர் சொல்லாய்.2723. ஈங்கினி யென்னை நோக்கியெவன் செய்தி யெனக்கு வாணாணீங்கிற்றுச் சிறிது நிற்பிற்காண்டியா னீயு மென்னத்தூங்கித்தான் றுளங்க மந்திதொழுத்தையேன் செய்த தென்றுதாங்குபு தழுவிக் கொண்டுதன்னைத்தான் பழித்த தன்றே.2724. கண்ணினாற் குற்றங் கண்டுங்காதலன் றெளிப்பத் தேறிப்பெண்மையாற் பழித்த மந்திபெருமகி ழுவகை செய்வான்.றிண்ணிலைப் பலவின் றேங்கொள்தொழுத்தையேன் செய்த தென்றுபண்ணுறு சுளைகள் கையாற்பகுத்துணக் கொடுத்த தன்றே.2725. இன்கனி கவரு மந்தி கடுவனோ டிரிய வோட்டிநன்கனி சிலத னுண்ண நச்சுவேன் மன்ன னோக்கியென்பொடு மிடைந்த காம மிழிபொடு வெறுத்து நின்றானன்புடை யரிவை கூட்டம் பிறனுழைக் கண்ட தொத்தே.2726. கைப்பழ மிழந்த மந்திகட்டியங் கார னொத்ததிப்பழந் துரந்து கொண்டசிலதனு மென்னை யொத்தானிப்பழ மின்று போகத்தின்பமே போலு மென்றுமெய்ப்பட வுணர்வு தோன்றிமீட்டிது கூறி னானே.2727. மெலியவர் பெற்ற செல்வம்வேரொடுங் கீழ்ந்து வெளவிவலியவர் கொண்டு மேலைவரம்பிகந் தரம்பு செய்யுங்கலியது பிறவி கண்டாங்காலத்தா லடங்கி நோற்றுநலிவிலா வுலக மெய்தனல்லதே போலு மென்றான்.2728. நல்வினை யென்னு நன்பொற்கற்பக மகளி ரென்னும்பல்பழ மணிக்கொம் பீன்றுபரிசில்வண் டுண்ணப் பூத்துச்செல்வப்பொற் சிறுவ ரென்னுந்தாமங்க டாழ்ந்து நின்றதொல்கிப்போம் பாவக் காற்றினொழிகவிப் புணர்ச்சி யென்றான்.2729. வேட்கைமை யென்னு நாவிற்காமவெந் தேறன் மாந்திமாட்சியொன் றானு மின்றிமயங்கினேற் கிருளை நீங்கக்காட்டினார் தேவ ராவர்கைவிளக் கதனை யென்றுதோட்டியாற் றொடக்கப் பட்டசொரிமதக் களிற்றின் மீண்டான்.2730. கைந்நிறை யெஃக மேந்திக்கனமணிக் குழைவில் வீசமைந்நிற மணிவண் டார்ப்பவார்தளிர் கவரி வீசமெய்ந்நெறி மகிழ்ந்து நின்றான்வேனில்வாய்க் காம னொத்தான்மொய்ந்நிற மாலை வேய்ந்துமுருகுலா முடியி னானே.2731. நடுச்சிகை முத்துத் தாமம்வாணுத னான்று நக்கப்படுத்தனர் பைம்பொற் கட்டில்பாடினர் கீதந் தூபமெடுத்தன ரெழுந்து தேனாரெரிமணி வீணை யார்த்தகொடிப்பல பூத்துச் சூழ்ந்தகுங்குமக் குன்ற மொத்தான்.2732. மெள்ளவே புருவங் கோலிவிலங்கிக்கண் பிறழ நோக்கிமுள்ளெயி றிலங்கச் செவ்வாய்முறுவற்றூ தாதி யாகவள்ளிக்கொண் டுண்ணக் காமங்கனிவித்தார் பனிவிற் றாழ்ந்தவள்ளிதழ் மாலை மார்பன்வச்சிர மனத்த னானான்.2733. முலைமுகஞ் சுமந்த முத்தத்தொத்தொளிர் மாலை யாருமலைமுகந் தனைய மார்பின்மன்னனு மிருந்த போழ்திற்கொலைமுகக் களிற னாற்குநாழிகை சென்று கூறக்கலைமுக மல்லர் புல்லிக்கமழுநீ ராட்டி னாரே.2734. வெண்டுகின் மாலை சாந்தம்விழுக்கலம் விதியிற் சேர்த்திநுண்டுகிற் றிரைகள் சேர்ந்தநூற்றுலா மண்ட பத்துக்கண்டிரண் முத்த மென்றோட்காவிக்கண் மகளிர் போற்றியெண்டிசை மருங்கு மேத்தவினிதினி னேறி னானே.2735. நெய்வளங் கனிந்து வாசநிறைந்துவான் வறைக ளார்ந்துகுய்வளங் கழுமி வெம்மைத்தீஞ்சுவை குன்ற லின்றியைவரு ளொருவ னன்னவடிசினூன் மடைய னேந்தமைவரை மாலை மார்பன்வான்சுவை யமிர்ந்த முண்டான்.2736. கைப்பொடி சாந்த மேந்திக்கரகநீர் விதியிற் பூசிமைப்படு மழைக்க ணல்லார்மணிச்செப்பின் வாச நீட்டச்செப்படு பஞ்ச வாசந்திசையெலாங் கமழ வாய்க்கொண்டொப்புடை யுறுவர் கோயில்வணங்குது மெழுக வென்றான்.2737. ஒருபகல் பூசி னோராண்டொழிவின்றி விடாது நாறும்பெரியவர் கேண்மை போலும்பெறற்கரும் வாச வெண்ணெயரிவையர் பூசி யாடியகிற்புகை யாவி யூட்டித்திருவிழை துகிலும் பூணுந்திறப்படத் தாங்கி னாரே.2738. நற்றவஞ் செய்த வீரருளவழி நயத்து நாடும்பொற்றதா மரையி னாளிற்பூஞ்சிகை முத்த மின்னக்கொற்றவற் றொழுது சேர்ந்தார்கொம்பனார் வாமன் கோயின்மற்றவன் மகிழ்ந்து புக்குமணிமுடி துளக்கி னானே.2739. கடிமலர்ப் பிண்டிக் கடவுள் கமலத்தடிமலர் சூடி யவருலகில் யாரேயடிமலர் சூடி யவருலக மேத்தவடிமலர் தூவ வருகின்றா ரன்றே.2740. முத்தணிந்த முக்குடைக்கீழ் மூர்த்தி திருவடியைப்பத்திமையா னாளும் பணிகின்றார் யாரேபத்திமையா னாளும் பணிவார் பகட்டெருத்தினித்தில வெண்குடைக்கீழ் நீங்காதா ரன்றே.2741. கருமக் கடல்கடந்த கைவலச் செல்வனெரிமலர்ச் சேவடியை யேத்துவார் யாரேயெரிமலர்ச் சேவடியை யேத்துவார் வான்றோய்திருமுத் தவிராழிச் செல்வரே யன்றே.2742. வண்ண மாமல் மாலை வாய்ந்தனசுண்ணங் குங்குமந் தூமத் தாற்புனைந்தண்ணல் சேவடி யருச்சித் தானரோவிண்ணி லின்பமே விழைந்த வேட்கையான்.2743. இலங்கு குங்கும மார்ப னேந்துசீர்நலங்கொள் சாரணர் நாதன் கோயிலைவலங்கொண் டாய்மலர்ப் பிண்டி மாநிழற்கலந்த கன்மிசைக் கண்டு வாழ்த்தினான்.2744. உரிமை தன்னொடும் வலங்கொண் டோங்குசீர்த்திரும கன்பணிந் திருப்பச் செய்தவரிருநி லம்மனற் கின்ப மேயெனப்பெருநி லம்மனன் பெரிதும் வாழ்த்தினான்.2745. தெருள லேன்செய்த தீவி னையெனுமிருள்வி லங்கநின் றெரியு நீள்சுடரருளு மின்னெனக் கடிக ளென்றனன்மருள்வி லங்கிய மன்னர் மன்னனே.2746. பாற்கடற் பனிமதி பரவைத் தீங்கதிர்மேற்பட மிகநனி சொரிவ தொப்பவேநூற்கடன் மாதவ னுனித்த நல்லறங்கோற்கடன் மன்னனுக் குரைக்கு மென்பவே.2747. தேனெய் தோய்ந்தன தீவிய திருமணி யனையவானி னுய்ப்பன வரகதி தருவன மதியோரேனை யாவரு மமுதெனப் பருகுவ புகல்வமான மில்லுயர் மணிவண்ண னுவலிய வலித்தான்.2748. அருமையின் னெய்தும் யாக்கையும் யாக்கைய தழிவுந்திருமெய் நீங்கிய துன்பமுந் தெளிபொருட் டுணிவுங்குருமை யெய்திய குணநிலை கொடைபெறு பயனும்பெருமை வீட்டொடும் பேசுவல் கேளிது பெரியோய்.2749. பரவை வெண்டிரை வடகடற் படுநுகத் துளையுட்டிரைசெய் தென்கட விட்டதோர் நோன்கழி சிவணியரச வத்துளை யகவயிற் செறிந்தென வரிதாற்பெரிய யோனிகள் பிழைத்திவண் மானிடம் பெறலே.2750. விண்டு வேய்நர லூன்விளை கானவ ரிடனுங்கொண்டு கூர்ம்பனி குலைத்திடு நிலைக்களக் குறும்புமுண்டு நீரென வுரையினு மரியன வொருவிமண்டு தீம்புனல் வளங்கெழு நாடெய்த லரிதே.2751. வில்லின் மாக்கொன்று வெண்ணிணத் தடிவிளிம்படுத்தபல்லி னார்களும் படுகடற் பரதவர் முதலாவெல்லை நீங்கிய விழிதொழி லிழிகுல மொருவிநல்ல தொல்குலம் பெறுதலு நரபதி யரிதே.2752. கருவி மாமழை கனைபெயல் பொழிந்தென வழிநாளருவி போற்றொடர்ந் தறாதன வரும்பிணி யழலுட்கருவிற் காய்த்திய கட்டளைப் படிமையிற் பிழையாதுருவின் மிக்கதோ ருடம்பது பெறுதலு மரிதே.2753. காம னன்னதோர் கழிவனப் பறிவொடு பெறினுநாம நாற்கதி நவைதரு நெறிபல வொருவிவாம னூனெறி வழுவறத் தழுவின ரொழுகலேம வெண்குடை யிறைவமற் றியாவது மரிதே.2754. இன்ன தன்மையி னருமையினெய்திய பொழுதேபொன்னும் வெள்ளியும் புணர்ந்தெனவயிற்றகம் பொருந்திமின்னு மொக்குளு மெனநனிவீயினும் வீயும்பின்னை வெண்ணெயிற் றிரண்டபின்பிழைக்கவும் பெறுமே.2755. வெண்ணெ யாயது வீங்குபு கூன்புற யாமைவண்ண மெய்தலும் வழுக்கவும் பெறுமது வழுக்காதொண்மை வாண்மதி யுருவொடு திருவெனத் தோன்றிக்கண்ண னாரழக் கவிழினுங் கவிழுமற் றறிநீ.2756. அழித லின்றியங் கருநிதி யிரவலர்க் கார்த்திமுழுதும் பேர்பெறு மெல்லையுண் முரியினு முரியும்வழுவில் பொய்கையுண் மலரென வளர்ந்துமை யாடிக்கெழீஇயி னாரொடுங் கிளையழக் கெடுதலுங் கெடுமே.2757. கெடுத லவ்வழி யில்லெனிற்கேள்விக டுறைபோய்வடிகொள் கண்ணியர் மனங்குழைந்தநங்கனென் றிரங்கக்கொடையுங் கோலமுங் குழகுந்தம்மழகுங்கண் டேத்தவிடையிற் செல்வுழி விளியினும்விளியுமற் றறிநீ.2758. எரிபொன் மேகலை யிலங்கரிச்சிலம்பொடு சிலம்புமரிபொற் கிண்கிணி யணியிழையரிவையர்ப் புணர்ந்துதெரிவில் போகத்துக் கூற்றுவன்செகுத்திடச் சிதைந்துமுரியும் பல்சன முகம்புடைத்தகங்குழைந் தழவே2759. கோதை மங்கையர் குவிமுலைத் தடத்திடைக் குளித்துக்காதன் மக்களைக் கண்டுவந் தினிதினிற் கழிப்பப்பேது செய்பிணிப் பெரும்புலி பாய்ந்திடப் பிணமாமோத மாக்கட லுடைகலத் தவருற்ற துறவே.2760. காமம் பைப்பயக் கழியத்தங் கடைப்பிடி சுருங்கியூமர் போலத்த முரையவிந் துறுப்பினி லுரையாத்தூய்மை யில்குளந் தூம்புவிட் டாம்பொரு ளுணர்த்தியீம மேறுத லொருதலை யிகலமர் கடந்தோய்.2761. தேங்கொள் பூங்கண்ணித் திருமுடித் திலகவெண் குடையோயீங்கி தன்னியு மிமையவ ரமையலர்க் கடந்ததாங்கு மாவண்கைச் சக்கர மிக்குயர் பிறரும்யாங்க ணாரவ ரூரொடு பேரெமக் குரையாய்.2762. வெவ்வினை செய்யு மாந்த ருயிரெனு நிலத்து வித்தியவ்வினை விளையு ளுண்ணும் மவ்விடத் தவர்க டுன்பமிவ்வென வுரைத்து மென்று நினைப்பினும் பனிக்கு முள்ளஞ்செவ்விதிற் சிறிது கூறக் கேண்மதி செல்வ வேந்தே.2763. ஊழ்வினை துரப்ப வோடியொன்றுமூழ்த் தத்தி னுள்ளேசூழ்குலைப் பெண்ணை நெற்றித்தொடுத்ததீங் கனிக ளூழ்த்துவீழ்வன போல வீழ்ந்துவெருவரத் தக்க துன்பத்தாழ்துய ருழப்ப வூணுமருநவை நஞ்சு கண்டாய்.2764. இட்டிவேல் குந்தங் கூர்வாளெரிநுனைச் சுரிகை கூடநட்டவை நிரைத்த பூமிநவையுடை நரகர் பொங்கியுட்பட வெழுந்து வீழ்ந்தாங்கூன்றகர்த் திட்ட வண்ணமெட்டெலாத் திசையுஞ் சிந்திக்கிடப்பவா லடக்க மில்லார்.2765. வெந்தடி தின்ற வெந்நோய்வேகத்தான் மீட்டு மாலைபைந்தொடி மகளி ராடும்பந்தென வெழுந்து பொங்கிவந்துடைந் துருகி வீழ்ந்துமாழ்குபு கிடப்பர் கண்டாய்கந்தடு வெகுளி வேகக்கடாமுகக் களிற்று வேந்தே.2766. வயிரமுண் ணிரைத்து நீண்டவார்சினை யிலவ மேற்றிச்செயிரிற்றீ மடுப்பர் கீழாற்சென்னுனைக் கழுவி லேற்றிமயிருக்கொன் றாக வாங்கியகைத் தகைத் திடுவர் மன்னாவுயிரைப்பே துறுத்து மாந்தருயிரைப்பே துறுக்கு மாறே.2767. துடிக்குரற் குரல பேழ்வாய்த்தொடர்ப்பிணி யுறுத்த செந்நாய்மடுத்திட வைர வூசிவாளெயி றழுந்தக் கௌவிப்புடைத்திட வலறி யாற்றார்பொன்றினும் பொன்றல் செல்லாருடுப்பினம் வேட்டஞ் செய்தாருழப்பவாற் றுன்ப மாதோ.2768. வாளைமீன் றடிக டின்றார்வருகென வுருக வெந்தபாளத்தைக் கொடிற்றி னேந்திப்பகுத்துவாய் புகுத்த லாற்றாருளைக்கொண் டோடு கின்றாருள்ளடி யூசி பாயத்தாளொற்றித் தப்பி வீழ்ந்தார்தறிவலை மானிற் பட்டார்.2769. காதலாள் கரிந்து நையக் கடியவே களைந்து கன்றியேதிலான் றார நம்பி யெளிதென விறந்த பாவத்தூதுலை யுருக வெந்த வொள்ளழற் செப்புப் பாவையாதகா தென்னப் புல்லி யலறுமால் யானை வேந்தே.2770. சிலையினான் மாக்கள் கொன்றுசெழுங்கடல் வேட்ட மாடிவலையினான் மீன்கள் வாரிவாழுயிர்க் கூற்ற மானகொலைநரைக் குழம்பி தன்னுட்கொந்தழ லழுத்தி யிட்டுநலிகுவர் நாளு நாளுநரகரை நாம வேலோய்.2771. பாரகங் கழுநர் போலப்பரூஉத்தடி பலரு மேந்திவீரநோய் வெகுளி தோற்றிவிழுப்பற வதுக்கி யிட்டுக்காரகற் பொரிப்பர் கண்ணுட்சுரிகையை நடுவர் நெஞ்சிற்பாரக்கூர்ந் தறிக ணட்டுப்பனையெனப் பிளப்பர் மாதோ.2772. நாப்புடை பெயர்த்த லாற்றார்நயந்துநீர் வேட்டு நோக்கிப்பூப்புடை யணிந்த பொய்கைபுக்குநீ ருண்ண லுற்றாற்சீப்படு குழம்ப தாகிச்செல்லலுற் றந்தோ வென்னக்கூப்பிடு குரலாய் நிற்பர்குறைப்பனைக் குழாங்க ளொத்தே.2773. நறுமலர்த் தாம நான்றுநானநீர் பிலிற்றும் பந்தர்க்குறுகலுங் குடநெய் பெய்தகொந்தழல் போன்று பொங்கிப்பறையல கனைய வெண்பாற்பசுங்கழற் குண்டு பைங்கணுறுதுயர் நரகர் தம்மையுருகச்சுட் டிடுங்க ளன்றே.2774. வெந்துருக் குற்ற செம்பின்விதவையு ளழுத்தி யிட்டுமெந்திர வூச லேற்றியெரியுண மடுத்துஞ் செக்கிற்சுந்தெழுந் தரைத்தும் போகச்சுண்ணமா நுணுக்கி யிட்டுமந்தரத் தனைய துன்பம்வைகலு முழப்ப மாதோ.2775. உழும்பகட் டெருது போலவுரனறு தாள ராகிக்கொழுங்களி யளற்றுள் வீழ்ந்துங்கொழும்புகை மடுக்கப் பட்டுமழுந்துமிந் நரகந் தன்னுட்செல்பவர் யார்கொ லென்னினெழுந்துவண் டிமிரும் பைந்தாரிறைவநீ கேண்மோ வென்றான்.2776. கொல்வதே கன்றி நின்றார்கொடியவர் கடிய நீராரில்லையே யிம்மை யல்லாலும்மையு முயிரு மென்பாரல்லதுந் தவமு மில்லைதானமு மிழவென் பாருஞ்செல்பவந் நரகந் தன்னுட்டீவினைத் தேர்க ளூர்ந்தே.2777. எரிநீர வேநரக மந்நரகத் துன்பத்தொருநீர வேவிலங்கு தாமுடைய துன்பம்பெருநீர வாட்டடங்கட் பெண்ணணங்கு பூந்தாரருநீர வேந்தடர்த்த வச்சணங்கு வேலோய்.2778. கழைபொதிர்ப்பத் தேன்சொரிந்துகாய்த்தினைக ளார்த்துமழை தவழுங் குன்றில்வயமா முழங்கவுழையளிய தாமுறூஉந்துன்பங்க ணின்மேல்விழைவயரா வேந்துறூஉந்துன்பமே கண்டாய்.2779. நிணம்பிலிற்றும் வாயர் நெருப்பிமைக்குங் கண்ணர்குணனஞ்சர் கூற்றனைய கோணாய் மடுப்பக்கணமஞ்ஞை யஞ்சிக் கழுத்தொளிப்ப கண்டாய்மணமல்கு பூந்தார் மழைதழீஇய கையாய்.2780. மண்ணார மஞ்ச ளுரிஞ்சி மலர்சூட்டிக்கண்ணார் மறியறுத்துக் கையா லுதிரந்தூயுண்ணீரே தேவீ ருவந்தென்ப திவ்வுலகநண்ணார்க் கடந்தோய் நமனுலகி னான்மடங்கே.2781. மங்கை மனாவனைய மென்சூன் மடவுடும்புசெங்கண் வரிவரால் செந்நீ ரிளவாளைவெங்கருனை புல்லுதற்கு வேறுவே றாக்குறைப்பவங்காந் தழுகின்ற தார்கண்ணே நோக்குமே.2782. கடலரண மாகாது காடரண மாகாகுடலரண மாகாது குன்றரண மாகாவடுதுயர மூர்ந்தலைப்ப வாங்கரணங் காணாப்படுதுயரத் தாலே பதைத்தளிய வேமே.2783. முழுப்பதகர் தாடுரந்து முட்டாற்றிற் குத்தியுழப்பெருது பொன்றப் புடைத்துழுது விட்டாற்கழித்துண்ணுங் காக்கை கடிவோரு மின்றிப்புழுச்சொரியத் துன்பம் பொறுக்கலா பொன்றும்.2784. நிரம்பாத நீர்யாற் றிடுமணலு ளாழ்ந்துபெரும்பரா வாடவர்போற் பெய்பண்டந் தாங்கிமருங்கொற்றி மூக்கூன்றித் தாடவழ்ந்து வாங்கியுரங்கெட் டுறுப்பழுகிப் புல்லுண்ணா பொன்றும்.2785. போழ்மதிபோற் கூரிரும்பிற்பூநுதல்கள் போழ்ந்திடவுங்காழ்நுதியிற் குத்துண்டுங்கார்மழைபோ னின்றதிர்ந்தும்வீழ்பிடிகள் சிந்தித்தும்வெந்நோய்தம் முள்சுடவெந்தாழத்த கந்திளகயானை யலம்வருமே.2786. எரிவளைப்ப வெம்புகையுண் டின்னுயிர்விட் டேகுமரிவளைப்பக் குஞ்சரமு மாலிபோ னீராம்வரிவளைக்கும் வெண்மயிர்க்கு முத்திற்கு மாந்தர்திருவளைத்த மார்ப செகுத்திடுவர் தேங்கார்.2787. வேள்விவாய்க் கண்படுத்தும்வெவ்வினைசெ யாடவர்கைவாளின்வாய்க் கண்படுத்தும்வாரணத்தி னீருரிபோற்கோளிமிழ்ப்பு நீள்வலைவாய்க்கண்படுத்து மின்னணமேநாளுலப்பித் திட்டார்நமரலா தாரெல்லாம்.2788. கொல்வாருங் கூட்டுட் செறிப்பாரு மாடவர்களல்லாரு நாய்வேட்ட மாடாத மாத்திரையேயால்லாத பைங்கிளியும் பூவையு மாதியாவெல்லாங் கிளைபிரித்திட் டேமுறுநோய் செய்பவே.2789. மல்லன் மலையனைய மாதவரை வைதுரைக்கும்பல்லவரே யன்றிப் பகுட்ததுணாப் பாவிகளுமல்குல் விலைபகரு மாய்தொடிய ராதியார்வில்பொருதோண் மன்னா விலங்காய்ப் பிறப்பவே.2790. தம்மை நிழனோக்கித் தாங்கார் மகிழ்தூங்கிச்செம்மை மலர்மார்ப மட்டித் திளையார்தோள்கொம்மைக் குழகாடுங் கோலவரை மார்பர்வெம்மை மிகுதுன்பம் வேந்தே சிலகேளாய்.2791. ஈருட் டடிமூடி யீண்டுமலப் பண்டப்போர்வை புழுமொய்ப்பப் பொல்லாக் குடர்சூடிச்சார்தற் கரிதாகித் தானின் றறாவள்ளனீர்வாய்ச் சுரம்போந்தார் தம்மை நினையாரோ.2792. அஞ்சொன் மடவார்த மார்வக் களிபொங்கநெஞ்சத் தயிலேற்று நீள்வெங் கழுவீர்ந்துங்குஞ்சிக் களியானைக் கேட்டா லுழப்பட்டுந்துஞ்சிற் றுலகந்தோ துன்பக் கடலுள்ளே.2793. பண்ணார் களிறேபோற் பாயோங் குயர்நாவாய்கண்ணார் கடன்மண்டிக் காற்றிற் கவிழுங்கான்மண்ணார் மணிப்பூணோய் மக்க ளுறுந்துன்பநண்ணா நரகத்தி னான்கா மடியன்றே.2794. செந்தீப் புகையுண்டுஞ் சேற்று ணிலைநின்றுமந்தோ வெனமாற்றா லாற்றப் புடையுண்டுந்தந்தீ கெனாமுன்கை வீக்கத் தளர்வுற்றுநொந்தார் குடிச்செல்வர் நோன்மை நுகம்பூண்டார்.2795. கண்சூன் றிடப்பட்டுங் கால்கை களைந்தாங்கேயண்பல் லிறக்கையா லாற்றத் தகர்பெற்றுநுண்சாந் தரைப்பார்போ னோவ முழங்கையாற்புண்செய் திடப்பட்டும் புன்கணு ழப்பவே.2796. மாலைக் குடைமன்னர் வைய மகற்றுவான்காலைக் கதிதுன்பங் காவல் பெருந்துன்பஞ்சோலை மயிலன்னார் தோள்சேர் விலராயின்வேலைக் கடலேபோற் றுன்பம் விளையுமே.2797. ஊன்சே ருடம்பென்னு மோங்கன் மரச்சோலைதான்சேர் பிணியென்னுஞ் செந்தீக் கொடிதங்கிக்கான்சேர் கவினென்னுங் காமர் மலர்வாடத்தேன்சேர் மலர்மார்ப தீத்திட் டிறக்குமே.2798. கொட்டுப் பிடிபோலுங் கூனும் குறளாமைவிட்டு நடப்பனபோற் சிந்தும் விளைந்துசீயட்டு முயவுநோ யல்லாப் பிறநோயும்பட்டா ருறுதுன்பம் பன்னிச் சொலலாமோ.2799. வேட்டன பெறாமை துன்பம்விழைநரைப் பிரித றுன்பமோட்டெழி லிளமை நீங்கமூப்புவந் தடைத றுன்பமேட்டெழுத் தறித லின்றியெள்ளற்பா டுள்ளிட் டெல்லாஞ்சூட்டணிந் திலங்கும் வேலோய்துன்பமே மாந்தர்க் கென்றான்.2800. திருவிற்போற் குலாய தேந்தார்த்தேவர்தந் தன்மை செப்பிற்கருவத்துச் சென்று தோன்றார்கானிலந் தோய்தல் செல்லாருருவமே லெழுத லாகாவொளியுமிழ்ந் திலங்கு மேனிபருதியி னியன்ற தொக்கும்பன்மலர்க் கண்ணி வாடா.2801. அங்கையு மடியு நோக்கிற்றாமரை யலர்ந்த தொக்கும்பங்கய மனைய செங்கண்பகுவொளிப் பவழஞ் செவ்வாய்செங்கதிர் முறுவன் முத்தின்றெளிநகை திகழுஞ் செய்யாள்வெங்கடை மழைக்க ணோக்கிவெய்துறத் திரண்ட வன்றே.2802. தாணெடுங் குவளைக் கண்ணித்தளையவிழ் கோதை மாலைவாண்முடி வயிர வில்லும்வார்குழை சுடரு மார்பிற்பூணிடை நிலவு மேனிமின்னொடு பொலிந்த தேவரூணுடை யமிர்தம் வேட்டாலுண்பது மனத்தி னாலே.2803. சிதரரி யொழுகி யோடிச் செவியுறப் போழ்ந்து நீண்டமதரரி மழைக்க ணம்பா வாங்குவிற் புருவ மாகத்துதைமணிக் கலாப மின்னத் தொன்மலர்க் காம னம்புபுதைமலர் மார்பத் தெய்யப் பூவணை மயங்கி வீழ்வார்.2804. பூத்ததை கொம்பு போன்றுபொன்னிழை சுடரு மேனியேத்தருங் கொடிய னாரையிருநடு வாகப் புல்லிக்காய்த்தியிட் டுள்ளம் வெம்பிக்கடைந்திடு கின்ற காமநீத்துநீர்க் கடலை நீந்தும்புணையென விடுத்தல் செல்லார்.2805. பொங்கல்வெம் முலைக ளென்னும்போதொடு பொருது பூந்தாரங்கலந் தொடையன் மாலைகிழிந்தழ கழிய வைகிக்கொங்கலர் கோதை நல்லார்குரைகட லமிர்த மாகத்தங்கலர் பருகி யாரார்தாழ்ந்துகண் ணிமைத்தல் செல்லார்.2806. கருவியின் னிசைக ளார்ப்பக்கற்பக மரத்தி னீழற்பொருகய லனைய கண்ணும்புருவமு மரவஞ் செய்யவரவமே கலைக ளம்பொற்கிண்கிணி சிலம்பொ டார்ப்பத்திருவனா ராடல் கண்டுந்திருவொடு திளைத்து மானார்.2807. பனிமுகின் முளைத்த நான்கு பசுங்கதிர்த் திங்க ளொப்பக்குனிமருப் புழுது மேகங் குஞ்சரங் குனிந்து குத்தவினிதினி னிலங்கு பொற்றோ டேற்றுமின் குழைகள் பொங்கத்துனிவிலர் களிற்றோ டாடித் தொழுதகத் கழிப்பர் வேந்தே.2808. கடிகைவா ளார மின்னக்கற்பகக் காவு கண்டுந்தொடிகவி னறாத மென்றோட்டேவியர் சூழ வாமனடிகையிற் றொழுது பூத்தூயஞ்சலி செய்து வீடேமுடிகவிப் பிறவி வேண்டேமுனைவவென் றிரப்ப வன்றே.2809. மலங்குவித் தாவி வாட்டிவாய்நிறை யமிர்தம் பெய்தவிலங்குபொற் கலச மன்னவெரிமணி முலைகள் பாயக்கலந்தனர் சென்ற பின்னாட்கதிர்கழன் றிருந்த வெய்யோன்புலம்புபோற் புலம்பித் தேவர்பொற்புகுத் திருப்ப வன்றே.2810. எல்லைமூ வைந்து நாள்களுளவென விமைக்குங் கண்ணுநல்லெழின் மாலை வாடுநஞ்சுடை யமிர்துண் டாரிற்பல்பகற் றுய்த்த வின்பம்பழுதெனக் கவல்ப கண்டாய்பில்கித்தே னொழுகும் பைந்தார்ப்பெருநில வேந்தர் வேந்தே.2811. தேவரே தாமு மாகித்தேவராற் றொழிக்கப் பட்டுமேவல்செய் திறைஞ்சிக் கேட்டுமணிகமாப் பணிகள் செய்துநோவது பெரிதுந் துன்பநோயினுட் பிறத்த றுன்பம்யாவதுந் துன்ப மன்னாயாக்கைகொண் டவர்கட் கென்றான்.2812. கொங்கு விம்மு குளிர்பிண்டிக்குழவி ஞாயிற் றெழிலேய்ப்பச்சிங்கஞ் சுமந்த மணியணைமேற்றேவ ரேத்திச் சிறப்பயரவெங்கு முலக மிருணீங்கவிருந்த வெந்தை பெருமானார்தங்கு செந்தா மரையடியென்றலைய வேயென் றலையவே.2813. இலங்கு செம்பொ னெயின் மூன்றுமெரிபொன் முத்தக் குடைமூன்றும்வலங்கொண் டலர்தூஉ யடியேத்தும்வைய மூன்றும் படைமூன்றும்கலங்கா துயர்ந்த வதிசயங்கண்மூன்றுங் காமர் நூன்மூன்றுநலங்கொ டீம்பாற் குணக்கடலுமுடையார் நம்மை யுடையாரே.2814. மன்ற னாறு மணிமுடிமேன்மலிந்த சூளா மணிபோலும்வென்றோர் பெருமா னறவாழிவேந்தன் விரிபூந் தாமரைமேற்சென்ற திருவா ரடியேத்தித்தெளியும் பொருள்க ளோரைந்துமன்றி யாறு மொன்பானுமாகு மென்பா ரறவோரே.2815. பெரிய வின்பத் திந்திரனும்பெட்ட செய்கைச் சிறுகுரங்குமுரிய செய்கை வினைப்பயத்தையுண்ணு மெனவே யுணர்ந்தவனையரிய ரென்ன மகிழாதுமெளிய ரென்ன விகழாதுமிருசார் வினையுந் தெளிந்தாரேயிறைவ னூலுந் தெளிந்தாரே.2816. உறுவர்ப் பேண லுவர்ப்பின்மையுலையா வின்பந் தலைநிற்றலறிவர் சிறப்பிற் கெதிர்விரும்பலழிந்தோர் நிறுத்த லறம்பகர்தல்சிறியா ரினத்துச் சேர்வின்மைசினங்கை விடுதல் செருக்கவித்தலிறைவ னறத்து ளார்க்கெல்லாமினிய ராத லிதுதெளிவே2817. செறியச் சொன்ன பொருடெளிந்தார்சேரார் விலங்கிற் பெண்ணாகார்குறுகார் நரக மோரேழுங்கீழ்முத் தேவர் குழாந்தீண்டாரறியா துரைத்தே னதுநிற்கவாறே நரக மாகாதபொறியார் போக பூமியுள்விலங்குமாவ ரொரு சாரார்.2818. ஏத்தருந் திருமணி யிலங்கு நீர்மையகோத்தன போற்குண நூற்றுக் கோடியுங்காத்தன காவல பதினெண் ணாயிரம்பாத்தன பண்ணவர் சீல மென்பவே.2819. மொய்யமர் ஞாட்பினுண் முரண்கொண் மன்னவர்மெய்புகு பொன்னணி கவச மொப்பனமையலைம் பொறிமதம் வாட்டி வைகலுஞ்செய்வினை நுணுக்குவ சீல மென்பவே.2820. மணித்துண ரனையதங் குஞ்சி வண்கையாற்பணித்தனர் பறித்தலிற் பரவை மாநிலந்துணித்தொரு துணிசுமந் தனைய திண்பொறையணித்தகு முடியினா யாதி யாகவே.2821. பெரியவாட் டடங்கட் செவ்வாய்ப்பிறர்மனை பிழைக்கு மாந்தர்மாபுஇயவாய்ப் புறஞ்சொற் கூர்முண்மத்திகைப் புடையு மன்றியொருவர்வா யுமிழப் பட்டதம்பல மொருவர் வாய்க்கொண்டரியவை செய்ப வையத்தாண்பிறந் தார்க ளன்றே.2822. ஒழுக்கமே யன்றித் தங்களுள்ளுணர் வழிக்கு மட்டும்புழுப்பயி றேனு மன்றிப்பிறவற்றின் புண்ணு மாந்திவிழுப்பய னிழக்கு மாந்தர்வெறுவிலங் கென்று மிக்கார்பழித்தன வொழித்தல் சீலம்பார்மிசை யவர்கட் கென்றான்.2823. நன்னிலத் திட்ட வித்தினயம்வர விளைந்து செல்வம்பின்னிலம் பெருக வீனும்பெறலருங் கொடையும் பேசிற்புன்னிலத் திட்ட வித்திற்புற்கென விளைந்து போகமின்னெனத் துறக்குந் தானத்தியற்கையும் விரித்து மன்றே.2824. ஐவகைப் பொறியும் வாட்டியாமையி னடங்கி யைந்தின்மெய்வகை தெரியுஞ் சிந்தைவிளக்குநின் றெரிய விட்டுப்பொய்கொலை களவு காமமவாவிருள் புகாது போற்றிச்செய்தவ நுனித்த சீலக்கனைகதிர்த் திங்க ளொப்பார்.2825. வாய்ச்சிவா யுறுத்தி மாந்தர்மயிர்தொறுஞ் செத்தி னாலும்பூச்சுறு சாந்த மேந்திப்புகழ்ந்தடி பணிந்த போதுந்தூக்கியிவ் விரண்டு நோக்கித்தொல்வினை யென்று தேறிநாச்செறு பராவு கொள்ளார்நமர்பிற ரென்று முள்ளார்.2826. பாற்கதிர்த் திங்கட் கொட்பிற்பருமித்த களிறு போலநூற்கதி கொண்டு கண்ணானுகத்தள வெல்லை நோக்கிமேற்கதிக் கேணி யாயவிழுத்தவர் மனையில் வந்தாற்காற்கொசி கொம்பு போலக்கைதொழு திறைஞ்சி மாதோ.2827. தொடிக்கையாற் றொழுது வாழ்த்தித்தூமணி நிலத்து ளேற்றிப்பொடிப்புனை துகிலி னீக்கிப்புகழ்ந்தடி கழீஇய பின்றையடுத்தசாந் தகிலி னாவியாய்மல ரருச்சித் தானார்கொடுப்பர்நா லமிர்த மூன்றிற்குணம்புரிந் தடங்கி னார்க்கே.2828. ஒன்பது வகையி னோதிற் றுத்தமர்க் காகு மார்ந்தவின்பத மருளி யீத லிடையென மொழிப யார்க்குந்துன்புற விலங்கு கொன்று சொரிந்துசோ றூட்டினார்க்குநன்பொருள் வழங்கி னார்க்கும் பயனமக் கறிய லாகா.2829. கூற்றுநா வலறுவ தனைய கூரிலையேற்றநீர்த் துளும்புவா ளிறைவ வீங்கினிப்போற்றினை கேண்மதி பொருவில் புண்ணியர்க்காற்றிய கொடைப்பய னறியக் கூறுவாம்.2830. கடிப்புவா ரங்குலி கொளீஇய கைதுரந்தடுத்துவார் மயிர்த்துதி யலற வூதலிற்பொடித்தபொற் றாமரை யனைய பொங்கழலிடைக்கிடந் தெவ்வள விரும்பு காய்ந்ததே.2831. காய்ந்தவவ் வளவினாற் கௌவு நீரதொத்தாய்ந்தறி கொடையின தளவிற் புண்ணியந்தோய்ந்துயி ருடம்பிவ ணொழியத் தொக்கநாள்வீந்துபோய் வயிற்றகம் விதியி னெய்துமே.2832. திங்கணா ளொன்பதும் வயிற்றிற் சேர்ந்தபின்வங்கவான் றுகில்பொதி மணிசெய் பாவைபோலங்கவ ரிரட்டைக ளாகித் தோன்றலுஞ்சிங்கினா ரிருமுது குரவ ரென்பவே.2833. இற்றவர் தேவராய்ப் பிறப்ப வீண்டுடல்பற்றிய விசும்பிடைப் பரவு மாமுகிறெற்றென வீந்தெனச் சிதைந்து போகுமான்மற்றவம் மக்கடம் வண்ணஞ் செப்புவாம்.2834. பிறந்தவக் குழவிகள் பிறர்கள் யாவரும்புறந்தர லின்றியே வளர்ந்து செல்லுநாளறைந்தன ரொன்றிலா வைம்ப தாயிடைநிறைந்தனர் கலைகுண முறுப்பு நீரவே.2835. சோலைமீ னரும்பித் திங்கட்சுடரொடு பூத்த தேபோன்மாலையுங் கலனு மீன்றுவடகமுந் துகிலு நான்றுகாலையு மிரவு மில்லாக்கற்பக மரத்தி னீழற்பாலையாழ் மழலை வேறாய்ப்பன்மணிக் கொம்பி னின்றாள்.2836. இலங்குபொற் குவடு சாந்தமெழுதிய தனைய தோண்மேனலங்கிளர் குழைக ணான்றுசாந்தின்வாய் நக்கி மின்னக்கலங்கலந் தகன்ற மார்பிற்கற்பக மாலை தாழவிலங்கர சனைய காளைவேனில்வேந் தென்னச் சேர்ந்தான்2837. குண்டலங் குலவி மின்னப்பொன்னரி மாலை தாழத்தெண்கட லமிர்திற் செய்தபாவையிற் பாவை நிற்பவிண்டலர் மாலை மார்பன்விதியினாற் சென்று மாதோகண்டனன் கலந்த வுள்ளங்காதலி னொருவ ரானார்.2838. கொதிநுனைக் காம னம்புகொப்புளித் துமிழ்ந்து காமமதுநிறை பெய்து விம்முமணிக்குட மிரண்டு போலநுதிமுக முத்தஞ் சூடிநோக்குந ராவி வாட்டவிதிமுலை வெய்ய வாகித்தாரொடு மிடைந்த வன்றே.2839. இமைத்தநுங் கண்க ளென்னையிகழ்ந்தனி ரென்று சீறவமைத்துநின் னழகு கோலமாரவுண் டறுக்க லாற்றாதிமைத்தன வஞ்சி யென்னவிளையவள் சிலம்பிற் குஞ்சிநமைத்தபூந் தாமந் தோயநகைமுக விருந்து பெற்றான்.2840. இன்னகி லாவி விம்முமெழுநிலை மாடஞ் சேர்ந்தும்பொன்மலர்க் காவு புக்கும்புரிமணி வீணை யோர்த்துநன்மலர் நான வாவிநீரணி நயந்துஞ் செல்வத்தொன்னலம் பருகிக் காமத்தொங்கலாற் பிணிக்கப் பட்டார்.2841. பூமுற்றுந் தடங்க ணாளும்பொன்னெடுங் குன்ற னானுங்காமுற்று நினைந்த வெல்லாங்கற்பக மரங்க ளேந்தத்தாமுற்றுக் கழிப்பர் தானமிடையது செய்த நீராரேமுற்றுக் கரும பூமியிருநிதிக் கிழமை வேந்தே.2842. அடங்கலர்க் கீந்த தானப்பயத்தினா லலறு முந்நீர்த்தடங்கட னடுவுட் டீவுபலவுள வவற்றுட் டோன்றியுடம்பொடு முகங்க ளொவ்வாரூழ்கனி மாந்தி வாழ்வர்மடங்கலஞ் சீற்றத் துப்பின்மானவேன் மன்ன ரேறே.2843. செப்பிய சீல மென்னுந்திருமணி மாலை சூழ்ந்தார்கப்பத்து ளமர ராவர்காட்சியி னமிர்த முண்டாரொப்பநீ ருலக மெல்லாமொருகுடை நிழற்றி யின்பங்கைப்படுத் தலங்க லாழிக்காவல ராவர் கோவே.2844. வீட்டின தியற்கைநாம் விளம்பிற் றீங்கதிர்ப்பாட்டரும் பனிமதி பழித்த முக்குடைமோட்டிருங் கொழுமலர்ப் பிண்டி மூர்த்திநூலீட்டிய பொருளகத் தியன்ற தென்பவே.2845. உள்பொரு ளிதுவென வுணர்தன் ஞானமாந்தெள்ளிதி னப்பொரு டெளிதல் காட்சியாம்விள்ளற விருமையும் விளங்கத் தன்னுளேயொள்ளிதிற் றரித்தலை யொழுக்க மென்பவே.2846. கூடிய மும்மையுஞ் சுடர்ந்த கொந்தழனீடிய வினைமர நிரைத்துச் சுட்டிடவீடெனப் படும்வினை விடுதல் பெற்ற தங்காடெழிற் றோளினா யநந்த நான்மையே.2847. கடையிலா வறிவொடு காட்சி வீரியங்கிடையிலா வின்பமுங் கிளந்த வல்லவுமுடையதங் குணங்களோ டோங்கி விண்டொழவடைதலான் மேலுல கறியப் பட்டதே.2848. மாதவ னெனப்பெயர் வரையி னவ்வரையேதமி லெயிறணி பவள வாய்த்தொடுத்தாதியி லறவுரை யருவி வீழ்ந்தெனமாதுயர் மலங்கெட மன்ன னாடினான்.2849. எல்லையி லறவுரை யினிய கேட்டபின்றொல்லையெம் பிறவியுந் தொகுத்த பாவமும்வல்லையே பணிமின மடிகளென்றனன்மல்லைவென் றகன்றுபொன் மலர்ந்த மார்பினான்.2850. கதிர்விடு திருமணி யங்கைக் கொண்டதொத்தெதிர்வது மிறந்தது மெய்தி நின்றதுமதிர்வறு தவவிளக் கெறிப்பக் கண்டவன்பதரறு திருமொழி பணிக்கு மென்பவே.2851. முழுநீர் வளைமேய் தலின்முத் தொழுகிப்பொழிநீர் நிலவின் னிருள்போழ்ந் தரிசிக்கழுநீ ரொழுகக் கழுநீர் மலருந்தழுநீ ரதுதா தகியென் றுளதே.2852. கயல்பாய்ந் துகளக் கடியன் னம்வெரீஇவியனீள் சுடர்வெண் மதிசேர் வதுபோலயலே யலர்தா மரைசேர்ந் துறையும்வயல் சூழ்ந் தனவூர் வளமார்ந் தனவே.2853. அவணத் தவர்கூந் தலகிற் புகையைச்சிவணிச் சிறுகால் கமுகம் பொழில்சேர்ந்துவணுய்த் திடமஞ் செனநின் றுலவும்பவணத் தொருபாங் கினதா லளிதோ.2854. மதியுஞ் சுடரும் வழிகா ணலுறாப்பொதியும் மகிலின் புகையுங் கொடியுநிதியின் கிழவன் னினிதா வுறையும்பதிபொன் னகரின் படிகொண் டதுவே.2855. ஏம மாகிய துப்புர வெய்தியபூமி மாதில கம்மெனும் பொன்கிளர்நாம நன்னகர் வீதிக டாமெலாங்காம வல்லி கிடந்தன போன்றவே.2856. பைங்கழன் மன்னர் மன்னன்பவணமா தேவ னென்பான்சங்கினுண் முத்த மொப்பாள்சயமதி பயந்த நம்பியைங்கணைக் காம னன்னானசோதர னரச சீயந்தங்கிய கேள்வி யாற்குத்தையலார்ச் சேர்த்தி னாரே.2857. இளமுலை பொருது தேந்தாரெழில்குழைந் தழிய வைகிக்கிளைநரம் பிசையுங் கூத்துங்கிளர்ந்தவை கனற்ற நாளும்வளைமயங் குருவ மென்றோள்வாய்நலம் பருகி மைந்தன்விளைமதுத் தேறன் மாந்திவெற்றிப்போ ரநங்க னானான்.2858. இலங்கரி பரந்த வாட்கணிளையவர் புலவி நீங்கச்சிலம்பெனும் வண்டு பாடச்சீறடிப் போது புல்லியலங்கல்வாய்ச் சென்னி சேர்த்தியரிமதர் மழைக்கண் பில்கநலங்கவர்ந் துண்டு நண்ணார்நாமுறக் கழிக்கு மாதோ.2859. மங்கையர் தம்மொடு மடங்கன் மொய்ம்பினான்பங்கயப் பனித்தடஞ் சேரப் பார்ப்பனஞ்செங்கயற் பேரின மிரியச் செவ்வனேபொங்கிமேற் பறந்துவிண் புதைந்த தென்பவே.2860. வேய்ந்தவெண் டாமரைக் கோதைபோலவிசும்பிற் பறக்கின்ற வெள்ளையன்னமாய்ந்த முகிலாடைத் திங்கட்கண்ணியாகாய மென்னு மரிவைசாயற்றோய்ந்ததன் காதலன் பற்றவற்றுச்சொரிகின்ற மேகலைபோல் வீழ்ந்தவாளைபாய்ந்து துகைப்பக் கிழிந்தகூழைப்பனித்தா மரைசூழ் பகற்கோயிலே.2861. விரும்புபொற் றட்டிடை வெள்ளிக் கிண்ணமார்ந்திருந்தன போன்றிள வன்னப் பார்ப்பினம்பொருந்துபொற் றாமரை யொடுங்கிப் புக்கொளித்திருந்தகண் டானிளங் கோக்க ணம்பியே.2862. உரிமையுட் பட்டிருந் தொளிக்கின் றார்களைப்பெருமநீ கொணர்கெனப் பேசு காஞ்சுகியொருமகற் கீந்தனன் கோயில் புக்கனனெரிமுயங் கிலங்குவேற் காளை யென்பவே.2863. வடமலைப் பொன்னனார் மகிழ்ந்து தாமரைத்தடமுறை வீர்க்கிவை தடங்க ளல்லவேவடமுலை யெனநடாய் வருடிப் பாலமுதுடனுறீஇ யோம்பினார் தேம்பெய் கோதையார்.2864. கண்டா னொருநாட் கதிர்மாமுடி மன்னர் மன்னன்றண்டா மரைசூழ் தடத்திற்பிரித் தார்கள் யாரேயொண்டா ரிளங்கோவென் றுழையவர் கூற வல்லேகொண்டீங்கு வம்மின் கொலைவேலவன் றன்னை யென்றான்.2865. படுகண் முழவும் பசும்பொன்மணி யாழு மேங்கவிடுகுந் நுசுப்பி னவராட விருந்த நம்பியடிகட் கடிக ளருளிற்றென் றிறைஞ்ச வல்லேகடிவிம்மு தாரான் கழல்கையிற் றொழுது சேர்ந்தான்.2866. அணிசே ரிடக்கை விரலால் வலத்தோண்மணிசேர் வளைவாய் வதின்வைத் துவலத்தணிமோ திரஞ்சூழ் விரல்வாய் புதையாப்பணியா முடியாற் பணிந்தா னிலையோன்.2867. கிளைப்பிரி வருஞ்சிறை யிரண்டுங் கேட்டியேல்விளைக்கிய வித்தனா யிருமற் றீங்கெனத்திளைக்குமா மணிக்குழை சுடரச் செப்பினான்வளைக்கையார் கவரிகொண் டெறிய மன்னனே.2868. அறம்பெரிய கூறின் னலங்கலணி வேலோய்மறம்புரிகொ ணெஞ்சம்வழி யாப்புகுதந் தீண்டிச்செறும்பெரிய தீவினைகள் சென்றுகடி தோடியுறும்பெரிய துன்ப முயிர்க் கொலையும் வேண்டா2869. மெய்யுரை விளங்குமணி மேலுலக கோபுரங்களையமிலை நின்றபுகழ் வையகத்து மன்னுமையல்விளை மாநரக கோபுரங்கள் கண்டீர்பொய்யுரையும் வேண்டா புறத்திடுமி னென்றான்.2870. முளரிமுக நாகமுளை யெயிறுழுது கீறவளவிறுயர் செய்வரிவண் மன்னரத னாலும்விளைவரிய மாதுயரம் வீழ்கதியு ளுய்க்குங்களவுகட னாகக் கடிந்திடுதல் சூதே.2871. மடத்தகைய நல்லார் மனங்கரிய மற்றார்பிடர்த்தலையொள் வாள்போற் பிறர்மனைகள் சேரினெடுப்பரிய துன்பத் திடைப்படுவ ரின்னாநடுக்குடைய காமம் விடுத்திடுத னன்றே.2872. தெருளிற்பொருள் வானுலகமேறுதற்குச் செம்பொனிருளில்படு கால்புகழ்வித்தில்லையெனி னெல்லாவருளுநக வையநகவைம்பொறியு நையப்பொருளுநக வீட்டும்பொருள்யாதும்பொரு ளன்றே.2873. பொய்யொடு மிடைந்தபொரு ளாசையுரு ளாயமைபடும்வி னைத்துகள் வழக்குநெறி மாயஞ்செய்தபொருள் பெய்தகலன் செம்மைசுடு செந்தீக்கைதவ நுனித்தகவ றாடலொழி கென்றான்.2874. காமமுடை யார்கறுவொ டார்வமுடை யாருந்தாமமொடு சாந்துபுனை வார்பசியி னுண்பாரேமமுடை யார்களிவ ரல்லரிவை யில்லாவாமனடி யல்லபிற வந்தியன்மி னென்றான்.2875. பூவைகிளி தோகைபுண ரன்னமொடு பன்மாயாவையவை தங்கிளையி னீங்கியழ வாங்கிக்காவல்செய்து வைத்தவர்க டங்கிளையி னீங்கிப்போவர்புகழ் நம்பியிது பொற்பிலது கண்டாய்.2876. அல்லித்தா ளற்ற போதுமறாதநூ லதனைப் போலத்தொல்லைத்தம் முடம்பு நீங்கத்தீவினை தொடர்ந்து நீங்காப்புல்லிக்கொண் டுயிரைச் சூழ்ந்துபுக்குழிப் புக்குப் பின்னின்றெல்லையி றுன்ப வெந்தீச்சுட்டெரித் திடுங்க ளன்றே.2877. அறவிய மனத்த ராகி யாருயிர்க் கருளைச் செய்யிற்பறவையு நிழலும் போலப் பழவினை யுயிரோ டாடிமறவியொன் றானு மின்றி மனத்ததே சுரக்கும் பாலகறவையிற் கறக்குந் தம்மாற் காமுறப் பட்ட வெல்லாம்.2878. நெடுமணி யூபத் திட்டதவழ்நடை யாமை நீணீர்த்தொடுமணிக் குவளைப் பட்டந்துணையொடு நினைப்ப தேபோற்கடுமணிக் கயற்க ணல்லார்காமமும் பொருளுஞ் சிந்தித்தடுமணி யாவி நீப்பாரறிவினாற் சிறிய நீரார்.2879. வீறழி வினைசெய் காலன்வைரவாள் வலையிற் பட்டாற்சாறழி குவளை மாலையவரையுந் தனமு நீக்கியாறிழி வரையிற் றோன்றுமறநனி நினைப்பர் செம்பொனேறெழி னெறியி னேறியிருவிசும் பாளு நீரார்.2880. துன்னிமற் றறத்தைக் கேட்டேதுகினெருப் புற்ற தேபொன்மின்னுத்தார் மார்பன் மெய்வெந்தாலியி னுருகிப் பெண்பாலன்னப்பார்ப் பன்று கொண்டதடத்திடை விடுவித் திட்டான்பின்னைத்தன் கிளைகள் கூட்டம்பெருந்தகை வித்தி னானே.2881. மெய்ப்படு முதுபுண் டீர்ப்பான்மேவிய முயற்சி போலவொப்புடைக் காமந் தன்னையுவர்ப்பினோ டொழித்துப் பாவமிப்படித் திதுவென் றஞ்சிப்பிறவிநோய் வெருவி னாலேமைப்படு மழைக்க ணல்லார்வாய்க்கொண்ட வமுத மொப்பான்.2882. ஆளியாற் பாயப் பட்டவடுகளி யானை போலவாளிவிற் றடக்கை மைந்தன்வாய்விட்டுப் புலம்பிக் காமநாளினு நஞ்சு துய்த்தேனச்சறை யாக நன்பொற்றோளியர்த் துறந்து தூய்தாத்தவஞ்செய்வ லடிக ளென்றான்.2883. சிறுவன்வாய் மொழியைக் கேட்டேதேர்மன்னன் றானுஞ் சொன்னானுறுகளிற் றுழவ மற்றுன்னொளிமுடித் தாய மெய்தியறைகடல் வேலி காத்துன்னலங்கல்வேற் றாய மெல்லாம்பெறுதகு புதல்வற் கீந்துபின்னைநீ துறத்தி யென்றான்.2884. கொலைச்சிறை யுய்ந்து போகுமொருவனைக் குறுக வோடியலைத்தனர் கொண்டு பற்றியருஞ்சிறை யழுத்து கின்றார்தொலைப்பருஞ் சுற்றத் தாரோபகைவரோ வடிக ளென்னவிலைப்பெரு மணியை முந்நீர்நடுக்கடல் வீழ்த்த தொத்தான்.2885. காதல மல்ல மேனாட் கழிந்தநம் பிறவி தம்முளேதிலம் யாங்க ளெல்லா மினிக்கொளு முடம்பினானுமாதலாற் சுற்ற மில்லை யதுபட்ட வாறென் றம்பூந்தாதலர் மார்ப னற்புத் தளையறப் பரிந்திட் டானே.2886. நற்பொறி குயிற்றி வல்லான்செய்ததோர் நன்பொற் பாவைபொற்பொறி கழல வெல்லாப்பொறிகளுங் கழல்வ தேபோற்சொற்பொறி சோர வெல்லாப்பொறிகளுஞ் சோர்ந்து நம்பனிற்பொறி யின்ப நீக்கியிராயிரர் சூழச் சென்றான்.2887. தணக்கிறப் பறித்த போதுந்தானளை விடுத்தல் செல்லாநிணப்புடை யுடும்ப னாரையாதினா னீக்க லாகுமணப்புடை மாலை மார்பனொருசொலே யேது வாகக்கணைக்கவி னழித்த கண்ணார்த்துறந்துபோய்க் கடவு ளானான்.2888. தூமமார்ந் தணங்கு நாறுஞ் சுரும்புசூழ் தாரி னானுந்தாமமா ரொலிய லைம்பாற் சயமதித் திருவு மார்ந்தகாமமா சுண்ட காதற் கதிர்வளைத் தோளி னாருநாமநாற் கதியு மஞ்சி நற்றவத் துச்சி கொண்டார்.2889. ஆசார நாணத் தவஞ்செய் தலர்க் கற்ப கத்தார்ச்சாசார னென்னுந் தகைசாலொளித் தேவர் கோவாய்மாசார மாய மணிவானுல காண்டு வந்தாய்தூசார்ந்த வல்குற் றுளும்புந்நலந் தாரொ டென்றான்.2890. மின்னார் சிலம்பிற் சிலம்புங்குர லன்ன மேனாண்மன்னா பிரித்தாய் பிரிந்தாய்சிறை வைத்த தனாற்பொன்னார மார்ப சிறைப்பட்டனை போலு மென்றானின்னாப் பிறவிப் பிணிக்கின்மருந் தாய சொல்லான்.2891. மஞ்சிவர் மணிவரை யனைய மாதவன்வஞ்சமி லறவுரை பொதிந்த வாய்மொழியஞ்சின னிருந்துழி யம்பு வீழ்ந்தெனநஞ்சுமிழ் வேலினா னடுங்க வீழ்ந்ததே.2892. வாரணி மணித்துடி மருட்டு நுண்ணிடைக்காரணி மயிலனார் சூழக் காவலனேரணி மணிமுடி யிறைஞ்சி யேத்தினான்சீரணி மாதவர் செழும்பொற் பாதமே.2893. நலத்திரு மடமக ணயந்த தாமரைநிலத்திருந் திருசுடர் நிமிர்ந்து செல்வபோலுலப்பருந் தவத்தினா லோங்கு சாரணர்செலத்திரு விசும்பொளி சிறந்த தென்பவே.2894. சாரணர் போயபின் சாந்த மேந்தியவாரணி வனமுலை வஞ்சிக் கொம்பனார்போரணி புலவுவேற் கண்கள் பூத்தனநீரணி குவளைநீர் நிறைந்த போன்றவே.2895. பொன்வரை நிலாக்கதிர் பொழிந்து போர்த்தபோற்றென்வரைச் சந்தனந் திளைக்கு மார்பினான்மின்னிவர் நுசுப்பினார் மெலிய மெல்லவேயின்னுரை கொடான்கொடிக் கோயி லெய்தினான்.2896. அஞ்சுரை பொழிந்தபா லன்ன மென்மயிர்ப்பஞ்சிமெல் லணையின்மேற் பரவை யல்குலார்மஞ்சிவர் மதிமுக மழுங்க வைகினார்நஞ்சுயிர்த் தணிநலங் கரிந்து நையவே.2897. வெள்ளெயிற் றரவு மேய்ந்தமிச்சிலின் மெலிந்து மேகப்புள்வயிற் பிறந்த புட்போலொன்றலா துரைத்த றேற்றார்கள்வயிற் றலர்ந்த கோதைக்கலாபவில் லுமிழு மல்குலொள்ளெயிற் றவர்கள் பொன்பூத்தொளிமணி யுருவ நீத்தார்.2898. கிளிச்சொலி னினிய சொல்லார்கிண்கிணி சிலம்பொ டேங்கக்குளித்துநீ ரிரண்டு கோலக்கொழுங்கயல் பிறழ்ப வேபோற்களித்துநீர் சுமந்து வாட்கண்கலாஅய்ப்பிறழ்ந் தலமந் தாடவளித்ததா ரலங்க லாழியவன்றுற வுரைத்து மன்றே.2899. புனைமருப் பழுந்தக் குத்திப்புலியொடு பொருது வென்றகனைகுர லுருமுச் சீற்றக்கதழ்விடை யுரிவை போர்த்ததுனைகுரன் முரசத் தானைத்தோன்றலைத் தம்மி னென்றானனைமல ரலங்கற் கண்ணிநந்தனுந் தொழுது சேர்ந்தான்.2900. கொடியணி யலங்கன் மார்பிற் குங்குமக் குன்ற மன்னானடிபணிந் தருளு வாழி யரசரு ளரச வென்னப்படுசின வெகுளி நாகப் பைத்தலை பனித்து மாழ்கவிடியுமிழ் முரச நாண வின்னண மியம்பி னானே.2901. ஊனுடைக் கோட்டு நாகான்சுரிமுக வேற்றை யூர்ந்துதேனுடைக் குவளைச் செங்கேழ்நாகிளந் தேரை புல்லிக்கானுடைக் கழனிச் செந்நெற்கதிரணைத் துஞ்சு நாடுவேன்மிடை தானைத் தாயம்வீற்றிருந் தாண்மோ வென்றான்.2902. கரும்பலாற் காடொன் றில்லாக்கழனிசூழ் பழன நாடுஞ்சுரும்புலாங் கண்ணி விண்ணோர்துறக்கமும் வீடும் வேண்டேனரும்புலா யலர்ந்த வம்மென்றாமரை யனைய பாதம்விரும்பியான் வழிபட் டன்றோவாழ்வதென் வாழ்க்கை யென்றான்.2903. குன்றென மருண்டு கோலமணிவண்டுங் குழாங்கொ டேனுஞ்சென்றுமொய்த் திமிரும் யானைச்சீவகற் கிளைய நம்பிமன்றல்வீற் றிருந்து மின்னுமணிக்குவ டனைய தோளானொன்றுமற் றரசு வேண்டானுவப்பதே வேண்டி னானே.2904. பொலிவுடைத் தாகு மேனும்பொள்ளலிவ் வுடம்பென் றெண்ணீவலியுடை மருப்பி னல்லால்வாரணந் தடக்கை வையாதொலியுடை யுருமுப் போன்றுநிலப்படா தூன்றின் வைவேற்கலிகடிந் துலகங் காக்குங்காளையைக் கொணர்மி னென்றான்.2905. கழுமணி யார மார்பிற்காவலன் மக்கள் காய்பொனெழுவளர்ந் தனைய திண்டோளிளையவர் தம்முண் மூத்ததழுமலர்க் கொம்பு போலுந்தத்தைநாட் பயந்த நம்பிவிழுமணிப் பூணி னானைவீற்றிரீஇ விதியிற் சொன்னான்.2906. பால்வளை பரந்து மேயும்படுகடல் வளாக மெல்லாங்கோல்வளை யாமற் காத்துன்குடைநிழற் றுஞ்ச நோக்கிநூல்விளைந் தனைய நுண்சொற்புலவரோ டறத்தை யோம்பின்மேல்விளை யாத வின்பம்வேந்தமற் றில்லை கண்டாய்.2907. வாய்ப்படுங் கேடு மின்றாம்வரிசையி னரிந்து நாளுங்காய்த்தநெற் கவளந் தீற்றிற்களிறுதான் கழனி மேயின்வாய்ப்பட லின்றிப் பொன்றும்வல்லனாய் மன்னன் கொள்ளினீத்தநீர் ஞால மெல்லாநிதிநின்று சுரக்கு மன்றே.2908. நெல்லுயிர் மாந்தர்க் கெல்லாநீருயி ரிரண்டுஞ் செப்பிற்புல்லுயிர் புகைந்து பொங்குமுழங்கழ விலங்கு வாட்கைமல்லலங் களிற்று மாலைவெண்குடை மன்னர் கண்டாய்நல்லுயிர் ஞாலந் தன்னுணாமவே னம்பி யென்றான்.2909. ஆர்வலஞ் சூழ்ந்த வாழி யலைமணித் தேரை வல்லானேர்நிலத் தூருமாயி னீடுபல் காலஞ் செல்லுமூர்நில மறித றேற்றா தூருமேன் முறிந்து வீழுந்தார்நில மார்ப வேந்தர் தன்மையு மன்ன தாமே.2910. காய்ந்தெறி கடுங்கற் றன்னைக்கவுட்கொண்ட களிறு போலவாய்ந்தறி வுடைய ராகியருளொடு வெகுளி மாற்றிவேந்தர்தாம் விழைப வெல்லாம்வெளிப்படார் மறைத்தல் கண்டாய்நாந்தக வுழவ ரேறேநன்பொரு ளாவ தென்றான்.2911. குடிபழி யாமை யோம்பிற்கொற்றவேன் மன்னர் மற்றுனடிவழிப் படுவர் கண்டாயரும்புகழ் கெடுத லஞ்சிநொடியலோ ரெழுத்தும் பொய்யைநுண்கலை நீத்த நீந்திக்கொடியெடுத் தவர்க்கு நல்குகொழித்துணர் குமர வென்றான்.2912. சேனடந் தாங்கு மோடிச்சென்றுலாய்ப் பிறழும் வாட்கண்மான்மட நோக்கின் மாதர்மாலைநாட் பயந்த மைந்தன்கானடந் தனைய மான்றேர்க்காளையைக் காவன் மன்னன்றானுட னணிந்து தன்போலிளவர சாக்கி னானே.2913. கூரெயி றணிந்த கொவ்வைக்கொழுங்கனிக் கோலச் செவ்வாயேரணி மயிலஞ் சாயலிலக்கணை யீன்ற சிங்கஞ்சீருடைச் செம்பொற் கண்ணிச்சிறுவனைச் செம்பொன் மாரிபேரறைந் துலக முண்ணப்பெருநம்பி யாக வென்றான்.2914. தன்கழ றொழாத மன்னர்தாஞ்சுமந் தேந்தி நின்றபொன்றிக ழுருவிற் றம்பிபுதல்வனைத் தந்து போற்றிமின்றிகழ் முடியுஞ் சூட்டிவீற்றிரீஇ வேந்து செய்தான்குன்றினங் குழீஇய போலுங்குஞ்சரக் குழாத்தி னானே.2915. நிலஞ்செதி ளெடுக்கு மான்றேர்நித்திலம் விளைந்து முற்றிநலஞ்செய்த வைரக் கோட்டநாறுமும் மதத்த நாகங்குலஞ்செய்த குமரர்க் கெல்லாம்கொடுத்தன னிதியு நாடுமுலஞ்செய்த வைரக் குன்றமோரிரண்ட டனைய தோளான்.2916. நூற்கிடங் கொடுத்த கேள்விநுண்செவி மண்கொண் ஞாட்பில்வேற்கிடங் கொடுத்த மார்பின்வில்வலான் றோழர் மக்கணாற்கடல் வளாகங் காக்குநம்பிதன் கண்க ளாகப்பாற்கடற் கேள்வி யாரைப்பழிப்பற நாட்டி னானே.2917. காவல ரகல மென்னுங் கழனியு ளுழுது காமர்மாவலம் விளைத்த கோட்டு மழகளிற் றரச னன்னான்பூவலர் கொடிய னாரை விடுக்கிய கோயில் புக்கான்றூவல ரொலிய லார்தம் வலக்கண்க டுடித்த வன்றே.2918. செம்பொனாற் செறிய வேய்ந்துதிருமணி முகடு கொண்டவெம்புநீள் சுடருஞ் சென்னிவிலங்கிய மாட மெய்தியம்பொனாற் றெளிந்த பாவையனையவர்த் தம்மி னென்றான்பைம்பொனால் வளர்க்கப் பட்டபனைதிரண் டனைய தோளான்.2919. தின்பளித மாலைத்திர டாமந் திகழ் தீம்பூநன்கொளிசெய் தாமநறும் பூநவின்ற தாமம்பொன்றெளித்த தாமம்புரி முத்தமிளிர் தாமமின்றெளித்த மின்னுமணி வீழ்ந்ததிர டாமம்.2920. ஈன்றமயில் போனெடிய தாமத் திடையெங்குமான்றுமணம் விம்முபுகை மல்கிநுரை யேபோற்றோன்றுமணிக் காலமளித் தூவணையின் மேலார்மூன்றுலகம் விற்குமுலை முற்றிழையி னாரே.2921. இன்னதரு ளென்றிளைய ரேத்தஞிமி றார்ப்பமின்னினிடை நோவமிளிர் மேகலைகண் மின்னப்பொன்னரிய கிண்கிணியும் பூஞ்சிலம்பு மேங்கமன்னனடி சேர்ந்திறைஞ்சி வாழியென நின்றார்.2922. கலவமயில் கால்குவித்த போலுங்கம ழைம்பானிலவுமணி மேகலைநி லாவுமிழும் பைம்பூணிலவமலர் வாயினணி கூரெயிற்றி னீரேயுலவுமனம் வைத்துறுதி கேண்மினமி தென்றான்.2923. வாயழ லுயிர்க்கு மாழிமன்னவன் குறிப்பு நோக்கிவேயழத் திரண்ட மென்றோள்வெம்முலைப் பரவை யல்குற்றோய்பிழி யலங்க லார்தந்தொன்னலந் தொலைந்து வாடிக்காயழற் கொடியைச் சேர்ந்தகற்பக மாலை யொத்தார்.2924. கருங்கடற் பிறப்பி னல்லால்வலம்புரி காணுங் காலைப்பெருங்குளத் தென்றுந் தோன்றாபிறைநுதற் பிணைய னீரே.யருங்கொடைத் தான மாய்ந்தவருந்தவந் தெரியின் மண்மேன்மருங்குடை யவர்கட் கல்லான்மற்றையர்க் காவ துண்டே.2925. அட்டுநீ ரருவிக் குன்றத்தல்லது வைரந் தோன்றாகுட்டநீர்க் குளத்தி னல்லாற்குப்பைமேற் குவளை பூவாவிட்டுநீர் வினவிக் கேண்மின்விழுத்தகை யவர்க ளல்லாற்பட்டது பகுத்துண் பாரிப்பார்மிசை யில்லை கண்டீர்.2926. நரம்பொலி பரந்த கோயினன்னுதன் மகளிர் தூவும்பெரும்பலிச் சோற்றி னீதல்பெரிதரி தாகு மேனுஞ்சுரும்பொலி கோதை யார்தமனைவயிற் றூண்டோ றூட்டுமரும்பலி யனைத்து மீயினதுபொருட் குன்று கண்டீர்.2927. அற்றவர் வருத்த நீக்கியாருயிர் கொண்டு நிற்குந்துற்றவி ழீதல் செம்பொற்றுறக்கத்திற் கேணி யாகுமுற்றுயி ரோம்பித் தீந்தேனூனொடு துறப்பின் யார்க்குமற்றுரை யில்லை மண்ணும்விண்ணுநும் மடிய வன்றே.2928. மாலைப் பந்தும் மாலையு மேந்தி மதுவார்பூஞ்சோலைம் மஞ்ஞைச் சூழ்வளை யார்தோள் விளையாடிஞாலங் காக்கும் மன்னவ ராவார் நறவுண்ணாச்சீலங் காக்குஞ் சிற்றுப காரம் முடையாரே.2929. மாசித் திங்கண் மாசின சின்னத் துணிமுள்ளினூசித் துன்ன மூசிய வாடை யுடையாகப்பேசிப் பாவாய் பிச்சையெ னக்கை யகலேந்திக்கூசிக் கூசி நிற்பார் கொடுத்துண் டறியாதார்.2930. காட்டகத் தொருமகன் றுரக்கு மாக்கலையோட்டுடைத் தாமெனி னுய்யு நங்களையாட்டியிட் டாருயி ரளைந்து கூற்றுவனீட்டிய விளைமதுப் போல வுண்ணுமே.2931. புள்ளுவர் கையினு முய்யும் புள்ளுளகள்ளவிழ் கோதையீர் காண்மி னல்வினையொள்ளியா னொருமக னுரைத்த தென்னன்மின்றெள்ளியீ ரறத்திறந் தெரிந்து கொண்மினே.2932. மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்கலுந்தேய்தலு முடைமையைத் திங்கள் செப்புமால்வாய்புகப் பெய்யினும் வழுக்கி னல்லறங்காய்வது கலதிமைப் பால தாகுமே.2933. புள்ளிநீர் வீழ்ந்தது பெருகிப் புன்புலாலுள்வளர்ந் தொருவழித் தோன்றிப் பேரறமுள்குமேன் முழுப்புலாற் குரம்பை யுய்ந்துபோய்வெள்ளநீ ரின்பமே விளைக்கு மென்பவே.2934. பாற்றுளி பவளநீர் பெருகி யூன்றிரண்டூற்றுநீர்க் குறும்புழை யுய்ந்து போந்தபின்சேற்றுநீர்க் குழியுளே யழுந்திச் செல்கதிக்காற்றுணாப் பெறாதழு தலறி வீழுமே.2935. திருந்திய நல்லறச் செம்பொற் கற்பகம்பொருந்திய பொருளொடு போகம் பூத்தலால்வருந்தினு மறந்திற மறத்த லோம்புமின்கரும்பெனத் திரண்டதோட் கால வேற்கணீர்.2936. மந்திர மருந்திவை யில்லை யாய்விடினைந்தலை யரவினை யாவர் தீண்டுவார்சுந்தரச் சுரும்புசூழ் மாலை யில்லையேன்மைந்தரு மகளிரை மருங்கு சேர்கிலார்.2937. பொன்றுலாம் பொன்னனீர் தருதும் பாகுநீர்தின்றலாற் சிறுவரை யானுஞ் சொற்சிலவின்றெலா மெம்மருங் கிருந்து பேசினால்வென்றுலாம் வேற்கணீர் விழுத்தக் கீர்களே.2938. மெய்ப்படு சாந்தும் பூவுமிகநனி கமழு மேனுங்கைப்படு சாந்தும் பூவுங்கொண்டலாற் கலக்க லாகாவைப்படு பித்து நெய்த்தோரசும்புசோ ரழுகற் புன்றோற்பொய்ப்பட வுரைத்த துண்டோபொன்னனீர் நம்மு ணாமால்.2939. அனிச்சத்தம் போது போலத்தொடுப்பவே குழைந்து மாழ்கியினிச்செத்தாம் பிறந்த போழ்தேயென்றுநா மிதனை யெண்ணித்தனிச்சித்தம் வைத்த றேற்றாந்தளர்ந்துகண் பரப்பி நோக்கிப்பனித்துமென் றுற்ற போழ்தேபழுதிலா வறிவி னென்னாம்.2940. நீனிறங் கொண்ட வைம்பானிழன்மணி யுருவ நீங்கிப்பானிறங் கொண்டு வெய்யபடாமுலை யையிற் றூங்கிவேனிற மழைக்கண் டாமுமிமைகுறைந் தழுகி மேனிதானிறங் கரக்குங் காலந்தையலீர் மெய்ய தன்றே.2941. குஞ்சர மயாவுயிர்த் தனைய குய்கமழஞ்சுவை யடிசிலை யமர்ந்துண் டார்கடாமிஞ்சிமா நகரிடும் பிச்சை யேற்றலாலஞ்சினேன் றுறப்பல்யா னார்வ மில்லையே.2942. ஒருவர்தம் வலிகெடு முடன்று பொங்கிமேலிருவர்மற் றியைந்தெழுந் திருப்பி னென்பபோலுருவநுண் ணுசுப்பிற விருந்த வொண்மணிப்பரியகட் படாமுலைப் பைம்பொற் கொம்பனீர்.2943. காதலங் கழிந்தநா ளிதனி னிப்புறமேதில மென்றசொற் செவிச்சென் றெய்தலுமாதரார் மழைமலர்த் தடங்கண் மல்குநீர்போதுலா மார்பின்வாய்ப் பொழிந்து வீழ்ந்தவே.2944. செருக்கி நிணந்தின்று சிவந்துமன்ன ருயிர்செற்றநெருப்புத் தலைநெடுவேற் கண்ணார்கண்ணீர் நிழன்மணிப்பூட்பரப்பி னிடைப்பாய்ந்து குளமாய்ப்பாலார் படாமுலையைவருத்தி மணிநெடுங்கோட் டருவிபோல வீழ்ந்தனவே.2945. அழலேந்து வெங்கடுஞ்சொ லுருமேறுண்டாங் கலர்சிந்திநிழலேந்து பூங்கொடிக ணிலஞ்சேர்ந்தாங்கு நிலஞ்சேர்ந்துகழலேந்து சேவடிக்கீழ்க் கண்ணீர்வெள்ளங் கலநிரப்பக்குழலேங்கு மாறேங்கி யழுதார்கோதை மடவாரே.2946. குலிகவஞ் சேற்று ணாறிக்குங்கும நீரு ளோங்கிப்பொலிகென வண்டு பாடப்பூத்ததா மரைகள் போலுமொலிகழ லடிக ணுங்ககீழ்ப்பிழைத்ததென் னுரைமி னென்னப்புலிநிழற் பட்ட மான்போற்போழுயி ராகி நின்றார்.2947. அருந்தவி சாகியெம்மைச்சுமந்தயா வுயிர்த்த வாண்மைப்பெருந்தகு குறங்கு காணீர்பெண்ணுயி ரளிய தாமேவருந்துமா லென்று நோக்கீர்வாடுமா லாவி யென்னீர்விருந்தினர்போல நின்றீர்வெற்றுடல் காண்மி னென்பார்.2948. கோதையுந் துகிலு மேந்திக்குங்கும மெழுதிக் கொய்பூந்தாதுகொண் டளகத் தப்பித்தடமுலை வருடிச் சேர்ந்துகாதல்கொண் டிருந்த காமர்கைவிர லளிய நீருமேதில லாகிக் கோமானெண்ணமே யெண்ணி னீரே.2949. பஞ்சிகொண் டெழுதி யார்ந்தசீறடி பனித்த லஞ்சிக்குஞ்சிமே லேற்ற கோமான்கொப்புளித் திட்ட வெம்மைவஞ்சித்தீர் மணிசெய் தோள்காள்வாங்குபு தழுவிக் கொள்ளீர்நெஞ்சநீர் வலியீ ராகிநிற்பிரோ நீரு மென்பார்.2950. முட்டுவட் டனைய கோலமுத்துலாய்க் கிடந்து மின்னமட்டுவிட் டலர்ந்த கோதைமதுவொடு மயங்கி நாளுமொட்டியிட் டுறைய வெங்கட்குயரணை யாய மார்பநட்புவிட் டொழியு மாயினன்மையார் கண்ண தம்மா.2951. மாக்கவின் வளரத் தீண்டிமணிநகை நக்கு நாளும்பூக்கவி னார்ந்த பைந்தார்புனைமதுத் தேனொ டேந்தித்தாக்கியெம் முலைக டம்மைநெருங்கினாய் தரணி மன்னினீக்கிநீ யெம்மை நோக்காய்நீத்தியோ நீயு மென்பார்.2952. அன்னமே தோகை நல்யாழமுதமே யாய்ந்த தீந்தேனின்னரே நங்கை மாரென்றேத்திய பவளச் செந்நாவென்னைநீ கண்ட தெம்மையிரண்டுநா வாயி னாயேமன்னன்போ லீர மின்றிவலித்தனை வாழி யென்பார்.2953. பூணினா னெருங்க நொந்துபொதிர்த்தன வெம்பி யென்றுநாணினால் வருத்தந் தீர்ப்பானன்முலைக் கண்க டம்மைப்பேணிநீ ரெழுதி யோம்பிப்பேரின்பங் கொண்டு தந்தீர்காண்மினோ வின்றெம் வண்ணங்கண்ணிலீர் கண்க ளென்பார்.2954. சென்னிமேன் மிதித்த வஞ்செஞ்சீறடித் திருவில் வீசமின்னிவா ளாரஞ் சிந்தவெறுநிலத் துறைந்து நீயெமின்னகை முறுவல் பார்த்தாயின்றெம தாவி பார்த்தாய்மன்னிய மாலை வண்டார்மணிமுடி வாழி யென்பார்.2955. வீங்குபாற் கடலு நஞ்சாய்விளைந்ததால் விரிந்த வெய்யோன்பாங்கிலா விருளை யீன்றுபார்மறைத் திட்ட தாலோதீங்கதிர்த் திங்கள் செந்தீச்சொரிந்ததாற் றிசைக ளெல்லாந்தாங்குமா றென்னை யாவிதரிக்கிலேந் தேவிர் காளோ.2956. விண்ணோர் மடமகள்கொல் விஞ்சைமக ளேகொல்கண்ணார் கழிவனப்பிற் காந்தருவ தத்தையென்றெண்ணாய வாணெடுங்கண் மெய்கொள்ள வேமுற்றுப்பண்ணாற்பயின்றீ ரினியென் பயில்வீரே.2957. கொல்வே னெடுங்கட் குணமாலை குஞ்சரத்தாலல்லனோ யுற்றாளுக் கன்று களிறடர்த்துப்புல்லிப் புணர்முலையின் பூங்குவட்டின் மேலுறைந்தாயெல்லேமற் றெம்பெருமாற் கின்றிவளு மின்னாளோ.2958. தூம்புடைய வெள்ளெயிற்றுத் துத்தியழ னாகப்பாம்புடைய நோக்கிப் பதுமை பவழவாய்தேம்புடைய வின்னமுதாச் சேர்ந்தாய்க் கினியதுவேயாம்புடைய நஞ்சடங்கிற் றின்றூறிற் றாகாதே.2959. தாழ்ந்துலவி மென்முலைமேற் றண்ணாரம் வில்விலங்கப்போழ்ந்தகன்ற கண்ணினா லேப்பெற்றுப் போகலாய்தாழ்ந்தமர ரின்னமிர்தந் தக்கநாட் டாகாதேவீழ்ந்ததென வீழ்ந்தாய்நீ யின்றதுவும் விட்டாயோ.2960. கண்ணோ கயலோ கழுநீரோ காவியோபெண்ணோ வமுதோ பிணையோ வெனப்பிதற்றித்துண்ணென் சிலைத்தொழிலுங் காட்டிமுன் னின்புற்றீர்புண்மேற் கிழிபோற் றுறத்தல் பொருளாமோ.2961. பொன்னகர வீதி புகுந்தீர் பொழிமுகிலின்மின்னி னிடைநுடங்க நின்றாடன் வேனெடுங்கண்மன்ன னகரெல்லாம் போர்ப்ப வலைப்பட்டீர்க்கின்னே யொளியிழந்த வின்னா விடுகினவோ.2962. செங்கச் சிளமுலையார் திண்கறையூர் பல்லினார்மங்கையர்கள் காப்ப மகிழ்ந்தாளை நீமகிழ்ந்துபங்கயமே போல்வாளைப் பார்ப்பானாய்ப் பண்ணணைத்துத்தங்கினாய் கோவே துறத்த றகவாமோ.2963. புல்லா ருயிர்செகுத்த பொன்னந் திணிதோளாய்மல்லா ரகன்மார்ப மட்டேந்தி வாய்மடுத்திட்டெல்லாருங் காண விலக்கணையோ டாடினாயல்லாந் தவணடுங்க வன்பி னகல்வாயோ.2964. கல்லோ மரனு மிரங்கக் கலுழ்ந்துருகியெல்லாத் திசைதோறு மீண்டி யினமயிர்போற்சொல்லாத் துயர்வார் தொழுவா ரழுவாராயல்லாந் தகன்கோயி லாழ்கடல்போ லாயிற்றே.2965. பூப்பரிவார் பொன்செய் கலம்பரிவார் பொன்வளையைநீப்பி ரெனப்புடைப்பார் நீடாமஞ் சிந்துவாரேப்பெற்ற மான்பிணைபோ லேங்குவா ரின்னுயிரைக்காப்பரேற் காவலனார் காவாரோ வின்றேன்பார்.2966. கழுநீருந் தாமரையுங் கண்டனவே போலுமுழுநீர்வேற் கண்ணும் முகமு முலறிச்செழுநீர் மணிக்கொடிகள் காழகஞ் சேர்கொம்பாயழுநீர வாயலறி யல்லாப்ப போன்றாரே.2967. பண்ணார் பணைமுழவம் பாடவிந்துபன்மணியாழ் மழலை நீங்கிப்புண்ணார் புனைகுழலு மேங்காபுனைபாண்டி லிரங்கா வான்பூங்கண்ணா ரொலிகவுள கிண்கிணியுமஞ்சிலம்புங் கலையு மாராமண்ணார் வலம்புரியும் வாய்மடங்கிக்கோன்கோயின் மடிந்த தன்றே.2968. அணியார் மணியரக்கு வட்டழுத்திவைத்தனைய செங்கண் மாத்தாட்பிணியார் பெருந்துருத்தி யன்னபெருங்கடவுள பிறையேர் கோட்டபணியார் கமழ்கடாத் தண்ணலரசுவாப் பண்ணார் பாய்மாவிணையாது மில்லாத கண்ணீர்வீழ்த்துண்ணாநின் றினைந்த தாமே.2969. கழித்த கடிப்பிணையுங் கைவளையுமாலையுங் களைந்து முத்துந்தொழித்த நறுஞ்சாந்துஞ் சுண்ணமும்பன்மணியுங் கலனுஞ் சிந்திவிழித்து வியன்கோயில் பன்மீன்பரந்திமைக்கும் பனியார் வானம்பழித்துப் பசும்பொன் னுலகுகுடிபோயிற் றொத்த தன்றே.2970. அழலார் சுரையெயிற்று வெஞ்சினவைந்தலைசுமந்த வெகுளி நாகநிழலார் திருமணியுந் தேவர்திருமுடிமே னிலவி வீசுஞ்சுழலார் பசும்பொன்னும் வேய்ந்துசொரிகதிர்மென் பஞ்சி யார்ந்தகழலா னகர மமுதுகடைகடல்போற் கலங்கிற் றன்றே.2971. நீர்நிறை குளத்து மாரிசொரிந்தென நறுநெய் துள்ளுநேர்நிறை பொரியுங் குய்யும்வறைகளு நிவந்த வாசம்பார்நிறை யடிசிற் பள்ளிதளியொடு சாலை யெல்லாமூர்நிறை யுயிர்த்த லின்றியுயிர்சென்ற போன்ற வன்றே.2972. கோட்புலிச் சுழல்கண் ணன்னகொழுஞ்சுவைக் கருனை முல்லைமோட்டிள முகையின் மொய்கொள்கொக்குகிர் நிமிரல் வெண்சோறூட்டுறு கறிகொ டேமாங்கனிசுவைத் தயிரோ டேந்திவேட்டவர்ப் பெறாது வீதிவெறுநிலங் கிடந்த வன்றே.2973. மைந்தர்தம் வண்கை யான்முன்மணிவள்ளத் தெடுத்த தேறல்பைந்துகின் மகளிர் மேவார்பாசிழை பசும்பொன் மாலைசிந்தியே கரந்தார் சொற்போன்மெய்யின்கட் சேர்த லின்றாய்ச்சந்தனச் சாந்தொ டாரந்தாங்கவி னிழந்த வன்றே.2974. தாழிவாய் மறைக்குந் தண்ணென்றடம்பெருங் குவளைக் கண்ணார்மூழிவாய் முல்லை மாலைமுலைமுக முரிந்து நக்கயாழின்வாய் முழவம் விம்மவாட்டொழிந் தயர்ந்து தீந்தேனூழிவாய்க் கொண்ட தொக்கும்பாடலு மொழிந்த தன்றே.2975. அருங்கல நிறைந்த வம்பூம்பவளக்கா றிகழம் பைம்பொற்பெருங்கிடு கென்னுங் கோலப்பேரிமை பொருந்தி மெல்லவொருங்குட னகர மெல்லாமுரங்குவ தொத்த தொல்லென்கருட்கடல் கல்லென் சும்மைகரந்தது மொத்த தன்றே.2976. கலையுலாய் நிமிர்ந்த வல்குற்கடல்விளை யமுத மன்னார்முலையுலாய் நிமிர்ந்த மொய்தார்முழவுமுத் துரிஞ்சி மின்னச்சிலையுலாய் நிமிர்ந்த மார்பன்றிருநகர் தெருள்க லாதாய்நிலையிலா வுலகின் றன்மைநீர்மைமீக் கூறிற் றன்றே.2977. கூந்த லகிற்புகையும் வேள்விக் கொழும்புகையுமேந்து துகிற்புகையு மாலைக் கிடும்புகையுமாய்ந்த பொருளொருவர்க் கீயா வதிலோபமாந்தர் புகழேபோற் றோன்றா மறைந்தனவே.2978. புல்லுண் புரவி புலம்பு விடுகுரல்போனல்லவளை போழரவ நாரை நரல்குரல்போற்கல்லா விளையர் கலங்காச் சிரிப்பொலியுங்கொல்யானைச் சங்கொலியுங் கூடா தொழிந்தனவே.2979. பொற்புடை பூமாலை சாந்தம் புனைகலன்கள்கற்புடைய மங்கையரிற் காவ லவையிழந்தநற்புடைய தேனார் நறவு நயம்புல்லார்சொற்பொருள்போல் வேட்கப் படாசோர்ந் தொழிந்தனவே.2980. தீம்பால் கிளிமறந்து தேவ ரவிமடங்கித்தூம்பார் நெடுங்கைம்மாத் தீங்கரும்பு துற்றாவாயாம்பா லுரைமடங்கி யாரும் பிறர்பிறராய்க்காம்பார் நடுவிருட்கட் காடேபோ லாயிற்றே.2981. நீர்முழங்கு நீல நெடுமேக மால்யானைத்தேர்முழங்கு தானைத் திருமாலின் முன்றுறப்பான்பார்முழங்கு தெண்டிரைபோற் செல்வந்தம் பாலர்க்கிந்தூர்முழுது நாடு முரவோன்றாள் சேர்ந்தனவே.2982. கொல்லுலைப் பொங்கழற் கிடந்த கூரிலைமல்லல்வே லிரண்டொரு மதியுள் வைத்தபோற்செல்லநீண் டகன்றகஞ் சிவந்த கண்ணினாரல்லலுற் றழுபவர்க் கரசன் சொல்லினான்.2983. நற்றவம் பரவை ஞாலநாமுட னிறுப்பின் வையமற்றமி றவத்திற் கென்றுமையவி யனைத்து மாற்றாதிற்றென வுணர்ந்து நிற்பிற்றிருமக ளென்று நீங்காள்பற்றொடே நிற்பி னென்றுந்திருமகள் பற்றல் செல்லாள்.2984. உப்பிலிப் புழுக்கல் காட்டுட்புலைமக னுகுப்ப வேகக்கைப்பலி யுண்டி யானும்வெள்ளின்மேற் கவிழ நீருமைப்பொலி கண்ணி னீரான்மனையக மெழுகி வாழவிப்பொருள் வேண்டு கின்றீரிதனைநீர் கேண்மி னென்றான்.2985. கொல்சின யானை பார்க்குங்கூருகிர்த் தறுக ணாளியில்லெலி பார்த்து நோக்கியிறப்பின்கீ ழிருந்த லுண்டேபல்வினை வெள்ள நீந்திப்பகாவின்பம் பருகி னல்லானல்வினை விளையு ளென்னுநஞ்சினுட் குளித்த லுண்டே.2986. ஆற்றிய மக்க ளென்னுமருந்தவ மிலார்க ளாகிற்போற்றிய மணியும் பொன்னும்பின்செலா பொன்ன னீரேவேற்றுவ ரென்று நில்லாவிழுப்பொருள் பரவை ஞாலநோற்பவர்க் குரிய வாகுநோன்மின் நீரு மேன்றான்.2987. காதலஞ் சேற்றுட் பாய்ந்த மதியெனுங் கலங்க னீரையூதுவண் டுடுத்த தாரா னுவர்ப்பினி னுரிஞ்சித் தேற்றமாதரார் நெஞ்சந் தேறி மாதவஞ் செய்து மென்றார்காதலான் காத லென்னு நிகளத்தா னெடுங்க ணாரே.2988. தூமஞ்சால் கோதை யீரேதொல்வினை நீத்த நீந்திநாமஞ்சால் கதியி னீங்கிநன்பொன்மே லுலகி னுச்சியேமஞ்சா லின்பம் வேண்டினென்னோடும் வம்மி னென்றான்காமஞ்சாய்த் தடர்த்து வென்றகாஞ்சனக் குன்ற மன்னான்.2989. நாடக நயந்து காண்பார் நலங்கிளர் கண்கள் சூன்றுமாடகக் கலத்து ளான்பா லமிர்தினை நயந்துண் பாரைநீடகம் வெகுண்டுங் கையாற் பிடித்துநீ றட்டி யிட்டேங்கோடக மணிந்த கோல முடியினாய் துறத்து மென்றார்.2990. சாந்தங் கிழிய முயங்கித் தடமலராற்கூந்தல் வழிபட்ட கோவேநீ செல்லுலகில்வாய்ந்தடியேம் வந்துன் வழிபடுநா ளின்றேபோற்காய்ந்தருளல் கண்டா யெனத்தொழுதார் காரிகையார்.2991. தெண்டிரை நீத்த நீந்தித்தீங்கதிர் சுமந்து திங்கள்விண்படர்ந் தனைய மாலைவெண்குடை வேந்தர் வேந்தன்கண்டிரண் முத்த மாலைக்கதிர்முலை நங்கை மாரைவெண்டிரை வியக்குங் கேள்விவிசயைகண் ணபயம் வைத்தான்.2992. கடிமலர் நிறைந்து பூத்த கற்பகக் கொம்புங் காமர்வடிமலர் மலர்ந்த காம வல்லியுந் தம்மைத் தாமேயுடைமலர் கொய்து போக வுகுத்திடு கின்ற தொத்தார்படைமலர் நெடுங்க ணல்லார் பாசிழை நீக்கு கின்றார்.2993. தழுமலர்த் தாம நான்றுசந்தகின் மணந்து விம்முஞ்செழுமணி நிலத்துச் செம்பொற்றிருமுத்த விதான நீழலெழுமையும் பெறுக வென்னுமெழின்முலை நெற்றி சூழ்ந்தார்கழுமிய துகிலிற் காமன்கண்புடைத் திரங்க மாதோ.2994. நறும்புகை நான நாவிக்குழம்பொடு பளிதச் சுண்ணமறிந்தவ ராய்ந்த மாலையணிந்தபைங் கூந்த லாய்பொனிறந்தரு கொம்பு நீலக்கதிர்க்கற்றை யுமிழ்வ வேபோற்செறிந்திருந் துகுத்துச் செம்பொற்குணக்கொடி யாயி னாரே.2995. இலம்பெரி தெனவிரந் தவர்கட் கேந்தியகலஞ்சொரி காவலன் கடகக் கையிணைபுலம்பிரிந் துயர்ந்தன விரண்டு பொன்னிறவலம்புரி மணிசொரி கின்ற போன்றவே.2996. என்பரிந் தெரிதலைக் கொள்ள வீண்டியவன்பரிந் திடுகலா வுலக மார்கெனமின்சொரி வெண்கலம் வீசும் வண்கைகள்பொன்சொரி தாமரைப் போது போன்றவே.2997. பூந்துகில் புனைகல மாலை பூசுசாந்தாய்ந்துல குணவுவந் தருளி மாமணிகாந்திய கற்பகக் கான மாயினானேந்திய மணிமுடி யிறைவ னென்பவே.2998. தேய்பிறை யுருவக் கேணித்தேறுநீர் மலர்ந்த தேனாராய்நிறக் குவளை யஞ்சிக்குறுவிழிக் கொள்ளும் வாட்கண்வேய்நிறை யழித்த மென்றோள்விசயையைத் தொழுது வாழ்த்திச்சேய்நிறச் சிவிகை சேர்ந்தான்றேவர்கொண் டேகி னாரே.2999. நரம்பெழுந் திரங்கின வீணை நன்குழல்பரந்துபண் ணுயிர்த்தன பைய மெல்லவேவிருந்துபட் டியம்பின முழவம் வீங்கொலிசுரந்தன சுடர்மணிப் பாண்டி லென்பவே.3000. மங்குலா யகிற்புகை மணந்து கற்பகப்பொங்குபூ மாலைகள் பொலிந்து பூஞ்சுணந்தங்கியித் தரணியும் விசும்புந் தாமரோசெங்கதிர்த் திருமணிச் செப்புப் போன்றவே.3001. திலக முக்குடைச் செல்வன் றிருநகர்பலரு மேத்தினர் பாடின ராடினர்குலவு பல்லியங் கூடிக் குழுமிநின்றுலக வெள்ள மொலிப்பது போன்றவே.3002. கானி ரைத்தன காவொடு பூம்பொய்கைதேனி ரைத்தன செம்பொ னெடுமதின்மேனி ரைத்தன் வெண்கொடி யக்கொடிவானு ரிப்பன போன்று மணந்தவே.3003. கோல முற்றிய கோடுயர் தூபையுஞ்சூல நெற்றிய கோபுரத் தோற்றமுஞால முற்றிய பொன்வரை நன்றரோகால முற்றுடன் கண்ணுற்ற போன்றவே.3004. வாயிற் றோரணங் கற்பக மாலைதாழ்ந்தேயிற் றிந்திரன் பொன்னக ரின்புறம்போயிற் றேயகி லின்புகை போர்த்துராய்ஞாயிற் றொள்ளொளி நைய நடந்ததே.3005. செய்ய தாமரைப் பூவினுட் டேங்கமழ்பொய்யில் சீர்த்திவெண் டாமரை பூத்தபோன்றையஞ் செய்தடு பானிறப் புள்ளினமையி றாமரை மத்தகஞ் சேர்ந்தவே.3006. மல்லன் மாக்கட லன்ன கிடங்கணிந்தொல்லென் சும்மைய புள்ளொலித் தோங்கியசெல்வ நீர்த்திருக் கோயிலிம் மண்மிசையில்லை யேற்றுறக் கம்மினி தென்பவே.3007. விளங்கொளி விசும்பறுத் திழிந்து மின்னுதார்த்துளங்கொளி மணிவணன் றொழுது துன்னினான்வளங்கெழு மணிவரை நெற்றிப் பாற்கடலிளங்கதிர்ப் பருதியொத் திறைவன் றோன்றினான்.3008. வினையுதிர்த் தவர்வடி வின்ன தென்னவேவனைகதிர்த் தடக்கைவைத் திருந்த வாமனார்கனைகதிர்த் திருமுக மருக்க னாகவான்புனைமலர்த் தாமரை பூத்த தொத்தவே.3009. இரிந்தன விருவினை யிலிர்ந்த மெய்ம்மயிர்சொரிந்தன கண்பனி துதித்துக் காதலாலரிந்தது மணிமிட றலர்பெய்ம் மாரிதூஉய்த்திரிந்தனன் வலமுறை திலக மன்னனே.3010. முத்தொளிர் தாமமு முருவ மாமணித்தொத்தொளிர் தாமமுஞ் சொரிபொற் றாமமுந்தத்துநீர்த் தண்கடற் பவழத் தாமமும்வைத்தபூந் தாமமு மலிந்து தாழ்ந்தவே.3011. மணிவரை யெறிதிரை மணந்து சூழ்ந்தபோலணிமயிர்க் கவரிக ளமர ரேந்தினார்துணிமணி முக்குடை சொரிந்த தீங்கதிர்பணிமணிக் காரிருள் பருகு கின்றதே.3012. முழாத்திரண் மொய்ம்மலர்த் தாமந் தாழ்ந்துமேல்வழாத்திரு மலரெலா மலர்ந்து வண்டினங்குழாத்தொடு மிறைகொளக் குனிந்து கூய்க்குயில்விழாக்கொள விரிந்தது வீரன் பிண்டியே.3013. பிண்டியின் கொழுநிழற் பிறவி நோய்கெடவிண்டிலர் கனைகதிர் வீரன் றோன்னினானுண்டிவ ணறவமிர் துண்மி னோவெனக்கொண்டன கோடணை கொற்ற முற்றமே.3014. வானவர் மலர்மழை சொரிய மன்னியவூனிவர் பிறவியை யொழிக்கு முத்தமன்றேனிமிர் தாமரை திளைக்குஞ் சேவடிகோனமர்ந் தேத்திய குறுகி னானரோ.3015. குருகுலஞ் சீவக குமரன் கோத்திரமருகலில் காசிப மடிகள் வாழியென்றெரிமணி முடிநில முறுத்தி யேத்தினான்புரிமணி வீணைகள் புலம்ப வென்பவே.3016. மன்னவன் றுறவெனத் துறத்தன் மாண்பெனப்பொன்வரை வாய்திறந் தாங்குப் புங்கவனின்னுரை யெயிறுவில் லுமிழ வீழ்ந்ததுமின்னியோர் வியன்மழை முழங்கிற் றொத்ததே.3017. காய்களிற்றி னிடைமருப்பிற் கவளம்போன்றேமாராக் கதியுட் டோன்றியாங்களிய வெவ்வினையி னல்லாப்புற்றஞ்சினே னறிந்தார் கோவேவேய்களிய வண்டறைய விரிந்தலர்ந்ததாமரையின் விரைசேர் போதின்வாயொளியே பெறநடந்த மலரடியைவலங்கொண்டார் வருந்தார் போலும்.3018. சேடார்செம்பொற் றிருமணிவைரத்தொத்தணிந் துலகோம்பும்வாடாமாலை வார்தளர்ப்பிண்டிவாமநின் குணநாளும்பாடாதாரைப் பாடாதுலகம்பண்ணவர் நின்னடிப்பூச்சூடாதார்தாள் சூடார்மலைச்சுடர்மணி நெடுமுடியே.3019. வைய மூன்று முடனேத்தவளருந் திங்கள் வாளெயிற்றைய வரிமான் மணியணைமேலமாந்தோய் நின்னை யமராதார்வெய்ய வெந்நோய் வினையுதைப்பவீழ்ந்து துன்பக் கடலழுந்திநெய்யு நுண்ணூ னாழிகையினிரம்பா நின்று சுழல்வரே.3020. தொழுதிப் பன்மீன் குழாஞ்சூழத்துளும்பா திருந்த திங்கள்போன்முழுதும் வைய முடனேத்தமுதுவாய் வலவை யாயிருந்தழுது வினைக ளல்லாப்பவறைந்தோய் நின்சொ லறைந்தார்கள்பழுதி னறுநெய்க் கடற்சுடர்போற்பல்லாண் டெல்லாம் பரியாரே.3021. செழும்பொன் வேய்ந்து மணியழுத்தித்திருவார் வைர நிரைத்ததனுட்கொழுந்து மலருங் கொளக்குயிற்றிக்குலாய சிங்கா தனத்தின்மேலெழுந்த பருதி யிருந்தாற்போயழுந்தேன் வந்துன் னடியடைந்தேபழுதி னறுநெய்க் கடற்சுடர்போற்னருவாய்ப் போத லழகிதோ.3022. குண்டலமும் பொற்றோடும் வைந்தாருங் குளிர் முத்தும்வண்டலம்பு மாலையு மணித்தொத்து நிலந்திவளவிண்டலர்பூந் தாமரையின் விரைத்தும்ப மேனடந்தவண்டலர்பூந் திருவடியை மணிமுடியின் வணங்கினான்.3023. நிலவிலகி யுயிரோம்பி நிமிர்ந்தொளிர்ந்து பசிபகைநோயுலகமிருள் கெடவிழிக்கு மொண்மணி யறவாழியலகையிலாக் குணக்கடலை யகன்ஞான வரம்பானைவிலையிலா மணிமுடியான் விண்வியப்ப விறைஞ்சினான்.3024. தூய்த்திரண் மணித்தாமஞ்சொரிந்துபொன் னிலநக்கப்பூத்திரண் மணிமாலைப்போர்ச்சிங்கம் போதகம்போலேத்தரிய குணக்கடலையிகலின்ப வரம்பானைத்தோத்திரத்தாற் றொழுதிறைஞ்சித்துறப்பேனென் றெழுந்திருந்தான்.3025. முடியணி யமரரு முலைநல் லார்களும்புடைபணிந் திருந்தவப் புலவன் பொன்னகர்கடிமலர்க் கற்பகங் காம வல்லியோடிடைவிரா யெங்கணும் பூத்த தொத்ததே.3026. ஒத்தொளி பெருகிய வுருவப் பொன்னகர்வித்தகன் வலஞ்செய்து விழுப்பொற் பூமிபோய்மத்தக மயிரென வளர்த்த கைவினைச்சித்திரக் காவகஞ் செல்வ னெய்தினான்.3027. ஏமநீ ருலகமோ ரிம்மிப் பாலெனநாமவே னரபதி நீக்கி நன்கலந்தூமமார் மாலையுந் துறக்கின் றானரோகாமனார் கலங்கழிக் கின்ற தொத்ததே.3028. மணியுறை கழிப்பது போல மங்கலப்பணிவரு பைந்துகி னீக்கிப் பாற்கடலணிபெற வரும்பிய வருக்க னாமெனத்திணிநிலத் தியன்றதோர் திலக மாயினான்.3029. மலிந்தநன் மாலைகள் வண்ணப் பூந்துகினலிந்துமின் னகுமணி நன்பொற் பேரிழைமெலிந்தனென் சுமந்தென நீக்கி மேனிலைப்பொலிந்ததோர் கற்பகம் போலத் தோன்றினான்.3030. திருந்திய கீழ்த்திசை நோக்கிச் செவ்வனேயிருந்ததோ ரிடிகுரற் சிங்கம் பொங்கிமேற்சுரிந்ததன் னுளைமயிர் துறப்ப தொத்தனனெரிந்தெழு மிளஞ்சுட ரிலங்கு மார்பினான்.3031. அஞ்சுடர்த் தாமரைக் கையி னான்மணிக்குஞ்சிவெண் படலிகைக் குமர னீப்பதுசெஞ்சுடர்க் கருங்கதிர்க் கற்றை தேறுநீர்மஞ்சுடை மதியினுட் சொரிவ தொத்ததே.3032. வேலைவாய் மணியிலை யூழ்த்து வீழ்ப்பதோர்காலைவாய் கற்பக மரத்திற் காவலன்மாலைவா யகிறவழ் குஞ்சி மாற்றலிற்சோலைவாய்ச் சுரும்பினந் தொழுது சொன்னவே.3033. தங்கிடை யிலாத்திருக் கேசந் தன்னையுங்கொங்குடைக் கோதையுங் கொய்து நீக்கினாய்நுங்கடை நோக்கிநாம் வாழும் வாக்கையமெங்கிடை யவரினி யெங்குச் செல்பவே.3034. என்றன தேனின மிரங்கு வண்டொடுசென்றன விடுக்கிய செல்வன் பொன்மயிரின்றொடு தொழுதன நும்மை யாமெனமன்றலுண் டவைவலங் கொண்டு சென்றவே.3035. மேற்படு கற்பக மாலை வேய்ந்துபொனேற்புடைப் படலிகை யெடுத்துக் கொண்டுபோய்நாற்கடல் கடந்தவ னமோவென் றிட்டிடப்பாற்கடல் பனிமதி போல வீழ்ந்ததே.3036. ஏவா விருந்த வடிக ளிவர்வாய்ச்சொற்கோவா மணிகொழித்துக் கொண்டாலே போலுமாற்சாவா கிடந்தார் செவிச்சார்த்தி னப்பொழுதேமூவா வமரராய் முத்தணிந்து தோன்றுவரே.3037. தோளா மணிகுவித்தாற் போன்றிலங்கு தொல்குலத்துச்சூளா மணியாய்ச் சுடர விருந்தானைவாளார் முடிவைர விற்றிளைத்து வண்டரற்றுந்தாளார வேத்திப்போய்த் தன்கோயில் புக்கானே.3038. புக்கான் சுதஞ்சணனும் பொற்றா மரைமகளிர்தொக்காலே போலுந்தன் றேவிக் குழாஞ்சூழமிக்கான் குணம்பாடி யாடி மிகுதீம்பாறொக்க கடல்போற் சுதங்கணி றைந்தனவே.3039. பற்றாவஞ் செற்ற முதலாகப் பாம்புரிபோன்முற்றத் துறந்து முனிகளா யெல்லாருமுற்றுயிர்க்குத் தீம்பால் சுரந்தோம்பி யுள்ளத்துமற்றிருள் சேரா மணிவிளக்கு வைத்தாரே.3040. கோமா னடிசாரக் குஞ்சுரங்கள் செல்வனபோற்பூமாண் டிருக்கோயிற் புங்கவன்றாள் சேர்ந்தேத்தித்தாமார்ந்த சீலக் கடலாடிச் சங்கினத்துட்டூமாண் வலம்புரியின் றோற்றம்போற் புக்காரே.3041. மட்டலர் வனமலர்ப் பிண்டி வாமனார்விட்டலர் தாமரைப் பாதம் வீங்கிருளட்டலர் பருதியி னளிக்கச் செல்லுநாட்பட்டதோர் பொருளினிப் பழிச்சு கின்றதே.3042. கயலின முகளிப் பாயமுல்லையம் பொதும்பிற் காமர்புயலின மொக்குள் வன்கட்குறுமுயல் புலம்பிக் குன்றத்தயல்வளர் கின்ற வாமான்குழவியோ டிரிந்து செந்நெல்வயல்வளர் கரும்பிற் பாயுமகதநா டென்ப துண்டே.3043. இரும்பிடி தழீஇய யானையிழிமதங் கலந்து சேறாய்ச்சுரும்பொடு மணிவண் டார்க்குந்துகிற்கொடி மாட வீதிப்பெருங்கடி நகரம் பேசினிராசமா கிருக மென்பரருங்கடி யமரர் கோமானணிநக ராய தொன்றே.3044. எரிமிடைந் தனைய மாலையினமணி திருவில் வீசுந்திருமுடி யார மார்பிற்சேணிக னென்ப நாமமருமுடி மன்னர் சூழவலரணி பிண்டி வேந்தன்றிருவடி விருந்து செய்வான்றிரண்முர சறைவித் தானே.3045. பொன்னா வழியாற் புகழ்நாவழித் மெல்கோன்மின்னார் மணிப்பூ ணவன்மேவிவிண் காறு நாறுமுன்னோர் வகுத்த முகவாசம் பொதிந்த வெந்நீர்மன்னார வாய்க்கொண் டுமிழ்ந்தான் மணிமாலை வேலோன்.3046. தீம்பா னுரைபோற் றிகழ்வெண்பட் டுடுத்து வண்டார்தேம்பாய சாந்த மெழுகிக்கலன் றேறன் மாலைதாம்பால தாங்கிப் புகழ்தாமரைக் குன்ற மன்னவாம்பான் மயிர்வேய்ந் தயிராவண மேறி னானே.3047. எறிசுரும் பரற்று மாலையெரிமணிச் செப்பு வெள்ளம்பொறிவரி வண்டு பாடும்பூஞ்சுண்ண நிறைந்த பொற்செப்பறிவரி துணர்வு நாணித்தலைபணித் தஞ்சுஞ் சாந்தஞ்செறியிரும் பவழச் செப்புத்தெண்கடற் றிரையி னேரே.3048. வந்துதேன் மயங்கி மூசுமலயச்செஞ் சாந்த மார்ந்தசந்தனச் செப்புங் கங்கைதருமண லலகை யாற்றாச்சுந்தரம் பெய்த யானைத்தூமருப் பியன்ற வெண்செப்பந்தரத் தலர்ந்த பன்மீனெனைத்துள வனைத்து மாதோ.3049. மைபொதி குவளை வாட்கண்மல்லிகைக் கோதை நல்லார்நெய்பொதி நெஞ்சின் மன்னர்நிலம்பிறக் கிடுவ போலுங்கொய்சுவற் புரவி மான்றேர்குழுமணி யோடை யானைமெய்பொதிந் துயர்ந்த கோமான்விரைப்பலி சுமந்த வன்றே.3050. கொடிக்குழாங் குஞ்சி பிச்சக்குழாநிறை கோல மாலைமுடிக்குழா மூரி வானம்பால்சொரி கின்ற தொக்குங்குடைக்குழா மிவற்றின் பாங்கர்க்குளித்தது குளிர்சங் கார்க்கும்படைக்குழாம் பாரிற் செல்லும்பாற்கடல் பழித்த வன்றே.3051. கனைகடல் கவரச் செல்லுங்கணமழைத் தொழுதி போலுநனைமலர்ப் பிண்டி நாதனல்லறங் கொள்ளை சாற்றிப்புனைமுடி மன்ன ரீண்டிப்பொன்னெயிற் புறத்து விட்டார்வினையுடைத் தின்ப வெள்ளம்விரும்பிய வேட்கை யானே.3052. வண்டுசூழ் பூப்பலி சுமந்து தான்வலங்கொண்டுசூழ்ந் தெழுமுறை யிறைஞ்சிக் கோனடியெண்டிசை யவர்களும் மருள வேத்தினான்வெண்டிரைப் புணரிசூழ் வேலி வேந்தனே.3053. பகல்வளர் பவழச் செந்தீப்பருதிமுற் பட்ட தேபோலிகல்வினை யெறிந்த கோமானிணையடி யொளியிற் றோன்றாதகல்விசும் புறையுந் தேவரொளியவிந் திருப்ப மன்னன்முகிழ்கிழி மதியம் போலுமுனிக்குழா நோக்கி னானே.3054. கண்வெறி போக வாங்கோர்கடுந்தவ னுருவ நோக்கியொண்ணெறி யொருவிக் கோமாணொளிதிரண் டிருந்த தாங்கொல்விண்ணெறி வழுவி வீழ்ந்தவிண்ணவ னொருவன் கொல்லென்றெண்ணெறி யாது மோராதிருந்திது கூறி னானே3055. விளங்கொளி விசும்பறுத் திழிந்து விண்ணவனிளங்கதி ரெனத்துறந் திருப்பக் கண்டனம்வளங்கெழு முக்குடை யடிகள் வாய்மொழிதுளங்கின னெனத் தொழு திறைஞ்சி னானரோ.3056. மன்னவ கேண்மதி வானில் வாழ்பவர்பொன்னியல் கற்பகப் போக பூமியாரென்னதுந் துறவல ரிறைவன் வாய்மொழிசொன்னவா றல்லதெப் பொருளுந் தோன்றுமே.3057. அடிகளுக் கிடமருங் கிருந்த வாய்மலர்க்கடிகமழ் தாமரைக் கண்ணி னானிவன்வடிவமே வாய்திறந் துரைக்கும் வானவனொடிவறு பேரொளி யுட்கத் தக்கதே.3058. திருவி னோடகன்ற மார்பிற்சீவக சாமி யென்பானுருவினோ டொளியு நோக்கினொப்புமை யுலகி னில்லைமருவினா ரிமைத்து நோக்கின்மனம்பிறி தாகி நிற்பாரரிதிவன் முகத்து நோக்கலழகொளி யன்ன வென்றான்.3059. மாதவன் சரிதமுந் துறந்த வண்ணமுமேதமின் றியம்புமி னடிக ளோவெனப்போதலர் புனைமுடி யிறைஞ்சி யேத்தினான்காதலிற் கணந்தொழக் காவன் மன்னனே.3060. பாட்டருங் கேவலப் பரவை மாக்கடற்கூட்டருங் கொழுந்திரை முகந்து மாமுனிமோட்டிரு மணிமுகின் முழங்கிப் பெய்தலினூட்டரு மறவமிர் துலக முண்டதே.3061. சீவகன் றிருவின மாக யாமெனநாவகந் தழும்பநின் றேத்தி நன்றரோகாவல னாதியாக் கணங்கள் கைதொழப்பாவமில் சுதன்மராற் பாடப் பட்டதே.3062. முல்லைசூழ் முல்லை வேலிமுயலொடு கவரி மேயுங்கொல்லைசூழ் குன்றத் துச்சிக்குருசினோற் றுயர்ந்த வாறும்வில்லுமிழ்ந் திலங்கு மேனிவிழுத்தவ நங்கை மார்கண்மல்லலங் குமரர் வான்மேற்சென்றதும் வகுக்க லுற்றேன்.3063. முழுதுமுந் திரிகைப் பழச் சோலைத்தேனொழுகிநின் றசும்பும் முயர் சந்தனத்தொழுதிக் குன்றந் துளும்பச்சென் றெய்தினான்பழுதில் வாய்மொழிப் பண்ணவ னென்பவே.3064. நணிதினெண் வினையின் னவைகண் ணிறீஇத்துணிய வீர்ந்திடுந் துப்பமை சிந்தையான்மணியின் மேன்மணி கட்டிய தொத்ததற்கணியு மாயலர் ஞாயிறு மாயினான்.3065. குன்றின்வீ ழருவிக் குரல் கோடணைச்சென்றெலாத் திசையுஞ் சிலம்பின் மிசைநின்றனன் னிறை வம்மின் நீரெனவொன்றி நின்றதி ரும்மொரு பாலெலாம்.3066. செம்பொன் பின்னிய போற்றினைக் காவலர்வெம்பு மும்மத வேழம் விலக்குவார்தம்புனத் தெறிமாமணி சந்து பாய்ந்தும்பர் மீனெனத் தோன்றுமொர் பாலெலா3067. யானை குங்கும மாடி யருவரைத்தேனெய் வார்சுனை யுண்டு திளைத்துடன்கானமாப் பிடி கன்றொடு நாடகமூனமின்றி நின் றாடுமொர் பாலெலாம்.3068. வரியநாக மணிச் சுடர் மல்கியபொருவில் பொன்முழைப் போர்ப்புலிப் போதகமரிய கின்னரர் பாட வமர்ந்துதம்முருவந் தோன்ற வுறங்குமொர் பாலெலாம்.3069. பழுத்த தீம்பல வின்கனி வாழையின்விழுக்கு லைக்கனி மாங்கனி வீழ்ந்தவைதொழித்து மந்தி துணங்கை யயர்ந்துதேனழிக்கு மஞ்சுனை யாடுமொர் பாலெலாம3070. நளிசிலம் பதனி னுச்சிநாட்டிய பொன்செய் கந்தினொளியொடு சுடர வெம்பியுருத்தெழு கனலி வட்டந்தெளிகடல் சுடுவ தொத்துத்தீயுமிழ் திங்க ணான்கும்விளிவரு குரைய ஞானவேழமேற் கொண்டு நின்றான்.3071. பார்க்கடல் பருகி மேகம்பாம்பினம் பதைப்ப மின்னிவார்ப்பிணி முரசி னார்த்துமண்பக விடித்து வானநீர்த்திரள் பளிக்குத் தூணிசொரிந்திட நின்று வென்றான்.மூர்த்தியாய் முனிவ ரேத்துமுனிக்களி றனைய கோமான்.3072. திங்கணான் கவையு நீங்கத்திசைச்செல்வார் மடிந்து தேங்கொள்பங்கயப் பகைவந் தென்னப்பனிவரை யுருவி வீசுமங்குல்சூழ் வாடைக் கொல்கான்வெள்ளிடை வதிந்து மாதோவிங்குநான் காய திங்களின்னுயி ரோம்பி னானே.3073. வடிமலர் நெடுங்க ணாருமைந்தரும் வரவு பார்த்தங்கடிமலர் பரவ வேறியாரமிர் தரிதிற் கொள்வான்கடிமலர்க் கமலத் தன்னகையினை மறித்துக் கொள்ளான்முடிதவக் கடலை நீந்தியின்னண முற்றி னானே.3074. ஒளிறுதேர் ஞானம் பாய்மாவின்னுயி ரோம்ப லோடைக்களிறுநற் சிந்தை காலாள்கருணையாங் கவசஞ் சீலம்வெளிறில்வாள் விளங்கு செம்பொன்வட்டமெய்ப் பொருள்க ளாகப்பிளிறுசெய் கருமத் தெவ்வர்பெருமதின் முற்றி னானே.3075. உறக்கெனு மோடை யானையூணெனு முருவத் திண்டேர்மறப்பெனும் புரவி வெள்ளம்வந்தடை பிணிசெய் காலாட்டிறப்படப் பண்ணிப் பொல்லாச்சிந்தனை வாயில் போந்துசுறக்கட லனைய தானைதுளங்கப்போர் செய்த தன்றே.3076. தெளிவறுத் தெழுவர் பட்டாரீரெண்மர் திளைத்து வீழ்ந்தார்களிறுகா லுதைப்ப வெண்மர்கவிழ்ந்தனர் களத்தி னுள்ளேபிளிறிவீழ் பேடி பெண்ணோயறுவகைத் துவர்ப்பும் பேசினளிபடு சிந்தை யென்னுமாழிவாய் வீழ்ந்த வன்றே.3077. மயக்கப்போர் மன்னன் மக்கண்மந்திரி யவரும் வீழவியப்புறு வேத வில்வாய்.வேட்கையம் பெடுத்திட் டெய்யக்கலக்கமி லசுப மென்னுங்குந்தத்தாற் கணைபெய்ம் மாரிவிலக்கித்திண் வெறுப்பு வாளால்விரைந்துயி ரவனை யுண்டான்.3078. கரும்பெறி கடிகை போன்றுங்கதலிகைப் போழ்கள் போன்றுமரும்பொறிப் பகைவர் தம்மையுறுப்பறத் துணித்து மீர்ந்துமருந்தெறி பிணியைக் கொல்லுமருத்துவன் போன்று மாதோவிருந்தெறிந் தெறியு மூவர்மேற்படை யியற்றி னானே.3079. செழுமல ராவி நீங்குமெல்லையிற் செறிந்து காயங்கழுமிய வுதிரம் போலவிமைப்பினுட் கரந்து நீங்கக்கொழுமலர்க் குவளைக் கண்ணிக்கூற்றுயி ருண்பதே போல்விழுமிய தெவ்வர் வாணாள்வீழ்ந்துக வெம்பி னானே.3080. குரோதனே மானன் மாயன்கூர்ப்புடை யுலோப னென்பார்விரோதித்து விரலிற் சுட்டிவெருவரத் தாக்க வீரனிரோதனை யம்பிற் கொன்றானித்தைநீள் பசலைப் பேரோர்விராகெனும் வேலின் வீழவெகுண்டன னவரும் வீழ்ந்தார்.3081. புணரிபோற் சிறுபுண் கேள்விப்படையொடு புகைந்து பொங்கியுணர்வொடு காட்சி பேறென்றிடையுறு கோக்க ளேற்றாரிணரெரி முழக்க மன்னசுக்கிலத் தியான மென்னுங்கணையெறிந் துகைப்ப வீழ்ந்துகாற்படை சூழப் பட்டார்.3082. காதிப்போர் மன்னர் வீழக்கணையெரி சிதறி வெய்யோனோதிய வகையி னொன்றியுலகுச்சி முளைத்த தேபோல்வீதிபோ யுலக மூன்றும்விழுங்கியிட் டலோக நுங்கியாதியந் தகன்ற நான்மைக்கொடியெடுத் திறைமை கொண்டான்.3083. பசும்பொனி னுலகிற் றேவர்பயிர்வளை முரச மார்ப்பவசும்புசேர் களிறு திண்டேரலைமணிப் புரவி வேங்கைவிசும்பியங் கரியோ டாளிவிடைமயி லன்ன நாகநயந்தவை பிறவு மூர்ந்துநாதன்றாள் கோயில் கொண்டார்.3084. நறுமலர் மாலை சாந்தம்பரூஉத்துளித் துவலை நன்னீர்க்கறைமுகில் சொரியக் காய்பொற்கற்பக மாலை யேந்திச்சிறகுறப் பரப்பி யன்னம்பறப்பன போல வீண்டிநிறைகடல் விஞ்சை வேந்தர்நீணில மன்னர் சேர்ந்தார்.3085. விண்ணியங் கருக்கன் வீழ்ந்துமீனிலங் கொள்வ தேபோன்மண்ணெலாம் பைம்பொன் மாரிமலர்மழை சொரிந்து வாழ்த்தியெண்ணிலாத் தொழில்க டோற்றியிந்திரர் மருள வாடிக்கண்முழு துடம்பிற் றோன்றிச்சுதஞ்சணன் களிப்புற் றானே.3086. குளித்தெழு வயிர முத்தத்தொத்தெரி கொண்டு மின்னவளித்துல கோம்பு மாலையகன்குடை கவித்த தாங்குவளிப்பொர வுளருந் திங்கட்கதிரெனக் கவரி பொங்கத்தெளித்துவில் லுமிழுஞ் செம்பொனாசனஞ் சேர்ந்த தன்றே.3087. மணியுமிழ் திருக்கேசம் வானவர கிற்புகையும்பிணியவிழ்ந்த கற்பகமும் பெயர்ந்தோடக் கமழமாறுணியரு வினையெறிந்தாற் கதுநாற்றஞ் சொல்லலாமணிதிக ழரசுவா வதன்கடாஞ் சாற்றாதோ.3088. முழங்குதிரு மணிமுறுவன்முருக்கிதழ் கொடிப்பவளத்தழக்குரல்வாய் தளையவிழ்ந்தமந்தாரந் தவநாறுமழுங்கல் சூழ் வினைவெறுத்தாற்கதுநாற்ற மறியலாம்வழங்குபொன் வரைவளரும்பைங்கண்மா வுரையாதோ.3089. உறுப்பெலா மொளியுமிழ்ந்துணர்வரிதா யிருசுடருங்குறைத்தடுக்கிக் குவித்ததோர்குன்றேபோன் றிலங்குமால்வெறுத்திரு வினையுதிர்த்தாற்கதுவண்ணம் விளம்பலாங்கறுப்பொழிந்த கனையெரிவாய்க்காரிரும்பே கரியன்றே.3090. வானோ ரேந்து மலர்மாரிவண்ணச்சாந்தம் பூஞ்சுண்ணங்கனார் பிண்டிக் கமழ் தாமங்கறையார் முகிலி னிறங்காட்டுந்தேனார் புகைக ளிவையெல்லாந்திகைப்பத் திகைகண் மணநாறியானா கமழுந் திருவவிப்போதமரர்முடிமே லணிந்தாரே.3091. சுறவுக்கொடிக் கடவுளொடு காலற்றொலைத் தோயெம்பிறவியறு கென்றுபிற சிந்தை யிலராகிநறவமலர் வேய்ந்துநறுஞ் சாந்துநில மெழுகித்துறவுநெறிக் கடவுளடி தூம மொடுதொழுதார்.3092. பாலனைய சிந்தைசுட ரப்படர்செய் காதிநாலுமுட னேயரிந்து நான்மைவரம் பாகிக்காலமொரு மூன்றுமுட னேயுணர்ந்த கடவுள்கோலமலர்ச் சேவடிகள் கொண்டுதொழு தும்யாம்.3093. முழங்குகட னெற்றிமுளைத் தெழுந்தசுடரேபோலழுங்கல்வினை யலறநிமிர்ந் தாங்குலக மூன்றும்விழுங்கியுமி ழாதுகுணம் வித்தியிருந் தோய்நின்னிழுங்கில்குணச் சேவடிக ளேத்தித்தொழ தும்யாம்.3094. ஏத்தரிய பல்குணங்கட் கெல்லைவரம் பாகிநீத்தவரு ளிந்திரனை நின்று தொழு தமரர்நாத்தழும்ப வேத்தித்தவ நங்கையவர் நண்ணித்தோத்திரங்க ளோதித்துகண் மாசுதுணிக் கின்றார்.3095. செய்தவ னேவினை சேரு மதற்கெனுமையமின் றாயலர் தாமரை மேலடிமொய்ம்மலர் தூய்முனி யாது வணங்குதுமெய்யுல கிற்கு விளம்பிய வேந்தே.3096. நல்லன வேயென நாடி யோர்புடையல்லன வேயறை கின்றபுன் னாதர்கள்பல்வினைக் கும்முலைத் தாய்பயந் தாரவர்சொல்லுவ நீசுக தாவுரை யாயே.3097. மதியறி யாக்குணத் தோனடி வாழ்த்திநிதியறை போனிறைந் தார்நிக ரில்லாத்துதியறை யாத்தொழு தார்மலர் சிந்தாவிதியறி யும்படி வீரனை மாதோ.3098. தீவினைக் குழவி செற்றமெனும்பெயர்ச் செவிலி கையுள்வீவினை யின்றிக் காமமுலையுண்டு வளர்ந்து வீங்கித்தாவினை யின்றி வெந்நோய்க்கதிகளுட் டவழு மென்றகோவினை யன்றி யெந்நாக்கோதையர்க் கூற லுண்டே3099. நல்வினைக் குழவி நன்னீர்த்தயாவெனுஞ் செவிலி நாளும்புல்லிக்கொண் டெடுப்பப் பொம்மென்மணிமுலை கவர்ந்து வீங்கிச்செல்லுமாற் றேவர் கோவாயெனுமிருள் கழிந்த சொல்லாவல்லிமே னடந்த கோவேயச்சத்து ணீங்கி னோமே.3100. மணியினுக் கொளியக மலர்க்கு மல்கியவணியமை யங்குளிர் வாச மல்லதூஉந்திணியிமி லேற்றினுக் கொதுக்கஞ் செல்வநின்னிணைமலர்ச் சேவடி கொடுத்த வென்பவே.3101. இகலிருண் முழுமுத றுமிய வீண்டுநீர்ப்பகல்சுமந் தெழுதரும் பருதி யன்னநின்னிகலிரு மரைமல ரளித்த சேவடிதொகலருங் கருவினை துணிக்கு மெஃகமே.3102. மீன்றயங்கு திங்கண் முகநெடுங்கண் மெல்லியலார்தேன்றயங்கு செந்நாவிற் சின்மென் கிளிக்கிளவிவான்றயங்கு வாமன் குணம்பாட வாழியரோகான்றயங்கி நில்லா கருவினைகாற் பெய்தனவே.3103. மதியம்பொழி தீங்கதிர்கள் பருகிமல ராம்பல்பொதியவிழ்ந்து தேன்றுளிப்ப போன்றுபொரு வில்லார்விதியிற்களித் தாரறிவன் விழுக்குணங்க ளேத்தித்துதியிற்றெழு தார்துளங்கு முள்ளமது நீத்தார்.3104. ஆர்ந்தகுணச் செல்வனடித் தாமரைக ளேத்திச்சேர்ந்துதவ வீரர்திசை சிலம்பத் துதியோதித்தூர்ந்தவிரு டுணிக்குஞ்சுடர் தொழுதருளு கென்றார்கூர்ந்தமிழ்த மாரியெனக் கொற்றவனுஞ் சொன்னான்.3105. இன்பமற் றென்னும் பேரானெழுந்தபுற் கற்றை தீற்றித்துன்பத்தைச் சுரக்கு நான்குகதியெனுந் தொழுவிற் றோன்றிநின்றபற் றார்வ நீக்கிநிருமலன் பாதஞ் சேரினன்புவிற் றுண்டு போகிச்சிவகதி யடைய லாமே.3106. வாட்கையம் மைந்த ராயும்வனமுலை மகளி ராயும்வேட்கையை மிகுத்து வித்திப்பிறவிநோய் விளைத்து வீயாத்தேட்கையிற் கொண்ட தொக்குநிச்சநோய்ச் செற்றப் புன்றோற்பூட்கையை முனியின் வாமன்பொன்னடி தொழுமி னென்றான்.3107. தன்னுயிர் தான்பரிந் தோம்பு மாறுபோன்மன்னுயிர் வைகலு மோம்பி வாழுமேலின்னுயிர்க் கிறைவனா யின்ப மூர்த்தியாய்ப்பொன்னுயி ராய்ப்பிறந் துயர்ந்து போகுமே.3108. நெருப்புயிர்க் காக்கிநோய் செய்யி னிச்சமும்முருப்புயி ரிருவினை யுதைப்ப வீழ்ந்தபின்புரிப்புரிக் கொண்டுபோய்ப் பொரிந்து சுட்டிடவிருப்புயி ராகிவெந் தெரியுள் வீழுமே.3109. மழைக்குர லுருமுவா வோத மாக்கடற்பிழைத்ததோ ரருமணி பெற்ற தொக்குமாற்குழைத்தலைப் பிண்டியான் குளிர்கொ ணல்லறந்தழைத்தலைச் சந்தனப் பொதும்பர்ச் சார்ந்ததே.3110. மல்குபூங் கற்பக மரத்தி னீழலானல்குவா னொருவனை நயந்து நாடுமோபில்குபூம் பிண்டியா னமிர்துண் டார்பிறர்செல்வங் கண்டதற் கவாச்சிந்தை செய்யுமோ.3111. மணியுயிர் பொன்னுயிர் மாண்ட வெள்ளியினணியுயிர் செம்புயி ரிரும்பு போலவாம்பிணியுயி ரிறுதியாப் பேசி னேனினித்துணிமின மெனத்தொழு திறைஞ்சி வாழ்த்தினார்.3112. விண்ணின்மேன் மலர்மழை பொழிய வீங்குபாற்றெண்ணிலாத் திருமதி சொரியத் தேமலர்மண்ணின்மேன் மழகதிர் நடப்ப தொத்ததேயண்ணலா ருலாய்நிமிர்ந் தளித்த வண்ணமே.3113. பான்மிடை யமிர்து போன்றுபருகலாம் பயத்த வாகிவானிடை முழக்கிற் கூறிவாலற வமிர்த மூட்டித்தேனுடை மலர்கள் சிந்தித்திசைதொழச் சென்ற பின்னாட்டானுடை யுலகங் கொள்ளச்சாமிநாள் சார்ந்த தன்றே.3114. உழவித்தி யுறுதி கொள்வார்கொண்டுய்யப் போகல் வேண்டித்தொழுவித்தி யறத்தை வைத்துத்துளங்கிமி லேறு சேர்ந்தகுழவித்தண் டிங்க ளன்னவிருக்கைய னாகிக் கோமான்விழவித்தாய் வீடு பெற்றான்விளங்கிநால் வினையும் வென்றே.3115. துந்துபி கறங்க வார்த்துத்துகிற்கொடி நுடங்க வேந்தியந்தரம் விளங்க வெங்குமணிகமூர்ந் தமர ரீண்டிவந்துபொன் மாரி சிந்திமலர்மழை சொரிந்து சாந்துங்கெந்தநா றகிலுங் கூட்டிக்கிளர்முடி யுறுத்தி னாரே.3116. முளைத்தெழு பருதி மொய்கொண்முழங்கழற் குளித்த தேபோற்றிளைத்தெழு கொடிகள் செந்தீத்திருமணி யுடம்பு நுங்கவிளைத்தபின் விண்ணு மண்ணுமங்கலம் வகையிற் செய்துவளைப்பொலி கடலி னார்த்துவலங்கொண்டு நடந்த வன்றே.3117. கேவல மடந்தை யென்னுங்கேழ்கிளர் நெடிய வாட்கட்பூவலர் முல்லைக் கண்ணிப்பொன்னொரு பாக மாகக்காவலன் றானொர் கூறாக்கண்ணிமை யாது புல்லிமூவுல குச்சி யின்பக்கடலினுண் மூழ்கி னானே.3118. பிரிதலும் பிணியு மூப்புஞ்சாதலும் பிறப்பு மில்லாவரிவையைப் புல்லி யம்பொனணிகிளர் மாடத் தின்றேன்சொரிமது மாலை சாந்தங்குங்குமஞ் சுண்ணந் தேம்பாய்விரிபுகை விளக்கு விண்ணோரேந்தமற் றுறையு மன்றே.3119. வல்லவன் வடித்த வேல்போன்மலர்ந்துநீண் டகன்ற வாட்கண்மெல்லவே யுறவி யோம்பியொதுங்கியு மிருந்து நின்றுமுல்லையஞ் சூட்டு வேயின்முரிந்துபோ நுசுப்பி னல்லார்மல்லற்குன் றேந்தி யன்னமாதவ முற்றி னாரே.3120. சூழ்பொற் பாவையைச் சூழ்ந்து புல்லியகாழகப் பச்சை போன்று கண்டெறூஉமாழை நோக்கினார் மேனி மாசுகொண்டேழைப் பெண்பிறப் பிடியச் சிந்தித்தார்.3121. ஆசை யார்வமோ டைய மின்றியேயோசை போயுல குண்ண நோற்றிபினேசு பெண்ணொழித் திந்தி ரர்களாய்த்தூய ஞானமாய்த் துறக்க மெய்தினார்.3122. காம வல்லிகள் கலந்து புல்லியபூமென் கற்பகப் பொன்ம ரங்கள்போற்றாம வார்குழற் றைய லார்முலையேம மாகிய வின்ப மெய்தினார்.3123. கலவி யாகிய காமத் தின்பயன்புலவி யாதலாற் பொன்னங் கொம்பனாருலவு கண்மல ரூடற் செவ்விநோக்கிலைகொள் பூணினா ரிதயம் போழ்ந்ததே.3124. பூவி னுள்ளவள் புகுந்து முள்ளத்தாணாவிற் பெண்பெயர் நிவிற்றி னீரெனக்காவிக் கண்கடை யிடுகக் காற்சிலம்பாவித் தார்த்தன வம்மென் குஞ்சியே.3125. நெஞ்சி னேரிழை வருந்து மென்றுபூங்குஞ்சி யேற்றது குறிக்கொ ணீயெனாப்பஞ்சின் மெல்லடிப் பாவை பூநுதாலஞ்சி னார்க்கதோர் தவற தாகுமே.3126. தவளைக் கிண்கிணித் தாமஞ் சேர்த்தியுங்குவளைக் கண்மலர்க் கோலம் வாழ்த்தியுமிவளைக் கண்டகண் ணிமைக்கு மோவெனாத்திவளத் தேமலர்க் கண்ணி சேர்த்தியும்.3127. பன்ம ணிக்கதிர்ப் பரவை மேகலைமின்ன ணிந்துகத் திருத்தி வெம்முலைப்பொன்ன ணிந்துபூஞ் சுண்ணந் தைவரநன்ம ணிக்குழை யிரண்டு நக்கவே.3128. செய்த நீர்மையார் செயப்பட் டார்கடாமெய்தி யாவையும் முணர்க வென்பபோன்மைய வாங்குழன் மடந்தை குண்டலநைய நின்றெலா நாண நக்கவே.3129. செல்வக் கிண்கிணி சிலம்பத் தேன்சொரிமுல்லைக் கண்ணிகள் சிந்த மொய்ந்நலம்புல்லிப் பூண்டதார் புரள மேகலையல்குல் வாய்திறந் தாவித் தார்த்தவே.3130. இலங்கு கொம்பனார் காம மென்னும்பேர்கலந்த கள்ளினைக் கைசெய் தையெனமலர்ந்து வாய்வைத்தார் மணிகொள் வள்ளத்தேநலங்கொள் சாயலார் நடுங்கி நையவே.3131. வெம்மை கொண்டதே னமிர்த மெல்லவேயம்மை யஞ்சொலா ரார வுண்டவர்தம்மைத் தாமகிழ்ந் துறைய வித்தலைச்செம்மை மாதவர்க் குற்ற செப்புவாம்.3132. நாள்கண்கூடிய நகைவெண் டிங்கள்போற்காளை நந்தனுந் தோழன் மார்களுநாளு நாளினு நடுங்க நற்றவந்தாளி னீட்டினார் தம்மைத் தாம்பெற்றார்.3133. பாவ னைமாபுஇப் பட்டினி யொடுந்தீவினை கழுஉந் தீர்த்தன் வந்தியாப்பூவுண் வண்டெனக் கொட்பிற் புண்ணியர்நாவின் வேட்கையு நஞ்சி னஞ்சினார்.3134. கருவிற் கட்டிய காலம் வந்தெனவுருவ வெண்பிறைக் கோட்டி னோங்கியவருவிக் குன்றின்மேன் முடித்திட் டைவருந்திருவின் றோற்றம்போற் றேவ ராயினார்.3135. அனங்கனைத் தவஞ்செய வழன்று கண்டவர்மனங்களைக் கவர்ந்திடு மணிக்கண் வெம்முலைப்பொனங்கொடி மயிலனார்ப் புல்ல மாப்பிடியினம்பயில் கடாக்களிற் றின்ப மெய்தினார்.3136. காதணிந்த தோடொருபான் மின்னு வீசக்குழையொருபாற் றிருவில் வீசத்தாதணிந்த தாமங்க ளொருபாற் சோரத்தாமரைக்கண் டாமிரங்கப் புருவு மாடமாதணிந்த நோக்கினா ரல்குற் காசுமணிமழலைக் கிண்கிணியுஞ் சிலம்பு மேங்கப்போதணிந்த தாருடையப் பொருது பொங்கிப்புணர்முலைகள் போர்க்களந்தாங் கண்ட வன்றே.3137. முழுதார மின்னுமுலைக் குவட்டினான்மொய்ம்மார்பிற்குங் குமச்சே றிழுக்கிவீழவுழுதார்வம் வித்தி யுலப்பிலாதநுகர்ச்சிவிளைத் தலர்ந்தகற் பகத்தின்கீழெழுதார் மணிக்குவளைக் கண்வலையுட்பட்டிமையார்கள் காமமறு சுழியுளாழ்ந்திழுதார்மென் பள்ளிப்பூந் தாதுபொங்கவிருவர் பலராகி யின்புறுபவே.3138. மண்கனிந்த பொன்முழவ மழையின் விம்மமாமணியாழ் தீங்குழல்க ளிரங்கப் பாண்டில்பண்கனியப் பாவைமார் பைம்பொற் றோடுங்குண்டலமுந் தாம்பதைப்ப விருந்துபாடவிண்கனியக் கிண்கிணியுஞ் சிலம்பு மார்ப்பமுரிவுருவ வேனெடுங்கண் விருந்து செய்யக்கண்கனிய நாடகங்கண் டமரர்காமக்கொழுந்தீன்று தந்தவந்தா மகிழ்ந்தா ரன்றே.3139. முருகுடைந்த பூங்கோதை முத்தணிந்த தோளாரொருகுடங்கைக் கண்ணா லுளங்கிழிய வேவுண்டருகடைந்த சாந்தழிய வம்முலைமேல் வீழ்ந்தார்திருவடைந்த நீண்மார்பிற் றேந்துளிக்குந் தாரார்.3140. நிலவி யொளியுமிழு நீளிலைவேற் கண்ணார்கலவித்தூ தாகிய காமக்கை காய்த்திப்புலவிப் படைபயிலப் பூச்செய்த கோலமுலவித் துறக்க மொளிபூத்த தன்றே.3141. புருவச் சிலைநுதற் பொன்றுஞ்சு மல்குலுருவத் துடியிடையா ருடலுப் பாகத்திருவிற் றிகழ்காமத் தேன்பருகித் தேவர்பொருவற் கரிய புலக்கடலு ளாழ்ந்தார்.3142. முகடு மணியழுத்தி முள்வைரமுள்வேய்ந்து முத்தம் வாய்ச்சூழ்ந்தகடு பசுமணியார்ந் தங்காந்திருள்பருகி யடுபால் விம்மிப்பகடு படவடுக்கிப் பண்ணவனார்தம்மொளிமே னின்றாற் போலுந்தகடு படுசெம்பொன் முக்குடையான்றாளிணையென் றலைவைத் தேனே.3143. முந்நீர் வலம்புரி சோர்ந்தசைந்துவாய்முரன்று முழங்கி யீன்றமெய்ந்நீர்த் திருமுத் திருபத்தேழ்கோத்துமிழ்ந்து திருவில் வீசுஞ்செந்நீர்த் திரள்வடம்போற் சிந்தாமணியோதி யுணர்ந்தார் கேட்டாரிந்நீர ராயுயர்வ ரேந்துபூந்தாமரையாள் காப்பா ளாமே.3144. செந்தா மரைக்குச் செழுநாற்றங் கொடுத்த தேங்கொளந்தா மரையா ளகலத்தவன் பாத மேத்திச்சிந்தா மணியின் சரிதஞ்சி தர்ந்தேன் றெருண்டார்நந்தா விளக்குச் சுடர்நன்மணி நாட்டப் பெற்றே.3145. செய்வினை யென்னு முந்நீர்த்திரையிடை முளைத்துத் தேங்கொண்மைவினை மறுவி லாதமதியெனுந் திங்கண் மாதோமொய்வினை யிருள்கண் போழுமுக்குடை மூர்த்தி பாதங்கைவினை செய்த சொற்பூக்கைதொழு தேத்தி னேனே.