இலம்பகம் 6 · சீவக சிந்தாமணி · திருத்தக்க தேவர்
கேமசரியார் இலம்பகம்
சீவக சிந்தாமணி 6 · கேமசரியார் இலம்பகம்
1412. வானின் வழங்கும் வண்கை மணிசெய் யார மார்பிற்றேனும் வழங்கும் பைந்தார் விசையை சிறுவன்றேங்கொணானம் வழங்குங் கோதை நைய வெய்ய வாயகானம் வழங்கன் மேவிக் காலின் னேகி னானே.1413. சிலைகொ ணாணிற் றீராத் திருந்து கற்பின் னவர்தமிலைகொள் பூந்தா ருழுத வின்ப வருத்த நீங்கமுலைகொள் கண்கள் கண்ணின் னெழுதி முள்கு மொய்ம்பன்மலைகொள் கானம் முன்னி மகிழ்வோ டேகு கின்றான்.1414. கனிகொள் வாழைக் காட்டுட்கருமை மெழுகி யவைபோன்றினிய வல்லா முகத்தமுசுவுங் குரங்கு மிரியத்துனிவு தீர நோக்கித்தோன்றல் செல்லு முன்னாற்பனிவெண் டிரைசூழ் கடல்போற்பழுவந் தோன்றிற் றவணே.1415. பருகு வாரிற் புல்லிப்பயங்கண் மாறத் துறக்குமுருகு விம்மு குழலார்போல மொய்கொ டும்பியுருவப் பூங்கொம் பொசியப்புல்லித் தீந்தேன் பருகியருகு வாய்விட் டார்ப்பவண்ணன் மெல்லச் சென்றான்.1416. செல்வர் மனத்தி னோங்கித் திருவின் மாந்தர் நெஞ்சினெல்லை யிருளிற் றாகிப் பூந்தா தினிதி னொழுகிக்கொல்லும் மரவின் மயங்கிச் சிறியார் கொண்ட தொடர்பிற்செல்லச் செல்ல வஃகு நெறிசேர் சிலம்பு சேர்ந்தான்.1417. சுனைகள் கண்க ளாகச் சூழ்ந்த குவளை விழியாவனைய லாகா வுருவ நோக்கி மைந்தற் கிரங்கிஇனைவ போலும் வரையின் னருவி யினிதி னாடிநனைகொள் போது வேய்ந்து நாதற் பாடு கின்றான்.1418. செய்தா னிருவினையின்பயத்தைச்சேருஞ் சென்றென்றியெய்தா னதன்பயத்தைப்பிறனேதுய்த்த லியல்பென்றிகொய்தாமந் தாழ்ந்தொசிந்தகுளிர்பூம்பிண்டிக் கோமானேயிஃதேநின்சொ லியல்பென்றாலடியேனின்னைத் தொழுதேனே.1419. உண்டே தனதியல்பினுணருங்காலை யுயிரென்றியுண்டாய வ்வவுயிரேபிறிதினில்லை யெனவுரைத்திவண்டார்த்து நாற்காதம்வண்ணமாலை சுமந்தொசிந்துகொண்டேந்து பூம்பிண்டிக்கோமானின்னைத் தொழுதேனே.1420. காதலா லெண்வினையுங்கழிபவென்றி யக்காதலாதலா லெண்வினையுங்கழியாவென்று மறைதியாற்போதுலாய்த் தேன்றுளித்துப்பொழிந்துவண்டு திவண்டுலாங்கோதைதாழ் பூம்பிண்டிக்கோமானின்னைத் தொழுதேனே.1421. இனிதி னிங்ஙன மேத்தி வலங்கொண்டுமுனிவர் சித்திர கூடமு னாதெனத்தனிதி னேகுபு தாபதர் வாழ்வதோர்பனிகொள் பூம்பொழிற் பள்ளிகண் டானரோ.1422. புல்லு மல்லியும் போகுயர் நீள்கழைநெல்லு நீர்விளை கேழலுந் தோரையுமல்ல தீம்பழங் காய்கிழங் காதியாநல்ல வேநுகர் வார்பள்ளி நண்ணினான்.1423. அரிய கொள்கைய ராரழ லைந்தினுண்மருவி வீடு வளைக்குறு மாட்சியர்விரிய வேதம் விளம்பிய நாவினர்தெரிவி றீத்தொழிற் சிந்தையின் மேயினார்.1424. வள்ளி யின்னமு தும்வரை வாழையின்றெள்ளு தீங்கனி யுஞ்சில தந்தபின்வெள்ள மாரிய னாய்விருந் தார்கெனவுள்ள மாட்சியி னாருவந் தோம்பினார்.1425. பாங்கின் மாதவர் பான்மதி போன்றிவன்வீங்கு கல்வியன் மெய்ப்பொருட் கேள்வியனாங்கு நாமு மளக்குவ மென்றுதம்மோங்கு கட்டுரை யொன்றிரண் டோதினார்.1426. ஐயர் கூறலு மண்ணலுங் கூறுவான்சையம் பூண்டு சமுத்திர நீந்துவானுய்யு மேற்றொடர்ப் பாட்டினிங் கியாவையுமெய்தி னார்களு முய்பவென் றோதினான்.1427. வீடு வேண்டி விழுச்சடை நீட்டன்மெய்ம்மூடு கூறையின் மூடுதல் வெண்டலையோடுகோட லுடுத்தலென் றின்னவைபீடி லாப்பிற விக்குவித் தென்பவே.1428. ஏம நன்னெறி யெந்நெறி யன்னெறிதூய்மை யின்னெறி யாமுந்து ணிகுவங்காமன் றாதை நெறியின்கட் காளைநீதீமை யுண்டெனிற் செப்பெனச் செப்பினான்.1429. தூங்குறிக் கிடந்து காயும்பழங்களுந் துய்ப்ப நில்லாபாங்கலா வினைக ளென்றார்பகவனா ரெங்கட் கென்னினோங்குநீண் மரத்திற் றூங்குமொண்சிறை யொடுங்கல் வாவல்பாங்கரிற் பழங்க டுய்ப்பப்பழவினை பரியு மன்றே.1430. அல்லியும் புல்லு முண்டாங்காரழ லைந்து ணின்றுசொல்லிய வகையி னோற்பத்துணியும்வெவ் வினைக ளென்னிற்கல்லுண்டு கடிய வெம்புங்கானுறை புறவ மெல்லாம்புல்லிய வினையை வென்றுபுறக்கொடை காணு மன்றே.1431. நீட்டிய சடைய மாகிநீர்மூழ்கி நிலத்திற் சேர்ந்துவாட்டிய வுடம்பின் யாங்கள்வரகதி விளைத்து மென்னிற்காட்டிடைக் கரடி போகிக்கயமூழ்கிக் காட்டி னின்றுவீட்டினை விளைக்க வேண்டும்வெளிற்றுரை விடுமி னென்றான்.1432. கலைவளர் கிளவி யார்தங் காமர்மென் சேக்கை நீங்கியிலைவளர் குரம்பை யங்க ணிருநிலஞ் சேக்கை யாகமுலைவள ராகந் தோய முழுவினை முரியு மாயின்மலைவளர் குறவர்க் கம்மா வினைகளு மாயு மன்றே.1433. வெண்ணிறத் துகிலி னாங்கண் வீழ்ந்துமா சாகிநின்றவொண்ணிற வுதிரந் தன்னை யுதிரத்தா லொழிக்க லாமேபண்ணிறக் கிளவி யார்தம் பசையினாற் பிறந்த பாவங்கண்ணிற முலையி னார்தங் கலவியாற் கழிக்க லாமே.1434. நுண்டுகில் வேத லஞ்சிநெருப்பகம் பொதிந்து நோக்கிக்கொண்டுபோய் மறைய வைத்தாற்கொந்தழல் சுடாது மாமேகண்டத்தி னாவி யார்தங்கடிமனை துறந்து காட்டுட்பண்டைச்செய் தொழிலிற் பாவம்பறைக்குற்றாற் பறைக்க லாமே.1435. நோய்முதிர் குரங்கு போலநுகர்ச்சிநீர் நோக்கல் வேண்டாகாய்முதிர் கனியி னூழ்த்துவீழுமிவ் வியாக்கை யின்னேவேய்முதிர் வனத்தின் வென்றானுருவொடு விளங்க நோற்றுப்போய்முதிர் துறக்கத் தின்பம்பருகுவ புரிமி னென்றான்.1436. மெய்வகை தெரிதன் ஞானம்விளங்கிய பொருள்க டம்மைப்பொய்வகை யின்றித் தேறல்காட்சியைம் பொறியும் வாட்டியுய்வகை யுயிரைத் தேயாதொழுகுத லொழுக்க மூன்றுமிவ்வகை நிறைந்த போழ்தேயிருவினை கழியு மென்றான்.1437. குன்ற னானுரைப்பக் கேட்டேபாகத்தார் குடும்ப நீக்கியின்றுகண் விடுக்கப் பட்டேம்யாமென வெழுந்து போகிவென்றவன் பாதஞ் சேர்ந்துவீட்டுநன் னெறியைப் பெற்றார்சென்றது பருதி வட்டஞ்செம்மலு மசைவு தீர்ந்தான்.1438. அசைவு தீர்ந்திரு ளஃகிய காலையேவசையி னீங்கியி னார்வழி காட்டலிற்றிசையும் யாறுந் தெரிந்துகொண் டேகினான்மிசையு மில்லதோர் மெய்ப்பொறி யாக்கையான்.1439. படம்புனைந் தெழுதிய வடிவிற் பங்கயத்தடம்பல தழீ இயது தக்க நாடதுவடங்கெழு வருமுலை மகளிர் மாமைபோன்றிடம்பெரி தினிதத னெல்லை யெய்தினான்.1440. தேங்கயத் தணிமலர் தெகிழ்ந்த நாற்றமும்பூங்குழன் மடந்தையர் புனைந்த சாந்தமுமாங்கெலா மகிற்புகை யளாய வாசமுந்தாங்கலா றக்கநா டாய தென்பவே.1441. சண்பக நறுமலர் மாலை நாறுசாந்தொண்பழுக் காயினோ டுருவ மெல்லிலையுண்பத மியாவர்க்கு மூன மில்லதுவண்புகழ் நாட்டது வண்ண மின்னதே.1442. கரும்பணி வளவயற் காமர் தாமரைவரம்பணைந் ததனுதற் கிடந்த வார்செநெலரங்கணி நாடக மகளி ராய்நுதற்சுரும்புசூ ழிலம்பகத் தோற்ற மொத்ததே.1443. வண்டுவாழ் கொடுந்துறைக் கன்னி வாளைமேனண்டுகி ருற்றென நடுங்கி நாணினால்விண்டொளித் தூண்டுறந் தொடுக்கும் வீழ்புனல்கொண்டபூங் கிடங்கணி நகரம் கூறுவாம்.1444. அகழ்கிடங் கந்துகி லார்ந்த பாம்புரிபுகழ்தகு மேகலை நாயில் பூண்முலைதிகழ்மணிக் கோபுரந் திங்கள் வாண்முகஞ்சிகழிகை நெடுங்கொடி செல்விக் கென்பவே.1445. நாட்டிய மணிவரை கடைந்து நல்லமிர்தூட்டினு மதனைவிட் டுறைந ரின்மையாலீட்டிய வளநிதி யிறைகொண் மாநகர்ச்சூட்டுவைத் தனையதச் சுடர்ப்பொ னிஞ்சியே.1446. எறிசுற விளையவ ரேந்து பூங்கொடிமறிதிரை வரைபுரை மாட மாக்கலம்பெறலருந் திருவனா ரமுதம் பேரொலியறைகடல் வளநக ராய தென்பவே.1447. மதியக டுரிஞ்சுஞ் சென்னிமாடநீண் மறுகு தோறும்பொதியவிழ் மாலை வீழ்ந்துபொன்செய்நன் கலன்கள் சிந்திநிதியறை திறந்து நோக்கியன்னதோர் நீர்மை யெய்திப்புதியவர்க் கியங்க லாகாப்பொற்பொடு பொலிந்த தன்றே.1448. கேமமா புரமெனுங் கேடி னல்லிசைப்பூமிமேற் றிலகம்வைத் தனைய பொன்னகர்த்தாமம்நீ ணெடுங்குடைத் தரணி காவலனாமம்வே னரபதி தேவ னென்பவே.1449. அந்நகர்க் கரசனே யனைய வாண்டகைமெய்ந்நிக ரிலாதவன் வேத வாணிகன்கைந்நிக ரமைந்தவேற் கமழுந் தாரினான்மைந்நிகர் மழைக்கணார் மருட்ட வைகுவான்.1450. வார்சிலை வடிப்ப வீங்கிவரையெனத் திரண்ட தோளான்சோர்புய றொலைத்த வண்கைச்சுபத்திரன் மனைவி பெற்றசீர்நலம் கடந்த கேமசரியெனத் திசைக ளெல்லாம்பேர்நலம் பொறித்த பெண்மைப்பெருவிளக் காகி நின்றாள்.1451. மாசிலாள் பிறந்த ஞான்றேமதிவலான் விதியி னெண்ணிக்காசிலாள் கண்ட போழ்தேகதுமென நாணப் பட்டான்றூசுலா மல்கு லாட்குத்துணைவனாம் புணர்மி னென்றுபேசினா னன்று கொண்டுபெருவிருந் தோம்பு கின்றான்.1452. தாழ்தரு பைம்பொன் மாலை தடமலர்த் தாம மாலைவீழ்தரு மணிசெய் மாலை யிவற்றிடை மின்னி னின்றுசூழ்வளைத் தோளி செம்பொற் றூணையே சார்ந்து நோக்குமூழ்படு காத லானை யொருபிடி நுசுப்பி னாளே.1453. சேயிழை கணவ னாகுந் திருமகன் றிறத்து நாளுமாயிரத் தெட்டு நேர்ந்த வாரமு தடிசி லூட்டியேயின வகையி னாலே யாறிரண் டெல்லை யாண்டுபோயின வென்ப மற்றப் பூங்கொடிச் சாய லாட்கே.1454. முருக்கிதழ் குலிக மூட்டிவைத்தன முறுவற் செவ்வாய்த்திருக்கவி னிறைந்த வெங்கட்பணைமுலைத் தேம்பெய் கோதைப்புரிக்குழற் பொன்செய் பைம்பூட்புனையிழை கோல நோக்கித்தரிக்கிலா துருகி நையுந்தடமலர்க் கோதை நற்றாய்.1455. மாவடு மருட்டு நோக்கின் மதிமுக மழைக்கண் மாசில்பூவொடு புரையுஞ் சாயல் புனைநலந் தனித்து வைகவேவடு பிணையி னோக்கி யிறைவளை கழல நின்றதாய்படுந் துயர மெல்லாந் தாரவ னீக்கி னானே.1456. போதுவாய் திறந்த போதேபூம்பொறி வண்டு சேர்ந்தாங்கூதுமே மகளிர்க் கொத்தபோகமு மன்ன தொன்றேயாதுநீ கவல வேண்டாவாரழ குடைய நம்பிகாதலான் றவத்தின் மிக்கான்கண்ணுறு நாளை யென்றான்.1457. பொன்னிலத் தெழுந்ததோர் பொருவில் பூங்கொடிமின்னுவிட் டெரிவதோர் நலத்தள் வீங்கிருள்பின்னிவிட் டனகுழற் பெருங்கட் பேதையூர்துன்னினன் றொடுகழற் குருசி லென்பவே.1458. மல்லிகை மணங்கமழ் மாலை வார்குழற்சில்சுணங் கிளமுலைச் சிறுமி தந்தையுஞ்செல்வனைத் திருநகர்ச் சேட்பட் டானரோபல்கதிர் மணியொளி பரந்த பூணினான்.1459. தென்றிசை முளைத்ததோர் கோலச் செஞ்சுடரொன்றிமற் றுத்தரம் வருவ தொத்தவண்மன்றல்கொண் மார்பினான் வந்தொ ரானிழனன்றுவந் திருந்தன னாதற் சிந்தியா.1460. குடைகவித் தனையது கோல மாமுடியடியிணை யாமையின் வடிவு கொண்டனபுடைதிரள் விலாவும்வில் வளைந்த பொற்பினகடிகமழ் தாமரை கண்ணின் வண்ணமே.1461. குறங்கணி மயிலொடு கோல மார்ந்தனபிறங்கிய வுறுப்பின்மேற் பெரிய நோக்கினகறங்கிசை மணிமுழா வெருத்தங் காண்டகுமறங்கெழு பெரும்புலி வாயின் வண்ணமே.1462. வரையகன் மார்பிடை வரியு மூன்றுளபுரைதபு பொன்புரை நாவு முள்ளுடைத்தருவரைத் தோள்களு மமரர் கோன்களிற்றுருவுகொ டடக்கையி னுருவு கொண்டவே.1463. இலங்குபொன் னிறுவரை யனைய வேந்தலுக்கலங்கிதழ்த் தாமரைக் கொட்டை யன்ன தாய்வலஞ்சுழிந் தமைவரக் குழிந்த வாய்ப்பொடுநலங்கிளர் நாபியு மினிது நாறுமே.1464. தடித்திறை திரண்டுதம் மளவிற் கேற்றசூழ்கெடிற்றழ கழிப்பன கிளர்பொற் றோரையகடிப்பகை நுழைவறக் கதிர்த்த கைவிரலடுத்தமூக் கருமணி வயிரத் தோட்டியே.1465. வார்ந்திலங் கெயிறணி பவழ மாண்டவாயார்ந்தபூ வங்கையு மடியுந் தாமரைதேர்ந்தனன் றிருமகள் கணவ னாமெனத்தீர்ந்தனன் சொல்லளைஇத் தேர்க்கொண் டேறினான்.1466. தேரிவ ரூர்ந்தனர் செல்ல விற்றலைக்கூருகிர் விடுத்ததோர் கோல மாலையைப்பேரிசை வீணையிற் சூட்டிப் பெண்கொடிக்காரிகை யுலகுணர் கடவுட் பாடுமே.1467. வீங்கோத வண்ணன் விரைததும்பு பூம்பிண்டித்தேங்கோத முக்குடைக்கீழ்த் தேவர் பெருமானைத்தேவர் பெருமானைத் தேனார் மலர்சிதறிநாவி னவிற்றாதார் வீட்டுலக நண்ணாரே.1468. அடல்வண்ண வைம்பொறியு மட்டுயர்ந்தோர் கோமான்கடல் வண்ணன் முக்குடைக்கீழ்க் காசின் றுணர்ந்தான்காசின் றுணர்ந்தான் கமல மலரடியைமாசின்றிப் பாடாதார் வானுலக நண்ணாரே.1469. பூத்தொழியாப் பிண்டிக்கீழ்ப் பொங்கோத வண்ணனைநாத்தழும்ப வேத்தாதார் வீட்டுலக நண்ணாரேவீட்டுலக நண்ணார் வினைக்கள்வ ராறலைப்பவோட்டிடுப வெண்குணனுங் கோட்பட் டுயிராவே.1470. முத்துமிழு முந்நீர் மணிவண்ணன் மூன்றுலகும்பத்திமையாற் பாடப் படுவான்றாள் பாடக்கேட்டொத்தரம்பை யன்னா ளுவந்திவளொ டொப்பானோர்வித்தகனை யின்னே பெறுக வெனவுரைத்தாள்.1471. நிலந்தினக் கிடந்தன நிதியந் நீணகர்ப்புலம்பறப் பொலிவொடு புக்க காலையேயிலங்குபூங் கொடியன வேழை நோக்கமுமுலங்கொடோ ளுறுவலி நோக்கு மொத்தவே.1472. கண்ணுறக் காளையைக் காண்டலுங் கைவளைமண்ணுறத் தோய்ந்தடி வீழ்ந்தன மாமையுமுண்ணிறை நாணு முடைந்தன வேட்கையுமொண்ணிறத் தீவிளைத் தாளுருக் குற்றாள்.1473. வாக்கணங் கார்மணி வீணைவல் லாற்கவணோக்கணங் காய்மன நோய்செய நொந்தவன்வீக்கணங் கார்முலை வேய்நெடுந் தோளியொர்தாக்கணங் கோமக ளோனெத் தாழ்ந்தான்.1474. நல்வளத் தாமரை நாணிய வாண்முகக்கொல்வளர் வேற்கணி னாள்குழைந் தாளெனச்சொல்வளர்த் தாரவ டோழியர் சோர்குழன்மல்வளர் மார்பனை வந்து வளைந்தார்.1475. நினைப்பரு நீணிறை நிப்புதி சேர்ந்தாங்கினத்திடை யேறனை யானெழி னோக்கிப்புனக்கொடி பொற்பொடு புண்ணிய நம்பிவனப்பினை யேகண்டு வாட்க ணகன்றாள்.1476. வள்ளலை வாசநெய் பூசி மணிக்குடத்தெள்ள னீர்சொரிந் தாட்டினர் தேம்புகையுள்ளுற வுண்ட கலிங்க முடுத்தபின்கள்ளவிழ் கண்ணி கலத்தொ டணிந்தார்.1477. மங்கல வெள்ளை வழித்துமுத் தீர்த்தபின்கொங்கலர் கோதையர் கொண்டக மெய்தியங்கதிர்ப் பொற்கலத் தாரமிர் தேந்தினர்செங்கயற் கண்ணியர் சீரி னயின்றான்.1478. பத்தியிற் குயிற்றிய பைம்பொற் றிண்ணைமேற்சித்திரத் தவிசினுட் செல்வன் சீர்பெறநித்தில மணியுறழ் கரக நீரினாலத்துறை விடுத்தன னலர்ந்த தாரினான்.1479. இளிந்தகாய் கமழ்திரை வாச மீண்டியோர்பளிங்குபோழ்ந் தருகுபொன் பதித்த பத்தியின்விளிம்புமுத் தழுத்திய யவனக் கைவினைத்தெளிந்தபொன் னடைப்பையுட் பாகு சென்றவே.1480. பாசிலை சுருட்டுபு கறித்துப் பல்லினைத்தேசிகம் படத்துடைத் துமிழ்ந்து தேங்கமழ்வாசம்வாய்க் கொண்டனன் மணிசெய் குண்டலம்வீசிவில் விலங்கிவிட் டுமிழ வென்பவே.1481. பண்ணுலாங் கிளவிதன் பரவை யேந்தல்குல்வண்ணமே கலையிவை வாய்ந்த பூந்துகிலுண்ணிலாய்ப் பசுங்கதி ருமிழ்வ பாவியேன்கண்ணையு மனத்தையுங் களங்கொண் டிட்டவே.1482. கடிகமழ் குழலினாற் கட்டி மெய்யெலாநடுவொசி நோன்சிலைப் புருவத் தாற்புடைத்தடுமலர் நெடுங்கணா லாவி போழ்ந்திடாக்கொடியவ ளிளமுலை கொல்லுந் கொல்லுமே.1483. கடியன கச்சினாற் கட்டப் பட்டனகொடியன குங்குமங் கொட்டப் பட்டனவடிநிலம் பரந்துமுத் தணிந்த வெம்முலையிடைநிலஞ் செகுப்பன வென்னை யென்செயா.1484. கரியவுள் வெறியன கட்டப் பட்டனபுரிவொடு புறத்திடப் பட்ட பூங்குழல்தெரியின்மற் றென்செயா செய்ய நீண்டனபெரியகண் போலவும் பேது செய்யுமே.1485. காதன்மை கண்ணுளே யடக்கிக் கண்ணெனுந்தூதினாற் றுணிபொரு ளுணர்த்தித் தான்றமர்க்கேதின்மை படக்கரந் திட்ட வாட்கணோக்கோதநீ ரமுதமு முலகும் விற்குமே.1486. மிகுகொடா முத்தஞ் சூட்டி மீளிமை தீர்த்து மின்னுநகுகொடா மணிக ணல்ல தெளித்துக்கொண் டெழுதி நன்பொன்முகபடாம் வைப்ப வாட்செற் றழன்றுகண் கரிந்த முல்லைத்தொகுகடாங் கோதை வெய்ய துணைமணி முலைக டாமே.1487. தேன்கறி கற்ற கூழைச் செண்பக மாலை வேற்கணூன்கறி கற்ற காலனொண்மணித் தடக்கை வைவேல்கூன்பிறை நுதலோர் கூற்றங் குவிமுலை நமன்கைப் பாசம்யான்பிற னளியன் வாழ்வா னாசைப்பட் டிருக்கின் றேனே.1488. திருவிற்குங் கற்பகத் தெரியன் மாலையாருருவிற்கோர் விளக்கமா மொண்பொற் பூங்கொடிமுருகற்கு மநங்கற்கு மெனக்கு மொய்சடையொருவற்கும் பகைத்தியா லொருத்தி வண்ணமே.1489. கலைத்தொகை நலம்பல கடந்த காளைதானலத்தகை யவணல நினைப்ப நாய்கனுமலைத்தொகை மதந்தவழ் யானை மன்னவனிலத்தவர்க் கறிவுற நெறியிற் செப்பினான்.1490. இடியுமி ழெறிதிரை முழக்கிற் பல்லியங்கொடியணி வியனகர்க் குழுமி யார்த்தெழக்கடிமண மியற்றினார் கடவு ணாளினால்வடிமலர்க் கோதையை மைந்தற் கென்பவே.1491. மணிக்குட மழுத்திவைத் தனைய தோளினான்கணிக்கிடங் கொடாநலங் கதிர்த்த காரிகையணிக்கிட னாயி வரிவை தன்னொடும்பிணித்திடை விடாதவன் பெற்ற வின்பமே.1492. பூந்துகில் பொருதிரை பொம்மல் வெம்முலையேந்திய மணிவரை யிரக்க நீர்த்தரங்காய்ந்தவன் றோளிணை நாக மாகவைத்தீந்ததக் கடலவற் கமுத மென்பவே.1493. சந்தனச் சேற்றிடைத் தாம வார்குழற்பைந்தொடி படாமுலை குளிப்பப் பாய்தலின்மைந்தன தார்குலைந் துடைய வாய்திறந்தஞ்சிலம் பணியல்குற் கலையொ டார்த்தவே.1494. கோதையுங் குழலும் பொங்கக் குவிமுலைக் குழங்கன் மாலைப்போதுகப் பொருது பூணும் பொருகடன் முத்து மூழ்கக்காதலுங் களிப்பு மிக்குக் கங்குலும் பகலும் விள்ளார்சாதலும் பிறப்பு மில்லாத் தன்மைபெற் றவர்க ளொத்தார்.1495. புனைமலர்த் தாரி னானும் போதணி கொம்ப னாளுநனைமலர்க் காவு மந்தண் வாலியு நல்ல வாடிச்சுனைமலர்க் குவளை குற்றுச் சூழ்மலர்க் கண்ணி சூட்டிவினைநல நுகர்ந்து செல்வார் விதியினான் மிக்க நீரார்.1496. பொழிந்துகு காதல் பூண்டு புல்லுகை விடாது செல்லக்கழிந்தன விரண்டு திங்கள் காளையு மற்றோர் நாளாற்பிழிந்துகொள் வனைய பெண்மைப் பெய்வளைத் தோளி தன்னோடழிந்துவீ ழருவிக் குன்றி லாய்மலர்க் காவு புக்கான்.1497. காஞ்சனக் கமுகு காய்பொற் கனிக்குலை வாழை சூழ்ந்துபூஞ்சினை நாகந் தீம்பூ மரக்கருப் பூரச் சோலைமாஞ்சினை மயில்க ளாடச் சண்பக மலர்கள் சிந்துந்தீஞ்சுனை யருவிக் குன்றஞ் சீர்பெற வேறி னானே.1498. தினைவிளை சாரற் செவ்வாய்ச் சிறுகிளி மாத ரோப்பப்புனைவளைத் தோளி சொல்லைக் கிளியெனக் கிள்ளை போகாநனைவினை கோதை நாணிப் பொன்னரி மாலை யோச்சக்கனைகழற் குருசி னண்ணிக் கவர்கிளி யோப்பி னானே.1499. கொந்தழல் வேற்க ணாலென்னாவிகூட் டுண்ட கொம்பேசெந்தழை யலங்க லேந்திச் சீறடி பரவ வந்தேனுய்ந்தினிப் பணிசெய் வேனோ வுடம் பொழித் தேகு வேனோபைந்தழை யல்குற் பாவாய் பணியெனப் பரவி னானே.1500. வீணையுஞ் குழலும் பாலு மமுதமுங் கரும்புந் தேனும்பாணியாழ் கனியும் வென்ற பைங்கிளி மழலைத் தீஞ்சொல்வாணிக மகளிர் தாமே வாணிகம் வல்ல ரென்னாப்பூண்முலை பொதிர்ப்பப் புல்லிப் புனைநலம் பருகி னானே.1501. திங்களங் குழவி செவ்வானிடைக்கிடந் திமைப்ப தேபோற்குங்கும மார்பிற் பூண்டமங்கையோ டிருந்த போழ்தோர்வாளொளித் தடங்க ணீலம்மணிவண்டு கண்டு சொன்னான்கங்குறா னீங்க லுற்றுக்கமழ்மல ரணிந்த தாரான்.1502. மணிவண்டிம் மாதர் கோதைமதுவுண வந்த போழ்தங்கிணைவண்டங் கிறந்து பாடின்றிருக்குமே யிரங்க லின்றாய்த்துணைவண்டு துஞ்சி னீயுந்துஞ்சுவை யென்று நின்கட்பணிகொண்ட தின்மை யாற்றான்பரிவொடு மிருக்கு மன்றே.1503. குழவியாய்ப் பிறந்து வெய்யோன்குமரனாய் குறுகி யிப்பால்விழைவுதீர் கிழவ னாகிவிழுக்கதி ருலந்து வீழமழலைவண் டுழல நக்கமல்லிகை யலங்கல் சூட்டிக்குழல்புரை கிளவி யோடுங்கொழும்புகை யமளி சேர்ந்தான்.1504. திருத்துயில் பெற்ற மார்பன்றிருந்துதா ருழக்க வின்பவருத்தமுற் றசைந்த கோதைவாளொளித் தடங்க ணீலம்பொருத்தலும் பொன்ன னாளைப்புறக்கணித் தெழுந்து போகிப்பருச்சுடர்ப் பவழ நோன்றாழ்ப்பன்மணிக் கதவு சேர்ந்தான்.1505. அல்லியுட் பாவை யன்னா ளறிவுறா வகையி னொற்றிமெல்லவே திறந்து நீக்கி மின்னுவிட் டிலங்கு பைம்பூட்கொல்சின மடங்க லன்னான் கொழுநிதி மாட நீந்திப்பல்கதிர்ப் பரிதி போலப் பாயிரு ளேகி னானே.1506. தாளுடைத் தடங்கொள் செவ்வித்தாமரைப் போது போலும்வாளுடை முகத்தி னாடன்வருமுலைத் தடத்தின் வைகிநாளினும் பெருகு கின்றநகைமதி யனைய காதற்கேள்வனைக் கனவிற் காணாள்கிளர்மணிப் பூணி னாளே.1507. அரந்தினப் பிறந்த பைம்பொனரும்பிய முலையி னாளைக்கரந்தவன் கங்கு னீங்கக்கதிர்வளை யணங்கு மென்றோள்வரந்தரு தெய்வ மன்னாள்வைகிரு ளனந்த றேறிப்பரந்தெலாத் திசையு நோக்கிப்பையவே பரிவு கொண்டாள்.1508. திருமணி குயின்ற செம்பொற்றிருந்துபூங் கொம்ப னாடன்கருமணிப் பாவை யன்னான்கரந்துழிக் காண்டல் செல்லாளெரிமணி விளக்க மாடத்திருளறு காறு மோடியருமணி யிழந்தோர் நாகமலமரு கின்ற தொத்தாள்.1509. யாண்டை யாயைய வஞ்சினெ னாருயிரீண்டு டம்பொழித் தேக வலிக்குமானீண்ட தோளவ னேநிறை யானிலேன்றீண்டு வந்தெனத் தேனின் மிழற்றினாள்.1510. கனிகொள் காமங் கலந்துயி ரொன்றலினினியர் மங்கைய ரென்பது கூறுவாய்பனிகொண் மாமதி போற்பசப் பூரயான்றனிய ளாவது தக்கது வோசொலாய்.1511. கழலு நெஞ்சொடு கைவளை சோருமாற்சுழலுங் கண்களுஞ் சூடுறு பொன்னெனவழலு மேனியு மாற்றலெ னையவோநிழலி னீப்பருங் காதலு நீத்தியோ.1512. திருந்து மல்லிகைத் தேங்கமழ் மாலையான்புரிந்து சூடினும் பூங்கொடி நுண்ணிடைவருந்து மான்மட வாயெனும் வஞ்சநீகரிந்தி யானையக் காண்டலும் வல்லையோ.1513. தொண்டை வாயிவ டொய்யில் வனமுலைகண்டு தேவர் கனிபவென் றேத்துவாய்வண்டு கூறிய வண்ண மறிந்திலேன்விண்டு தேன்றுளிக் கும்விரைத் தாரினாய்.1514. முலைவைத் ததடத் திடைமுள் கலுறிற்றலைவைத் துநிலத் தடிதை வருவாய்சிலைவித் தகனே தெருளே னருளாயுலைவித் தனையென் னுயிர்கா வலனே.1515. கடனித் திலம்வைத் தகதிர்ம் முலையினிடனெத் துணையத் துணையும் மெழுதியுடனொத் துறைவா னுழைவா ரலனேன்மடனொத் துளதென் னுயிர்வாழ் வதுவே.1516. பெறுமன் பினளென் பதுபே சினலாலறுமன் பினளென் றறைவா ரிலையாலிறுமென் பொடினைந் துநைவேற் கருளிநறுமென் கமழ்தா ரவனே நணுகாய்.1517. நுனசீ றடிநோ வநடந் துசெலேலெனதா வியகத் துறைவா யெனுநீபுனைதா ரவனே பொயுரைத் தனையால்வினையே னொழியத் தனியே கினையே.1518. பருமுத் துறையும் பணைவெம் முலைநின்றிருமுத் தகலந் திளையா தமையாவெரிமொய்த் தனலு மிகல்வே லெரிபுண்மருமத் தனலும் வகைசெய் தனையே.1519. புனமா மயிலே பொழிலே புனலேவனமார் வழையே வரையே திரையேயினமா மணிசூ ழெரிபூ ணவனைத்துனயான் பெறுகோ தொழுதே னுரையீர்.1520. கொடுவெஞ் சிலைவாய்க் கணையிற் கொடிதாய்நடுநா ளிரவின் னவைதான் மிகுமானெடுவெண் ணிலவின் னிமிர்தேர் பரியாதடுமால் வழிநின் றறனே யருளாய்.1521. கயலா லிவையென் றுகவிழ்ந் துகிடந்தயலே னறியா மையுரைத் ததெலாமியலா ததுவோ வினியேற் கினியீருயலா வதுகண் மலர்கா ளுரையீர்.1522. நெறிநீர் வளையு நிழனித் திலமும்பொறிநீ ரபுனைந் தெழுதிப் புகழும்வெறிதா ரவனெவ் வழியே கினனீரறிவீ ருரையீ ரமர்தோ ளிணைகாள்.1523. இழுதார் சுடர்வே லிளையா னகலத்துழுதீ ருடன்வெம் முலைகாள் வயிரத்தொழுவாய் விடையைத் தொடர்கிற் றிலிரென்றழுதா டடமா கவணங் கிழையே.1524. தகைவா டியதன் னிழல்கண் ணுகுநீர்வகைவா டிவருந் தியழு வதுகண்டகையே லமர்தோ ழியழே லவரோபகையா பவரென் றனள்பான் மொழியே.1525. வெறிமா லைகள்வீழ்ந் துநிலம் புதையப்பொறிமா லைபுனை நிழல்கா ணலளாய்நெறிநா டியபோ யினணீ டினள்கண்டெறிவால் வளைகொண் டுவரும் மினியே.1526. மடமா மயிலே குயிலே மழலைநடைமா ணனமே நலமார் கிளியேயுடனா டுமெனை யனையென் றுருகாத்தொடையாழ் மழலை மொழிசோர்ந் தனளே.1527. மல்லுறை யலங்கன் மார்பன்பிரிவெனு மெரியுள் வீழ்ந்துகல்லுறை நாகு வேய்த்தோட்கதிர்மணி முறுவற் செவ்வாய்வில்லுறை புருவ மாதர்வெந்தனள் கிடப்ப மின்றோயில்லுறை தெய்வ நோக்கியிரங்கிநின் றுரைக்கு மன்றே.1528. புண்ணவாம் புலவு வாட்கைப்பொலன்கழற் புனைந்த பைந்தார்கண்ணவாம் வனப்பி னானைக்காமனே கண்ட போழ்தும்பண்ணவாம் பவளச் செவ்வாய்ப்படாமுலைப் பரவை யல்குற்பெண்ணவா நிற்கு மென்றாற்பிணையனாட் குய்த லுண்டோ.1529. கடத்திடைக் கவளந் தேனெய்கனியைத்தோய்த் தினிய துற்றத்தடக்கையாற் கொடுத்துப் புல்லுந்தவழ்மதக் களிறு நீங்கின்மடப்பிடிக் குய்த லுண்டோவாலடிக் குஞ்சி சூட்டுங்கொடைக்கையான் பிரிந்த பின்றைக்கோதையாட் குய்த லுண்டோ.1530. முயங்கினான் சொன்ன வண்டாய்முகிழ்முலைத் தெய்வஞ் சேரவுயங்குவா ளுணர்ந்து கேள்வற்கூனமும் பிரிவு மஞ்சியியங்குவா னின்ற வாவிதாங்கின ளென்ப போலும்வயங்குபொன் னீன்ற நீலமாமணி முலையி னாளே.1531. வங்சவாய்க் காமன் சொன்னமணிநிற வண்டு காணீர்துஞ்சுவேன் றுயரந் தீரத்தொழுதகு தெய்வ மாவீர்மஞ்சுதோய் செம்பொன் மாடத்தென்மனை தன்னு ளென்றாள்பஞ்சிமேன் மிதிக்கும் போதும்பனிக்குஞ்சீ றடியி னாளே.1532. நொந்தெடுக் கலாது வீங்கும்வனமுலை நுசுப்பிற் றேய்ந்தோர்பந்தெடுக் கலாத நங்கைபால்கடை வெண்ணெய்ப் பாவைவெந்துடன் வெயிலுற் றாங்குமெலிந்துக விளங்கும் வெள்ளிவந்துவா னிட்ட சுட்டிவனப்பொடு முளைத்த தன்றே.1533. எரிநுதி யுற்ற மாவி னிளந்தளிர் போன்று மாழ்கிப்புரிநரம் பிசையிற் றள்ளிப் புன்கணுற் றழுத லாலேயரிகுரற் கொண்ட பூச லகத்தவர்க் கிசைப்ப வீண்டித்திருவிரி கோதை நற்றாய் நிப்புதி சேர்ந்து சொன்னாள்.1534. விழுத்திணைப் பிறந்து வெய்யவேட்கைவே ரரிந்து மெய்ந்நின்றிழுக்கமொன் றானு மின்றியெய்திய தவத்தின் வந்துவழுக்குத லின்றி விண்ணோன்வச்சிர நுதியி னிட்டவெழுத்தனான் றந்த வின்பமின்னுநீ பெறுதி யென்றாள்.1535. பிறங்கின கெடுங்கள் யாவும்புணர்ந்தவர் பிரிவர் பேசினிறங்கின வீழு மேலாயோங்கிய வெண்ணில் யோனிப்பிறந்தவர் சாவர் செத்தார்பிறப்பவே யென்ன நோக்கிக்கறங்கிசை வண்டு பாடுங்கோதைநீ கவல லென்றாள்.1536. எரிதலைக் கொண்ட காமத்தின்பநீர்ப் புள்ளி யற்றாற்பிரிவின்கட் பிறந்த துன்பம்பெருங்கட லனைய தொன்றாலுருகிநைந் துடம்பு நீங்கினிம்மயோ டும்மை யின்றியிருதலைப் பயனு மெய்தாரென்றுயாங் கேட்டு மன்றே.1537. மன்னுநீர் மொக்கு ளொக்கு மானிட ரிளமை யின்பமின்னினொத் திறக்குஞ் செல்வம் வெயிலுறு பனியி னீங்குமின்னிசை யிரங்கு நல்யா ழிளியினு மினிய சொல்லாயன்னதால் வினையி னாக்க மழுங்குவ தென்னை யென்றாள்.1538. பஞ்சிறை கொண்ட பைம்பொற்கலைபுறஞ் சூழ்ந்து வைத்துநஞ்சிறை கொண்ட நாகப்படம்பழித் தகன்ற வல்குல்வெஞ்சிறைப் பள்ளி யாகவிழுமுலைத் தடத்து வைகத்தஞ்சிறைப் படுக்க லாதார்தம்பரி வொழிக வென்றாள்.1539. வாசமிக் குடைய தாரான் வண்டினுக் குரைத்த மாற்றப்பாசத்தா லாக்கப் பட்ட வாவிய ளல்ல தெல்லாம்பேசினார் பிணையன் மாலை பிசைந்திடப் பட்ட தொத்தாடூசுலாம் பரவை யல்குற் றூமணிப் பாவை யன்னாள்.1540. பையர விழுங்கப் பட்டபசுங்கதிர் மதிய மொத்துமெய்யெரி துயரின் மூழ்கவிதிர்விதிர்த் துருகி நையுமையிருங் குழலி னாடன்மைந்தனை வலையிற் சூழ்ந்துகையரிக் கொண்டுங் காணாள்காளையுங் காலிற் சென்றான்.1541. காழகச் சேற்றுட் டீம்பால்கதிர்மணிக் குடத்தி னேந்திவீழ்தரச் சொரிவ தேபோல்விளங்கொளித் திங்கட் புத்தேள்சூழிருட் டொழுதி மூழ்கத்தீங்கதிர் சொரிந்து நல்லார்மாழைகொண் முகத்திற் றோன்றிவளைகடன் முளைத்த தன்றே.1542. ஏறனாற் கிருளை நீங்கக் கைவிளக் கேந்தி யாங்குவீறுயர் மதியந் தோன்ற விரைவொடு போய பின்றைமாறிலாப் பருதி வட்டம் வருதிரை முளைத்த வாங்கணாறுசெ லொருவற் கண்ண லணிகல மருள லுற்றான்.1543. எவ்வூரீர் ரெப்பதிக்குப் போந்தீர்நும்மனைவியர்தா மெனைவர் மக்களொவ்வாதார் தாமெனைவ ரொப்பார்மற்றெனைவர்நீ ருரைமி னென்றாற்கிவ்வூரே னிப்பதிக்குப் போந்தேனென்மனைவியரு நால்வர் மக்களொவ்வாதார் தாமில்லை யொப்பானொருவனென வுரைத்தான் சான்றோன்.1544. ஒப்பா னொருமகனே நால்வரொருவயிற்றுட் பிறந்தா னென்னநக்கான் பெருஞ்சான்றோ னம்பிபோல்யாருலகி லினியா ரென்னமிக்கா னுரைப்பதுவு மிக்கதேபோலுமால் வினவிக் கேட்பேன்றக்காய் குறித்த துரையென்றான்றானுரைப்பக் கேட்கின் றானே.1545. நற்றானஞ் சீல நடுங்காத்தவமறிவர் சிறப்பிந் நான்குமற்றாங்குச் சொன்ன மனைவியரிந்நால்வரவர் வயிற்றுட் டோன்றியுற்றா னொருமகனே மேற்கதிக்குக்கொண்டுபோ முரவோன் றன்னைப்பெற்றார் மகப்பெற்றா ரல்லாதார்பிறர்மக்கள் பிறரே கண்டீர்.1546. படநாகந் தோலுரித்தாற் போற்றுறந்துகண்டவர்மெய் பனிப்ப நோற்றிட்டுடனாக வைம்பொறியும் வென்றார்க்குவந்தீத றான மாகுந்திடனாகத் தீந்தேனுந் தெண்மட்டுமுயிர்க்குழா மீண்டி நிற்றற்கிடனாகு மூனுமிவை துறத்தலேசீலமென் றுரைத்தார் மிக்கோர்.1547. ஓவா திரண்டுவவு மட்டமியும்பட்டினிவிட் டொழுக்கங் காத்தறாவாத் தவமென்றார் தண்மதிபோன்முக்குடைக்கீழ்த் தாதை பாதம்பூவே புகைசாந்தஞ் சுண்ணம்விளக்கிவற்றாற் புனைத னாளுமேவா விவைபிறவும் பூசனையென்றீண்டியநூல் கரைகண் டாரே.1548. இந்நால்வர் துணைவியராக் காதன்மகனிவனா வுடையார் போகிப்பொன்னார மார்பிற் புரந்தரராய்ப்பூமி முழுது மாண்டுமன்னாகி முக்குடைக்கீழ் வாமன்சிறப்பியற்றி வரம்பி லின்பம்பின்னா விளைவித்துப் பிறவாவுலகெய்தல் பேச லாமே.1549. மட்டார்பூம் பிண்டி வளங்கெழுமுக்குடைக்கீழ் மாலே கண்டீர்முட்டாத வின்பப் புதாத்திறக்குந்தாளுடைய மூர்த்தி பாதமெட்டானும் பத்தானு மில்லாதார்க்கிவ்வுலகி லின்ப மேபோலொட்டாவே கண்டீர் வினையவனைத்தேறாதார்க் குணர்ந்தீ ரன்றே.1550. வேற்றுவ ரில்லா நுமரூர்க்கேசெல்லினும் வெகுண்டீர் போலவாற்றுணாக் கொள்ளா தடிபுறத்துவைப்பீரே யல்லிர் போலுங்கூற்றங்கொண் டோடத் தமியேகொடுநெறிக்கட் செல்லும் போழ்தினாற்றுணாக் கொள்ளீ ரழகலாலறிவொன்று மிலிரே போலும்.1551. அளைவது காம மடுநறவுநெய்யொழுகு மூனும் பின்னாவிளைவது தீவினையே கண்டீரிவைமூன்றும் விடுமி னென்றாற்றளையவிழ் கோதையார் தாமஞ்சேர்வெம்முலைபோல் வீங்கிக் கண்சேந்துறைய வுறுதி யுரைப்பாரையோஒபாவ முணரா ரேகாண்.1552. இழுதன்ன வெண்ணிணத்த செந்தடிக்கேயேட்டைப்பட் டிரும்பிற் போர்த்தபழுதெண்ணும் வன்மனத்தா ரோட்டைமரச்செவியர் கேளார் பால்போன்றறொழுகியமு தூறுநல் லறத்தையோர்கிலரூன் செய்கோட் டக்குக்கழுகுண்ண வள்ளூர மேசுமந்துபுள்ளிற்கே புறஞ்செய் கின்றார்.1553. கையாற் பொதித்துணையே காட்டக்கயற்கண்ணா ளதனைக் காட்டாளையா விளாம்பழமே யென்கின்றீராங்கதற்குப் பருவ மன்றென்செய்கோ வெனச்சிறந்தாள் போற்சிறவாக்கட்டுரையாற் குறித்தவெல்லாம்பொய்யே பொருளுரையா முன்னேகொடுத்துண்டல் புரிமின் கண்டீர்.1554. பனிமதி யின்கதிர் பருகு மாம்பல்போன்முனிமதி முகத்தியர் முறுவ னம்பினார்துனிவளர் கதிகளுட் டோன்றி நாடகங்கனியநின் றாடுவர் கடையில் காலமே.1555. நிழனிமிர் நெடுமதி நிகரி றீங்கதிர்ப்பழனவெண் டாமரை பனிக்கு மாறுபோற்குழனிமிர் கிளவியார் கோல மஞ்சினார்தொழநிமிர்ந் தமரராய்த் துறக்க மாள்வரே.1556. இன்னவா றுறுதி கூறியெரிமணி வயிர மார்ந்தபொன்னவிர் கலங்க ளெல்லாம்பொலிவொடு புகன்று நீட்டிச்சென்மினீ ரென்று கூறவலங்கொண்டு தொழுது சென்றான்வின்மரீஇ நீண்ட தோளான்வெயிற்கட நீந்த லுற்றான்.