இலம்பகம் 5 · சீவக சிந்தாமணி · திருத்தக்க தேவர்

பதுமையார் இலம்பகம்

சீவக சிந்தாமணி 5 · பதுமையார் இலம்பகம்

1166. வீட்டருஞ் சிறையிற் றேவன்விடுத்துயக் கொள்ளப் பட்டகோட்டமில் குணத்தி னான்போயென்செய்கின் றான்கொ லென்னிற்கூட்டரக் கெறிந்த பஞ்சிற்கூடிய பளிங்கிற் றோன்றுந்தீட்டரும் படிவ மன்னான்றிறங்கிளந் துரைத்து மன்றே.1167. விலங்கிவில் லுமிழும் பூணான்விழுச்சிறைப் பட்ட போழ்துமலங்கலந் தாரி னான்வந்தருஞ்சிறை விடுத்த போழ்தும்புலம்பலு மகிழ்வு நெஞ்சிற்பொலிதலு மின்றிப் பொன்னார்ந்துலங்கலந் துயர்ந்த தோளானூழ்வினை யென்று விட்டான்.1168. வானர முகள நாக மலர்துதைந் தொழுக வஞ்சித்தேனிரைத் தெழுந்து திங்க ளிறாலெனச் சென்று மொய்க்குங்கானம ரருவிக் குன்றிற் காய்கதிர் சுமந்தோர் திங்கண்மேனிமிர்ந் தேறி யாங்குத் தேவன்வெற் பேறி னானே.1169. திங்களைத் தெளித்திட் டன்னபாற்கடற் றிரைசெய் தெண்ணீர்வெங்கள்விட் டலர்ந்த கண்ணிவிண்ணவ னுரிமை தன்னான்மங்கல வகையி னாட்டிமணியணி கலங்கள் சேர்த்திப்பங்கய நெடுங்க ணானைப்பவித்திர குமர னென்றான்.1170. பொன்னணி காம்பு செய்த பொழிகதிர்த் திங்கள் போலும்பின்னிய முத்த மாலைப் பிணையறாழ் குடையி னீழற்கன்னியர் கவரி வீசக் கனமணிக் குழைவில் வீசவின்னிசைக் கூத்து நோக்கி யிருந்தனன் றிலக மன்னான்.1171. இருமலர்க் குவளை யுண்க ணிமைப்பிலாப் பயத்தைப் பெற்றவரிமலர்த் தாரி னான்ற னழகுகண் டளிய வென்னாத்திருமலர்க் கோதை யைம்பாற் றேவியர் தொடர்பு கேட்பவெரிமணிப் பூணி னானு மின்னண மியம்பி னானே.1172. பிணிக்குலத் தகவயிற் பிறந்த நோய்கெடுத்தணித்தகை யுடம்பெனக் கருளி நோக்கினான்கணிப்பருங் குணத்தொகைக் காளை யென்றனன்மணிக்கலத் தகத்தமிர் தனைய மாண்பினான்.1173. கடற்சுற வுயரிய காளை யன்னவனடற்கரும் பகைகெடுத் தகன்ற நீணிலமடத்தகை யவளொடும் வதுவை நாட்டிநாங்கொடுக்குவ மெனத்தெய்வ மகளிர் கூறினார்.1174. செருநிலத் தவனுயிர் செகுத்து மற்றெனக்கிருநில மியைவதற் கெண்ணல் வேண்டுமோதிருநிலக் கிழமையுந் தேவர் தேயமுந்தருநிலத் தெமக்கெனிற் றருகுந் தன்மையீர்.1175. மண்மிசைக் கிடந்தன மலையுங் கானமுநண்ணுதற் கரியன நாடும் பொய்கையுங்கண்மனங் குளிர்ப்பன வாறுங் காண்பதற்கெண்ணமொன் றுளதெனக் கிலங்கு பூணினாய்.1176. ஊற்றுநீர்க் கூவலு ளுறையு மீனனார்வேற்றுநாட தன்சுவை விடுத்தன் மேயினார்போற்றுநீ போவல்யா னென்று கூறினாற்காற்றின தமைதியங் கறியக் கூறினான்.1177. இம்மலைக் கிரண்டு காத மிறந்தபி னிருண்டு தோன்றுமம்மலை யரண பாத மென்பதன் றாள்வாய்த் தோன்றுந்தம்வினை கழுவு கின்றார் சாரணர் தரணி காவல்வெம்மையி னகன்று போந்து விழைவறத் துறந்து விட்டார்.1178. சிந்தையிற் பருதி யன்னார் சேவடி யிறைஞ்ச லோடும்வெந்திற லியக்கி தோன்றி விருந்தெதிர் கொண்டு பேணித்தந்தவ ளமிர்த மூட்ட வுண்டவட் பிரிந்த காலைச்சந்துடைச் சாரல் சேறி தரணிமேற் றிலக மன்னாய்.1179. அங்குநின் றகன்றபி னையைங் காவதம்.வெங்களி விடுமத வேழப் பேரினந்தங்கிய காடது தனிச்செல் வாரிலைகங்கையின் கரையது கடலிற் றோன்றுமே.1180. புனலெரி தவழ்ந்தெனப் பூத்த தாமரை.வனமது வாளென வாளை பாய்வனமனமகிழ் பெருந்தடம் வலத்திட் டேகுதியினமலர்த் தாரினா யிரண்டு காதமே1181. காந்திய மணியொடு வயிரம் பொன்கலந்தேந்தனின் றோளென விரண்டு குன்றுபோய்ப்பூந்துகின் மகளிரிற் பொலிந்து போர்த்ததோர்பேந்தரு பேய்வனம் பெரிய காண்டியே.1182. இளவெயின் மணிவரை யெறித்திட் டன்னதோரளவரு குங்குமத் தகன்ற மார்பினாய்களவினி னணிநலங் கவர்ந்த கள்வவென்றுளர்மணிக் கொம்பனா ருருகி நைபவே.1183. பழங்குழைந் தனையதோர் மெலிவிற் பையெனமுழங்கழல் வேட்கையின் முறுகி யூர்தரத்தழும்பத மிதுவெனச் சார்ந்து புல்லலும்பிழிந்துயி ருண்டிடும் பேய்க ளாபவே.1184. கண்டபேய் நகரி னீங்கிக் காவதங் கடந்து தோன்றும்வெண்டலைப் புணரி வீசிக் கிடந்தபொற் றீவிற் றாகிக்கொண்டுலப் பரிய செந்நெல் கொடிக்கரும் புடுத்த வேலிநுண்டுகி னுழைந்த வல்குற் பவளமொத் தினியதொன்றே.1185. படுமழை பருவம் பொய்யாப் பல்லவ தேய மென்னுந்தடமலர்க் குவளைப் பட்டந் தழுவிய யாணர் நன்னாட்டிடைநெறி யசைவு தீர விருந்தவ ணேக லுற்றாற்கடநெறி கடத்தற் கின்னாக் கல்லத ரத்த முண்டே.1186. நுதிகொண்டன வெம்பர னுண்ணிலைவேல்பதிகொண்டு பரந்தன போன்றுளவால்விதிகண்டவ ரல்லது மீதுசெலார்வதிகொண்டதொர் வெவ்வழல் வாய்சொலின்வேம்.1187. குழவிப்பிடி குஞ்சர மாழ்குமெனத்தழுவிச்சுடு வெவ்வழ றாங்குவனகெழுவிப்பெடை யைக்கிளர் சேவறழீஇத்தொழுதிச்சிற கிற்றுய ராற்றுவன.1188. கலையின் பிணை கன்றிடு மென்றுகசிந்திலையின்னிழ லவ்வயி னின்மையினானிலையின்னிழ றானது நின்றுகொடுத்துலையும்வெயி னின்றுரு கும்முரவோய்1189. கடநாக மதங்கலந் துக்கநிலத்துடைநாணென மின்னென வொண்மணியம்படநாக மழன்று பதைத்துவருமடனாமய லார்மனம் வைப்பதுவே.1190. நெறியிற்றளர் வார்தம நெஞ்சுருகிப்பொறியிற்றளர் வார்புரி வார்சடையாரறிமற்றவர் தாபத ரவ்வழியார்கறைமுற்றிய காமரு வேலவனே.1191. குலைவாழை பழுத்த கொழும்பழனுநிலைமாத்தன தேமுறு தீங்கனியும்பலவீன்றன முள்ளுடை யள்ளமிர்துமலையாற்றயல் யாவு மடுத்துளவே.1192. வளம்பைம்பொனும் வாளொளி நீண்மணியுமொளிர்கின்றன வோசனை நீணிலமுந்தளர்வொன்றிலர் தாபதர் தாம்விழையுங்குளிர்கொண்டதொர் சித்திர கூடமதே1193. முழவின்னிசை மூரி முழங்கருவிகழையின்றிறுணி சந்தோடு கல்லெனவீர்த்திழியும்வயி ரத்தொடி னம்மணிகொண்டழியும்புன லஞ்சன மாநதியே1194. இதுபள்ளி யிடம்பனி மால்வரைதானதுதெள்ளறல் யாறுவை தேமரமாக்கதிதள்ளி யிராது கடைப்பிடிநீமதிதள்ளி யிடும்வழை சூழ்பொழிலே1195. வருந்து நீர்மையம் மாதவர் பள்ளியுட்குருந்த மேறிய கூரரும் பார்முல்லைபொருந்து கேள்வரைப் புல்லிய பொன்னனார்மருங்கு போன்றணி மாக்கவின் கொண்டதே.1196. குரவ நீடிய கொன்றையங் கானின்வாய்வரகு வாளிற் றொலைச்சுநர் பாடலினரவ வண்டொடு தேனினம் யாழ்செயும்பரவை மாநிலம் பன்னிரு காதமே.1197. ஆங்க வெல்லை யிகந்தடு தேறலும்பூங்கட் பொற்குட முந்நிறைத் தீண்டியவேங்கு கம்பலத் தின்னிசை சூழ்வயற்றாங்கு சீர்த்தக்க நாட்டணி காண்டியே.1198. பாளைவாய்க் கமுகி னெற்றிப் படுபழ முதிர விண்டுநீள்கழைக் கரும்பி னெற்றி நெய்ம்முதிர் தொடையல் கீறிவாளைவா யுறைப்ப நக்கி வராலொடு மறலு மென்பகாளைநீ கடந்து செல்லுங் காமரு கவின்கொ ணாடே.1199. அங்கதன் றனதிடங் கடந்து போம்வழிப்பொங்குபூஞ் சண்பகப் போது போர்த்துராயங்கநாட் டரிவையர் கூந்த னாறித்தேனெங்குமொய்த் திழிவதோர் யாறு தோன்றுமே1200. மின்னுடைய மணிபல வரன்றி மேதகுதன்னுடைய நலம்பகிர்ந் துலக மூட்டலிற்பொன்னுடைக் கலையல்குற் கணிகைப் பூம்புனன்மன்னுடை வேலினாய் வல்லை நீந்தினால1201. யானைவெண் மருப்பினா லியற்றி யாவதுமானமாக் கவரிவெண் மயிரின் வேய்ந்தனதேனெயூன் கிழங்குகாய் பழங்கள் செற்றியகானவர் குரம்பைசூழ் காடு தோன்றுமே1202. கடுந்துடிக் குரலொடு கடையுங் கட்குரனெடுங்கைமான் குரன்மணி யருவி நீள்குரலடும்புலிக் குரலொடு மயங்கி யஞ்சியவிடும்பைமான் குரல்விளி யெங்கு மிக்கவே.1203. பொன்னணி திகிரியஞ் செல்வன் பொற்புடைக்கன்னிய மகளிரிற் காண்டற் கரியனநன்மணி புரித்தன வாவி நான்குளகன்னவி றோளினாய் காட்டு வாயவே.1204. அருங்கலச் சேயித ழார்ந்த வாவியொன்றிரும்பெரி பொன்செயு மிரத நீரதொன்றொருங்குநோய் தீர்ப்பதொன் றமிர்த மல்லதொன்றரும்பவிழ் குவளைநீர் வாவி யாகுமே.1205. கையடு சிலையினர் காட்டுள் வாழ்பவர்பையுடை யாக்கையர் பாவ மூர்த்தியரையெனத் தோன்றுவர் தோன்றி யாளழித்துய்வகை யரிதென வுடலங் கொள்பவே.1206. அண்ணன்மே லரிவையர் கண்ணின் மொய்த்தவண்மண்ணின்மேன் மாந்தர்கண் மொய்க்கும் வாவியையெண்ணமொன் றின்றியே யிடத்திட் டேகினாற்றுண்ணெனச் சிலையவர் தொழுது காண்பவே1207. பாடல்வண் டியாழ்செயும் பசும்பொற் கிண்கிணித்தோடலர் கோதைமின் றுளும்பு மேகலையாடிய கூத்தித னசைந்த சாயல்போன்றூடுபோக் கினியதங் கோரைங் காதமே.1208. கோதைவீழ்ந் ததுவென முல்லை கத்திகைப்போதுவேய்ந் தினமலர் பொழிந்து கற்புடைமாதரார் மனமெனக் கிடந்த செந்நெறிதாதின்மே னடந்ததோர் தன்மைத் தென்பவே1209. மணியியற் பாலிகை யனைய மாச்சுனையணிமணி நீண்மல ரணிந்த தாயிடையிணைமலர்ப் படலிகை போலு மீர்ம்பொழில்கணையுமிழ் சிலையினாய் கண்டு சேறியே.1210. இலைப்பொலி பூண்முலை யெரிபொன் மேகலைக்குலத்தலை மகளிர்தங் கற்பிற் றிண்ணியவலைத்துவீ ழருவிக ளார்க்குஞ் சோலைசூழ்வலத்தது வனகிரி மதியிற் றோன்றுமே.1211. கரியவன் றிருமுடி கவிழ்த்த சேவடிப்பெரியவன் றிருமொழி பிறழ்த லின்றியேமரியவ ருறைதலின் மதன கீதமேதிரிதரப் பிறந்ததோர் சிலம்பிற் றென்பவே.1212. ஏற்றரு மணிவரை யிறந்து போனபின்மாற்றரு மணநெறி மகளிர் நெஞ்சமேபோற்பல கவர்களும் பட்ட தாயிடையாற்றல்சால் செந்நெறி யறியக் கூறுவாம்.1213. சுரும்புசூழ் குவளையோர் சுனையுண் டச்சுனைமருங்கிலோர் மணிச்சிலா வட்ட முண்டவண்விரும்பிவண் டிமிர்வதோர் வேங்கை வேங்கையின்மருங்கிலோர் செந்நெறி வகுக்கப் பட்டதே.1214. கைம் மலர்த்த அனைய காந்தள் கடிமலர் நாறு கானம்மொய்ம் மலர்க் குவளைக் கண்ணி மொய்ம்ப நீ முழுதும் நீந்திவைம் மலர்த்து இலங்கும் வெள்வேல் மத்திம தேயம் ஆளும்கொய்ம் மலர்த் தாரினானைக் கண்ணுறு குணம் அது என்றான்.1215. மண்ணகங் காவன் மன்னன் மாதரம் பாவை மாசிலொண்ணுதன் மகளைத் தந்தீங் குறைகென வொழுகு நாளுள்வெண்மதி யிழந்த மீன்போற் புல்லென வெய்தி நின்றவண்ணனின் றோழ ரெல்லா மவ்வழி யடைய ரென்றான்.1216. நெட்டிடை நெறிகளு நிகரில் கானமுமுட்டுடை முடுக்கரு மொய்கொள் குன்றமுநட்புடை யிடங்களு நாடும் பொய்கையுமுட்பட வுரைத்தன னுறுதி நோக்கினான்.1217. செல்கதி மந்திரஞ் செவியிற் செப்பியமல்லலங் குமரனை வாழ நாட்டவேவல்லவன் மந்திர மூன்றுங் கொள்கெனச்சொல்லின னவற்றது தொழிலுந் தோன்றவே.1218. கடுந்தொடைக் கவர்கணைக் காமன் காமுறப்படுங்குர றருமிது பாம்பு மல்லவுங்கடுந்திற னோய்களுங் கெடுக்கும் வேண்டியவுடம்பிது தருமென வுணரக் கூறினான்.1219. கந்தடு களிறு கொல்லுங்கருவரை யுழுவை யன்னான்மந்திர மூன்று மோதிவானவிற் புரையும் பைந்தாரிந்திரன் றன்னை நோக்கியியக்கியர் குழாத்தை நோக்கிச்சிந்தையிற் செல்வ லென்றான்றேவனுஞ் செலவு நேர்ந்தான்.1220. மனைப்பெருங் கிழத்தி மாசின்மலைமக டன்னை யான்சென்றெனைத்தொரு மதியி னாங்கெர்லெய்துவ தென்று நெஞ்சினினைத்தலுந் தோழ னக்குநிழலுமிழ்ந் திலங்கு செம்பொற்பனைத்திரண் டனைய தோளாய்பன்னிரு மதியி னென்றான்.1221. ஆறிரு மதியி னெய்தி யரட்டனை யடர்த்து மற்றுன்வீறுயர் முடியுஞ் சூடி விழுநிலக் கிழமை பூண்டுசாறயர்ந் திறைவற் பேணிச் சார்பறுத் துய்தி யென்றுகூறினன் கதிர்கள் பொங்குங் குளிர்மணி முடியினானே.1222. சொற்றிறற் சூழ்ச்சி மிக்க சுதஞ்சணன் சுருங்க நாடிவிற்றிறற் குருசிற் கெல்லாம் வேறுவே றுரைப்பக் கேட்டேசுற்றிய தோழி மாரை விடுத்தனன் றொழுது நின்றான்கற்பக மரமுஞ் செம்பொன் மாரியுங் கடிந்த கையான்.1223. சேட்டிளஞ் செங்கயல் காப்பச் செய்துவிற்பூட்டிமேல் வைத்தன புருவப் பூமகடீட்டிருந் திருநுதற் றிலக மேயெனமோட்டிருங் கதிர்திரை முளைத்த தென்பவே.1224. அழல்பொதிந்த நீளெஃகி னலர்தார்மார்பற் கிம்மலைமேற்கழல்பொதிந்த சேவடியாற் கடக்கலாகா தெனவெண்ணிக்குழல்பொதிந்த தீஞ்சொல்லார் குழாத்தினீங்கிக் கொண்டேந்திநிழல்பொதிந்த நீண்முடியா னினைப்பிற்போகி நிலத்திழிந்தான்1225. வண்டளிர்ச் சந்தனமும் வழையுமாவும் வான்றீண்டிவிண்டொழுகு தீங்கனிகள் பலவுமார்ந்த வியன்சோலைமண்கருதும் வேலானை மறித்துங்காண்க வெனப்புல்லிக்கொண்டெழுந்தான் வானவனுங் குருசிறானே செலவயர்ந்தான்1226. வாளுழலை பாய்ந்திளைய வளநா கிட்டி னமென்னுந்தாளொழியப் போரேறு தனியே போந்த தெனவெண்ணிநீளருவிக் கண்ணீர்வீழ்த் தலறி வண்ணங் கரிந்துருகிக்கோளுழுவை யன்னாற்குக் குன்ற முந்நின் றழுதனவே.1227. மிக்கார்தங் கேட்டின்கண் மேன்மையில்லாச் சிறியார்போனக்காங்கே யெயிறுடைந்த நறவமுல்லை நாள்வேங்கைதக்கார்போற் கைம்மறித்த காந்தளந்தோ தகாதெனவேதொக்கார்போற் பன்மாவு மயிலுந்தோன்றித் துளங்கினவே.1228. கொல்லை யகடணைந்து குறும்பு சேர்ந்து தமியாரைமுல்லை முறுவலித்து நகுதிர் போலு மினிநும்மைப்பல்லை யுகுத்திடுவ மென்று பைம்போ தலர்சிந்தித்தொல்லை நிறங்கருகித் தும்பி பாய்ந்து துகைத்தனவே.1229. தோடேந்து பூங்கோதை வேண்டேங் கூந்தறொடே லெம்மில்பீடேந் தரிவையரிற் பெயர்கென் றூடு மடவார்போற்கோடேந்து குஞ்சரங்க டெருட்டக் கூடா பிடிநிற்குங்காடேந்து பூஞ்சாரல் கடந்தான் காலிற் கழலானே.1230. காழக மூட்டப் பட்ட காரிருட் டுணியு மொப்பானாழளை யுடும்பு பற்றிப் பறித்துமார் பொடுங்கி யுள்ளான்வாழ்மயிர்க் கரடி யொப்பான் வாய்க்கிலை யறித லில்லான்மேழகக் குரலி னானோர் வேட்டுவன் றலைப்பட் டானே.1231. கொடிமுதிர் கிழங்கு தீந்தேன்கொழுந்தடி நறவொ டேந்திப்பிடிமுதிர் முலையி னாடன்றழைத்துகிற் பெண்ணி னோடுந்தொடுமரைத் தோலன் வில்லன்மரவுரி யுடையன் றோன்றவடிநுனை வேலி னான்கண்டெம்மலை யுறைவ தென்றான்.1232. மாலைவெள் ளருவி சூடிமற்றிதா தோன்று கின்றசோலைசூழ் வரையி னெற்றிச்சூழ்கிளி சுமக்க லாற்றாமாலையந் தினைகள் காய்க்கும்வண்புன மதற்குத் தென்மேன்மூலையங் குவட்டுள் வாழுங்குறவருட் டலைவ னென்றான்1233. ஊழினீ ருண்ப தென்னென்றுரைத்தலு முவந்து நோக்கிமோழலம் பன்றி யோடுமுளவுமாக் காதி யட்டபோழ்நிணப் புழுக்க றேனெய்பொழிந்துகப் பெய்து மாந்தித்தோழயாம் பெரிது முண்டுந்தொண்டிக்க ளிதனை யென்றான்.1234. ஊனொடு தேனுங் கள்ளுமுண்டுயிர் கொன்ற பாவத்தீனராய்ப் பிறந்த திங்ஙனினியிவை யொழிமி னென்னக்கானில்வாழ் குறவன் சொல்லுங்தகள்ளொடூன் றேன்கை விட்டாலேனையெம் முடம்பு வாட்டலெவன்பிழைத் துங்கொ லென்றான்.1235. ஊன்சுவைத் துடம்பு வீக்கி நரகத்தி லுறைத னன்றோவூன்றினா துடம்பு வாட்டித் தேவரா யுரைத னன்றோவூன்றியிவ் விரண்டினுள்ளு முறுதிநீ யுரைத்தி டென்னவூன்றினா தொழிந்து புத்தே ளாவதே யுறுதி யென்றான்.1236. உறுதிநீ யுணர்ந்து சொன்னாயுயர்கதிச் சேறி யேடாகுறுகினா யின்ப வெள்ளங்கிழங்குணக் காட்டு ளின்றேயிறைவனூற் காட்சி கொல்லாவொழுக்கொடூன் றுறத்தல் கண்டாயிறுதிக்க ணின்பந் தூங்குமிருங்கனி யிவைகொ ளென்றான்.1237. என்றலுந் தேனு மூனும் பிழியலு மிறுக நீக்கிச்சென்றடி தொழுது செல்கென் றேம்பெய்நீள் குன்றமென்றுகுன்றுறை குறவன் போகக் கூரெரி வளைக்கப் பட்டபஞ்சவர் போல நின்ற பகட்டினப் பரிவு தீர்த்தான்.1238. இலங்கொளி மரகத மிடறி யின்மணிகலந்துபொன் னசும்புகான் றொழுகி மானினஞ்சிலம்புபாய் வருடையொ டுகளுஞ் சென்னிநீள்விலங்கல்சென் றெய்தினான் விலங்கன் மார்பினான்.1239. அந்தர வகடுதொட் டணவு நீள்புகழ்வெந்தெரி பசும்பொனின் விழையும் வெல்லொளிமந்திர வாய் மொழி மறுவின் மாதவரிந்திரர் தொழுமடி யினிதி னெய்தினான்.1240. முனிவரு முயன்று வான்கண்மூப்பிகந் திரிய வின்பக்கனிகவர் கணனு மேத்தக்காதிகண் ணரிந்த காசிறனிமுதிர் கடவுள் கோயிறான்வலங் கொண்டு செல்வான்குனிதிரை முளைத்த வெய்யோன்குன்றுசூழ் வதனை யொத்தான்.1241. தண் கயம் குற்ற போதும்தாழ்சினை இளிந்த வீயும்வண் கொடிக் கொய்த பூவும்வார்ந்து மட்டு உயிர்ப்ப ஏந்தித்திண் புகழ் அறிவன் பாதம்திருந்து கைத் தலத்தின் ஏற்றிப்பண்பு கொள் குணம் கொள்கீதம் பாணியில் பாடுகின்றான்.1242. ஆதி வேதம் பயந்தோய்நீ யலர்பெய்ம் மாரி யமைந்தோய்நீநீதி நெறியை யுணர்ந்தோய்நீ நிகரில் காட்சிக் கிறையோய்நீநாத னென்னப் படுவோய்நீ நவைசெய் பிறவிக் கடலகத்துன்பாத கமலந் தொழுவேங்கன் பசையாப் பவிழப் பணியாயே.1243. இன்னாப் பிறவி யிகந்தோய்நீயிணையி லின்ப முடையோய்நீமன்னா வுலக மறுத்தோய்நீவரம்பில் காட்சிக் கிறையோய்நீபொன்னா ரிஞ்சிப் புகழ்வேந்தேபொறியின் வேட்கைக் கடலழுந்தியொன்னா வினையி னுழல்வேங்களுயப்போம் வண்ண முரையாயே.1244. உலக மூன்று முடையோய்நீயொண்பொ னிஞ்சி யெயிலோய்நீதிலக மாய திறலோய்நீதேவரேத்தப் படுவோய்நீயலகை யில்லாக் குணக்கடலேயாரு மறியப் படாயாதிகொலையி லாழி வலனுயர்த்தகுளிர்முக் குடையி னிழலோய்நீ.1245. அடியுலக மேதிதி யலர்மாரி தூவமுடியுலக மூர்த்தி யுறநிமிர்ந்தோன் யாரேமுடியுலக மூர்த்தி யுறநிமிர்ந்தோன் மூன்றுகடிமதிலுங் கட்டழித்த காவலனீ யன்றே.1246. முரணவிய வென்றுலக மூன்றினையு மூன்றிற்றரணிமேற் றந்தளித்த தத்துவன்றான் யாரேதரணிமேற் றந்தளித்தான் றண்மதிபோ னேமியரணுலகிற் காய வறிவரனீ யன்றே.1247. தீராவினை தீர்த்துத் தீர்த்தந் தெரிந்துய்த்துவாராக் கதியுரைத்த வாமன்றான் யாரேவாராக் கதியுரைத்த வாமன் மலர்ததைந்தகாரார்பூம் பிண்டிக் கடவுணீ யன்றே.1248. அம்மலைச் சினகரம் வணங்கிப் பண்ணவர்பொன்மலர்ச் சேவடி புகழ்ந்த பின்னரேவெம்மலைத் தெய்வதம் விருந்து செய்தபின்செம்மல்போய்ப் பல்லவ தேய நண்ணினான்.1249. அரியலார்ந் தமர்த்தலி னனந்தர் நோக்குடைக்கரியவாய் நெடியகட் கடைசி மங்கையர்வரிவரால் பிறழ்வயற் குவளை கட்பவரிருவரை வினாய்நகர் நெறியின் முன்னினான்.1250. அன்னமு மகன்றிலு மணிந்து தாமரைப்பன்மலர்க் கிடங்குசூழ் பசும்பொற் பாம்புரிக்கன்னிமூ தெயில்கட லுடுத்த காரிகைபொன்னணிந் திருந்தெனப் பொலிந்து தோன்றுமே.1251. அகிறரு கொழும்புகை மாடத் தாய்பொனின்முகிறலை விலங்கிய மொய்கொ ணீள்கொடிப்பகறலை விலங்குசந் திராபம் பான்மையினிகறலை விலங்குவேற் காளை யெய்தினான்.1252. மலரணி மணிக்குட மண்ணு நீரொடுபலர்நலம் பழிச்சுபு பரவ வேகினானலர்கதிர் கரும்பிளை மடுப்ப வாய்நக.ருலகளந் தானென வுள்புக் கானரோ.1253. சந்தனக் காவு சூழ்ந்து சண்பக மலர்ந்த சோலைவந்துவீழ் மாலை நாற்றி மணியரங் கணிந்து வானத்திந்திர குமரன் போல விறைமக னிருந்து காணவந்தர மகளி ரன்னார் நாடக மியற்று கின்றார்.1254. குழலெடுத் தியாத்து மட்டார்கோதையிற் பொலிந்து மின்னுமழலவிர் செம்பொற் பட்டங்குண்டல மாரந் தாங்கிநிழலவி ரல்குற் காசுசிலம்பொடு சிலம்ப நீடோளழகிகூத் தாடு கின்றாளரங்கின்மே லரம்பை யன்னாள்.1255. தண்ணுமை முழவம் வீணைகுழலொடு குயிலத் தண்பூங்கண்ணொடு புருவங் கைகால்கலையல்கு னுசுப்புக் காமரொண்ணுதல் கொண்ட வாடற்றொட்டிமை யுருவ நோக்கிவெண்ணெய்தீ யுற்ற வண்ணமாடவர் மெலிகின் றாரே1256. பாடலொ டியைந்த வாடல் பண்ணமை கருவி மூன்றுங்கூடுபு சிவணி நின்று குழைந்திழைந் தமிர்த மூறவோடரி நெடுங்க ணம்பா லுளங்கிழிந் துருவ வெய்யாவீடமை பசும்பொற் சாந்த மிலயமா வாடு கின்றாள்.1257. வாணுதற் பட்ட மின்ன வார்குழை திருவில் வீசப்பூண்முலை பிறழப் பொற்றோ டிடவயி னுடங்க வொல்கிமாணிழை வளைக்கை தம்மால் வட்டணை போக்கு கின்றாள்காண்வரு குவளைக் கண்ணாற் காளைமே னோக்கி னாளே.1258. நோக்கினா ணெடுங்க ணென்னுங்குடங்கையா னொண்டு கொண்டுவாக்கமை யுருவின் மிக்கான்வனப்பினைப் பருக விப்பாலாக்கிய விலய நீங்கிற்றணங்கனா ணெடுங்கண் பில்கிவீக்குவார் முலையி னெற்றிவெண்முத்தஞ் சொரிந்த வன்றே.1259. செருக்கய னெடுங்க ணாளத் திருமகன் காண்ட லங்சிநெருக்கித்தன் முலையின் மின்னு நிழன்மணி வடத்தை மாதர்பொருக்குநூல் பரிந்து சிந்தாப் பூவெலாங் கரிந்து வாடத்தரிக்கிலாள் காமச் செந்தீத் தலைக்கொளச் சாம்பி னாளே.1260. கன்னிமை கனிந்து முற்றிக்காமுறக் கமழுங் காமத்தின்னறுங் கனியைத் துய்ப்பானேந்தலே பிறர்க ளில்லைபொன்னினா லுடையுங் கற்பென்றுரைத்தவர் பொய்யைச் சொன்னாரின்னிசை யிவற்க லாலென்னெஞ்சிட மில்லை யென்றாள்.1261. கருஞ்சிறைப் பறவை யூர்திக் காமரு காளை தான்கொலிருஞ்சுற வுயர்த்த தோன்ற லேத்தருங் குருசி றான்கொலரும்பெறற் குமர னென்றாங் கறிவயர் வுற்று நின்றாடிருந்திழை யணங்கு மென்றோட் டேசிகப் பாவை யன்னாள்.1262. போதெனக் கிடந்த வாட்கண்புடைபெயர்ந் திமைத்தல் செல்லாதியாதிவள் கண்ட தென்றாங்கரசனு மமர்ந்து நோக்கிமீதுவண் டரற்றுங் கண்ணிவிடலையைத் தானுங் கண்டான்காதலிற் களித்த துள்ளங்காளையைக் கொணர்மி னென்றான்.1263. கைவளர் கரும்புடைக் கடவு ளாமெனினெய்கணை சிலையினோ டிவன்க ணில்லையான்மெய்வகை யியக்கருள் வேந்த னாகுமென்றையமுற் றெவர்களு மமர்ந்து நோக்கினார்.1264. மந்திரம் மறந்து வீழ்ந்து மா நிலத்து இயங்கு கின்றஅந்தர குமரன் என்று ஆங்கு யாவரும் அமர்ந்து நோக்கிஇந்திர திருவற்கு உய்த்தார்க்கு இறைவனும் எதிர் கொண்டு ஓம்பிமைந்தனை மகிழ்வ கூறி மைத்துனத் தோழன் என்றான்.1265. போதவிழ் தெரிய லானும் பூங்கழற் காலி னானுங்காதலி னொருவ ராகிக் கலந்துட னிருந்த போழ்தினூதுவண் டுடுத்த மாலை யுணர்வுபெற் றிலயந் தாங்கிப்போதுகண் டனைய வாட்கட் புருவத்தாற் கலக்கு கின்றாள்.1266. தேனுகுக் கின்ற கண்ணித்திருமக ளாட விப்பாலூனுகுக் கின்ற வைவேலொருமக னுருமிற் றோன்றிவானுகுக் கின்ற மீன்போன்மணிபரந் திமைக்கு மார்பிற்கானுகுக் கின்ற பைந்தார்க்காவலற் றொழுது சொன்னான்1267. கொய்தகைப் பொதியிற் சோலைக்குழவிய முல்லை மௌவல்செய்யசந் திமயச் சாரற்கருப்புரக் கன்று தீம்பூக்கைதரு மணியிற் றெண்ணீர்மதுக்கலந் தூட்டி மாலைபெய்தொளி மறைத்து நங்கைபிறையென வளர்க்கின் றாளே.1268. பவழங்கொள் கோடு நாட்டிப்பைம்பொனால் வேலி கோலித்தவழ்கதிர் முத்தம் பாய்த்தித்தன்கையாற் றீண்டி நன்னாட்புகழ்கொடி நங்கை தன்பேர்பொறித்ததோர் கன்னி முல்லையகழ்கடற் றானை வேந்தேயணியெயி றீன்ற தன்றே.1269. வலம்பலர் கோதை சிந்த மயிலென வொருத்தி யோடிக்கொம்பலர் நங்கை பூத்தாள் பொலிகெனக் குனிந்த விற்கீழம்பலர் கண்ணி யார நிதியறைந் தோகை போக்கிக்கம்பலம் போர்த்த போலுங் கடிமலர்க் காவு புக்காள்.1270. நறவிரி சோலை யாடிநாண்மலர்க் குரவம் பாவைநிறையப்பூத் தணிந்து வண்டுந்தேன்களு நிழன்று பாடவிறைவளைத் தோளி மற்றென்றோழியீ தென்று சேர்ந்துபெறலரும் பாவை கொள்வாள்பெரியதோ ணீட்டி னாளே.1271. நங்கைதன் முகத்தை நோக்கிநகைமதி யிதுவென் றெண்ணியங்குறை யரவு தீண்டியௌவையோ வென்ற போகக்கொங்கலர் கோதை நங்கையடிகளோ வென்று கொம்பேர்செங்கயற் கண்ணி தோழிதிருமகட் சென்று சேர்ந்தாள்.1272. அடிகளுக் கிறைஞ்சி யையனடிகளைத் தொழுது நங்கையடிகளைப் புல்லி யாரத்தழுவிக்கொண் டௌவை மாரைத்கொடியனா யென்னை நாளுநினையெனத் தழுவிக் கொண்டுமிடை மின்னி னிலத்தைச் சேர்ந்தாள்வேந்தமற் றருளு கென்றான்.1273. பதுமையைப் பாம்பு தீண்டிற் றென்றலும் பையு ளெய்திக்கொதிநுனை வேலி னாயிங் கிருக்கெனக் குருசி லேகிக்கதுமெனச் சென்று நோக்கிக் காய்சினங் கடிதற் கொத்தமதிமிகுத் தவல நீக்கு மந்திரம் பலவுஞ் செய்தான்.1274. வள்ளறான் வல்லவெல்லா மாட்டினன் மற்று மாங்கணுள்ளவ ரொன்ற லாத செயச்செய வூறு கேளாதள்ளிலைப் பூணி னாளுக் காவியுண் டில்லை யென்னவெள்ளெயிற் றரவு கான்ற வேகமிக் கிட்ட தன்றே1275. பைங்கதிர் மதிய மென்று பகையடு வெகுளி நாகநங்கையைச் செற்ற தீங்குத் தீர்த்துநீர் கொண்மி னாடும்வங்கமா நிதிய நல்கி மகட்டரு மணிசெய் மான்றேரெங்களுக் கிறைவ னென்றாங் கிடிமுர செருக்கி னானே.1276. மண்டலி மற்றி தென்பாரிராசமா நாக மென்பார்கொண்டது நாக மென்பார்குறைவளி பித்தொ டையிற்பிண்டித்துப் பெருகிற் றென்பார்பெருநவை யறுக்கும் விஞ்சையெண்டவப் பலவுஞ் செய்தாமெனறுகே ளாதி தென்பார்.1277. சிரையைந்தும் விடுது மென்பார்தீற்றுதுஞ் சிருங்கி யென்பார்குரைபுன லிடுது மென்பார்கொந்தழ லுறுத்து மென்பாரிரையென வருத்தக் கவ்வியென்புறக் கடித்த தென்பாருரையன்மி னுதிர நீங்கிற்றுய்யல ணங்கை யென்பார்.1278. கையொடு கண்டங் கோப்பார்கனைசுட ருறுப்பின் வைப்பார்தெய்வதம் பரவி யெல்லாத்திசைதொறுந் தொழுது நிற்பாருய்வகை யின்றி யின்னேயுலகுடன் கவிழு மென்பார்மையலங் கோயின் மாக்கண்மடைதிறந் திட்ட தொத்தார்.1279. வெந்தெரி செம்பொற் பூவும்விளங்குபொன் னூலும் பெற்றார்மந்திர மறையும் வல்லாரெழாயிரர் மறுவில் வாய்மையந்தரத் தறுவை வைப்பாரந்தண ரங்கை கொட்டிப்பைந்தொடிப் பாவை யின்னேபரிவொழிந் தெழுக வென்பார்.1280. பாம்பெழப் பாம்பு கொண்டாற் பகவற்கு மரிது தீர்த்தறேம்பிழி கோதைக் கின்று பிறந்தநா டெளிமி னென்றுகாம்பழி பிச்ச மாகக் கணியெடுத் துரைப்பக் கல்லென்றூம்பழி குளத்திற் கண்ணீர் துகணிலத் திழிந்த தன்றே.1281. நங்கைக்கின் றிறத்த லில்லைநரபதி நீயுங் கேண்மோகொங்கலர் கோங்கி னெற்றிக்குவிமுகிழ் முகட்டி னங்கட்டங்குதே னரவ யாழிற்றானிருந் தாந்தை பாடுமிங்குநம் மிடரைத் தீர்ப்பானிளையவ னுளன்மற் றென்றான்.1282. பன்மணிக் கடகஞ் சிந்தப்பருப்புடைப் பவளத் தூண்மேன்மன்னவன் சிறுவன் வண்கைபுடைத்துமா ழாந்து சொன்னானின்னுமொன் றுண்டு சூழ்ச்சியென்னொடங் கிருந்த நம்பிதன்னைக்கூய்க் கொணர்மி னென்றான்றரவந்தாங் கவனுங் கண்டான்.1283. பறவைமா நாகம் வீழ்ந்துபலவுடன் பதைப்ப போன்றுஞ்சிறகுறப் பரப்பி மஞ்ஞைசெருக்குபு கிடந்த போன்றுங்கறவைகன் றிழந்த போன்றுங்கிடந்தழு கின்ற கண்ணாரிறைவளை யவரை நோக்கியென்கொடி துற்ற தென்றான்.1284. ஊறுகொள் சிங்கம் போல வுயக்கமோ டிருந்த நம்பிகூறினான் கொற்ற வேந்தன் கொழுநிதி நிலத்து மற்றுன்வீறுயர் புகழை வித்திக் கேண்மையை விளைத்தி யின்னேநாறுபூங் கொம்ப னாளை நோக்கென நம்பி சொன்னான்.1285. புற்றிடை வெகுளி நாகம்போக்கறக் கொண்ட தேனுமற்றிடை யூறு செய்வான்வானவர் வலித்த தேனும்பொற்றொடிக் கிறத்த லில்லைபுலம்புகொண் டழேற்க வென்றான்கற்றடிப் படுத்த விஞ்சைக்காமரு காம னன்னான்.1286. பொழிந்துநஞ் சுகுத்த லச்சமிரைபெரு வெகுளி போகங்கழிந்துமீ தாடல் காலம்பிழைப்பென வெட்டி னாகும்பிழிந்துயி ருண்ணுந் தட்டமதட்டமாம் பிளிற்றி னும்பரொழிந்தெயி றூனஞ் செய்யுங்கோளென மற்றுஞ் சொன்னான்.1287. அந்தண னாறு மான்பா லவியினை யலர்ந்த காலைநந்தியா வட்ட நாறு நகைமுடி யரச னாயிற்றந்தியா முரைப்பிற் றாழைத் தடமலர் வணிக னாறும்பந்தியாப் பழுப்பு நாறிற் சூத்திரன் பால தென்றான்.1288. கன்னியைக் கடித்த நாகங்கன்னியே கன்னி நோக்கமன்னதே யரசர் சாதிமூன்றெயி றழுந்தி யாழ்ந்தகொன்னுமா நாகங் கொண்டாற்கொப்புளாம் விரலிற் றேய்த்தான்மன்னிய தெண்மட் டாயின்மண்டலிப் பால தென்றான்.1289. குன்றிரண் டனைய தோளான்கொழுமலர்க் குவளைப் போதங்கொன்றிரண் டுருவ மோதியுறக்கிடை மயில னாடன்சென்றிருண் டமைந்த கோலச்சிகழிகை யழுத்திச் செல்வனின்றிரண் டுருவ மோதிநேர்முக நோக்கி னானே.1290. நெடுந்தகை நின்று நோக்க நீள்கடற் பிறந்த கோலக்கடுங்கதிர்க் கனலி கோப்பக் காரிரு ளுடைந்த தேபோலுடம்பிடை நஞ்சு நீங்கிற் றொண்டொடி யுருவ மார்ந்துகுடங்கையி னெடிய கண்ணாற் குமரன்மே னோக்கி னாளே.1291. நோக்கினா ணிறையு நாணுமாமையுங் கவினு நொய்திற்போக்கினாள் வளையும் போர்த்தாள்பொன்னிறப் பசலை மூழ்கிற்றாக்கினா ளநங்க னப்புத்தூணியை யமரு ளானாதோக்கிய முருக னெஃகமோரிரண் டனைய கண்ணாள்.1292. ஆட்சி யைம்பொறி யாள னுடம்பெனும்பூட்சி நீள்கொடிப் புற்றி னகத்துறைவாட்க ணோக்கெனும் வையெயிற் றாரழல்வேட்கை நாகத்தின் மீட்டுங் கொளப்பட்டாள்.1293. மாழ்கி வெய்துயிர்த் தாண்மட வாளெனத்தோழி மார்களுந் தாயருந் தொக்குடன்சூழி யானையன் னாய்தொடி னஞ்சறும்வாழி யென்றனர் வம்பலர் கோதையார்.1294. கண்ணிற் காணினுங் கட்டுரை கேட்பினுநண்ணித் தீண்டினு நல்லுயிர் நிற்குமென்றெண்ணி யேந்திழை தன்னை யுடம்பெலாந்தண்ணென் சாந்தம்வைத் தாலொப்பத் தைவந்தான்.1295. மற்ற மாதர்தன் வாட்டடங் கண்களாலுற்ற நோக்க முறாததொர் நோக்கினிற்சுற்றி வள்ளலைச் சோர்வின்றி யாத்திட்டாளற்ற மில்லமிர் தாகிய வஞ்சொலாள்.1296. விஞ்சையர் வீர னென்பார்விண்ணவர் குமர னென்பாரெஞ்சிய வுயிரை மீட்டானிவனலா லில்லை யென்பார்மஞ்சுசூ ழிஞ்சி மூதூர்மாமுடிக் குரிசி னாளைநஞ்சுசூழ் வேலி னாற்கேநங்கையைக் கொடுக்கு மென்பார்.1297. விளங்கொளி விசும்பில் வெண்கோட்டிளம்பிறை சூழ்ந்த மின்போல்வளங்கெழு வடத்தைச் சூழ்ந்துவான்பொனாண் டிளைப்பச் சேந்தவிளங்கதிர் முலைக டம்மாலிவனைமார் பெழுதி வைகிற்றுளங்குபெண் பிறப்புந் தோழியினிதெனச் சொல்லி நிற்பார்.1298. அருந்தவஞ் செய்து வந்தவாயிழை மகளிர் யார்கொல்பெருந்தகை மார்பிற் றுஞ்சிப்பெண்மையாற் பிணிக்கு நீரார்கருங்கணின் யாமுங் கண்டாங்காமனை யென்று சொல்லித்திருந்தொளி முறுவற் செவ்வாய்த்தீஞ்சொலார் மயங்கி னாரே.1299. பன்மலர்ப் படலைக் கண்ணிக்குமரனைப் பாவை நல்லார்மன்னவன் பணியின் வாழ்த்திவாசநெய் பூசி நன்னீர்துன்னின ராட்டிச் செம்பொற்செப்பினுட் டுகிலுஞ் சாந்துமின்னறும் புகையும் பூவுங்கலத்தொடு மேந்தி னாரே.1300. ஏந்திய வேற்பத் தாங்கி யெரிமணிக் கொட்டை நெற்றிவாய்ந்தபொன் குயிற்றிச் செய்த மரவடி யூர்ந்து போகியாயந்தநன் மாலை வேய்ந்த வரும்பெறற் கூடஞ் சேர்ந்தான்பூந்தொடி மகளிர் போற்றிப் பொற்கலம் பரப்பி னாரே.1301. கன்னியர் கரக நீராற் றாமரை கழீஇய தொப்பப்பொன்னடி கழீஇய பின்றைப் புரிந்துவாய் நன்கு பூசியின்மலர்த் தவிசி னுச்சி யிருந்தமிர் தினிதிற் கொண்டான்மின்விரிந் திலங்கு பைம்பூண் வேற்கணார் வேனிலானே.1302. வாசநற் பொடியு நீருங் காட்டிடக் கொண்டு வாய்ப்பப்பூசறுத் தங்கை நீரை மும்முறை குடித்து முக்காற்காசறத் துடைத்த பின்றைக் கைவிர லுறுப்புத் தீட்டிதூசினா லங்கை நீவி யிருந்தனன் றோற்ற மிக்கான்.1303. சீர்கொளச் செய்த செம்பெர்னடைப்பையுட் பாகு செல்லவார்கழல் குருசிற் கொண்டுகவுளடுத் திருந்த வாங்கட்போர்கொள்வேன் மன்ன னெல்லாக்கலைகளும் புகன்று கேட்டுநீர்கொண்மாக் கடல னாற்குநிகரில்லை நிலத்தி லென்றான்.1304. பரிதி பட்டது பன்மணி நீள்விளக்கெரிய விட்டன ரின்னிய மார்த்தனவரிய பொங்கணை யம்மெ னமளிமேற்குரிசி லேறினன் கூர்ந்தது சிந்தையே.1305. பூங்க ணவ்வயி னோக்கம் பொறாதபோல்வீங்கி வெம்மைகொண் டேந்தின வெம்முலையீங்கி தென்னென விட்டிடை நைந்ததுபாங்கி லாரிற் பரந்துள தல்குலே.1306. முருகு வார்குழ லாண்முகிழ் மென்முலைபெருகு நீர்மையிற் பேதுற வெய்திநின்றுருகு நுண்ணிடை யோவியப் பாவைதனருகு நோக்கமெ னாவி யலைக்குமே.1307. புகைய வாவிய பூந்துகி லேந்தல்குல்வகைய வாமணி மேகலை வார்மதுமுகைய வாவிய மொய்குழல் பாவியேன்பகைய வாய்ப்படர் நோய்பயக் கின்றவே.1308. போது லாஞ்சிலை யோபொரு வேற்கணோமாது லாமொழி யோமட நோக்கமோயாது நானறி யேனணங் கன்னவள்காத லாற்கடை கின்றது காமமே.1309. அண்ண லவ்வழி யாழ்துயர் நோயுறவண்ண மாமலர்க் கோதையு மவ்வழிவெண்ணெய் வெங்கனன் மீமிசை வைத்ததொத்துண்ணை யாவுரு காவுள ளாயினாள்.1310. பெயன்ம ழைப்பிற ழுங்கொடி மின்னிடைக்கயன்ம ணிக்கணி னல்லவர் கைதொழப்பயனி ழைத்தமென் பள்ளியுட் பைந்தொடிமயனி ழைத்தவம் பாவையின் வைகினாள்.1311. வணங்கு நோன்சிலை வார்கணைக் காமனோமணங்கொள் பூமிசை மைவரை மைந்தனோநிணந்தெ னெஞ்ச நிறைகொண்ட கள்வனையணங்கு காளறி யேனுரை யீர்களே.1312. கடைகந் தன்னதன் காமரு வீங்குதோளடையப் புல்லினன் போன்றணி வெம்முலையுடைய வாகத் துறுதுயர் மீட்டவளிடைய தாகுமெ னாருமி லாவியே.1313. இறுதி யில்லமிர் தெய்துந ரீண்டியன்றறிவி னாடிய வம்மலை மத்தமாநெறியி னின்று கடைந்திடப் பட்டநீர்மறுகு மாக்கடல் போன்றதென் னெஞ்சமே.1314. நகைவெண் டிங்களு நார்மட லன்றிலுந்தகைவெள் ளேற்றணற் றாழ்மணி யோசையும்பகைகொண் மாலையும் பையுள்செ யாம்பலும்புகையில் பொங்கழல் போற்சுடு கின்றவே.1315. பூமென் சேக்கையு ணாற்றிய பூந்திரட்டாமம் வாட்டுந் தகைய வுயிர்ப்பளைஇக்காமர் பேதைதன் கண்டரு காமநோயாமத் தெல்லையோர் யாண்டொத் திறந்ததே.1316. மாதி யாழ்மழ லைம்மொழி மாதராடாதி யவ்வையுந் தன்னமர் தோழியும்போது வேய்குழற் பொன்னவிர் சாயலுக்கியாது நாஞ்செயற் பாலதென் றெண்ணினார்.1317. அழுது நுண்ணிடை நைய வலர்முலைமுழுதுங் குங்கும முத்தொ டணிந்தபின்றொழுது கோதையுங் கண்ணியுஞ் சூட்டினாரெழுது கொம்பனை யாரிளை யாளையே1318. வேந்து காயினும் வெள்வளை யாயமோடேந்து பூம்பொழி லெய்தியங் காடுதலாய்ந்த தென்றுகொண் டம்மயில் போற் குழீஇப்போந்த தாயம் பொழிலும் பொலிந்ததே.1319. அலங்க றான்றொடுப் பாரலர் பூக்கொய்வார்சிலம்பு சென்றெதிர் கூவுநர் செய்சுனைகலங்கப் பாய்ந்துட னாடுநர் காதலினிலங்கு பாவை யிருமணஞ் சேர்த்துவார்.1320. தூசு லாநெடுந் தோகையி னல்லவரூச லாடுந ரொண்கழங் காடுநர்பாச மாகிய பந்துகொண் டாடுநராகி யெத்திசை யும்மமர்ந் தார்களே.1321. முருகு விம்மிய மொய்குழ லேழைதனுருகு நோக்க முளங்கிழித் துள்சுடவரிவை யாடிய காவகங் காணியவெரிகொள் வேலவ னேகின னென்பவே.1322. மயிலி னாடலு மந்தியி னூடலுங்குயிலின் பாடலுங் கூடி மலிந்தவண்வெயிலி னீங்கிய வெண்மணற் றண்ணிழல்பயிலு மாதவிப் பந்தரொன் றெய்தினான்.1323. காது சேர்ந்த கடிப்பணை கையதுதாது மல்கிய தண்கழு நீர்மலரோத நித்தில வட்டமொர் பொன்செய்நாண்கோதை வெம்முலை மேற்கொண்ட கோலமே.1324. விண்பு தைப்பன வெண்மலர் வேய்ந்துளாற்கண்பு தைப்பன காரிரும் பூம்பொழில்சண்ப கத்தணி கோதைநின் றாடனிநண்ப னைந்நினை யாநறு மேனியே.1325. கறந்த பாலினுட் காசி றிருமணிநிறங்கி ளர்ந்துதன் னீர்மைகெட் டாங்கவண்மறைந்த மாதவி மாமை நிழற்றலிற்சிறந்த செல்வனுஞ் சிந்தையி னோக்கினான்.1326. வரையின் மங்கைகொல் வாங்கிருந் தூங்குநீர்த்திரையின் செல்விகோ றேமலர்ப் பாவைகொலுரையின் சாய லியக்கிகொல் யார்கொலிவ்விரைசெய் கோலத்து வெள்வளைத் தோளியே.1327. மாலை வாடின வாட்க ணிமைத்தனகாலும் பூமியைத் தோய்ந்தன காரிகைப்பாலின் தீஞ்சொற் பதுமையிந் நின்றவள்சோலை வேய்மருள் சூழ்வளைத் தோளியே.1328. தேவர் பண்ணிய தீந்தொடை யின்சுவைமேவர் தென்றமிழ் மெய்ப்பொரு ளாதலிற்கோவத் தன்னமென் சீறடிக் கொம்பனாள்பூவர் சோலை புகுவலென் றெண்ணினான்.1329. அல்லி சேரணங் கன்னவட் காயிடைப்புல்லி நின்றமெய்ந் நாண்புறப் பட்டதுகல்செய் தோளவன் காமரு பேருணர்வெல்லை நீங்கிற் றியைந்தன ரென்பவே.1330. களித்த கண்ணிணை காம்பென வீங்குதோட்டெளிர்த்த வெள்வளை சேர்ந்தது மாமையுந்தளித்த சுண்ணஞ் சிதைந்தன குங்குமமளித்த பூம்பட் டணிந்து திகழ்ந்ததே.1331. குவளை ஏய்ந்த கொடுங் குழை கூந்தலுள்திவளும் வாழிய செம் பொறி வண்டுகாள்இவள கூர் எயிறு ஈனும் தகையவோதவள மெல் இணர்த் தண் கொடி முல்லையே.1332. பொன் துஞ்சு ஆகத்துப் பூங் கண்கள் போழ்ந்த புண்இன்று இப் பூண் கொள் இள முலைச் சாந்து அலால்அன்றித் தீர்ப்பன யாவையும் இல்லையேஎன்று மாதர் எழில் நலம் ஏத்தினான்.1333. கண்ணி வேய்ந்து கருங்குழல் கைசெய்துவண்ண மாலை நடுச்சிகை யுள்வளைஇச்செண்ண வஞ்சிலம் பேறு துகளவித்தண்ண லின்புறுத் தாற்றலி னாற்றினாள்.1334. திங்க ளும்மறு வும்மெனச் சேர்ந்ததுநங்க ளன்பென நாட்டி வலிப்புறீஇயிங்கொ ளித்திடு வேனும ரெய்தினார்கொங்கொ ளிக்குழ லாயெனக் கூறினான்.1335. மழையி டைக்குளித் திட்டதோர் வாண்மினிற்றழையி டைக்குளித் தான்றகை வேலினானிழையி டைக்குளித் தேந்திய வெம்முலைவழையி டைக்குளித் தார்வந்து தோன்றினார்.1336. மின்னொர் பூம்பொழின் மேதகச் செல்வதொத்தன்ன நாண வசைந்து சிலம்படிமென்மெ லம்மலர் மேன்மிதித் தேகினாணன்ன லம்மவற் கேவைத்த நங்கையே.1337. திங்கள் சூழ்ந்தபன் மீனெனச் சென்றெய்திநங்கை தவ்வையுந் தோழியு நண்ணினாரங்க வாய மடிப்பணி செய்தபின்றங்கள் காதலி னாற்றகை பாடினார்.1338. தழையுங் கண்ணியுந் தண்ணறு மாலையும்விழைவ சேர்த்துபு மெல்லென வேகினார்முழையுண் மூரி முழங்கரி யேறனான்பழைய நண்பனைப் பண்புளி யெய்தினான்.1339. பூமியை யாடற் கொத்த பொறியின னாத லானுமாமக ளுயிரை மீட்ட வலத்தின னாத லானுநேமியான் சிறுவ னன்ன நெடுந்தகை நேரு மாயினாமவற் கழகி தாக நங்கையைக் கொடுத்து மென்றான்.1340. மதிதர னென்னு மாசின் மந்திர சொல்லக் கேட்டேயுதிதர வுணர்வல் யானு மொப்பினு முருவி னானும்விதிதர வந்த தொன்றே விளங்குபூண் முலையி னாளைக்கொதிதரு வேலி னாற்கே கொடுப்பது கரும மென்றான்.1341. உள்விரித் திதனை யெல்லாமுரைக்கென மொழிந்து விட்டான்றெள்ளிதிற் றெரியச் சென்றாங்குரைத்தலுங் குமரன் றேறிவெள்ளிலை யணிந்த வேலான்வேண்டிய தாக வென்றானள்ளிலை வேல்கொண் மன்னற்கமைச்சனஃ தமைந்த தென்றான்.1342. பொன்றிய வுயிரை மீட்டான்பூஞ்சிகைப் போது வேய்ந்தானன்றியு மாமெய் தீண்டியளித்தன னழகின் மிக்கானொன்றிய மகளிர் தாமேயுற்றவர்க் குரிய ரென்னாவென்றிகொள் வேலி னாற்கேபான்மையும் விளைந்த தன்றே.1343. கோப்பெருந் தேவி கொற்றக்கோமக னிவைக ணாடியாப்புடைத் தையற் கின்றேநங்கையை யமைக்க வென்னத்தூப்புரி முத்த மாலைதொடக்கொடு தூக்கி யெங்கும்பூப்பரிந் தணிந்து கோயில்புதுவது புனைந்த தன்றே.1344. கணிபுனைந் துரைத்த நாளாற் கண்ணிய கோயி றன்னுண்மணிபுனை மகளிர் நல்லார் மங்கல மரபு கூறியணியுடைக் கமல மன்ன வங்கைசேர் முன்கை தன்மேற்றுணிவுடைக் காப்புக் கட்டிச் சுற்றுபு தொழுது காத்தார்.1345. மழகளிற் றெருத்திற் றந்தமணிக்குட மண்ணு நீராலழகனை மண்ணுப் பெய்தாங்கருங்கடிக் கொத்த கோலந்தொழுதகத் தோன்றச் செய்தார்தூமணிப் பாவை யன்னார்விழுமணிக் கொடிய னாளும்விண்ணவர் மடந்தை யொத்தாள்.1346. கயற்க ணாளையுங் காமனன் னானையுமியற்றி னார்மண மேத்தருந் தன்மையார்மயற்கை யில்லவர் மன்றலின் மன்னியவியற்கை யன்புடை யாரியைந் தார்களே.1347. வாளும் வேலு மலைந்தரி யார்ந்தகண்ணாளும் வார்கழன் மைந்தனு மாயிடைத்தோளுந் தாளும் பிணைந்துரு வொன்றெய்திநாளு நாகர் நுகர்ச்சி நலத்தரே.1348. தணிக்குந் தாமரை யாணலந் தன்னையும்பிணிக்கும் பீடினி யென்செயும் பேதைதன்மணிக்கண் வெம்முலை தாம்பொர வாயவிழ்ந்தணிக்கந் தன்னவன் றாரங் குடைந்ததே.1349. பரிந்த மாலை பறைந்தன குங்குமங்கரிந்த கண்ணி கலந்த மகிழ்ச்சியினரிந்த மேகலை யார்த்தன வஞ்சிலம்பிரிந்த வண்டிளை யார்விளை யாடவே.1350. கொழுமெ னின்னகிற் கூட்டுறு மென்புகைகழுமு சேக்கையும் காலையு மாலையுந்தழுவு காத றணப்பிலர் செல்பவேயெழுமை யும்மியைந் தெய்திய வன்பினார்.1351. நாறி யுஞ்சுவைத் துந்நரம் பின்னிசைகூறி யுங்குளிர் நாடக நோக்கியுமூறின் வெம்முலை யாலுழப் பட்டுமவ்வேற னான்வைகும் வைகலு மென்பவே.1352. விரிகதிர் விளங்கு பன்மீன்கதிரொடு மிடைந்து திங்கட்டெரிகதிர் திரட்டி வல்லான்றெரிந்துகோத் தணிந்த போலுஞ்சொரிகதிர் முத்த மின்னுந்துணைமுலைத் தடத்தில் வீழ்ந்தான்புரிகதிர்ப் பொன்செய் மாலைப்புகைநுதிப் புலவு வேலான்.1353. எழின்மாலை யென்னுயிரை யான்கண்டேனித்துணையே முலையிற் றாகிக்குழன்மாலைக் கொம்பாகிக் கூரெயிறுநான்போழ்த லஞ்சி யஞ்சியுழன்மாலைத் தீங்கிளவி யொன்றிரண்டுதான்மிழற்று மொருநாட் காறுநிழன்மாலை வேனாண நீண்டகண்ணேநெய்தோய்ந்த தளிரே மேனி.1354. மாநீர் மணிமுகிலின் மின்னுக்கொடிநுசுப்பின் மயிலஞ் சாயலேநீ ரிருபுருவ மேறியிடைமுரிந்து நுடங்கப் புல்லித்தூநீர் மலர்மார்பன் றொன்னலந்தான்பருகித் துளும்புந் தேறற்றெனீர் மலர்மாலை தேன்றுளித்துமட்டுயிர்ப்பச் சூட்டி னானே.1355. தேனடைந் திருந்த கண்ணித்தென்மட்டுத் துவலை மாலையூனடைந் திருந்த வேற்கணொண்டொடி யுருவ வீணைதானடைந் திருந்த காவிற்பாடினா டனிமை தீர்வான்கூனடைந் திருந்த திங்கட்குளிர்முத்த முலையி னாளே.1356. வார்தளிர் ததைந்து போதுமல்கிவண் டுறங்குங் காவிற்சீர்கெழு குருசில் புக்கான்றேசிகப் பாவை யென்னுங்கார்கெழு மின்னு வென்றநுடங்கிடைக் கமழ்தண் கோதையேர்கெழு மயில னாளையிடைவயி னெதிர்ப்பட் டானே.1357. சிலம்பெனும் வண்டு பாட மேகலைத் தேன்க ளார்ப்பநலங்கவின் போது பூத்த பூங்கொடி நடுங்கி நாணக்கலந்தனன் காம மாலை கலையின தியல்பிற் சூட்டப்புலம்புபோய்ச் சாய லென்னும் புதுத்தளி ரீன்ற தன்றே.1358. சாந்திடைக் குளித்த வெங்கட் பணைமுலைத் தாம மாலைப்பூந்தொடி யரிவை பொய்கைப் பூமக ளனைய பொற்பின்வேந்தடு குருதி வேற்கண் விளங்கிழை யிவர்க ணாளுமாய்ந்தடி பரவ வைகு மரிவையர்க் கநங்க னன்னான்.1359. இங்ஙன மிரண்டு திங்க ளேகலு மேக வேலானங்ஙனம் புணர்ந்த வன்பி னவண்முலைப் போக நீக்கியெங்ஙன மெழுந்த துள்ள மிருளிடை யேக லுற்றான்றங்கிய பொறியி னாக்கந் தனக்கொர்தே ராக நின்றான்.1360. தயங்கிணர்க் கோதை தன்மேற்றண்ணென வைத்த மென்றோள்வயங்கிணர் மலிந்த தாரான்வருந்துறா வகையி னீக்கிநயங்கிள ருடம்பு நீங்கிநல்லுயிர் போவ தேபோலியங்கிடை யறுத்த கங்குலிருளிடை யேகி னானே.1361. நீனி றக்குழ னேர்வளைத் தோளியைத்தானு றக்கிடை நீத்தலுந் தன்பினேவேனி றக்கண் விழித்தன ளென்பவேபானி றத்துகிற் பையர வல்குலாள்.1362. ஆக்கை யுள்ளுறை யாவி கெடுத்தவண்யாக்கை நாடி யயர்வது போலவுஞ்சேக்கை நாடித்தன் சேவலைக் காணியபூக்க ணாடுமொர் புள்ளுமொத் தாளரோ.1363. புல்லும் போழ்தினும் பூணுறி னோமெனமல்லற் காளையை வைது மிழற்றுவாயில்லி னீக்க முரைத்திலை நீயெனச்செல்வப் பைங்கிளி தன்னையுஞ் சீறினாள்.1364. ஓவி யக்கொடி யொப்பருந் தன்மையெம்பாவை பேதுறப் பாயிலி னீங்கிநீபோவ தோபொரு ளென்றிலை நீயெனப்பூவை யோடும் புலம்பி மிழற்றினாள்.1365. தன்னொப் பாரையில் லானைத் தலைச்சென்றெம்பொன்னொப் பாளொடும் போகெனப் போகடாய்துன்னித் தந்திலை நீயெனத் தூச்சிறையன்னப் பேடையொ டாற்றக் கழறினாள்.1366. மையில் வாணெடுங் கண்வள ராதனமெய்யெ லாமுடை யாய்மெய்ம்மை காண்டிநீயையன் சென்றுழிக் கூறுகென் றாய்மயில்கையி னாற்றொழு தாள்கயற் கண்ணினாள்.1367. வளர்த்த செம்மையை வாலியை வான்பொருள்விளக்கு வாய்விளக் கேவிளக் காயிவணளித்த காதலொ டாடுமென் னாருயிரொளித்த தெங்கென வொண்சுடர் நண்ணினாள்.1368. பருகிப் பாயிரு ணிற்பி னறாதெனக்கருகி யவ்விருள் கான்றுநின் மெய்யெலாமெரிய நின்று நடுங்குகின் றாயெனக்குரிய தொன்றுரைக் கிற்றியென் றூடினாள்.1369. கோடி நுண்டுகி லுங்குழை யுந்நினக்காடு சாந்தமு மல்லவு நல்குவேன்மாட மேநெடி யாய்மழை தோய்யந்துளாய்நாடி நண்பனை நண்ணுக நன்றரோ.1370. ஆட கக்கொழும் பொன்வரை மார்பனைக்கூடப் புல்லிவை யாக்குற்ற முண்டெனாநீடெ ரித்திர ணீண்மணித் தூணொடுசூட கத்திர டோளணி வாடடினாள்.1371. கொலைகொள் வேலவன் கூடல னேகினானிலைகொள் பூணுமனக் கென்செயு மீங்கெனாமலைகொள் சந்தனம் வாய்மெழுக் கிட்டதன்முலைகொள் பேரணி முற்றிழை சிந்தினாள்.1372. அருங்க லக்கொடி யன்னவ னேகினானிருந்திவ் வாகத் தெவன்செய்விர் நீரெனாமருங்கு னோவ வளர்ந்த வனமுலைக்கருங்கண் சேந்து கலங்க வதுக்கினாள்.1373. மஞ்சு சூழ்வரை மார்பனைக் காணியதுஞ்ச லோம்புமி னெனவுந் துஞ்சினீரஞ்ச னத்தொடு மையணி மின்னெனநெஞ்சி னீணெடுங் கண்மலர் சீறினாள்.1374. அரக்குண் டாமரை யன்னதன் கண்மலர்விருத்தி மாதர் விலக்க வெரீஇக்கொலோவருத்த முற்றன ளென்றுகொன் மேகலைகுரற்கொ டாது குலுங்கிக் குறைந்ததே.1375. துனிவா யினதுன் னுபுசெய் தறியேன்றனியே னொருபெண் ணுயிரென் னொடுதானினியா னிஙனே யுளனே யுரையீர்பனியார் மலர்மேற் படுவண் டினமே.1376. நிரைவீ ழருவிந் நிமிர்பொன் சொரியும்வரையே புனலே வழையே தழையேவிரையார் பொழிலே விரிவெண் ணிலவேயுரையீ ருயிர்கா வலனுள் வழியே.1377. எரிபொன் னுலகின் னுறைவீ ர்தனைத்தெரிவீர் தெரிவில் சிறுமா னிடார்ற்பரிவொன் றிலிராற் படர்நோய் மிகுமாலரிதா லுயிர்காப் பமரீ ரருளீர்.1378. புணார்வின் னினிய புலவிப் பொழுதுங்கணவன் னகலின் னுயிர்கை யகறலுணார்வீ ரமரார் மகளீ ரருளிக்கொணார்வீர் கொடியே னுயிரைக் கொணர்வீர்.1379. நகைமா மணிமா லைநடைக் கொடிநின்வகைமா மணிமே கலையா யினதேலகையா தெனதா விதழைக் குமெனத்தகைபா டவலாய் ளர்கோ தளர்கோ.1380. புனைதார் பொராநொந் துபொதிர்ந் தவெனவினையா ரெரிபூண் முலைகண் குளிரவுன்கண் மலரா லுழுதோம் பவலாய்நினையா துநெடுந் தகைநீத் தனையே.1381. அருடேர் வழிநின் றறனே மொழிவாய்பொருடேர் புலனெய் தியபூங் கழலாயிருடேர் வழிநின் றினைவேற் கருளாயுருடே ருயர்கொற் றவன்மைத் துனனே.1382. மிகவா யதொர்மீ ளிமைசெய் தனனோவுகவா வுனதுள் ளமுவர்த் ததுவோவிகவா விடரென் வயினீத் திடநீதகவா தகவல் லதுசெய் தனையே.1383. குளிர்துன் னியபொன் னிலமே குதலாற்றளரன் னநடை யவடாங் கலளாயொளிர்பொன் னரிமா லையொசிந் திஙனேமிளிர்மின் னெனமின் னிலமெய் தினளே.1384. தழுமா வலிமைந் தவெனத் தளராவெழுமே ழடியூக் கிநடந் துசெலாவிழுமீ நிலமெய் திமிளிர்ந் துருகாவழுமா லவலித் தவணங் கிழையே.1385. கரப்புநீர்க் கங்கை யங்கட்கடிமலர்க் கமலப் பள்ளித்திருத்தகு திரைக டாக்கச்சேப்புழிச் சேவ னீங்கப்பரற்றலை முரம்பிற் சின்னீர்வறுஞ்சுனைப் பற்று விட்டவரத்தவாய்ப் பவளச் செந்தாட்பெடையன்ன மழுவ தொத்தாள்.1386. மெழுகினாற் புனைந்த பாவைவெய்துறுத் தாங்கு மோவாதழுதுநைந் துருகு கின்றவாயிடைத் தோழி துன்னிக்கெழீஇயினாள் கேள்வி நல்யாழ்க்கிளைநரம் பனைய சொல்லாள்கழிபெருங் கவலை நீங்கக்காரண நீர சொன்னாள்.1387. தெள்ளறல் யாறு பாய்ந்த திரைதவழ் கடலின் வெஃகியள்ளுற வளிந்த காம மகமுறப் பிணித்த தேனுமுள்ளுற வெந்த செம்பொ னுற்றநீர்ப் புள்ளி யற்றாற்கள்ளுற மலர்ந்த கோதாய் காதலர் காத லென்றாள்.1388. ஓடரி யொழுகி நீண்ட வொளிமலர் நெடுங்க ணாரைக்கூடரி யுழுவை போல முயக்கிடைக் குழையப் புல்லியாடவ ரழுந்தி வீழ்ந்தும் பிரிவிடை யழுங்கல் செல்லார்பீடழிந் துருகும் பெண்ணிற் பேதைய ரில்லை யென்றாள்.1389. பேதைமை யென்னும் வித்திற்பிறந்துபின் வினைக ளென்னும்வேதனை மரங்க ணாறிவேட்கைவேர் வீழ்த்து முற்றிக்காதலுங் களிப்பு மென்னுங்கவடுவிட் டவலம் பூத்துமாதுய ரிடும்பை காய்த்துமரணமே கனிந்து நிற்கும்.1390. தேன்சென்ற நெறியுந் தெண்ணீர்ச்சிறுதிரைப் போர்வை போர்த்துமீன்சென்ற நெறியும் போலவிழித்திமைப் பவர்க்குந் தோன்றாமான்சென்ற நோக்கின் மாதேமாய்ந்துபோ மக்கள் யாக்கையூன்சென்று தேயச் சிந்தித்துகுவதோ தகுவ தென்றாள்.1391. பிரிந்தவற் கிரங்கிப் பேதுற்றழுதநங் கண்ணி னீர்கள்சொரிந்தவை தொகுந்து நோக்கிற்றொடுகடல் வெள்ள மாற்றாமுரிந்தநம் பிறவி மேனாண்முற்றிழை யின்னு நோக்காய்பரிந்தழு வதற்குப் பாவாயடியிட்ட வாறு கண்டாய்.1392. அன்பினி னவலித் தாற்றாதழுவது மெளிது நங்களென்பினி னாவி நீங்கவிறுவது மெளிது சேர்ந்ததுன்பத்தாற் றுகைக்கப் பட்டார்துகைத்தவத் துன்பந் தாங்கியின்பமென் றிருத்தல் போலுமரியதிவ் வுலகி லென்றாள்.1393. மயற்கையிம் மக்கள் யோனிப்பிறத்தலும் பிறந்து வந்தீங்கியற்கையே பிரிவு சாதலிமைப்பிடைப் படாத தொன்றாற்கயற்கணி னளவுங் கொள்ளார்கவற்சியுட் கவற்சி கொண்டார்செயற்கையம் பிறவி நச்சுக்கடலகத் தழுந்து கின்றார்.1394. இளமையின் மூப்புஞ் செல்வத்திடும்பையும் புணர்ச்சிப் போழ்திற்கிளைநரிற் பிரிவு நோயில்காலத்து நோயு நோக்கிவிளைமதுக் கமழுங் கோதைவேலினும் வெய்ய கண்ணாய்களைதுய ரவலம் வேண்டாகண்ணிமைப் பளவு மென்றாள்1395. முத்திலங் காகந் தோய்ந்தமொய்ம்மலர்த் தாரி னானங்கைத்தலத் தகன்ற பந்திற்கைப்படுங் கவல வேண்டாபொத்திலத் துறையு மாந்தைபுணர்ந்திருந் துரைக்கும் பொன்னேநித்தில முறுவ லுண்டானீங்கினா னல்லன் கண்டாய்.1396. வடிமலர்க் காவி னன்றுவண்டளிர்ப் பிண்டி நீழன்முடிபொருள் பறவை கூறமுற்றிழை நின்னை நோக்கிக்கடியதோர் கௌவை செய்யுங்கட்டெயிற் றரவி னென்றேன்கொடியனாய் பிழைப்புக் கூறேன்குழையலென் றெடுத்துக் கொண்டாள்.1397. அலங்கலுங் குழலுந் தோழியங்கையி னடைச்சி யம்பூம்பொலங்கலக் கொடிய னாடன்கண்பொழி கலுழி யொற்றிக்கலந்தகி னாறு மல்குற்கவான்மிசைக் கொண்டி ருந்தாள்புலர்ந்தது பொழுது நல்லாணெஞ்சமும் புலர்ந்த தன்றே.1398. பண்கனிந் தினிய பாடற் படுநரம் பிளகி யாங்குக்கண்கனிந் தினிய காமச் செவ்வியுட் காளை நீங்கத்தெண்பனி யனைய கண்ணீர்ச் சேயிழை தாய ரெல்லாந்தண்பனி முருக்கப் பட்ட தாமரைக் காடு போன்றார்.1399. சில்லரிச் சிலம்பு சூழ்ந்தசீறடித் திருவி னற்றாய்முல்லையங் குழலி னாய்நின்முலைமுதற் கொழுநன் மேனாட்சொல்லியு மறிவ துண்டோவெனக்குழைந் துருகி நைந்துமெல்லியல் கங்குல் சொல்லிற்றிற்றென மிழற்று கின்றாள்.1400. வினைக்குஞ் செய்பொருட் கும்வெயில் வெஞ்சுரநினைத்து நீங்குத லாண்கட னீங்கினாற்கனைத்து வண்டுணுங் கோதையர் தங்கடன்மனைக்கண் வைகுதன் மாண்பொ டெனச்சொனான்.1401. விரைசெய் தாமரை மேல்விளை யாடியவரைச வன்ன மமர்ந்துள வாயினுநிரைசெய் நீல நினைப்பில வென்றனன்வரைசெய் கோல மணங்கமழ் மார்பினான்.1402. பொன்வி ளைத்த புணர்முலை யாள்சொலவின்ன ளிக்குரல் கேட்ட வசுணமாவன்ன ளாய்மகிழ் வெய்துவித் தாளரோமின்வி ளைத்தன மேகலை யல்குலாள்.1403. அன்னந் தானவன் றாமரைப் போதுநீநின்னை நீங்கின னீங்கலன் காதலானின்ன தாலவன் கூறிற் றெனச்சொனாண்மன்ன னாருயிர் மாபெருந் தேவியே.1404. சொரிபனி முருக்க நைந்துசுடர்முகம் பெற்ற போதேபரிவுறு நலத்த வன்றேபங்கய மன்ன தேபோல்வரிவளைத் தோளி கேள்வன்வருமென வலித்த சொல்லாற்றிருநலம் பிறந்து சொன்னாடேனினு மினிய சொல்லாள்.1405. நஞ்சினை யமுத மென்று நக்கினு மமுத மாகாதஞ்சிறைக் கலாப மஞ்ஞை யணங்கர வட்ட தேனுமஞ்சிறைக் கலுழ னாகு மாட்சியொன் றானு மின்றேவஞ்சனுக் கினைய நீரேன் வாடுவ தென்னை யென்றாள்.1406. பொய்கையுட் கமலத் தங்கட்புள்ளெனு முரச மார்ப்பவெய்யவன் கதிர்க ளென்னும்விளங்கொளித் தடக்கை நீட்டிமையிருட் போர்வை நீக்கிமண்ணக மடந்தை கோலம்பையவே பரந்து நோக்கிப்பனிவரை நெற்றி சேர்ந்தான்.1407. செவ்வழி யாழி னூறுந் தீஞ்சொலாட் குற்ற தெல்லாமவ்வழி யரசற் குய்த்தார்க் கரசனு மவல மெய்தியெவ்வழி யானு நாடி யிமைப்பின தெல்லை யுள்ளேயிவ்வழித் தம்மினென்றா னிவுளித்தேர்த் தானை யானே.1408. மின்னுளே பிறந்ததோர் மின்னின் மேதகத்தன்னுளே பிறந்ததோர் வடிவு தாங்குபுமுன்னினான் வடதிசை முகஞ்செய் தென்பவேபொன்னுளே பிறந்தபொன் னனைய பொற்பினான்.1409. வீக்கினான் பைங்கழ னரல வெண்டுகிலாக்கினா னிருதுணி யணிந்த பல்கலனீக்கினா னொருமகற் கருளி நீணெறியூக்கினா னுவவுறு மதியி னொண்மையான்.1410. வேந்தனால் விடுக்கப் பட்டார்விடலையைக் கண்டு சொன்னாரேந்தலே பெரிது மொக்குமிளமையும் வடிவு மிஃதேபோந்ததும் போய கங்குல்போம்வழிக் கண்ட துண்டேல்யாந்தலைப் படுது மையவறியினீங் குரைக்க வென்றார்.1411. நெய்கனிந் திருண்ட வைம்பானெடுங்கணாள் காத லானையையிரு திங்க ளெல்லையகப்படக் காண்பி ரிப்பாற்பொய்யுரை யன்று காணீர்போமினம் போகி நுங்கண்மையலங் களிற்று வேந்தன்மைந்தனுக் குரைமி னென்றான்.
பகிர்