இலம்பகம் 3 · சீவக சிந்தாமணி · திருத்தக்க தேவர்

காந்தருவதத்தையார் இலம்பகம்

சீவக சிந்தாமணி 3 · காந்தருவதத்தையார் இலம்பகம்

493. இங்கிவர்க ளிவ்வா றிருந்தினிது வாழச்சங்குதரு நீணிதியஞ் சாலவுடை நாய்கன்பொங்குதிரை மீது பொரு மால்களிறு போன்றோர்வங்கமொடு போகிநிதி வந்துதர லுற்றான்494. மின்னொழுகு சாயன்மிகு பூட்பதுமை கேள்வன்கொன்னொழுகு வேலியவ தத்தன்குளிர் தூங்குந்தன்வழிய காளைசீ தத்தனவன் றன்போற்பொன்னொழுகு குன்றிலுறை போர்ப்புலியோ டொப்பான்.495. இம்மியன நுண்பொருள்க ளீட்டிநிதி யாக்கிக்கம்மியரு மூர்வர்களி றோடைநுதல் சூட்டியம்மிமிதந் தாழ்ந்துசுரை வீழ்ந்ததறஞ் சால்கென்றும்மைவினை நொந்துபுலந் தூடலுணர் வன்றே.496. உள்ளமுடை யான்முயற்சி செய்யவொரு நாளேவெள்ளநிதி வீழும்விளை யாததலி னில்லைதொள்ளையுணர் வின்னவர்கள் சொல்லின்மடி கிற்பினௌ்ளுநர்கட் கேக்கழுத்தம் போல வினிதன்றே.497. செய்க பொருள் யாருஞ்செறு வாரைச்செறு கிற்குமெஃகுபிறி தில்லையிருந் தேயுயிரு முண்ணுமையமிலை யின்பமற னோடெவையு மாக்கும்பொய்யில்பொரு ளேபொருண்மற் றல்லபிற பொருளே.498. தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்னவோங்குகுல நையவத னுட்பிறந்த வீரர்தாங்கல்கட னாகுந்தலை சாய்க்கவரு தீச்சொனீங்கல்மட வார்கள்கட னென்றெழுந்து போந்தான்499. மோதுபடு பண்டமுனி யாதுபெரி தேற்றிமாதுபடு நோக்கினவர் வாட்கண்வடு வுற்றதாதுபடு தார்கெழிய தங்குவரை மார்பன்கோதுபட லில்லகுறிக் கொண்டெழுந்து போந்தான்.500. வானமுற நீண்டபுகழ் மாரிமழை வள்ளறானமென வேண்டுநர்கள் வேண்டுவன நல்கிநானமிக நாறுகமழ் குஞ்சியவ னேறியூனமெனு மின்றியினி தோடுகவி தென்றான்.501. ஆடுகொடி யுச்சியணி கூம்பினுயர் பாய்மூன்றீடுபடச் செய்திளைய ரேத்தவிமிழ் முந்நீர்க்கோடுபறை யார்ப்பக்கொழுந் தாட்பவழங் கொல்லாவோடுகளி றொப்பவினி தோடியதை யன்றே.502. திரைகடருஞ் சங்குகலந் தாக்கித் திரண்முத்தம்கரைகடலுட் காலக்கணை பின்னொழிய முந்நீர்வரைகிடந்து கீண்டதெனக் கீறிவளர் தீவினிரையிடறிப் பாய்ந்திரிய வேகியது மாதோ.503. மின்னுமிளிர் பூங்கொடியு மென்மலரு மொப்பார்அன்னமொடுந் தோகைநடை சாயலமிர் தன்னார்துன்னியினி தாகவுறை துப்புரவின் மிக்கநன்மையுடை நன்பொன்விளை தீவமடைந் தஃதே.504. தீவினுள் இழிந்து தேந்தார்ச் செம்மலுந் திருமுத்தாரங்கோவினைக் குறிப்பிற் கண்டு கொடுத்தருள் சுமந்து செம்பொற்பூவினுள் ளவளை யன்ன பொங்கிள முலையினார்தநாவினு ளமிர்தங் கேட்டு நாடக நயந்து சின்னாள்505. புணர்ந்தவர் பிரித லாற்றாப் போகமீன் றளிக்குஞ் சாயலணங்கினுக் கணங்க னாரோ டறுமதி கழிந்த பின்றைக்கொணர்ந்தன பண்டம் விற்ற கொழுநிதிக் குப்பை யெல்லாமுணர்ந்துதன் மதலை யேற்றி யொருப்படுத் தூர்க்கு மீள்வான்506. அரசனைக் கண்டு கண்ணுற் றவர்களை விடுத்து நன்னாளிரைவதி வியாழ வோரை யிருஞ்சிலை முளைப்ப வேறிக்கரைகட லழுவ நீந்திக் காற்றினுங் கடுகி யைஞ்ஞூறுரையுடைக் காத மோடி யோசனை யெல்லை சார்ந்தே,507. களித்தலை மயங்கி யிப்பா லிருத்தலுங் கலந்தோர் காற்றிற்றுளித்தலை முகில்க ளீண்டித் தூங்கிருண் மயங்கி மான்றுவிளிப்பது போல மின்னி வெடிபட முழங்கிக் கூற்றுமொளித்துலைந் தொழிய வெம்பி யுரறிநின் றிடிப்ப நாய்கன்.508. எண்டிசை வளியு மீண்டி யெதிரெதிர் கலாவிப் பவ்வங்கொண்டுமே லெழுவ தொப்பக் குளிறிநின் றதிர்ந்து மேகந்தண்டுளி பளிக்குக் கோல்போற் றாரையாய்ச் சொரிந்து தெய்வங்கொண்டதோர் செற்றம் போலுங் குலுங்கன்மி னென்று கூறும்.509. இடுக்கண்வந் துற்ற காலை யெரிகின்ற விளக்குப் போலநடுக்கமொன் றானு மின்றி நகுகதா நக்க போழ்தவ்விடுக்கணை யரியு மெஃகா மிருந்தழு தியாவ ருய்ந்தார்வடுப்படுத் தென்னை யாண்மை வருபவந் துறங்க ளன்றே.510. ஆடகச் செம்பொற் கிண்ணத் தேந்திய வலங்கற் றெண்ணீர்கூடகங் கொண்ட வாழ்நா ளுலந்ததேற் கொல்லும் பவ்வத்தூடகம் புக்கு முந்நீ ரழுந்தினு முய்வர் நல்லார்பாடகம் போலச் சூழ்ந்த பழவினைப் பயத்தி னென்றான்.511. வினையது விளைவின் வந்த வீவருந் துன்ப முன்னீர்க்கனைகட லழுவ நீந்திக் கண்கனிந் திரங்கல் வேண்டாநனைமலர்ப் பிண்டி நாத னாண்மலர்ப் பாத மூலம்நினையுமி னீவி ரெல்லா நீங்குமி னச்ச மென்றான்.512. பருமித்த களிற னானும் பையெனக் கவிழ்ந்து நிற்பக்குருமித்து மதலை பொங்கிக் கூம்பிறப் பாய்ந்து வல்லேநிருமித்த வகையி னோடி நீர்நிறைந் தாழ்ந்த போதிலுருமிடித் திட்ட தொப்ப வுள்ளவ ரொருங்கு மாய்ந்தார்.513. ஓம்பிப் படைத்த பொருளும்முறு காதலாரும்வேம்புற்ற முந்நீர் விழுங்கவ்விரை யாது நின்றான்கூம்பிற்ற துண்டந் தழுவிக்கிடந் தான்கொ ழித்துத்தேம்பெற்ற பைந்தா ரவனைத்திரை யுய்த்த தன்றே.514. நாவா யிழந்து நடுவாருமி லியாம நீந்திப்போவாய் தமியே பொருளைப் பொரு ளென்று கொண்டாய்வீவா யெனமுன் படையாய்படைத் தாய்வி னையென்பாவா யெனப்போய்ப் படுவெண்மணற் றிட்டை சோ்ந்தான்.515. பொரியரை ஞாழலும் புன்னையும் பூத்துவரிதரு வண்டொடு தேனின மார்க்குந்திருவிரி பூம்பொழிற் செவ்வனஞ் சோ்ந்தாங்கருவரை மார்ப னவலித் திருந்தான்.516. ஓடுந் திரைக ளுதைப்ப வுருண்டுருண்டாடு மலவனை யன்ன மருள்செயநீடிய நெய்தலங் கான னெடுந்தகைவாடி யிருந்தான் வருங்கல நோக்கா.517. ஆளிய மொய்ம்ப னிருந்தவப் பூம்பொழிற்றாள்வலி யானொர் மகனைத் தலைப்பட்டுக்கேளி ரெனக்குற்ற கேண்மின் னீரெனத்தோள்வலி மிக்கான் றொடர்ந்துரைக் கின்றான்.518. கருங்கடற் போயிற்றுங் காற்றிற் கவிழ்ந்துதிருந்திய தன்பொருள் தீதுற்ற வாறும்அரும்புணை சார்வா அவண் உய்ந்த வாறும்இருந்தவற் கெல்லாம் எடுத்து மொழிந்தான்.519. மானும் மரனும் இரங்க மதவலிதானுற்ற துன்பந் தரனுக் குரைத்தபின்றேனு மமிழ்துந் திளைத்தாங் கினியனவூனமில் கட்டுரைக் குள்ளங் குளிர்ந்தான்.520. விஞ்சைகள் வல்லேன் விளிந்தநின் றோழரொடெஞ்சிய வான்பொரு ளெல்லா மிமைப்பினுள்வஞ்சமொன் றின்றி மறித்தே தருகுவன்னெஞ்சிற் குழைந்து நினையன்மி னென்றான்.521. உரையகங் கொள்ள வுணர்த்தின னாகிவரையக மேற வலிமின மென்னாவிரைசெலல் வெம்பரி மேழக மேற்றிக்குரைகழன் மைந்தனைக் கொண்டு பறந்தான்.522. விசும்பிவர் மேகம் விரைவினர் போழ்ந்துபகும்புயற் றண்டுளி பக்க நனைப்பநயந்தனர் போகி நறுமலர்ச் சோலையசும்பிவர் சார லருவரை சார்ந்தார்.523. கண்டா லினியன காண்டற் கரியனதண்டா மரையவ டாழுந் தகையனகொண்டான் கொழுங்கனி கோட்டிடைத் தூங்குவவுண்டா னமிழ்தொத் துடம்பு குளிர்ந்தான்.524. மழை தவழ் சோலை மலைமிசை நீண்டகுழைதவழ் குங்குமங் கோழரை நாகந்தழைதவழ் சந்தனச் சோலையி னோக்கியிழைதவழ் மார்ப னினிதி னுவந்தான்.525. கோதை யருவிக் குளிர்வரை மேனின்றுகாதங் கடந்தபின் கன்னிக் கொடிமதினாத னுறைவதோர் நன்னக ருண்டங்குப்போது மெழுகெனப் போயினர் சார்ந்தார்.526. மேகமே மிடைந்து தாழ விருள்கொண்ட வெள்ளிக் குன்றமாகத்து விளங்கித் தோன்றும் வனப்புநாம் வகுக்க லுற்றானாகந்தான் கரிய தொன்று கீழ்நின்று நடுங்கக் கவ்விப்பாகமே விழுங்கப் பட்ட பான்மதி போன்ற தன்றே.527. துளங்குபொன் னகரின் றன்மை சொல்லலாஞ் சிறிதோர் தேவன்விளங்குபொன் னுலகத் துள்ள துப்புர விடங்க ளெல்லாமளந்துகொண் டின்பம் பூரித் தணிநக ராக்கி மேலாலிளங்கதிர்ப் பருதி சூட்டி யியற்றிய தென்ன லாமே.528. பொங்கி யாயிரந் தாமரை பூத்தபோற்செங்க ணாயிரஞ் சோ்ந்தவன் பொன்னகர்கொங்கு தோய்குழ லாரொடுங் குன்றின்மேற்றங்கு கின்றது போற்றகை சான்றதே.529. கிடங்கு சூழ்மதிற் கேழ்கிளர் பூங்கொடிமடங்க னோக்கியர் வாண்முகம் போலுமென்றுடங்கு வெண்மதி யுள்குளி ரத்தங்குடங்கை யாற்கொம்மை கொட்டுவ போன்றவே.530. திருவ மேகலை தௌ்ளரிக் கிண்கிணிபரவை யாழ்குழல் பண்ணமை மென்முழாவுருவம் யாருடை யாரென் றொளிர் நகரரவ வாய்திறந் தார்ப்பது போன்றதே.531. செம்பொன் மாடங்கள் சென்னி யழுத்தியவம்பொற் றிண்ணிலை யாய்மணித் தூவிகள்வெம்பு நீள்சுடர் வீழ்ந்து சுடுதலிற்பைம்பொற் கொப்புள் பரந்தன போன்றவே.532. உருளி மாமதி யோட்டொழித் தோங்கியவெருளி மாடங்கண் மேற்றுயி லெய்தலின்மருளி மான்பிணை நோக்கினல் லார்முகத்தருளி னாலழ லாற்றுவ போன்றவே.533. அசும்பு பொன்வரை யாய்மணிப் பூண்களும்பசும்பொன் மாலையும் பட்டுழிப் பட்டவைநயந்து கொள்பவ ரின்மையி னன்னகர்விசும்பு பூத்தது போன்றன வீதியே.534. தேக்க ணின்னகிற் றேனொடு கூட்டமைத்தாக்கப் பட்ட வளவில் கொழும்புகைவீக்கி மாடந் திறந்திட மெல்லவேவூக்கி வாய்விட் டுயிர்ப்பன போன்றவே.535. தப்பில் வாய்மொழித் தானவர் வைகியவொப்பின் மாநக ரொண்மைமற் றியாதெனிற்கப்பத் திந்திரன் காமுறு மாமணிச்செப்பு வாய்திறந் தன்னதொர் செம்மற்றே.536. நன்னகர் நோக்கி நாய்கன் நாகங்கொல் புகுந்த தென்னப்பொன்னகர் பொலியப் புக்குப்பொங்குமா மழைக டங்குமின்னவிர் செம்பொன் மாடத்திருவரு மிழிந்து புக்குப்பின்னவன் விருந்து பேணிப் பேசினன் பிறங்கு தாரான்.537. மாடியந் தானை மன்னர் மாமணி நாக மாகக்கேடில்சீர்க் கலுழனாய கலுழவே கற்குத் தேவிதோடலர் கோதைத் தொல்சீர்த் தாரணி சுரும்புண் கண்ணியாடவ ரறிவு போழு மணிமுலை யணங்கி னன்னாள்.538. விண்ணகம் வணங்க வெண்கோட் டிளம்பிறை முளைத்த தேபோற்பண்ணகத் தினிய சொல்லாள் பாவையைப் பயந்த ஞான்றேயெண்ணிட மின்றி மன்ன ரிம்மலை யிறைகொண் டீண்டியண்ணலங் களிற்றி னுச்சி யருங்கல வெறுக்கை யீந்தார்.539. மந்திரத் தரசன் வல்லே நிமித்திகன் வருக என்றாற்கந்தரத் தோடு கோளின் சாதக மவனுஞ் செய்தானிந்திர திருவி லேய்ப்பக் குலவிய புருவத் தாட்குவந்தடை பான்மை மண்மேல் இராசமா புரத்த தென்றான்.540. அவனுரை தெளிந்து வேந்த னாசையு ளரசர் நிற்பக்கவனங்கொள் புரவிக் கொட்பிற் காதலுங் கரந்து வைத்தானவனதே கருதிற் றாங்கொ லன்றுகொ லறிய லாகாதிவணது மறிது மென்று கோயிலுக் கேகி னானே.541. பால்பரந் தன்ன பட்டார் பூவணை பசும்பொற் கட்டிற்கால்பரந் திருந்த வெங்கட் கதிர்முலை கச்சின் வீக்கிவேல்பரந் தனைய கண்ணார் வெண்மதிக் கதிர்பெய் கற்றைபோலிவர் கவரி வீச மன்னவ னிருந்த போழ்தின்.542. என்வர விசைக்க வென்ன வாயிலோ னிசைப்ப வேகிமன்னர்தம் முடிகள் வேய்ந்த வயிரம்போழ்ந் துழுது சேந்தபொன்னவிர் கழல்கொள் பாதம் பொழிமழைத் தடக்கை கூப்பவின்னுரை முகமன் கூறித் தானத்தி லிருக்க வென்றான்.543. முதிர்பெயன் மூரி வான முழங்கிவாய் விட்ட தொப்பவதிர்குரன் முரச நாண வமிர்துபெய்ம் மாரி யேய்ப்பக்கதிர்விரி பூணி னாற்குத் தந்தைதாய் தாரங் காதன்மதுரமா மக்கள் சுற்றம் வினவிமற் றிதுவுஞ் சொன்னான்.544. இன்றைய தன்று கேண்மை யெமர்நும ரெழுவர் காறுநின்றது கிழமை நீங்கா வச்சிர யாப்பின் னூழாலன்றியு மறனு மொன்றே யரசன்யான் வணிக னீயேயென்றிரண் டில்லை கண்டாய் யிதுநின தில்ல மென்றான்.545. மந்திர மன்னன் சொன்னீர் மாரியால் வற்றி நின்றசந்தனந் தளிர்த்த தேபோல் சீதத்தன் றளிர்த்து நோக்கியெந்தைக்குத் தந்தை சொன்னா னின்ணை மென்று கேட்பமுந்தைத் தான் கேட்ட வாறே முழுதெடுத் தியம்புகின்றான்.546. வெள்ளிவே தண்டத் தங்கண் வீவில்தென் சேடிப் பாலிற்கள்ளவிழ் கைதை வேலிக் காசில்காந் தார நாட்டுப்புள்ளணி கிடங்கின் விச்சா லோகமா நகரிற் போகாவெள்ளிவேற் கலுழ வேகன் வேதண்ட வேந்தர் வேந்தன்.547. சங்குடைந் தனைய வெண்டா மரைமலர்த் தடங்கள் போலும்நங்குடித் தெய்வங் கண்டீர் நமரங்கா ளறிமி னென்னக்கொங்குடை முல்லைப் பைம்போ திருவடங் கிடந்த மார்ப,விங்கடி பிழைப்ப தன்றா லெங்குல மென்று சொன்னான்.548. பெருந்தகைக் குருசி றோழன் பெருவிலைக் கடக முன்கைதிருந்துபு வணங்கப் பற்றிச் சென்றுதன் னுரிமை காட்டப்பொருந்துபு பொற்ப வோம்பிப் பொன்னிழை சுடர நின்றகருங்கண்ணி திறத்து வேறாக் கட்டுரை பயிற்று கின்றான்.549. எரிமணிப் பளிக்கு மாடத் தெழுந்ததோர் காம வல்லியருமணிக் கொடிகொன் மின்கொ லமரர்கோ னெழுதி வைத்தவொருமணி குயின்ற பாவை யொன்று கொலென்று நாய்கன்றிருமணிக் கொடியை யோரான் றெருமர மன்னன் சொன்னான்.550. தூசுலாய்க் கிடந்த வல்கு றுப்புறழ் தொண்டைச் செவ்வாய்வாசவான் குழலின் மின்போல் யருமணிக் கொடிகொன் மின்கொயூசல்பாய்ந் தாடிக் காதிற் குண்டல மிலங்க நின்றாள்காசில்யாழ்க் கணங்கொள் தெய்வக் காந்தர்வ தத்தை யென்பாள்.551. விளங்கினா ளுலக மெல்லாம் வீணையின் வனப்பி னாலேயளந்துணர் வரிய நங்கைக் கருமணி முகிழ்த்த வேபோலிளங்கதிர் முலையு மாகத் திடங்கொண்டு பரந்த மின்னிற்றுளங்குநுண் ணுசுப்புந் தோன்றா துரவரு வென்ன வுண்டே.552. நின்மக ளிவளை நீயே நின்பதிக் கொண்டு போகியின்னிசை பொருது வெல்வா னியாவனே யானு மாகவன்னவற் குரிய ளென்ன வடிப்பணி செய்வ லென்றான்றன்னமர் தேவி கேட்டுத் தத்தைக்கே தக்கதென்றாள்.553. முனிவரும் போக பூமிப் போகம்முட் டாது பெற்றுந்தனியவ ராகி வாழ்தல் சாதுய ரதனி னில்லைகனிபடு கிளவி யார்தங் காதலர் கவானிற் றுஞ்சிற்பனியிரு விசும்பிற் றேவர் பான்மையிற் றென்று சொன்னான்.554. நூற்படு புலவன் சொன்ன நுண்பொரு ணுழைந்தி யானும்வேற்கடற் றானை வேந்தர் வீழ்ந்திரந் தாலு நேரேன்சேற்கடை மதர்வை நோக்கிற் சில்லரித் தடங்க ணங்கைபாற்படு காலம் வந்தாற் பான்மையார் விலக்கு கிற்பார்.555. படைப்பருங் கற்பி னாடன் பாவையைப் பரிவு நீக்கிக்கொடைக்குரிப் பால வெல்லாங் கொடுத்தபின் கூற்று முட்கும்விடைப்பருந் தானை வேந்தன் வேண்டுவ வெறுப்ப நல்கித்தொடுத்தலர் கோதை வீணா பதிக்கிது சொல்லி னானே.556. உடம்பினொ டுயிரிற் பின்னி யொருவயி னீங்கல் செல்லாநெடுங்கணுந் தோளும் போலு நேரிழை அரிவை நீநின்றடங்கணி தனிமை நீங்கத் தந்தையுந் தாயு மாகியடங்கல ரட்ட வேலா னாணையி ராமி னென்றான்.557. அருமணி வயிரம் வேய்ந்த வருங்கலப் பேழை யைஞ்ஞூறெரிமணி செம்பொ னார்ந்த விராயிரம் யவனப் பேழைதிருமணிப் பூணி னாற்குச் சினந்தலை மழுங்க லின்றிக்குருமணி முடியிற் றேய்த்த தரன்றமர் கொள்க வென்றான்.558. பல்வினைப் பவளப் பாய்காற் பசுமணி யிழிகை வம்பார்நல்லகில் விம்மு கட்டி றவிசொடு நிலைக்கண் ணாடிமெல்லிய தூப முட்டி மேதகு நானச் செப்போடல்லவுங் கொள்க வென்றா னணங்குடை நிணங்கொள் வேலான்.559. விளக்கழ லுறுத்த போலும் விசியுறு போர்வைத் தீந்தேன்றுளக்கற வொழுகி யன்ன துய்யறத் திரண்ட திண்கோல்கொளத்தகு திவவுத் திங்கட் கோணிரைத் தனைய வாணியளப்பருஞ் சுவைகொ ணல்யா ழாயிர மமைக வென்றான்.560. அரக்கெறி குவளை வாட்க ணவ்வளைத் தோளி னாளைப்பரப்பமை காதற் றாயர் பற்பல்காற் புல்லிக்கொண்டுதிருப்புறக் கொடுத்த செம்பொற் றாமரை போன்று கோயில்புரிக்குழன் மடந்தை போகப் புலம்பொடு மடிந்த தன்றே561. காம்புபொன் செய்த பிச்சங் கதிர்மணி குடையொ டேந்தித்தாம்பலர் கவரி வீசக் கிண்கிணி ததும்ப நாகப்பாம்புபைத் தனைய வல்குற் பல்கலை மிழற்ற வேகியாம்பனா றமுதச் செவ்வா யரசனைத் தொழுது நின்றாள்.562. அடிக்கல மரற்ற வேகி யரும்பெறற் றாதை பாதமுடிக்கலஞ் சொரியச் சென்னி யிறைஞ்சலு முரிந்து மின்னுக்கொடிப்பல நுடங்கி யாங்குத் தோழியர் குழாத்து ணிற்பவடுத்தனன் புல்லி வேந்தன் னாற்றுகி லாது சொன்னான்.563. வலம்புரி யீன்ற முத்தம்மண்மிசை யவர்கட் கல்லால்வலம்புரி பயத்தை எய்தா தனையரே மகளி ரென்னநலம்புரிந் தனைய காதற் றேவிதன் னவையை நீங்கக்குலம்புரிந் தனைய குன்றிற் கதிபதி கூறி னானே.564. இன்சுவை யாழொ டன்ன மிளங்கிளி மழலை மஞ்ஞைபொன்புனை யூக மந்தி பொறிமயிர்ப் புறவம் பொன்னார்மென்புன மருளி னோக்கின் மானின மாதி யாகத்தன்புறஞ் சூழப் போகித் தளிரியல் விமானஞ் சோ்ந்தாள்.565. வெற்றிவேன் மணிமுடிக், கொற்றவ னொருமகளற்றமில் பெரும்படைச், சுற்றமோ டியங்கினாள்.566. கண்ணயற் களிப்பன, வண்ணல்யானை யாயிரம்விண்ணகத் தியங்குதே, ரெண்ணவற் றிரட்டியே.567. விற்படை விலக்குவ, பொற்படைப் புரவியுமுற்படக் கிளந்தவற்றி, னற்புடைய நாற்றியே568. பாறுடைப் பருதிவேல், வீறுடை யிளையருமாறிரட்டி யாயிரர், கூறுதற் கரியரே.569. மாகநீள் விசும்பிடை, மேகநின் றிடித்தலினாகநின் றதிர்ந்தவர்க், கேகலாவ தில்லையே.570. வெஞ்சின வெகுளியிற், குஞ்சர முழங்கலிமஞ்சுதம் வயிறழிந், தஞ்சிநீ ருகுத்தவே.571. வேழமும் மதத்தொடு, தாழ்புயல் கலந்துடனாழ்கட லகம்புறம், வீழ்தர விரைந்ததே.572. மல்லன்மாக் கடலிடைக், கல்லெனக் கலங்கவிழ்த்தல்லலுற் றழுங்கிய, செல்வனுற்ற செப்புவாம்.573. பானிறப் பனிவரை, மேனிற மிகுத்தனநீனிற நிழன்மணி, தானிரைத் தகமெலாம்.574. வஞ்சமின் மனத்தினா, னெஞ்சகம் புகன்றுகவிஞ்சையம் பெருமகன், வஞ்சமென் றுணர்த்தினான்.575. நங்கைதன் னலத்தினான், மங்குல்வெள்ளி மால்வரையெங்குமன்ன ரீண்டினார், சங்குவிம்மு தானையார்.576. ஈரலங்க லேந்துவே, லாரலங்கன் மார்பினான்கார்கலந்த கைக்கணி, சீர்கலந்து செப்பினான்.577. மாதர்வாழ்வு மண்ணதே! யாதலா லலங்கலந்தாதவிழ்ந்த மார்ப! நின், காதலான் கடலுளான்.578. என்றுகூற வென்னையே, துன்றுகாதற் றோழனைச்சென்றுநீ கொணர்கென, வன்றுவந்த வண்ணமே.579. துன்பமுற்ற வர்க்கலா, லின்பமில்லை யாதலினன்பமற்றி யானினைத், துன்பத்தாற் றொடக்கினேன்.580. பீழைசெய்து பெற்றனன், வாழியென்று மாக்கடலாழ்வித் திட்ட வம்பினைத், தோழர்ச்சுட்டிக் காட்டினான்.581. தேன்றரு மாரி போன்று திவ்விய கிளவி தம்மாலூன்றரு குருதி வேலா னுள்ளகங் குளிர்ந்து விஞ்சைக்கோன்றரு துன்பம் மற்றென் குலத்தொடு முடிக வென்றான்கான்றுவில் வயிரம் வீசும் கனமணிக் குழையி னானே.582. தோடலர் தெரிய லான்றன் றோழரைக் கண்டு காதலூடலர்ந் தெழுந்து பொங்க வுருவத்தார் குழையப் புல்லிப்பாடிரும் பௌவ முந்நீர்ப் பட்டது பகர்த லோடுநாடக நாங்க ளுற்ற தென்றுகை யெறிந்து நக்கார்.583. கட்டழற் கதிய புண்ணிற் கருவரை யருவி யாரம்பட்டது போன்று நாய்கன் பரிவுதீர்ந் தினியர் சூழமட்டவிழ் கோதை யோடு மண்கனை முழவ மூதூர்க்கட்டவிழ் தாரி னான்றன் கடிமனை மகிழ்ந்து புக்கான்.584. பெருமனை குறுக லோடும் பிறையென விலங்கித் தோன்றுந்திருநுதன் மனைவி செம்பொற் கொடியென விறைஞ்சி நிற்பவருமுலை பொதிர்ப்ப வாங்கி வண்டின மிரியப் புல்லிக்கதிர்நகை முறுவன் மாதர் கண்ணுறு கவலை தீர்த்தான்.585. சந்திர காந்த மென்னுந் தண்மணி நிலத்தி னங்கண்வெந்தெரி பிசும்பொன் வெள்ளி பளிங்கொடு பவளம் பாய்த்திக்கந்தெரி மணியிற் செய்த கன்னியா மாட மெய்திப்பைந்தொடிப் பாவை யொன்றும் பரிவிலள் வைகி னாளே.586. பாசிழைப் பரவை யல்குற் பசுங்கதிர்க் கலாபம் வீங்கக்காசுகண் பரிய வைகிக் கடன்றலைக் கழிந்த பின்னாத்தூசணி பரவை யல்குற் றுளங்குநுண் ணுசுப்பிற் பாவையாசறு வரவும் தந்தை வலித்தது மறியச் சொன்னான்.587. வண்டுண மலர்ந்த கோதை வாயொருப் பட்டு நேரத்தெண்கட லமிர்தம் பெய்த செப்பெனச் செறிந்து வீங்கிப்பெண்டிரு மாண்மை வெஃகிப் பேதுறு முலையி னாளைக்கண்டவர் மருள நாளைக் கடிவினை முடித்து மென்றான்.588. மால்வரை வயிறு போழ்ந்து வல்லவர் மதியிற் றந்தபால்வரை மணியும் பொன்னும் பற்பல கொண்டு புக்குக்கால்பொரு கழலி னானுங் காவலற் கண்டு சொன்னான்வேல்பொரு தானை யானும் வேண்டுவ விதியி னோ்ந்தான்.589. மையன்மத யானைநிரை மன்னன்மகிழ்ந் தானாப்பொய்யில்புகழ் நாய்கன்மத வொளியினொடு போகிநொய்தின்மனை யெய்தியிது செய்கென நொடித்தான்மொய்கொண்முலை பாயமுகை விண்டலர்ந்த தாரான்.590. நானக்கிடங் காடைநகர் நாகத்திடை நன்பொன்வானக்கிடு மாட்சியதோர் மண்டபங்செய் கென்னமீனத்திடை நாள்கிழமை வெள்ளிசயை பக்கம்கானத்திடை வேங்கையெழக் கண்ணினர்கள் அன்றே.591. நட்புப்பகை யுட்கினொடு நன்பொன்விளை கழனிபட்டினொடு பஞ்சுதுகில் பைம்பொனொடு கானமட்டசுவை வல்சியினொ டியாதுமொழி யாமலொட்டிப்பதி னாயிரவ ருற்றுமுயல் கின்றார்.592. வண்டுபடு தேறனற வாய்விடொடு பருகிக்கண்டதொழிற் கணிச்சிகளிற் கயம்படநன் கிடித்தாங்கெண்டிசையு மேற்பப்படுத் தேற்றியதன் மேலாற்கண்டுருகு பொன்னினிலங் காமுறுவ புனைந்தார்.593. பொன்செய்குடங் கோத்தனைய வெருத்திற்பொலி பொற்றூண்மின்செய் பசும் பொன்னிலத்து வீறுபெற நாட்டிமன்பவள மேனவின்று பளிக்கலகு பரப்பிநன்செய்வெளி வேய்ந்துசுவர் தமனியத்தின் அமைத்தார்.594. பாவையவ ளிருக்குமிடம் பளிக்குச்சுவ ரியற்றிக்கோவைகுளிர் முத்தினியல் கோதையொடு கொழும்பன்மாலையொடு மாலைதலை மணந்துவர நாற்றிஆலையமி தோவியர்கட் கென்னவணி யமைத்தார்.595. ஆயிதழ பொன்னலங்கல் காலசைப்ப வொல்கிவாயருகு வந்தொசிந்து மறியமழை மின்போற்சேயவர்க்குந் தோன்றியதோர் திலகமெனுந் தகைத்தாய்ப்பாயதிரை முத்தமணல் பரந்துபயின் றுளதே596. காமர்களி றும்பிடியும் கன்றுங்கலை மானுந்தாமரைய வாவிகளும் புள்ளுந்தகை நலத்தினேமுறுவ பாவையினொ டியக்கிநிலை யெழுதியாமொரையம் காண்பவர்க்கி தகம்புறமி தெனவே.597. உழந்தவரு நோக்கி மகிழ் தூங்கவொளி வாய்ந்துவிழுங்குமெனப் பறவைகளும் பிறவிலங்கும் அடையாமுழங்குதிரை வேலியினி னில்லையென மொய்கொண்டெழுந்துகொடி யாடுமிதவ் வெழில்நகரி னியல்பே.598. ஓடுமுகில் கீறியொளிர் திங்கள்சிகை வைத்தேமாடமது வார்சடைய வள்ளலையு மொக்கும்நாடிமுக நான்கதனி னான்முகனை யொக்கும்நேடிநிமிர் தன்மையினி னேமியையு மொக்கும்.599. கண்டவர்கள் காமுறலிற் காமனையு மொக்குங்கொண்டுலக மேத்தலினக் கொற்றவனை யொக்கும்வண்டெரிய லாரமுலை மாதர்மகி ழமுதம்உண்டவர்க ளெவ்வகைய ரவ்வகைய தொன்றே.600. முகிற்றலை மதிய மன்ன முழுமணி மாடத் திட்டவகிற்புகை தவழ்ந்து வானத் தருவிசும் பறுத்து நீண்டுபகற்கதிர்ப் பரப்பிற் றாகிப் பஞ்சவர் விமான முட்டிப்புகற்கரு மமரர் கற்பம் புக்கயா வுயிர்த்த தன்றே.601. அரைசன தருளினொ டகன்மனை யவனெய்தியுரைசெலல் வகையினொ டுலகமு மறிவுறமுரைசதி ரிமிழிசை முதுநக ரறைகெனவிரைசெல லிளையரை வியவரின் விடவே.602. விடுகணை விசையொடு வெருவரு தகையவர்படுபணை யவருறை பதியது குறுகிநெடுமதி யகடுற நிழறவழ் கொடியுயர்கடிநக ரிடிமுர சறைமின மெனவே.603. மங்கல வணியினர் மலர்க்கதிர் மதியனபுங்கவ னறநெறி பொலிவொடு மலிகெனவங்கதிர் மணிநகை யலமரு முலைவளர்கொங்கணி குழலவள் கோடணை அறைவாம்.604. வான்றரு வளத்த தாகி வையகம் பிணியிற் றீர்கதேன்றரு கிளவி யாருங் கற்பினிற் றிரித லின்றியூன்றுக வூழி தோறு முலகினுண் மாந்த ரெல்லாமீன்றவர் வயத்த ராகி யில்லறம் புணர்க நாளும்.605. தவம்புரிந் தடங்கி நோற்குந் தத்துவர்த் தலைப்பட் டோம்பிப்பவம்பரி கெமக்கு மென்று பணிந்தவ ருவப்ப வீமினவம்புரிந் துடம்பு நீங்கா தருந்தவ முயன்மின் யாருஞ்சிவம்புரி நெறியைச் சேரச் செப்புமிப் பொருளுங் கேண்மின்.606. அம்மல ரனிச்சத் தம்போ தல்லியோ டணியி னொந்துவிம்முறு நுசுப்பு நைய வீற்றிருந் தணங்கு சோ்ந்தவெம்முலைப் பரவை யல்குன் மிடைமணிக் கலாபம் வேய்த்தோட்செம்மலர்த் திருவின் சாயற் றேமொழி தத்தை யென்பாள்.607. மற்றவ டந்தை நாய்கன் வண்கைச்சீ தத்தன் என்பான்கொற்றவன் குலத்தின் வந்தான் கூறிய பொருளி தாகும்முற்றவம் உடையளாகி மூரிநூற் கலைக ளெல்லாங்கற்றவள் கணங்கொள் நல்யா ழனங்கனைக் கனிக்கும் நீராள்.608. தீந்தொடை மகர வீணைத் தௌ்விளி யெடுப்பித் தேற்றிப்பூந்தொடி யரிவை தன்னிற் புலமிகுத் துடைய நம்பிக்கீந்திடு மிறைவ ராதி மூவகைக் குலத்து ளார்க்கும்வேந்தடு குருதி வேற்கண் விளங்கிழை தாதை யென்றான்.609. மண்ணக மடந்தை யாக மார்புற முயங்கி நின்றவண்ணலை யாதி யாக வருங்கடி நகரை வாழ்த்திவிண்ணக முழக்கி னேய்ப்ப வீதிதொ றெருக்கி யெங்குங்கண்ணொளிர் கடிப்பி னோச்சிக் கடிமுர சறைந்த காலை,610. வணக்கருந் தானை மன்னர் மத்தகம் பிளந்து வாய்த்தநிணக்கொழுங் குருதி வாட்கை நிலம்புடை பெயர்க்கு மாற்றலணைப்பருங் களிகொள் வேழத்தத்தின புரத்து வேந்தன்கணைக்கவி னழித்த வுண்கட் கன்னியைக் கருதி வந்தான்.611. சிதைப்பருஞ் சீற்றத் துப்பின் செய்கழ னரல வீக்கிமதக்களி றடர்த்துக் குன்ற மணிவட்டி னுருட்டு மாற்றற்கதக்களி யொளிறு வைவேற் காம்பிலிக் காவல் மன்னன்பதைப்பரும் பரும யானைப் பாலமா குமரன் வந்தான்.612. இலைபொர வெழுதி யன்ன வெரிமணிக் கடக முன்கைச்சிலைபொரத் திரண்ட திண்டோட் சில்லரிச் சிலம்பி னார்தமுலைபொர வுடைந்த தண்டார் மொய்ம்மதுத் துளிப்ப வந்தான்மலைபொர வரிய மார்பின் வாரண வாசி மன்னன்.613. கதிர்முடி மன்னர் சூழ்ந்து கைதொழு திறைஞ்சி மாலைத்திருமுடி வயிர வில்லாற் சேவடி திளைப்ப வேத்தியருமுடி யணிந்த கொற்றத் தவந்தியன் முரச மார்ப்பவொருபிடி நுசுப்பி னாளை யுள்ளுபு வந்து விட்டான்.614. வெள்ளணி யணிந்த ஞான்றே வேந்தர்தம் முடியிற் கொண்டகள்ளணி மாலை மோந்து கனைகழ லிலங்கும் நோன்றாட்புள்ளணி கொடியி னானிற் போர்பல தொலைத்த வாற்றலள்ளிலை யணிந்த வைவே லயோத்திய ரிறையும் வந்தான்.615. நீணிதி வணிக ரீறா நிலமிசை யவர்க ளெல்லாம்வீணையிற் பொருது வெல்வான் விரைவினர் துவன்றி மூதூர்க்கோணமு மறுகு மெல்லாங் குச்சென நிரைத்தம் மாந்தர்மாண்மது நசையின் மொய்த்த மதுகர வீட்ட மொத்தார்.616. உருக்கமைந் தெரியுஞ் செம்பொ னோரைவில் லகல மாகத்திருக்குழன் மடந்தை செல்லத் திருநிலந் திருத்திப் பின்னர்,விரைத்தகு நான நீரால் வெண்ணிறப் பொடியை மாற்றிப்பரப்பினர் படுவண் டார்ப்பப் பன்மலர் பக்கம் எல்லாம்.617. விலைவரம் பறித லில்லா வெண்டுகி லடுத்து வீதிஅலர்தலை யனிச்சத் தம்போ தைம்முழ வகல மாகப்பலபடப் பரப்பிப் பாவை மெல்லடிப் பரிவு தீரநிலவரைத் தன்ன னாரை நிதியினால் வறுமை செய்தான்.618. மண்டல நிறைந்த மாசின் மதிப்புடை வியாழம் போன்றோர்குண்டல மிலங்க நின்ற கொடியினைக் குறுகித் தோழிவிண்டலர் கோதை விம்மும் விரைகுழ றொழுது நீவிப்பண்டியல் மணங்க ளெல்லாம் பரிவறப் பணிந்து சொன்னாள்.619. எரிமணி நெற்றி வேய்ந்த விளம்பிறை யிதுகொ லென்னப்புரிமணி சுமந்த பொற்பூண் பொறுக்கலா நுசுப்பிற் பாவைதிருமணி வீணைக் குன்றத் திழிந்ததீம் பாலை நீத்தத்தருமுடி யரச ராழ்வ ரம்மனை யறிவ லென்றாள்.620. மண்ணிட மலிர வெங்கு மாந்தரும் வந்து தொக்காரொண்ணிற வுரோணி யூர்ந்த வொளிமதி யொண்பொ னாட்சித்தெண்ணிற விசும்பி னின்ற தெளிமதி முகத்து நங்கைகண்ணிய வீணை வாட்போர்க் கலாமின்று காண்டு மென்றே.621. பசுங்கதிர்க் கடவுள் யோகம் பழிப்பற நுனித்து வல்லான்விசும்பிவர் கடவு ளொப்பான் விரிச்சிக னறிந்து கூறவசும்புதே னலங்க லைம்பா லரிவையொ டாய்ந்து நாய்கன்விசும்புபோன் மாந்த ரார விழுநிதி சிதறி னானே.622. வாசநெய் வண்டு மூச மாந்தளிர் விரல்கள் சேப்பப்பூசிவெள் ளிலோத்தி ரத்தின் பூம்பொருக் கரைத்த சாந்தின்காசறு குவளைக் காம ரகவிதழ் பயில மட்டித்தாசறத் திமிர்ந்து மாத ரணிநலந் திகழ்வித் தாரே.623. கங்கையின் களிற்றி னுச்சிக் கதிர்மணிக் குடத்திற் றந்தமங்கல வாச நன்னீர் மணிநிறங் கழீஇய தொப்பநங்கையை நயப்ப வெல்லாம் விரையொடு துவருஞ் சோ்த்தியங்கர வல்கு லாளை யாட்டினா ரரம்பை யன்னார்.624. வெண்ணிற மழையின் மின்போல் வெண்டுகிற் கலாபம் வீக்கிக்கண்ணிற முலையுந் தோளுஞ் சந்தனத் தேய்வை கொட்டித்தெண்ணிறச் சிலம்பு செம்பொற் கிண்கிணி பாதஞ் சோ்த்திப்பண்ணிறச் சுரும்பு சூழும் பனிமுல்லைச் சூட்டு வேய்ந்தார்.625. எரிமணிச் சுண்ண மின்னு மிருஞ்சிலை முத்தஞ் சோ்த்தித்திருமணி முலையி னெற்றிச் சிறுபுறஞ் செறியத் தீட்டிப்புரிமணி யாகத் தைதா விரனுதி கொண்டு பூசிவிரிமணி வியப்ப மேனி யொளிவிட்டு விளங்கிற் றன்றே.626. அருங்கயம் விசும்பிற் பார்க்கு மணிச்சிறு சிரலை யஞ்சிஇருங்கயந் துறந்து திங்க ளிடங்கொண்டு கிடந்த நீலம்நெருங்கிய மணிவிற் காப்ப நீண்டுலாய்ப் பிறழ்வ செங்கேழ்க்கருங்கய லல்ல கண்ணே எனக்கரி போக்கி னாரே.627. பொருந்துபொற் றூண்கள் நான்கிற் பொலிந்துநூற் புலவர் செந்நாவருந்தியும் புகழ்த லாகா மரகத மணிசெய் கூடத்திருந்திளை யார்கள் கோல மிந்திர னிருமித் தாற்போற்திருந்தச்செய் ததற்பி னங்கை திருவிற்கோர் திலக மொத்தாள்.628. மண்கனை முழவம் விம்ம வரிவளை துவைப்ப வள்வார்க்கண்கனைந் திடியின் வெம்பிக் கடலென முரச மார்ப்பவிண்கனிந் துருகு நீர்மை வெள்வளைத் தோளி போந்தாள்பண்கனிந் துருகு நல்யாழ்ப் படைபொரு துடைக்க லுற்றே.629. பரந்தொளி யுமிழும் பைம்பொற் கண்ணடி பதாகை தோட்டிவிரிந்திருண் மேயுஞ் செம்பொன் விளக்குவெண் முரசு கும்பஞ்சுரந்தவெண் மதியைச் சூன்று கதிர்கொண்டு தொகுத்த போலும்பொருந்துபொற் கதிர்பெய் கற்றை புணர்கயல் போந்த வன்றே.630. வென்றவ னகலம் பூட்ட விளங்கொளி மணிசெய் செப்பினின்றெரி பசும்பொன் மாலை போந்தது நெறியிற் பின்னரொன்றிய மணிசெய் நல்யாழ் போந்தன வுருவ மாலைதின்றுதே னிசைகள் பாடத் திருநகர் சுடர வன்றே.631. ஆரந் துயல்வர வந்துகில் சோர்தரவீரம் படக்கையை மெய்வழி வீசித்தேரை நடப்பன போற்குறள் சிந்தினொடோரு நடந்தன வொண்டொடி முன்னே.632. வட்டச் சூறையர் வார்முலைக் கச்சினர்பட்டு வீக்கிய வல்குலர் பல்கணைவிட்ட தூணியர் வில்லினர் வாளினரொட்டி யாயிரத் தோரெண்மர் முன்னினார்.633. வம்பு வீக்கி வருமுலை யுட்கரந்தம்பி னொய்யவ ராணுடைத் தானையர்பைம்பொற் கேடகம் வாளொடு பற்றுபுசெம்பொற் பாவையைச் சேவித்து முன்னினார்.634. ஆணை யாணை யகலுமி னீரெனவேணுக் கோலின் மிடைந்தவ ரொற்றலினாணை யின்றெம தேயென் றணிநகர்காணுங் காதலிற் கண்ணெருக் குற்றவே.635. கண்ணி னோடு பிறந்தது காரிகைவண்ணங் காண்டற்கன் றோவென்று வைதவர்விண்ணு மண்ணும் விருந்துசெய் தாலொப்பவெண்ணி னெண்ணிட மின்றி நெருங்கினார்.636. இனஞ்சேரா வாகி விளையோ ருயிரின்மே லெண்ணங் கொள்வான்புனஞ்சோ் கொடிமுல்லை பூம்பவளத் துட்புக்குப் பூத்த போலும்வனஞ்சோ் துவர்ச்செவ்வாய் வாளெயிறுங் கண்மலரும் வனைய லாகாக்கனஞ்சோ் கதிர்முலையுங் கண்டார்கள் வீட்டுலகங் காணார் போலும்!637. மீன்சோ் குழாமனைய மேகலையும் வெம்முலையுங் கூற்றங் கூற்றமூன்சே ருயிருய்யக் கொண்டோடிப் போமின்க ளுரைத்தே மென்றுகான்சோ் கமழ்கோதை காறொடர்ந்து கைவிடா தரற்று கின்றதேன்சோ் திருவடிமேற் கிண்கிணிபொன் னாவதற்கே தக்க தென்பார்.638. கள்வாய்ப் பெயப்பட்ட மாலைக் கருங்குழல்கள் கண்டார் நையவுள்வாய்ப் பெயப்பட்ட வெம்மதுச்செப் போரிணைமெல் லாக மீன்றபுள்வாய் மணிமழலைப் பொற்சிலம்பி னிக்கொடியை யீன்றாள் போலுங்கொள்வா னுலகுக்கோர் கூற்றீன்றா ளம்மவோ கொடிய வாறே.639. செய்ய தாமரை மேற்றிரு வேகொலோவெய்ய நோக்கின்விச் சாதரி யேகொலோமையில் வானவர் தம்மக ளேகொலென்றைய முற்றலர் தார்மன்னர் கூறினார்.640. வீணை வென்றிவள் வெம்முலைப் பூந்தடமாணை தோய்வதல் லாற்பிறன் வெளவுமேற்கோணைப் போரிற் குளிக்குவ மன்றெனின்மாண நற்றவஞ் செய்குவ மென்மரும்,641. குலிகச் செப்பன கொம்மை வரிமுலைநலியு மெம்மையென் பார்நல்ல கண்களால்வலிய வாங்கியெய் தாளெம்மை வாழ்கலேமெலிய வாலி விடுக்குமற் றென்மரும்,642. ஊட்டி யன்ன வுருக்கரக் காரடிநீட்டி மென்மலர் மேல்வந்து நின்னலங்காட்டி யெம்மைக்கொன் றாயெனக் கைதொழுதோட்டை நெஞ்சின ராயுழல் வார்களும்.643. திங்கண் மதிமுகத்த சேலும் பவளமுஞ் சிலையு முத்துங்கொங்குண் குழலாண்மெல் லாகத்த கோங்கரும்புங் கொழிப்பில் பொன்னுமங்கை குழியா வரக்கீத்த செந்தளிர்நெய் தோய்த்த போலுமங்கை மலரடியுந் தாமரையே யாமறியே மணங்கே யென்பார்.644. பொன்மகரம் வாய்போழ்ந்த முத்தநூ றோள்யாப்பிற் பொலிந்த வாறுமின்மகரங் கூத்தாடி வில்லிட் டிருங்குழைக்கீ ழிலங்கு மாறுமன்மகர வெல்கொடியான் மால்கொள்ளக் கால்கொண்ட முலையி னாளையென்னரம்பை யென்னாவா றென்பா ரிமைக்குங்கண் ணிவையோ வென்பார்.645. கோள்வயிர நீளருவிக் குன்றிவர்ந்த செஞ்சுடர்போற் கொலைவேன் மன்னர்நீள்வயிர வெண்மருப்பி னீலக் களிற்றின்மே னிரைத்தார் பொங்கத்தோள்வயிரந் தோன்றத் தொழுவா ரழுதுநைவார் தொக்கோர் கோடிவாள்வயிரம் விற்கு மடநோக்கி யார்கொலோ பெறுவ ரென்பார்.646. பைம்பொன் நிமிர்கொடி பாவைவனப்பென்னுந் தளிரை ஈன்றுசெம்பொன் மலர்ந்திளையார் கண்ணென்னுஞ்சீர்மணிவண் டுழலச் சில்லென்றம்பொற் சிலம்பரற்ற அன்னம்போல்மெல்லவே ஒதுங்கி அம்பூஞ்செம்பொற் புரிசை அடைந்தாள்செந் தாமரைமேற்றிருவோ டொப்பாள்.647. பட்டியன்ற கண்டத் திரைவளைத்துப்பன்மலர்நன் மாலை நாற்றிவிட்டகலாச் சாந்தி னிலமெழுகிமென்மலர்கள் சிதறித் தூமமிட்டிளைய ரேத்த விமையார்மடமகள்போ லிருந்து நல்யாழ்தொட்டெழீஇப் பண்ணெறிந்தாள் கின்னரருமெய்ம்மறந்து சோர்ந்தா ரன்றே.648. புன்காஞ்சித் தாதுதன் புறம்புதையக் கிளியெனக்கண்டன்புகொண் மடப்பெடை யலமந்தாங் ககல்வதனையென்புருகு குரலழைஇ யிருஞ்சிறகர் குலைத்துகுத்துத்தன்பெடையைக் குயிறழுவத் தலைவந்த திளவேனில்.649. தண்காஞ்சித் தாதாடித் தன்னிறங் கரந்ததனைக்கண்டானா மடப்பெடை கிளியெனப்போய்க் கையகலநுண்டூவி யிளஞ்சேவ னோக்கோடு விளிபயிற்றித்தன்சிறகாற் பெடைதழுவத் தலைவந்த திளவேனில்.650. குறுத்தாட் குயிற்சேவல் கொழுங்காஞ்சித் தாதாடிவெறுத்தாங்கே மடப்பெடை விழைவகன்று நடப்பதனைமறுத்தாங்கே சிறகுளர்ந்து மகிழ்வானாக் கொளத்தேற்றியுறுப்பினா லடிபணியத் தலைவந்த திளவேனில்.651. தளையவிழ் கோதை பாடித் தானமர்ந் திருப்பத் தோழிவிளைமதுக் கண்ணி வீணா பதியெனும் பேடி வேற்கணிளையவள் பாட வீர ரெழால்வகை தொடங்க லன்றேல்வளையவ ளெழாலின் மைந்தர் பாடுக வல்லை யென்றாள்.652. வேயே திரண்மென்றோள் வில்லை கொடும்புருவம்வாயே வளர்பவளம் மாந்தளிரே மாமேனிநோயே முலைசுமப்ப தென்றார்க் கருகிருந்தாரேயே யிவளொருத்தி பேடியோ வென்றாரெரிமணிப்பூண் மேகலையாள் பேடியோ வேன்றார்.653. பலிகொண்டு பேராத பாச மிவள்கண்ணொலிகொண் டுயிருண்ணுங் கூற்றமென் றெல்லேகலிகொண்டு தேவர் முலைகரந்து வைத்தாரிலைகொண்ட பூணினீ ரென்றெழினி சோ்ந்தாளிலங்குபொற் கிண்கிணியா ணக்கெழினி சோ்ந்தாள்.654. நுண்டுகி லகலல்கு னொசித்த வெம்முலைஉண்டிவ ணுசுப்பென வுரைப்பி னல்லதுகண்டறி கிலாவிடைக் காம வல்லியாழ்கொண்டவர் குழாத்திடைக் கொடியி னொல்கினாள்.655. பளிக்கொளி மணிச்சுவ ரெழினி பையவேகிளிச்சொலி னிளையவர் நீக்கக் கிண்கிணியொளிக்குமின் றாடவ ருயிர்க ளென்னநொந்தளித்தவை யிரங்கச்சென் றணையி லேறினாள்.656. உறைகழித் திலகுவா ளுடற்றுங் கண்ணினாண்மறையொளி மணிச்சுவ ரிடையிட் டித்தலையிறைவளை யாழ்தழீஇ யிருப்ப வத்தலைக்கறைகெழு வேலினார் கண்ணி தீந்தவே..657. சிலைத்தொழிற் சிறுநுதற் றெய்வப் பாவைபோற்கலைத்தொழிற் படவெழீஇப் பாடி னாள்கனிந்திலைப்பொழிற் குரங்கின வீன்ற தூண்டளிர்நிலத்திடைப் பறவைமெய்ம் மறந்து வீழ்ந்தவே.658. கருங்கொடிப் புருவ மேறா கயனொடுங் கண்ணு மாடாவருங்கடி மிடறும் விம்மா தணிமணி யெயிறுந் தோன்றாவிருங்கடற் பவளச் செவ்வாய் திறந்திவள் பாடி னாளோநரம்பொடு வீணை நாவி னடந்ததோ வென்று நைந்தார்.659. இசைத்திறத் தனங்கனே யனைய நீரினார்வசைத்திற மிலாதவர் வான்பொன் யாழெழீஇவிசைத்தவர் பாடலின் வெருவிப் புள்ளெலாமசிப்பபோன் றிருவிசும் படைந்த வென்பவே.660. மாதர்யாழ் தடவர வந்த மைந்தர்கைக்கீதத்தான் மீண்டன கேள்விக் கின்னரம்போதரப் பாடினாள் புகுந்த போயினதாதலர் தாரினார் தாங்கள் பாடவே.661. சுரும்பெழுந் திருத்துணுந் தொங்கல் வார்குழலரும்பெற லவட்கிசை யரசர் தோற்றபின்னரம்பொடு தௌ்விளி நவின்ற நான்மறைவரம்பெறு நெறியவர் மலைதன் மேயினார்.662. திருமலர்க் கமலத் தங்கட் டேனின முரல்வ தொப்பவிரிமலர்க் கோதை பாட வெழால்வகை வீரர் தோற்றார்எரிமலர்ப் பவளச் செவ்வா யின்னரம் புளர மைந்தர்புரிநரம் பிசைகொள் பாட லுடைந்தனர் பொன்ன னாட்கே.663. வாலரக் கெறிந்த காந்தண் மணியரும் பனைய வாகிக்கோல்பொரச் சிவந்த கோலக் குவிவிரன் மடந்தை வீணைநூல்பொரப் புகுந்த நுண்ணூல் வணிகருந் தொலைந்து மாதோகால்பொரக் கரிந்த காமர் பங்கயப் பழன மொத்தார்.664. தேனுயர் மகர வீணைத் தீஞ்சுவை யிவளைவெல்வான்வானுயர் மதுகை வாட்டும் வார்சிலைக் காமனாகுமூனுயர் நுதிகொள் வேலீ ரொழிகவீங் கில்லை யென்றான்கானுய ரலங்கன்மாலைக் கட்டியங் கார னன்றே.665. மறுமுயற் கிவர்ந்த வேக மாசுண மடையப் பட்டநிறைமதி போன்று மன்னர் ஒளிகுறைந் துருகி நையவறுபகல் கழிந்த பின்றை யந்நகர்க் காதி நாய்கன்சிறுவனோர் சிங்க வேற்றை சீவக சாமி யென்பான்,666. தம்பியுந் தோழன் மாருந் தானுமற் றெண்ணிச் சூழ்ந்துவெம்பிய வீணைப் போருட் செல்குவம் யாமு முன்னேதும்பறப் புத்தி சேன சொல்லிது குரவற் கென்னகந்துகற் கவனுஞ் சொன்னா னவனிது விளம்பி னானே.667. ஐயனுக் கமைந்த நீரா ரறுபத்து நால்வ ரம்பொன்வையகத் தமிர்த மன்னார் வாக்கமை பாவை யொப்பாரெய்திய விளமை மிக்கா ரியைந்தன ரென்று பின்னுங்கையமை சிலையி னாற்குக் கந்துக னிதுவுங் கூறும்.668. மறைவல்லாற் குரைக்கும் போழ்திற் கோயிலு ணின்று மாலைப்பிறைவெல்லும் நுதலி னாளோர் பெண்கொடி வந்து கூந்தலுறைசெல நீக்கிப் பைந்தா ளொண்மணிக் குவளை நீட்டநறைவெல்லும் நாக மாலை நோக்கொடு பூக்கொண் டானே.669. நல்லவ ணோக்க நாய்கன் றோ்ந்துபூங் குவளைப் போதினல்லியுட் கிடந்த வோலை தாளது சலாகை யாதல்சொல்லுமென் றாய்ந்து கொண்டு துகிலிகைக் கணக்கு நோக்கிவல்லிதிற் சலாகை சுற்றி யோலையை வாசிக் கின்றான்.670. நம்பனை நகரி னீக்கிச் சேமத்தால் வைக்க தீயுட்செம்பொன்போற் பெரிதுஞ் சேந்து செகுத்திட லுற்று நின்றான்வெம்பினான் காரி யுண்டிக் கடவுளிற் கனன்று வேந்தன்இம்பரின் றெனக்குச் சொன்னா னிதுபட்ட தடிகள் என்றாள்.671. ஓலையை யவட்கு நீட்டி யொண்மணிக் குழையு முத்தும்மாலையும் படுசொ லொற்றி வம்மென மறைய நல்கிவேலைநெய் பெய்த திங்கள் விரவிய பெயரி னாற்குமேலைநாட் பட்ட தொன்று விளம்புவல் கேளி தென்றான்.672. கடியரங் கணிந்து மூதூர்க் கடல்கிளர்ந் தனைய தொப்பநடையறி புலவ ரீண்டி நாடக நயந்து காண்பான்குடையுடை யவனொ டெண்ணிச் சீவகற் கொணர்மி னென்னத்தொடையல்சூழ் வேலி னானுந் தோழருங் காணச் சென்றார்..673. நிலமறிந் தணிக வையன் சீவகன் நெறியி னென்னநலநுதற் பட்டங் கட்டி நகைமுடிக் கோதை சூட்டியலர்முலைக் குருதிச் சாந்து மாரமும் பூணுஞ் சோ்த்திக்குலவிய குருதிப்பட்டிற் கலைநலங்கொளுத்தி யிட்டான்.674. திருவிலே சொரிந்து மின்னுங் குண்டலஞ் செம்பொ னோலையுருவுகொண் மதிய மன்ன வொளிமுகஞ் சுடர வாக்கிப்பரியகஞ் சிலம்பு செம்பொற் கிண்கிணி பாதஞ் சோ்த்தியரிவையை யரம்பை நாண வணிந்தன னனங்கன ன்னான்.675. தோற்பொலி முழவும் யாழும் துளைபயில் குழலு மேங்கக்காற்கொசி கொம்பு போலப் போந்துகைத் தலங்கள் காட்டிமேற்பட வெருவி நோக்கித் தானைய விட்டிட் டொல்கித்தோற்றினாள் முகஞ்செய் கோலந் துளக்கினாண் மனத்தை யெல்லாம்.676. தெண்மட்டுத் துவலை மாலை தேனொடு துளிப்பத் திங்களுண்ணட்ட குவளை போலு முருவக்கண் வெருவி யாடவிண்விட்டுக் கடவுள் வீழ நுடங்கின புருவ நெஞ்சம்பண்விட்ட திருந்து காணும் பன்மணிக் கழலி னார்க்கே.677. செங்கதிர்ச் சிலம்பு செம்பொற் கிண்கிணி சிலம்பக் கோதைபொங்கப்பொன் னோலை வட்டம் பொழிந்துமின் னுகுப்பப் போர்த்தகுங்குமச் சாந்து வேய்ந்து குண்டலந் திருவில் வீசவங்கதி ரார மின்ன வரிவைகூத் தாடு கின்றாள்.678. மருங்குலு மொன்று தாய்க்கு மொருமக ளாத லோர்ந்துமிரும்பினா லியன்ற நெஞ்சத் திவர்களோ விருந்து காண்கவரங்கின்மே லிவளைத் தந்த தாய் கொலோ கயத்தி யன்றேற்சுரும்புசூழ் கண்ணி சூட்டி யவர்கொலோ கயவர் செல்லீ்ர்.679. அகிலார் புகையலாற் சாந்தணியாள் பூச்சாரச் செல்லாள் செல்லிற்பகலே பகைவளர்த்த பாவை சிறுநுசுப் பொன் றுண்டே பாவம்இகலேந் திளமுலைமேற் சாந்தெழுதி முத்தணிந்து பூவுஞ் சூட்டமுகிலேந்து மின்மருங்குல் மொய்குழற்றா யிதுகண்டு முளளே பாவம்.680. தேந்தாமஞ் செம்பவளத் தாமஞ் செம்பொன்னெரிதாம மின்னுத் திரடா மங்கடாந்தாந் தாமெனத் தாழ்ந்தபொன் மேகலைத்தாம வரங்கின்மேற் றாதார் முல்லைப்பூந்தாமக் கொம்பாடக் கண்டா ரெல்லாம்புனமயிலே யன்னமே பொன்னங் கொம்பேயாந்தா மரைமகளே யல்ல ளாயினமரர்மக ளென்பாரு மாயி னாரே.681. கொடியார் குளிர்முத்தஞ் சூட்டி வைத்தார்கொல்வானே குங்குமச்சே றாட்டி னார்களடிசார்ந்து வாழ்வாரை யம்முலைக டாமேயழித்திடு மேற்றாமே யழித்தி டுகவென்றொடியாத மாத்திரை யாலுண் டேநுசுப்பிருந்து காண்பாரு முளரே செங்கணெடியான் மகன்சிலையு மம்பும் வைத்தநிழன்மதியோ வாண்முகமோ நோக்கிக் காணீர்.682. நெய்பருகி நீண்டஇருட் கற்றை போலுங்குழற்கற்றை கண்டு நிறைக லங்குவார்மைபருகி நீண்டு மதர்த்த வுண்கண்வாளேறு பெற்று நைவா மாநா கத்தின்பைபருகு மல்கு லிலயம் பற்றிப்பதனமைத்த பாவை நிருத்த நோக்கிமெய்யுருகிக் கண்ணுருகி நெஞ்சுருகிக் காமவெயில்வெண்ணெய்ப் பாவைபோன் மெலிகின் றாரே.683. ஆடவர் மனங்க ளென்னு மரங்கின்மே லனங்க மாலையாடினாண் முறுவ லென்னுந் தோழியை யையன் காணவோடரி நெடுங்க ணென்னு மோலையை யெழுதி விட்டாள்வாடிய வாறு நோயு முரைத்துவார் கொடிய னாளே.684. வளமல ரணியப் பெற்றேன் வால்வளை திருத்தப் பெற்றேன்களனெனக் கரையு மல்குல் கையினாற் றீண்டப் பெற்றேனிளமுலை சுமந்து பெற்ற வருத்தமு மின்று தீர்ந்தேனுளமெலி மகளி ரெய்து மின்பமு மின்று பெற்றேன்.685. என்றவ ளரசன் றன்னை நோக்கல ளிவன்க ணார்வஞ்சென்றமை குறிப்பிற் றேறிக் கூத்தெலா மிறந்த பின்றைநின்றது மனத்திற் செற்ற நீங்கித்தன் கோயில் புக்கான்மன்றல் மடந்தை தன்னை வலிதிற்கொண் டொலிகொ டாரான்.686. தேனுடைந் தொழுகுஞ் செவ்வித் தாமரைப் போது புல்லியூனுடை யுருவக் காக்கை யிதழுகக் குடைந்திட் டாங்குக்கானுடை மாலை தன்னைக் கட்டியங் காரன் சூழ்ந்துதானுடை முல்லை யெல்லாந் தாதுகப் பறித்திட் டானே.687. கலையினிற் கன்னி நீக்கித் தாமரைக் கண்க டம்மான்முலையினி லெழுதிச் செவ்வாய் பயந்ததேன் பருகி முள்கும்சிலைவலாய் புல்லு நம்பிசீவக சாமியோ என்றலைகடற் புலம்பி னோவா தரற்றுமா லணங்கி னன்னாள்.688. பிறனல மரற்றக் கேட்டும் பீடினாற் கனிந்த காமநறுமல ரணிந்த மாலை நாற்றக்கோர் நான்கு காதம்உறநடந் தறித லில்லா னொண்டொடிக் குருகிப் பின்னுந்திறனல தமர்க்குச் செப்புந் தீயுமிழ்ந் திலங்கும் வேலான்.689. விலங்க லன்ன வேக வேழ நான்கும் வெல்லு மாற்றலன்கலங்க லந்தி லங்கு மார்பிற் கந்து கன்ம கன்னெனநலங்க லந்து ரைக்கு மாலிந் நன்ன கர்க்கு மன்னனோவுலங்க லந்த தோளினீரு ரைமி னீவி ரென்னவே.690. மட்ட விழ்ந்த தாரி னானிம் மாந கர்க்கு ளாயிரர்தொட்டெ டுக்க லாவு லம்மொர் தோளி னேந்தி யாடினானொட்டி நாக மோரி ரண்டெ டுக்க லாத கல்லினைவிட்ட லர்ந்த போது போல வேந்த லேந்தி நீக்கினான்.691. வெஞ்சி லையின் வேடர் வெள்ள மப்பு மாரி தூவலினெஞ்ச லின்றி நம் படையி ரும்மு றையு டைந்தபின்மஞ்சு சூழ்க ணைம்ம ழைபொ ழிந்து மாநி ரைபெயர்த்தஞ்சி லோதி யார் புனைந்த செஞ்சொன் மாலை சூடினான்.692. தீம்பயறி யன்ற சோறு செப்பி னாயி ரம்மிடாநீங்க லாந றுந்நெய் வெள்ளங் கன்ன லாயி ரங்குடமேந்துவித்து நாமி சைய வந்து தமந்து நீக்கினானாங்குநாம்ப சித்தசைந்த காலை யன்ற வண்ணலே.693. இன்ன னென்ன வின்பு றானிழந்த னன்ன ரசெனவென்னை வெளவு வாயில்தா னென்னுஞ் சூழ்ச்சி தன்னுளானன்ன தால ரிறப வறிந்து கூத்தி கூறினாளின்ன தாற்ப டையமைத் தெழுமி னென்றி யம்பினான்.694. தாதைதா னுரைத்த வெல்லாந் தன்னுயிர்த் தோழன் கூறக்கோதைமுத் தணிந்த மார்பன் கூரெயி றிலங்க நக்காங்கேதமொன் றில்லை சேறு மென்றலு மிலங்கு வாட்கைப்போதுலாங் கண்ணி மைந்தர் போர்ப்புலிக் குழாத்திற் சூழ்ந்தார்.695. கண்ணுதற் கடவுள் சீறக் கனலெரி குளித்த காமன்மண்மிசைத் தோன்றி யன்ன வகைநல முடைய காளைதெண்மணி யார மார்பன் றிருநுதன் மகளிர் நெஞ்சத்துண்ணிறை பருகும் வண்டா ருருவமை திருவின் மிக்கான்.696. கருநெறி பயின்ற குஞ்சிக் காழகில் கமழ வூட்டிவரிநிற வண்ண மாலை வலம்பல மிலைச்சி வாளார்திருநிற முகத்திற் கேற்பச் செம்பொனோ ரோலை சோ்த்தியெரிநிறக் குழையோர் காதிற் கிருளறச் சுடர வைத்தான்.697. தென்வரைப் பொதியிற் றந்த சந்தனத் தேய்வை தேங்கொண்மன்வரை யகலத் தம்பி வலம்புரி யாரந் தாங்கிமின்விரித் தனைய தொத்து விலைவரம் பறிய லாகாவின்னுரைக் கலிங்க மேற்ப மருங்குலுக் கெழுதி வைத்தான்.698. இரும்பறக் கழுவி யெஃகி னிருளற வடிக்கப் பட்டவரும்பெறற் சுரிகை யம்பூங் கச்சிடைக் கோத்து வாங்கிப்பெருந்தகைக் குருசில் கொண்டு பெருவலஞ் சுடர வீக்கித்திருந்திழை மகளிர் வெஃகுந் தேவிளங் குமர னொத்தான்.699. வரைவிழித் திமைப்ப தொக்கும் வாளொளி யார மார்பின்விரைவழித் திளைய ரெல்லாம் விழுமணிக் கலங்க டாங்கிநுரைகிழித் தனைய நொய்ம்மை நுண்டுகின் மருங்குல் சோ்த்திபுரைகிழித் துணரு மொப்பி னோவியப் பாவை யொத்தார்.700. அரக்குநீ ரெறியப் பட்ட வஞ்சனக் குன்ற மன்னதிருக்கிள ரோடை சூழ்ந்த செம்புகர் நெற்றித் தாகியுருக்கியூ னுண்ணும் வேகத் துறுபுலி யனைய நாகமருக்கனோர் குன்றஞ் சோ்ந்தாங் கண்ணறா னேனி னானே.701. விடுகணை விசையின் வெய்ய விளங்கொளி யிவுளித் திண்டோ்கடுநடைக் கவரி நெற்றிக் காலியற் புரவி காய்ந்துவடிநுனை யொளிறு மாலை வாட்படை மறவர் சூழவடுதிரைச் சங்க மார்ப்ப வணிநகர் முன்னி னானே.702. தோற்றனண் மடந்தை நல்யாழ் தோன்றலுக் கென்று நிற்பார்நோற்றன ணங்கை மைந்த னிளநல னுகர்தற் கென்பார்கோற்றொடி மகளிர் செம்பொற் கோதையுங் குழையு மின்னவேற்றன சொல்லி நிற்பா ரெங்கணு மாயி னாரே.703. சுறாநி றக்கொ டுங்குழை சுழன்றெ ருத்த லைத்தரவறாம லர்ததே ரியலா னழன்று நோக்கி யையெனப்பொறாம னப்பொ லிவெனு மணிக்கை மத்தி கையினாலறாவி வந்து தோன்றினா னனங்க னன்ன வண்ணலே.704. குனிகொள் பாக வெண்மதிக் கூரி ரும்பு தானுறீ இப்பனிகொண் மால்வ ரையெனப் படும தக்களிறீஇஇனிதி ழிந்தி ளைய ரேத்த வின்ன கிற்கொ ழும்புகைமுனிய வுண்ட குஞ்சியான் முரண்கொண் மாட முன்னினான்.705. புதிதி னிட்ட பூந்தவிசி னுச்சி மேல்ந டந்தவண்புதிதி னிட்ட மெல்லணைப் பொலிந்த வண்ணம் போகுயர்மதிய தேறி வெஞ்சுடர் வெம்மை நீங்க மன்னியவுதய மென்னு மால்வரை யுவந்தி ருந்த தொத்ததே.706. முருகு விம்மு கோதையார் மொய்ய லங்கல் வண்டுபோற்பருகு வானி வண்ணலம் பாரித் திட்ட விந்நகருருகு மைங்க ணையொழித் துருவி னைய காமனார்கருதி வந்த தென்றுதங் கண்கள் கொண்டு நோக்கினார்.707. முனைத்தி றத்து மிக்கசீர் முனைவர் தம்மு னைவனார்வனப்பு மிக்க வர்களின் வனப்பு மிக்கி னியனாநினைத்தி ருந்தி யற்றிய நிருமி தம்ம கனிவன்கனைத்து வண்டு ளர்ந்ததார்க் காளை சீவ கன்னரோ.708. பொன்னை விட்ட சாயலாள் புணர்மு லைத்த டத்தினான்மின்னை விட்டி லங்குபூண் விரைசெய் மார்ப மோலையாவென்னை பட்ட வாறரோ வெழுதி நங்கை யாட்கொள்வான்மன்னும் வந்து பட்டனன் மணிசெய் வீணை வாரியே.709. இனைய கூறி மற்றவ டோழி மாரு மின்புறவனைய லாம்ப டித்தலா வடிவிற் கெல்லை யாகியகனைவண் டோதி கைதொழுஉங் கடவுள் கண்ணிற் கண்டவரெனைய தெனைய தெய்தினார் அனைய தனைய தாயினார்.710. குட்டநீர்க் குவளை யெல்லாங் கூடிமுன் னிற்க லாற்றாக்கட்டழ கமைந்த கண்ணா ணிறையெனுஞ் சிறையைக் கைபோயிட்டநாண் வேலி யுந்திக் கடலென வெழுந்த வேட்கைவிட்டெரி கொளுவ நின்றா ளெரியுறு மெழுகி னின்றாள்.711. நலத்தைமத் தாக நாட்டி நல்வலி யிளமை வாராக்குலப்பிறப் பொன்னுங் கையாற் கோலப்பா சங்கொ ளுத்திக்கலக்கியின் காமம் பொங்கக் கடைந்திடு கின்ற காளையிலைப்பொலி யலங்கன் மார்ப மியைவதென் றாகுங் கொல்லோ.712. தீங்கரும் பெருத்திற் றூங்கி யீயின்றி யிருந்த தீந்தேனாங்கணாற் பருகி யிட்டு நலனுணப் பட்ட நம்பிபூங்குழன் மகளிர் முன்னர்ப் புலம்பனீ நெஞ்சே என்றாள்வீங்கிய காமம் வென்றார் விளைத்தவின் பத்தோ டொப்பாள்.713. கண்ணெனும் வலையி னுள்ளான கையகப் பட்டி ருந்தான்பெண்ணெனு முழலை பாயும பெருவனப் புடைய நம்பிஎண்ணின்மற் றியாவ னாங்கொ லென்னி திற் படுத்த வேந்தலொண்ணிற வுருவச் செந்தீ யுருவுகொண் டனைய வேலான்714. யாவனே யானு மாக வருநிறைக் கதவ நீக்கிக்காவலென் னெஞ்ச மென்னுங் கன்னிமா டம்பு குந்துநோவவென் னுள்ளம் யாத்தாய் நின்னையு மாலை யாலேதேவரிற் செறிய யாப்பன் சிறிதிடைப் படுக வென்றாள்.715. கழித்தவே லேறு பெற்ற கடத்திடைப் பிணையின் மாழ்கிவிழித்துவெய் துயிர்த்து மெல்ல நடுங்கித் தன் றோழி கூந்தலிழுக்கிவண் டிரியச் சோ்ந்தோர் கொடிப்புல்லுங் கொடியிற் புல்லியெழிற்றகை மார்பற் கின்யா ழிதுவுய்த்துக் கொடுமோ வென்றாள்.716. தடங்க ணாள்ப ணியினாற் றானவ் வீணை யொன்றினைநெடுங்க ணாளெ ழினியை நீக்கி யுய்த்து நீட்டினாள்மடங்க லன்ன மொய்ம்பினான் வருக வென்று கொண்டுதன்கிடந்த ஞானத் தெல்லையைக் கிளக்க லுற்று நோக்கினான்.717. சுரந்து வானஞ் சூன்முதிர்ந்து மெய்ந்நொந் தீன்ற துளியேபோற்பரந்த கேள்வித் துறைபோய பைந்தார் மார்பன் பசும்பொன்யாழ்நரம்பு தேனார்த் தெனத்தீண்டி நல்லாள் வீணை பொல்லாமையிருந்த முலையா ணின்றாளை நோக்கி யிசையி னிதுசொன்னான்.718. நீர் நின் றிளகிற் றிதுவேண்டா நீரின் வந்து திதுபோகவார் நின் றிளகு முலையினாய் வாட் புண்ணுற்ற திது நடக்கவோரு முருமே றிதுவுண்ட தொழிக வொண்பொன் னுகுகொடியேசீர்சால் கணிகை சிறுவன்போற் சிறப்பின் றம்ம விதுவென்றான719. கல்சோ் பூண்கொள் கதிர்முலையாய்காமத் தீயால் வெந்தவர்போற்கொல்லை யுழவர் சுடப்பட்டுக்குரங்கி வெந்த திதுகளிறுபுல்ல முரிந்த தெனப்போக்கித்தூம மார்ந்த துகிலுறையும்நல்யாழ் நீட்ட வதுகொண்டுநங்கை நலத்த திதுவென்றான்.720. இருநில மடந்தை யீன்ற திருவிசும் பென்னுங் கைத்தாய்திருநல மின்னுப் பொன்ஞாண் முகில்முலை மாரித் தீம்பாலொருநலங் கவினி யூட்ட வுண்டுநோய் நான்கு நீங்கியருநலங் கவினி வாள்வா யரிந்திது வந்த தென்றான்.721. தீந்தொடை நரம்பின் றீமை சிறிதலாப் பொழுது மோதிப்பூந்தொடை யரிவை காணப் புரிஞெகிழ்த் துரோமங் காட்டத்தேங்கம ழோதி தோற்றாள் செல்வனுக் கென்ன மைந்தன்வாங்குபு நபுலன் கையுள் வார்புரி நரம்பு கொண்டான்.722. பணிவரும் பைம்பொற் பத்தர்பல்வினைப் பவள வாணிமணிகடை மருப்பின் வாளார்மாடக வயிரத் தீந்தேனணிபெற வொழுகி யன்னவமிழ்துறழ் நரம்பி னல்யாழ்கணிபுகழ் காளை கொண்டுகடலகம் வளைக்க லுற்றான்.723. குரல்குர லாகப் பண்ணிக் கோதைதாழ் குஞ்சி யான்றன்விரல்கவர்ந் தெடுத்த கீத மிடறெனத் தெரித றேற்றார்சுரரொடு மக்கள் வீழ்ந்தார் சோர்ந்தன [1]புள்ளு மாவுமுருகின மரமுங் கல்லு மோர்த்தெழீஇப் பாடு கின்றான்.724. கன்னி நாகங் கலங்க மலங்கிமின்னு மிரங்கு மழையென் கோயான்மின்னு மழையின் மெலியு மரிவைபொன்னாண் பொருத முலையென் கோயான்.725. கருவி வானங் கான்ற புயலினருவி யரற்று மலையென் கோயானருவி யரற்று மலைகண் டழுங்குமருவார் சாயன் மனமென் கோயான்.726. வான மீனி னரும்பி மலர்ந்துகானம் பூத்த காரென் கோயான்கானம் பூத்த கார்கண் டழுங்குந்தேனார் கோதை பரிந்தென் கோயான்.727. அண்ணல்யாழ் நரம்பை யாய்ந்துமணிவிர றவழ்ந்த வாறும்பண்ணிய விலயம் பற்றிப்பாடிய வனப்பு நோக்கிவிண்ணவர் வீணை வீழ்த்தார்விஞ்சையர் கனிந்து சோர்ந்தார்மண்ணவர் மருளின் மாய்ந்தார்சித்தரு மனத்துள் வைத்தார்.729. விண்ணவர் வியப்ப விஞ்சைவீரர்கள் விரும்பி யேத்தமண்ணவர் மகிழ வான்கட்பறவைமெய்ம் மறந்து சோரவண்ணறா னனங்க னாணப்பாடினா னரச ரெல்லாம்பண்ணமைத் தெழுதப் பட்டபாவைபோ லாயி னாரே.730. பருந்து நிழலும்போற் பாட்டு மெழாலுந்திருந்துதார்ச் சீவகற்கே சோ்ந்தனவென் றெண்ணிவிருந்தாக யாழ்பண்ணி வீணைதான் தோற்பானிருந்தா ளிளமயில்போ லேந்திலைவேற் கண்ணாள்.731. கோதை புறந்தாழக் குண்டலமும் பொற்றோடுங்காதி னொளிர்ந் திலங்கக் காமர் நுதல்வியர்ப்பமாத ரெருத்த மிடங்கோட்டி மாமதுரகீதம் கிடையிலாள் பாடத் தொடங்கினாள்.732. இலையா ரெரிமணிப்பூ ணேந்து முலையுஞ்சிலையார் திருநுதலுஞ் செம்பசலை மூழ்கமலையா ரிலங்கருவி வாள்போல மின்னுங்கலையார்தீஞ் சொல்லினாய் காணார்கொல் கேள்வர்.733. பிறையார் திருநுதலும் பேரமருண் கண்ணும்பொறையார் வனமுலையும் பூம்பசலை மூழ்கநிறைவா ளிலங்கருவி நீள்வரைமேன் மின்னுங்கறைவேலுண் கண்ணினாய் காணார்கொல் கேள்வர்.734. அரும்போ் வனமுலையு மாடமைமென் றோளுந்திருந்தோ் பிறைநுதலுஞ் செம்பசலை மூழ்கநெருங்கார் மணியருவி நீள்வரைமேன் மின்னுங்கரும்பார்தீஞ் சொல்லினாய் காணார்கொல் கேள்வர்.735. பண்ணொன்று பாட லதுவொன்று பல்வளைக்கைமண்ணொன்று மெல்விரலும் வாள்நரம்பின் மேல்நடவாவிண்ணின் றியங்கி மிடறு நடுநடுங்கிஎண்ணின்றி மாதர் இசைதோற் றிருந்தனளே.736. மையார் நெடுங்கண்ணாண் மாமணியாழ் தானுடைந்துநையா நடுநடுங்கா நனிநாண மீதூராப்பொய்யாதோர் குன்றெடுப்பாள் போன்மெலிந்து பொன்மாலைபெய்பூங் கழலாற்குப் பெண்ணரசி யேந்தினளே.737. மெல்லென் சிலம்பரற்ற மேகலைகண் மின்னுமிழநல்ல பெடையன்ன நாண வடியொதுங்கியொல்லெ னுயர்தவமே செய்ம்மி னுலகத்தீரெல்லீரு மென்பாள்போ லேந்தன்மேல் வீழ்த்தனளே.738. நாகத்துப் படங்கொ ளல்கு னலங்கிளர் செம்பொன் மாலைமேகத்துப் பிறந்தோர் மின்னு மணிவரை வீழ்ந்த தேபோலாகத்துப் பூட்டி மைந்த னடிதொழு திறைஞ்சி நின்றாள்போகத்து நெறியைக் காட்டும் பூமகள் புணர்ந்த தொப்பாள்.739. செம்மல ரடியு நோக்கித் திருமணி யல்கு னோக்கிவெம்முலைத் தடமு நோக்கி விரிமதி முகமு நோக்கிவிம்மிதப் பட்டு மாதோ விழுங்குவான் போல வாகிமைம்மலர்த் தடங்க ணங்கை மரைமலர்த் தேவி என்றான்.740. கோதையுந் தோடு மின்னக் குண்டலந் திருவில் வீசமாதரம் பாவை நாணி மழைமினி னொசிந்து நிற்பக்காதலந் தோழி மார்கள் கருங்கயற் கண்ணி னாளையேதமொன் றின்றிப் பூம்பட் டெந்திர வெழினி வீழ்த்தார்.741. வெள்ளிலை வேற்க ணாளைச் சீவகன் வீணை வென்றானொள்ளிய னென்று மாந்த ருவாக்கடல் மெலிய வார்ப்பக்கள்ளராற் புலியை யேறு காணிய காவன் மன்னனுள்ளகம் புழுங்கி மாதோ வுரைத்தனன் மன்னர்க் கெல்லாம்.742. வடதிசைக் குன்ற மன்ன வான்குல மாசு செய்தீர்விடுகதிர்ப் பருதி முன்னர் மின்மினி விளக்க மொத்தீர்வடுவுரை யென்று மாயும் வாளமர் அஞ்சி னீரேன்முடிதுறந் தளியிர் போகி முனிவனம் புகுமி னென்றான்.743. மல்லுப்பூத் தகன்ற மார்பீர் புகழெனும் போர்வை போர்த்துச்செல்வப்பூ மகளு நாளை அவனுழைச் செல்லு மென்றான்.முல்லைப்பூம் பந்து தன்னை மும்மதக் களிற்று வேலிக்கொல்லைப்பூங் குன்றஞ் செய்தீர் குங்குமக் குழங்கன் மாலை744. திருமக ளிவளைச் சோ்ந்தான் றெண்டிரை யாடை வேலியிருநில மகட்குஞ் செம்பொ னேமிக்கு மிறைவ னாகுஞ்செருநிலத் திவனை வென்றீர் திருவினுக் குரியீ ரென்றான்கருமன நச்சு வெஞ்சொற் கட்டியங் கார னன்றே.745. அனிச்சப்பூங் கோதை சூட்டி னம்மனை யோவென் றஞ்சிப்பனிக்குநுண் ணுசுப்பிற் பாவை யொருத்திநாம் பலரென் றெண்ணித்துனித்துநீர் துளங்கல் வேண்டா தூமணிச் சிவிறி நீர்தூய்த்தனிக்கயத் துழக்கி வென்றீர் தையலைச் சார்மின் என்றான்.746. வெந்திற லாளன் கூற வேகமோ டுரறி மன்னர்பந்தணி விரலி னாடன் படாமுலைப் போகம் வேண்டிக்கந்தெனத் திரண்ட திண்டோட் கந்துகன் சிறுவன் காயுமைந்தலை யரவின் சீற்றத் தாரழல் குளிக்க லுற்றார்.747. பண்ணியல் யானை மேலான் பதுமுகன் பரவைத் தானேகண்ணிய துணர்ந்து கல்லாக் கட்டியங் கார னெஞ்சிலெண்ணிய தெண்ணி மன்ன ரிகன்மலைந் தெழுந்த போழ்திற்றண்ணிய சிறிய வெய்ய தழற்சொலால் சாற்று கின்றான்.748. இசையினி லிவட்குத் தோற்றாம் யானையால் வேறு மென்னினிசைவதொன் றன்று கண்டீ ரிதனையா னிரந்து சொன்னேன்வசையுடைத் தரசர்க் கெல்லாம் வழிமுறை வந்த வாறேதிசைமுகம் படர்க வல்லே [1]தீத்தொட்டாற் சுடுவ தன்றே.749. தோளினான் மிடைந்து புல்லுந் தொண்டைவா யமிர்தம் வேட்டோர்வாளினான் மலைந்து கொள்ளின் வாழ்கநுங் கலையு மாதோகோளுலாஞ் சிங்க மன்னான் கொடியினை யெய்தப் பெற்றீர்தாளினால் நொய்யீ ராகித் தரணிதா விடுமி னென்றான்.750. நாறுமும் மதத்தி னாலே நாகத்தை யிரிக்கும் நாகமாறிய சினத்த தன்றி யதிங்கத்தின் கவளங் கொண்டால்வேறுநீர் நினைந்து காணீர் யாவர்க்கும் விடுக்க லாகாநாறித்தே னொழுகுங் கோதை நம்பிக்கும் அன்ன ளென்றான்.751. இளவள நாகு புல்லி யினத்திடை யேறு நின்றாலுளவளங் கருதி யூக்க லுழப்பெரு துடைய தாமேதளவள முகைகொள் பல்லாட் சீவகற் றழுவி நின்றாற்கொளவுளைந் தெழுவ தல்லாற் கூடுத னுங்கட் காமோ.752. எழுந்துவிண் படருஞ் சிங்கம் பெட்டைமே லிவர்ந்து நின்றான்மழுங்கமேற் சென்று பாய்தன் மறப்புலி தனக்கு மாமோகொழுங்கயற் கண்ணி னாளைச் சீவக குமரன் சூழ்ந்தாலழுங்கச்சென் றணைதல் பேய்காள் அனங்கற்கு மாவ துண்டே.753. மத்திரிப் புடைய நாகம் வாய்வழி கடாத்த தாகியுத்தமப் பிடிக்க ணின்றா லுடற்றுதல் களபக் காமேபத்தினிப் பாவை நம்பி சீவகன் பால ளானாலத்திறங் கருதி யூக்க லரசிர்கா ணுங்கட் காமோ.754. தூமத்தாற் கெழீஇய கோதை தோட்டுணை பிரித்தல் விண்மேற்றாமத்தாற் கெழீஇய மார்ப னிந்திரன் றனக்கும் ஆகாதேமுற்றீ ரின்னும் கேண்மி னிரதியைப் புணர்து மென்றுகாமத்தாற் கெழுமி னார்க்குக் காமனிற் பிரிக்க லாமே.755. எம்மைநீர் வெல்லப் பெற்றீர் வென்றபி னிருந்த வேந்தனும்மையும் வேறு செய்து நும்முளே பொருது வீந்தால்வெம்மைசெய் துலக மெல்லா மாண்டிட விளைக்கும் நீதியம்மமற் றதனை யோரீ ரவன்கருத் தன்ன தென்றான்.756. சொற்றிற லன்றி மன்னீர் தொக்குநீர் காண்மி னெங்கள்விற்றிற லென்று வில்வாய் வெங்கணை தொடுத்து வாங்கிக்கற்றிரள் கழிந்து மண்ணுட் கரந்தது குளிப்ப வெய்திட்டிற்றெமர் கல்வி யென்றா னிடியுரு மேற்றொ டொப்பான்.757. ஆழியங் கழனி தன்னு ளம்பொடு கணையம் வித்திச்சூழ்குடர் பிணங்கண் மல்க விளைத்தபின றொழுதிப் பல்பேய்க்கூழ்படு குருதி நெய்யி னிறைச்சிச்சோ றூட்டி வென்றிவீழ்தர வேட்டு நின்றா ரெய்துப வெகுளல் வேண்டா.758. போர்ப்பறை முழங்கி யெங்கும் பொருவளி புடைக்கப் பட்டகார்க்கடல் போன்று சேனை கலக்கமோ டூரறி யார்ப்பத்தார்ப்பொலி மார்ப னோர்த்துத் தன்கையில் வீணை நீக்கிவார்ப்பொலி முலையி னாட்கு வாய்திறந் திதனைச் சொன்னான்.759. தேய்ந்து நுண்ணிடை நைந்துகச் செப்பினைக்காய்ந்த வெம்முலை யாய்நின கண்கள்போலாய்ந்த வம்பினுக் காரிரை யாகியவேந்தர் வேண்டிநின் றார்விம்ம னீயென்றான்.760. அண்ணல் கூறலு மம்மனை யோவெனாத்துண்ணெ னெஞ்சின ளாய்த்துடித் தாயிழைகண்ணி னீர்முலை பாயக் கலங்கினாள்வண்ண மாக்கவின் சொல்லொடு மாய்ந்ததே.761. மேவி நம்பிக்கு வெம்பகை யாக்கியபாவி யேனுயிர் பாழுடல் பற்றுவிட்டாவி யோநட வாயென் றழுதுதன்காவி வாட்கண் கலங்க வதுக்கினாள்.762. பாழி நம்படை மேலதிப் பாரெலாநூழி லாட்டி நுடக்கிக் குடித்திடும்வாழி நங்கைகண் டாயென்று வாட்கணீர்தோழி தூத்துகிற் றோகையி னீக்கினாள்.763. எங்கள் பெண்மையு மீர்மலர்த் தார்மன்னர்தங்க ளாண்மையுஞ் சால்வது காண்டுமென்றிங்கு வார்முர லுங்கலை யேந்தல்குனங்கை வாட்படை நங்கையைச் குழ்ந்ததே.764. கூன்களுங் குறளு மஞ்சிக் குடர்வெந்து கொழும்பொற் பேழைதான்கொளப் பாய வோடிச் சாந்துக்கோய் புகிய செல்வதேன்கொள்பூ மாலை சூடித் தாமமாய்த் திரண்டு நிற்பவான்பளிங் குருவத் தூணே மறைபவு மாய வன்றே.765. இங்கித நிலைமை நோக்கி முறுவலித் தெரிபொன் மார்பனங்கையைக் காக்கும் வண்ண நகாநின்று மொழிந்து பேழ்வாய்ச்சிங்கந்தான் கடிய தாங்கோர் செழுஞ்சிங்க முழுக்கிற் சீறிப்பொங்கிமேற் செல்வ தேபோற் பொலங்கழ னரலச் சென்றான்.766. பதுமுக குமரன் மற்றிப் பாவையைக் காவ லோம்பிமதுமுக மாலை நெற்றி மதகளி றுந்தி நிற்பநுதிமுக வாளும் வில்லு நுண்ணிலை வேலு மேந்திச்சதுமுக மாகச் சேனை நமர்தலைப் பெய்க வென்றான்.767. வட்டுடை மருங்குல் சோ்த்தி வாளிரு புடையும் வீக்கித்தட்டுடைப் பொலிந்த திண்டோ்த் தனஞ்செயன் போல வேறிக்கட்டளைப் புரவி சூழ்ந்து கால்புடை காப்ப வேவியட்டுயிர் பருகுங் கூற்றங் கோளெழுந் தனைய தொத்தான்.768. புள்ளிரைப் பன்ன பொற்றார்ப் புரவித்தே ரிரவி போலாவுள்ளுருத் தெழுந்து பொங்கி யுடல்சினங் கடவ நோக்கிமுள்ளெயி றிலங்க நக்கு முடிக்குழா மன்னர் கேட்பக்கள்ளவி ழங்கன் மார்பன் கார்மழை முழக்கிற் சொன்னான்.769. முருகுலா முல்லை மாலை மூப்பிலா முலையி னார்நும்மருகுலாம் புலவி நோக்கத் தமிர்தமின் றுகுப்ப கொல்லோகருதலாம் படிய தன்றிக் கலதியம் பிவையுங் காய்ந்தபொருதுலாம் புகழை வேட்டிவ் வெஃகமும் புகைந்த வென்றான்.770. வாணிக மொன்றுந் தேற்றாய் முதலொடுங் கேடு வந்தாலூணிகந் தீட்டப் பட்ட வூதிய வொழுக்கி னெஞ்சத்தேணிகந் திலேசு நோக்கி யிருமுதல் கெடாமை கொள்வார்சேணிகந் துய்யப் போநின் செறிதொடி யொழிய வென்றார்.771. தம்முடைப் பண்டந் தன்னைக் கொடுத்தவ ருடைமை கோடலெம்முடை யவர்கள் வாழ்க்கை யெமக்குமஃ தொக்கு மன்றேயம்முடி யரசிர்க் கெல்லா மென்கையி லம்பு தந்துநும்முடைத் திருவுந் தேசு நோக்குமுன் கொள்வ லென்றான்.772. மட்டுலாந் தாரி னாய்நின் வனப்பினோ டிளமை கல்விகெட்டுலாய்ச் சிலம்பு செம்பொற் கிண்கிணி மகளிர் கோங்கமொட்டுலா முலைகள் பாய்ந்த வகலத்துச் சரங்கண் மூழ்கப்பட்டுலாய்க் கிடக்க லுற்றா யென்சொலாய் பாவி யென்றார்.773. எரிசுடர்ப் பருதி முன்ன ரிருளென வுடைந்து நீங்கப்பொருபடை மன்னர் நுங்கள் புறக்கொடை கண்டு மற்றிம்முருகுடைக் குழலி னாடன் முகிழ்முலை கலப்ப லன்றேலிருசுடர் வழங்கும் வையத் தென்பெயர் கெடுக வென்றான்.774. ஆண்மர வாணிலத் தப்பு வேல்செய்முட்காண்வரு காட்டினக் களிற்று நீள்வரைநீணில வேந்தெனும் வேழப் பேரினம்பூண்முலைப் பிடிக்கவாய்ப் போர்செய் குற்றவே.775. தாழிருந் தடக்கையு மருப்புந் தம்பியர்தோழர்தன் றாள்களாச் சொரியு மும்மதமாழ்கடற் சுற்றமா வழன்று சீவகவேழுயர் போதக மினத்தொ டேற்றதே.776. குடையுடை வேந்தெனுங் குழாங்கொ ணாகமுங்கொடியெனும் பிடியுடைக் குமர வேழமும்வெடிபடு போர்த்தொழில் காண விஞ்சையரிடியுடை யினமழை நெற்றி யேறினார்.777. கரைபொரு கடலொடு கார்க ணுற்றெனமுரைசொடு வரிவளை முழங்கி யார்த்தனவரைசரு மமர்மலைந் தரணம் வீசினார்குரைகடற் றானைபோர்க் கோலஞ் செய்தவே.778. தெய்வதம் வணங்குபு செம்பொன் வாயுளிட்டெய்கணைப் படுமழை சிதறி யெங்கணுமொய்யமர் மலைந்தனர் முருகு விம்முதார்ச்செய்கழற் சீவகன் வாழ்க வென்னவே.779. கலந்தது பெரும்படை கணைபெய்ம் மாரிதூயிலங்கின வாட்குழா மிவுளி யேற்றனவிலங்கின தோ்த்தொகை வேழங் காய்ந்தனசிலம்பின வியமரந் தெழித்த சங்கமே.780. சுற்றணி கொடுஞ்சிலை மேகந் தூவியமுற்றணி பிறையெயிற் றம்பு மூழ்கலினற்றுவீழ் குழைமுக மலர்ந்த தாமரைமற்றவை சொரிவதோர் மாரி யொத்தவே.781. மறப்படை பசித்தன வயிறின் றார்கெனக்குறைத்தனர் குஞ்சரம் கூந்தன் மாத்துணித்திறக்கின ரோடுதோ் மைந்த ரின்னுயிர்துறக்கம்போய்ப் புகுகெனத் துணிய நூறினார்.782. ஆற்றுவீர் வம்மி னெம்மோ டாண்மைமேம் படீஇய வென்பாரேற்றவர் மார்பத் தல்லா லிரும்புமேல் விடாது நிற்பார்கூற்றம்போற் கொடிய யானைக் கோடுழு தகன்ற மார்பங்கீற்றுப்பட் டழகி தாகக் கிடக்கெனக் கொடுத்து நிற்பார்.783. கழித்துவா ளமலை யாடிக் காட்டுவார் கண்கள் செந்தீவிழித்துமேற் சென்ற வேழம் வேலினால் விலக்கி நிற்பார்தெழித்துத் தோ்க் கயிறு வாளா லரிந்திட்டுப் புரவி போக்கிப்பழிப்பில கொணர்ந்து பூட்டு பாகந் யென்று நிற்பார்.784. ஐங்கதிக் கலினப் பாய்மாச் சிறிதுபோர் களையீ தென்பார்வெங்கதிர் வேலிற் சுட்டி வேந்தெதிர் கொண்டு நிற்பார்நங்கைகல் யாணம் நன்றே நமக்கென நக்கு நிற்பார்சிங்கமும் புலியும் போன்றார் சீவகன் றோழன் மாரே785. ஒருங்கவன் பிறந்த ஞான்றே பிறந்தவ ருதயத் துச்சியிரும்பினாற் பின்னி யன்ன யெறுழ்வலி முழவுத் தோளார்விரும்புவார் வேழ வேற்போர் நூற்றுவர் நூறு கோடிக்கிருந்தனம் வருக வென்பா ரின்னண மாயி னாரே.786. கூட்டுற முறுக்கி விட்ட குயமகன் றிகிரி போலவாட்டிறற் றேவ தத்தன் கலினமா மாலை வெள்வேலீட்டம்போழ்ந் தியானை நெற்றி யிருங்குளம் பழுத்தி மன்னர்சூட்டொடு கண்ணி சூளா மணிசிந்தித் திரியு மன்றே.787. பாய்ந்தது கலின மாவோ பறவையோ வென்ன வுட்கிவேந்தர்தம் வயிறு வேவ நபுலமா விபுல ரென்பார்காய்ந்துதம் புரவிக் காமர் குளம்பினால் களிற்றி னோடைதேய்ந்துகச் சோ்த்தி மாலைத் திருமுடித் திலகங் கொண்டார்.788. காயத்தின் குழம்பு தீற்றிக் காரிரும் பெறிய மேகந்தோயுமுள் ளிலவின் கூன்காய் சினைதொறு முதிர்வ வேபோன்மாயங்கொன் மறவர் மாலைப் பைந்தலை யுதிர்ந்த செங்கட்சேயனான் றிருவின் பேரான் செழுஞ்சிலைப் பகழி யாலே.789. நீனிறப் பௌவ மேய்ந்து சூன்முற்றி நீல மேகம்வானிற விசும்பி னின்ற மாரியின் மறைவ லாளன்போனிறப் புத்தி சேனன் பொன்னணி பகழி சிந்திவேனிற மன்னர் சேனை கூற்றிற்கு லிருந்து செய்தான்.790. வீரவே லுடம்பெலாஞ் சூழ வெம்புலால்சோருஞ்செங் குருதியுண் மைந்தர் தோன்றுவார்ஓருமே லொண்மணிச் சூட்டு வைக்கியவாரமே யமைந்ததோ்க் குழிசி யாயினார்.791. பொன்னனாள் புணர்முலைப் போகம் வேண்டியமன்னரோ டிளையவர் மறலி வாளமரின்னண மித்தலை மயங்க வத்தலைக்கொன்னவில் வேலினா னிலைமை கூறுவாம்.792. தம்பியைச் சீவக னோக்கிச் சாமரைவெம்பரி மான்செவி வீர மந்திரமிம்பர்நம் மிடர்கெட விரண்டும் வல்லையாய்நம்பிநீ மொழிகென நயந்து கூறினான்.793. மந்திரங் கேட்டு நான்கும் வானெட்டிப் புகுவ வேபோலந்தரத் திவர்ந்த வாழிக் கானிலம் விட்ட மாலைச்சுந்தரச் சுண்ண மேனி மகளிர்தங் கண்ணுள் ளிட்டமைந்தரு மிரும்பு மொவ்வா வான்புலங் காவல் கொண்டார்.794. வடிகயி றாய்ந்து முட்கோல் வலக்கையாற் றாங்கி வென்றிமுடிகெனப் புரவி முள்ளா லுறுத்தினான் மொழித றேற்றேன்கடுகிய வண்ண மாவின் றாரொலி காமர் பொற்றோ்படையது செவியுங் கண்ணும் பற்றிநின் றிட்ட வன்றே.795. அண்ணறோ் பறவை என்பா ரருவமே யுருவம் என்பார்மண்ணதே வான தென்பார் மனத்ததே முகத்த தென்பார்கண்ணதே செவிய தென்பார் கலங்கநூல் கழிய நோக்கிப்பண்ணிய வீதி பற்றி மண்டலம் பயிற்றி னானே.796. அகில்கொண்ட கொள்ளி வட்டமாருயிர் மேயு நேமிமுகில்கொண்ட மின்னுத் தோற்பமுறுகிய விசையிற் றாகிமிகல்கொண்ட விகலைத் தானேவிழுங்கிய சிறகர்த் தோற்றிப்பகல்கொண்டு பறக்குந் தேராற்காளைதன் பைம்பொற் றேரே.797. காலற்ற வயிர மாலை வெண்குடை கவிழ்ந்த பிச்சமேலற்ற கவசம் வீழ்ந்த சாமரை யற்ற வின்ஞாண்மாலுற்ற மன்னர் தங்கண் மனங்கையற் றொழிந்த வள்ளல்கோலொற்றக் குனிந்த வாறே சிலைகுனிந் தொழிந்த தன்றே.798. நுங்களை வீணை வென்றநூபுர வடியி னாடன்வெங்களித் தடங்கண் கண்டீர்விருந்தெதிர் கொண்மி னென்னாவங்களி யரசர்க் கெல்லாமோரொன்று மிரண்டு மாகச்செங்களிப் பகழி யொப்பித்துள்ளவா றூட்டி னானே.799. நன்மன வேந்தர் தங்க ணகைமணி மார்ப நக்கிப்புன்மன வேந்தர் தங்கள் பொன்னணி கவசங் கீறியின்னுயிர் கவர்ந்து தீமை யினிக்கொள்ளு முடம்பி னுலுந்துன்னன்மி னென்ப வேபோற் சுடுசரம் பரந்த வன்றே.800. மீனெறி தூண்டில் போன்று வெஞ்சிலை நாண்க ளற்றதேனெறி குன்ற மொத்த திண்கச்சை துணிந்த வேழமானெறி காட்டுந் திண்டோ் கயிறற்று மறிய வேந்தரூனெறி யாழி யேந்தி யொய்யென வுலம்பி யார்த்தார்.801. ஆர்ப்பெதிர் மாரி பெய்யு மணிநெடுங் குன்றம் போலப்போர்க்கெதிர்ந் தவரு மார்த்தா ரார்த்தலும் பூண்ட வல்வில்கார்க்கெதிர் மேகம் போலக் கணைமழை கான்ற திப்பாலீர்த்தது குருதி வெள்ள மிறைச்சிக்குன் றாக்கி னானே.802. மன்னர்கள் வெகுண்டு விட்ட மறப்படை யழுவ மாரிகொன்னுனை யெஃகி னீக்கிக் குனிந்துவிற் பகழி கான்றமின்னவி ரிலங்கு மொள்வாள் விழித்துயிர் விழுங்க வின்னதன்மையாற் றானை நீந்தித் தான்விளை யாடு கின்றான்.803. வேழவெண் கோட்டு மெல்கோ றின்றுகூன் குருதி வாளாலாழநா வழித்து நெய்த்தோர் கொப்புளித் தழிந்த மாவின்சூழ்குடர்க் கண்ணி சூடி நிணத்துகி லுடுத்து வெள்ளென்பூழ்பெற வணிந்து சூற்பே யாடக்கண் டுவந்து நக்கான்.804. வெளிற்றுடற் குருதி வெள்ள நிலையிது வென்ப வேபோற்களிற்றுகிர்ப் பிறழ்பற் பேய்கள் கைகளை யுச்சிக் கூப்பியளித்தவை பாடி யாடக் குறுநரி நக்கு வேழம்விளித்தன கழுகும் பாறும் விலாவிற்றுக் கிடந்த வன்றே.805. கடல்விளை யமுதங் கண்ட பொழுதினெய் கனிந்த தீஞ்சொற்றடிசிலஞ் சுவைமிக் காங்கு மண்ணலங் குமர னொன்னாருடலின்மேற் றிரியுந் திண்டோ் காண்டலு மைந்தர் நெஞ்சத்திடல்பிளந் திட்ட வெஃகஞ் சுமந்தமர்த் திறத்தின் மிக்கார்.806. கடாந்திறந் திட்டு வானிற் களகள முழங்கும் வேழம்படாந்திறந் தூழித் தீயிற் பதுமுகன் காட்டி யிட்டான்தடாம்பிறை மருப்புத் திண்கை யபரகாத் திரங்க டம்மாற்கொடாம்பிற குமரிப் போருட் பிறர்க்கெனக் கொன்ற தன்றே.807. மருப்பினால் வேழம் வீழா மன்னரை வாலிற் சீறாமுருக்கித்தோ் தடக்கை தன்னான் முழங்கிப்பாய் மாக்கள் காலினெரித்திடாக் கண்ணுட் டீயாற சுட்டுநீ றாக்கி நெய்த்தோரொருக்கிப்பேய் பாடி யாட வுறுசிலை யுடன்று கொண்டான்.808. கொண்டான் பகழி தொடுத்தான் சிலை கால்கு னிந்ததொண்டோ் மிசையு முருவக்களிற் றுச்சி மேலும்வண்டார்ப் புரவி நிறத்தும்மற மன்னர் மேலுங்கண்டான் சொரிந்தான் கணைமாரி கலந்த தன்றே.809. பைம்பொற் புளகப் பருமக்களி யானை யீட்டஞ்செம்பொ னெடுந்தோ்த் தொகைமாக் கடற்சேனை வெள்ளநம்பன் சிலைவாய் நடக்குங்கணை மிச்சி லல்லாலம்பொன் மணிப்பூ ணரசும் மிலையென்று நக்கான்.810. ஒருவனே சிலையு மொன்றே யுடையதோர் களிற்றின் மேலானருவரை மார்பிற் சென்ற தறிந்தில னெஃக மின்னும்பொருவரோ மன்ன ரென்றான் பொருசிலை மடக்கி யிட்டார்வருகளி யானை மீட்டார் வாட்படை வாங்கிக் கொண்டார்.811. செங்கண்மா றெழிக்ப் பட்ட வலம்புரித் துருவங் கொண்டசங்குவாய் வைத்து நம்பன் றெழித்தலுந் தறுக ணாளிபொங்கிய முழக்கின் வேழப் பேரினம் புலம்பி னாற்போற்றங்குதார் மன்ன ரெல்லாந் தளர்ந்துகண் சாம்பி னாரே.813. முளிமரக் காடு மேய்ந்த முழங்கழல் போன்று மைந்தன்றெளிநலக் குமரர் கூற்றிற் றெழித்தனர் பகழி சிந்தியொளிநல வுப்புக் குன்ற மூர்புனற் குடைந்த தேபோற்களிநல மன்னர் தங்கள் கடற்படை யுடைந்த தன்றே.814. உறுபடை மன்னர் தம்மையுடற்றியொன் றானு மின்றிச்சிறுபடை யவர்கள் வென்றுசெகுப்பவோ வென்ன வேண்டாசெறியெயிற் றாளி வேழப்பேரினஞ் செகுத்த தன்றேவுறுபுலி யொன்று தானேகலையின முடற்றிற் றன்றே.815. நல்லவை புரியு மாந்தர்நாந்தகம் பிழைத்து வீழாவல்லவை புரியு மாந்தர்க்கத்திர மொன்றும் வாயாவெல்வதோ குணத்தின் மிக்கார்வெற்றிலை விடினும் வேலாமில்லையே வென்றி தீமையிடங்கொண்ட மனத்தி னார்க்கே.816. குழையுடை முகத்தி னாள்கண்கோணைப்போர் செய்த மன்னர்மழையிடை மின்னி னொய்தாமறைந்தனர் விஞ்சை வேந்தர்முழையிடை சிங்க மன்னான்மொய்யம ரேத்தி யார்த்தார்விழவுடை வீதி மூதூர்விருப்பொடு மலிந்த தன்றே.817. பார்மிசை யுலக மேத்தும்படுகளங் கண்டு பற்றார்போர்முகக் களிற்று வெண்கோடுழதசெஞ் சால்கொண் மார்பின்சீர்முகத் தோழர் சூழச்சீவகன் திருவின் சாயல்வார்முக முலையி னாளைமனைவயிற் கொண்டு புக்கான்.818. நெய்க்கழி வைக்கப் பட்டார் நெய்ப்பத்தல் கிடத்தப் பட்டார்புக்குழி யெஃக நாடி யிரும்பினாற் போழப் பட்டார்மைக்கிழிந் தொழுகுங் கண்ணீர் மாநிலத் துகுக்கப் பட்டார்கைக்கிழி கொடுக்கப் பட்டார் கலம்பல நல்கப் பட்டார்.819. முதுமரப் பொந்து போல முழுமெயும் புண்க ளுற்றார்க்கிதுமருந் தென்ன நல்லா ரிழுதுசோ் கவளம் வைத்துப்பதுமுகன் பாவை மார்பி னெய்க்கிழி பயிலச் சோ்த்திநுதிமயிர்த் துகிற்குப் பாயம் புகுகென நூக்கி னானே.820. பார்கெழு பைம்பொன் றன்னாற் பண்ணவ னுருவ மாக்கியூர்கெழு விழவு செய்தாங் குறுபொரு ளுவப்ப நல்கித்தார்கெழு மின்னு வீசித் தனிவடந் திளைக்கு மார்பன்போர்கெழு களத்துப் பாவம் புலம்பொடு போக்கி னானே.821. செய்தவப் பாவ மெல்லாந் தீர்த்திடுந் தீர்த்தன் பாதமெய்திய சேடங் கூலித் திறைஞ்சுபு தொழுது வாழ்த்திமையறு மணியிற் செய்த வலம்புரி யதனீர் கொண்டான்வையக மளிக்க நீண்ட வலம்புரித் தடக்கை யானே.822. கருமணி யழுத்திய காமர் செங்கதிர்த்திருமணிச் செப்பெனச் செறிந்த வெம்முலையருமணி யலம்வரு மம்பொற் கொம்பனாள்பெருமணக் கிழமையாம் பேசு கின்றதே823. நான்குநூ றாயிரங் குடத்து நல்லனவான்றயிர் பானெயோ டழகி தாநிறைத்தூன்றிகழ் வேலினான் வேள்விக் கூர்மருள்கோன்றொறுக் காவலன் கொண்டு முன்னினான்.824. வளைநிற வார்செநெ லரிசிப் பண்டியோடளவறு சருக்கரைப் பண்டி யார்ந்தனபிளவியல் பயறுபெய் பண்டி யுப்புநீர்விளைவமை பண்டியின் வெறுத்த தாங்கொர்பால825. சினைத்துணர் முழவன பலவின் றீங்கனிகனைத்துவண் டுழல்வன வாழை மாங்கனியெனைத்துள கிழங்குகாய் குருகொ டேந்தியசனத்தினாற் றகைத்திடம் பெறாது தானொர்பால்.826. மரகத மணிப் பசுங் காய்கொள் வான்குலைகவர்பழுக் காய்க்குலை கனியக் காவுறீஇயிவர்தரும் மெல்லிலைக் காவு மேந்தியவுவரியாய்ச் சொரிந்திடம் பெறாது தானொர்பால்.827. சண்பகந் தமநகந் தமால மல்லிகைதண்கழு நீரொடு குவளை தாமரைவண்டின மிசைகொள வாசப் பூச்சுமைகொண்டவர் குழாம்பொலி வுற்ற தாங்கொர்பால்.828. ஆர்கெழு குறடுசூட் டாழி போன்றவன்சீர்கெழு வளமனை திளைத்து மாசனங்கார்கெழு கடலெனக் கலந்த வல்லதூஉம்பார்கெழு பழுமரப் பறவை யொத்தவே.829. கையுறை யெழுதினர் கைந்நொந் தேடறுத்தையென விருப்பமற் றன்ன தாதலான்வையக மருங்கினின் வாழ்நர் மற்றிவன்செய்தவ நமக்கிசை கென்னச் சென்றதே.830. வாலரி கழுவிய வண்ணச் செம்புனல்காலிய லிவுளியும் களிறு மாழ்ந்தவண்கோலநீர்க் குவளையும் மரையும் பூத்துவண்டாலிவண் குருகுபாய் தடங்க ளானவே.831. உடுப்பன துகில்களு முரைக்கு நானமுந்தொடுத்தன மாலையுங் குழையுஞ் சாந்தமுங்கொடுப்பவர் கொள்பவர் வீழ்த்த பல்கலமடுத்துவிண் பூத்ததோ ரழகின் மிக்கதே.833. ரிலங்குபொற் கிண்கிணி யிரங்கு மோசையுமுலம்புமா லுவர்க்கட லொலியின் மிக்கவே.கலங்கழு மரவமுங் கருனை யாக்குவார்சிலம்பொலி யரவமு மிச்சில் சீப்பவ834. இன்னிய முழங்கி யார்ப்ப வீண்டெரி திகழ வேதந்துன்னினர் பலாசிற் செய்த துடுப்பினெய் சொரிந்து வேட்பசொரிந்தனன் வீர னேற்றான் வலம்புரி யதனீர் கொண்டான்முன்னுபு விளங்கு வெள்ளி முளைத்தெழ முருக னன்னான்.835. இட்டவுத் தரிய மின்னு மெரிமணிப் பருமுத் தாரமட்டவிழ் கோதை வெய்ய வருமுலை தாங்க லாற்றாநெட்டிருங் கூந்த லாட னோ்வளை முன்கை பற்றிக்கட்டழல் வலங்கொண் டாய்பொற் கட்டிறா னேறி னானே.836. மந்திரத் தரசன் காதன் மாதரம் பாவை தன்னைக்கந்துகன் சிறுவன் வேட்ட கடிவினை நொடியின் மற்றோரந்தர விசும்பிற் றேவர்க் கதிபதி யாய கோமானிந்திரன் றனக்கு மாகா தென்பது நடந்த தன்றே.837. அடிமனை பவள மாக வரும்பொனா லலகு சோ்த்திமுடிமணி யழுத்திச் செய்த மூரிக்காழ் நெற்றி மூழ்கக்கடிமலர் மாலை நாற்றிக் கம்பல விதானங் கோலியிடுபுகை மஞ்சிற் சூழ மணவறை யியற்றி னாரே.838. ஐந்துமூன் றடுத்த செல்வத்தமளிமூன் றியற்றிப் பூம்பட்டெந்திர வெழினி வாங்கியின்முக வாசச் செப்புஞ்சந்தனச் சாந்தச் செப்புந்தண்மலர் மாலை பெய்தவிந்திர நீலச் செப்புமிளையவ ரேந்தி னாரே.839. கடைந்துபெய் மணிக்கைச் செம்பொற்காசறு தட்டிற் சூழ்ந்துமிடைந்துபெய் மணிக்கட் பீலிமின்னுசாந் தாற்றி பொன்னாரடைந்துவீ சால வட்டமரிவைய ரேந்தி யாற்றத்தடங்கண்கள் குவளை பூப்பத்தையலோ டாடு மன்றே.840. பஞ்சுசூழ் பரவை யல்குற் பசுங்கதிர்க் கலாபம் வீங்கச்செந்தளிர்க் கோதை சோரக் கிண்கிணி சிலம்பொ டேங்கமைந்தருட் காம னன்னான் மகளிருட் டிருவ னாளையந்தரத் தமரர் பெற்ற வமிர்தெனப் பருகி னானே.841. இளமுலை மணிக்கண் சேப்ப வெழுதுவிற் புருவ மேறக்கிளைநரம் பனைய தீஞ்சொற் பவளவாய் திகழத் தேன்சோர்வளமலர்க் கோதை தன்னை வாய்விடான் குழையப் புல்லியளமர லிலாத வின்பக் கடலகத் தழுந்தி னானே.842. இன்னண மொழுகு நாளு ளிளமரக் காவு காண்பான்பொன்னணி மார்பன் சென்று புகுதலு மொருவன் றோன்றித்துன்னியோ ரோலை நீட்டித் தொழுதனன் பெயர்ந்து நிற்பமன்னிய குருசில் கொண்டு மரபினால் நோக்கு கின்றான்.843. உருமுக்கதிர் வேற்கலுழ னோலையுல கென்னும்பருமைக்குருப் பளிங்கிற்புகழ்ப் பஞ்சிமுழு தடுத்ததிருமிக்குடைச் செல்வன்றிறற் சாமிநனி காண்கஅருமையற னின்பம்பொரு ளாகென விடுத்தேன்.844. தத்தையொடு வீணைமனர் தாம்பொருது தோற்பமொய்த்தகலை நம்பிமுகிழ் முலையையிசை வெல்லவைத்தகதிர் வேலின்வலி யார்க்குரிய ளென்னச்சித்தங்கரிந் தாங்குக்கொடி யான்செரு விளைத்தான்.845. தேன்முழங்கு தார்க்குருசில் செம்பொனெடுந் தோ்மேல்வான்முழங்கு வெஞ்சிலையின் வாளிமழை தூவியூன்முழங்கு வெங்குருதி வேழமுடன் மூழ்கவேன்முழங்கு தானைவிளை யாடியதுங் கேட்டேன்.846. வந்துதரன் கூறியவிவ் வாய்மொழியு மன்றிமுந்துவரன் மொழிந்தபொருண் முற்றும்வகை நாடிப்[1]பந்துபுடை பாணியெனப் பாயுங்கலி மான்றேரெந்தைதிற முன்னமுணர்ந்த தின்னணம் விடுத்தேன்.847. எள்ளுநர்கள் சாயவென தோளிரண்டு நோக்கிவெள்ளிமலை முழுதுங்கொடி யெடுத்ததிக லேத்திக்கள்செய்மலர் மார்பனுறு காப்பிகழ்த லின்றியுள்ளுபொரு ளெம்முணர்த்தி யன்றியுள வேண்டா.848. ஆம்பொருள்க ளாகுமது யார்க்குமழிக் கொண்ணாப்போம்பொருள்கள் போகுமவை பொறியின்வகை வண்ணந்தேம்புனலை நீர்க்கடலுஞ் சென்றுதர லின்றேவீங்குபுனல் யாறுமழை வேண்டியறி யாதே.849. மன்பெரிய மாமனடி மகிழ்ந்துதிசை வணங்கிஅன்பினக லாதவனை விடுத்தலார்ந்த கோதைக்கின்பநிலத் தியன்றபொரு ளிவையிவைநுங் கோமான்றந்தவெனச் சொல்லிநனி சாமிகொடுத் தானே.850. குங்குமமுஞ் சந்தனமுங் கூட்டியிடு கொடியாவெங்கணிள முலையின்மிசை யெழுதிவிளை யாடிக்கொங்குண்மலர்க் கோதையொடு குரிசில்செலும் வழிநாளங்கணகர்ப் பட்டபொரு ளாகியது மொழிவாம்.
பகிர்