1. மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்திஓவாது நின்ற குணத்து ஒள் நிதிச் செல்வன் என்பதேவாதி தேவன் அவன் சேவடி சேர்தும் அன்றே.2. செம்பொன் வரை மேல் பசும் பொன் எழுத்து இட்டதே போல்அம் பொன் பிதிர்வின் மறு ஆயிரத்து எட்டு அணிந்துவெம்பும் சுடரின் சுடரும் திருமூர்த்தி விண்ணோர்அம் பொன் முடி மேல் அடித்தாமரை சென்னி வைப்பாம்.3. பல் மாண் குணங்கட்கு இடனாய்ப் பகை நண்பொடு இல்லான்தொல் மாண்பு அமைந்த புனை நல்லறம் துன்னி நின்றசொல் மாண்பு அமைந்த குழுவின் சரண் சென்று தொக்கநல் மாண்பு பெற்றேன் இது நாட்டுதல் மாண்பு பெற்றேன்.4. கற்பால் உமிழ்ந்த மணியும் கழுவாது விட்டால்நற்பால் அழியும் நகை வெண்மதி போல் நிறைந்தசொற்பால் உமிழ்ந்த மறுவும் மதியால் கழூஉவிப்பொற்பா இழைத்துக் கொளல்பாலர் புலமை மிக்கார்.5. முந்நீர்ப் பிறந்த பவழத்தொடு சங்கும் முத்தும்அந் நீர் உவர்க்கும் எனின் யார் அவை நீக்குகிற்பார்இந் நீர என் சொல் பழுது ஆயினும் கொள்ப அன்றேபொய்ந் நீர அல்லாப் பொருளால் விண் புகுதும் என்பார்.6. மீன் ஏறு உயர்த்த கொடி வேந்தனை வென்ற பொற்பில்ஆனேறு அனையான் உளன் சீவகசாமி என்பான்வான் ஏற நீண்ட புகழான் சரிதம் தன்னைத்தேன் ஊற நின்று தெருண்டார் அவை செப்பல் உற்றேன்.7. கோடாத செங்கோல் குளிர் வெண்குடைக் கோதை வெள்வேல்ஓடாத தானை உருமுக் குரல் ஓடை யானைவாடாத வென்றி மிகு சச்சந்தன் என்ப மன்னன்வீடாத கற்பின் அவன் தேவி விசயை என்பாள்.8. சேந்து ஒத்து அலர்ந்த செழுந்தாமரை அன்ன வாள் கண்பூந்தொத்து அலர்ந்த பசும் பொன் கொடி அன்ன பொற்பின்ஏந்து ஒத்து அலர்ந்த முலையின் அமிர்து அன்ன சாயல்வேந்தற்கு அமுதாய் விளையாடுதற்கு ஏது வாமே.9. கல்லார் மணிப் பூண் அவன் காமம் கனைந்து கன்றிச்சொல்லாறு கேளான் நனி சூழ்ச்சியில் தோற்ற வாறும்புல்லார் புகலப் பொறி மஞ்ஞையில் தேவி போகிச்செல் ஆறு இழுக்கிச் சுடுகாடு அவள் சேர்ந்த வாறும்,10. நாள் உற்று நம்பி பிறந்தான் திசை பத்தும் நந்தத்தோள் உற்று ஓர் தெய்வம் துணையாய்த் துயர் தீர்த்த வாறும்கோள் உற்ற கோன் போல் அவன் கொண்டு வளர்த்த வாறும்வாள் உற்ற கண்ணாள் மகன் வாழ்க என நோற்ற வாறும்,11. நெஞ்சம் புணையாக் கலை மாக் கடல் நீந்தி ஆங்கேவஞ்சம் மறவர் நிரை வள்ளல் விடுத்த வாறும்விஞ்சைக்கு இறைவன் மகள் வீணையில் தோற்ற வாறும்நஞ்சு உற்ற காம நனி நாகரில் துய்த்த வாறும்,12. முந்நீர்ப் படு சங்கு அலற முரசு ஆர்ப்ப மூதூர்ச்செந்நீர்க் கடியின் விழவாட்டினுள் தேங்கொள் சுண்ணம்மைந்நீர் நெடுங்கண் இரு மங்கையர் தம்முள் மாறாய்இந்நீர்ப் படியேம் இவை தோற்றனம் என்ற வாறும்,13. சுண்ணம் உடைந்து சுரமஞ்சரி சோர்ந்து தோழிவண்ணம் நெடுங் கண் குண மாலையை வைது மாறிப்புண் மேல் புடையில் புகைந்து ஆண் உரு யாதும் நோக்காள்கண் நோக்கு உடைந்து கடிமாடம் அடைந்த வாறும்,14. பொன் துஞ்சு மார்பன் புனல் ஆட்டிடைப் புன்கண் எய்திநின்று எஞ்சுகின்ற ஞமலிக்கு அமிர்து ஈந்த வாறும்அன்றைப் பகலே குண மாலையை அச்சுறுத்தவென்றிக் களிற்றை விரிதார் அவன் வென்ற வாறும்,15. தேன் ஊறு தீம் சொல் குண மாலையைச் சேர்ந்த வாறும்கோன் ஊறு செய்வான் கருதிச் சிறை கொண்ட வாறும்வான் ஆறு இழிந்து மழை மின் என வந்த ஓர் தேவன்ஊன் நாறு ஒளத வேல் உரவோன் கொண்டு எழுந்த வாறும்,16. தேங்காத மள்ளர் திரள் தோள் இணை சிக்க யாத்தபூங் கச்சு நீக்கிப் பொறி மாண்கலம் நல்ல சேர்த்திநீங்காத காதல் உடையாய் நினைக்க என்று பின்னும்பாங்கு ஆய விஞ்சை பணித்து ஆங்கு விடுத்த வாறும்,17. பைந் நாகப் பள்ளி மணி வண்ணனின் பாயல் கொண்டுகைந் நாகம் துஞ்சும் கமழ் காந்தள் அம் சாரல் போகிமைந் நாக வேலி மணி பல்லவ தேயம் நண்ணிக்கொய்ந் நாகச் சோலைக் கொடி அந் நகர் புக்க வாறும்,18. அத்தம் அனைய களிற்று அந் நகர் மன்னன் மங்கைமுத்தம் உரிஞ்சும் முகிழ் மென் முலை மின் அனாளைப்பைத்து அங்கு ஓர் நாகம் பனி மா மதி என்று தீண்டச்சித்தம் குழையற்க எனத் தீர்த்து அவள் சேர்ந்த வாறும்,19. பொன் பூண் சுமந்த புணர் மெல் முலைக் கோடு போழநல் பூங் கழலான் இரு திங்கள் நயந்த வாறும்கல் பாடு அழித்த கன மா மணித் தூண் செய் தோளான்வெற்பு ஊடு அறுத்து விரைவின் நெறிக் கொண்ட வாறும்.20. தள்ளாத சும்மை மிகு தக்க நல் நாடு நண்ணிவிள்ளா விழுச்சீர் வணிகன் மகள் வேல் கண் நோக்கம்உள் ஆவி வாட்ட உயிர் ஒன்று ஒத்து உறைந்த வாறும்கள் ஆவி நாறும் கமழ் கோதையின் போய வாறும்,21. இன்னீர் அமிர்து அன்னவள் கண் இணை மாரி கற்பப்பொன் ஊர் கழலான் பொழி மா மழைக் காடு போகிமின்னீர் வெள் வேலவன் மத்திம தேய மன்னன்கொன்னூர் கொடு வெம் சிலை கண்டு எதிர் கொண்ட வாறும்,22. திண் தேர் அரசர் திறல் சிங்கங்கள் வில்லும் வாளும்கண்டு ஆங்கு உவந்து கடி பெய்து இவண் காத்தும் என்றுகொண்டார் குடங்கை அளவே உள கண்ணினாளைப்புண் தாங்கு எரிவேல் இளையோற்குப் புணர்த்த வாறும்,23. மதியம் கெடுத்த வய மீன் எனத் தம்பி மாழாந்துஉதிதற்கு உரியாள் பணியால் உடன் ஆய வாறும்நிதியின் நெறியின் அவன் தோழர் நிரந்த வாறும்பதியின் அகன்று பயந்தாளைப் பணிந்த வாறும்,24. கண் வாள் அறுக்கும் கமழ்தார் அவன் தாயொடு எண்ணிவிண் வாள் அறுக்கும் நகர் வீதி புகுந்த வாறும்மண் மேல் விளக்காய் வரத்தில் பிறந்தாள் ஒர் கன்னிப்பெண் ஆர் அமிர்தின் பெரு வாரியுள் பட்ட வாறும்,25. துஞ்சா மணிப் பூண் சுரமஞ்சரி என்னும் நாமத்துஅம் சாயல் பூத்த அகிலார் துகிலாய் பொன் அல்குல்எஞ்சாத இன்பக் கொடி தாழ்த்ததும் பன்றி எய்துநஞ்சு ஊறும் வேலான் பகை நாம் அறக் கொன்ற வாறும்,26. புண் தோய்த்து எடுத்த பொரு வேல் எனச் சேந்து நீண்டகண் போன்ற மாமன் மகள் கண் மணிப் பாவை அன்னபெண் பால் அமிர்தின் நலம் பெற்றதும், பொற்பச் செங்கோல்தண் பால் மதி தோய் குடை தண் நிழல் பாய வாறும்,27. திறை மன்னர் உய்ப்பத் திரு நிற்பச் செங்கோல் நடப்பக்குறைவு இன்றிக் கொற்றம் உயரத் தெவ்வர் தேர் பணியஉறைகின்ற காலத்து அறம் கேட்டு உரும் உற்ற பாம்பின்அறிவன் அடிக் கீழ் அரசு அஞ்சித் துறந்த வாறும்,28. கோணைக் களிற்றுக் கொடித் தேர் இவுளிக் கடல் சூழ்வாள் மொய்த்த தானை அவன் தம்பியும் தோழன் மாரும்பூண் மொய்த்த பொம்மல் முலையாரும் புலம் துறப்பவீணைக் கிழவன் விருந்து ஆர் கதிச் சென்ற வாறும்,29. தேன் வாய் உமிழ்ந்த அமிர்து உண்டவன் போன்று செல்வன்வான் வாய் வணக்கும் நலத்தார் முலை போகம் வேண்டான்ஏனோரும் ஏத்த அவன் எய்திய இன்ப வெள்ளம்ஈனோர்க்கு உரைப்பாம் பதிகத்துள் இயன்ற வாறே,