இலம்பகம் 12 · சீவக சிந்தாமணி · திருத்தக்க தேவர்
இலக்கணையார் இலம்பகம்
சீவக சிந்தாமணி 12 · இலக்கணையார் இலம்பகம்
2378. அலங்க லேந்திய குங்கும வருவரை மார்பன்கலந்த காரிகை யவர்களைத் தருகென வருளவிலங்கு மாலைவெள் ளருவிய வெழில்வரை மணந்தபுலம்பு நீள்சுரம் போய்க்கொணர்ந் தருளொடுங் கொடுத்தார்.2379. மோடு கொண்ணிலா முளைத்தெழு பருதிகண் டறியாப்பாடு வண்டொடு பறவையு நடுக்குறுங் காப்பின்மாட மாமணிச் சிவிகையின் மயிலென விழிந்தார்வீடு கண்டவர் போன்றுமின் னிடுகொடி யனையார்.2380. அன்று சூடிய மாலைய ராடிய சாந்தர்பொன்றி வாடிய மேனியர் பொன்னிறை சுருங்கார்சென்று காதலன் றிருவிரி மரைமல ரடிமேலொன்றி வீழ்ந்தனர் குவளைக்க ணுவகைமுத் துகவே.2381. இலங்கு பூண்வரை மார்புற வெடுத்தவன் முயங்கமலங்கி வாட்கண்கள் வருபனி சுமந்துடன் வெருவிக்கலங்கு நீரிடைக் கலக்குறு கருங்கய லிணைபோற்புலம்பி யோடின செவியுற நெடியன பொலிந்தே.2382. வேனல் வாய்ப்பட்டு விரிமுகை தளிரொடு கரிந்தகானக் கார்முல்லை கார்மழைக் கெதிர்ந்தன போலமான மங்கையர் வாட்டமும் பரிவுந்தங் கணவன்றேனெய் மார்பகந் தீண்டலுந் தீர்ந்தொளி சிறந்தார்.2383. சேலுண் கண்ணியர் சிலம்பொடு திலகமுந் திருத்திமாலை நல்லன மதுக்கமழ் தகையன மிலைச்சிக்கோல மென்முலைக் குங்கும மிடுகொடி யெழுதிச்சோலை வேய்மரு டோண்முத்துந் தொழுதக வணிந்தார்.2384. நஞ்சு மேய்ந்திளங் களிக்கயன் மதர்ப்பன போலவஞ்சி வாட்கண்கண் மதர்த்தன வலர்ந்துடன் பிறழப்பஞ்சு சூழ்மணி மேகலை பரிந்தவை சொரியவஞ்சி நுண்ணிடை கவின்பெற வைகினன் மாதோ.2385. அரிபொற் கிண்கிணி யணிகிளர் சிலம்பொடு சிலம்புந்திருவச் சீறடிச் செழுமலர்க் கொழுங்கயன் மழைக்கணுருவ நுண்ணிடை யொளிமணி வருமுலை யுருவாரெரிபொன் மேகலை யிலக்கணை கடிவினை நொடிவாம்.2386. ஆழி மால்கட லகன்பெருங் கேள்விக டுறைபோயூழி னன்றியு முறுவினை யோரையின் முடிப்பான்சூழி யானையுந் துளங்குபொற் சிவிகையு முடையான்வேழ வேந்தற்கு விழுப்பெருங் கணிவிரித் துரைத்தான்.2387. ஓங்கு கொற்றவற் கோதிய வுயர்பெரு நாளால்வீங்கு வெள்ளியங் குன்றென விளங்கொளி யுடையதேங்கொண் மாலையுந் திலகமு மணிந்ததிண் குணத்தபாங்கிற் பண்ணின நூற்றெட்டுப் படுமதக் களிறே.2388. விளங்கு வெண்டுகி லுடுத்துவெண் சாந்துமெய் பூசித்துளங்கு மஞ்சிகை துளைச்சிறு காதினுட் டுளங்கவளங்கொண் மாலைகள் சூடிமுத் தணிந்துவண் முரசங்களங்கொள் வேழத்தி னேற்றினர் கடிமுர சறைவான்.2389. கேண்மின் கேண்மின்கள் யாவரு மினியன கேண்மின்பூண்மி னித்தில மணிவடம் பூசுமின் சாந்தம்வாண்மி னுண்ணிடை வருந்தினுஞ் சூட்டணிந் தழகாராண மாகிய வருவிலை வண்ணப்பட் டுடுமின்.2390. பிள்ளை வெண்பிறைச் சிறுநுதற் பெரும்பிட்ட மணிமினுள்ள மேனியு மொளிர்மணிக் கலங்களிற் புனைமின்வள்ளல் வாய்மொழி யான்படு பாலமிர் தல்லாலுள்ள மேவினும் பிறவுணப் பெறீரெழு நாளும்.2391. வாழை மல்கிய மணிக்குலைக் கமுகொடு நடுமின்றாழ நாற்றுமின் றாமங் ளகிற்குடம் பரப்பியாழின் பாடலு மாடலு மாங்குதோ றியற்றிப்போழு மால்விசும் பெனப்பல பொலங்கொடி யெடுமின்.2392. மாலை வாண்முடி மன்னவன் மணவினை யெழுநாட்சீல மில்லன சினக்களி றகற்றுகென் றணிந்தகோல மார்முர சிடியுமிழ் தழங்கென முழங்கநீல மாக்கட னெடுநகர் வாழ்கென வறைந்தார்.2393. முரச மார்ந்தபின் மூவிரு நாள்கள்போய்விரைவொ டெங்கணும் வெள்வளை விம்மினபுரையில் பொன்மணி யாழ்குழ றண்ணுமைவரவ வானி னதிர்ந்த வணிமுழா.2394. விண்வி ளக்குவ போல்விரி பூந்துகள்கண்வி ளக்கிக் கலந்தவெண் சாந்தினான்மண்வி ளக்கி மலர்ப்பலி சிந்தினார்பண்வி ளக்கிய பைங்கிளி யின்சொலார்.2395. ஆய்ந்த மோட்டின வான்படு பாலுலைபோந்து பொங்கிய வாவியி னாற்பொலிந்தேந்து மாடங்க டாமிழி னென்பனபூந்து கில்புறம் போர்த்தன போன்றவே.2396. திருவி னல்லவர் செம்மலர்ச் சீறடிபரவி யூட்டிய பஞ்சரத் தக்களிவிரவி மீநிலஞ் சேர்ந்தொளி பூத்துராய்க்குருதி வானிலங் கொண்டது போன்றதே.2397. பால்வெண் டிங்கண் மணிக்கை படுத்தவைபோலு மாடியி னோக்கிப் பொலங்கலக்கோலஞ் செய்பவர் கோல வெறிப்பினான்மாலை வண்டின மாலைக்கண் கொண்டவே.2398. போக மாமழை போழ்ந்து புதத்தொறுமாக மேந்துவ பொன்மணித் தோரணமாக நாற்றின தாம மணிக்குடமேக மாநகர் வீதி நிரைத்தவே.2399. ஆடன் மங்கையர் கிண்கிணி யார்ப்பொலிபாட லின்னொலி பண்ணமை யாழொலிமோடு கொண்முழ விண்முழக் கீண்டியமாட மாநகர் மாக்கட லொத்ததே.2400. சுந்த ரத்துகள் பூந்துகள் பொற்றுகளந்த ரத்தெழு மின்புகை யாலரோவிந்தி ரன்னகர் சாறயர்ந் திவ்வழிவந்தி ருந்தது போன்மலி வுற்றதே.2401. நிரந்து கன்னலு நெய்யு நீந்தப்பெய்திரந்து பாலமிர் தெங்கு மூட்டுவார்பரந்து பூந்துகில் பன்ம ணிக்கலஞ்சுரந்து கொள்கெனச் சுமக்க நல்குவார்.2402. வருக்கை யின்பழம் வாழை யின்கனிதிருக்கொண் மாங்கனி தெளித்த தேறலைக்கருப்புச் சாற்றொடு கலந்து கைசெய்துபுரித்த தெங்கிள நீரும்பூ ரிப்பார்.2403. கூந்த லேந்திய கமுகங் காய்க்குலையாய்ந்த மெல்லிலை பளித மாதியாமாந்தர் கொள்ளைகொண் டுண்ண மாநிலமேந்த லாம்படித் தன்றி யீட்டுவார்.2404. தூம மார்ந்தன துப்பு ரவ்வுகளேம மாயின வேந்தி நிற்றலானாம நன்னகர் நன்பொற் கற்பகங்காம வல்லியுங் களங்கொண் டிட்டதே.2405. வழுவின் மாந்தரு மாவு மல்கியதொழுதி தன்னையான் சுமக்க லேனேனாமுழுது மண்மகண் முற்றும் வாய்திறந்தழுதிட் டாணெயும் பாலு மாகவே.2406. கொடியெழுந் தலமருங் கோயில் வாயில்கண்மடலெழுந் தலமருங் கமுகும் வாழையுமடியிருந் துகிலுடை மாக்க ணாடியும்புடைதிரள் பூரண குடமும் பூத்தவே.2407. கடிமலர் மங்கையர் காய்பொற் கிண்கிணியுடைமணி பொற்சிலம் பொலிக்குங் கோயிலுட்குடைநிழன் மன்னர்தங் கோதைத் தாதுவேய்க்தடிநிலம் பெறாததோர் செல்வ மார்ந்ததே.2408. துளங்குபொற் குழைகளுந் தோடுஞ் சுண்ணமுங்கிளர்ந்தகில் சாந்துபூக் கமழ்ந்து கேழ்கிளரிளங்கதி ரெறிமணிப் பூணு மாரமும்விளங்கிமே லுலகினை வெறுப்பித் திட்டதே.2409. விரிந்துவான் பூத்தென விதானித் தாய்கதிரருங்கலப் பொடியினா லாபொற் பூமகண்மருங்குல்போற் குயிற்றிய நகரின் மங்கலப்பெருந்தவி சடுத்தனர் பிணையன் மாலையார்.2410. நலங்கிளர் காணமு மணியு நன்பொனும்வலம்புரி முத்தமுங் குவித்த மங்கலமிலங்கின மணிவிளக் கெழுந்த தீம்புகைகலந்தவா யிரத்தெண்மர் கவரி யேந்தினார்.2411. மங்கலப் பெருங்கணி வகுத்த வோரையான்மங்கல மன்னவன் வாழ்த்த வேறலுமங்கல வச்சுதந் தெளித்து வாய்மொழிமங்கலக் கருவிமுன் னுறுத்தி வாழ்த்தினார்.2412. முழங்கின வின்னிய மொய்த்த தேத்தொலிகொழுங்கயற் கண்ணினார் கொண்டு பொன்னகலிழிந்தனர் திருமயி ரேற்ப நீரதினிழன்றன சாமரை நிரைசங் கார்த்தவே.2413. பாற்கடன் முளைத்ததோர் பவளப் பூங்கொடிபோற்சுடர்ந் திலங்கொளிப் பொன்செய் கோதையைநாட்கடி மயிர்வினை நன்பொற் றாமரைப்பூக்கடி கோயிலாள் புலம்ப வாக்கினார்.2414. விரைத்தலை மாலை சூட்டிமின்னனா ரங்கை சேப்பவரைத்தசாந் தணிந்த கோட்டவாயிரத் தெட்டு வேழநிரைத்தன மண்ணு நீர்க்குமுரசொடு முழவம் விம்மவரைத்தலைத் துவலை போன்றுமதநில நனைப்ப வன்றே.2415. கான்முகம் புதைத்த தெண்ணீர்கவர்ந்துபொற் குடங்க ளார்த்தியூன்முகம் புதைத்த வேற்கண்ணவர்களிற் றுச்சி யேற்றிவான்முகம் புதைத்த பன்மீன்மதியென மருண்டு நோக்கத்தேன்முகம் புதைத்த மாலைக்குடைநிழற் றிருவிற் றந்தார்.2416. இழைத்தபொன் னகரின் வெள்ளியிடுமணை மன்ன ரேத்தக்குழைப்பொலிந் திலங்கு காதிற்கொற்றவ னிருந்த பின்றைமழைக்கலின் றெழுந்த வார்கொண்மணிநிற வறுகை நெய்தோய்த்தெழிற்குழை திருவில் வீசமகளிர்நெய் யேற்று கின்றார்.2417. மின்னுமிழ் வைரக் கோட்டுவிளங்கொளி யிமய மென்னும்பொன்னெடுங் குன்றம் போலப்பூமிமே னிலவி வையநின்னடி நிழலின் வைகநேமியஞ் செல்வ னாகிமன்னுவாய் திருவோ டென்றுவாழ்த்திநெய் யேற்றி னாரே.2418. நீடு நீர்மணி நீரு மல்லவுமாடு நீரன வத்து மண்களுமூடு மின்னனா ருரிஞ்சி யாட்டினார்கூடி யின்னியங் குழுமி யார்த்தவே.2419. திருவ மன்னவன் சென்னித் தேர்மன்னர்பொருவெண் பொற்குட முமிழும் பொங்குநீர்பருதி தன்னொளி மறையப் பான்மதிசொரியுந் தீங்கதிர்த் தோற்ற மொத்தவே.2420. துளங்கு மாமணித் தூண்க ணான்கினால்விளங்கு வெள்ளிவேய்ந் தாய்ந்த மாலைசூழ்வளங்கொண் மாமணிக் கூடஞ் சேர்த்தினாரிளங்க திர்கொலோ விருந்த தென்னவே.2421. ஆய்ந்த பானிற மாய்பொற் கம்பலம்வேய்ந்த பொங்கணை வெண்பொற் கட்டின்மேனீந்து நித்தில விதான நீழலாற்கேந்தி னாரணி யேந்து நீர்மையாற்.2422. ஈரங் கொன்றபி னிருண்ம ணிச்சுடர்நீர வாய்நிழ லுமிழுங் குஞ்சியையார கிற்புகை வெறியி னாலமைத்தேர்ப டச்செய்தா ரெழுதிற் றென்னவே.2423. ஈடில் சந்தன மேந்து தாமரைத்தோடின் பயில்வினாற் பூசித் தூமலர்வீடு பெற்றன வின்றொ டென்னவேசூடி னானரோ சுரும்புண் கண்ணியே.2424. மற்ப கம்மலர்ந் தகன்ற மார்பின்மேல்விற்ப கக்குலா யாரம் வில்லிடக்கற்ப கம்மலர்ந் தகன்ற தோவெனப்பொற்ப கப்பொலங் கலங்க டாங்கினான்.2425. உருவ மார்ந்தன வுரோமப் பட்டுடுத்தெரியும் வார்குழை சுடர விந்திரதிருவி லன்னதார் திளைப்பத் தேங்குழலரிபெய் கண்ணியர்க் கநங்க னாயினான்.2426. தாவி றாழ்வடந் தயங்க நீருறீஇமேலி யச்சுதந் தெளித்த பின்விரைந்தாவி யம்புகை சுழற்றி யாடியும்வீவில் வெஞ்சுடர் விளக்குங் காட்டினார்.2427. உவரி மாக்கட லொல்லென் வெண்டிரையிவரி யெழுவபோன் றிலங்கு வெண்மயிர்க்கவரித் தொகைபல வீசுங் காவல்ரிவரித் தொகையென்ப தின்றி யாயினார்.2428. அறுகு வெண்மல ரளாய வாசநீரிறைவன் சேவடி கழுவி யேந்தியமறுவின் மங்கலங் காட்டி னார்மணக்குறைவில் கைவினைக் கோல மார்ந்ததே.2429. ஊனிமிர் கதிர்வெள்வே லுறைகழித் தனபோலுந்தேனிமிர் குவளைக்கட் டிருமக் ளனையாளைப்பானிமிர் கதிர்வெள்ளி மணைமிசைப் பலர்வாழ்த்திவானிமிர் கொடியன்னார் மணியணை மிசைவைத்தார்.2430. வரைவிளை வளர்பொன்னே வலம்புரி யொருமணியேதிரைவிளை யமிர்தம்மே திருவிழை யெனவேத்திவரிவளை முழவிம்ம மணிகிள ரொலியைம்பாலரைவிளை கலைநல்லா ரறுகினெய் யணிந்தனரே.2431. கள்ளவிழ் கமழ்கோதைக் காவலன் றிருமகளைவெள்ளணி மதயானை விழுமணிக் குடமேற்றித்தெள்ளறன் மண்ணுந்நீ ராட்டினர் தேமலர்மேலொள்ளிழை யவளொத்தா ளுருவநுண் ணுசுப்பின்னாள்.2432. வான்மலர் நுரைசூடி மணியணி கலன்சிந்தாத்தானிள மணலெக்கர்த் தவழ்கதிர் மணியாரமேனைய நறுஞ்சுண்ணங் குங்கும மிடுங்களியாத்தேனின் மிசைபாடத் தீம்புன னடந்தஃதே.2433. நான்றபொன் மணிமாலை நகுகதிர்ப் பவளத்தூணூன்றின வொளிமுத்த மண்டபத் தொளிர்திங்கள்கான்றன கதிர்காய்த்தும் வட்டணைக் கதிர்முத்தமீன்றபொன் விதானத்தின் னீழலுய்த் திரீஇயினரே.2434. மையணி மதயானை மத்தக வகலல்குனெய்யணி குழன்மாலை நிழலுமிழ் குழைமங்கைமெய்யணி கலன்மாலை மின்னிருந் துகிலேந்திக்கையணி குழன்மாலைக் கதிர்முலை யவர்சூழ்ந்தார்.2435. அவ்வளை யவிராழிக் கால்பொலிந் தழகார்ந்தமைவிளை கழுநீர்க்கண் விலாசியு மணியல்குற்கைவளை யலங்கார மாலையுங் கமழ்கோதைநைவள மிகுசாய னங்கையைப் புனைகின்றார்.2436. யானையு ளரசன்றன் னணிகிளர் வலமருப்பீர்ந்தூனமி லொளிர்செம்பொன் பதித்தொளி மணியழுத்திவான்மண முறச்செய்த மங்கல மணிச்சீப்புத்தான்முகில் கழிமதிபோற் றன்னுறை நீக்கினளே.2437. மைந்நூற் றனைய மாவீ ழோதிவகுத்துந் தொகுத்தும் விரித்துங்கைந்நூற் றிறத்திற் கலப்ப வாரிக்கமழு நானக் கலவையைந்நூற் றிறத்தின் னகிலின் னாவியளைந்து கமழ வூட்டியெந்நூற் றிறமு முணர்வா ளெழிலேற்றிமிலின் னேற்ப முடித்தாள்.2438. கரும்புந் தேனும் மமிழ்தும் பாலுங்கலந்த தீஞ்சொன் மடவாட்கரும்பும் மிலையு மயக்கி யாய்ந்தமுல்லைச் சூட்டு மிலைச்சித்திருந்து திங்கள் சூழ்ந்த மின்னிற்செம்பொற் பட்டஞ் சேர்த்திவிரும்பும் முத்தம் மாலை நான்றவிழுப்பொன் மகரஞ் செறிந்தாள்.2439. கள்ளுந் தேனும் மொழுகுங் குவளைக்கமழ்பூ நெரித்து வாங்கிக்கிள்ளை வளைவா ருகிரிற் கிள்ளித்திலகந் திகழப் பொறித்துத்தெள்ளும் மணிசெய் சுண்ணம் மிலங்கத்திருநீர் நுதலின் னப்பியுள்ளம் பருகி மதர்த்த வாட்கண்ணுருவம் மையிற் புனைந்தாள்.2440. நாகம் மருப்பி னியன்ற தோடுந்நலங்கொள் கறவுக் குழையும்போக நீக்கிப் பொருவிஃ றிருவில்லுமிழ்ந்து மின்னுப் பொழியுமேக மாகி யெரியும் மணியின்னியன்ற கடிப்பு வாங்கிமேக விசும்பிற் றேவர் விழையவிளங்கச் சேர்த்தி னாளே.2441. விலங்கரம் பொருத சங்கின்வெள்வளை தெளிர்க்கு முன்கைநலங்கிளர் பவள நன்பொன்விரன்மணி யாழி மின்னக்கலந்தின்று பணைத்த தோளுங்கவின்வளர் கழுத்து மார்ந்தவலம்புரி யீன்ற மூத்தமணிநிலா நக்க வன்றே.2442. மாமணி முகடு வேய்ந்தமரகத மணிச்செப் பன்னதூமணி முலைக டம்மைத்தொழுதகக் கமழுஞ் சாந்திற்காமரு காம வல்லிக்கொடிகவின் கொண்டு பூத்துத்தூமணிக் கொழுந்து மென்றோட்டுயல்வர வெழுதி னாளே.2443. நாண்சுமக் கலாத நங்கைநகைமின்னு நுசுப்பு நோவப்பூண்சுமக் கலாத பொன்ஞாண்வடத்தொடு புரள நோக்கிப்பாண்குலாய் வண்டு பாடும்படுகணை மறந்து காமன்காண்கிலேன் கடிய வென்னாவுருகிமெய் கரந்திட் டானே.2444. அவாக்கிடந் தகன்ற வல்குலணிகிளர் திருவிற் பூப்பத்தவாக்கதிர்க் காசு கண்டாராவியைத் தளரச் சூட்டிக்கவாய்க்கிடந் தணங்கு நாறுங்கண்கொளாப் பட்டு டுத்தாளுவாக்கதிர்க் திங்க ளம்மென்கதிர்விரித் துடுத்த தொத்தாள்.2445. இடைச்செறி குறங்கு கௌவிக்கிம்புரி யிளக மின்னும்புடைச்சிறு பரடு புல்லிக்கிண்கிணி சிலம்போ டார்ப்பநடைச்சிறு பாதங் கோலமணிவிர லணிந்து நாகத்துடைச்சிறு நாவிற் றோகையிரீஇயினண் மாலை சேர்ந்தாள்.2446. அம்மல ரடியுங் கையுமணிகிளர் பவழ வாயுஞ்செம்மலர் நுதலு நாவுந்திருந்தொளி யுகிரோ டங்கேழ்விம்மிதப் பட்டு வீழவலத்தக மெழுதி யிட்டாளம்மலர்க் கண்ட முள்ளிட்டரிவையைத் தெரிவை தானே.2447. வாண்மதர் மழைக்க ணோக்கிவருமுலைத் தடமு நோக்கிக்காண்வர வகன்ற வல்குற்கண்விருப் புற்று நோக்கிப்பாணுவண் டாற்றுங் கோலச்சிகழிகைப் படியு நோக்கியாண்விருப் புற்று நின்றாரவ்வளைத் தோளி னாரே.2448. தெருள்கலான் படைத்தவன் காணிற் செவ்வனேமருள்கலா தவர்களு மருள்வர் மம்மர்நோயிருளிலா ரெங்ஙன முய்வ ரின்னதாலருளிலா ரவணல மணிந்த வண்ணமே.2449. அலர்ந்தவந் தாமரை யல்லிப் பாவையைப்புலந்துகண் சிவந்தன போன்று நீர்பிரிந்திலங்கிமின் னுமிழ்ந்துலா மேனி யேந்துபொன்மலர்ந்ததோர் கற்பக மணிக்கொம் பாயினாள்.2450. மருடகு மல்லிகை மாலை வல்லவன்பொருடகத் தொடுத்தன் புனைந்த பூஞ்சிகையிருடுணித் திடையிடை யியற்றி வெண்ணிலாச்சுருடுணித் தொருவழித் தொகுத்த தொத்ததே.2451. கோமக ளுருவமாய்க் கூற்றம் போந்ததுபோமினும் முயிருயக் கொண்டு போய்மனங்காமின் மெனக்கலை சிலம்பு கிண்கிணிதாமனும் வாயினாற் சாற்று கின்றவே.2452. அருளிலா ரிவடம ரன்ன ராயினுமுருடிரை யுலகெலா முருளு மின்றெனக்கருதின கவரிசாந் தாற்றி வெண்குடையரிவையை மறைத்தன வால வட்டமே.2453. கரும்பே தேனே யமிர்தே காமர் மணியாழேயரும்பார் மலர்மே லணங்கே மழலை யன்னம்மேசுரும்பார் சோலை மயிலே குயிலே சுடர்வீசும்பெரும்பூண் மன்னன் பாவாய் பூவாய் பிணைமானே.2454. அம்மெல் லனிச்சம் மலரு மன்னத் தூவியும்வெம்மை யாமென் றஞ்சி மெல்ல மிதியாதபொம்மென் னிலவப் பூம்போ தனநின் னடிபோற்றிஇம்மென் கலையா ரிடுவென் றேத்த வொதுங்கினாள்.2455. தூமாண் டுமக் குடமா யிரமாய்ச் சுடர்பொற்றூண்டாமாயிரமாய்த் தகையார் மணித்தூ ணொருநூறாய்ப்பூமாண் டாமத் தொகையாற் பொலிந்த குளிர்பந்தர்வேமா னியர்தம் மகளின் விரும்ப நனிசேர்ந்தாள்.2456. தேனார் காமன் சிலையுங் கணையுந் திறைகொண்டவானார் மதிவாண் முகமும் மடமான் மதர்நேர்க்குங்கோனார் மகடன் வடிவு நோக்கிக் குடைமன்னரானார் கண்ணூ டழல்போ யமையா ரானாரே.2457. வண்டலர் கோதை வாட்கண்வனமுலை வளர்த்த தாயர்கண்டுயி ருண்ணுங் கூற்றங்கயிறுரீஇக் காட்டி யிட்டாருண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தரா சங்கம் வைத்தார்தெண்டிரை வேலி யெங்குந்தீதின தாக மாதோ.2458. கண்ணினா லின்று கண்டாங்கூற்றினைக் காமர் செவ்வாயொண்ணுத லுருவக் கோலத்தொருபிடி நுசுப்பிற் றீஞ்சொல்வண்ணித்த லாவ தில்லாவருமுலை மதர்வை நோக்கிற்பெண்ணுடைப் பேதை நீர்மைப்பெருந்தடங் கண்ணிற் றம்மா.2459. அரத்தக மருளிச் செய்தசீறடி யளிய தம்மாற்குரற்சிலம் பொலிப்பச் சென்னிக்குஞ்சிமேன் மிதிப்ப நோற்றான்றிருக்குவாய்க் கிடந்த மார்பிற்சீவக னாங்க ளெல்லாந்தரித்திலந் தவத்தை யென்றுதார்மன்ன ரேமுற் றாரே.2460. கோவிந்த னென்னுஞ் செம்பொற்குன்றின்மேற் பிறந்து கூர்வேற்சீவக னென்னுஞ் செந்நீர்ப்பவளமா கடலுட் பாய்வான்பூவுந்தி யமுத யாறுபூங்கொடி நுடங்கப் போந்துதாவிரி வேள்விச் சாலைமடுவினுட் டாழ்ந்த தன்றே.2461. சாணிடை நெடிய வாட்கண்டளையவிழ் குவளை பூப்பப்பூணுடை முலையின் பாரம்பொறுக்கலாச் சுளிவின் மேலுநாணட நடுங்கிக் கையானகைமுகம் புதைத்த தோற்றஞ்சேணிடை யரவு சேர்ந்ததிங்களை யொத்த தன்றே.2462. முத்துமிழ் திரைக ளங்கமொய்கொள் பா தால முத்தீயொத்தன வேலை வேள்வியொலிகட னான்கு நாணவைத்தநான் மறையு நீந்திவான் குண மென்னுஞ் சாலிவித்திமே லுலகத் தின்பம்விளைத்து மெய் கண்டநீரார்.2463. தருமணற் றருப்பை யார்ந்தசமிதையிம் மூன்றி னானும்விரிமல ரணிந்த கோலவேதிகை யியற்றி யானெயொருமணி யகலுட் பெய்தோர்பொன்னக லார்ந்த தூபமிருமணி யகலு ணீர்பெய்திடவயி னிரீஇயி னாரே.2464. நெற்பொரி நிறையப் பெய்துநிழலுமிழ் செம்பொன் மூழிக்கற்புரி கடவு ளான்பாலவியொடு கலப்ப வைத்துமூற்பெரி யானை யாகத்தருப்பையான் முடிந்து மூன்றுபொற்புரி வரையும் பொய்தீர்சமிதைக ளிரண்டும் வைத்தார்.2465. மந்திர விதியின் மாண்டசிறுவிரற் றருப்பை சூழ்ந்துமுந்துநா மொழிந்த நெய்யைமுனைமுதிர் தருப்பை தன்னான்மந்திரித் தமைய முக்கான்மண்ணிமற் றதனை நீக்கிச்சிந்தித்து மறையிற் செந்தீத்தண்டிலத் தங்கண் வைத்தார்.2466. தண்டிலத் தகத்திற் சாண்மேலெண்விரற் சமிதை நானான்கெண்டிசை யவரு மேத்தத்துடுப்புநெய் சொரித லோடுங்கொண்டழற் கடவுள் பொங்கிவலஞ்சுழன் றெழுந்த தென்பதெண்டிரை வேலி யெங்குந்திருவிளை யாட மாதோ.2467. கரையுடைத் துகிலிற் றோன்றுங்காஞ்சன வட்டின் முந்நீர்த்திரையிடை வியாழந் தோன்றத்திண்பிணி முழுவுஞ் சங்குமுரசொடு முழங்கி யார்ப்பமொய்கொள்வேன் மன்ன ரார்ப்பவரசரு ளரச னாய்பொற்கலசநீ ரங்கை யேற்றான்.2468. குளிர்மதி கொண்ட நாகங்கோளைவிடுக் கின்ற தேபோற்றளிர்புரை கோதை மாதர்தாமரை முகத்தைச் சேர்ந்தவொளிர்வளைக் கையைச் செல்வன்விடுத்தவ ளிடக்கை பற்றிவளரெரி வலங்கொண் டாய்பொற்கட்டிறா னேறி னானே.2469. விளங்கொளி விசும்பிற் பூத்தவருந்ததி காட்டி யான்பால்வளங்கொளப் பூத்த கோலமலரடி கழீஇய பின்றையிளங்கதிர்க் கலத்தி னேந்தவயினிகண் டமர்ந்தி ருந்தான்றுளங்கெயிற் றழுவை தொல்சீர்த்தோகையோ டிருந்த தொத்தான்.2470. பொன்னங் காழிற் பொலிந்தமுத்து விதானம் புணர்ந்துதேன்மன்னு மாலை பலதாழ்ந்துமணப்புகை விம்மி மல்கியவன்னத் தூவி யடர்பஞ்சியவிர்மயி ராதி யாகப்பன்னிச் சொன்ன பதினைந்தும்படுத்தார் பாவை மார்களே.2471. பனிமயிர் குளிர்ப்பன பஞ்சின் மெல்லியகனிமயிர் குளிர்ப்பன கண்கொ ளாதனவெலிமயிர் போர்வைவைத் தெழினி வாங்கினாரொலிமயிரிச் சிகழிகை யுருவக் கொம்பனார்.2472. விழுத்தகு மணிச்செவி வெண்பொற் கைவினையெழிற்பொலி படியக மிரண்டு பக்கமுந்தொழிற்பட வைத்தனர் துளும்பு மேகலைக்கழித்தவே லிரண்டுகண் டனைய கண்ணினார்.2473. அங்கருங் காலி சீவியூறவைத் தமைக்கப் பட்டசெங்களி விராய காயுஞ்செம்பழுக் காயுந் தீந்தேனெங்கணுங் குளிர்த்த வின்னீரிளம்பசுங் காயு மூன்றுந்தங்களி செய்யக் கூட்டித்தையலார் கைசெய் தாரே.2474. கைசெய்து கமழு நூறுங்காழ்க்கும்வெள் ளிலையுங் காமமெய்தநன் குணர்ந்த நீராரின்முக வாச மூட்டிப்பெய்தபொற் செப்பு மாலைப்பெருமணிச் செப்புஞ் சுண்ணந்தொய்யறப் பெய்த தூநீர்த்தொடுகடற் பவளச் செப்பும்.2475. தாமணி நானச் செப்புஞ் சலஞ்சலக் கலன்பெய் செப்புந்தூமணித் துகில்க ளார்ந்த வலம்புரித் துலங்கு செப்புங்காமநீர்க் காம வல்லி கவின்கொண்டு வளர்ந்த தேபோனாமவே னெடுங்கட் பாவை நயப்பன வேந்தி னாரே.2476. விரிகதி ரார மின்னித்தாரெனுந் திருவில் வீசிக்குரிசின்மா மேகம் பெய்தகொழும்புயற் காம மாரியரிவைதன் னெஞ்ச மென்னுமகன்குள நிறைந்து வாட்கட்கரியமை சேறு சிந்திக்கலிங்குக டிறந்த வன்றே.2477. தோக்கையந் துகிலி னாடன்றுணைமுலை பொருது சேந்தவேக்கொசி விலாத வில்லானிடுகொடி யகல மின்றேன்றேக்கிவண் டிமிருங் கோதைசெல்வன்றா ருழக்க நைந்துபூக்கொய்து துவண்ட கொம்பின்பொற்பின ளாயி னாளே.2478. அணித்தகு பவள மேற்பக்கடைந்துமுத் தழுத்தி யம்பொன்றுணித்தடி விளிம்பு சேர்த்தித்தொழுதகச் செய்த வண்கைமணிச்சிரற் சிறகு நாணவகுத்தசாந் தால வட்டம்பணித்தகு மகளிர் வீசிப்பாவையைக் குளிர்ப்பித் தாரே.2479. சேந்து நீண்ட செழுந்தாமரைக் கண்களினேந்தி மாண்ட முலைக்கண்களி னெழுதிச்சாந்த மாக மெழுதித்தகை மாமலராய்ந்து சூட்டி யவனஞ்சலி செய்தான்.2480. மணிசெய் வீணை மழலைக்குழல் பாண்டிலோடணிசெய் கோதை யவர்பாடிய கீதம்பணிவில் சாயல் பருகிப்பவ ளக்கொடிமணியு முத்துமலர்ந் திட்டதொத் தாளே.2481. எய்த்து நீர்ச்சிலம் பின்குரன் மேகலைவித்தி மாதர் வருத்தம்விளைத் தாளெனத்தத்து நீர்த்தவ ளைக்குரற் கிண்கிணியுய்த்தொர் பூசலுட னிட்டன வன்றே.2482. ஏந்தி நாங்களுட னேயிடு பூசலைவேந்தர் வேந்தன் கொடுங்கோ லினனாகியாய்ந்து கேட்டு மருளானென் றவிந்தனசாந்த மேந்துமுலை யாள்கலந் தாமே.2483. வீடுமலி யுலகினவர் போலவிளை யாடுந்தோடுமலி கோதையொடு துதைந்தவரை மின்போலாடுகொடி யணிந்தவுய ரலங்கல்வரை மார்பன்கூடுமயிர் களையும்வகை கூறலுறு கின்றேன்.2484. உச்சிவரை வளர்ந்திளமை யொழிந்தவுயர் திண்காழிச்சவிய வல்லவென வெழுதியவை யூன்றிக்கச்சுவிளிம் பணிந்ததொழிற் கம்பலவி தானநச்சுமணி நாகருறை நாகமென விரித்தார்.2485. முத்தக நிறைந்தமுளை யெயிற்றுமத யானைமத்தகமுந் திருமகடன் வடிவுபட மாதோவொத்தகல மெண்முழமென் றோதிநக ரிழைத்தார்மொய்தெரிசெம் பொற்றுகளி னூன்முடிவு கண்டார்.2486. உழுந்துபய றுப்பரிசி யப்பமருங் கலங்கள்கொழுந்துபடக் கூப்பிநனி யாயிர மரக்கால்செழுந்துபடச் செந்நெனிறைத் தந்நுண்கொடி யறுகின்கொழுந்துகுறைத் தணிந்துகொலை வேற்கணவ ரமைத்தார்.2487. செங்கய லிரட்டைதிரு வார்சுடர்க ணாடிபொங்குகொடி வார்முரசந் தோட்டிபுணர் கும்பமங்கலங்க ளெட்டுமிவை மணியிற்புனைந் தேந்தியங்கயற்க ணரிவையர்க டென்கிழக்கி னின்றார்.2488. வெள்ளுருவ மாலைவட கீழிருவர் மின்போலொள்ளுருவ வாளுருவி நின்றனர்தென் மேல்பாலுள்ளுருக நோக்கியுய ருழுத்தகலு மேந்திக்கள்ளுருவ மாலையவர் கைதொழுது நின்றார்.2489. தோரைமலர் நீரறுகு துளும்புமணித் தாலமாரவட மேற்றிசைக்க ணிருந்தவலிர் பஞ்சிச்சீர்நிறைய வரையகலந் திருத்தத்திரு நோக்கும்வாரமுறைக் கருவிவடக் கிருந்தனகண் மாதோ.2490. பானுரையி னெய்யவணைப் பைங்கதிர்கள் சிந்தித்தானிரவி திங்களொடு சார்ந்திருந்த தேபோல்வேனிரைச்செய் கண்ணியொடு மெல்லென விருந்தான்வானுயர வோங்குகுடை மன்னர்பெரு மானே.2491. குளநென் முன்றிற்கனி தேன்சொரிசோலைக் குளிர்மணிவளமை மல்கியெரி யம்மடமந்திகை காய்த்துவானிளமை யாடியிருக் கும்வனத்தீர்ஞ்சடை மாமுனிகிளையை நீங்கிக்கிளர் சாபத்தினாவித னாயினான்.2492. ஆய்ந்த கேள்வி யவன்கான்முளையாய்வழித் தோன்றினான்றோய்ந்த கேள்வித் துறைபோயலங்காரமுந் தோற்றினான்.வேந்தன் றன்னாற் களிற்றூர்சிறப்பொடு மேயினான்வாய்ந்த கோல முடையான்பெருமஞ்சிகர்க் கேறனான்.2493. நித்தில வடமும் பூணுமாரமு நிழன்று தாழவொத்தொளிர் குழைகள் காதினான்றுபொன் னூச லாடப்பைத்தர வல்குற் பாவைகரகநீர் சொரியப் பாங்கின்வித்தகன் பூசி வெள்வேல்வேந்தனுக் கிறைஞ்சி னானே.2494. நச்செயிற் றரவி னோக்கின்யொளிமுடிச் சிதறி னானே.வச்சிர வண்ணன் காப்பமன்னரை நடுங்க நோக்கிவச்சுதங் கொண்டு மன்னவாழிய ரூழி யென்னாயுச்சிவண் டிமிரு மாலைனடிமுடித் தெளித்து நங்கை2495. வாக்கினிற் செய்த பொன்வாண்மங்கல விதியி னேந்தியாக்கிய மூர்த்தத் தண்ணல்வலக்கவு ளுறுத்தி யார்ந்ததேக்கணின் னகிலி னாவிதேக்கிடுங் குழலி னாளைநோக்கல னுனித்து நொய்தாவிடக்கவு ளுறுத்தி னானே.2496. ஆய்ந்தபொன் வாளை நீக்கியவிர்மதிப் பாகக் கன்மேற்காய்ந்தவாள் கலப்பத் தேய்த்துப்பூநிறீஇக் காமர் பொன்ஞாண்டோய்ந்ததன் குறங்கில் வைத்துத்துகிலினிற் றுடைத்துத் தூய்தாவாய்ந்தகைப் புரட்டி மாதோமருடகப் பற்றி னானே.2497. ஏற்றி யும்மிழித் தும்மிடை யொற்றியும்போற்றிச் சந்தனம் பூசுகின் றானெனக்கூற்ற னான்முகங் கோலஞ்செய் தான்கடற்றோற்றுஞ் செஞ்சுடர் போலச் சுடர்ந்ததே.2498. கோதைப் பாரத்தி னானுந்தன் னாணினுமேதி லான்முக நோக்கு மிளிவினும்பாத நோக்கிய பான்மதி வாண்முகமேதமின்றி யெடுத்தனள் மெல்லவே.2499. உருவச் செங்கய லொண்ணிறப் புள்வெரீஇயிரிய லுற்றன போன்றிணைக் கண்மலர்வெருவி யோட விசும்பிற குலாவியதிருவிற் போற்புரு வங்க டிருத்தினான்.2500. ஆர மின்ன வருங்குயந் தான்களைந்தோரு மொண்டிறற் கத்தரி கைத்தொழினீரிற் செய்தடி யேத்துபு நீங்கினான்றாரன் மாலைத் தயங்கிணர்க் கண்ணியான்.2501. அன்னப் பெடைநடுக்கி யசைந்துதேற்றா நடையாளுமன்னர் குடைநடுக்கும் மாலைவெள்வேன் மறவோனுமின்னு மணிக்குடத்தின் வேந்தரேந்தப் புனலாடிப்பொன்னங் கடிமலருந் துகிலுஞ்சாந்தும் புனைந்தாரே.2502. எஞ்சுற்ற மென்றிரங்கா தாகமெல்லாங் கவர்ந்திருந்துதஞ்சுற்றம் வேண்டாத முலைக்கீழ்வாழ்வு தளர்கின்றநஞ்சுற்ற வேனெடுங்கட் பாவைநல்கூர் சிறுநுசுப்பிற்கஞ்சுற் றுழிப்புலர்ந்தாங் கணிந்தாரம்ம மணிவடமே.2503. சுடுமண் மிசைமாரி சொரியச்சூழ்ந்து சுமந்தெழுந்துநெடுநன் னிமிராவி நாறுநெய்தோய் தளிர்மேனிதுடிநுண் ணிடைப்பெருந்தோட் டுவர்வாயேழை மலர்மார்பன்கடிநன் மலர்ப்பள்ளி களிப்பக்காமக் கடலாழ்ந்தான்.2504. வழக்கு தாரவன் மார்பிடை மட்டுகப்புழுங்கு கோதைபொற் பின்றிறம் பேசலாம்விழுங்கு மேகம் விடாது தழீஇக்கிடந்தொழிந்த மின்னுக் கொடியொத் தொழிந்திட்டாள்.2505. தாம மார்பனுந் தையலு மெய்யுணர்வாமி தென்றறி யாது களித்தவர்தூமங் கொப்புளிக் குந்துகிற் சேக்கைமேற்காம னப்பணைக் கள்ளுக வைகினார்.2506. மாதர்தன் வனப்பு நோக்கிமகிழ்ந்துகண் ணிமைத்தல் செல்லான்காதலித் திருப்பக் கண்கள்கரிந்துநீர் வரக்கண் டம்மபேதைமை பிறரை யுள்ளியழுபவர்ச் சேர்த வென்றாள்வேதனை பெருகி வேற்கண்டீயுமிழ்ந் திட்ட வன்றே.2507. நாறுசாந் தழித்து மாலைபரிந்துநன் கலன்கள் சிந்திச்சீறுபு செம்பொ னாழிமணிவிர னெரித்து விம்மாவேறியு மிழிந்து மூழுழ்புருவங்கண் முரிய நொந்துதேறுநீர் பூத்த செந்தாமரைமுகம் வியர்த்து நின்றாள்.2508. இற்றதென் னாவி யென்னாவெரிமணி யிமைக்கும் பஞ்சிச்சிற்றடிப் போது புல்லித்திருமகன் கிடப்பச் சேந்துபொற்றதா மரையிற் போந்துகருமுத்தம் பொழிப் வேபோலுற்றுமை கலந்து கண்கள்வெம்பணி யுகுத்த வன்றே.2509. கொண்டபூ ணின்னைச் சார்ந்துகுலாய்க்கொழுந் தீன்ற கொம்பேகண்டுகண் கரிந்து நீராயுகுவது கரக்க லாமேபண்டியான் செய்த பாவப்பயத்தையார்க் குரைப்பென் றேன்காள்வண்டுகாள் வருடி நங்கைவரந்தர மொழிமி னென்றான்.2510. பூவையுங் கிளியுங் கேட்டுப்புழைமுகம் வைத்து நோக்கிக்காவலன் மடந்தை யுள்ளங்கற்கொலோ விரும்பு கொல்லோசாவம்யா முருகி யொன்றுந்தவறில னருளு நங்கைபாவையென் றிரத்து மென்றபறவைக டம்முட் டாமே.2511. பெற்றகூ ழுண்டு நாளும்பிணியழந் திருத்தும் பேதாய்முற்றிமை சொல்லி னங்கைமூன்றுநா ளடிசில் காட்டாள்பொற்றொடி தத்தை யீரேபொத்துநும் வாயை யென்றேகற்பித்தார் பூவை யார்தங்காரணக் கிளவி தம்மால்,2512. பழியொடு மிடைந்த தேனுஞ்சீறடி பரவி னாற்குவழிபடு தெய்வ மாகிவரங்கொடுத் தருளல் வேண்டுமொழிபடைக் களிறு போலவுயங்கவு முருகி நோக்காப்பிழிசடு கோதை போலாம்பெண்டிரைக் கெடப்பி றந்தாள்.2513. ஈன்றதா யானு மாகவிதனைக்கண் டுயிரை வாழேனான்றியான் சாவ லென்றேநலக்கிளி நூலின் யாப்பமான்றவண் மருண்டு நக்காள்வாழிய வரம்பெற் றேனென்றான்றவ னாரப் புல்லியணிநலம் பரவி னானே.2514. நிறையோத நீர்நின்று நீடவமேசெய்யினும் வாழி நீலமறையோ விரிவை வரிநெடுங்கணொக்கிலையால் வாழி நீலங்கண்ணொவ்வா யேனுங்களித்து நகுதிநின்வண்ண மிதுவோ மதுவுண்பார்சேரியையோ வாழி நீலம்.2515. பாண்குலாய்ப் படுக்கல் வேண்டாபைங்கிளி பூவை யென்னுமாண்பிலா தாரை வைத்தாரென்னுறா ரென்று நக்குநாண்குலாய்க் கிடந்த நங்கைநகைமுக வமுத மீந்தாள்பூண்குலாய்க் கிடந்த மார்பிற்பொன்னெடுங் குன்ற னாற்கே.2516. நலங்குவித் தனைய மாதர்நன்னல மாய வெல்லாம்புலம்புவித் தருளி னீங்கிப்பகைப்புலம் புக்க வேந்திற்கலங்குவித் தனைய நம்பிகவர்ந்திடக் கலாப மேங்கச்சிலம்புநொந் திரங்கத் தேன்றார்பரிந்துதே னெழுந்த தன்றே.2517. திருநிறக் காம வல்விதிருக்கவின் கொண்டு பூத்துப்பெருநிறங் கவினி யார்ந்தகற்பகம் பிணைந்த தேபோலருநிறக் குருசின் மார்பத்தசைந்தன ளலங்கல் வேலுநெரிபுறத் தடற்று வாளுநீலமு நிகர்த்த கண்ணாள்.2518. மணிக்கண் மாமயிற் சாயன் மாதருமணிக்கந் தன்னதோ ளரச சீயமும்பிணித்த காதலாற் பின்னிச் செல்வழிக்கணித்த நாள்களேழ் கழிந்த காலையே.2519. சூட்டுஞ் சுண்ணமு மணிந்து சுந்தரமோட்டி யொண்பொனூ லோங்கு தாரொடுபூட்டிக் குண்டலம் பொற்பப் பெய்தபின்மோட்டு முத்தொளிர் வடம்வ ளாயினார்.2520. பானு ரைய்யன பைந்து கிலணிந்தானி ரைய்யினத் தலங்க லேறனான்மானி ரைய்யினம் மருளு நோக்கினாரூனு யிருணு மொருவ னாயினான்.2521. சுநந்தை தன்மகன் சுடர்பொற் சூழித்தேனினங்க வர்ந்துண விலிற்று மும்மதத்தநந்த னன்னகை யானை யேறினான்குனிந்த சாமரை குளிர்சங் கார்த்தவே.2522. இரும்பிடி நூறு சூழவிறுவரை நின்ற தேபோற்கரும்பொடு காய்நெற் றுற்றிக்கருப்புரக் கந்தி னின்றசுரும்புசூழ் மதத்த சூளாமணியெனுஞ் சூழி யானைப்பெருந்தகைப் பிணையன் மன்னர்முடிமிதித் தேறி னானே.2523. சட்டகம் பொன்னிற் செய்துதண்கதிர் வெள்ளி வேய்ந்துவட்டநல் வைரம் வாய்ப்பநிறைத்துமேன் மணிகள் சேர்த்திச்சுட்டுதற் கரிய முத்தின்றொத்துவாய் நாற்ற முந்நீர்ப்பட்டவான் பவளக் காம்பின்குடைநிழற் பருதி யொத்தான்.2524. மடற்பனைக் குழாத்திற் பிச்சநிரைத்தன மன்னர் சூழ்ந்துபுடைக்களி றேறித் திங்கட்பொழிகதிர்க் குப்பை யன்னவெடுத்தெறி கவரி வீசவியம்பல முழங்கி யார்ப்பக்கடற்படை வெள்ளஞ் சூழக்காவலன் வீதி சேர்ந்தான்.2525. அடிநில முறுத னாணியருவருத் தமரி னாலித்திடுமயிர் சிறக ராகவெழுந்துமேற் பறப்ப போலப்படுமழைத் துளியிற் பாய்மாப்பரந்தன நிரந்த பொற்றேரிடைநில மின்றி வேழமீண்டின மள்ளர் தொக்கார்.2526. கொழுமடற் பெண்ணை யீன்றகுரும்பையுஞ் செப்புங் கொன்றவிழைமுலைத் தடத்தி னாடன்கணவனைக் காண வேகிக்கழுமொலி யரவ வானங்கனைபெயல் கடற்பெய் தன்னகுழுமொலி யரவ மீண்டிக்கொடிநகர் பொலிந்த தன்றே.2527. ஒள்ளிலைச் சூலந் தெண்ணீருலாமுகில் கிழிக்கு மாடக்கொள்கொடிக் குழாத்தி னாலுங்கொழுநறும் புகையி னாலுந்தெள்ளுறு சுண்ணத் தாலுந்தேமலர்த் துகளி னாலும்புள்ளினம் பொழுது காணாபுலம்பிக்கூ டடைந்த வன்றே.2528. பைந்தொடி மகளிர் பாங்கர்பரிந்துநூல் சொரிந்த காசுசிந்தின தழலென் றஞ்சிச்சிறையன்ன நிலத்தைச் சேராவிந்திர கோப மாமென்றிளமயில் குனிந்து குத்திச்சிந்தையிற் றேம்பத் தாமேதிருமணி நக்க வன்றே.2529. வெள்ளைமை கலந்த நோக்கிறகிண்கிணி மிழற்றி யார்ப்பப்பிள்ளைமை காதல் கூரப்பிறழ்ந்துபொற் றோடு வீழத்துள்ளுபு செலபுஇய தோற்றந்தொடுகழற் காமன் காமத்துள்ளுயி ரறியப் பெண்ணாய்ப்பிறந்ததோர் தோற்ற மொத்தார்.2530. தன்னெறி வளரக் காமன்றான்முலை யிரண்டு மாகிமுன்னரே வளர்கின் றாற்போன்முகிழ்முலை முத்த மேந்திப்பொன்னெறி மணியிற் பொங்கிக்குழல்புறம் புடைப்ப வோடிப்பின்னிறீஇ வைத்த போலப்பெதும்பையர் விதும்பி நின்றார்.2531. அணிநிலா வீசு மாலையரங்குபுல் லென்னப் போகித்துணிநிலா வீசு மாலைப்பிறைநுதற் றோழி சேர்ந்துமணிநிலா வீசு மாலைமங்கையர் மயங்கி நின்றார்பணிநிலா வீசும் பைம்பொற்கொடிமணி மலர்ந்த தொத்தார்.2532. வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை நோக்கி னாரையுள்ளுயி ருண்ணுங் கூற்றி னுடன்றுகண் கரிந்து பொங்கக்கள்ளுயி ருண்ணு மாலைக் கதுப்பொரு கையி னேந்திநள்ளிருள் விளக்கிட் டன்ன நங்கைமார் மல்கி னாரே.2533. மட்டொளித் துண்ணு மாந்தர்மாண்புபோன் மறைந்து வண்ணப்பட்டொளித் தொழிய வல்குற்பசுங்கதிர்க் கலாபந் தோன்றக்குட்டநீர்க் குவளைக் கண்கள்விருந்துண விரும்பி நின்றாரட்டுந்தே னணிந்த மாலைப்பவளக்கொம் பணிந்த தொத்தார்.2534. பெரும்பொரு ணீதிச் செங்கோற்பெருமக னாக்கம் போலப்பரந்திட மின்றி மேலாற்படாமுலை குவிந்த கீழாலரும்பொரு ணீதி கேளாவரசனிற் சுருங்கி நந்துமருங்குநொந் தொழிய வீதிமடந்தைய ரிடங்கொண் டாரே.2535. செல்வர்க்கே சிறப்புச் செய்யுந்திருந்துநீர் மாந்தர் போலவல்குற்கு முலைக்கு மீந்தாரணிகல மாய வெல்லாநல்கூர்ந்தார்க் கில்லை சுற்றமென்றுநுண் ணுசுப்பு நையவொல்கிப்போய் மாடஞ் சேர்ந்தாரொருதடங் குடங்கைக் கண்ணார்.2536. கார்வளர் மின்னு வீசுங்குண்டலங் காய்பொ னோலையேர்வளர் பட்ட மேற்பவணிந்திருள் சுமந்து திங்கணீர்வளர் நீலம் பூத்துநிரைத்தபோ னிரைத்த மேலால்வார்வளர் முலையி னார்தமாழைவாண் முகங்கண் மாதோ.2537. குறையணி கொண்ட வாறேகோதைகா றொடர வோடிச்சிறையழி செம்பொ னுந்தித்தேன்பொழிந் தொழுக வேந்திப்பறையிசை வண்டு பாடப்பாகமே மறைய நின்றார்பிறையணி கொண்ட வண்ணல்பெண்ணொர்பால் கொண்ட தொத்தார்.2538. பொன்னரி மாலை பூண்டுபூஞ்சிகை குலாவி முன்கைமின்னரிச் சிலம்பு தொட்டுவிருப்பொடு விரைந்து போவான்கன்னிய ராடி நோக்கித்தம்மைத்தாங் கண்டு நாணிப்பின்னவை யணிந்து செல்வாரிடம்பெறா தொழிந்து போனார்.2539. முத்துலாய் நடந்த கோலமுலைமுதன் முற்ற மெல்லாம்வித்திய வேங்கை வீயும்விழுப்பொனும் விளங்கக் காமத்தொத்துநின் றெரிந்து கண்டார்கண்சுடச் சுடர்ந்து நின்றாரொத்தொளிர் காம வல்லியொருங்குபூத் துதிர்ந்த தொத்தார்.2540. உகிர்வினை செய்து பஞ்சியொள்ளொளி யரத்த மூட்டியகில்கம ழங்கை சேப்பவரிவைய ரலங்க றாங்கிவகிர்படு மழைக்கண் சின்னீர்மாக்கய லெதிர்ந்த வேபோன்முகில்கிழி மின்னி னோக்கிமுரிந்திடை குழைந்து நின்றார்.2541. முனித்தலைக் கண்ணி நெற்றிச்சிறார்முலை முழாலிற் பில்கிப்புனிற்றுப்பால் பிலிற்றித் தேமாவடுவிறுத் தாங்குப் பாயநுனிந்துக்கண் ணரக்கி நோக்காதொசிந்துநின் றார்க ளன்றேகனிப்பொறை மலிந்து நின்றகற்பகப் பூங்கொம் பொத்தார்2542. அவிரிழை சுடர முல்லை யலங்கலங் கூந்தல் சோரத்தவிர்வெய்ய காமந் தாங்கித் தடமுலைக் கால்கள் சாயவிவர்தரு பிறவி யெல்லா மின்னமா கென்று நின்றார்சுவர்செய்தாங் கெழுதப் பட்ட துகிலிகைப் பாவை யொத்தார்.2543. வேரிநா றலங்கன் மாலை மின்னிழை மயங்கி யெங்கும்பூரித்துப் புதவந் தோறுங் குவளையு மரையும் பூத்துப்பாரித்துப் பைம்பொ னாகருலகிவண் வீழ்ந்த தேபோன்மாரிமா மயில னாரு மைந்தரு மயங்கி னாரே.2544. கோதைதாழ் குடையி னீழற் கொற்றவன் பருதி யாகமாதரார் முகங்க ளென்னுந் தாமரை மலர்ந்த தெண்ணீர்க்காதநான் ககன்ற பொய்கைக் கடிநகர் குவளை பூத்துப்பேதுறு கின்ற போன்ற பெருமழைக் கண்கண் மாதோ.2545. மாந்தரு மாவுஞ் செல்ல மயங்கிமே லெழுந்த நீறுதேந்தரு கோதை யார்தந் தெண்மட்டுத் துவலை மாற்றவாய்ந்தபொன் னகர மெங்கு மணிகல வொளியி னாலேகாய்ந்துகண் கலக்கப் பூத்த கற்பக மொத்த தன்றே2546. பெண்பெற்ற பொலிசை பெற்றார்பிணையனார் பெரிய யாமுங்கண்பெற்ற பொலிசை பெற்றாமின்றெனக் கரைந்து முந்நீர்மண்பெற்ற வாயுள் பெற்றுமன்னுவாய் மன்ன வென்னாப்புண்பெற்ற வேலி னான்மேற்பூமழை தூவி னாரே.2547. சுண்ணமேற் சொரிவார் தொழுதுதொங்கல் வீழ்ப்பார்தண்ணென் சந்தனநீ ரார்ந்துதேன் றுளும்பும்வண்ணப்பந் தெறிவார் வளையொலிப்ப வோச்சிக்கண்ணியிட் டெறிவார் கலவைநீர் தெளிப்பார்.2548. முந்துசூர் தடிந்த முருகனம்பி யென்பாரைந்துருவ வம்பி னநங்கனென் றயர்வார்கந்துகன் வளர்த்த சிங்கங்காண்மி னென்பார்சிந்தையிற் களிப்பார் சேணெடிய கண்ணார்.2549. தேசிக முடியுந் திருந்துபட் டுடையும்பாசமாக நின்று பன்மலர்க் கழுநீர்மூசிவண் டிமிரும் மொய்யலங்க றாழக்காசில் காமஞ்செப்பிக் கண்ணினா லிரப்பார்.2550. வண்டறைந்த தாரான் வண்ணங்கண்ட பின்றைக்கண்டிலேனென் மாமை கைவளையொ டென்பாரொண்டொடி யிவன்றன் னுருவுகண்டு வாழ்வார்பெண்டிராய்ப் பிறந்தார் பெரியர்போத வென்பார்.2551. கொழித்திரை யோத வேலிக்குமரனைப் பயந்த நங்கைவிழுத்தவ முலக மெல்லாம்விளக்கிநின் றிட்ட தென்பார்பிழிப்பொலி கோதை போலாம்பெண்டிரிற் பெரிய ணோற்றாள்கழித்துநின் றறாத கற்பிற்சுநந்தையே யாக வென்பார்.2552. சாந்தகங் கிழிய மாலைத்தடமுலை ஞெமுங்கப் புல்லிச்சேர்ந்தெழு நங்கை மாரேதிருநங்கை மார்க ளல்லார்கூந்தலு முலையு முத்துங்கோதையுஞ் சுமந்து நைவான்போந்தவந் நங்கை மார்கள்பொய்ந்நங்கை மார்க ளென்பார்.2553. இடம்பட வகன்று நீண்டவிருமலர்த் தடங்க ணென்னுங்குடங்கையி னொண்டு கொண்டுபருகுவார் குவளைக் கொம்பினுடம்பெலாங் கண்க ளாயினொருவர்க்கு மின்றி யேற்பவடங்கவாய் வைத்திட் டாரப்பருகியிட் டீமி னென்பார்.2554. முலைமுத றுறத்த வன்றேமூரித்தா ளாளி யானைத்தலைநிலம் புரள வெண்கோடுண்டதே போன்று தன்கைச்சிலையிடம் பிடித்த ஞான்றேதெவ்வரைச் செகுத்த நம்பிநிலவுமிழ் குடையி னீழற்றுஞ்சுக வைய மென்பார்.2555. இந்நகரப் புறங்காட்டி லிவன்பிறந்த வாறுந்தன்னிகரில் வாணிகனிற் றான்வளர்ந்த வாறுங்கைந்நிகரில் வேந்தர்தொழப் போந்ததுவுங் கண்டாலென்னைதவஞ் செய்யா திகழ்ந்திருப்ப தென்பார்.2556. பெருமுழங்கு திரைவரைக ணீந்திப்பிணி யுறினுந்திருமுயங்க லில்லையெனி னில்லைபொரு ளீட்டமொரு முழமுஞ் சேறலில ரேனும் பொரு ளூர்க்கேவரும்வழிவி னாயுழந்து வாழ்கதவ மாதோ.2557. நஞ்சு குடித் தாலுநவை யின்றுதவ நின்றாலஞ்சியொளித் தாலுமா ணில்லைதவ முலந்தாற்குஞ்சரத்தின் கோட்டிடையு முய்வர்தவ மிக்காரஞ்சலில ரென்றுமற னேகளைக ணென்பார்.2558. முரல்வாய சூற்சங்க முடமுட்டாழை முகைவிம் முங்கரைவாய முத்தீன்று கானன்மேயுங் கடற்சேர்ப்பனுரைவாய் நகர்பரவப் போகியொண்பொ னெயிழ்சூழ்ந்தவிரைவாய் பூம்பிண்டி வேந்தன்கோயிற் கெழுந்தானே.2559. அருகு மயில்கவ வன்னமேங்கக் குயில்கூவக்குருகு பொறையுயிர்க்குங் கொடுமுட்டாழை வெண்டோட்டுமுருகு பொறையுயிர்க்கு மொய்பூங்காவிற் படைநீக்கித்திருகு கனைகழலான் செம்பொற்கோயில் சேர்ந்தானே.2560. திறந்த மணிக்கதவந் திசைகளெல்லா மணந்தேக்கிமறைந்த வகிற்புகையான் மன்னர்மன்னன் வலஞ்செய்துபிறந்தே னினிப்பிறவேன் பிறவாதாயைப் பெற்றேனென்றிறைஞ்சி முடிதுளக்கி யேத்திக்கையாற் றொழுதானே.2561. திருமறு மார்பினை திலகமுக் குடையினையருமறை தாங்கிய வந்தணர் தாதையையருமறை தாங்கிய வந்தணர் தாதைநின்னெரிபுரை மரைமல ரிணையடி தொழுதும்.2562. உலகுணர் கடவுளை யுருகெழு திறலினைநிலவிரி கதிரணி நிகரறு நெறியினைநிலவிரி கதிரணி நிகரறு நெறியைநின்னலர்கெழு மரைமல ரடியிணை தொழுதும்.2563. மறுவற வுணர்ந்தனை மலமறு திகிரியைபொறிவரம் பாகிய புண்ணிய முதல்வனைபொறிவரம் பாகிய புண்ணிய முதல்வநின்னறைவிரி மரைமலர் நகுமடி தொழுதும்.2564. நந்தா விளக்குப் புறமாகென நான்கு கோடிநொந்தார்க் கடந்தான் கொடுத்தான் பின்னை நூறு மூதூர்கந்தார் கடாத்த களிறுங்கொடித் தேர்க ணூறுஞ்செந்தா மரைமே னடந்தானடி சேர்த்தி னானே.2565. வாடாத மாலை மணிமாலைபொன் மாலை முத்தநீடார மாலை நிழன்மாண்ட பவழ மாலைமாடார்ந் திழியு மருவிம்மலர் பொற்ப வேற்றிக்கூடார்க் கடந்தான் வலங்கொண்டிடஞ் சென்று புக்கான்.2566. உலமரு நெஞ்சி னொட்டா மன்னவ ரூர்ந்த யானைவலமருப் பீர்ந்து செய்த மணிகிளர் கட்டி லேறிநிலமகள் கணவன் வேந்தர் குழாத்திடை நிவந்தி ருந்தான்புலமகள் புகழப் பொய்தீர் பூமகட் புணர்ந்து மாதோ.2567. எத்துணைத் தவஞ்செய் தான்கொலென்றெழுந் துலக மேத்தவித்திய புகழி னாற்குவிருந்தர சியற்றி நாடுமொத்தன னல்கித் தன்னையுழந்தனள் வளர்த்த தாய்க்குச்சித்திரத் தேவிப் பட்டந்திருமக னல்கி னானே.2568. இனக்களி யானை மன்னரிளவுடை யானென் றேத்தத்தனக்கிளை யானை நாட்டித்தான்றனக் கென்று கூறிச்சினக்களி யானை மன்னர்மகளிரைச் சேர்த்தி நம்பன்மனக்கினி துறைக வென்றுவளங்கெழு நாடு மீந்தான்.2569. ஆழ்கடல் வையத் தில்லாவருநிதி யரசு நல்லசூழ்மணி யாழி செம்பொற்சூட்டொடு கண்ணி காதற்றோழர்கட் கருளித் தொல்லையுழந்தவர் தம்மைத் தோன்றவாழ்கென நிதியு நாடுமன்னவன் கொடுப்பித் தானே.2570. வளர்த்தகைத் தாயர் தம்மைவருகென வருளித் தங்கள்கிளைக்கெலாஞ் சிறப்புச் செய்துகேட்டவர் மருள வைந்தூர்விளைத்துள கெடாத வைகலாயிர மிறுப்புத் தண்டக்கொளக்கொடுத் தயா வுயிர்த்தான்கொற்றவ னென்ப வன்றே.2571. கைத்தல மந்தி கொண்டகைமகப் போன்று தன்கட்பத்திமை விடாது மேனாட்படைக்கல நவின்ற பொற்றேர்மைத்துன மன்னர்க் கெல்லாம்வளநிதி மணிசெய் மான்றேர்தத்துநீர் மிசைச்சென் மாவுந்தவழ்மதக் களிறு மீந்தான்.2572. கோமகன் கோல மான்றேர்க்கோவிந்த னென்னுங் கொய்தார்மாமற்கு மடங்க லாற்றற்கட்டியங் கார னென்றதீமக னுடைய வெல்லாந்தேர்ந்தனன் கொடுத்துச் செல்வனோவலில் கறவை யொத்தானுலோகபா லற்கு மாதோ.2573. பேரிடர் தன்க ணீக்கிப்யாய தோழற்கோரிடஞ் செய்து பொன்னாலவனுரு வியற்றி யூரும்பாரிடம் பரவ நாட்டியவனது சரிதை யெல்லாந்தாருடை மார்பன் கூத்துத்தான்செய்து நடாயி னானே.2574. ஊன்விளை யாடும் வைவே லுறுவலி சிந்தித் தேற்பத்தான்விளை யாடி மேனா ளிருந்ததோர் தகைநல் லாலைத்தேன்விளை யாடு மாலை யணிந்துபொற் பீடஞ் சேர்த்தியான்விளை யாடு மைந்தூ ரதன்புற மாக்கி னானே.2575. கொட்ட மேகம ழுங்குளிர் தாமரைமொட்டின் வீங்கிய வெம்முலை மொய்குழலட்டுந் தேனழி யும்மது மாலையார்பட்ட மெண்மரும் பார்தொழ வெய்தினார்.2576. பஞ்சி சூழல்குற் பல்வளை வீங்குதோள்வஞ்சி நுண்ணிடை வம்பணி வெம்முலைவிஞ்சை யன்மகள் சீறடி வீழ்ந்தனரஞ்சி லோதிய ரும்பவிழ் கோதையார்.2577. வீடி லைந்தரைக் கோடி விருத்திமேனாடி யாயிர நாடொறு நங்கைமார்க்காடு சாந்தடி சிற்புற மாக்கினான்கோடு வாலொளிக் குங்குமக் குன்றனான்.2578. ஆனை மும்மத மாடிய காடெலாமானை நோக்கியர் வாய்மது வாடினவேனன் மல்கிவெண் டேர்சென்ற வெந்நிலம்பானன் மல்கிவெண் பாலன்னம் பாய்ந்தவே.2579. மாரி மல்கி வளங்கெழு மண்மகள்வாரி மல்கி வரம்பில ளாயினாளாரி யாவடி சிற்றளி யானெய்வார்ந்தேரி யாயின வெங்கணு மென்பவே2580. ஏக வெண்குடை யின்னிழற் றண்ணளிமாக மாய்க்கட லெல்லை நிழற்றலாற்போக பூமியும் பொன்கிளர் பூமியுநாகர் நாகமு நாணி யொழித்தவே.2581. வண்டு மேய்ந்து வரிமுரல் பூஞ்சிகைக்கெண்டை வென்றகண் ணார்களுங் கேள்வருமுண்டு மூத்திடை யூறிலர் சேறலாற்பண்டை யூழியிற் பார்மலி வுற்றதே.2582. செருநாடு செஞ்சுடர்வேற்றிருகுசெம்பொற் கனைகழற்காற்றிருநாடு தேம்பைந்தார்ச்செல்வன்செவ்வி பெறாதொழிந்துபெருநாட் டருங்கலங்கள்சுமந்துபேரு மிடம்பெறாஅதொருநாட் டரசுணங்கவுரவோன்கொற்ற முயர்ந்ததே.2583. வலையவர் முன்றிற் பொங்கி வாளென வாளை பாயச்சிலையவர் குரம்பை யங்கண் மானினஞ்சென்று சேப்பநிலைதிரிந் தூழி நீங்கி யுத்தர குருவு மாகிக்கொலைகடிந் திவற வின்றிக் கோத்தொழி னடத்து மன்றே.2584. கதங்கனல் யானை நெற்றிக்கட்டிய பட்ட மேபோன்மதங்கமழ் கோதை யல்குன்மனாக்கிடந் திமைத்துக் காமப்பதம்பல பார்க்குஞ் சாயற்பாவைமற் றநங்க மாலைவிதம்படக் கருதி மாதர்விளைத்தது விளம்ப லுற்றேன்.2585. ஈர்ந்தண் கோதை யிளையார்குழாத்திடையாளெங்கோனடி சேர்வலென்றார்ந்த செந்தா மரைமுகத்தினாளடிகள்வந்தீங் ககன்கடை யுளாள்சார்ந்த சாயற் றடமாமுலைத்தையல்வல்லே வருகென் றான்சேர்ந்து மன்னர் முடிவைரவிற்றிளைக்குஞ் செம்பொற் செறிகழலினான்.2586. அருவிலை நன்கலஞ் செய்போர்வையன்னநாண வடியொதுங்கிச்சென்றுருவ மொவ்வா தொசியுநுசுப்பொல்கிக்கோமா னடிதொழுதபின்மருவின் சாயன் மணிமெல்விரல்கூப்பியோலை மரபினீட்டவிரவி யென்ன விளங்குமொளியிறைவன் கொண்டாங் கதுநோக்குமே.2587. அடிகள் கண்டாங் குவந்தருளுகவநங்கமாலை யடிவீழ்ச்சிமுன்கொடிய வேலான் கொதித்தரங்கினீக்கிக்கோயிற் சிறைவைத்தபின்கடிசெய் பைந்தார்க் கமழ்மாலைவேற்கந்து கற்குச் சிறுவயானிப்படிய னல்காய் பசுமணிகள்வேய்ந்தோங்கும்பைம்பொற் செறிகழலினாய்.2588. என்ன நாளு மரற்றப்பொறான்விடுப்பப்போகி யினமழைகண்மொய்த்தன்னந் துஞ்சு மடிக்குடிலினுள்ளன்றியான் கொண்ட நாடகத்தினைத்துன்னி நம்பி யுருவுதீட்டித்தொங்கல்வேய்ந்து தொழுதாற்றநீமன்னர் மன்ன மதிதோய்குடையாய்மகளிர்காம மறைத்தொழி தியோ.2589. கண்க டுஞ்சா கதிர்முத்தமேகாலுங்கையார் வளைகழலுமாற்பண்கொள் சொல்லார் மாமைநீங்கிப்பைம்பொன் போர்த்த படாமுலைகளுமண்கொள் வேன்மன்னர் நண்பின்மையைவையக்கெல்லா முடனறையவோபெண்க ளாவி விடுத்ததொழிபவோபெரியோர்நண்படைந் தார்பெயர்பவோ.2590. அறனிழலா யுலகளிக்கு நின்னாரமாலையணி வெண்குடைப்புறனிழலி னயலேனோ யான்புல்லாமன்னர்நிணம் பொழியும்வேன்மறனிழன் மதயானையாய் வந்தவென்றோழி வாமலேகைதிறனழி யாமையின்னே விடுத்தருளுகதேர்வேந்தர் வேந்தனே.2591. புள்ளும்யாழுங் குழலுமேங்கப்புனைந்துவல்லா னினைந்தியற்றியபள்ளிச்செம்பொற் படையமளிமேன்மழலைமணியாழ் தான்வெளவிக்கொள்ளுந் தீஞ்சொ லலங்காரப்பூங்கொடியைப்புல்லி மணிக்குவட்டினையெள்ளிவீங்கித் திரண்டதோண்மேற்குழைவில்வீச விருந்தானே.2592. அங்கைசேப்பக் குருகிரங்கவலங்கலம்பூங் குழறுயல்வரமங்கைநல்லார் பவழவம்மியரைத்தசாந்த மலர்பெய்மாலைபொங்குதூமக் கொழுமென்புகைபுரிந்தபஞ்ச முகவாசமுந்தங்குதாம மார்பினாற்குந்தையலாட்குங் கொண்டேந்தினாரே.2593. அருளுமாறென்னை யநங்கமாலையடித்திதோழி யன்றோவெனத்தெருளலான்செல்வக் களிமயக்கினாற்றிசைக்குமென்னறி வளக்கியகருதிமருளிற்சொன்னாய் மறப்பேனோயானின்னையென்ன மகிழைங்கணையுருளுமுத்தார் முகிழ்முலையினாளுள்ளத்துவகை தோற்றினாளே.2594. முறுவற்றிங்கண் முகவரங்கின்மேன்முரிந்துநீண்ட புருவக்கைகணெறியின்வட்டித்து நீண்டவுண்கண்சென்றும்வந்தும் பிறழ்ந்துமாடப்பொறிகொள்பூஞ் சிலம்புமேகலைகளும்புணர்ந்தவின்னியங்க ளார்ப்பவேந்தனறியுநாடகங் கண்டான்பைந்தாரலர்ந்துமாதர் நலங்குழைந்ததே.2595. நான்மருப்பின் மதயானைநறியபைந்தா மரைமடந்தையைத்தேன்மதர்த்த திளைத்தாங்கவன்றிருவின்சாய னலங்கவர்ந்தபினூன்மதர்த்த வொளிவேற்கண்ணார்பரவவிவ்வா றொழுகுமன்றேவானகத்து நிலத்துமில்லாவண்ணமிக்க மணிப்பூணினான்.2596. நரம்புமீ திறத்தல் செல்லாநல்லிசை முழவும் யாழுமிரங்குதீங் குழலு மேங்கக்கிண்கிணி சிலம்பொ டார்ப்பபபரந்தவா ணெடுங்கட் செவ்வாய்த்தேசிகப் பாவை கோலவரங்கின்மே லாடல் காட்டியரசனை மகிழ்வித் தாளே.2597. கடற்படை மன்னர் தம்மைக்காதலின் விடுத்துக் காமன்றொடுத்தகோன் மார்பிற் றங்கத்தூமலர்க் கொம்ப னாளைவடித்தவின் னமிர்தி னாரப்பருகலின் மழைக்கட்செவ்வாய்துடித்துவண் டுண்ணத்தூங்குஞ்செந்தளி ரொத்ததன்றே.2598. இளமையங் கழனிச் சாயலேருழு தெரிபொன்வேலிவளைமுயங் குருவ மென்றோள்வரம்புபோய் வனப்புவித்திக்கிளைநரம்பிசையுங் கூத்துங்கேழ்த்தெழுந் தீன்றகாமவிளைபய னினிதிற் றுய்த்துவீணைவேந் துறையுமாதோ.