30. நா வீற்று இருந்த புல மா மகளோடு நன் பொன்பூ வீற்று இருந்த திருமாமகள் புல்ல நாளும்பா வீற்று இருந்த கலை பார் அறச் சென்ற கேள்விக்கோ வீற்று இருந்த குடி நாட்டு அணி கூறல் உற்றேன்.31. காய் மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகின் நெற்றிப்பூ மாண்ட தீம் தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்துதேமாங் கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும்ஏமாங்கதம் என்று இசையால் திசை போயது உண்டே32. இலங்கல் ஆழியினான் களிற்று ஈட்டம் போல்கலங்கு தெண் திரை மேய்ந்து கண மழைபொலம் கொள் கொன்றையினான் சடை போல் மின்னிவிலங்கல் சேர்ந்து விண் ஏறி விட்டு ஆர்த்தவே33. தேன் நிரைத்து உயர் மொய்வரைச் சென்னியின்மேல் நிரைத்து விசும்பு உற வெள்ளி வெண்கோல் நிரைத்தன போல் கொழுந் தாரைகள்வான் நிரைத்து மணந்து சொரிந்தவே34. குழவி வெண் மதிக் கோடு உழக் கீண்டு தேன்முழவின் நின்று அதிர் மொய் வரைச் சென்னியின்இழியும் வெள் அருவித் திரள் யாவையும்குழுவின் மாடத் துகில் கொடி போன்றவே.35. இலங்கு நீள் முடி இந்திரன் மார்பின் மேல்விலங்கி வீழ்ந்த முத்தாரமும் போன்றவைநலம் கொள் பொன்னொடு நல் மணி சிந்தலால்கலன் பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே.36. வள்ளல் கைத்தல மாந்தரின் மால்வரைக்கொள்ளை கொண்ட கொழு நிதிக் குப்பையைஉள்ளம் இல்லவர்க்கு ஊர் தொறும் உய்த்து உராய்வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே.37. மையல் யானையின் மும் மதம் ஆர்ந்து தேன்ஐய பொன் அசும்பு ஆடி அளைந்து உராய்ச்செய்ய சந்தனம் தீம் பழம் ஆதியாநைய வாரி நடந்தது நன்று அரோ.38. வீடு இல் பட்டினம் வவ்விய வேந்து எனக்காடு கையரிக் கொண்டு கவர்ந்து போய்மோடு கொள் புனல் மூரி நெடுங் கடல்நாடு முற்றியதோ என நண்ணிற்றே.39. திரை பொரு கனை கடல் செல்வன் சென்னி மேல்நுரை எனும் மாலையை நுகரச் சூட்டுவான்சரை எனும் பெயர் உடைத் தடம் கொள் வெம் முலைக்குரை புனல் கன்னி கொண்டு இழிந்தது என்பவே.40. பழம் கொள் தெங்கு இலை எனப் பரந்து பாய் புனல்வழங்க முன் இயற்றிய சுதை செய் வாய்த் தலைதழம் குரல் பம்பையில் சாற்றி நாடு எலாம்முழங்கு தீம் புனல் அகம் முரிய மொய்த்தவே.41. வெலற்கு அரும் குஞ்சரம் வேட்டம் பட்டு எனத்தலைத் தலை அவர் கதம் தவிர்ப்பத் தாழ்ந்து போய்க்குலத் தலை மகளிர் தம் கற்பின் கோட்டகம்நிலைப் படா நிறைந்தன பிறவும் என்பவே.42. கவ்வையும் கடும் புனல் ஒலியும் காப்பவர்செவ்வன் நூறு ஆயிரம் சிலைக்கும் பம்பையும்எவ் எலாத் திசைகளும் ஈண்டிக் காரொடுபவ்வம் நின்று இயம்புவது ஒத்த என்பவே.43. மாமனும் மருகனும் போலும் அன்பினகாமனும் சாமனும் கலந்த காட்சிய;பூமனும் அரிசிப் புல் ஆர்ந்த மோட்டினதாம் இனம் அமைந்து தம் தொழிலின் மிக்கவே.44. நெறி மருப்பு எருமையின் ஒருத்தல் நீள் இனம்செறி மருப்பு ஏற்று இனம் சிலம்பப் பண்உறீஇப்பொறி வரி வராலினம் இரியப் புக்கு உடன்வெறி கமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே.45. சேறு அமை செறுவினுள் செந்நெல் வால் முளைவீறொடு விளைக எனத் தொழுது வித்துவார்;நாறு இது பதம் எனப் பறித்து நாள் செய்வார்;கூறிய கடைசியர் குழாம் கொண்டு ஏகுவார்.46. முலைத் தடம் சேதகம் பொறிப்ப மற்று அவர்குலைத்து உடன் பதித்தலின் குதித்த வாள் கயல்புலத்து இடைக் கவரி கன்று ஊட்டப் போந்த பால்நிலத்து இடைப் பாய்ந்து அவை பிறழும் நீரவே.47. பால் சுவை அறிந்து அவை பழனத் தாமரைமேல் செலப் பாய்தலின் வெரீஇய வண்டு இனம்கோல் தொடி நுளைச்சியர் முத்தம் கோப்பவர்ஏற்றிய மாலைத் தேன் இரியப் பாய்ந்தவே.48. இரிந்த தேன் குவளையின் நெற்றி தைவரமுரிந்து போது அவிழ்ந்து கொங்கு உயிர்க்கும் முல்லையின்அரும்பு சேர்ந்து அணி ஞிமிறு ஆர்ப்ப வாய் பதம்விருந்து எதிர் கொண்ம் எனத் தழுவி வீழ்ந்தவே.49. வள முடி நடுபவர் வரம்பு இல் கம்பலைஇள மழை முழக்கு என மஞ்ஞை ஏங்கலின்அளமரு குயிலினம் அழுங்கிப் பூம் பொழில்உளம் மெலி மகளிரின் ஒடுங்கும் என்பவே.50. வளைக் கையால் கடைசியர் மட்டு வாக்கலின்திளைத்தவர் பருகிய தேறல் தேங்குழிக்களிப்ப உண்டு இள அனம் கன்னி நாரையைத்திளைத்தலின் பெடை மயில் தெருட்டும் செம்மற்றே.51. கண் எனக் குவளையும் கட்டல் ஓம்பினார்வண்ண வாள் முகம் என மரையின் உள் புகார்பண் எழுத்து இயல் படப் பரப்பி இட்டனர்தண் வயல் உழவர் தம் தன்மை இன்னதே.52. நித்திலப் பந்துடன் ஈன்று பாதிரிஒத்த பூ உடற்றிய நாவின் நாகினால்தத்து நீர் நாரை மேல் எறியத் தண் கடல்பைத்து எழு திரை எனப் பறவை ஆலுமே.53. சொல் அரும் சூல் பசும் பாம்பின் தோற்றம் போல்மெல்லவே கரு இருந்து ஈன்று மேல் அலார்செல்வமே போல் தலை நிறுவித் தேர்ந்த நூல்கல்வி சேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே.54. மீன் கணின் அளவும் வெற்று இடங்கள் இன்மையால்தேன் கணக் கரும்பு இயல் காடும் செந் நெலின்வான் புகழ் களிறு மாய் கழனி ஆக்கமும்ஊன் கணார்க்கு உரைப்ப அரிது ஒல் என் சும்மைத்தே.55. ஆய் பிழி விருத்து வண்டு அயிற்றி உண்டு தேன்வாய் பொழி குவளைகள் சூடி மள்ளர்கள்தேய் பிறை இரும்பு தம் வலக்கை சேர்த்தினர்ஆய் செந் நெல் அகன்ற காடு அரிகுற்றார்களே.56. வலியுடைக் கைகளால் மலர்ந்த தாமரைமெலிவு எய்தக் குவளைகள் வாடக்கம் பலம்பொலிவு எய்தப் பூம் பொய்கை சிலம்பிப் பார்ப்பு எழமலை பட அரிந்து கூன் குயம் கை மாற்றினார்.57. வாளையின் இனம் தலை இரிய வண்டு அலர்தாள் உடைத் தாமரை கிழிய வண் சுமைகோள் உடை இளையவர் குழாம் கொண்டு ஏகலில்பாளை வாய் கமுகு இனம் பழங்கள் சிந்துமே.58. சோர் புயல் முகில் தலை விலங்கித் தூ நிலம்மார்பு கொண்டு ஆர்ந்து அது நரல வண் சுளைஆர்புறு பலாப் பழம் அழிந்த நீள் களம்போர்பினால் மலிந்து உடன் பொலிந்த நீரவே.59. ஈடு சால் போர் பழித்து எருமைப் போத்தினால்மாடு உறத் தெளித்து வை களைந்து கால் உறீஇச்சேடு உறக் கூப்பிய செந்நெல் குப்பைகள்கோடு உயர் கொழும் பொனின் குன்றம் ஒத்தவே.60. கரும்பு கண் உடைப்பவர் ஆலை தோறெலாம்விரும்பி வந்து அடைந்தவர் பருகி விஞ்சியதிருந்து சாறு அடுவுழிப் பிறந்த தீம் புகைபரந்து விண் புகுதலின் பருதி சேந்ததே.61. கிணை நிலைப் பொருநர் தம் செல்லல் கீழ்ப் படப்பணை நிலையாய் செந்நெல் பகரும் பண்டியும்கணை நிலைக் கரும்பினில் கவரும் பண்டியும்மண நிலை மலர் பெய்து மறுகும் பண்டியும்.62. மல்லல் அம் தெங்கு இள நீர் பெய் பண்டியும்மெல் இலைப் பண்டியும் கமுகின் மேதகுபல் பழுக்காய்க் குலை பெய்த பண்டியும்ஒல்கு தீம் பண்டம் பெய்து ஒழுகும் பண்டியும்.63. கருங் கடல் வளம் தரக் கரையும் பண்டியும்நெருங்குபு முதிரையின் நிறைந்த பண்டியும்பெருங் கலிப் பண்டிகள் பிறவும் செற்றுபுதிருந்தி எத் திசைகளும் செறிந்த என்பவே.64. கிளி வளர் பூ மருது அணிந்து கேடு இலாவள வயல் வைகலும் இன்னது என்ப தேன்துளியொடு மதுத் துளி அறாத சோலை சூழ்ஒளி அமை இருக்கை ஊர் உரைக்க நின்றவே.65. சேவல் அன்னம் தாமரையின் தோடு அவிழ்ந்த செவ்விப் பூக்காவில் கூடு எடுக்கிய கவ்விக் கொண்டு இருந்தனதாவில் பொன் விளக்கமாத் தண் குயில் முழவமாத்தூவி மஞ்ஞை நன் மணம் புகுத்தும் தும்பிக் கொம்பரோ.66. கூடினார் கண் அம்மலர்க் குவளை அம் குழி இடைவாடு வள்ளை மேல் எலாம் வாளை ஏறப் பாய்வனபாடு சால் கயிற்றில் பாய்ந்து பல் கலன் ஒலிப்பப் போந்துஆடு கூத்தி ஆடல் போன்ற நாரை காண்ப ஒத்தவே.67. காவி அன்ன கண்ணினார் கயம் தலைக் குடைதலின்ஆவி அன்ன பூந்துகில் அணிந்த அல்குல் பல் கலைகோவை அற்று உதிர்ந்தன கொள்ளும் நீரர் இன்மையின்வாவி யாவும் பொன் அணிந்து வானம் பூத்தது ஒத்தவே.68. பாசவல் இடிப்பவர் உலக்கை வாழைப் பல் பழம்ஆசினி வருக்கை மா தடிந்து தேம் கனி உதிர்த்துஊசல் ஆடும் பைங் கமுகு தெங்கின் ஒண் பழம் பரீஇவாசத் தாழை சண்பகத்தின் வான் மலர்கள் நக்குமே.69. மன்றல் நாறு இலஞ்சி மேய்ந்து மா முலை சுரந்த பால்நின்ற தாரையால் நிலம் நனைப்ப ஏகி நீள் மனைக்கன்று அருத்தி மங்கையர் கலம் நிறை பொழிதரநின்ற மேதியால் பொலிந்த நீர மாட மாலையே.70. வெள்ளிப் போழ் விலங்க வைத்து அனைய வாய் மணித் தலைகொள் பவளம் கோத்த அனைய கால குன்றிச் செங்கணஒள் அகில் புகை திரண்டது ஒக்கும் மா மணிப் புறாக்கிள்ளையோடு பால் உணும் கேடு இல் பூவை பாடவே.71. காடி உண்ட பூந் துகில் கழும ஊட்டும் பூம் புகைமாட மாலை மேல் நலார் மணிக் குழலின் மூழ்கலின்கோடு உயர்ந்த குன்றின் மேல் குழீஇய மஞ்ஞைதம் சிறகுஆடும் மஞ்சினுள் விரித்து இருந்த வண்ணம் அன்னரே.72. கண் உளார் நும் காதலர் ஒழிக காமம் ஈங்கு எனஉள் நிலாய வேட்கையால் ஊடினாரை ஆடவர்வண்ண மேகலைகளைப் பற்ற அற்று உதிர்ந்தனஎண் இல் பொன் சுடு நெருப்பு உக்க முற்றம் ஒத்தவே.73. கோட்டு இளந் தகர்களும் கொய் மலர தோன்றி போல்சூட்டு உடைய சேவலும் தோணிக் கோழி ஆதியாவேட்டவற்றின் ஊறு உளார் வெருளி மாந்தர் போர்க் கொளீஇக்காட்டி ஆர்க்கும் கௌவையும் கடியும் கௌவை கௌவையே.74. இறு நுசுப்பின் அம் நலார் ஏந்து வள்ளத்து ஏந்தியநறவம் கொப்புளித்தலின் நாகு புன்னை பூத்தனசிறகர் வண்டு செவ்வழி பாட மாடத்து ஊடு எலாம்இறை கொள் வானின் மீன் என அரம்பை முலையின் இருந்தவே.75. விலக்கு இல் சாலை யாவர்க்கும் வெப்பின் முப் பழச் சுனைத்தலைத் தணீர் மலர் அணிந்து சந்தனம் செய் பந்தரும்கொலைத் தலைய வேல் கணார் கூத்தும் அன்றி ஐம் பொறிநிலத் தலைய துப்பு எலாம் நிறை துளும்பும் ஊர்களே.76. அடிசில் வைகல் ஆயிரம் அறப் புறமும் ஆயிரம்கொடி அனார் செய் கோலமும் வைகல் தோறும் ஆயிரம்மடிவு இல் கம்மியர்களோடு மங்கலமும் ஆயிரம்ஒடிவு இலை வேறு ஆயிரம் ஓம்புவாரின் ஓம்பவே.77. நல்தவம் செய்வார்க்கு இடம் தவம் செய்வார்க்கும் அஃது இடம்நல் பொருள் செய்வார்க்கு இடம் பொருள் செய்வார்க்கும் அஃது இடம்பெற்ற இன்பம் விழைவிப்பான் விண் உவந்து வீழ்ந்து எனமற்ற நாடு வட்டம் ஆக வைகும் மற்ற நாடு அரோ.78. கண் வலைக் காமுகர் என்னும் மாபடுத்துஒள் நிதித் தசை தழீஇ உடலம் விட்டிடும்பெண் வலைப் படாதவர் பீடின் ஓங்கியஅண்ணல் அம் கடிநகர் அமைதி செப்புவாம்.79. விண்புகு வியன் சினை மெலியப் பூத்தனசண்பகத்து அணிமலர் குடைந்து தாது உகவண் சிறைக் குயிலொடு மயில்கண் மாறு கூஉய்க்கண் சிறைப் படுநிழல் காவு சூழ்ந்தவே.80. கை புனை சாந்தமும் கடி செய் மாலையும்மெய் புனை சுண்ணமும் புகையும் மேவியநெய்யொடு குங்குமம் நிறைந்த நாணினால்பொய்கைகள் பூம் படாம் போர்த்த போன்றவே.81. கடி நலக் கரும்பொடு காய் நெல் கற்றையின்பிடி நலம் தழீஇ வரும் பெருங் கைக் குஞ்சரம்அடி நிலை இருப்பு எழு அமைந்த கல் மதில்புடை நிலை வாரிகள் பொலிந்த சூழ்ந்தவே.82. சல சல மும் மதம் சொரியத் தம் தம்முள்கொலை மருப்பு இரட்டைகள் குளிப்பப் பாய்ந்து இருமலை திளைப்பன என நாகம் ஆன்ற போர்குலவிய நிலைக்களம் கோலம் ஆர்ந்தவே.83. முத்து உடை வெண் மருப்பு ஈர்ந்து மொய் கொளப்பத்தியில் குயிற்றிய மருங்கில் பல்வினைச்சித்திரக் கிம்புரி வைரம் சேர்த்துநர்ஒத்துஇயல் இடங்களும் ஒழுங்கு நீண்டவே.84. ஓடு தேர்ச் சாரிகை உகு பொன் பூமியும்ஆடகம் ஆற்றும் தார்ப் புரவி வட்டமும்கேடக வாள் தொழில் இடமும் கேடு இலாக்கோடு வெம் சிலைத் தொழில் இடமும் கூடின்றே.85. புடை நகர்த் தொழில் இடம் கடந்து புக்க பின்இடை நகர்ப் புறம் பணை இயம்பும் ஓசை ஓர்கடல் உடைந்தது எனக் கலந்தது அக் கடல்மடை அடைத்து அனையது அம் மாக்கள் ஈட்டமே.86. சிந்துரப் பொடிகளும் செம் பொன் சுண்ணமும்சந்தன நீரோடு கலந்து தையலார்பந்தொடு சிவிறியில் சிதறப் பார் மிசைஇந்திர வில் எனக் கிடந்த வீதியே87. பாத்தரும் பசும் பொன்னின் மாடத்து உச்சி மேல்தூத் திரள் மணிக் குடம் நிரைத்துத் தோன்றுவபூத்தன வேங்கை மேல் பொலிந்து கார் நினைந்துஏத்தரும் மயில் குழாம் இருந்த போன்றவே.88. நெடுங் கொடி நிழல் மதி நெற்றி தைவரஉடம்பு வேர்த்து இன மழை உரறி நோக்கலின்நடுங்குபு நல் வரை மாடத்து உச்சியில்அடங்கி வீழ்ந்து அருவியின் அழுவ போன்றவே.89. பொன் சிறு தேர் மிசைப் பைம் பொன் போதகம்நல் சிறார் ஊர்தலின் நங்கைமார் விரீஇஉற்றவர் கோழி மேல் எறிந்த ஒண் குழைமற்று அத் தேர் உருள் கொடா வளமை சான்றவே.90. மாலையும் பசும் பொ(ன்)னும் மயங்கி வார் கணைக்கோல் எயும் குனி சிலை நுதலினாரொடுவேல் இயல் ஆடவர் விரவி விண்ணவர்ஆலயம் இது என ஐயம் செய்யுமே.91. கல் சுணம் செய்த தோள் மைந்தர் காதலால்நல் சுணப் பட்டு உடை பற்ற நாணினால்பொன் சுணத்தால் விளக்கு அவிப்பப் பொங்கியபொன் சுணம் புறம்பணை தவழும் பொற்பிற்றே.92. நலத்தகு நானம் நின்று இடிக்கும் நல்லவர்உலக்கையால் உதிர்ந்தன தெங்கின் ஒண் பழம்நிலத்து அவை சொரிதலின் வெரீஇய மஞ்ஞை போய்க்கலத்து உயர் கூம்பின் மேல் ஆடும் கௌவைத்தே.93. இட்ட எள் நிலம்படா வகையில் ஈண்டியமுட்டு இலா மூவறு பாடை மாக்களால்புள் பயில் பழு மரம் பொலிவிற்று ஆகியமட்டு இலா வள நகர் வண்ணம் இன்னதே.94. தங்கு ஒளி நித்திலத் தாமம் சூடியவெம் களி இள முலை வேல் கண் மாதரார்பைங்கிளி முன்கை மேல் கொண்டு பார்ப்பு எனும்கொங்கு அலர் தாமரைக் கிடங்கு கூறுவாம்.95. கோள் சுறா இனத்தொடு முதலைக் குப்பைகள்ஆள் பெறா திரிதர அஞ்சிப் பாய்வனமோட்டு இறா பனிக் கிடங்கு உழக்க மொய்த்து எழுந்துஈட்டறாப் புள் இனம் இரற்றும் என்பவே.96. சிறை அனப் பெடையினோடு ஊடிச் சேவல் போய்அறு பத வண்டு இனம் ஆர்ப்பத் தாமரைஉறைவது குழுவின் நீங்கி யோகொடுகறை அற முயல்வது ஓர் கடவுள் ஒத்ததே.97. அரும் பொனும் வெள்ளியும் மணியும் அல்லதுகருங் கலம் தோய்விலாக் காமர் பூந் துறைகுரும்பை மென் முலையின் மேல் குலாய குங்குமம்விருந்து செய்திட வெறி மேனி சேந்ததே.98. பட்டவர்த் தப்பலின் பரவை ஏந்து அல்குல்அட்டு ஒளி அரத்தம்வாய்க் கணிகை அல்லதுமட்டு உடை மண மகள் மலர்ந்த போதினால்கட்டு உடைக் காவலின் காமர் கன்னியே.99. நிரை கதிர் நித்திலம் கோத்து வைத்த போல்விரை கமழ் கமுகின் மேல் விரிந்த பாளையும்குரை மதுக் குவளைகள் கிடங்கில் பூத்தவும்உரையின் ஓர் ஓசனை உலாவி நாறுமே.100. தாய் முலை தழுவிய குழவி போலவும்மா மலை தழுவிய மஞ்சு போலவும்ஆய் முகில் தழீஇ அசும்பு அறாத நெற்றியசேய் உயர் மதில் வகை செப்புகின்றதே.101. மாற்றவர் மறப் படை மலைந்து மதில் பற்றின்நூற்றுவரைக் கொல்லியொடு நூக்கி எறி பொறியும்தோற்றம் உறு பேய் களிறு துற்று பெரும் பாம்பும்கூற்றம் அன கழுகு தொடர் குந்தமொடு கோண்மா102. வில் பொறிகள் வெய்ய விடு குதிரை தொடர் அயில் வாள்கல் பொறிகள் பாவை அனம் மாடம் அடு செந் தீக்கொல் புனை செய் கொள்ளி பெருங் கொக்கு எழில் செய் கூகைநல் தலைகள் திருக்கும் வலி நெருக்கும் மர நிலையே103. செம்பு உருகு வெம் களிகள் உமிழ்வ திரிந்து எங்கும்வெம்பு உருகு வட்டு உமிழ்வ வெந் நெய் முகத்து உமிழ்வஅம்பு உமிழ்வ வேல் உமிழ்வ கல் உமிழ்வ ஆகித்தம் புலங்களால் யவனர் தாள் படுத்த பொறியே.104. கரும் பொன் இயல் பன்றி கத நாகம் விடு சகடம்குரங்கு பொரு தகரினொடு கூர்ந்து அரிவ நுண்நூல்பரந்த பசும் பொன் கொடி பதாகையொடு கொழிக்கும்திருந்து மதி தெவ்வர் தலை பனிப்பத் திருந்தின்றே105. வயிர வரை கண் விழிப்ப போன்று மழை உகளும்வயிர மணித் தாழ்க் கதவு வாயில் முகம் ஆகவயிரம் அணி ஞாயில் முலை வான் பொன் கொடிக் கூந்தல்வயிரக் கிடங்கு ஆடை மதில் கன்னியது கவினே106. செம் பொன் மழை போன்று அடிதொறு ஆயிரங்கள் சிந்திப்பைம் பொன் விளை தீவில் நிதி தடிந்து பலர்க்கு ஆர்த்திஅம் பொன் நிலத்து ஏகு குடி அக நகரம் அது தான்உம்பர் உலகு ஒப்பது அதன் தன்மை சிறிது உரைப்பாம்107. துப்பு உறழ் தொண்டைச் செவ்வாய்த் தோழியர் காமத் தூதின்ஒப்ப ஒன்று ஆதி ஆக ஆயிரத்தோர் எட்டு ஈறாச்செப்பித் தம் செம்பொன் அல்குல் நலம் வரைவின்றி விற்கும்உப்பு அமை காமத் துப்பின் அவர் இடம் உரைத்தும் அன்றே108. குங்குமம் மெழுகிச் சார்பும் திண்ணையும் குயிற்றி உள்ளால்தங்கும் மென் சாந்தத்தோடு தாமமும் தாழ நாற்றிஎங்கும் நல் சுவர்கள் தோறும் நாடகம் எழுதி ஏற்பப்பொங்கு மென் மலர் பெய் சேக்கை பொலிந்து விண் புகற்சி உண்டே109. தூசு சூழ் பரவை அல்குல் சுமக்கலாது என்ன வீழ்த்தகாசு சூழ் கோவை முத்தம் கதிர் முலை திமிர்ந்த சாந்தம்வாச நல் பொடிகள் மாலை வண்டு உண வீழ்ந்த முற்றம்ஆசைப் பட்டு அரசு வைக அருங் கடி கமழும் அன்றே110. அம் சிலம்பு ஒலியோடு அல்குல் கலை ஒலி அணிந்த முன்கைப்பஞ்சி மெல் விரலில் பாணி பண் ஒலி பவழச் செவ்வாய்அஞ்சி நேர்ந்து உயிர்க்கும் தேன் சேர் குழல் ஒலி முழவின் ஓசைதுஞ்சல் இல் ஓசை தம்மால் துறக்கமும் நிகர்க்க லாதே111. தேன் உலாம் மதுச் செய் கோதை தேம் புகை கமழ ஊட்டவான் உலாம் சுடர்கண் மூடி மா நகர் இரவு செய்யப்பால் நிலாச் சொரிந்து நல்லார் அணிகலம் பகலைச் செய்யவேனிலான் விழைந்த சேரி மேல் உலகு அனையது ஒன்றே112. இட்ட நூல் வழாமை ஓடி யோசனை எல்லை நீண்டுமட்டுவார் மாலை வேய்ந்து சதுக்கங்கள் மலிந்த சும்மைப்பட்டமும் பசும் பொன் பூணும் பரந்து ஒளி நிழற்றும் தீம் தேன்அட்டும் தார் அணிந்த மார்பர் ஆவணம் விளக்கல் உற்றேன்.113. மணி புனை செம் பொன் கொட்டை வம்பு அணி முத்த மாலைக்கணி புனை பவழத் திண் காழ் கம்பலக் கிடுகின் ஊன்றிஅணி நிலம் மெழுகிச் சாந்தின் அகில் புகைத்து அம் பொன் போதில்திணி நிலம் அணிந்து தேம் கொள் ஐயவி சிதறினாரே.114. பொன் சொரி கதவு தாழில் திறந்து பொன் யவனப் பேழைமின் சொரி மணியும் முத்தும் வயிரமும் குவித்துப் பின்னும்மன் பெரும் பவழக் குப்பை வால் அணிகலம் செய் குப்பைநண் பகல் இரவு செய்யும் நன் கலம் கூப்பினாரே.115. விழுக் கலம் சொரியச் சிந்தி வீழ்ந்தவை எடுத்துக் கொள்ளாஒழுக்கினர் அவர்கள் செல்வம் உரைப்பரிது ஒழிக வேண்டாபழக் குலைக் கமுகும் தெங்கும் வாழையும் பசும் பொன்னாலும்எழில் பொலி மணியினாலும் கடை தொறும் இயற்றினாரே.116. மூசு தேன் இறாலின் மூச மொய் திரை இயம்பி யாங்கும்ஓசை என்று உணரின் அல்லால் எழுத்து மெய் உணர்த்தல் ஆகாப்பூசு சாந்து ஒருவர் பூசிற்று எழுவர் தம் அகலம் பூசிமா சனம் இடம் பெறாது வண் கடை மலிந்தது அன்றே.117. மெய்யணி பசும் பொன் சுண்ணம் மேதகு நான நீரின்ஐது பட்டு ஒழுகி யானை அழிமதம் கலந்து சேறாய்ச்செய் அணி கலன்கள் சிந்தி மாலையும் மதுவும் மல்கிவெய்து அடி இடுதற்கு ஆகா வீதிகள் விளம்பல் உற்றேன்.118. முழவு அணி முது நகர் முரசொடு வளை விமவிழவு அணி மகளிர் தம் விரை கமழ் இள முலைஇழை அணி ஒளி இள வெயில் செய விடு புகைமழை என மறையின பொலிவினது ஒருபால்.119. குடையொடு குடை பல களிறொடு நெரி தரஉடை கடல் ஒலியினொடு உறுவார் பலி செலமுடியொடு முடியுற மிடைதலின் விடு சுடர்கொடியுடை மழை மினின் குலவியது ஒரு பால்.120. பூத்தலை வாரணப் போர்த் தொழில் இளையவர்நாத் தலை மடி விளிக் கூத்தொடு குயில் தரக்காய்த்துறு தமனியத் துகளொடு கடிகமழ்பூத்துகள் கழுமிய பொலிவினது ஒரு பால்.121. மைந்தரோடு ஊடிய மகளிரை இளையவர்அம் துகில் பற்றலின் காசரிந்து அணி கிளர்சுந்தர நிலமிசைச் சொரிதலின் மின் அணிந்துஇந்திர திருவிலின் எழிலினது ஒருபால்.122. வளை அறுத்து அனையன வால் அரி அமை பதம்அளவு அறு நறு நெய்யொடு கறி அமை துவைவிளைவு அமை தயிரொடு மிசை குவிர் விரையுமின்உள அணி கலம் எனும் உரையினது ஒருபால்.123. வரை நிரை அருவியின் மதம் மிசை சொரிவனபுரை நிரை களிறொடு புனை மணி இயல் தேர்விரை நிரை இவுளியொடு இளையவர் விரவுபுகுரை நிரை குளிர் புனல் ஆற்றினது ஒருபால்.124. வரி வளை அரவமும் மணி முழவு அரவமும்அரி வளர் கண்ணியர் அணிகல அரவமும்புரி வளர் குழலொடு பொலி மலி கவினியதிரு விழை கடி மனை திறவிதின் மொழிவாம்.125. பாவை அன்னவர் பந்து புடைத்தலில்தூவி அன்னம் வெரீஇத் துணை என்று போய்க்கோவை நித்தில மாடக் குழாம் மிசைமேவி வெண் மதி தன்னொடு இருக்குமே.126. திருவ நீள் நகர்ச் செம் பொனின் நீடியஉருவ ஒண்கொடி ஊழின் நுடங்குவபரவை வெம் கதிர்ச் செல்வன பன்மயிர்ப்புரவி பொங்கு அழல் ஆற்றுவ போன்றவே.127. இழை கொள் வெம் முலை ஈரம் உலர்த்துவார்விழைய ஊட்டிய மேதகு தீம் புகைகுழை கொள் வாண் முகம் சூழ் குளிர் அம் கதிர்மழையுள் மா மதி போன்ம் எனத் தோன்றுமே.128. செம் பொன் கண்ணி சிறார் களைந்திட்டவும்அம் பொன் மாலை அவிழ்ந்து உடன் வீழ்ந்தவும்தம் பொன் மேனி திமிர்ந்த தண் சாந்தமும்வம்பு உண் கோதையர் மாற்றும் அயல் அரோ129. வேரிஇன் மெழுக்கு ஆர்ந்த மென் பூ நிலத்துஆரி ஆக அம் சாந்தம் தளித்தபின்வாரி நித்திலம் வைப்ப பொன் பூவொடுசேரி தோறு இது செல்வத்து இயற்கையே.130. கருனை வாசமும் கார் இருள் கூந்தலார்அருமை சான்ற அகில் புகை வாசமும்செருமிச் சேர்ந்து கண்ணீர் வரத் தேம் பொழில்உரிமை கொண்டன ஒண்புறவு என்பவே.131. நறையும் நானமும் நாறும் நறும் புகைவிறகின் வெள்ளி அடுப்பின் அம் பொன் கலம்நிறைய ஆக்கிய நெய் பயில் இன் அமுதுஉறையும் மாந்தர் விருந்தொடும் உண்பவே.132. பாளை மென் கமுகின் பழம் மெல் இலைநீள் வெண் மாடத்து நின்று கொண்டு அம்நலார்ஆளிய மொய்ம்பர்க்கு அளித்து அணி சண்பகம்நாள் செய் மாலை நகை முடிப் பெய்பவே.133. எழுது வாள் நெடும் கண் இணை அம் நலார்மெழுகு குங்கும மார்பு இடை வெம் முலைஉழுது கோதையும் சாந்தும் உவந்து அவைமுழுதும் வித்தி விளைப்பர் திளைப்பவே.134. குஞ்சி மேல் அனிச்ச மலர் கூட்டு உணும்அஞ்சில் ஓதியர் அம் மலர்ச் சீறடிமஞ்சு தோய் மணி மாடத்து மல்கு பூம்பஞ்சி மேலும் பனிக்கும் பனிக்குமே.135. தூமமே கமழும் துகில் சேக்கை மேல்காமமே நுகர்வார் தம் காதலால்யாமமும் பகலும் அறியாமையால்பூமி மா நகர் பொன் உலகு ஒத்ததே.136. அரவு கான்றிட்ட அம்கதிர் மா மணிஉரவு நீர் முத்தும் உள் உறுத்து உள்ளனஇரவல் மாந்தர்க்கும் இன்னவை ஈவது ஓர்புரவு பூண்டனர் பொன் நகர் மாந்தரே.137. முல்லை அம் குழலார் முலைச் செல்வமும்மல்லல் மா நகர்ச் செல்வமும் வார் கழல்செல்வர் செல்வமும் காணிய என்பர் போல்எல்லியும் இமையார் இமையாததே.138. முழவும் சங்கமும் முன்றில் முழங்குவவிழவும் வேள்வும் விடுத்தல் ஒன்று இன்மையால்புகழலாம் படித்து அன்று இது பொன்னகர்அகழ்தல் மாக் கடல் அன்னது ஓர் சும்மைத்தே.139. திங்கள் முக்குடையான் திரு மாநகர்எங்கும் எங்கும் இடம் தொறும் உண்மையால்அம் கண் மா நகர்க்கு ஆக்கம் அறாதது ஓர்சங்க நீள் நிதியால் தழைக்கின்றதே.140. தேன்தலைத் துவலை மாலை பைந்துகில் செம் பொன் பூத்துஞான்றன வயிர மாலை நகு கதிர் முத்த மாலைகான்று அமிர்து ஏந்தி நின்ற கற்பகச் சோலை யார்க்கும்ஈன்று அருள் சுரந்த செல்வத்து இராசமா புரம் அதாமே.141. வேக யானை மீளி வேல் வெய்ய தானை ஐய கோல்மாகம் நீள் மணிமுடி மாரி வண்கை மாசு இல் சீர்ஏக ஆணை வெண் குடை இந் நகர்க்கு மன்னவன்நாக நீர நல் நகர் நன்மை தன்னம் செப்புவாம்.142. நீள் நிலம் வகுத்து நீர் நிரந்து வந்து இழிதரச்சேண் நிலத்து இயற்றிய சித்திரச் சுருங்கை சேர்கோள் நிலத்து வெய்யவாம் கொடும் சுறத் தடம் கிடங்குபூண் நிலத்து வைத்தது ஓர் பொற்பினில் பொலிந்ததே.143. இஞ்சி மாகம் நெஞ்சு போழ்ந்து எல்லை காண ஏகலின்மஞ்சு சூழ்ந்து கொண்டு அணிந்து மாக நீண்ட நாகமும்அஞ்சு நின்னை என்றலின் ஆண்டு நின்று நீண்ட தன்குஞ்சி மாண் கொடிக் கையால் கூவி விட்டது ஒத்ததே.144. முத்து மாலை முப்புரி மூரி மா மணிக் கதவுஒத்த நான்கு கோபுரம் ஓங்கி நின்று ஒளிர்வனசத்தி நெற்றி சூட்டிய தாம நீள் மணிவணன்தத்து ஒளி மணிமுடி தாமம் நால்வ போலுமே.145. சங்கு விம்மு நித்திலம் சாந்தொடு ஏந்து பூண் முலைக்கொங்கு விம்மு கோதை தாழ் கூந்தல் ஏந்துஇங்கிதக் களிப்பினால் எய்தி ஆடும் பூம்செங் கண் இந்திரன் நகர்ச் செல்வம் என்னது அன்னதே.146. வெள்ளி யானை மென் பிடி மின் இலங்கு பைம் பொனால்துள்ளும் மான் ஒருத்தலும் செம் பொன் அம் பொன் மான்பிணைஉள்ளு காமம் உள் சுட வேந்தன் ஆங்கு உறைவது ஓர்பள்ளி மாட மண்டபம் பசுங்கதிர்ப்ப வண்ணமே.147. கோழ் அரை மணி மடல் கூந்தல் நெற்றி ஏந்தியமாழையம் திரள் கனி மா மணி மரகதம்சூழ் குலைப் பசுங்கமுகு சூலு பாளை வெண் பொனால்ஊழ் திரள் மணிக் கயிறு ஊசல் ஆட விட்டதே.148. மென் தினைப் பிறங்கலும் மிளிர்ந்து வீழ் அருவியும்குன்று அயல் மணிச் சுனைக் குவளை கண் விழிப்பவும்நின்று நோக்கு மான் பிணை நீல யானை மன்னவன்கன்று காமம் வெஃகிய காமர் காம பூமியே.149. தீம் குயில் மணந்து தேன் துஞ்ச வண்டு பாண் செயவேங்கை நின்று பொன் உகுக்கும் வெற்பு உடுத்த சந்தனம்ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறு நாகமும்நீங்க நீங்கும் இன் உயிர் நினைப்பின் நின்று இளஃகுமே.150. முத்தம் வாய் புரித்தன மொய் கதிர்ப் பசும் பொனால்சித்திரத்து இயற்றிய செல்வம் மல்கு பன் மணிபத்தியில் குயிற்றி வான் பதித்து வைத்த போல்வனஇத்திறத்த பந்து எறிந்து இளையர் ஆடு பூமியே.151. வைத்த பந்து எடுத்தலும் மாலையுள் கரத்தலும்கைத்தலத்தின் ஓட்டலும் கண்ணி நெற்றி தீட்டலும்பத்தியில் புடைத்தலும் பை அரவின் ஆடலும்இத்திறத்த பந்தினோடு இன்பம் எல்லை இல்லையே.152. கூற்றம் அன்ன கூர் நுதிக் குருதி வான் மருப்பு இடைச்சீற்றம் உற்ற மன்னர் தம் சென்னி பந்து அடிப்பனஊற்று இருந்த மும் மதத்து ஓடை யானை பீடுசால்காற்று இயல் புரவி தேர் கலந்து கௌவை மல்கின்றே.153. கவ்வை அம் கருவி சூழ்ந்து கண் படுக்கும் மாடமும்தெவ்வர் தந்த நீள் நிதி செம் பொன் மாடமும்மவ்வல் அம் குழலினார் மணிக்கலம் பெய் மாடமும்இவ் வலந்த அல்லவும் இடங்கள் எல்லை இல்லையே.154. பூத் கோங்கும் வேங்கையும் பொன் இணர் செய் கொன்றையும்காய்த்து நின்று கண் தெறூஉம் காமர் வல்லி மாதரார்கூத்து அறாத பள்ளியும் கொற்றம் அன்ன மங்கையர்ஏத்தல் சான்ற கோயிலும் இடைப் படுத்து இயன்றவே.155. கந்து மா மணித்திரள் கடைந்து செம் பொன் நீள் சுவர்ச்சந்து போழ்ந்து இயற்றிய தட்டு வேய்ந்து வெண் பொனால்இந்திரன் திரு நகர் உரிமையோடு இவ்வழிவந்து இருந்த வண்ணமே அண்ணல் கோயில் வண்ணமே.156. ஆடலின் அரவமும் அங்கை கொட்டி நெஞ்சு உணப்பாடலின் அரவமும் பணை முழவு அரவமும்கூடு கோலத் தீம் சுவைக் கோல யாழ் அரவமும்வாடல் இல்ல ஓசையால் வைகல் நாளும் வைகிற்றே.157. நச்சு நாகத்தின் ஆர் அழல் சீற்றத்தன்அச்சம் உற்று அடைந்தார்க்கு அமிர்து அன்னவன்கச்சு உலாம் முலையார்க்கு அணங்கு ஆகியசச்சந்தன் எனும் தாமரைச் செங் கணான்.158. வண் கையால் கலி மாற்றி வை வேலினால்திண் திறல் தெவ்வர் தேர்த் தொகை மாற்றினான்நுண் கலைக்கு இடனாய்த் திரு மா மகள்கண்களுக்கு இடன் ஆம் கடி மார்பனே.159. கோதை நித்திலம் சூழ் குளிர் வெண் குடைஓத நீர் உலகு ஒப்ப நிழற்றலால்தாதையே அவன் தாள் நிழல் தங்கியகாதலால் களிக்கின்றது இவ் வையமே.160. தருமன் தண் அளியால் தனது ஈகையால்வருணன் கூற்று உயிர் மாற்றலின் வாமனேஅருமையால் அழகின் கணை ஐந்து உடைத்திருமகன் திரு மா நில மன்னனே.161. ஏனை மன்னர் தம் இன் உயிர் செற்ற வேல்தானை மன்னரில் தான் இமில் ஏறு அனான்தேனை மாரி அன்னான் திசை காவலன்வானம் தோய் புகழான் மலிவு எய்தினான்.162. செல்வற்கு இன்னணம் சேறலில் தீம் புனல்மல்கு நீர் விதையத்து அரசன் மகள்அல்லி சேர் அணங்கிற்கு அணங்கு அன்னவள்வில்லின் நீள் புருவத்து எறி வேல் கணாள்.163. உருவும் சாயலும் ஒப்ப உரைப்பதற்குஅரிய ஆயினும் அவ் வளைத் தோளிகண்பெருகு காரிகை பேசுவல் பெண் அணங்குஅரிய தேவரும் ஏத்து அரு நீரளே.164. எண்ணெயும் நானமும் இவை மூழ்கி இருள் திருக்கிட்டுஒண்ணறும் துகில் கிழி பொதிந்து உறை கழித்தன போல்கண் இருண்டு நெறி மல்கிக் கடைகுழன்ற கருங் குழல்கள்வண்ணப் போது அருச்சித்து மகிழ்வு ஆனாத் தகையவே.165. குழவிக் கோட்டு இளம் பிறையும் குளிர் மதியும் கூடின போல்அழகுகொள் சிறுநுதலும் அணி வட்ட மதி முகமும்தொழுதற்கு வரம் கொடுக்கும் தொண்டை வாய்த் தூமுறுவல்ஒழுகு பொன் கொடி மூக்கும் உருப்பசியை உருக்குமே.166. வண் சிலையை வனப்பு அழித்து வார்ந்து ஒழுகி நிலம் பெறாநுண் கருமை கொண்டு ஒசிந்து நுதல் இவர்ந்து போந்து உலாய்க்கண் கூடா கடை புடைத்துக் கைவல்லான் எழுதிய போல்பண்பு ஆர்ந்த கொடும் புருவம் பழிச்சு ஆனாப் படியவே.167. சேல் அனைய சில்லரிய கடை சிவந்து கரு மணி அம்பால் அகத்துப் பதித்து அன்ன படியவாய் முனிவரையும்மால் உறுப்ப மகிழ் செய்வ மாண்பில் நஞ்சும் அமிர்தமுமேபோல் குணத்த பொரு கயல் கண் செவி உறப் போந்து அகன்றனவே.168. மயிர் எறி கத்தரிகை அனையவாய் வள்ளை வாடுஉயிர் செகுத்து முன் ஒன்றிப் பின் பேராது உரு அமைந்தசெயிர் மகர குண்டலமும் திளைப்பு ஆனா வார் காதும்வயிரவில் முகம் சூடி வண்ணம் வீற்று இருந்தனவே.169. ஈனாத இளங் கமுகின் மரகத மணிக் கண்ணும்ஆனாதே இருள் பருகும் அருமணி கடைந்ததூஉம்தான் ஆகி இருளொடு ஓர் தாமரைப் பூச் சுமந்து அன்னகான் ஆர்ந்த திரள் கழுத்துக் கவின் சிறை கொண்டு இருந்ததே.170. மணி மகரம் வாய் போழ்ந்து வாழ் முத்த வடம் சூழ்ந்து ஆங்குஅணி அரக்கு ஆர் செம் பஞ்சி அணை அனைய ஆடு அமைத் தோள்துணிகதிர் வளை முன் கைத் தொகுவிரல் செங் காந்தள்மணி அரும்பு மலர் அங்கை குலிகம் ஆர் வனப்பினவே.171. தாமச் செப்பு இணை முகட்டுத் தண் கதிர் விடு நீலமா மணி தாபித்தன போல் மனம் பருகு கருங் கண்ணஏம் உற அடி பரந்து இளம் பிறை வடம் சூடிஆம் அணங்கு குடி இருந்து அஞ் சுணங்கு பரந்தனவே.172. அங் கை போல் வயிறு அணிந்த வலம் சுழி அமை கொப்பூழ்கங்கையின் சுழி அலைக்கும் கண் கொளா நுடங்கு இடையைஉண்டு எனத் தமர் மதிப்பர் நோக்கினார் பிறர் எல்லாம்உண்டு இல்லை என ஐயம் அல்லது ஒன்று உணர்வு அரிதே.173. மன்நாக இணைப் படமும் தேர்த் தட்டு மதி மயக்கிப்பொன் ஆல வட்டமும் போல் கலை இமைக்கும் அகல் அல்குல்கொன் இளம் பருதியும் குறு முயலின் குருதியும் போன்றுஇன் அரத்தப் பட்டசைத்து இந்திரற்கும் புகழ்வு அரிதே.174. வேழ வெண் திரள் தடக்கை வெருட்டி மற்று இளங் கன்னிவாழைத் தண்டு எனத் திரண்டு வால் அரக்கு உண் செம்பஞ்சிதோழமை கொண்டு என மென்மை உடையவாய் ஒளி திகழ்ந்துமாழை கொள் மணி மகரம் கௌவி வீற்று இருந்தனவே.175. பக்கத்தால் கவிழிய வாய் மேல் பிறங்காப் பாண்டிலாஒக்க நன்கு உணராமை பொருந்திய சந்தினவாய்நெக்குப் பின் கூடாது நிகர் அமைந்த முழந் தாளும்மக்களுக்கு இல்லாத மாட்சியின் மலிந்தனவே.176. ஆடு தசை பிறங்காது வற்றாது மயிர் அகன்றுநீடாது குறுகாது நிகர் அமைந்த அளவினவாய்ச்சேடு ஆவ நாழிகையின் புடை திரண்டு தேன் நெய் பெய்வாடாத காம்பே போல் கணைக் காலின் வனப்பினவே.177. பசும் பொன் செய் கிண்கிணியும் பாடகமும் பாடு அலைப்பநயந்து எரி பொன் சிலம்பு முத்தரி பெய்து அகம் நகஇயைந்து எழிலார் மணி ஆமை இளம் பார்ப்பின் கூன் புறம் போல்அசைந்து உணர்வு மடிந்து ஒழியும் அடி இணை புகழ்வார்க்கே.178. அரக்கு இயல் செங் கழுநீர் அக இதழ் போல் உகிர் சூடிப்பரப்பு இன்றி நுதி உயர்ந்து பழிப்பு அறத் திரண்டு நீண்டுஒருக்கு உற நெருங்கிப் பொன் ஒளி ஆழி அகம் கௌவித்திருக் கவின் கொள் மெல் விரல்கள் தேன் ஆர்க்கும் தகையவே.179. என்பொடு நரம்பு இன்றி இலவம் பூ அடர் அனுக்கிஇன்புற வரம்பு உயர்ந்து இரு நிலம் உறப் புல்லிஒன்பதின் சாண் நடப்பினும் ஒரு காதம் என்று அஞ்சும்மென் பஞ்சிச் சீறடியும் மேதக்க விழைவினவே.180. இவ் உருவு நெஞ்சு என்னும் கிழியின் மேல் இருந்து இலக்கித்துஅவ் உருவு நினைப்பு என்னும் துகிலிகையால் வருத்தித்துக்கவ்விய தன் நோக்கினால் கண் விடுத்துக் காதல் நீர்செவ்விதில் தெளித்து ஆனாக் காமப் பூச் சிதறினான்.181. மெய் பெறா எழுத்து உயிர்க்கும் மழலை வாய் இன் முறுவல்தையலாள் நெடுந் தடங்கண் வலைப்பட்டுச் சச்சந்தன்ஐயுறான் அணங்கு எனவே அகத்து அடக்கிச் செல்கின்றான்மொய் அறாக் களியானை முழங்கித் தேன் இமிர் தாரான்.182. வண்டு இனம் முகபடாம் அணிந்து வார் மதம்உண்டு உகுத்திடு களிற்று உழவன் தன் மகள்பெண்டிர் தம் பெரு நலம் கடந்து பெற்ற பேர்விண்டலர் கோதைக்கு விசயை என்பவே.183. அரு மணி மரகதத்து அங் கண் நாறியஎரி நிறப் பொன் இதழ் ஏந்து தாமரைத்திருமகள் இவள் எனத் திலக வெண் குடைப்பெருமகன் கோயிலுள் பேதை வைகுமே.184. கலம் புரி அகல் அல்குல் தாயர் தவ்வையர்சிலம்புரி திருந்து அடி பரவச் செல்பவள்வலம்புரி சலஞ்சலம் வளை இயது ஒத்தனள்குலம் புரிந்து அனையது ஓர் கொடியின் நீர்மையள்.185. இன் அகில் கொழும் புகை உயிர்க்கும் ஈர்ங் குழல்மென் மலர்க் கோதை தன் முலைகள் வீங்கலின்மின் உருக்குறும் இடை மெலிய மெல்லவேகன்னி தன் திரு நலம் கனிந்தது என்பவே.186. முந்து நாம் கூறிய மூரித் தானை அக்கந்து கொல் கடாக் களி யானை மன்னவன்பைந்தொடிப் பாசிழைப் பரவை ஏந்து அல்குல்தந்தை மாட்டு இசைத்தனன் தனது மாற்றமே.187. மருமகன் வலந்தது மங்கை ஆக்கமும்அருமதிச் சூழ்ச்சியின் அமைச்சர் எண்ணியகருமமும் கண்டவர் கலத்தல் பான்மையில்பெருமகன் சேர்த்தினார் பிணை அனாளையே.188. பொன் அம் கொடி அமிர்து அனாளும் பொன் நெடுங் குன்று அனானும்அனங்கனுக்கு இலக்கம் ஆகி அம்பு கொண்டு அழுத்த விள்ளார்இனம் தமக்கு எங்கும் இல்லார் இயைந்தனர் என்ப முக்கண்சினம் திகழ் விடையினானும் செல்வியும் சேர்ந்தது ஒத்தே.189. காதலால் காம பூமிக் கதிர் ஒளி அவரும் ஒத்தார்மாதரும் களிறு அனானும் மாசுண மகிழ்ச்சி மன்றல்ஆதரம் பெருகுகின்ற அன்பினால் அன்னம் ஒத்தும்தீது இலார் திளைப்பின் ஆமான் செல்வமே பெரிதும் ஒத்தார்.190. தன் அமர் காதலானும் தையலும் மணந்த போழ்தில்பொன் அனாள் அமிர்தம் ஆகப் புகழ் வெய்யோன் பருகியிட்டான்மின் அவிர் பூணினானை வேல் கணார்க்கு இயற்றப் பட்டமன்னிய மதுவின் வாங்கி மாதரும் பருகியிட்டாள்.191. பவழவாய் பரவை அல்குல் என்று இவை பருகும் வேலான்கவழம் ஆர் களிறு போன்றான் காதலி கரும்பை ஒத்தாள்தவழ் மதுக் கோதை மாதர் தாமரைப் பூ அது ஆகஉமிழ் நகை வேலினானும் ஒண் சிறை மணி வண்டு ஒத்தான்.192. பளிக்கு அறைப் பவழப் பாவை பரிசு எனத் திகழும் சாயல்களிக் கயல் பொருவ போன்று கடை சிவந்து அகன்ற கண்ணாள்ஒளிக் கவின் கொண்ட காமத்து ஊழுறு கனியை ஒத்தாள்அளித்து அயில்கின்ற வேந்தன் அம் சிறைப் பறவை ஒத்தான்.193. துறு மலர்ப் பிணையலும் சூட்டும் சுண்ணமும்நறுமலர்க் கண்ணியும் நாறு சாந்தமும்அறு நிலத்து அமிர்தமும் அகிலும் நாவியும்பெறு நிலம் பிணித்திடப் பெரியர் வைகினார்.194. துடித்தலைக் கருங் குழல் சுரும்பு உண் கோதை தன்அடித்தலைச் சிலம்பினோடு அரவ மேகலைவடித்தலைக் கண் மலர் வளர்த்த நோக்கமோடுஅடுத்து உலப்பு அரிது அவர் ஊறில் இன்பமே.195. இழை கிளர் இள முலை எழுது நுண் இடைத்தழை வளர் மது மலர் தயங்கு பூஞ்சிகைக்குழை முகக் கொடியொடு குருதி வேலினான்மழை முகில் மாரியின் வைகும் என்பவே.196. படுதிரைப் பவழவாய் அமுதம் மாந்தியும்கொடிவளர் குவி முலைத் தடத்துள் வைகியும்இடியினும் கொடியினும் மயங்கி யாவதும்கடி மணக் கிழமை ஓர் கடலின் மிக்கதே.197. கப்புரப் பசுந்திரை கதிர் செய் மா மணிச்செப்பொடு சிலதியர் ஏந்தத் தீவியதுப்பு உமிழ்ந்து அலமரும் காமவல்லியும்ஒப்பரும் பாவை போன்று உறையும் என்பவே.198. மண் அகம் காவலின் வழுக்கி மன்னவன்பெண் அரும் கலத்தொடு பிணைந்த பேர் அருள்விண்ணகம் இருள் கொள விளங்கு வெண் மதிஒளி நிற உரோணியோடு ஒளித்தது ஒத்ததே.199. குங்குமத் தோளினானும் கொழும் கயல் கண்ணி னாளும்தங்கிய காதல் வெள்ளம் தணப்பு அறப் பருகும் நாளுள்திங்கள் வெண் குடையினாற்குத் திரு இழுக்குற்ற வண்ணம்பைங் கதிர் மதியில் தெள்ளிப் பகர்ந்து எடுத்து உரைத்தும் அன்றே.200. களிறு அனான் அமைச்சர் தம்முள் கட்டியங் காரன் என்பான்ஒளிறு வாள் தடக்கையானுக்கு உயிர் என ஒழுகும் நாளுள்பிளிறு வார் முரசின் சாற்றிப் பெரும் சிறப்பு இயற்றி வேந்தன்வெளிறு இலாக் கேள்வியானை வேறு கொண்டு இருந்து சொன்னான்.201. அசைவு இலாப் புரவி வெள்ளத்து அரிஞ்சயன் குலத்துள் தோன்றிவசை இலாள் வரத்தின் வந்தாள் வான் சுவை அமிர்தம் அன்னாள்விசையையைப் பிரிதல் ஆற்றேன் வேந்தன் நீ ஆகி வையம்இசை படக் காத்தல் வேண்டும் இலங்கு பூண் மார்ப என்றான்.202. அண்ணல் தான் உரைப்பக் கேட்டே அடுகளிற்று எருத்தின் இட்டவண்ணப் பூந் தவிசு தன்னை ஞமலி மேல் இட்டது ஒக்கும்கண் அகல் ஞாலம் காத்தல் எனக்கு எனக் கமழும் கண்ணிமண் அகம் வளரும் தோளான் மறுத்து நீ மொழியல் என்றான்.203. எழுதரு பருதி மார்பன் இற்றென இசைத்த லோடும்தொழுது அடி பணிந்து சொல்லும் துன்னலர்த் தொலைத்த வேலோய்கழி பெரும் காதலாள்கண் கழி நலம் பெறுக வையம்பழி படா வகையில் காக்கும் படு நுகம் பூண்பல் என்றான்.204. வலம் புரி பொறித்த வண்கை மதவலி விடுப்ப ஏகிக்கலந்தனன் சேனை காவல் கட்டியங் காரன் என்னஉலந்தரு தோளினாய் நீ ஒருவன் மேல் கொற்றம் வைப்பின்நிலம் திரு நீங்கும் என்று ஓர் நிமித்திகன் நெறியில் சொன்னான்.205. எனக்கு உயிர் என்னப் பட்டான் என் அலால் பிறரை இல்லான்முனைத் திறம் உருக்கி முன்னே மொய் அமர் பலவும் வென்றான்தனக்கு யான் செய்வ செய்தேன் தான் செய்வ செய்க ஒன்றும்மனக்கு இனா மொழிய வேண்டா வாழியர் ஒழிக என்றான்.206. காவல குறிப்பு அன்றேனும் கருமம் ஈது அருளிக் கேண்மோநாவலர் சொல் கொண்டார்க்கு நன்கு அலால் தீங்கு வாராபூ அலர் கொடியனார் கண் போகமே கழுமி மேலும்பாவமும் பழியும் உற்றார் பற்பலர் கேள் இது என்றான்.207. பெரும் பெயர்ப் பிரமன் என்னும் பீடினால் பெரிய நீரான்அரும்பிய முலையினாளுக்கு அணி முகம் நான்கு தோன்றவிரும்பி ஆங்கு அவளை எய்தான் விண்ணகம் இழந்தது அன்றித்திருந்தினாற்கு இன்று காறும் சிறு சொல்லாய் நின்றது அன்றே.208. கைம் மலர்க் காந்தள் வேலிக் கண மலை அரையன் மங்கைமைம் மலர்க் கோதை பாகம் கொண்டதே மறுவது ஆகக்கொய்ம் மலர்க் கொன்றை மாலைக் குளிர்மதிக் கண்ணியாற்குப்பெய்ம் மலர் அலங்கல் மார்ப பெரும் பழி ஆயிற்று அன்றே.209. நீல் நிற வண்ணன் அன்று நெடுந் துகில் கவர்ந்து தம் முன்பால் நிற வண்ணன் நோக்கில் பழி உடைத்து என்று கண்டாய்வேல் நிறத் தானை வேந்தே விரிபுனல் தொழுனை ஆற்றுள்கோல் நிற வளையினார்க்குக் குருந்து அவன் ஒசித்தது என்றான்.210. காமமே கன்றி நின்ற கழுதை கண்டு அருளினாலேவாமனார் சென்று கூடி வருந்தினீர் என்று வையத்துஈமம் சேர் மாலை போல இழித்திடப் பட்டது அன்றேநாம வேல் தடக்கை வேந்தே நாம் இது தெரியின் என்றான்.211. படு பழி மறைக்கல் ஆமோ பஞ்சவர் அன்று பெற்றவடுவுரை யாவர் பேர்ப்பார் வாய்ப் பறை அறைந்து தூற்றிஇடுவதே அன்றிப் பின்னும் இழுக்கு உடைத்து அம்ம காமம்நடுவு நின்று உலகம் ஓம்பல் நல்லதே போலும் என்றான்.212. ஆர் அறிவு இகழ்தல் செல்லா ஆயிரம் செங் கணனானும்கூர் அறிவு உடைய நீரார் சொல் பொருள் கொண்டு செல்லும்பேர் அறிவு உடையை நீயும் பிணை அனாட்கு அவலம் செய்யும்ஓர் அறிவு உடையை என்றான் உருத்திர தத்தன் என்பான்.213. அளந்து தாம் கொண்டு காத்த அருந் தவம் உடைய நீரார்க்குஅளந்தன போகம் எல்லாம் அவர் அவர்க்கு அற்றை நாளேஅளந்தன வாழும் நாளும் அது எனக்கு உரையல் என்றான்விளங்கு ஒளி மணிகள் வேய்ந்து விடு சுடர் இமைக்கும் பூணான்.214. மூரித் தேம் தாரினாய் நீ முனியினும் உறுதி நோக்கிப்பாரித்தேன் தரும நுண்நூல் வழக்கு அது ஆதல் கண்டேவேரித் தேம் கோதை மாதர் விருந்து உனக்காக இன்பம்பூரித்து ஏந்து இளைய கொங்கை புணர்க யான் போவல் என்றான்.215. இனமாம் என்று உரைப்பினும் ஏதம் எணான்முனம் ஆகிய பான்மை முளைத்து எழலால்புனமா மலர் வேய் நறும் பூங் குழலாள்மனமாம் நெறி ஓடிய மன்னவனே.216. கலையார் துகில் ஏந்து அல்குலும் கதிர் சூழ்முலையார் தடமும் முனியாது படிந்துஉலையாத் திருவின் அமிர்து உண்டு ஒளிசேர்மலையார் மணி மார்பன் மகிழ்ந்தனனே.217. விரி மா மணி மாலை விளங்கு முடித்திரு மா மணி சிந்து திளைப்பினர் ஆய்எரி மா மணி மார்பனும் ஏந்திழையும்அரு மா மணி நாகரின் ஆயினரே.218. நறவு ஆர்ந்தது ஓர் நாகு இளம் தாமரை வாய்உற வீழ்ந்தது ஓர் ஒண் மணி போன்று உரவோன்அறவு ஆக்கிய இன்பம் அமர்ந்த இருள்கறை வேல் கணினாள் கனவு உற்றனளே.219. பஞ்சி அடிப் பவளத் துவர் வாய் அவள்துஞ்சும் இடைக் கனவு மூன்று அவை தோன்றலின்அஞ்சி நடுங்கினள் ஆய் இழை ஆயிடைவெம் சுடர் தோன்றி விடிந்ததை அன்றே.220. பண் கெழு மெல் விரலால் பணைத் தோளி தன்கண் கழூஉச் செய்து கலை நலந் தாங்கிவிண் பொழி பூ மழை வெல் கதிர் நேமியவண் புகழ் மால் அடி வந்தனை செய்தாள்.221. இம்பர் இலா நறும் பூவொடு சாந்து கொண்டுஎம் பெருமான் அடிக்கு எய்துக என்று ஏத்திவெம் பரி மான் நெடுந் தேர் மிகு தானை அத்தம் பெருமான் அடி சார்ந்தனள் அன்றே.222. தான் அமர் காதலி தன்னொடு மா வலிவானவர் போல் மகிழ்வு உற்ற பின் வார் நறும்தேன் எனப் பால் எனச் சில் அமிர்து ஊற்று எனக்கான் அமர் கோதை கனா மொழிகின்றாள்.223. தொத்து அணி பிண்டி தொலைந்து அற வீழ்ந்தது எண்முத்து அணி மாலை முடிக்கு இடன் ஆகஒத்து அதன் தாள் வழியே முளை ஓங்குபுவைத்தது போல வளர்ந்ததை அன்றே.224. வார் குழை வில் இட மா முடி தூக்குபுகார் கெழு குன்று அனையான் கனவின் இயல்பார் கெழு நூல் விதியால் பயன் தான் தெரிந்துஏர் குழையாமல் எடுத்து உரைக்கின்றான்.225. நன்முடி நின் மகனாம் நறு மாலைகள்அன்னவனால் அமரப்படும் தேவியர்நல் முளை நின் மகன் ஆக்கம் அதாம் எனப்பின்னதனால் பயன் பேசலன் விட்டான்.226. இற்று அதனால் பயன் என் என ஏந்திழைஉற்றது இன்னே இடையூறு எனக்கு என்றலும்மற்று உரையாடலளாய் மணி மா நிலத்துஅற்றது ஓர் கோதையின் பொன் தொடி சோர்ந்தாள்.227. காவி கடந்த கண்ணீரொடு காரிகைஆவி நடந்தது போன்று அணி மாழ்கப்பாவி என் ஆவி வருத்துதியோ எனத்தேவியை ஆண் தகை சென்று மெய் சார்ந்தான்.228. தண் மலர் மார்பு உறவே தழீஇயினான் அவள்கண் மலர்த் தாள் கனவின் இயல் மெய் எனும்பெண் மயமோ பெரிதே மடவாய்க்கு எனப்பண் உரையால் பரவித் துயர் தீர்த்தான்.229. காதலன் காதலினால் களித்து ஆய் மலர்க்கோதை அம் கொம்பு அனையார் தம் குழாம் தொழத்தாது உகு தாமம் அணிந்து அகில் விம்மியபோது உகு மெல் அணைப் பூ மகள் சேர்ந்தாள்.230. பண் கனியப் பருகிப் பயன் நாடகம்கண் கனியக் கவர்ந்து உண்டு சின்னாள் செலவிண் கனியக் கவின் வித்திய வேல் கணிமண் கனிப்பான் வளரத் தளர் கின்றாள்.231. கரும்பு ஆர் தோள் முத்தம் கழன்று செவ்வாய் விளர்த்துக்கண் பசலை பூத்த காமம்விரும்பு ஆர் முலைக் கண் கரிந்து திங்கள் வெண் கதிர்கள்பெய்து இருந்த பொன் செப்பே போல்அரும்பால் பரந்து நுசுப்பும் கண்ணின் புலன் ஆயிற்றுஆய்ந்த அனிச்ச மாலைபெரும் பாரமாய்ப் பெரிது நைந்து நல் சூல் சலஞ்சலம் போல்நங்கை நலம் தொலைந்ததே.232. தூம்பு உடை நெடுங் கை வேழம்துற்றிய வெள்ளிலே போல்தேம்புடை அலங்கல் மார்பில்திருமகன் தமியன் ஆகஓம்படை ஒன்றும் செப்பாள்திருமகள் ஒளித்து நீங்கஆம் புடை தெரிந்து வேந்தற்குஅறிவு எனும் அமைச்சன் சொன்னான்.233. காதி வேல் மன்னர் தங்கள் கண் என வைக்கப் பட்டநீதி மேல் சேறல் தேற்றாய் நெறி அலா நெறியைச் சேர்ந்துகோது இயல் காமம் என்னும் மதுவினில் குளித்த ஞான்றேஓதிய பொறி அற்றாய் ஓர் அரும் பொறி புனைவி என்றான்.234. அந்தரத்தார் மயனே என ஐயுறும்தந்திரத்தால் தம நூல் கரை கண்டவன்வெம் திறலான் பெரும் தச்சனைக் கூவி ஓர்எந்திர ஊர்தி இயற்றுமின் என்றான்.235. பல் கிழியும் பயினும் துகில் நூலொடுநல் அரக்கும் மெழுகும் நலம் சான்றனஅல்லனவும் அமைத்து ஆங்கு எழு நாள் இடைச்செல்வது ஓர் மா மயில் செய்தனன் அன்றே.236. பீலி நல் மாமயிலும் பிறிது ஆக்கியகோல நல் மாமயிலும் கொடு சென்றவன்ஞாலம் எல்லாம் உடையான் அடி கைதொழுதுஆலும் இம் மஞ்ஞை அறிந்து அருள் என்றான்.237. நல் நெறி நூல் நயந்தான் நன்று நன்று இதுகொல் நெறியில் பெரியாய் இது கொள்க எனமின் நெறி பல்கலம் மேதகப் பெய்தது ஓர்பொன் அறை தான் கொடுத்தான் புகழ் வெய்யோன்.238. ஆடு இயல் மா மயில் ஊர்தியை அவ்வழிமாடமும் காவும் அடுத்து ஓர் சில் நாள் செலப்பாடலின் மேல் மேல் பயப்பயத் தான் துரந்துஓட முறுக்கி உணர்த்த உணர்ந்தாள்.239. பண் தவழ் விரலின் பாவை பொறிவலம் திரிப்பப் பொங்கிவிண்தவழ் மேகம் போழ்ந்து விசும்பு இடைப் பறக்கும் வெய்யபுண் தவழ் வேல் கண் பாவை பொறி இடம் திரிப்பத் தோகைகண்டவர் மருள வீழ்ந்து கால் குவித்து இருக்கும் அன்றே.240. காதி வேல் வல கட்டியங் காரனும்நீதியால் நிலம் கொண்டபின் நீதி நூல்ஓதினார் தமை வேறு கொண்டு ஓதினான்கோது செய் குணக் கோதினுள் கோது அனான்.241. மன்னவன் பகை ஆயது ஓர் மாதெய்வம்என்னை வந்து இடம் கொண்ட அஃது இராப் பகல்துன்னி நின்று செகுத்திடு நீ எனும்என்னை யான் செய்வ கூறுமின் என்னவே.242. அருமை மா மணி நாகம் அழுங்க ஓர்உருமு வீழ்ந்து என உட்கினரா அவன்கருமம் காழ்த்தமை கண்டவர் தம் உளான்தரும தத்தன் என்பான் இது சாற்றினான்.243. தவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடிக்குவளையே அளவுள்ள கொழுங் கணாள்அவளையே அமிர்தாக அவ் அண்ணலும்உவள் அகம் தனது ஆக ஒடுங்கினான்.244. விண்ணி னோடு அமிர்தம் விலைச் செல்வதுபெண்ணின் இன்பம் பெரிது எனத் தாழ்ந்து அவன்எண்ணம் இன்றி இறங்கி இவ் வையகம்தண் அம் தாமரை யாளொடும் தாழ்ந்ததே.245. தன்னை ஆக்கிய தார்ப் பொலி வேந்தனைப்பின்னை வௌவில் பிறழ்ந்திடும் பூ மகள்அன்னவன் வழிச் செல்லின் இம் மண்மிசைப்பின்னைத் தன் குலம் பேர்க்குநர் இல்லையே.246. திலக நீள் முடித் தேவரும் வேந்தரும்உலக மாந்தர்கள் ஒப்ப என்று ஓதுபகுலவு தார் மன்னர்க்கு யான் இது கூறுவன்பலவும் மிக்கனர் தேவரின் பார்த்திவர்.247. அருளுமேல் அரசு ஆக்குமன் காயுமேல்வெருளச் சுட்டிடும் வேந்து எனும் மா தெய்வம்மருளி மற்று அவை வாழ்த்தினும் வையினும்அருளி ஆக்கல் அழித்தல் அங்கு ஆபவோ.248. உறங்கும் ஆயினும் மன்னவன் தன் ஒளிகறங்கு தெண் திரை வையகம் காக்குமால்இறங்கு கண் இமையார் விழித்தே இருந்துஅறங்கள் வௌவ அதன் புறம் காக்கலார்.249. யாவர் ஆயினும் நால்வரைப் பின்னிடின்தேவர் என்பது தேறும் இவ் வையகம்காவல் மன்னவர் காய்வன சிந்தியார்நாவினும் உரையார் நவை அஞ்சுவார்.250. தீண்டினார் தமைத் தீச் சுடும் மன்னர் தீஈண்டு தம் கிளையொடும் எரித்திடும்வேண்டில் இன் அமிர்தும் நஞ்சும் ஆதலான்மாண்டது அன்று நின் வாய் மொழித் தெய்வமே.251. வேலின் மன்னனை விண் அகம் காட்டி இஞ்ஞாலம் ஆள்வது நன்று எனக்கு என்றியேல்வாலிது அன்று எனக் கூறினன் வாள் ஞமற்குஓலை வைத்து அன்ன ஒண் திறல் ஆற்றலான்.252. குழல் சிகை கோதை சூட்டிக்கொண்டவன் இருப்ப மற்று ஓர்நிழல் திகழ் வேலினானைநேடிய நெடும் கணாளும்பிழைப்பிலான் புறம் தந்தானும்குரவரைப் பேணல் செய்யாஇழுக்கினார் இவர்கள் கண்டாய்இடும்பை நோய்க்கு இரைகளாவார்.253. நட்பு இடைக் குய்யம் வைத்தான்பிறர் மனை நலத்தைச் சேர்ந்தான்கட்டு அழல் காமத் தீயில்கன்னியைக் கலக்கினானும்அட்டு உயிர் உடலம் தின்றான்அமைச்சனாய் அரசு கொன்றான்குட்ட நோய் நரகம் தம்முள்குளிப்பவர் இவர்கள் கண்டாய்.254. பிறை அது வளரத் தானும்வளர்ந்து உடன் பெருகிப் பின் நாள்குறைபடு மதியம் தேயக்குறுமுயல் தேய்வதே போல்இறைவனாத் தன்னை ஆக்கிஅவன் வழி ஒழுகின் என்றும்நிறை மதி இருளைப் போழும்நெடும் புகழ் விளைக்கும் என்றான்.255. கோள் நிலை திரிந்து நாழிகுறைபடப் பகல்கண் மிஞ்சிநீள் நிலம் மாரி இன்றிவிளைவு அஃகிப் பசியும் நீடிப்பூண் முலை மகளிர் பொற்பில்கற்பு அழிந்து அறங்கள் மாறிஆணை இவ் உலகு கேடாம்அரசு கோல் கோடின் என்றான்.256. தார்ப் பொலி தரும தத்தன்தக்கவாறு உரப்பக் குன்றில்கார்த்திகை விளக்கு இட்டு அன்னகடி கமழ் குவளப் பந்தார்போர்த்த தன் அகலம் எல்லாம்பொள் என வியர்த்துப் பொங்கிநீர்க் கடல் மகரப் பேழ்வாய்மதனன் மற்று இதனைச் சொன்னான்.257. தோளினால் வலியர் ஆகித்தொக்கவர் தலைகள் பாறவாளினால் பேசல் அல்லால்வாயினால் பேசல் தேற்றேன்காள மேகங்கள் சொல்லிக்கருனையால் குழைக்கும் கைகள்வாள் அமர் நீந்தும் போழ்தின்வழு வழுத்து ஒழியும் என்றான்.258. நுண் முத்தம் ஏற்றி ஆங்குமெய் எல்லாம் வியர்த்து நொய்தின்வண் முத்தம் நிரை கொள் நெற்றிவார் முரி புருவம் ஆக்கிக்கண் எரி தவழ வண்கைமணி நகு கடகம் எற்றாவெண் நகை வெகுண்டு நக்குக்கட்டியங் காரன் சொன்னான்.259. என் அலால் பிறர்கள் யாரேஇன்னவை பொறுக்கும் நீரார்உன்னலால் பிறர்கள் யாரேஉற்றவற்கு உறாத சூழ்வார்மன்னன் போய்த் துறக்கம் ஆண்டுவானவர்க்கு இறைவன் ஆகபொன் எலாம் விளைந்து பூமிபொலிய யான் காப்பல் என்றான்.260. விளைக பொலிக அஃதேஉரைத்திலம் வெகுள வேண்டாகளைகம் எழுகம் இன்னேகாவலன் கூற்றம் கொல்லும்வளை கய மடந்தை கொல்லும்தான் செய்த பிழைப்புக் கொல்லும்அளவு அறு நிதியம் கொல்லும்அருள் கொல்லும் அமைக என்றான்.261. நிலத் தலைத் திருவனாள் தன்நீப்பரும் காதல் கூரமுலைத் தலைப் போகம் மூழ்கிமுகிழ் நிலா முடிகொள் சென்னிவெலற்கு அரும் தானை நீத்தவேந்தனை வெறுமை நோக்கிக்குலத்தொடும் கோறல் எண்ணிக்கொடியவன் கடிய சூழ்ந்தான்.262. கோன் தமர் நிகளம் மூழ்கிக்கோட்டத்துக் குரங்கத் தன் கீழ்ஏன்ற நன் மாந்தர்க்கு எல்லாம்இரு நிதி முகந்து நல்கிஊன்றிய நாட்டை எல்லாம்ஒரு குடை நீழல் செய்துதோன்றினான் குன்றத்து உச்சிச்சுடர்ப் பழி விளக்கு இட்ட அன்றே.263. பருமித்த களிறும் மாவும்பரந்தியல் தேரும் பண்ணித்திருமிக்க சேனை மூதூர்த்தெருவுதொறும் எங்கும் ஈண்டிஎரி மொய்த்த வாளும் வில்லும்இலங்கு இலை வேலும் ஏந்திச்செரு மிக்க வேலினான் தன்திருநகர் வளைந்தது அன்றே.264. நீள் நில மன்ன போற்றி!நெடு முடிக் குருசில் போற்றி!பூண் அணி மார்ப போற்றி!புண்ணிய வேந்தே போற்றி!கோள் நிலைக் குறித்து வந்தான்கட்டியங் காரன் என்றுசேண் நிலத்து இறைஞ்சிச் சொன்னான்செய்ய கோல் வெய்ய சொல்லான்.265. திண் நிலைக் கதவம் எல்லாம்திருந்து தாழ் உறுக்க வல்லேபண்ணுக பசும் பொன் தேரும்படு மதக் களிறும் மாவும்கண் அகன் புரிசை காக்கும்காவலர் அடைக என்றான்விண் உரும் ஏறு போன்றுவெடிபட முழங்கும் சொல்லான்.266. புலிப் பொறிப் போர்வை நீக்கிப்பொன் அணிந்து இலங்குகின்றஒலிக் கழல் மன்னர் உட்கும்உருச் சுடர் வாளை நோக்கிக்கலிக்கு இறை ஆய நெஞ்சினிகட்டியங் காரன் நம்மேல்வலித்தது காண்டும் என்றுவாள் எயிறு இலங்க நக்கான்.267. நங்கை நீ நடக்கல் வேண்டும்நன் பொருட்கு இரங்கல் வேண்டாகங்குல் நீ அன்று கண்டகனவு எல்லாம் விளைந்த என்னக்கொங்கு அலர் கோதை மாழ்கிக்குழை முகம் புடைத்து வீழ்ந்துசெங் கயல் கண்ணி வெய்யதிருமகற்கு அவலம் செய்தாள்.268. மல் அலைத்து எழுந்து வீங்கிமலை திரண்டு அனைய தோளான்அல்லல் உற்று அழுங்கி வீழ்ந்தஅமிர்தம் அன்னாளை எய்திப்புல்லிக் கொண்டு அவலம் நீக்கிப்பொம்மல் வெம் முலையினாட்குச்சொல்லுவான் இவைகள் சொன்னான்சூழ் கழல் காலினானே.269. சாதலும் பிறத்தல் தானும்தம் வினைப் பயத்தின் ஆகும்ஆதலும் அழிவும் எல்லாம்அவை பொருட்கு இயல்பு கண்டாய்நோதலும் பரிவும் எல்லாம் நுண்உணர்வு இன்மை அன்றேபேதை நீ பெரிதும் பொல்லாய்பெய் வளைத் தோளி என்றான்.270. தொல்லை நம் பிறவி எண்ணில்தொடு கடல் மணலும் ஆற்றாஎல்லைய அவற்றுள் எல்லாம்ஏதிலம் பிறந்து நீங்கிச்செல்லும் அக் கதிகள் தம்முள்சேரலம் சேர்ந்து நின்றஇல்லினுள் இரண்டு நாளைச்சுற்றமே இரங்கல் வேண்டா.271. வண்டு மொய்த்து அரற்றும் பிண்டிவாமனால் வடித்த நுண் நூல்உண்டு வைத்து அனைய நீயும்உணர்வு இலா நீரை ஆகிவிண்டு கண் அருவி சோரவிம் உயிர்த்து இனையை ஆதல்ஒண் தொடி தகுவது அன்றால்ஒழிக நின் கவலை என்றான்.272. உரிமை முன் போக்கி அல்லால்ஒளி உடை மன்னர் போகார்கருமம் ஈது எனக்கும் ஊர்திசமைந்தது கவல வேண்டாம்புரி நரம்பு இரங்கும் சொல்லாய்போவதே பொருள் மற்று என்றான்எரி முயங்கு இலங்கு வாள் கைஏற்று இளஞ் சிங்கம் அன்னான்.273. என்பு நெக்கு உருகி உள்ளம்ஒழுகுபு சோர யாத்தஅன்பு மிக்கு அவலித்து ஆற்றாஆர் உயிர்க் கிழத்தி தன்னைஇன்பம் மிக்கு உடைய கீர்த்திஇறைவனது ஆணை கூறித்துன்பம் இல் பறவை ஊர்திசேர்த்தினன் துணைவி சேர்ந்தாள்.274. நீர் உடைக் குவளையின்நெடுங் கண் நின்ற வெம் பனிவார் உடை முலை முகம்நனைப்ப மாதர் சென்ற பின்சீர் உடைக் குருசிலும்சிவந்து அழன்று ஓர் தீத் திரள்பார் உடைப் பனிக்கடல்சுடுவது ஒத்து உலம்பினான்.275. முழை முகத்து இடி அரிவளைத்த அன்ன மள்ளரில்குழை முகப் புரிசையுள்குருசில் தான் அகப்படஇழை முகத்து எறி படைஇலங்கு வாள் கடல் இடைமழை முகத்த குஞ்சரம்வாரிஉள் வளைத்தவே.276. அயிலினில் புனைந்த வாள்அழன்று உருத்து உரீஇ உடன்பயில் கதிர்ப் பருமணிப்பன் மயிர்ச் செய் கேடகம்வெயில் எனத் திரித்து விண்வழுக்கி வந்து வீழ்ந்தது ஓர்கயில் அணிக் கதிர் நகைக்கடவுள் ஒத்து உலம்பினான்.277. மாரியின் கடுங் கணைசொரிந்து மள்ளர் ஆர்த்த பின்வீரியக் குரிசிலும்விலக்கி வெம் கணை மழைவாரியில் கடிந்து உடன்அகற்ற மற்ற வன்படைப்பேர் இயல் பெருங் களிறுபின்னி வந்து அடைந்தவே.278. சீற்றம் மிக்க மன்னவன் சேர்ந்த குஞ்சரம் நுதல்கூற்றரும் குருதிவாள் கோடு உற அழுத்தலின்ஊற்று உடை நெடு வரை உரும் உடன்று இடித்து எனமாற்று அரும் மதக் களிறு மத்தகம் பிளந்தவே.279. வேல் மிடைந்த வேலியும் பிளந்து வெம் கண் வீரரைவான் மயிர்ச் செய் கேடகத்து இடித்து வாள் வலை அரிந்துஊன் உடைக் குருதியுள் உழக்குபு திரி தரத்தேன் மிடைந்த தாரினான் செங்களம் சிறந்ததே.280. உப்பு உடைய முந் நீர் உடன்று கரை கொல்வதுஒப்பு உடைய தானையுள் ஒரு தனியன் ஆகிஇப்படி இறை மகன் இரும் களிறு நூறஅப் படையுள் அண்ணலும் அழன்று களிறு உந்தி.281. நீடகம் இருந்த நிழல் நேமி வலன் ஏந்திக்கேடகம் அறுப்ப நடு அற்று அரவு சேர்ந்து ஆங்குஓடு கதிர் வட்டம் என ஒய் என உலம்பிக்காடு கவர் தீயின் மிகை சீறுபு வெகுண்டான்.282. நெய்ம் முகம் அணிந்து நிழல் தங்கி அழல் பொங்கிவைம் முகம் அணிந்த நுதி வாள் அழல வீசிமைம் முகம் அணிந்த மதயானை தவ நூறிக்கைம் முதல் துணிந்து களிறு ஆழ அது நோனான்.283. மாலை நுதி கொண்டு மழை மின் என இமைக்கும்வேலை வலன் ஏந்தி விரி தாமம் அழகு அழியச்சோலை மயிலார்கள் துணை வெம்முலைகள் துஞ்சும்கோல வரை மார்பின் உறு கூற்று என எறிந்தான்.284. புண் இடம் கொண்ட எஃகம் பறித்தலின் பொன் அனார் தம்கண் இடம் கொண்ட மார்பில் தடாயின காது வெள்வேல்மண் இடம் கொண்ட யானை மருப்பு இடை இட்டு அம்மவிண் இடம் மள்ளர் கொள்ள மிறைக்கொளி திருத்தினானே.285. ஏந்தல் வேல் திருத்த யானை இரிந்தன எரி பொன் கண்ணிநாந்தக உழவர் நண்ணார் கூற்று என நடுங்கி மள்ளர்சாய்ந்த பின் தறுகண் ஆண்மைக் கட்டியங் காரன் வேழம்காய்ந்தனன் கடுக உந்திக் கப்பணம் சிதறினானே.286. குன்றம் மார்பு அரிந்து வெள் வேல்குடுமி மா மஞ்ஞை ஊர்ந்துநின்ற மால் புருவம் போலநெரி முறி புருவம் ஆக்கிக்கொன்று அவன் வேழம் வீழ்ப்பமற்ற போர் களிற்றில் பாய்ந்துநின்ற மா மள்ளர்க்கு எல்லாம்நீள் முடி இலக்கம் ஆனான்.287. நஞ்சு பதி கொண்ட வள நாக அணையினான் தன்நெஞ்சு பதி கொண்டு படை மூழ்க நிலம் வீசும்மஞ்சு தவழ் குன்று அனைய தோள் ஒசித்து மாத்தாள்குஞ்சரங்கள் நூறிக் கொலை வாள் ஒடித்து நின்றான்.288. ஆர் அமருள் ஆண் தகையும் அன்ன வகை வீழும்வீரர் எறி வெம் படைகள் வீழ இமையான் ஆய்ப்பேர் அமருள் அன்று பெருந் தாதையொடும் பேராப்போர் அமருள் நின்ற இளையோனின் பொலிவு உற்றான்.289. போழ்ந்து கதிர் நேமியொடு வேல் பொருது அழுந்தத்தாழ்ந்து தறுகண் இணைகள் தீ அழல விழியாவீழ்ந்து நில மா மகள் தன் வெம் முலை ஞெமுங்கஆழ்ந்து படு வெம் சுடரின் ஆண் தகை அவிந்தான்.290. தோய்ந்த விசும்பு என்னும் தொல் நாட்டு அகம் தொழுதுபுலம்பு எய்தி மைந்தர் மாழ்கஏந்து முலையார் இனைந்து இரங்கக் கொடுங் கோல்இருள் பரப்பவே ஏ பாவம்ஆய்ந்த குருகுலமாம் ஆழ் கடலின் உள் முளைத்தஅறச் செங்கோலாய் கதிரினைவேந்தர் பெருமானைச் சச்சந்தனை மந்திரி மாநாகமுடன் விழுங்கிற்று அன்றே.291. பால் அருவித் திங்கள் தோய் முத்த மாலை பழிப்பின்நெடுங் குடைக் கீழ்ப் பாய் பரிமான் தேர்க்கோல் அருவி வெம் சிலையான் கூர் வாளொடு மணிக்கேடகமும் மறமும் ஆற்றிவால் அருவி வாமன் அடித் தாமரை மலர் சூடிமந்திர மென் சாந்து பூசிவேல் அருவிக் கண்ணினார் மெய்க்காப்பு ஓம்ப வேந்தன் போய்விண்ணோர்க்கு விருந்து ஆயினானே.292. செந் தீக் கருந் துளைய தீம் குழல் யாழ்தேம் தேம் என்னும் மணி முழவமும்தந்து ஆங்கு இளையார் மெல் விரல்கள் தீண்டத்தாம் தாம் என்று இரங்கும் தண்ணுமைகளும்அம தீம் கிளவியார் ஐஞ்ஞாற்றுவர் அவை துறைபோய் ஆடல் அரம்பை அன்னார்எந்தாய் வெறு நிலத்துச் சேர்தியோ என்று இனைந்துஇரங்கிப் பள்ளி படுத்தார்களே.293. மடை அவிழ்ந்த வெள்ளி இலை வேல் அம்பு பாய மணிச்செப்பகம் கடைகின்றவே போல்தொடை அவிழ்ந்த மாலையும் முத்தும் தோய்ந்த துணை முலையின்உள் அரங்கி மூழ்கக் காமன்படை அவிழ்ந்த கண் பனிநீர் பாய விம்மாப்பருமுத்த நா மழலைக் கிண் கிணியினார்புடை அவிழ்ந்த கூந்தல் புலவுத் தோயப் பொழி மழையுள்மின்னுப் போல் புலம்பினாரே.294. அரிமான் ஓர் மெல் அணை மேல் மஞ்ஞை சூழக் கிடந்து ஆங்குவேந்தன் கிடந்தானைத் தான்கரிமாலை நெஞ்சினான் கண்டான் கண்டே கைதொழுதான்கண்ணீர் கலுழ்ந்து உகுத்த பின்எரிமாலை ஈமத்து இழுதார் குடம் ஏனை நூறும்ஏற்பச் சொரிந்து அலறி எம்பெருமானே எம்மை ஒளித்தியோ என்னாப்பெரிய கண்ணீர் சொரிந்து அலறுவார்.295. கையார் வளைகள் புடைத்து இரங்குவார் கதிர் முலைமேல்ஆரம் பரிந்து அலறுவார்நெய்யார் கருங் குழல் மேல் மாலை சிந்தி நிலத்து இடுவார்நின்று திருவில் வீசும்மையார் கடிப் பிணையும் வார் குழையும் களைந்திடுவார்கையால் வயிறு அதுக்குவார்ஐயாவே என்று அழுவார் வேந்தன் செய்த கொடுமை கொடிதுஎன்பார் கோல் வளையினார்.296. பானாள் பிறை மருப்பின் பைங்கண் வேழம் பகுவாய்ஓர் பை அணல் மாநாகம் வீழ்ப்பத்தேன் ஆர் மலர்ச் சோலைச் செவ்வரையின் மேல் சிறுபிடிகள் போலத் துயர் உழந்து தாம்ஆனாது அடியேம் வந்து அவ் உலகினில் நின் அடிஅடைதும் என்று அழுது போயினார் எம்கோனார் பறிப்ப நலம் பூத்த இக் கொடிஇனிப் பூவா பிறர் பறிப்பவே.297. செங் கண் குறு நரி ஓர் சிங்க ஏற்றை செகுத்து ஆங்குஅதன் இடத்தைச் சேர்ந்தால் ஒப்பவெம் கண் களி யானை வேல் வேந்தனை விறல்எரியின் வாய்ப் பெய்து அவன் பெயர்ந்து போய்ப்பைங் கண் களிற்றின் மேல் தன் பெயரினால் பறைஅறைந்தான் வேல் மாரி பெய்தால் ஒப்பஎம் கணவரும் இனைந்து இரங்கினார் இருள் மனத்தான்பூமகளை எய்தினானே.298. களிமுகச் சுரும்பு உண் கோதை கயில் எருத்து அசைந்து சோரவளிமுகச் சுடரின் நில்லா மனத்தொடு மயங்கி இப்பால்சுளிமுகக் களிறு அனான்தன் சொல் நய நெறியில் போயகிளி முகக் கிளவிக்கு உற்றது இற்று எனக் கிளக்கல் உற்றேன்.299. எஃகு என விளங்கும் வாள்கண் எறி கடல் அமிர்தம் அன்னாள்அஃகிய மதுகை தன்னால்ஆய் மயில் ஊரும் ஆங்கண்வெஃகிய புகழினான் தன்வென்றி வெம் முரசம் ஆர்ப்பஎஃகு எறி பிணையின் மாழ்கிஇறுகி மெய்ம் மறந்து சோர்ந்தாள்.300. மோடு உடை நகரின் நீங்கிமுது மரம் துவன்றி உள்ளம்பீடு உடையவரும் உட்கப்பிணம்பல பிறங்கி எங்கும்காடு உடை அளவை எல்லாம்கழுகு இருந்து உறங்கும் நீழல்பாடு உடை மயில் அம் தோகைபைபய வீழ்ந்தது அன்றே.301. மஞ்சு சூழ்வதனை ஒத்துப்பிணப்புகை மலிந்து பேயும்அஞ்சும் அம் மயானம் தன்னுள்அகில் வயிறு ஆர்ந்த கோதைபஞ்சிமேல் வீழ்வதே போல்பல் பொறிக் குடுமி நெற்றிக்குஞ்சி மா மஞ்ஞை வீழ்ந்துகால் குவித்து இருந்தது அன்றே.302. வார் தரு தடம் கண் நீர் தன்வன முலை நனைப்ப ஏல் பெற்றுஊர் கடல் அனைய காட்டுள்அச்சம் ஒன்றானும் உள்ளாள்ஏர் தரு மயில் அம் சாயல்இறைவனுக்கு இரங்கி ஏங்கிச்சோர் துகில் திருத்தல் தேற்றாள்துணை பிரி மகன்றில் ஒத்தாள்.303. உண்டு என உரையில் கேட்பார்உயிர் உறு பாவம் எல்லாம்கண்டு இனித் தெளிக என்றுகாட்டுவாள் போல ஆகிவிண்தொட நிவந்த கோயில்விண்ணவர் மகளின் சென்றாள்வெண்தலை பயின்ற காட்டுள்விளங்கு இழை தமியள் ஆனாள்.304. இருள் கெட இகலி எங்கும்மணிவிளக்கு எரிய ஏந்திஅருள் உடை மனத்த வாகிஅணங்கு எலாம் வணங்கி நிற்பப்பொரு கடல் பருதி போலப்பொன் அனான் பிறந்த போழ்தேமருள் உடை மாதர் உற்றமம்மர் நோய் மறைந்தது அன்றே.305. பூங்கழல் குருசில் தந்தபுதல்வனைப் புகன்று நோக்கித்தேம் கமழ் ஓதி திங்கள்வெண் கதிர் பொழிவதே போல்வீங்கு இள முலைகள் விம்மித்திறந்து பால் பிலிற்ற ஆற்றாள்வாங்குபு திலகம் சேர்த்தித்திலகனைத் திருந்த வைத்தாள்.306. கறை பன்னீர் ஆண்டு உடன் விடுமின்காமர்சாலை தளி நிறுமின்சிறை செய் சிங்கம் போல் மடங்கிச்சேரா மன்னர் சினம் மழுங்கஉறையும் கோட்டம் உடன் சீமின்ஒண் பொன் குன்றம் தலை திறந்திட்டுஇறைவன் சிறுவன் பிறந்தான் என்றுஏற்பார்க்கு ஊர்தோறு உய்த்து ஈமின்.307. மாடம் ஓங்கும் வள நகருள்வரம்பு இல் பண்டம் தலை திறந்திட்டுஆடை செம் பொன் அணிகலங்கள்யாவும் யாரும் கவர்ந்து எழு நாள்வீடல் இன்றிக் கொளப் பெறுவார்விலக்கல் வேண்டா வீழ்ந்தீர்க்குக்கோடி மூன்றோடு அரைச் செம் பொன்கோமான் நல்கும் என அறைமின்.308. அரும் பொன் பூணும் ஆரமும்இமைப்பக் கணிகள் அகன் கோயில்ஒருங்கு கூடிச் சாதகம் செய்துஒகை அரசர்க்கு உடன் போக்கிக்கரும் கைக் களிறும் கம்பலமும்காசும் கவிகள் கொள வீசிவிரும்பப் பிறப்பாய் வினை செய்தேன்காண இஃதோஒ பிறக்குமா.309. வெவ் வாய் ஓரி முழவு ஆகவிளிந்தார் ஈமம் விளக்கு ஆகஒவ்வாச் சுடுகாட்டு உயர் அரங்கில்நிழல் போல் நுடங்கிப் பேய் ஆடஎவ்வாய் மருங்கும் இருந்து இரங்கிக்கூகை குழறிப் பாராட்டஇவ்வாறு ஆகிப் பிறப்பதோஇதுவோ மன்னர்க்கு இயல் வேந்தே.310. பற்றா மன்னன் நகர்ப் புறமால்பாயல் பிணம் சூழ் சுடு காடால்உற்றார் இல்லாத் தமியேனால்ஒதுங்கல் ஆகாத் தூங்கு இருளால்மற்று இஞ் ஞாலம் உடையாய்! நீவளரும் ஆறும் அறியேனால்எற்றே இது கண்டு ஏகாதேஇருத்தியால் என் இன் உயிரே.311. பிறந்த நீயும் பூம் பிண்டிப்பெருமான் அடிகள் பேர் அறமும்புறந்தந்து என்பால் துயர்க் கடலைநீந்தும் புணை மற்று ஆகாக்கால்சிறந்தார் உளரேல் உரையாயால்சிந்தா மணியே! கிடத்தியால்மறம் கூர் நும் கோன் சொல் செய்தேன்மம்மர் நோயின் வருந்துகோ.312. அந்தோ! விசயை பட்டன கொண்டுஅகங்கை புறங்கை ஆனால் போல்கந்தார் களிற்றுத் தம் கோமான்கழிய மயில் ஓர் மயில் ஊர்ந்துவந்தாள் போலப் புறம் காட்டுள்வந்தாள் தமியே என மரங்கள்சிந்தித்து இரங்கி அழுவன போல்பனி சேர் கண்ணீர் சொரிந்தனவே.313. அடர் பொன் பைம் பூண் அரசு அழியஅரும் பொன் புதல்வன் பெற்று இருந்தஇடர் கொள் நெஞ்சத்து இறைவியும்இருங் கண் ஞாலத்து இருள் பருகிச்சுடர் போய் மறையத் துளங்கு ஒளியகுழவி மதிபெற்று அகம் குளிர்ந்தபடர் தீர் அந்தி அது ஒத்தாள்பணை செய் கோட்டுப் படா முலையாள்.314. தேன் அமர் கோதை மாதர் திருமகன் திறத்தை ஓராள்யான் எவன் செய்வல் என்றே அவலியா இருந்த போழ்தில்தான் அமர்ந்து உழையின் நீங்காச் சண்பக மாலை என்னும்கூனியது உருவம் கொண்டு ஓர் தெய்வதம் குறுகிற்று அன்றே.315. விம்முறு விழும வெந் நோய் அவண் உறை தெய்வம் சேரக்கொம் என உயிர்த்து நெஞ்சில் கொட்புறு கவலை நீங்கஎம் அனை தமியை ஆகி இவ் இடர் உற்றது எல்லாம்செம் மலர்த் திருவின் பாவாய் யான் செய்த பாவம் என்றாள்.316. பூவினுள் பிறந்த தோன்றல் புண்ணியன் அனைய நம்பிநாவினுள் உலகம் எல்லாம் நடக்கும் ஒன்றாது நின்றகோவினை அடர்க்க வந்து கொண்டு போம் ஒருவன் இன்னேகாவி அம் கண்ணினாய்! யாம் மறைவது கருமம் என்றாள்.317. சின் மணி மழலை நாவின் கிண்கிணி சிலம்பொடு ஏங்கபன் மணி விளக்கின் நீழல் நம்பியைப் பள்ளி சேர்த்திமின் மணி மிளிரத் தேவி மெல்லவே ஒதுங்கு கின்றாள்நன் மணி ஈன்று முந்நீர்ச் சலஞ்சலம் புகுவது ஒத்தாள்.318. ஏதிலார் இடர் பல் நூறு செய்யினும் செய்த எல்லாம்தீது இல ஆக என்று திரு முலைப் பால் மடுத்துக்காதலான் பெயர் சுமந்த கதிர் மணி ஆழி சேர்த்திக்கோதை தாழ் குழலினாளைக் கொண்டு போய் மறைய நின்றாள்.319. நல் வினை செய்து இலாதேன் நம்பி நீ தமியை ஆகிக்கொல் வினை மாக்கள் சூழக் கிடத்தியோ என்று விம்மாப்புல்லிய கொம்பு தான் ஓர் கருவிளை பூத்ததே போல்ஒல்கி ஓர் கொம்பு பற்றி ஒரு கணால் நோக்கி நின்றாள்.320. நாளொடு நடப்பது வழுக்கி மின்னொடு ஊர்கோளொடு குளிர் மதி வந்து வீழ்ந்து எனக்காளக உடையினன் கந்து நாமனும்வாளொடு கனை இருள் வந்து தோன்றினான்.321. வாள் கடைந்து அழுத்திய கண்ணினார்கள் தம்தோள் கடைந்து அழுத்திய மார்பன் தூங்கு இருள்நீள் சுடர் நிழல் மணி கிழிப்ப நோக்கினான்ஆள் கடிந்து அணங்கிய அணங்கு காட்டுளே.322. அருப்பு இள முலையவர்க்கு அனங்கன் ஆகியமருப்பு இளம் பிறை நுதல் மதர்வை வெம் கதிர்பரப்புபு கிடந்து எனக் கிடந்த நம்பியைவிருப்பு உள மிகுதியின் விரைவின் எய்தினான்.323. புனை கதிர்த் திருமணிப் பொன் செய் மோதிரம்வனை மலர்த் தாரினான் மறைத்து வண் கையால்துனை கதிர் முகந்து என முகப்பத் தும்மினான்சினை மறைந்து ஒரு குரல் சீவ என்றதே.324. என்பு எழுந்து உருகுபு சோர ஈண்டியஅன்பு எழுந்து அரசனுக்கு அவலித்து ஐயனைநுன் பழம் பகை தவ நூறுவாய் எனஇன்பழக் கிளவியின் இறைஞ்சி ஏத்தினாள்.325. ஒழுக்கியல் அரும் தவத்து உடம்பு நீங்கினார்அழிப்பரும் பொன் உடம்பு அடைந்தது ஒப்பவேவழுக்கிய புதல்வன் அங்கு ஒழிய மாமணிவிழுத் தகு மகனொடும் விரைவின் ஏகினான்.326. மின் அடு கனை இருள் நீந்தி மேதகுபொன் உடை வள நகர் பொலியப் புக்கபின்தன் உடை மதிசுடத் தளரும் தையலுக்குஇன் உடை அருள் மொழி இனிய செப்பினான்.327. பொருந்திய உலகினுள் புகழ் கண் கூடியஅருந்ததி அகற்றிய ஆசு இல் கற்பினாய்திருந்திய நின் மகன் தீதின் நீங்கினான்வருந்தல் நீ எம் மனை வருக என்னவே.328. கள் அலைத்து இழி தரும் களி கொள் கோதை தன்உள் அலைத்து எழு தரும் உவகை ஊர்தரவள்ளலை வல் விரைந்து எய்த நம்பியைவெள் இலை வேலினான் விரகின் நீட்டினான்.329. சுரிமுக வலம்புரி துவைத்த தூரியம்விரிமுக விசும்பு உற வாய் விட்டு ஆர்த்தனஎரிமுக நித்திலம் ஏந்திச் சேந்த போல்கரிமுக முலையினார் காய் பொன் சிந்தினார்.330. அழுகுரல் மயங்கிய அல்லல் ஆவணத்துஎழுகிளை மகிழ்ந்து எமது அரசு வேண்டினான்கழிபெரும் காதலான் கந்து நாமன் என்றுஉழிதரு பெருநிதி உவப்ப நல்கினான்.331. திருமகன் பெற்று எனச் செம் பொன் குன்று எனப்பெரு நல நிதி தலை திறந்து பீடு உடைஇரு நிலத்து இரவலர்க்கு ஆர்த்தி இன்னணம்செருநிலம் பயப்பு உறச் செல்வன் செல்லுமே.332. நல் உயிர் நீங்கலும் நல் மாண்பு உடையது ஓர்புல் உயிர் தன்னொடு நின்றுழிப் புல்லுயிர்கல் உயிர் காட்டில் கரப்பக் கலம் கவிழ்த்துஅல்லல் உற்றாள் உற்றது ஆற்ற உரைப்பாம்.333. பொறி அறு பாவையின் பொம் என விம்மிவெறி உறு கோதை வெறு நிலம் எய்தஇறு முறை எழுச்சியின் எய்துவது எல்லாம்நெறிமையில் கூற நினைவின் அகன்றாள்.334. பெரு மகற்கு ஆக்கம் பிறழ்வு இன்றிக் கேட்டேதிரு மகள் தான் இனிச் செய்வதை எல்லாம்ஒரு மனத்து அன்னாய் உரை எனலோடும்தெரு மரு தெய்வதம் செப்பியது அன்றே.335. மணி அறைந்து அன்ன வரி அறல் ஐம்பால்பணி வரும் கற்பின் படை மலர்க் கண்ணாய்துணி இருள் போர்வையில் துன்னுபு போகிஅணி மணல் பேர் யாற்று அமரிகை சார்வாம்.336. அமரிகைக்கு ஓசனை ஐம்பது சென்றால்குமரிக் கொடி மதில் கோபுர மூதூர்தமர் இயல் ஓம்பும் தரணி திலகம்நமர் அது மற்றது நண்ணலம் ஆகி.337. வண்டார் குவளைய வாவியும் பொய்கையும்கண்டார் மனம் கவர் காவும் கஞலியதண்டாரணியத்துத் தாபதப் பள்ளி ஒன்றுஉண்டு ஆங்கு அதனுள் உறைகுவம் என்றாள்.338. பொருள் உடை வாய் மொழி போற்றினள் கூறமருள் உடை மாதர் மதித்தனள் ஆகிஅருள் உடை மாதவர் அத்திசை முன்னிஇருள் இடை மின்னின் இலங்கு இழை சென்றாள்.339. உருவ மா மதி வாள் முகத்து ஓடியஇருவிலும் எறி மா மகரக் குழைத்திருவிலும் இவை தேமொழி மாதரைப்பொரு இல் நீள் அதர் போக்குவ போன்றவே.340. சிலம்பு இரங்கிப் போற்று இசைப்பத்திருவில் கை போய் மெய் காப்பஇலங்கு பொன் கிண்கிணியும் கலையும்ஓங்க எறிவேல் கண்மலங்க மணி மலர்ந்த பவளக்கொம்பு முழு மெய்யும்சிலம்பி வலந்தது போல்போர்வை போர்த்துச் செல்லுற்றாள்.341. பஞ்சி அடர் அனிச்சம் நெருஞ்சி ஈன்ற பழமால் என்றுஅஞ்சும் மலர் அடிகள் அரம் கண்ட அன்ன அரும் காட்டுள்குஞ்சித்து அசைந்து அசைந்து குருதி கான்று வெய்து உயிராவஞ்சி இடை நுடங்க மயில் கை வீசி நடந்ததே.342. தடங் கொள் தாமரைத் தாது உறை தேவியும்குடங்கை போல் உண் கண் கூனியும் கூர்ம் பரல்கடங்களும் மலையும் கடந்து ஆர் புனல்இடம் கொள் ஆற்றகம் எய்தினர் என்பவே.343. எல்லை எய்திய ஆயிரச் செங்கதிர்மல்லல் மாக் கடல் தோன்றலும் வைகிருள்தொல்லை நல்வினை முற்படத் தோன்றியஅல்லல் வெவ்வினை போல அகன்றதே.344. நுணங்கு நுண்கொடி மின் ஓர் மழை மிசைமணம் கொள் வார் பொழில் வந்து கிடந்தது ஒத்துஅணங்கு நுண் துகில் மேல் அசைந்தாள் அரோநிணம் கொள் வைந்நுதி வேல் நெடும் கண்ணினாள்.345. வைகிற்று எம் அனை வாழிய போழ்து எனக்கையினால் அடி தைவரக் கண் மலர்ந்துஐயவோ என்று எழுந்தனள் ஆய் மதிமொய் கொள் பூமி முளைப்பது போலவே.346. தூவி அம்சிறை அன்னமும் தோகையும்மேவி மென் புனம் மான் இனம் ஆதியாநாவி நாறு எழில் மேனியைக் கண்டு கண்டுஆவித்து ஆற்று கிலாது அழுதிட்டவே.347. கொம்மை வெம்முலைப் போதின் கொடி அனாள்உம்மை நின்றது ஓர் ஊழ்வினை உண்மையால்இம்மை இவ் இடர் உற்றனள் எய்தினாள்செம்மை மாதவர் செய் தவப் பள்ளியே.348. வாள் உறை நெடுங் கணாளைமாதவ மகளிர் எல்லாம்தோள் உறப் புல்லுவார் போல்தொக்கு எதிர் கொண்டு புக்குத்தாள் உறு வருத்தம் ஓம்பித்தவ நெறிப் படுக்கல் உற்றுநாள் உறத் திங்கள் ஊரநல் அணி நீக்குகின்றார்.349. திருந்து தகரச் செந் நெருப்பில்தேன் தோய்த்து அமிர்தம் கொள உயிர்க்கும்கருங் காழ் அகிலின் நறும் புகையில்கழுமிக் கோதை கண் படுக்கும்திருந்து நானக் குழல் புலம்பத்தேனும் வண்டும் இசைப் புலம்பஅரும் பொன் மாலை அலங்கலோடுஆரம் புலம்ப அகற்றினாள்.350. திங்கள் உகிரில் சொலிப்பது போல்திலகம் விரலில் தான் நீக்கிப்பைம்பொன் மகர குண்டலமும்பாவை கழுத்தின் அணிகலமும்வெம் கண் வேந்தற்கு அமிர்து ஆகிவேல் கண் பாவை பகை ஆயஅம் கண் முலையின் அணி முத்தும்அரும்பொன் பூணும் அகற்றினாள்.351. பஞ்சி அனைய வேய் மென் தோள்பகுவாய் மகரம் கான்றிட்டதுஞ்சாக் கதிர் கொள் துணை முத்தம்தொழுதேன் உம்மை எனத் துறந்துஅஞ்சி வருத்து நுசுப்பினாள்வளை கை உடைத்து மணிக் காந்தள்அஞ்சச் சிவந்த மெல் விரல் சூழ்அரும் பொன் ஆழி அகற்றினாள்.352. பூப் பெய் செம் பொன் கோடிகமும்பொன் ஆர் ஆல வட்டமும்ஆக்கும் மணி செய் தேர்த்தட்டும்அரவின் பையும் அடும் அல்குல்வீக்கி மின்னும் கலை எல்லாம்வேந்தன் போகி அரம்பையரைநோக்கி நும்மை நோக்கான் நீர்நோவது ஒழிமின் எனத் துறந்தாள்.353. பிடிக்கை போலும் திரள் குறங்கின்அணியும் நீக்கிப் பிணை அன்னாள்அடிக் கிண்கிணியும் அம் சிலம்பும்விரல் மோதிரத்தோடு அகற்றிய பின்கொடிப் பூத்து உதிர்ந்த தோற்றம் போல்கொள்ளத் தோன்றி அணங்கு அலறஉடுத்தாள் கல் தோய் நுண் கலிங்கம்உரவோன் சிறுவன் உயர்க எனவே.354. பால் உடை அமிர்தம் பைம் பொன்கலத்திடைப் பாவை அன்னநூல் அடு நுசுப்பின் நல்லார்ஏந்தவும் நேர்ந்து நோக்காச்சேல் அடு கண்ணி காந்தள்திருமணித் துடுப்பு முன் கைவால் அடகு அருளிச் செய்யவனத்து உறை தெய்வம் ஆனாள்.355. மெல் விரல் மெலியக் கொய்தகுள நெல்லும் விளைந்த ஆம்பல்அல்லியும் உணங்கும் முன்றில்அணில் விளித்து இரிய ஆமான்புல்லிய குழவித் திங்கள்பொழி கதிர்க் குப்பை போலும்நல் எழில் கவரி ஊட்டநம்பியை நினைக்கும் அன்றே.356. பெண்மை நாண் வனப்புச் சாயல்பெரு மட மாது பேசின்ஒண்மையின் ஒருங்கு கூடிஉருவு கொண்ட அனைய நங்கைநண்ணிய நுங்கட்கு எல்லாம்அடைக்கலம் என்று நாடும்கண்ணிய குலனும் தெய்வம்கரந்து உரைத்து எழுந்தது அன்றே.357. உறுதி சூழ்ந்து அவண் ஓடலின் ஆய் இடைமறுவில் வெண் குடை மன்னவன் காதல் அம்சிறுவன் தன்மையைச் சேர்ந்து அறிந்து இவ்வழிக்குறுக வம் எனக் கூனியைப் போக்கினாள்.358. நெஞ்சின் ஒத்து இனியாளை என் நீர்மையால்வஞ்சித்தேன் என வஞ்சி அம் கொம்பு அனாள்பஞ்சி மெல்லடி பல் கலன் ஆர்ப்பச் சென்றுஇஞ்சி மா நகர்த் தன் இடம் எய்தினாள்.359. தானும் தன் உணர்வில் தளர்ந்து ஆற்றவும்மானின் நோக்கி வரும் வழி நோக்கி நின்றுஆனியம் பல ஆசையில் செல்லுமேதேன் இயம்பும் ஓர் தேம் பொழில் பள்ளியே.360. மட்டு அவிழ் கோதை வாள் அன உண்கண் மயில் அன்னாள்கட்டு அழல் எவ்வம் கைம் மிக நீக்கிக் களிகூரவிட்டு அகல்வு ஆற்றா வேட்கையின் ஓடும் பொழுது இப் பால்பட்டதை எல்லாம் பல்லவர் கேட்கப் பகர்கு உற்றேன்.361. கூற்றம் அஞ்சும் கொல் நுனை எஃகின் இளையானும்மாற்றம் அஞ்சும் மன்னிய கற்பின் மடவாளும்போற்றித் தந்த புண்ணியர் கூடிப் புகழோனைச்சீற்றத் துப்பின் சீவகன் என்றே பெயர் இட்டார்.362. மேகம் ஈன்ற மின் அனையாள் தன் மிளிர் பைம் பூண்ஆகம் ஈன்ற அம் முலை இன் பால் அமிர்து ஏந்தப்போகம் ஈன்ற புண்ணியன் எய்த கணையே போல்மாகம் ஈன்ற மா மதி அன்னான் வளர்கின்றான்.363. அம் பொன் கொம்பின் ஆயிழை ஐவர் நலன் ஓம்பப்பைம் பொன் பூமிப் பல் கதிர் முத்தார் சகடமும்செம் பொன் தேரும் வேழமும் ஊர்ந்து நிதி சிந்திநம்பன் செல்லும் நாளினும் நாளும் நலம் மிக்கே.364. பல் பூம் பொய்கைத் தாமரை போன்றும் பனி வானத்துஎல்லார் கண்ணும் இன்பு உற ஊரும் மதி போன்றும்கொல்லும் சிங்கக் குட்டியும் போன்று இவ் உலகு ஏத்தச்செல்லும் மன்னோ சீவகன் தெய்வப் பகை வென்றே.365. மணியும் முத்தும் மாசு அறு பொன்னும் பவளமும்அணியும் பெய்யும் மாரியின் ஏற்பார்க்கு அவை நல்கிக்கணிதம் இல்லாக் கற்பகம் கந்துக் கடன் ஒத்தான்இணை வேல் உண்கண் சுநந்தையும் இன்பக் கொடி ஒத்தாள்.366. சாதிப் பைம் பொன் தன் ஒளி வௌவித் தகை குன்றாநீதிச் செல்வம் மேல் மேல் நீந்தி நிறைவு எய்திப்போதிச் செல்வம் பூண்டவர் ஏத்தும் பொலிவினால்ஆதி காலத்து அந்தணன் காதல் மகன் ஒத்தான்.367. நனம் தலை உலகில் மிக்க நல் நுதல் மகளிர் தங்கள்மனம் தளை பரிய நின்ற மதலை மை ஆடுக என்றேபொன் அம் கொடி இறைஞ்சி நின்று பூமகள் புலம்பி வைகஅனங்கனுக்கு அவலம் செய்யும் அண்ணல் நற்றாய் உரைத்தாள்.368. முழவு எனத் திரண்ட திண் தோள்மூரி வெம் சிலையினானும்அழல் எனக் கனலும் வாள் கண்அவ் வளைத் தோளி னாளும்மழலை யாழ் மருட்டும் தீம் சொல்மதலையை மயில் அம் சாயல்குழை முக ஞானம் என்னும்குமரியைப் புணர்க்கல் உற்றார்.369. அரும் பொனும் மணியும் முத்தும்காணமும் குறுணி ஆகப்பரந்து எலாப் பிரப்பும் வைத்துப்பைம் பொன் செய் தவிசின் உச்சிஇருந்து பொன் ஓலை செம் பொன்ஊசியால் எழுதி ஏற்பத்திருந்து பொன் கண்ணியாற்குச்செல்வியைச் சேர்த்தினாரே.370. நாமகள் நலத்தை எல்லாம்நயந்து உடன் பருகி நல் நூல்ஏ முதல் ஆய எல்லாப்படைக் கலத் தொழிலும் முற்றிக்காமனும் கனிய வைத்தபுலம் கரை கண்டு கண் ஆர்பூ மகள் பொலிந்த மார்பன்புவிமிசைத் திலம் ஒத்தான்.371. மின் தெளித்து எழுதி அன்னவிளங்கும் நுண் நுசுப்பின் நல்லார்பொன் தெளித்து எழுதி அன்னபூம் புறப் பசலை மூழ்கிக்குன்று ஒளித்து ஒழிய நின்றகுங்குமத் தோளினாற்குக்கன்று ஒளித்து அகல வைத்தகறவையில் கனிந்து நின்றார்.372. விலை பகர்ந்து அல்குல் விற்கும்வேலினும் வெய்ய கண்ணார்முலை முகந்து இளையர் மார்பம்முரிவிலர் எழுதி வாழும்கலை இகந்து இனிய சொல்லார்கங்குலும் பகலும் எல்லாம்சிலை இகந்து உயர்ந்த திண் தோள்சீவகற்கு அரற்றி ஆற்றார்.373. வான் சுவை அமிர்த வெள்ளம்வந்து இவண் தொக்கது என்னத்தான் சுவைக் கொண்டது எல்லாம்தணப்பு அறக் கொடுத்த பின்றைத்தேன் சுவைத்து அரற்றும் பைந்தார்ச்சீவக குமரன் என்றஊன் சுவைத்து ஒளிறும் வேலாற்குஉறுதி ஒன்று உரைக்கல் உற்றான்.374. நூல் நெறி வகையின் நோக்கிநுண்ணிதின் நுழைந்து தீமைப்பால் நெறி பலவும் நீக்கிப்பருதி அம் கடவுள் அன்னகோன் நெறி தழுவி நின்றகுணத்தொடு புணரின் மாதோநால் நெறி வகையில் நின்றநல் உயிர்க்கு அமிர்தம் என்றான்.375. அறிவினால் பெரிய நீரார்அருவினை கழிய நின்றநெறியினைக் குறுகி இன்பநிறை கடல் அகத்து நின்றார்பொறி எனும் பெயர ஐ வாய்ப்பொங்கு அழல் அரவின் கண்ணேவெறி புலம் கன்றி நின்றார்வேதனைக் கடலுள் நின்றார்.376. கூற்றுவன் கொடியன் ஆகிக்கொலைத் தொழில் கருவி சூழ்ந்துமாற்ற அரும் வலையை வைத்தான்வைத்ததை அறிந்து நாமும்நோற்று அவன் வலையை நீங்கிநுகர்ச்சியில் உலகம் நோக்கிஆற்று உறப் போதல் தேற்றாம்அளியமோ? பெரியமே காண்.377. பேர் அஞர் இடும்பை எல்லாம்பிளந்திடும் பிறப்பு நீக்கும்ஆர் அமிர்து அரிதில் பெற்றாம்அதன் பயன் கோடல் தேற்றாம்ஓரும் ஐம் பொறியும் ஓம்பிஉள பகல் கழிந்த பின்றைக்கூர் எரி கவரும் போழ்தில்கூடுமோ குறித்த எல்லாம்.378. தழங்கு குரல் முரசின் சாற்றித்தத்துவம் தழுவல் வேண்டிச்செழுங் களியாளர் முன்னர்இருள் அறச் செப்பினாலும்முழங்கு அழல் நரகின் மூழ்கும்முயற்சியர் ஆகி நின்றகொழுங் களி உணர்வினாரைக்குணவதம் கொளுத்தல் ஆமோ.379. பவழவாய்ச் செறுவு தன்னுள்நித்திலம் பயில வித்திக்குழவிநாறு எழுந்து காளைக்கொழும் கதிர் ஈன்று பின்னாக்கிழவு தான் விளைக்கும் பைங் கூழ்கேட்டிரேல் பிணி செய் பன்மாஉழவிர்காள்! மேயும் சீலவேலி உய்த்திடுமின் என்றான்.380. சூழ் கதிர் மதியம் அன்னசுடர் மணிப் பூணினானும்வீழ் தரு கதியின் நீங்கிவிளங்கு பொன் உலகத்து உய்க்கும்ஊழ் வினை துரத்தலானும்உணர்வு சென்று எறித்தலானும்ஆழ் கடல் புணையின் அன்னஅறிவரன் சரண் அடைந்தான்.381. காட்சி நல் நிலையில் ஞானக்கதிர் மணிக் கதவு சேர்த்திப்பூட்சி சால் ஒழுக்கம் என்னும்வயிரத் தாழ் கொளுவிப் பொல்லாமாட்சியில் கதிகள் எல்லாம்அடைத்த பின் வரம்பு இல் இன்பத்துஆட்சியில் உலகம் ஏறத்திறந்தனன் அலர்ந்த தாரான்.382. நல் அறத்து இறைவன் ஆகிநால்வகைச் சரணம் எய்தித்தொல் அறக் கிழமை பூண்டதொடு கழல் காலினாற்குப்புல் அற நெறிக் கண் நின்று383. எரி முயங்கு இலங்கு வை வேல்இளையவர் குழாத்தின் நீங்கித்திரு முயங்கு அலங்கல் மார்பின்சீவகன் கொண்டு வேறாவிரி மலர்க் கண்ணி கட்டிவிழைதக வேய்ந்த போலும்தெரி மலர்க் காவு சேர்ந்துபிறப்பினைத் தெருட்டல் உற்றான்.384. பூவையும் கிளியும் மன்னர்ஒற்றென புணர்க்கும் சாதியாவையும் இன்மை ஆராய்ந்துஅம் தளிர்ப் பிண்டி நீழல்பூ இயல் தவிசின் உச்சிப்பொலிவினோடு இருந்த போழ்தில்ஏ இயல் சிலையினானைஇப் பொருள் கேண்மோ என்றான்.385. வையகம் உடைய மன்னன்சச்சந்தன் அவற்குத் தேவிபை விரி பசும்பொன் அல்குல்பைந்தொடி விசையை என்பாள்செய் கழல் மன்னன் தேர்ந்துதேவியைப் பொறியில் போக்கிமையல் கொள் நெஞ்சில் கல்லாமந்திரி விழுங்கப் பட்டான்.386. புலம்பொடு தேவி போகிப்புகற்கு அருங் காடு நண்ணிவலம்புரி உலகம் விற்கும்மா மணி ஈன்றது என்னஇலங்கு இழை சிறுவன் தன்னைப்பயந்து பூந் தவிசின் உச்சிநலம் புரி நங்கை வைத்துநல் அறம் காக்க என்றாள்.387. வானத்தின் வழுக்கித் திங்கள்கொழுந்து மீன் குழாங்கள் சூழக்கானத்தில் கிடந்ததே போல்கடல் அகம் உடைய நம்பிதானத்து மணியும் தானும்இரட்டுறத் தோன்றி னானேஊனத்தில் தீர்ந்த சீர்த்திஉத்திரட்டாதி யானே.388. அருந் தவன் முந்து கூறஅலங்கல் வேல் நாய்கன் சென்றுபொருந்துபு சிறுவன் கொண்டுபொலிவொடு புகன்று போகத்திருந்திய நம்பி ஆரத்தும்மினன் தெய்வம் வாழ்த்திற்றுஅரும் பொனாய் கேண்மோ என்றான்அலை கடல் விருப்பில் கொண்டாள்.389. கரியவன் கன்னற்கு அன்றுபிறப்பினைத் தேற்றி ஆங்கு அப்பெரியவன் யாவன் என்னநீ எனப் பேசலோடும்சொரி மலர்த் தாரும் பூணும்ஆரமும் குழையும் சோரத்திரு மலர்க் கண்ணி சிந்தத்தெருமந்து மயங்கி வீழ்ந்தான்.390. கற்பகம் கலங்கி வீழ்ந்தவண்ணம் போல் காளை வீழச்சொல் பகர் புலவன் வல்லேதோன்றலைச் சார்ந்து புல்லிநல் பல குழீஇய தம்மால்நவை அறத் தேற்றத் தேறிக்கல் புனை திணி திண் தோளான்கவலை நீர்க் கடலுள் பட்டான்.391. இனையை நீ ஆயது எல்லாம்எம்மனோர் செய்த பாவம்நினையல் நீ நம்பி என்றுநெடுங் கண் நீர் துடைத்து நீவிப்புனை இழை மகளிர் போலப்புலம்பல் நின் பகைவன் நின்றான்நினைவு எலாம் நீங்குக என்னநெடும் தகை தேறினானே.392. மலை பக இடிக்கும் சிங்கம்மடங்கலின் மூழங்கி மாநீர்அலை கடல் திரையின் சீறிஅவன் உயிர் பருகல் உற்றுச்சிலையொடு பகழி ஏந்திக்கூற்று எனச் சிவந்து தோன்றும்இலை உடைக் கண்ணியானைஇன்னணம் விலக்கினானே.393. வேண்டுவல் நம்பி யான் ஓர்விழுப் பொருள் என்று சொல்லஆண் தகைக் குரவீர் கொண்மின்யாது நீர் கருதிற்று என்னயாண்டு நேர் எல்லை ஆகஅவன் திறத்து அழற்சி இன்மைவேண்டுவல் என்று சொன்னான்வில் வலான் அதனை நேர்ந்தான்.394. வெவ் வினை வெகுண்டு சாரா விழுநிதி அமிர்தம் இன்னீர்கவ்விய எஃகின் நின்ற கயக்கமில் நிலைமை நோக்கிஅவ்வியம் அகன்று பொங்கும் அழல் படு வெகுளி நீக்கிஇவ் இயல் ஒருவற்கு உற்றது இற்றெனக் கிளக்கல் உற்றான்.395. வான் உறை வெள்ளி வெற்பின்வாரணவாசி மன்னன்ஊன் உறை பருதி வெள் வேல்உலோகமா பாலன் என்பான்தேன் உறை திருந்து கண்ணிச்சிறுவனுக்கு அரசு நாட்டிப்பால் நிறக் குருகின் ஆய்ந்துபண்ணவர் படிவம் கொண்டான்.396. வெம் சினம் குறைந்து நீங்கவிழுத் தவம் தொடங்கி நோற்கும்வஞ்சம் இல் கொள்கையாற்குப்பாவம் வந்து அடைந்தது ஆகக்குஞ்சரம் முழங்கு தீயில்கொள்கையின் மெலிந்து இம் மூதூர்மஞ்சு தோய் குன்றம் அன்னமாட வீட்டு அகம் புகுந்தான்.397. உரை விளையாமை மைந்தன்கேட்கிய உவந்து நோக்கிவரை விளையாடு மார்பன்யார் அவன் வாழி என்னவிரை விளையாடும் தாரோய்யான் என விரும்பித் தீம்பால்திரை விளை அமிர்தம் அன்னகட்டுரை செல்க என்றான்.398. பூத் தின்று புகன்று சேதாப்புணர் முலை பொழிந்த தீம்பால்நீத்து அறச் செல்ல வேவித்துஅட்ட இன் அமிர்தம் உண்பான்பாத்தரும் பசும் பொன் தாலம்பரப்பிய பைம் பொன் பூமிஏத்த அரும் தவிசின் நம்பிதோழரொடு ஏறினானே.399. புடை இரு குழையும் மின்னப்பூந்துகில் செறிந்த அல்குல்நடை அறி மகளிர் ஏந்தநல் அமிர்து உண்ணும் போழ்தின்இடை கழி நின்ற என்னைநோக்கிப் போந்து ஏறுக என்றான்கடல் கெழு பருதி அன்னபொன் கலத்து எனக்கும் இட்டார்.400. கை கவி நறு நெய் பெய்துகன்னல் அம் குடங்கள் கூட்டிப்பெய் பெய் என்று உரைப்ப யானும்பெருங் கடல் வெள்ளிக் குன்றம்பெய்து தூர்க்கின்ற வண்ணம்விலாப் புடை பெரிதும் வீங்கஐயன் அது அருளினால் யான்அந்தணர் தொழிலன் ஆனேன்.401. சுரும்பு உடை அலங்கல் மாலைச்சுநந்தையும் துணைவன் தானும்விரும்பினர் எதிர் கொண்டு ஓம்பவேழ வெந்தீயின் நீங்கிஇருந்தனன் ஏம முந் நீர்எறி சுறவு உயர்த்த தோன்றல்கரும்பு உடைக் காளை அன்னகாளை நின் வலைப் பட்டு என்றான்.402. நிலம் பொறுக்கலாத செம் பொன்நீள் நிதி நுந்தை இல்லம்நலம் பொறுக்கலாத பிண்டிநான் முகன் தமர்கட்கு எல்லாம்உலம் பொறுக்கலாத தோளாய்ஆதலால் ஊடு புக்கேன்கலம் பொறுக்கலாத சாயல்அவர் உழை நின்னைக் கண்டேன்.403. ஐயனைக் கண்ணில் காணயானைத்தீ அதகம் கண்டபை அணல் நாகம் போலவட்க யான் பெரிதும் உட்கித்தெய்வம் கொல் என்று தேர்வேற்குஅமிர்து உலாய் நிமிர்ந்ததே போல்மொய் குரல் முரசம் நாணும்தழங்கு குரல் முழங்கக் கேட்டேன்.404. கோட்டு இளந் திங்கள் சூழ்ந்துகுலவிய திருவில் போலமோட்டு ஒளி முத்தம் சூழ்ந்துமுருகு கொப்பளிக்கும் தாரோய்கேட்டு அளப் பரிய சொல்லும்கிளர் ஒளி வனப்பும் நின்னைச்சேட்டு இளஞ் சிங்கம் அன்னாய்சாதகம் செய்த என்றான்.405. கோள் இயங்கு உழுவை அன்னகொடும் சிலை உழவன் கேட்டேதாள் இயல் தவங்கள் தாயாத்தந்தை நீ ஆகி என்னைவாள் இயங்கு உருவப் பூணோய்படைத்தனை வாழி என்னமீளி அம் களிறு அனாய் யான்மெய்ந்நெறி நிற்பல் என்றான்.406. மறு அற மனையின் நீங்கிமா தவம் செய்வல் என்றால்பிற அறம் அல்ல பேசார்பேர் அறிவு உடைய நீரார்துறவறம் புணர்க என்றேதோன்றல் தாள் தொழுது நின்றான்நறவு அற மலர்ந்த கண்ணிநல் மணி வண்ணன் அன்னான்.407. கை வரை அன்றி நில்லாக்கடுஞ் சின மடங்கல் அன்னான்தெவ்வரைச் செகுக்கும் நீதிமனத்து அகத்து எழுதிச் செம்பொன்பை விரி அல்குலாட்கும்படுகடல் நிதியின் வைகும்மை வரை மார்பினாற்கும்மனம் உறத் தேற்றி இட்டான்.408. அழல் உறு வெண்ணெய் போலஅகம் குழைந்து உருகி ஆற்றாள்குழல் உறு கிளவி சோர்ந்துகுமரனைத் தமியன் ஆகநிழல் உறு மதியம் அன்னாய்நீத்தியோ எனவும் நில்லான்பழவினை பரிய நோற்பான்விஞ்சையர் வேந்தன் சென்றான்.