இலம்பகம் 2 · சீவக சிந்தாமணி · திருத்தக்க தேவர்
கோவிந்தையார் இலம்பகம்
சீவக சிந்தாமணி 2 · கோவிந்தையார் இலம்பகம்
409. ஆர்வ வேரரிந் தச்ச ணந்திபோய்வீரன் றாணிழல் விளங்க நோற்றபின்மாரி மொக்குளின் மாய்ந்து விண்டொழச்சோர்வில் கொள்கையான் றோற்றம் நீங்கினான்.410. நம்ப னித்தலை நாக நன்னகர்ப்பைம்பொ னோடைசூழ் பரும யானையுஞ்செம்பொ னீள்கொடித் தேரும் வாசியும்வேம்ப வூர்ந்துலாம் வேனி லானினே.411. கலையின தகலமுங் காட்சிக் கின்பமுஞ்சிலையின தகலமும் வீணைச் செல்வமுமலையினி னகலிய மார்ப னல்லதிவ்வுலகினி னிலையென வொருவ னாயினான்.412. நாம வென்றிவே னகைகொள் மார்பனைக்காம னேயெனக் கன்னி மங்கையர்தாம ரைக்கணாற் பருகத் தாழ்ந்துலாங்கோம கன்றிறத் துற்ற கூறுவாம்.413. சில்லம் போதின்மேற் றிரைந்து தேனுலாமுல்லை காரெனப் பூப்ப மொய்ந்நிரைபுல்லு கன்றுளிப் பொழிந்து பால்படுங்கல்லென் சும்மையோர் கடலின் மிக்கதே.414. மிக்க நாளினான் வேழ மும்மதமுக்க தேனினோ டூறி வார்சுனையொக்க வாய்நிறைந் தொழுகு குன்றின்மேன்மக்க ளீண்டினார் மடங்கன் மொய்ம்பினார்.415. மன்ன வன்னிரை வந்து நண்ணுறுமின்ன நாளினாற் கோடு நாமெனச்சொன்ன வாயுளே யொருவன் புட்குரன்முன்னங் கூறினான் முழுது ணர்வினான்.416. அடைது நாநிரை யடைந்த காலையேகுடையும் பிச்சமு மொழியக் கோன்படையுடையும் பின்னரே யொருவன் தேரினாலுடைதுஞ் சுடுவிற்றே னுடைந்த வண்ணமே.417. என்று கூறலு மேழை வேட்டுவீரொன்று தேரினா லொருவன் கூற்றமேயென்று கூறினு மொருவ னென்செயுமின்று கோடுநா மெழுகென் றேகினார்.418. வண்டு மூசறா நறவ மார்ந்தவர்தொண்ட கப்பறை துடியொ டார்த்தெழவிண்டு தெய்வதம் வணங்கி வெல்கெனமண்டி னார்நிரை மணந்த காலையே.419. பூத்த கோங்குபோற் பொன்சு மந்துளாராய்த்தி யர்நலக் காசெ றூணனான்கோத்த நித்திலக் கோதை மார்பினான்வாய்த்த வந்நிரை வள்ளு வன்சொனான்.420. பிள்ளை யுள்புகுந் தழித்த தாதலாலௌ்ளன் மின்னிரை யின்று நீரெனவெள்ளி வள்ளியின் விளங்கு தோணலார்முள்கு மாயரும் மொய்ம்பொ டேகினார்.421. காய மீனெனக் கலந்து கானிரைமேய வெந்தொழில் வேட ரார்த்துடன்பாய மாரிபோற் பகழி சிந்தினார்ஆயர் மத்தெறி தயிரி னாயினார்.422. குழலு நவியமு மொழியக் கோவலர்கழலக் காடுபோய்க் கன்று தாம்பரிந்துழலை பாய்ந்துலா முன்றிற் பள்ளியுண்மழலைத் தீஞ்சொலார் மறுக வாய்விட்டார்.423. மத்தம் புல்லிய கயிற்றின் மற்றவரத்த லைவிடி னித்த லைவிடாருய்த்த னரென வுடைத யிர்ப்புளிமொய்த்த தோணலார் முழுதும் ஈண்டினார்.424. வலைப்படு மானென மஞ்ஞை யெனத்தம்முலைப்படு முத்தொடு மொய்குழல் வேய்ந்ததலைப்படு தண்மலர் மாலை பிணங்கவலைத்த வயிற்றின ராயழு திட்டார்.425. எம்மனை மாரினி யெங்ஙனம் வாழ்குவிர்நும்மனை மார்களை நோவ வதுக்கிவெம்முனை வேட்டுவ ருய்த்தன ரோவெனத்தம்மனைக் கன்றொடு தாம்புலம் புற்றார்.426. பாறை படுதயிர் பாலோடு நெய்பொருதாறு படப்பள்ளி யாகுல மாகமாறு படமலைந் தாய்ப்படை நெக்கதுசேறு படமலர் சிந்த விரைந்தே.427. புறவணி பூவிரி புன்புலம் போகிநறவணி தாமரை நாட்டக நீந்திச்சுறவணி சூழ்கிடங் காரெயின் மூதூரிறையணிக் கேட்கவுய்த் திட்டனர் பூசல்428. கொடுமர வெயின ரீண்டிக் கோட்டிமி லேறு சூழ்ந்தபடுமணி நிரையை வாரிப் பைந்துகி லருவி நெற்றிநெடுமலை யத்தஞ் சென்றா ரென்றுநெய் பொதிந்த பித்தைவடிமல ராயர் பூசல் வளநகர் பரப்பி னாரே.429. காசின் மாமணிச் சாமரை கன்னியர்வீச மாமக ரக்குழை வில்லிடவாச வான்கழு நீர்பிடித் தாங்கரியாச னத்திருந் தான்டன் மொய்ம்பினான்.430. கொண்ட வாளொடுங் கோலொடுங் கூப்புபுசண்ட மன்னனைத் தாடொழு தாயிடையுண்டொர் பூசலென் றாற்குரை யாயெனக்கொண்ட னர்நிரை போற்றெனக் கூறினான்.431. செங்கட் புன்மயிர்த் தோறிரை செம்முகவெங்க ணோக்கிற்குப் பாய மிலேச்சனைச்செங்கட் டீவிழி யாத்தெழித் தான்கையுளங்கட் போது பிசைந்தடு கூற்றனான்.432. கூற்றி னிடிக்குங் கொலைவேலவன் கோவ லர்வாயமாற்ற முணர்ந்து மறங்கூர்கடற் றானை நோக்கிக்காற்றின் விரைந்து தொறுமீட்கெனக் காவல் மன்னனேற்றை யரிமா னிடிபோல வியம்பி னானே.433. கார்விளை மேக மன்ன கவுளழி கடாத்த வேழம்போர்விளை யிவுளித் திண்டோ் புனைமயிர்ப் புரவி காலாள்வார்விளை முரசம் விம்ம வானுலாப் போந்த தேபோனீர்டிவிளை சுரிசங் கார்ப்ப நிலநெளி பரந்த வன்றே.434. காலகம் புடைப்ப முந்நீர்க் கடல்கிளர்ந் தெழுந்த தேபோல்வேலக மிடைந்த தானை வெஞ்சின வெயினர் தாக்கவால்வளை யலற வாய்விட் டிரலையுந் துடியு மார்ப்பப்பால்வளைந் திரவு செற்றுப் பகலொடு மலைவ தொத்தார்.435. விற்பழுத் துமிழ்ந்த வெய்ய வெந்நுனைப் பகழி மைந்தர்மற்பழுத் தகன்ற மார்பத் திடங்கொண்டு வைகச் செந்நாச்சொற்பழுத் தவர்க்கு மாண்மை சொல்லலாந் தன்மைத் தன்றிக்கொற்பழுத் தெரியும் வேலார் கொடுஞ்சிலை குழைவித் தாரே.436. வாட்படை யனுங்க வேடர் மாற்றவண்சிலை வளைய வாங்கிக்கோட்புலி யினத்தின் மொய்த்தார் கொதிநுனைப் பகழி தம்மால்வீட்டினார் மைந்தர் தம்மை விளிந்தமா கவிழ்ந்த திண்டோ்பாட்டரும் பகடு வீழ்ந்த பனிவரை குனிவ தொத்தே.437. வென்றிநாங் கோடு மின்னே வெள்ளிடைப் படுத்தென் றெண்ணியொன்றியுள் வாங்கு கென்ன வொலிகட லுடைந்த தேபோற்பொன்றவழ் களிறு பாய்மா புனைமயிற் குஞ்சி பிச்சம்மின்றவழ் கொடியொ டிட்டு வேற்படை யுடைந்த வன்றே.438. பல்லினாற் சுகிர்ந்த நாரிற் பனிமலர் பயிலப் பெய்தமுல்லையங் கண்ணி சிந்தக் கால்விசை முறுக்கி யாயரொல்லென வொலிப்ப வோடிப் படையுடைந் திட்ட தென்னவல்லலுற் றழுங்கி நெஞ்சிற் கட்டியங் கார னாழ்ந்தான்.439. வம்புகொண் டிருந்த மாதர் வனமுலை மாலைத் தேன்சோர்கொம்புகொண் டன்ன நல்லார் கொழுங்கயற் றடங்கண் போலுமம்புகொண் டரசர் மீண்டா ராக்கொண்டு மறவர் போனார்செம்புகொண் டன்ன விஞ்சித் திருநகர்ச் செல்வ வென்றார்.440. மன்னிரை பெயர்த்து மைந்தர் வந்தனர் கொள்க வாட்கட்பொன்னிழை சுடரு மேனிப் பூங்கொடி யனைய பொற்பிற்கன்னியைத் தருது மென்று கடிமுர சியம்பக் கொட்டிநன்னகர் வீதி தோறு நந்தகோ னறைவித் தானே.441. வெதிர்ங்குதைச் சாபங் கான்ற வெந்நுனைப் பகழி மூழ்கவுதிர்ந்தது சேனை யீட்டங் கூற்றொடு பொருது கொள்ளுங்கருந்தடங் கண்ணி யன்றிக் காயமா றாக வேகுமரும்பெற லவளு மாகென் றாடவர் தொழுது விட்டார்.442. கார்விரி மின்ன னார்மேற் காமுகர் நெஞ்சி னோடுந்தோ்பரி கடாவித் தேந்தார்ச் சீவக னருளிற் போகித்தார்பொலி புரவி வட்டந் தான்புகக் காட்டு கின்றாற்கூர்பரி வுற்ற தெல்லா மொருமகன் உணர்த் தினானே.443. தன்பான் மனையா ளயலான்றலைக் கண்டு பின்னுமின்பா லடிசிற் கிவர்கின்றகைப் பேடி போலாநன்பால் பசுவே துறந்தார்பெண்டிர் பாலர் பார்ப்பாரென்பாரை யோம்பே னெனின்யானவனாக வென்றான்.444. போர்ப்பண் ணமைத்து நுகம்பூட்டிப் புரவி பண்ணித்தோ்ப்பண் ணமைத்துச் சிலைகோலிப் பகழி யாய்ந்துகார்க் கொண்மு மின்னி னிமிர்ந்தான்கலி மான்கு ளம்பிற்பார்க்கண் ணெழுந்த துகளாற் பகன் மாய்ந்த தன்றே.445. இழுதொன்று வாட்க ணிளையாரிளை யார்க ணோக்கிற்பழுதின்றி மூழ்கும் பகழித்தொழில் வல்ல காளைமுழுதென்று திண்டோ் முகஞ்செய்தவன் றன்னொ டேற்கும்பொழுதன்று போது மெனப்புண்மொழிந் தான்மொ ழிந்தான்.446. மோட்டும் முதுநீர் முதலைக்கு வலிய துண்டேல்காட்டுண் ணமக்கு வலியாரையுங் காண்டும் நாமென்றேட்டைப் பசியி னிரைகவ்விய நாக மேபோல்வேட்டந் நிரையை விடலின்றி விரைந்த தன்றே.447. கடற்படை யனுங்க வென்ற கானவ ரென்னுங் கூற்றத்திடைப்படா தோடிப் போமி னுய்யவென் றிரலை வாய்வைத்தெடுத்தனர் விளியுஞ் சங்கும் வீளையும் பறையுங் கோடுங்கடத்திடை முழங்கக் காருங் கடலுமொத் தெழுந்த தன்றே.448. கைவிசை முறுக்கி வீசுங் கொள்ளியுங் கறங்கு மேய்ப்பச்செய்கழற் குருசில் திண்டோ் விசையொடு திசைக ளெல்லாமையென வளைப்ப வீர ரார்த்தன ரவரு மார்த்தார்மொய்யமர் நாட்செய் தையன் முதல்விளை யாடி னானே.449. ஆழியா னூர்திப் புள்ளி னஞ்சிற கொலியி னாகம்மாழ்கிப்பை யவிந்த வண்ணம் வள்ளறோ் முழக்கி னானுஞ்சூழ்துகண் மயக்கத் தானும் புளி ஞருள் சுருங்கிச் சேக்கைக்கோழிபோற் குறைந்து நெஞ்சி னறமென மறமும் விட்டார்.450. புள்ளொன்றே சொல்லு மென்றிப்புன்றலை வேடன் பொய்த்தான்வெள்ளந்தோ் வளைந்த நம்மைவென்றியீங் கரிது வெய்தாவுள்ளம்போற் போது நாமோரெடுப்பெடுத் துய்ய வென்னாவள்ளன்மே லப்பு மாரியார்ப்பொடு சிதறி னாரே.451. மால்வரைத் தொடுத்து வீழ்ந்தமணிநிற மாரி தன்னைக்காலிரைத் தெழுந்து பாறக்கல்லெனப் புடைத்த தேபோன்மேனிரைத் தெழுந்த வேடர்வெந்நுனை யப்பு மாரிகோனிரைத் துமிழும் வில்லாற்கோமகன் விலக்கி னானே.452. கானவ ரிரிய வில்வாய்க்கடுங்கணை தொடுத்த லோடுமானிரை பெயர்ந்த வாயரார்த்தன ரணிசெய் திண்டோடானொன்று முடங்கிற் றொன்றுநிமிர்ந்தது சரம்பெய் மாரிபோனின்ற வென்ப மற்றப்பொருவரு சிலையி னார்க்கே.453. ஐந்நூறு நூறு தலையிட்ட வாறா யிரவர்மெய்ந்நூறு நூறு நுதிவெங்கணை தூவி வேடர்கைந்நூறு வில்லுங் கணையும்மறுத் தான்க ணத்தின்மைந்நூறு வேற்கண் மடவார்மனம் போல மாய்ந்தார்.454. வாள்வாயு மின்றி வடிவெங்கணை வாயு மின்றிக்கோள்வாய் மதிய நெடியான்விடுத்தாங்கு மைந்தன்றோள்வாய் சிலையின் னொலியாற்றொறு மீட்டு மீள்வானாள்வாய் நிறைந்த நகைவெண்மதி செல்வ தொத்தான்.455. ஆளற்ற மின்றி யலர்தாரவன் றோழ ரோடுங்கோளுற்ற கோவ னிரைமீட்டன னென்று கூறவாளுற்ற புண்ணுள் வடிவேலெறிந் திற்ற தேபோனாளுற் றுலந்தான் வெகுண்டானக ரார்த்த தன்றே.456. இரவிதோய் கொடிகொண் மாடத் திடுபுகை தவழச் சுண்ணம்விரவிப்பூந் தாம நாற்றி விரைதெளித் தாரந் தாங்கியரவுயர் கொடியி னான்ற னகன்படை யனுங்க வென்றபுரவித்தோ்க் காளை யன்ன காளையைப் பொலிக என்றார்.457. இன்னமு தனைய செவ்வா யிளங்கிளி மழலை யஞ்சொற்பொன்னவிர் சுணங்கு பூத்த பொங்கிள முலையி னார்தம்மின்னிவர் நுசுப்பு நோவ விடலையைக் காண வோடியன்னமு மயிலும் போல வணிநகர் வீதி கொண்டார்.458. சில்லரிச் சிலம்பின் வள்வார்ச் சிறுபறை கறங்கச் செம்பொனல்குற்றே ரணிந்து கொம்மை முலையெனும் புரவி பூட்டிநல்லெழி னெடுங்கண் ணம்பாப் புருவலில் லுருவக் கோலிச்செல்வப்போர்க் காமன் சேனை செம்மன்மே லெழுந்த தன்றே.459. நூல்பொர வரிய நுண்மை நுசுப்பினை யொசிய வீங்கிக்கால்பரந் திருந்த வெங்கட் கதிர்முலை கச்சின் வீக்கிக்கோல்பொரச் சிவந்த கோல மணிவிரற் கோதை தாங்கிமேல்வரல் கருதி நின்றார் விண்ணவர் மகளி ரொத்தார்.460. ஆகமு மிடையு மஃக வடிபரந் தெழுந்து வீங்கிப்போகமும் பொருளு மீன்ற புணர்முலைத் தடங்க டோன்றப்பாகமே மறைய நின்ற படைமலர்த் தடங்க ணல்லார்நாகம்விட் டெழுந்து போந்த நாகர்தம் மகளி ரொத்தார்.461. வாளரந் துடைத்த வைவே லிரண்டுடன் மலைந்த வேபோலாள்வழக் கொழிய நீண்ட வணிமலர்த் தடங்க ணெல்லாநீள்சுடர் நெறியை நோக்கு நிரையிதழ் நெருஞ்சிப் பூப்போற்காளைதன் றோ்செல் வீதி கலந்துடன் றொக்க வன்றே.462. வடகமுந் துகிலுந் தோடு மாலையு மணியு முத்துங்கடகமுங் குழையும் பூணுங் கதிரொளி கலந்து மூதூரிடவகை யெல்லை யெல்லா மின்னிரைத் திட்ட தேபோற்படவர வல்கு லாரைப் பயந்தன மாட மெல்லாம்463. மாதுகு மயிலி னல்லார் மங்கல மரபு கூறிப்போதக நம்பி யென்பார் பூமியும் புணர்க வென்பார்தோதக மாக வெங்குஞ் சுண்ணமேற் சொரிந்து தண்ணென்றாதுகு பிணையல் வீசிச் சாந்துகொண் டெறிந்து நிற்பார்.464. கொடையுளு மொருவன் கொல்லுங் கூற்றினுங் கொடிய வாட்போர்ப்படையுளு மொருவ னென்று பயங்கெழு பனுவ ணுண்ணூனடையுளார் சொல்லிற் றெல்லா நம்பிசீ வகன்கட் கண்டாந்தொடையலங் கோதை யென்று சொல்லுபு தொழுது நிற்பார்.465. செம்மலைப் பயந்த நற்றாய் செய்தவ முடைய ளென்பாரெம்மலைத் தவஞ்செய் தாள்கொ லெய்துவம் யாமு மென்பாரம்முலை யமுத மன்னா ரகம்புலர்ந் தமர்ந்து நோக்கித்தம்முறு விழும வெந்நோய் தந்துணைக் குரைத்து நிற்பார்.466. சினவுநர்க் கடந்த செல்வன் செம்மல ரகல நாளைக்கனவினி லருளி வந்து காட்டியாங் காண வென்பார்மனவிரி யல்கு லார்தம் மனத்தொடு மயங்கி யொன்றும்வினவுந ரின்றி நின்று வேண்டுவ கூறு வாரும்.467. விண்ணகத் துளர்கொன் மற்றிவ் வென்றிவேற் குருசி லொப்பார்மண்ணகத் திவர்க ளொவ்வார் மழகளி றனைய தோன்றல்பண்ணகத் துறையுஞ் சொல்லார் நன்னலம் பருக வேண்டியண்ணலைத் தவத்திற் றந்தார் யார்கொலோ வளிய ரென்பார்.468. வட்டுடைப் பொலிந்த தானை வள்ளலைக் கண்ட போழ்தேபட்டுடை சூழ்ந்த காசு பஞ்சிமெல் லடியைச் சூழஅட்டரக் கனைய செவ்வா யணிநலங் கருகிக் காமக்கட்டழ லெறிப்ப நின்றார் கைவளை கழல நின்றார்.469. வார்செலச் செல்ல விம்மு வனமுலை மகளிர் நோக்கியோ்செலச் செல்ல வேத்தித் தொழுதுதோ டூக்க விப்பாற்பார்செலச் செல்லச் சிந்திப் பைந்தொடி சொரிந்த நம்பன்றோ்செலச் செல்லும் வீதி பீர்செலச் செல்லு மன்றே.470. வாண்முகத் தலர்ந்த போலு மழைமலர்த் தடங்கண் கோட்டித்தோண்முதற் பசலை தீரத் தோன்றலைப் பருகு வார்போனாண்முதற் பாசந் தட்ப நடுங்கினார் நிற்ப நில்லான்கோண்முகப் புலியோ டொப்பான் கொழுநிதிப் புரிசை புக்கான்.471. பொன்னுகம் புரவி பூட்டு விட்டுடன் பந்தி புக்கமன்னுக வென்றி யென்று மணிவள்ள நிறைய வாக்கியின்மதுப் பலியும் பூவுஞ் சாந்தமும் விளக்கு மேந்திமின்னுகு செம்பொற் கொட்டில் விளங்குதோ் புக்க தன்றே.472. இட்டவுத் தரிய மெல்லென் றிடைசுவல் வருத்த வொல்கியட்டமங் கலமு மேந்தி யாயிரத் தெண்ம ரீண்டிப்பட்டமுங் குழையு மின்னப் பல்கல னொலிப்பச் சூழ்ந்துமட்டவிழ் கோதை மாதர் மைந்தனைக் கொண்டு புக்கார்.473. தாயுயர் மிக்க தந்தை வந்தெதிர் கொண்டு புக்குக்காய்கதிர் மணிசெய் வெள்வேற் காளையைக் காவ லோம்பியாய்கதி ருமிழும் பைம்பூ ணாயிரச் செங்க ணான்றன்சேயுய ருலக மெய்தி தோன்றன்மற் றின்ன கூறும்.474. தகைமதி யெழிலை வாட்டுந் தாமரைப் பூவி னங்கட்புகைநுதி யழல வாட்கட் பென்னனாள் புல்ல நீண்டவகைமலி வரைசெய் மார்பின் வள்ளலைக் கண்டு வண்டார்த்தொகைமலி தொறுவை யாளுந் தோன்றன்மற் றின்ன கூறும்.475. கேட்டிது மறக்க நம்பி கேண்முதற் கேடு சூழ்ந்தநாட்டிறை விசயை யென்னு நாறுபூங் கொம்ப னாளைவேட்டிறைப் பார மெல்லாங் கட்டியங் காரன் றன்னைப்பூட்டிமற் றவன்ற னாலே பொறிமுதல் அடர்க்கப் பட்டான்.476. கோலிழுக் குற்ற ஞான்றே கொடுமுடி வரையொன் றேறிக்காலிழுக் குற்று வீழ்ந்தே கருந்தலை களைய லுற்றேன்மால்வழி உளதன் றாயின் வாழ்வினை முடிப்பல் என்றேஆலம்வித் தனைய தெண்ணி அழிவினுள் அகன்று நின்றேன்.477. குலத்தொடு முடிந்த கோன்றன் குடிவழி வாரா நின்றேனலத்தகு தொறுவி னுள்ளே னாமங்கோ விந்த னென்பே.னிலக்கண மமைந்த கோதா வரியென விசையிற் போந்தநலத்தகு மனைவி பெற்ற நங்கைகோ விந்தை யென்பாள்.478. வம்புடை முலையி னாளென் மடமகள் மதர்வை நோக்கமம்படி யிருத்தி நெஞ்சத் தழுத்தியிட் டனைய தொப்பக்கொம்படு நுசுப்பி னாளைக் குறையிரந் துழந்து நின்றநம்படை தம்மு ளெல்லா நகைமுக மழிந்து நின்றேன்.479. பாடகஞ் சுமந்த செம்பொற் சீறடிப் பரவை யல்குற்சூடக மணிந்த முன்கைச் சுடர்மணிப் பூணி னாளையாடகச் செம்பொற் பாவை யேழுடன் தருவ லையவாடலில் வதுவை கூடி மணமக னாக என்றான்.480. வெண்ணெய்போன் றூறினியண் மேம்பால்போறீஞ்சொல்லளுண்ண வுருக்கிய வானெய்போன் மேனியள்வண்ண வனமுலை மாதர் மடநோக்கிகண்ணுங் கருவிளம் போதிரண்டே கண்டாய்.481. சேதா நறுநெய்யுந் தீம்பால் சுமைத்தயிரும்பாதால மெல்லாம் நிறைத்திடுவல் பைந்தாரோய்போதார் புனைகோதை சூட்டுன் னடிச்சியையாதாவ தெல்லா மறிந்தருளி யென்றான்.482. குலநினைய னம்பி கொழுங்கயற்கண் வள்ளிநலநுகர்ந்தா னன்றே நறுந்தார் முருகனிலமகட்குக் கேள்வனு நீணிரைநப் பின்னையிலவலர்வா யின்னமிர்த மெய்தினா னன்றே.483. கன்னியர் குலத்தின் மிக்கார் கதிர்முலைக் கன்னி மார்பமுன்னினர் முயங்கி னல்லான் முறிமிடை படலை மாலைப்பொன்னிழை மகளி ரொவ்வா தவரைமுன் புணர்தல் செல்லரின்னதான் முறைமை மாந்தர்க் கெனமனத் தெண்ணி னானே.484. கோட்டிளங் களிறு போல்வா னந்தகோன் முகத்தை நோக்கிமோட்டிள முலையி னாணின் மடமக ளெனக்கு மாமான்சூட்டொடு கண்ணி யன்றே யென்செய்வா னிவைகள் சொல்லிநீட்டித்தல் குணமோ வென்று நெஞ்சகங் குளிர்ப்பச் சொன்னான்.485. தேன்சொரி முல்லைக் கண்ணிச் செந்துவ ராடை யாயர்கோன்பெரி துவந்து போகிக் குடைதயிர் குழுமப் புக்குமான்கறி கற்ற கூழை மௌவல்சூழ் மயிலைப் பந்தர்க்கான்சொரி முல்லைத் தாரான் கடிவினை முடிக வென்றான்.486. கனிவளர் கிளவி காமர் சிறுநுதல் புருவங் காமன்குனிவளர் சிலையைக் கொன்ற குவளைக்கண் கயலைக் கொன்றவினியுள ரல்ல ராய ரெனச்சிலம் பரற்றத் தந்துபனிவளர் கோதை மாதர் பாவையைப் பரவி வைத்தார்.487. நாழியு ளிழுது நாகான் கன்றுதின் றொழித்த புல்தோய்த்தூழிதோ றாவுந் தோழும் போன்றுடன் மூக்க வென்றுதாழிருங் குழலி னாளை நெய்தலைப் பெய்து வாழ்த்திமூழைநீர் சொரிந்து மொய்கொ ளாய்த்திய ராட்டி னாரே.488. நெய்விலைப் பசும்பொற் றோடு நிழன்மணிக் குழையு நீவிமைவிரி குழலி னாளை மங்கலக் கடிப்புச் சோ்த்திப்பெய்தனர் பிணையன் மாலை யோரிலைச் சாந்து பூசிச்செய்தனர் சிறுபுன் கோலம் தொறுத்தியர் திகைத்து நின்றார்.489. ஏறங்கோண் முழங்க வாயரெடுத்துக்கொண் டேகி மூதூர்ச்சாறெங்கு மயரப் புக்கு நந்தகோன் றன்கை யேந்திவீறுயர் கலச நன்னீர் சொரிந்தனன் வீர னேற்றான்பாறுகொள் பருதி வைவேற் பதுமுக குமரற் கென்றே.490. நலத்தகை யவட்கு நாகா னாயிரத் திரட்டி நன்பொனிலக்கணப் பாவை யேழுங் கொடுத்தனன் போக விப்பாலலைத்தது காமன் சேனை யருநுனை யம்பு மூழ்கமுலைக்குவட் டிடைப்பட் டாற்றான் முத்துக முயங்கி னானே.491. கள்வாய் விரிந்த கழுநீர்பிணைந் தன்ன வாகிவெள்வேன் மிளிர்ந்த நெடுங்கண்விரை நாறு கோதைமுள்வா யெயிற்றூ றமுதம்முனி யாது மாந்திக்கொள்ளாத வின்பக் கடற்பட்டனன் கோதைவேலான்.492. தீம்பாற் கடலைத் திரைபொங்கக் கடைந்து தேவர்தாம்பாற் படுத்த வமிர்தோதட மாலை வேய்த்தோளாம்பாற் குடவர் மகளோவென் றரிவை நையவோம்பா வொழுக்கத் துணர்வொன்றில னாயி னானே.