இலம்பகம் 4 · சீவக சிந்தாமணி · திருத்தக்க தேவர்

குணமாலையார் இலம்பகம்

சீவக சிந்தாமணி 4 · குணமாலையார் இலம்பகம்

851. காசறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போலமாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை யயண ழன்னிஆசற நடக்கு நாளு ளைங்கணைக் கிழவன் வைகிப்பாசறைப் பரிவு தீர்க்கும் பங்குனிப் பருவஞ் செய்தான்.852. தோடணி மகளிர் போன்ற துணர்மலர்க் கொம்பர் கொம்பினாடவர் போல வண்டு மடைந்தன வளியிற் கொல்கி.யூடிய மகளிர் போல வொசிந்தன வூட றீர்க்குஞ்சேடரிற் சென்று புல்லிச் சிறுபுறந் தழீஇய தும்பி.853. நான மண்ணிய நன்மண மங்கையர்மேனி போன்றினி தாய்விரை நாறியகானங் காழகி லேகமழ் கண்ணியவேனி லாற்கு விருந்தெதிர் கொண்டதே.854. கொம்ப ரின்குயில் கூய்க்குடை வாவியுட்டும்பி வண்டொடு தூவழி யாழ்செயவெம்பு வேட்கை விரும்பிய வேனில்வந்தும்பர் நீடுறக் கத்தியல் பொத்ததே.855. நாக நாண்மலர் நாறு கடிநகரேக வின்பத் திராச புரத்தவர்மாக நந்து மணங்கமழ் யாற்றயற்போக மேவினர் பூமரக் காவினே.856. முழவங் கண்டுயி லாத முதுநகர்விழவு நீர்விளை யாட்டு விருப்பினாற்றொழுவிற் றோன்றிய தோமறு கேவலக்கிழவன் மூதெயில் போற்கிளர் வுற்றதே.857. வள்ள நீரர மங்கைய ரங்கையாலுள்ளங் கூரத் திமிர்ந்துகுத் திட்டசாந்தள்ள லாயடி யானை யிழுக்கினவெள்ள நீர்வளை வெள்ள முரன்றவே.858. நீந்து நித்தில வூர்தி நிழன்மருப்பேந்து கஞ்சிகை வைய மிளவெயிற்போந்து காய்பொற் சிவிகைநற் போதகங்கூந்தன் மாலைக் குமரிப் பிடிக்குழாம்.859. ஏறு வாரொலி யேற்றுமி னோவெனக்கூறு வாரொலி தோடு குலைந்துவீழ்ந்தாறி னார்ப்பொலி யஞ்சிலம் பின்னொலிமாறு கொண்டதொர் மாக்கட லொத்தவே.860. பொன்செய் வேய்த்தலைப் பூமரு மண்டலமின்செய் வெண்குடை பிச்ச மிடைந்தொளியென்செய் கோவென் றிரிந்த திழைநிலாமன்செய் மாணகர் வட்டம்விட் டிட்டதே.861. திருந்து சாமரை வீசுவ தெண்கடன்முரிந்த மொய்திரை போன்ற வகிற்புகைபுரிந்த தாமங்க ளாகவப் பூந்துகள்விரிந்து வானின் விதானித்த தொத்ததே.862. சோலை சூழ்வரைத் தூங்கரு வித்திரண்மாலை ஊர்திகள் வைய மிவற்றிடைச்சீலக் கஞ்சிநற் போதகஞ் செல்வனநீல மேக நிரைத்தன போன்றவே.863. வழங்கு வங்கக் கலிங்கக் கடகமுமழுங்கு மாந்தர்க் கணிகலப் பேழையுந்தழங்கு வெம்மதுத் தண்டுந் தலைத்தலைக்குழங்கன் மாலையுங் கொண்டு விரைந்தவே864. வாச வெண்ணெயும் வண்டிமிர் சாந்தமும்பூச சுண்ணமு முண்ணு மடிசிலுங்காசில் போகக் கலப்பையுங் கொண்டவண்மாசின் மாசனம் வாயின் மடுத்தவே.865. பாட லோசையும் பண்ணொலி யோசையுமாட லோசையு மார்ப்பொலி யோசையுமோடை யானை யுரற்றொலி யோசையமூடு போயுயர் வானுல குற்றவே.866. பூக்க ணீர்விளை யாடிய பொன்னுலகோக்க நீள்விசும் பூடறுத் தொய்யெனவீக்க மாநகர் வீழ்ந்தது போன்றவண்மாக்கண் மாக்கடல் வெள்ள மடுத்ததே.867. மின்னு வாட்டடங் கண்ணியர் வெம்முலைத்துன்னு வாட்டந் தணித்தலிற் றூநிறத்தன்ன வாட்டத் தணிமலர்ப் பூம்பொழிலென்ன வாட்டமு மின்றிச்சென் றெய்தினார்.868. அள்ளு டைக்குவ ளைக்கய நீடியகள்ளு டைக்கழு நீர்ப்புனற் பட்டமும்புள்ளு டைக்கனி யிற்பொலி சோலையுமுள்ளு டைப்பொலி விற்றொரு பாலெலாம்.869. செம்பு றக்கனி வாழையுந் தேன்சொரிகொம்பு றப்பழுத் திட்டன கோழரைவம்பு றக்கனி மாத்தொடு வார்சுளைப்பைம்பு றப்பல விற்றொரு பாலெலாம்.870. கள்ள வானர முங்கன்னி யூகமுந்துள்ளு மானொடு வேழத் தொகுதியும்வெள்ளை யன்னமுந் தோகையும் வேய்ந்தவணுள்ளு மாந்தரை யுள்ளம் புகற்றுமே.871. கோக்க ணங்கொதித் தேந்திய வேலெனநோக்க ணங்கனை யார்நுகர் - வேய்தலிற்றாக்க ணங்குறை யுந்தடந் தாமரைப்பூக்க ணம்பொழிற் பட்டது போன்றதே.872. கூறப் பட்டவக் கொய்ம்மலர்க் காவகமூறித் தேன்றுளித் தொண்மது வார்மணகாரி நாண்மலர் வெண்மணற் றாய்நிழறேறித் தெண்கயம் புக்கது போன்றதே.873. காவிற் கண்டத் திரைவளைத் தாயிடைமேவி விண்ணவர் மங்கையர் போன்றுதம்பூவை யுங்கிளி யும்மிழற் றப்புகுந்தாவி யந்துகி லாரமர்ந் தார்களே.874. பௌவ நீர்ப்பவ ளக்கொடி போல்பவண்மௌவ லங்குழ லாள்சுர மஞ்சரிகொவ்வை யங்கனி வாய்க்குண மாலையோடெவ்வந் தீர்ந்திருந் தாளிது கூறினாள்.875. தூமஞ் சூடிய தூத்துகி லேந்தல்குற்றாமஞ் சூடிய வேற்றடங் கண்ணினாணாமஞ் சூடிய நன்னுத னீட்டினாள்காமஞ் சூடிய கண்ணொளிர் சுண்ணமே.876. சுண்ண மென்பதோர் பேர்கொடு சோர்குழல்வண்ண மாலை நுசுப்பு வருத்துவானெண்ணி வந்தன கூறிவை யோவெனநண்ணி மாலையை நக்கன ளென்பவே.877. பைம்பொ னீளுல கன்றியிப் பார்மிசையிம்ப ரென்சுண்ண மேய்ப்ப வுளவெனிற்செம்பொற் பாவையன் னாய்செப்பு நீயெனக்கொம்ப னாளுங் கொதித்திது கூறினாள்.878. சுண்ணந் தோற்றனந் தீம்புன லாடலமெண்ணில் கோடிபொன் னீதும்வென் றாற்கெனவண்ண வார்குழ லேழையர் தம்முளேகண்ணற் றார்கமழ் சுண்ணத்தி னென்பவே.879. மல்லிகை மாலை மணங்கமழ் வார்குழற்கொல்லியல் வேனெடுங் கண்ணியர் கூடிச்சொல்லிசை மேம்படு சுண்ண வுறழ்ச்சியுள்வெல்வது சூதென வேண்டி விடுத்தார்.880. இட்டிடை யாரிரு மங்கைய ரேந்துபொற்றட்டிடை யந்துகில் மூடிய தன்பினர்நெட்டிடை நீந்துபு சென்றனர் தாமரைமொட்டன மென்முலை மொய்குழ லாரே.881. சீர்தங்கு செம்பொற் கொடிமல்லிகை மாலை சேர்ந்துவார்தங்கு பைம்பொற் கழன்மைந்தர்கைக் காட்ட மைந்தரேர்தங்கு சுண்ண மிவற்றின்நலம் வேண்டின் வெம்போர்க்கார்தங்கு வண்கைக் கழற்சீவகற் காண்மி னென்றார்.882. வாண்மின்னு வண்கை வடிநூற்கடற் கேள்வி மைந்தர்தாண்மின்னு வீங்கு கழலான்றனைச் சூழ மற்றப்பூண்மின்னு மார்பன் பொலிந்தாங்கிருந் தான்வி சும்பிற்கோண்மின்னு மீன்சூழ் குளிர்மாமதித் தோற்ற மொத்தே.883. காளை சீவகன் கட்டியங் காரனைத்தோளை யீர்ந்திட வேதுணி வுற்றநல்வாளை வவ்வியி கண்ணியர் வார்கழற்றாளை யேத்துபு தங்குறை செப்பினார்.884. சுண்ண நல்லன சூழ்ந்தறிந் தெங்களுக்கண்ணல் கூறடி யேங்குறை யென்றலுங்கண்ணிற் கண்டிவை நல்ல கருங்குழல்வண்ண மாலையி னீரெனக் கூறினான்.885. மற்றிம் மாநகர் மாந்தர்கள் யாவருமுற்று நாயியுங் கண்டு முணர்ந்திவைபொற்ற சுண்ண மெனப்புகழ்ந் தார்நம்பிகற்ற தும்மவர் தங்களொ டேகொலோ.886. ஐய னேயறி யும்மென வந்தனம்பொய்ய தன்றிப் புலமை நுணுக்கிநீநொய்திற் றேர்ந்துரை நூற்கட லென்றுதங்கையி னாற்றொழு தார்கமழ் கோதையார்.887. நல்ல சுண்ண மிவையிவற் றிற்சிறிதல்ல சுண்ண மதற்கென்னை யென்றிரேற்புல்லு கோடைய பொற்புடைப் பூஞ்சுண்ணமல்ல சீதஞ்செய் காலத்தி னாயவே.888. வாரம் பட்டுழித் தீயவு நல்லவாந்தீரக் காய்ந்துழி நல்லவுந் தீயவாமோரும் வையத் தியற்கையன் றோவெனாவீர வேனெடுங் கண்ணி விளம்பினாள்.889. உள்ளங் கொள்ள வுணர்த்திய பின்னலால்வள்ள னீங்கப் பெறாய்வளைத் தேனெனக்கள்செய் கோதையி னாய்கரி போக்கினாற்றெள்ளி நெஞ்சிற் றெளிகெனச் செப்பினான்.890. கண்ணின் மாந்தருங் கண்ணிமை யார்களுமெண்ணி னின்சொ லிகந்தறி வாரிலைநண்ணு தீஞ்சொ னவின்றபு ளாதியாமண்ண னீக்கினஃ தொட்டுவல் யானென்றாள்.891. காவில் வாழ்பவர் நால்வ ருளார்கரிபோவர் பொன்னனை யாயெனக் கைதொழுதேவ லெம்பெரு மான்சொன்ன வாறென்றாள்கோவை நித்தில மென்முலைக் கொம்பன்றாள்.892. மங்கை நல்லவர் கண்ணு மனமும்போன்றெங்கு மோடி யிடறுஞ் சுரும்புகாள்வண்டு காண்மகிழ் தேனினங் காண்மதுவுண்டு தேக்கிடு மொண்மிஞிற் றீட்டங்காள்.893. சோலை மஞ்ஞை சுரமைதன் சுண்ணமுமாலை யென்னு மடமயில் சுண்ணமுஞ்சால நல்லன தம்முளு மிக்கனகோல மாகக்கொண் டுண்மி னெனச்சொன்னான்.894. வண்ண வார்சிலை வள்ளல்கொண் டாயிடைவிண்ணிற் றூவியிட் டான்வந்து வீழ்ந்தனசுண்ண மங்கை சுரமைய மாலையவண்ண வண்டொடு தேன்கவர்ந் துண்டவே.895. தத்து நீர்ப்பவ ளத்துறை நித்திலம்வைத்த போன்முறு வற்றுவர் வாயினீரொத்த தோவென நோக்கிநுந் நங்கைமார்க்குய்த்து ரைம்மினிவ் வண்ண மெனச்சொன்னான்.896. நீல நன்கு தெளித்து நிறங்கொளீஇக்கோல மாக வெழுதிய போற்குலாய்ஞாலம் விற்கும் புருவத்து நங்கைகண்போலும் வேலவ னேபுகழ்ந் தேனென்றாள்.897. சோலையஞ் சுரும்பிற் சுண்ணந் தேற்றிய தோன்ற றன்னைவேலையம் படுத்த கண்ணார் தொழுதனர் விரைந்து போகிமாலைக்கு வென்றி கூற மழையிடிப் புண்டோர் நாகமாலையத் தழுங்கி யாங்கு மஞ்சரி யவல முற்றாள்.898. திங்க ளங்கதிர் செற்றுழக் கப்பட்டபங்க யப்படு வொத்துளை பாவாய்நங்கை யென்னொடு ரையாய்நனி யொல்லேயிங்க ணென்றடி வீழ்ந்திரந் திட்டாள்.899. மாற்ற மொன்றுரை யாண்மழை வள்ளலென்னேற்ற சுண்ணத்தை யேற்பில வென்றசொற்றோற்று வந்தென் சிலம்படி கைதொழநோற்ப னோற்றனை நீயென வேகினாள்.900. கன்னி மாநகர்க் கன்னியர் சூழ்தரக்கன்னி மாட மடையக் கடிமலர்க்கன்னி நீலக்கட் கன்னிநற் றாய்க்கவள்கன்னிக் குற்றது கன்னியர் கூறினார்.901. கண்கள் கொண்ட கலப்பின வாயினும்பெண்கள் கொண்ட விடாபிற செற்றமென்றொண்க ணாளவ டாயவ டந்தைக்குப்பண்கொ டேமொழி யாற்பயக் கூறினாள்.902. விண்ணிற் றிங்கள் விலக்குதன் மேயினாரெண்ண நும்மக ளெண்ணமற் றியாதெனிற்கண்ணி னாடவர்க் காணினுங் கேட்பினுமுண்ண லேனினி யென்றுரை யாடினாள்.903. இன்று நீர்விளை யாட்டினு ளேந்திழைதொன்று சுண்ணத்திற் றோன்றிய வேறுபாடின்றே னாவிக்கோர் கூற்ற மெனநையாநின்று நீலக்கண் ணித்திலஞ் சிந்தினாள்.904. பட்டதென் னங்கைக் கென்னப் பாசிழைப் பசும்பொ னல்குன்மட்டவிழ் கோதை சுண்ண மாலையோ டிகலித் தோற்றாள்கட்டவிழ் கண்ணி நம்பி சீவகன் றிறத்திற் காய்ந்தாளட்டுந்தே னலங்கன் மார்ப வதுபட்ட தறிமோ வென்றாள்.905. பள்ளிகொள் களிறு போலப் பரிவுவிட் டுயிர்த்தென் பாவையுள்ளிய பொருண்மற் றஃத லோபெரி துவப்பக் கேட்டேன்வள்ளிதழ்க் கோதை மற்று நகரொடுங் கடியு மேனும்வெள்ளநீ ணிதியி னின்னே வேண்டிய விளைப்ப லென்றான்.906. இன்னதோர் காலத் தின்னானொருமக ளின்ன தொன்றிற்கின்னதோ ரிடத்தி னெல்லையாட்கடிந் தொழுகி னாள்போலின்னதோர் நகரி லென்றாங்கென்பெயர் நிற்க வேண்டுமின்னதோ ராரந் தம்மோவென்றுகொண் டேகி னானே.907. வையக மூன்றும் விற்கு மாமணி யார மேந்திச்செய்கழன் மன்னற் குய்த்துத் தன்குறை செப்ப லோடுமையென மன்ன னேவ வாள்வழக் கற்ற தென்பகைபுனை பாவை யெல்லாங் கதிர்முலை யாக்கி னானே.908. சென்று காலங் குறுகினுஞ் சீவகன்பொன்றுஞ் சாகம் பொருந்திற் பொருந்துகவன்றி யென்னிறை யாரழிப் பாரெனாவொன்று சிந்தைய ளாகி யொடுங்கினாள்.909. இன்பக் காரண மாம்விளை யாட்டினுட்டுன்பக் காரண மாய்த்துறப் பித்திடுமென்ப தேநினைந் தீர்மலர் மாலை தன்னன்பி னாலவ லித்தழு திட்டாள்.910. தண்ணந் தீம்புன லாடிய தண்மலர்வண்ண வார்தளிப் பிண்டியி னானடிக்கெண்ணி யாயிர மேந்துபொற் றாமரைவண்ண மாமல ரேற்றி வணங்கினாள்.911. ஆசை மாக்களொ டந்தணர் கொள்கெனமாசை மாக்கடன் மன்னவ னாடலின்மீசை நீள்விசும் பிற்றலைச் சென்றதோரோசை யாற்சன மொண்ணிதி யுண்டதே.912. மகர வெல்கொடி மைந்தனை வாட்டியசிகரச் செவ்வரைத் தீநிறப் பொன்னெயினிகரி னேமிதன் னீணகர்க் காகெனாநகரம் நாலிரு கோடி நயந்ததே.913. உவாமுத லிரவலர்க் குடைமை யுய்த்தவர்கவான்முதற் கூப்பிய கனக மாழையாற்றவாவினை யடைகரை தயங்கு சிந்தை நீரவாவெனு முடை கட லடைக்கப் பட்டதே.914. சீரர வச்சிலம் பேந்துமென் சீறடியாரர வக்கழ லாடவ ரோடும்போரர வக்களம் போன்றுபொன் னார்புனனீரர வம்விளத் தார்நிக ரில்லார்.915. கார்விளை யாடிய மின்னனை யார்கதிர்வார்விளை யாடிய மென்முலை மைந்தர்தார்விளை யாட்டொடு தங்குபு பொங்கியநீர்விளை யாட்டணி நின்றதை யன்றே.916. விடாக்களி வண்டுண விரிந்த கோதையர்படாக்களி யிளமுலை பாய விண்டதர்க்கடாக்களிற் றெறுழ்வலிக் காளை சீவகனடாக்களி யவர்தொழில் காண வேகினான்.917. ஒன்றே யுயிரை யுடையீரொருவிப் போமி னிவள்கணன்றே கூற்ற மாகியருளா தாவி போழ்வதென்றே கலையுஞ் சிலம்புமிரங்க வினவண் டர்ப்பப்பொன்றோய் கொடியி னடந்துபுனல்சேர் பவளைக் காண்மின்.918. அழல்செய் தடத்துண் மலர்ந்தவலங்கன் மாலை யதனைநிழல்செய் நீர்கொண் டீர்ப்பநெடுங்கண் ணினையி னோக்கிக்குழையும் பூணு நாணுங்கொழுந னுவப்ப வணிகென்றிழைகொள் புனலுக் கீயுமிளையோ ணிலைமை காண்மின்.919. கோல நெடுங்கண் மகளிர்கூந்தல் பரப்பி யிருப்பப்பீலி மஞ்ஞை நோக்கிப்பேடை மயிலென் றெண்ணியாலிச் சென்று புல்லியன்மை கண்டு நாணிச்சோலை நோக்கி நடக்குந்தோகை வண்ணங் காண்மின்.920. மின்னொப் புடைய பைம்பூணீருள் வீழக் காணாளன்னப் பெடையே தொழுதேனன்னை கொடியள் கண்டாயென்னை யடிமை வேண்டினாடித் தாவென் றிறைஞ்சிப்பொன்னங் கொம்பி னின்றாள்பொலிவின் வண்ணங் காண்மின்.921. தூமங் கமழுங் கோதை தொடுத்த துயரி முலையாத்தேமென் கீதம் பாலாச் சுரந்து திறத்தி னூட்டிக்காமக் குழவி வளர்ப்பக் கணவன் புனலு ணீங்கிப்பூமென் பொழிலுக் கிவர்வான் புகற்சி காண்மி னினிதே.922. கடலம் பவளம் மணையிற் கனபொற் கயிற்றிற் காய்பொன்மடலங் கமுகி னூசன் மடந்தை யாட நுடங்கிநடலைந் நடுவின் மகளிர் நூக்கப் பரிந்த காசுவிடலில் விசும்பின் மின்போல் மின்னி வீழ்வகாண்மின்.923. நான நீரிற் கலந்து நலங்கொள் பூம்பட் டொளிப்பமேனி தோன்ற விளங்கி வெளிப்பட் டதற்கு நாணிமான மகளிர் போல மணிமே கலைகள் பேசாத்தானந் தழுவிக் கிடப்பச் செல்வோ டன்மை காண்மின்.924. தீம்பாற் பசியி னிருந்தசெவ்வாய்ச் சிறுபைங் கிளிதன்ஓம்பு தாய்நீர் குடையவொழிக்கும் வண்ண நாடிப்பாம்பால் என்ன வெருவிப்பைம்பொற் றோடு கழலக்காம்பேர் தோளி நடுங்கிக்கரைசேர் பவளைக் காண்மின்.925. துணையி றோகை மஞ்ஞை யீயற் கிவரும் வகைபோன்மணியார் வளைசோர் முன்கை வலனுமிடனும் போக்கியிணையி றோழி மார்க ளிறுமா லிடையென் றிரங்கவணியார் கோதை பூம்பந் தாடு மவளைக் காண்மின்.926. திருவின் சாய லொருத்திசேர்ந்த கோலங் காண்பான்குருதித் துகிலி னுறையைக்கொழும்பொன் விரலி னீக்கிஅரவ முற்றும் விழுங்கியுமிழும் பொழுதின் மதிபோன்றுருவத் தெண்கண் ணாடிகாண்மின் தோன்றும் வகையே.927. பலகை செம்பொன் னாகப்பளிங்கு நாயாப் பரப்பியலவ னாடும் வகைபோலரும்பொன் கவறங் குருளக்குலவும் பவழ வுழக்கிற்கோதை புரளப் பாடியிலவம் போதேர் செவ்வாயிளையோர் பொருவார்க் காண்மின்.928. தீம்பா லடிசி லமிர்தஞ்செம்பொன் வண்ணப் புழுக்கலாம்பா லக்கா ரடலையண்பன் னீரூ றமிர்தம்தாம்பா லவரை நாடித்தந்தூட் டயர்வார் சொரியவோம்பா நறுநெய் வெள்ளமொழுகும் வண்ணங் காண்மின்.929. அள்ளற் சேற்று ளலவனடைந்தாங் கனைய மெய்யின்கள்செய் கடலு ளிளமைக்கூம்பின் கடிசெய் மாலைத்துள்ளு தூமக் கயிற்றிற்பாய்செய் துயரி நிதியமுள்ளு காற்றா யுழலும்காமக் கலனும் காண்மின்.930. தாய்தன் கையின் மெல்லத்தண்ணென் குறங்கி னெறியவாய்பொன் னமளித் துஞ்சும்மணியார் குழவி போலத்தோயுந் திரைக ளலைப்பத்தோடார் கமலப் பள்ளிமேய வகையிற் றுஞ்சும்வெள்ளை அன்னங் காண்மின்.931. நீலத் துகிலிற் கிடந்த நிழலார் தழலம் மணிகள்கோலச் சுடர்விட் டுமிழக் குமரி யன்னங் குறுகிச்சால நெருங்கிப் பூத்த தடந்தா மரைப்பூ வென்னவாலிச் சுடர்கள் கௌவி யழுங்கும் வண்ணங் காண்மின்.932. வடிக்கண் மகளிர் வைத்தமரக தந்நன் மணிகளொடிக்கச் சுடர்விட் டுமிழவுழையம் பிணையொன் றணுகிக்கொடிப்புல் லென்று கறிப்பானாவிற் குலவி வளைப்பத்தொடிக்கட் பூவை நோக்கிநகுமா றெளிதோ காண்மின்.933. இவையின் னனவும் பிறவு மெரிபொன் னார மார்பன்கவிஞர் மதியி னகன்று காட்சிக் கினிய விழவின்சுவையின் மிகுதி யுடைய சோர்வில் பொருளொன் றதுதானவையி னகல நோக்கி நயந்த வண்ண மொழிவாம்.934. அந்தணர்க் காக்கிய சோற்றுக் குவாலினைவந்தொரு நாய்கது விற்றது கண்டவருய்ந்தினிப் போதி யெனக்கனக் றோடினர்சிந்தையி னின்றொளிர் தீயன நீரார்.935. கல்லொடு வன்றடி கையினர் காற்றினும்வல்விரைந் தோடி வளைத்தன ராகிக்கொல்வது மேயினர் கொன்றிடு கூற்றினும்வல்வினை யார்வலைப் பட்டதை யன்றே.936. வேள்வியி லுண்டி விலக்கிய நீவிர்களாளெனக் கென்ற தறைவது மோரார்தாளிற மூர்க்க ரதுக்கலிற் றண்டுறைநீள்கயம் பாய்ந்தது நீந்துத லோடும்,937. மட்குட மல்லன மதியின் வெள்ளியகட்குடக் கன்னிய ரிருவ ரோடுடன்றுட்கென யாவரும் நடுங்கத் தூய்மையிலுட்குடைக் களிமக னொருவன் றோன்றினான்.938. தோன்றிய புண்செய்வே லவற்குத் தூமதுவான்றிகழ் கொடியனார் வெள்ளி வட்டகையூன்றிவாய் மடுப்பவோர் முழையுட் டீங்கதிர்கான்றிடு கதிர்மதி யிரண்டு போன்றவே.939. அழலம் பூநற வார்ந்தழ லூர்தரச்சுழலுங் கண்ணினன் சோர்தரு மாலையன்கழலன் காழகம் வீக்கிய கச்சையன்மழலைச் சொற்களின் வைதிவை கூறினான்.940. புடைத்தென் னாயினைப் பொன்றுவித் தீருயிர்கடுக்கப் பேர்த்தனிர் தம்மின் கலாய்க்குறிற்றடக்கை மீளிமை தாங்குமி னன்றெனினுடைப்பென் கட்குட மென்றுரை யாடினான்.941. நல்வினை யொன்று மிலாதவ னான்மறைவல்லவர் தம்மை வருத்தலின் வல்லேசெல்சுடர் வேல்வல சீவக சாமிசென்றல்ல லகற்றி யருந்துயர் தீர்த்தான்.942. மீண்டவ ரேகுத லும்விடை யன்னவனீண்டிய தோழரொ டெய்தின னாகிமாண்ட வெயிற்றெகி னம்மற மில்லதுகாண்டலுங் கட்கினி யான்கலுழ்ந் திட்டான்.943. நாயுடம் பிட்டிவ ணந்திய பேரொளிக்காய்கதிர் மண்டலம் போன்றொளி கால்வதோர்சேயுடம் பெய்துவை செல்கதி மந்திரநீயுடம் பட்டு நினைமதி யென்றான்.944. என்றலுந் தன்செவி யோர்த்திரு கண்களுஞ்சென்றுகு நீரொடு செம்மலை நோக்கியொன்றுபு வால்குழைத் துள்ளுவப் பெய்தலுங்குன்றனை யான்பதங் கூற வலித்தான்.945. நற்செய்கை யொன்று மில்லார் நாளுலக் கின்ற போழ்தின்முற்செய்த வினையி னீங்கி நல்வினை விளைக்கும் வித்துமற்செய்து வீங்கு தோளான் மந்திர மைந்து மாதோகுதற்செய்கை தளிர்ப்பத் தாழ்ந்தாங் கதன்செவிச் செப்பு கின்றான்.946. உறுதிமுன் செய்த தின்றி யொழுகினே னென்று நெஞ்சில்மறுகனீ பற்றொ டார்வம் விட்டிடு மரண வச்சத்திறுகனீ யிறைவன் சொன்ன வைம்பத வமிர்தமுண்டாற்பெறுதிநற் கதியை யென்று பெறுநவை யகற்றி னானே.947. மனத்திடைச் செறும்பு நீக்கி மறவலை யாகி யைந்துநினைத்திடு நின்க ணின்ற நீனிற வினையி னீங்கியெனைப்பக றோறும் விள்ளா வின்பமே பயக்கு மென்றாற்கனைப்பத வமிர்த நெஞ்சி னயின்றுவிட் டகன்ற தன்றே.948. பாடு பாணி முகமெனும் பான்மையினோடி யாங்கொ ருயர்வரை யுச்சிமேற்கூடிக் கோலங் குயிற்றிப் படங்களைந்தாடு கூத்தரி னையெனத் தோன்றினான்.949. ஞாயில் சூடிய நன்னெடும் பொன்னகர்க்கோயில் வட்டமெல் லாங்கொங்கு சூழ்குழல்வேயி னன்னமென் றோளியர் தோன்றியங்காயி னார்பரி யாள மடைந்ததே.950. மிடைந்த மாமணி மேகலை யேந்தல்குற்றடங்கொள் வெம்முலைத் தாமரை வாண்முகத்தடைந்த சாய லரம்பையர் தம்முழைமடங்க லேறனை யான்மகிழ் வெய்தினான்.951. கற்றவைம் பதங்க ணீராக்கருவினை கழுவப் பட்டுமற்றவன் றேவ னாகிவானிடு சிலையிற் றோன்றியிற்றத னுடம்பு மின்னாவிடரொழித் தினிய னாகியுற்றத னிலையும் எல்லாம்ஓதியின் உணர்ந்து கொண்டான்.952. இரும்பி னீர்மை கெடுத்தெரி தன்னிறத்தரும்பொ னாக்கிய வாருயிர்த் தோழனைவிரும்பி விண்ணிறுத் தொய்யெனத் தோன்றினான்சுரும்புண் கண்ணிச் சுதஞ்சண னென்பவே.953. ஓசனை நறும்புகை கமழ வொண்ணிலாவீசிய கதிர்பரந் திமைக்கு மேனியன்மாசறு மணிமுடி மிடைந்த மாலையன்பூசுறு பருதியின் பொலிந்து தோன்றினான்.954. குன்றெனத் திரண்ட தோளான்குறுகலுங் குமர னோக்கிநின்றவ னெடுங்க ணொன்றுமிமைப்பில நிழலில் யாக்கையன்றியுங் கண்ணி வாடாதமரனே யென்று தேறிநன்றவன் வரவு கேட்பானம்பி நீயாரை யென்றான்.955. குங்குமக் குவட்டின் வீங்கிக்கோலம்வீற் றிருந்த தோளாயிங்குநின் னருளிற் போகியியக்கரு ளிறைவ னாகிச்சங்கவெண் மலையின் மற்றுச்சந்திரோ தயத்தி னுச்சியங்கியா னுறைவ லெந்தையறிகமற் றென்று சொன்னான்.956. என்றவ னுரைப்பக் கேட்டேஇமயமு நிகர்க்க லாற்றாப்பொன்றரு மாரி வண்கைப்புரவலன் புகன்று நோக்கிவென்றவர் உலகம் பெற்றவேந்துடை யின்ப மெல்லாமின்றெனக் கெதிர்ந்த தென்றானெரியுமிழ்ந் திலங்கும் வேலான்.957. சூடுறு கழலி னாற்குச் சுதஞ்சண னிதனைச் சொன்னான்பாடல்வண் டரற்றும் பிண்டிப் பகவன திறைமை போலமூடியிவ் வுலக மெல்லா நின்னடித் தருவ லின்னேயாடியுட் பாவை போனீ யணங்கிய தணங்க வென்றான்.958. வாளொடு வயவ ரீண்டி வாரணத் தொழுவின் முற்றிமீளிமை செய்யின் வெய்ய நண்பநின் னினைப்ப தல்லால்நாளொடு பக்கம் நைந்து வீழினும் வீழ்த லில்லாக்கோளுடைக் கிழமை யொப்பாய் குறைவிலன் பிறவி (னென்றான்.959. இன்னிழ லிவரும் பூணானிருவிசும் பிவர்த லுற்றப்பொன்னெழு வனைய தோளாற்புல்லிக்கொண் டினைய கூறிநின்னிழல் போல நீங்கேனிடவர்வரி னினைக்க வென்றுமின்னெழூஉப் பறப்ப தொத்துவிசும்பிவர்ந் தமரன் சென்றான்.960. சொல்லிய நன்மை யில்லாச் சுணங்கனிவ் வுடம்பு நீங்கியெல்லொளித் தேவ னாகிப் பிறக்குமோ வென்ன வேண்டாகொல்லுலை யகத்திட் டூதிக் கூரிரும் பிரதங் குத்தவெல்லையில் செம்பொ னாகி யெரிநிறம் பெற்ற தன்றே.961. எரிமாலை வேனுதியி னிறக்கிக் காம னடுகணையாற்றிருமாலை வெம்முலைமேற் றிளைக்குந் தேவர் திருவுறுகவருமாலை யெண்வினையு மகற்றி யின்பக் கடலாக்கித்தருமாலை யல்ல தியான் றலையிற் றாழ்ந்து பணிவேனோ.962. ஒன்றாய வூக்கவேர் பூட்டியாக்கைச் செறுவுழுதுநன்றாய நல்விரதச் செந்நெல்வித்தி யொழுக்கநீர்குன்றாமற் றாங்கொடுத்தைம் பொறியின்வேலி காத்தோம்பின்வென்றார் தம் வீட்டின்பம் விளைக்கும்விண்ணோ ருலகீன்றே.963. இத்தலை யிவர்க ளேகவிமயநட் டரவு சுற்றியத்தலை யலற முந்நீர்கடைந்தவ ரரவ மொப்பமைத்தலை நெடுங்க ணாருமைந்தரு மறலி யாடமொய்த்திரள வன்ன மார்க்குமோட்டிரும் பொய்கை புக்கார்.964. கலந்தெழு திரைநுண் ணாடைக்கடிக்கய மடந்தை காமரிலங்குபொற் கலாபத் தல்குலிருகரைப் பரப்பு மாகவலர்ந்ததண் கமலத் தம்போதணிதக்க முகத்திற் கேற்பநலங்கெழு குவளை வாட்கணன்னுத னலத்தை யுண்டார்.965. தண்ணுமை முழவு மொந்தைதகுணிச்சம் பிறவு மோசையெண்ணிய விரலோ டங்கைபுறங்கையி னிசைய வாக்கித்திண்ணிதிற் றெறித்து மோவார்கொட்டியுங் குடைந்து மாடியொண்ணுதன் மகளிர் தம்மோடுயர்மிசை யவர்க ளொத்தார்.966. சிவிறியின் மாறு தூயுங்குங்கும மெறிந்துந் தேங்கொளுவறுநீ ருழக்கி யோட்டியுடைபுறங் கண்டு நக்குத்தவறெனத் தாமம் பூட்டித்தருதிறை கொண்டு மின்பத்திவறினார் காம வெள்ளத்தேத்தருந் தன்மை யாரே.967. சாந்தக நிறைந்த தோணிதண்மலர் மாலைத் தோணிபூந்துகி லார்ந்த தோணிபுனைகலம் பெய்த தோணிகூந்தன்மா மகளிர் மைந்தர்கொண்டுகொண் டெறிய வோடித்தாந்திரைக் கலங்கள் போலத்தாக்குபு திரியு மன்றே.968. கலிவளர் களிறு கைந்நீர்சொரிவபோன் முத்த மாலைபொலிவொடு திவண்டு பொங்கிப்பூஞ்சிகை யலமந் தாடக்குலிகநீர் நிறைந்த பந்திற்கொம்பனா ரோச்ச மைந்தர்மெலிவுகண் டுவந்து மாதோவிருப்பொடு மறலி னாரே.969. வண்ணவொண் சுண்ணம் பட்டுமாலையுஞ் சாந்து மேந்தியெண்ணருந் திறத்து மைந்தரெதிரெதி ரெறிய வோடிவிண்ணிடை நுடங்கு மின்னுமீன்களும் பொருவ போலமண்ணிடை அமரர் கொண்டமன்றலொத் திறந்த தன்றே.970. உரைத்த வெண்ணெயு மொண்ணறுஞ் சுண்ணமுமரைத்த சாந்தமு நானமு மாலையுநுரைத்து நோன்சிறை வண்டொடு தேனினமிரைத்து நீர்கொழித் தின்ப மிறந்ததே.971. கத்திகைக் கண்ணி நெற்றிக் கைதொழு கடவு ளன்னவித்தக விளைய ரெல்லாம் விழுமணிக் கலங்க டாங்கிமுத்தணிந் தாவி யூட்டி முகிழ் முலை கச்சின் வீக்கிப்பித்திகைப் பிணையல் சூழ்ந்து பெண்கொடி பொலிந்த வன்றே.972. திருந்துபொற் றேருஞ் செம்பொற்சிவிகையு மிடைந்து தெற்றிக்கருங்கயக் களிறு மாவுங்காலியற் பிடியு மீண்டிநெருங்குபு மள்ளர் தொக்குநெடுவரைத் தொடுத்த வெள்ளங்கருங்கடற் கிவர்ந்த வண்ணங்கடிநகர்க் கெழுந்த வன்றே.973. கடலெனக் காற்றெனக் கடுங்கட் கூற்றெனவுடல்சின வுருமென வூழித் தீயெனத்தொடர்பிணி வெளின்முதன் முருக்கித் தோன்றியதடலருங் கடாக்களிற் றசனி வேகமே.974. பொருதிழி யருவி போன்றுபொழிதரு கடாத்த தாகிக்குருதிகொண் மருப்பிற் றாகிக்குஞ்சரஞ் சிதைந்த தென்னக்கருதிய திசைக ளெல்லாங்கண்மிசைக் கரந்த மாந்தர்பருதியின் முன்னர்த் தோன்றாமறைந்தபன் மீன்க ளொத்தார்.975. கருந்தடங் கண்ணி தன்மேற்காமுக ருள்ளம் போலவிருங்களி றெய்த வோடச்சிவிகைவிட் டிளைய ரேகவரும்பெற லவட்குத் தோழியாடவ ரில்லை யோஎன்றோருங்குகை யுச்சிக் கூப்பிக்களிற்றெதி ரிறைஞ்சி நின்றாள்.976. என்னைக்கொன் றிவள்க ணோடுமெல்லையி லொருவன் றோன்றியின்னுயி ரிவளைக் காக்குமன்றெனி லென்கண் மாய்ந்தாற்பின்னைத்தான் ஆவ தாகவென்றெண்ணிப் பிணைக ணோக்கிமின்னுப்போ னுடங்கி நின்றாள்வீததை பொற்கொம் பொப்பாள்.977. மணியிரு தலையுஞ் சேர்த்தி வான்பொனி னியன்ற நாணாலணியிருங் குஞ்சி யேறக் கட்டியிட் டலங்கல் சூழ்ந்துதணிவருந் தோழர் சூழத் தாழ்குழை திருவில் வீசப்பணிவருங் குருசில் செல்வான் பாவைய திடரைக் கண்டான்.978. பெண்ணுயி ரவல நோக்கிப் பெருந்தகை வாழ்விற் சாதலெண்ணின னெண்ணி நொய்தா வினமலர் மாலை சுற்றாவண்ணப்பொற் கடக மேற்றா வார்கச்சிற் றானை வீக்காவண்ணலங் களிற்றை வையா ஆர்ததுமே லோடினானே.979. குண்டலங் குமரன் கொண்டுகுன்றின்மேல் வீழு மின்போலொண்டிறற் களிற்றி னெற்றியெறிந்துதோ டொலித்து வீழமண்டில முத்துந் தாருமாலையுங் குழலும் பொங்கவிண்டலர் கண்ணி சிந்தமின்னிற்சென் றெய்தி னானே.980. படம்விரி நாகஞ் செற்றுப்பாய்ந்தரு கலுழன் போலமடவர லவளைச் செற்றுமதக்களி றிறைஞ்சும் போழ்திற்குடவரை நெற்றி பாய்ந்தகோளரி போன்று வேழத்துடல்சினங் கடவக் குப்புற்றுருமென வுரறி யார்த்தான்.981. கூற்றென முழங்கிக் கையாற்கோட்டிடைப் புடைப்பக் காய்ந்துகாற்றென வுரறி நாகங்கடாம்பெய்து கனவிற் சீறியாற்றலங் குமரன் றன்மேலடுகளி றோட லஞ்சான்கோற்றொடிப் பாவை தன்னைக்கொண்டுயப் போமின் என்றான்.982. மதியினுக் கிவர்ந்த வேக மாமணி நாகம் வல்லேபதியமை பருதி தன்மேற் படம்விரித் தோடி யாங்குப்பொதியவிழ் கோதை தன்மேற் பொருகளி றகன்று பெற்றார்க்கதியமை தோளி னானைக் கையகப் படுத்த தன்றே.983. கையகப் படுத்த லோடுங்கார்மழை மின்னி னொய்தாமொய்கொளப் பிறழ்ந்து முத்தார்மருப்பிடைக் குளித்துக் காற்கீழையென வடங்கி வல்லானாடிய மண்வட் டேய்ப்பச்செய்கழற் குருசி லாங்கேகரந்துசே ணகற்றி னானே.984. மல்ல னீர்மணி வண்ணனைப் பண்டொர்நாட்கொல்ல வோடிய குஞ்சரம் போன்றதச்செல்வன் போன்றனன் சீவகன் றெய்வம்போற்பில்கும் மும்ம தவேழம் பெயர்ந்ததே.985. ஒருகை யிருமருப்பின் மும்மதத்ததோங்கெழிற்குன் றனைய வேழந்திருகு கனைகழற்காற் சீவகன்வென்றிளையாட்கு டைந்து தேனார்முருகு கமழலங்கன் முத்திலங்குமார்பினனைஞ் ஞாற்று நால்வரருகு கழல்பரவத் தனியேபோயுய்யான மடைந்தா னன்றே.986. மணிசெய் கந்துபோன் மருள வீங்கியதிணிபொற் றோளினான் செல்ல னீக்கியவணிபொற் கொம்பினை யழுங்க லென்றுதன்றணிவில் காதலார் தாங்கொ டேகினார்.987. முழங்கு தெண்டிரை மூரி நீணிதிவழங்கு நீண்டகை வணிகர்க் கேறனான்விழுங்கு காதலாள் வேற்கட் பாவைதாய்குழைந்த கோதையைக் கண்டு கூறினாள்.988. நெய்பெய் நீளெரி நெற்றி மூழ்கியகைசெய் மாலைபோற் கரிந்து பொன்னிறநைய வந்ததென் னங்கைக் கின்றெனவுய்தல் வேட்கையா லுரைத்த லோம்பினார்.989. முருகு விண்டுலா முல்லைக் கத்திகைபருகி வண்டுலாம் பல்கு ழலினாள்வருக வென்றுதாய் வாட்க ணீர்துடைத்துருகு நுண்ணிடை யொசியப் புல்லினாள்.990. கடம்பு சூடிய கன்னி மாலைபேற்றொடர்ந்து கைவிடாத் தோழி மாரொடுங்குடங்கை யுண்கணாள் கொண்ட பண்ணையுளடைந்த துன்பமென் றறிவி னாடினாள்.991. கம்மப் பல்கலங் களைந்து கண்டெறூஉம்விம்மப் பல்கலம் நொய்ய மெய்யணிந்தம்மென் மாலையு மடைச்சிக் குங்குமங்கொம்மை மட்டித்தார் கொடிய னாளையே.992. அம்பொன் வள்ளத்து ளமிர்த மேந்துமெங்கொம்பி னவ்வையைக் கொணர்மின் சென்றெனப்பைம்பொ னல்குலைப் பயிரும் பைங்கிளிசெம்பொற் கொம்பினெம் பாவை செல்கின்றாள்.993. நிறத்தெ றிந்துப றித்தநி ணங்கொள்வேற்றிறத்தை வெளவிய சேயரிக் கண்ணினாள்பிறப்பு ணர்ந்தவர் போற்றமர் பேச்செலாம்வெறுத்தி யாவையும் மேவல ளாயினாள்.994. குமரி மாநகர்க் கோதையங் கொம்பனாடமரி னீங்கிய செவ்வியுட் டாமரையமரர் மேவரத் தோன்றிய வண்ணல்போற்குமர னாகிய காதலிற் கூறினாள்.995. கலத்தற் காலங்கல் லூரிநற் கொட்டிலாமுலைத்த டத்திடை மொய்யெருக் குப்பையாவிலக்க மென்னுயி ராவெய்து கற்குமாலலைக்கும் வெஞ்சர மைந்துடை யானரோ.996. பூமி யும்பொறை யாற்றருந் தன்மையால்வேமெ னெஞ்சமும் வேள்வி முளரிபோல்தாம மார்பனைச் சீவக சாமியைக்காம னைக்கடி தேதம்மின் றேவிர்காள்.997. கையி னாற்சொலக் கண்களிற் கேட்டிடுமொய்கொள் சிந்தையின் மூங்கையு மாயினேன்செய்த வம்புரி யாச்சிறி யார்கள்போலுய்ய லாவதொர் வாயிலுண் டாங்கொலோ.998. கண்ணும் வாளற்ற கைவளை சோருமாற்புண்ணும் போன்று புலம்புமென் நெஞ்சரோவெண்ணில் காம மெரிப்பினு மேற்செலாப்பெண்ணின் மிக்கது பெண்ணல தில்லையே.999. சோலை வேய்மருள் சூழ்வளைத் தோளிதன்வேலை மாக்கடல் வேட்கைமிக் கூர்தரவோலை தாழ்பெண்ணை மாமட லூர்தலைக்கால வேற்றடங் கண்ணி கருதினாள்.1000. உய்யு மாறுரை யுன்னை யலாலிலேன்செய்ய வாய்க்கிளி யேசிறந் தாயெனநைய னங்கையிற் நாட்டகத் துண்டெனிற்றைய லாய்சம ழாதுரை யென்றதே.1001. தெளிக யம்மலர் மேலுறை தேவியினொளியுஞ் சாயலு மொப்புமை யில்லவள்களிகொள் காமத்திற் கையற வெய்தித்தன்கிளியைத் தூதுவிட் டாள்கிளந் தென்பவே.1002. பூணொ டேந்திய வெம்முலைப் பொன்னனாணாணுந் தன்குல னுந்நலங் கீழ்ப்படவீணை வித்தகற் காணிய விண்படர்ந்தாணுப் பைங்கிளி யாண்டுப் பறந்ததே.1003. கூட்டினான் மணிபல தெளித்துக் கொண்டவன்றீட்டினான் கிழிமிசைத் திலக வாணுதல்வேட்டமால் களிற்றிடை வெருவி நின்றதோர்நாட்டமு நடுக்கமு நங்கை வண்ணமே.1004. நெகிழ்ந்துசோர் பூந்துகி னோக்கி நோக்கியேமகிழ்ந்துவீழ் மணிக்குழன் மாலை காறொடுமுகிழ்ந்து வீங் கிளமுலை முத்தந் தைவரும்புகழ்ந்துதன் றோள்களிற் புல்லு மென்பவே.1005. படைமலர் நெடுங்கணாள் பரவை யேந்தல்குன்மிடைமணி மேகலை நோற்ற வெந்தொழிற்புடைதிரள் வனமுலைப் பூணு நோற்றனவடிமலர்த் தாமரைச் சிலம்பு நோற்றவே.1006. மின்னணங் குறுமிடை மேவர் சாயலுக்கின்னண மிறைமகன் புலம்ப யாவதுந்தன்னணங் குறுமொழித் தத்தை தத்தையைமன்னணங் குறலொடு மகிழ்ந்து கண்டதே.1007. ஆடுபாம் பெனப்புடை யகன்ற வல்குன்மேற்சூடிய கலைப்புறஞ் சூழ்ந்த பூந்துகிலோடிய வெரிவளைத் துருவ வெண்புகைகூடிமற் றதன்புறங் குலாய கொள்கைத்தே.1008. கொன்வளர் குவிமுலைக் கோட்டிற் றாழ்ந்தனமின்வளர் திரள்வடம் விளங்கு பைங்கதிரின்வள ரிளம்பிறை யெழுதப் பட்டனபொன்வளர் செப்பின்மேற் பொலிந்த போன்றவே.1009. குண்டல மொருபுடை குலாவி வில்லிடவிண்டலர்ந்த தொருபுடை தோடு மின்செயமண்டல நிறைந்ததோர் மதிய மன்னதேயொண்டொடி திருமுகத் துருவ மாட்சியே.1010. பூணிற முலையவள் பொருவில் பூநுதன்மாணிறக் கருங்குழன் மருங்கிற் போக்கியநாணிற மிகுகதிர்ப் பட்ட நல்லொளிவானிற மின்னிருள் வளைந்த தொத்ததே.1011. கடிகமழ் பூஞ்சிகை காமர் மல்லிகைவடிவுடை மாலைகால் தொடர்ந்து வாய்ந்ததுநடுவொசிந் தொல்கிய நாறு மாமலர்க்கொடியின்மேற் குயில்குனிந் திருந்த தொத்ததே.1012. சிலம்பொடு மேகலை மிழற்றத் தேனினம்அலங்கலுண் டியாழ்செயும் அம்பொன் பூங்கெடிநலம்பட நன்னடை கற்ற தொக்குமிவ்விலங்கரித் தடங்கணாள் யாவள் ஆங்கொலோ.1013. யாவளே ஆயினும் ஆக மற்றிவள்மேவிய பொருளொடு மீண்ட பின்னலால்ஏவலாற் சேர்கலேன் என்று பைங்கிளிபூவலர் சண்பகம் பொருந்திற் றென்பவே.1014. மதுக்களி நெடுங்கணாள் வான்பொற் கிண்கிணியொதுக்கிடை மிழற்றச்சென் றெய்தி யூன்கவர்கதக்களி வேலினாற் கண்டு காமநீர்ப்புதுத்தளி ரனையவள் புலந்து நோக்கினாள்.1015. இதுவென வுருவென வியக்கி யென்றலும்புதிதிது பூந்துகில் குழல்கள் சோர்தலான்மதுவிரி கோதையம் மாலை நின்மனமதுமுறை யியக்கலி னியக்கி யாகுமே.1016. முளைத்தெழு மதியமுத் தரும்பி யாங்கெனவிளைத்தது திருமுகம் வியர்ப்பு வெஞ்சிலைவளைத்தன புருவமு முரிந்த வல்லையேகிளைக்கழு நீர்க்கணுஞ் சிவப்பிற் கேழ்த்தவே.1017. பாவைநீ புலவியி னீடல் பாவியேற்காவியொன் றிரண்டுடம் பல்ல தூற்றுநீர்க்கூவல்வாய் வெண்மணல் குறுகல் செல்லுமேமேவிப்பூங் கங்கையுள் விழைந்த வன்னமே.1018. பேரினும் பெண்டிரைப் பொறாது சீறுவாள்நேர்மலர்ப் பாவையை நோக்கி நெய்சொரிகூரழல் போல்வதோர் புலவி கூர்ந்ததேயார்வுறு கணவன்மாட் டமிர்தின் சாயற்கே.1019. புலந்தவள் கொடியென நடுங்கிப் பொன்னரிச்சிலம்பொடு மேகலை மிழற்றச் சென்னிமேலலங்கல்வா யடிமல ரணிந்து குண்டலமிலங்கப்பேர்ந் தினமலர் சிதறி யேகினாள்.1020. துனிப்புறு கிளவியாற் றுணைவி யேகலுமினிப்பிறர்க் கிடமிலை யெழுவ லீங்கெனாக்கனிப்புறு சொல்லளைஇப் பறந்து காளைதன்பனிக்கதிர்ப் பகைமலர்ப் பாதஞ் சேர்ந்ததே.1021. வாழ்கநின் கழலடி மைந்த வென்னவேதோழியர் சுவாகதம் போது கீங்கெனச்சூழ்மணி மோதிரஞ் சுடர்ந்து வில்லிடயாழறி வித்தக னங்கை நீட்டினான்.1022. பொன்னிய குரும்பையிற் பொலிந்த வெம்முலைக்கன்னியர் தூதொடு காமர் பைங்கிளிமுன்னமே வந்தென முறுவல் நோக்கமோடென்னைகொல் வரவென வினிய செப்பினான்.1023. மையலங் களிற்றொடு பொருத வண்புகழையனைச் செவ்விகண் டறிந்து வம்மெனப்பையர வல்குலெம் பாவை தூதொடுகையிலங் கெஃகினாய் காண வந்ததே.1024. வெஞ்சின வேழ முண்ட வெள்ளிலின் வெறிய மாகநெஞ்சமு நிறையு நீல நெடுங்கணாற் கவர்ந்த கள்விஅஞ்சனத் துவலை யாடி நடுங்கினா ணிலைமை யென்னைபைஞ்சிறைத் தத்தை யென்னாப் பசுங்கிளி மொழியும்1025. பூவணை யழலின்மேற் சேக்கும் பொன்செய்தூண்பாவைதான் பொருந்துபு நிற்கும் பற்பல்காலாவியா வழலென வுயிர்க்கு மையெனமேவிப்பூ நிலமிசை யிருக்கு மெல்லவே.1026. பணித்தகு கோலமும் பந்தும் பார்ப்புறாண்மணிக்கழங் காடலண் மாமைதான் விளர்த்தணித்தகை யாழினோ டமுதம் விட்டொழீஇத்துணைப்பெரு மலர்க்கணிற் றுயிலு நீங்கினாள்.1027. திருந்துவேற் சீவக சாமி யோவெனுங்கருங்கடல் வெள்வளை கழல்ப வோவெனும்வருந்தினேன் மார்புறப் புல்லு வந்தெனும்பொருந்துபூங் கொம்பன பொருவின் சாயலே.1028. கன்னிய ருற்றநோய் கண்ண னார்க்குமஃதின்னதென் றுரையலர் நாணி னாதலான்மன்னும்யா னுணரலேன் மாத ருற்றநோய்துன்னிநீ அறிதியோ தோன்ற லென்றதே.1029. புள்ளின் வாயுரை கேட்டலும் பொன்செய்வேலெள்ளி நீண்டகண் ணாடிறத் தின்னுரையுள்ளி னாருழைக் கண்டதொத் தானரோவள்ளன் மாத்தடிந் தானன்ன மாண்பினான்.1030. சென்ம ருந்துதந் தாய்சொல்லு நின்மனத்தென்ன மர்ந்த துரைத்துக்கொ ணீயெனவின்னி மிர்ந்தநின் வீங்கெழிற் றோளவட்கின்ம ருந்திவை வேண்டுவ லென்றதே.1031. பொற்குன் றாயினும் பூம்பழ னங்கள்சூழ்நெற்குன் றாம்பதி நேரினுந் தன்னையான்கற்குன் றேந்திய தோளிணை கண்ணுறீ இச்சொற்குன் றாபுணர் கேன்சொல்லு போவென்றான்.1032. சேலை வென்றகண் ணாட்கிவை செப்பரிதோலை யொன்றெழு திப்பணி நீயெனமாலை மார்பன் கொடுப்பத் தினைக்குரலோலை யோடுகொண் டோங்கிப் பறந்ததே.1033. திருந்து கோதைச் சிகழிகைச் சீறடிமருந்தின் சாயன் மணங்கமழ் மேனியாள்பொருந்து பூம்பொய்கைப் போர்வையைப் போர்த்துடன்கருங்கட் பாவை கவின்பெற வைகினாள்.1034. மறங்கொள் வெங்கதிர் வேலவன் வார்கழல்கறங்க வேகித்தன் காதலி யூடலையுறைந்த வொண்மலர்ச் சென்னியி னீக்கினானிறைந்த தின்ப நெடுங்கணிக் கென்பவே.1035. தன்றுணைவி கோட்டியினி னீங்கித் தனியிடம்பார்த்தின்றுணைவற் சேர்வா னிருந்ததுகொல் போந்ததுகொல்சென்றதுகொல் சேர்ந்ததுகொல் செவ்வி அறிந்துருகுமென்றுணைவி மாற்றமிஃ தென்றதுகொல் பாவம்.1036. செந்தார்ப் பசுங்கிளியார் சென்றார்க்கோ ரின்னுரைதான்றந்தாரேற் றந்தாரென் னின்னுயிர்தாந் தாராரேலந்தோ குணமாலைக் காதகா தென்றுலகநொந்தாங் கழமுயன்று நோற்றானு மெய்துவனே.1037. சென்றார் வரைய கருமஞ் செருவேலான்பொன்றாங் கணியகலம் புல்லப் பொருந்துமேற்குன்றாது கூடுகெனக் கூறிமுத்த வார்மணன்மேலன்றாங் கணியிழையா ளாழி யிழைத்தாளே.1038. பாகவரை வாங்கிப் பழுதாகிற் பாவியேற்கேகுமா லாவி யெனநினைப்பப் பைங்கிளியார்மாகமே நோக்கி மடவாளே யவ்விருந்தாளாகும்யான் சேர்வ லெனச்சென் றடைந்ததே.1039. கண்டா ணெடிதுயிர்த்தாள்கைதொழுதாள் கையகத்தேகொண்டா டினைக்குரறான்சூடினாள் தாழ்குழன்மேனுண்டார்ப் பசுங்கிளியைநோவ அகட்டொடுக்கிவண்டாரான் செவ்விவாய்க்கேட்டாடன் மெய்ம்மகிழ்ந்தாள்.1040. தீம்பா லமிர்தூட்டிச் செம்பொன் மணிக்கூட்டிற்காம்பேர் பணைத்தோளி மென்பறவை கண்படுப்பித்தாம்பான் மணிநாம மோதிரந்தொட் டையென்னத்தேம்பா வெழுத்தோலை செவ்வனே நோக்கினாள்.1041. கொடுஞ்சிலையா னோலை குணமாலை காண்கவடுந்துயர முள்சுடவெந் தாற்றாதே னாற்றவிடுந்த சிறுகிளியால் விம்மனோய் தீர்ந்தேனெடுங்கணா டானு நினைவகல்வா ளாக.1042. ஈட்டஞ்சா னீணிதியு மீர்ங்குவளைப் பைந்தடஞ்சூழ்மோட்டு வளஞ்சுரக்கு மூரு முழுதீந்து (மென்றோட்வேட்டார்க்கு வேட்டனவே போன்றினிய வேய்பூட்டார் சிலைநுதலாட் புல்லா தொழியேனே.1043. குங்குமஞ்சேர் வெம்முலைமேற்கொய்தார் வடுப்பொறிப்பச்செங்கயற்கண் வெம்பனியாற்சிந்தை யெரியவித்துமங்கை மகிழவுறையேனேல் வாளமருட்பங்கப்பட் டார்மேற்படைநினைந்தே னாகென்றான்.1044. நூல்புடைத்தாற் போற்கிடந்த வித்தகஞ்சேர் நுண்வரிகள்பான்மடுத்துத் தீந்தேன் பருகுவாள் போனோக்கிச்சேல்படுத்த கண்ணீர் சுமந்தளைஇ மெய்ம்மகிழ்ந்துமால்படுத்தான் மார்பின் மணந்தாளே போன்மகிழ்ந்தாள்.1045. பாலவியும் பூவும் புகையும் படுசாந்துங்காலவியாப் பொன்விளக்குந் தந்தும்மைக் கைதொழுவேன்கோலவியா வெஞ்சிலையான் சொற்குன்றா னாகெனவேநூலவையார் போனீங்க ணோக்குமினே யென்றாள்.1046. மவ்வலங் குழலி னாளை மதியுடம் படுக்க லுற்றுச்செவ்வியுட் செவிலி சொல்லுஞ் சிலையிவர் நுதலி னாய்நின்னவ்வைக்கு மூத்த மாம னொருமகற் கின்றுன் றாதைநவ்வியம் பிணைகொ ணோக்கி நகைமுக விருந்து செய்தான்.1047. பண்டியாற் பண்டி செம்பொன்பல்வளை பரிய மாகக்கொண்டுவந் தடிமை செய்வான்குறையுறு கின்ற தன்றிக்கண்டவர் கடக்க லாற்றாக்கிழிமிசை யுருவ தீட்டிவண்டிமிர் கோதை நின்னைவழிபடு நாளு மென்றாள்.1048. மைத்துனன் வனப்பின் மிக்கான்வளர்நிதிக் கிழவன் காளையுத்தம னுனது நாமமல்லதொன் றுரைத்த றேற்றானித்திறத் திவன்க ணின்னையெண்ணினா ரென்ன லோடுந்தத்தையங் கிளவி கையாற்செவிமுத லடைச்சிச் சொன்னாள்.1049. மணிமதக் களிறு வென்றான்வருத்தச்சொற் கூலி யாகவணிமதக் களிற னானுக்கடிப்பணி செய்வ தல்லாற்றுணிவதென் சுடுசொல் வாளாற்செவிமுத லீர லென்றாள்பணிவரும் பவளப் பாவைபரிவுகொண் டனைய தொப்பாள்.1050. கந்துகப் புடையிற் பொங்குங்கலினமா வல்லன் காளைக்கெந்தையும் யாயு நேராராய்விடி னிறத்த லொன்றோசிந்தனை பிறிதொன் றாகிச்செய்தவ முயற லொன்றோவந்ததா னாளை யென்றாள்வடுவெனக் கிடந்த கண்ணாள்.1051. தேனெய்போன் றினிய சொல்லாள்சிறுமுதுக் குறைமை கேட்டேயூனைநைந் துருகிக் கைத்தாயுண்ணிறை யுவகை பொங்கவானெய்பாற் கிவர்ந்த தொத்ததழேற்கவென் பாவை யென்றுதானையாற் றடங்க ணீரைத்துடைத்துமெய் தழுவிக் கொண்டாள்.1052. துகண்மனத் தின்றி நோற்றதொல்வினைப் பயத்தி னன்றேதகணிலாக் கேள்வி யான்கட்டங்கிய தென்று பின்னுமகண்மனங் குளிர்ப்பக் கூறிமறுவலும் புல்லிக் கொண்டாங்ககன்மனைத் தாய்க்குச் சொன்னாளவளுந்தன் கேட்குச் சொன்னாள்.1053. வினையமா மாலை கேள்வன்குபேரமித் திரற்குச் சொல்லவனையதே பட்ட தென்றாலையனே நங்கைக் கொத்தான்வனையவே பட்ட போலுமணிமருண் முலையி னாளைப்புனையவே பட்ட பொற்றார்ப்புண்ணியற் கீது மென்றான்.1054. கற்றார் மற்றுங் கட்டுரைவல்லார் கவியென்னுநற்றேர் மேலார் நால்வரைவிட்டாற் கவர்சென்றார்சுற்றார் வல்விற் சூடுறுசெம்பொற் கழனாய்கன்பொற்றார் மார்பீர் போதுமினென்றாங் கெதிர்கொண்டான்.1055. சீந்தா நின்ற தீமுக வேலான் மணிச்செப்பினீந்தான் கொண்டா ரின்முக வாச மெரிசெம்பொன்காந்தா நின்ற கற்பக மன்னீர் வரப்பெற்றேன்சேர்ந்தே னின்றே வீடென நாய்கற் கவர்சொன்னார்.1056. யாமக ளீது நீர்மகட் கொண்மி னெனயாருந்தாமக ணேரா ராயினுந் தண்ணென் வரைமார்பிற்பூமகள் வைகும் புண்ணியப் பொற்குன் றனையானுக்கியாமக ணேர்ந்தே மின்றென நாய்கற் கவர்சொன்னார்.1057. சுற்றார் வல்விற் சூடுறு செம்பொற் கழலாற்குக்குற்றேல் செய்துங் காளையும் யானுங் கொடியாளைமற்சேர் தோளான் றன்மரு மானுக் கருள்செய்யப்பெற்றே னென்னப் பேசினன் வாசங் கமழ்தாரான்.1058. விடைசூ ழேற்றின் வேல்புக ழான்றன் மிகுதாதைகடல்சூழ் வையங் கைப்படுத் தான் போன் றிதுகூறக்குடர்சூழ் கோட்ட குஞ்சரம் வென்ற வகையும்மப்படர்சூழ் நெஞ்சிற் பாவைதன் பண்பு மவர்சொன்னார்.1059. மறையார் வேள்வி மந்திரச்செந்தீக் கொடியேபோற்குறையாக் கற்பிற் சீவகன்றாயுங் கொலைவேற்கட்பொறையொன் றாற்றாப் போதணிபொன் கொம்பு அனையாளைநறையார் கோதை நன்றெனவின்புற் றெதிர்கொண்டாள்.1060. பொற்கச் சார்த்த பூணணி பொம்மன் முலையாளையற்கச் செய்த யாப்பின ராகி யவண்வந்தார்பொற்பக் கூறிப் போகுது மென்றார்க் கெழுகென்றார்வற்கம் மிட்ட வண்பரி மாவி னவர்சென்றார்.1061. மடந்தை திறத்தி னியையம்மகட் கூறி வந்தார்விடந்தைத்த வேலாற் குரைத்தார்க்கவன் மெய்ம்மகிழ்ந்தானுடங்குங் கொடிப்போல் பவணூபுர மார்ப்ப வந்துதடங்கண் ணவடா யதுகேட்டலுந் தக்க தென்றாள்1062. திருவிற் கமைந்தான் றிசைபத்து மறிந்த தொல்சீருருவிற் கமைந்தாற் கமைந்தாளென யாரு மொட்டப்பெருகுங் கணியிற் கணிபேசிய பேதி னாளாற்பருகற் கமைந்த வமிர்தின்படர் தீர்க்க லுற்றார்.1063. கரைகொன் றிரங்குங் கடலிற்கலி கொண்டு கல்லென்முரசங் கறங்க முழவிம்மவெண் சங்க மார்ப்பப்பிரசங் கலங்கிற் றெனமாந்தர் பிணங்க வேட்டான்விரைசென் றடைந்த குழலாளையவ் வேனி லானே.1064. மழைமொக்கு ளன்ன வருமென்முலை மாதர் நல்லாரிழைமுற் றணிந்தா ரெழுநூற்றுவர் கோடி செம்பொன்கழைமுற்று தீந்தேன் கரும்பார்வய லைந்து மூதூர்குழைமுற்று காதின் மணிக்கொம்பொடு நாய்க னீந்தான்.1065. பண்ணார் கிளவிப் பவழம் புரைசெவ்வாய்க்கண்ணார் கதிர்மென் முலைக்காம் படுமென்றோள்விண்ணோ ருலகின் னொடுமிந் நிலத்தில்லாப்பெண்ணா ரமிர்தே யவன்பெற் றவமிர்தே.1066. தேதா வெனவண் டொடுதேன் வரிசெய்யப்போதார் குழலாள் புணர்மென் முலைபாயத்தாதார் கமழ்தார் மதுவிண் டுதுளிப்பவீதா மவரெய் தியவின் பமதே.1067. முந்நீர்ப் பவளத் துறைநித் திலமுத்தமந்நீ ரமிர்தீன் றுகொடுப் பவமர்ந்தான்மைந்நீர் நெடுங்கண் புருவங் கண்மலங்கப்பொன்னா ரரிக்கிண் கிணிபூ சலிடவே.1068. கம்பார் களியா னைகலக் கமலங்கியம்பே ரரிவா ணெடுங்கண் புதைத்தஞ்சிக்கொம்பே குழைவா யெனக்கே குழைந்திட்டாய்வம்பே யிதுவை யகத்தார் வழக்கன்றே.1069. பூவார் புனலாட் டினுட்பூ நறுஞ்சுண்ணம்பாவாய் பணைத்தோட் சுரமஞ் சரிதோற்றாள்காவா தவள்கண் ணறச்சொல் லியவெஞ்சொலேவோ வமிர்தோ வெனக்கின் றிதுசொல்லாய்.1070. நற்றோ ளவள்சுண் ணநலஞ் சொலுவானுற்றீர் மறந்தீர் மனத்துள் ளுறைகின்றாள்செற்றா லரிதாற் சென்மின்போ மின்றீண்டாதெற்றே யறியாத வொரேழை யேனோயான்.1071. தூமஞ் கமழ்பூந் துகில்சேரா வசையாத்தாமம் பரிந்தாடு தண்சாந்தந் திமிர்ந்திட்டேமன் சிலைவா ணுத லேற நெருக்காக்காமன் கணையேர் கண்சிவந்து புலந்தாள்.1072. மின்னே ரிடையா ளடிவீழ்ந் துமிரந்துஞ்சொன்னீ ரவளற் பழலுட் சொரிந்தாற்றவிந்நீ ரனகண் புடைவிட் டகன்றின்பமன்னார்ந் துமதர்ப் பொடுநோக் கினண்மாதோ.1073. இன்னீ ரெரிமா மணிப்பூண் கிடந்தீன்றமின்னா ரிளமென் முலைவேய் மருண்மென்றோட்பொன்னார் கொடியே புகழிற் புகழ்ஞாலநின்வா ணெடுங்கண் விலையா குநிகர்த்தே.1074. தோளாற் றழுவித் துவர்த்தொண் டையஞ்செவ்வாய்மீளா மணிமே கலைமின் னின்மிளிரவாளார் மணிப்பூ ணவன்மாதரம் பாவைதன்னைநாளாற் பெற்றநல் லமிர்தென்ன நயந்தான்.1075. சித்திர மணிக்குழை திளைக்கும் வாண்முகத்தொத்தொளிர் பவளவா யோவக் கைவினைத்தத்தரி நெடுங்கணா டன்னொ டாடுநாள்வித்தகற் குற்றது விளம்பு கின்றதே.1076. அரும்பெறற் குருசிற் கஞ்ஞான்றோடிய நாக நாணிக்கரும்பெறி கடிகை யோடுநெய்ம்மலி கவளங் கொள்ளாதிரும்புசெய் குழவித் திங்கண்மருப்பிடைத் தடக்கை நாற்றிச்சுரும்பொடு வண்டு பாடச்சுளிவொடு நின்ற தன்றே.1077. பகைபுறங் கொடுத்த வேந்திற்பரிவொடு பகடு நிற்பத்தகைநிறக் குழைக டாழ்ந்துசாந்தின்வாய் நக்கி மின்னப்புகைநிறத் துகிலிற் பொன்னாண்டுயல்வரப் போந்து வேந்தன்மிகைநிறக் களிற்றை நோக்கிவேழமென் னுற்ற தென்றான்.1078. கொற்றவன் குறிப்பு நோக்கிக்குஞ்சரப் பாகன் கூறுமிற்றென வுரைத்த றேற்றேனிறைவநின் னருளி னாங்கொல்செற்றமிக் குடைமை யாற்கொல்சீவக னின்ன நாளான்மற்றிதற் குடற்சி செய்யமதுமிது செறித்த தென்றான்.1079. ஈண்டழற் குட்டம் போலவெரியெழத் திருகி நோககிக்கோண்டரு குறும்பர் வெம்போர்கோக்குழர்ம் வென்ற துள்ளிமாண்டதில் செய்கை சூழ்ந்தவாணிகன் மகனை வல்லேயாண்டிறங் களைவெ னோடிப்பற்றுபு தம்மி னென்றான்.1080. கன்றிய வெகுளி வேந்தன்கால்வலி யிளையர் காய்ந்துகொன்றுயிர் கொணர வோடுங்கொழுங்குடர்க் கண்ணி மாலையொன்றிய வுதிரச் செச்சையொண்ணிண மீக்கொ டானைத்தென்றிசைக் கிறைவன் றூதிற்செம்மலைச் சென்று சேர்ந்தார்.1081. சண்பக மாலை வேய்ந்துசந்தனம் பளிதந் தீற்றிவிண்புக நாறு சாந்தின்விழுமுலைக் காம வல்லிகொண்டெழுந் துருவு காட்டிமுகத்திடைக் குளித்துத் தோண்மேல்வண்டளி ரீன்று சுட்டிவாணுதல் பூப்ப வைத்தான்.1082. பண்ணடி வீழுந் தீஞ்சொற்பாவைநின் வனப்பிற் கெல்லாங்கண்ணடி கருங்க ணென்னுமம்பறாத் தூணி தன்னாற்புண்ணுடை மாம்பத் தோவாதெய்தியா லெங்குப் பெற்றாய்பெண்ணுடைப் பேதை யென்றோர்நாண்முற்றும் பிதற்றி னானே.1083. திங்கள்சேர் முடியி னானுஞ்செல்வியும் போன்று செம்பொனிங்குவார் கழலி னானுங்கோதையு மிருந்த போழ்திற்சிங்கவே றெள்ளிச் சூழ்ந்தசிறுநரிக் குழாத்திற் சூழ்ந்தாரங்கது கண்ட தாதியையனுக் கின்ன தென்றாள்.1084. என்றவ ளுரைப்பக் கேட்டேயிடிபட முழங்கிச் செந்தீநின்றெரி வதனை யொத்துநிண்முழைச் சிங்க வேறுதன்றுணைப் பெட்டை யோடுதான்புறப் பட்ட தொத்தான்குன்றிரண் டிருந்த போலுங்குங்குமக் குவவுத் தோளான்.1085. பொன்னரி மாலை தாழப்போதணி கூந்த லேந்திப்பன்னரு மாலை யாற்குப்பட்டதை யெவன்கொ லென்னாப்பின்னரு மாலை யோராள்பெருநடுக் குற்று நின்றாண்மன்னரு மாலை நாகமழையிடிப் புண்ட தொத்தாள்.1086. கடுகிய விளையர் நோக்குங்கண்ணிய பொருளு மெண்ணியடுசிலை யழல வேந்தியாருயிர் பருகற் கொத்தவிடுகணை தெரிந்து தானைவீக்கற விசித்து வெய்தாத்தொடுகழ னரல வீக்கிச்சொல்லுமின் வந்த தென்றான்.1087. அடிநிழற் றருக வென்றெம்மாணைவேந் தருளிச் செய்தான்வடிமலர்த் தாரி னாய்நீவருகென வானி னுச்சியிடியுரு மேற்றிற் சீறியிருநிலஞ் சுடுதற் கொத்தகடிமதின் மூன்று மெய்தகடவுளிற் கனன்று சொன்னான்.1088. வாளிழுக் குற்ற கண்ணாள்வருமுலை நயந்து வேந்தன்கோளிழுக் குற்ற பின்றைக்வருகென வானி னுச்சினாளிழுக் குற்று வீழ்வதின்றுகொ னந்த திண்டேர்தோளிழுக் குற்ற மொய்ம்பபண்ணெனச் சொல்லி னானே.1089. வேந்தொடு மாறு கோடல்விளிகுற்றார் தொழில தாகுங்காய்ந்திடு வெகுளி நீக்கிக்கைகட்டி யிவனை யுய்த்தாலாய்ந்தடு மழற்சி நீங்குமதுபொரு ளென்று நல்லசாந்துடை மார்பன் றாதைதன்மனத் திழைக்கின் றானே.1090. ஊன்பிறங் கொளிரும் வேலானோர்த்துத்த னுவாத்தி சொல்லாற்றான்புறங் கட்டப் பட்டுத்தன்சினந் தணிந்து நிற்பத்தேன்பிறங் கலங்கன் மாலைச்சுநந்தையுந் துணைவன் றானுங்கோன்புறங் காப்பச் சேறல்குணமெனக் கூறி னாரே.1091. ஈன்றதாய் தந்தை வேண்டவிவ்விட ருற்ற தென்றாற்றோன்லுக் காண்மை குன்றாதென்றசொல் லிமிழிற் பூட்டிமூன்றனைத் துலக மெல்லாமுட்டினு முருக்கு மாற்றல்வான்றரு மாரி வண்கைமதவலி பிணிக்கப் பட்டான்.1092. குழலுடைச் சிகழிகைக் குமரன் றோளிணைகழலுடை யிளையவர் கச்சின் வீக்கலினழலுடைக் கடவுளை யரவு சேர்ந்தெனவிழவுடை முதுநகர் விலாவிக் கின்றதே.1093. தோளார் முத்துந் தொன்முலைக் கோட்டுத் துயன்முத்தும்வாளா ருண்கண் வந்திழி முத்தும் மிவைசிந்தக்காளாய் நம்பி சீவக சாமி யெனநற்றாய்மீளாத் துன்ப நீள்கடன் மின்னின் மிசைவீழ்ந்தாள்.1094. பாலா ராவிப் பைந்துகி லேந்திப் படநாகம்போலா மல்குற் பொற்றொடி பூங்கட் குணமாலையேலா தேலா தெம்பெரு மானுக் கிஃதென்னாநூலார் கோதை நுங்கெரி வாய்ப்பட் டதுவொத்தாள்.1095. எரிதவழ் குன்றத் துச்சி யிரும்பொறிக் கலாப மஞ்ஞையிரிவன போன்று மாடத் தில்லுறை தெய்வ மன்னார்பரிவுறு மனத்தி னோடிப் பட்டதை யுணர்ந்து பொற்றாரரியுறழ் மொய்ம்ப வோவென் றாகுலப் பூசல் செய்தார்.1096. கங்கையின் சுழியிற் பட்டகாமரு பிணையின் மாழ்கியங்கவர்க் குற்ற துள்ளியவலநீ ரழுந்து கின்றகுங்குமக் கொடியோ டேந்திக்கோலம்வீற் றிருந்த கொம்மைப்பொங்கிள முலையி னார்க்குப்புலவல னிதனைச் சொன்னான்.1097. கட்டுயி லனந்தர் போலக் கதிகளுட் டோன்று மாறும்விட்டுயிர் போகு மாறும் வீடுபெற் றுயரு மாறுமுட்பட வுணர்ந்த யானே யுள்குழைந் துருகல் செல்லேனெட்பக வனைத்து மார்வ மேதமே யிரங்கல் வேண்டா.1098. நன்மணி யிழந்த நாகர்நல்லிளம் படியர் போலவின்மணி யிழந்த சாம்பியிருநில மிவர்க ளெய்தமின்னணி மதியங் கோள்வாய்விசும்பிடை நடப்ப தேபோற்கன்மணி யுமிழும் பூணான்கடைபல கடந்து சென்றான்.1099. வெந்தனம் மனம்மென வெள்ளைநோக்கின் முள்ளெயிற்றந்துவர்ப் பவளவா யம்மழலை யின்சொலார்பந்துபாவை பைங்கழங்கு பைம்பொன்முற்றில் சிற்றிலுண்ணொந்துவைத்து நூபுரம்மொ லிப்பவோடி நோக்கினார்.1100. மல்லிகை மலிந்தமாலை சோரவார்ந்த குண்டலம்வில்விலங்க மின்னுக்கோட்ட வீணைவிட்டு வெய்துராயொல்லெனச் சிலம்பரற்ற வீதிமல்க வோடினார்சில்சுணங் கிளமுலைச் செழும்மலர்த் தடங்கணார்.1101. நெய்த்தலைக் கருங்குழ னிழன்றெருத் தலைத்தரமுத்தலைத் திளம்முலை முகஞ்சிவந் தலமரக்கைத்தலங் கடுத்தடித்த பந்துநீக்கி வந்தவண்மைத்தலை நெடுந்தடங்கண் மங்கையர் மயங்கினார்.1102. கோதைகொண்ட பூஞ்சிகைக் கொம்மைகொண்ட வெம்முலைமாதுகொண்ட சாயலம் மடந்தையர் மனங்கசிந்தோதமுத் துகுப்பபோ லுண்கண்வெம் பனியுகுத்தியாதுசெய்க மையவென் றன்புமிக் கரற்றினார்.1103. செம்பொனோலை வீழவுஞ் செய்கலங்கள் சிந்தவுமம்பொன்மாலை யோடசைந் தவிழ்ந்துகூந்தல் சோரவுநம்பனுற்ற தென்னெனா நாடகம் மடந்தையர்வெம்பிவீதி யோடினார் மின்னினன்ன நுண்மையார்.1104. பூவலர்ந்த தாரினான் பொற்புவாடு மாயிடிற்போவுடம்பு வாழுயிர் பொன்றுநீயு மின்றெனாவீகலந்த மஞ்ஞைபோல் வேனெடுங்க ணீர்மல்கவாகுலத் தரிவைய ரவ்வயி றதுக்கினார்.1105. தேன்மலிந்த கோதைமாலை செய்கலம் முகுத்துராய்க்கான்மலிந்த காமவல்லி யென்னதன்ன ராயரோபான்மலிந்த வெம்முலைப் பைந்துகி லரிவையர்நூன்மலிந்த நுண்ணுசுப்பு நோவவந்து நோக்கினார்.1106. மாதரார்கள் கற்பினுக்கு டைந்தமா மணிக்கலைத்தீதிலார நூற்பெய்வார் சிதர்ந்துபோகச் சிந்துவார்போதுலா மலங்கலான்முன் போந்துபூந் தெரிவையராதகா தெனக்கலங்கி யவ்வயி றதுக்கினார்.1107. வட்டிகை மணிப்பலகை வண்ணநுண் டுகிலிகையிட்டிடை நுடங்கநொந் திரியலுற்ற மஞ்ஞையிற்கட்டழ லுயிர்ப்பின்வெந்து கண்ணிதீந்து பொன்னுகமட்டவிழ்ந்த கோதையர்கள் வந்துவாயில் பற்றினார்.1108. வினையது விளைவு காண்மினென்றுகை விதிர்த்து நிற்பாரினையனாய்த் தெளியச் சென்றாலிடிக்குங்கொ லிவனை யென்பார்புனைநல மழகு கல்விபொன்றுமா லின்றொ டென்பார்வனைகலத் திகிரி போலமறுகுமெம் மனங்க ளென்பார்.1109. நோற்றிலர் மகளி ரென்பார்நோங்கண்டீர் தோள்க ளென்பார்கூற்றத்தைக் கொம்மை கொட்டிக்குலத்தொடு முடியு மென்பாரேற்றதொன் றன்று தந்தைசெய்தவிக் கொடுமை யென்பாராற்றலள் சுநந்தை யென்பாராதகா தறனே யென்பார்.1110. தூக்குமின் காளை சீறிற் றுற்றிவ னுளனோ வென்பார்காக்குமால் வைய மெல்லாங் காவல னாகி யென்பார்பாக்கயம் பெரிது மேகா ணிதுவுமோர் பான்மை யென்பார்நோக்கன்மி னாணுங் கண்டீர் நுதிகொ ணாகரிக னென்பார்.1111. பூவரம் பாய கோதைப் பொன்னனார் புலவி நீக்கிநூபுரந் திருத்திச் சேந்த நுதிவிர னொந்த வென்பார்யாவரும் புகழு மைய னழகுகெட் டொழியு மாயிற்கோபுர மாட மூதூர் கூற்றுண விளிக வென்பார்.1112. கருஞ்சிலை மறவர் கொண்ட கணநிரை விடுக்க வல்லவிருஞ்சிலை பயின்ற திண்டோட் கிதுதகா தென்றுகுன்றிற்கருங்கட றுளுப்பிட் டாங்குக் கல்லெனக் கலங்கிக் காமரருங்கடி யரண மூதூ ராகுல மயங்கிற் றன்றே.1113. இங்கன மிவர்க ளேகவெரியகம் விளைக்கப் பட்டவெங்கணை விடலை தாதைவியனக ரவல மெய்தியங்கவ ருகுத்த கண்ணீரடித்துக ளவிப்ப நோக்கிப்பொங்கம ருழக்கும் வேலான்புலம்புகொண் டழேற்க வென்றான்.1114. மின்னினான் மலையை யீர்ந்துவேறிரு கூறு செய்வான்றுன்னினான் றுளங்கி னல்லாற்றுளங்கலம் மலையிற் குண்டேயன்னதே துணிந்த நீதியருநவை நமனு மாற்றானென்னைநேர் நின்று வாழ்தலிருநிலத் தாவ துண்டே.1115. வளைகடல் வலையிற் சூழ்ந்துமால்வரை வேலி கோலியுளையரி படுக்க லுற்றான்படுப்பினும் படுக்க மற்றென்கிளையழ வென்னை வாள்வாய்க்கீண்டிட லுற்று நின்றான்றளையவிழ் கண்ணி சிந்தத்தன்றலை நிலத்த தன்றே.1116. நீரகம் பொதிந்த மேகநீனிற நெடுநல் யானைப்போரகத் தழலும் வாட்கைப்பொன்னெடுங் குன்ற மன்னானார்கலி யாணர் மூதூரழுதுபின் செல்லச் செல்வான்சீருறு சிலம்பி நூலாற்சிமிழ்ப்புண்ட சிங்க மொத்தான்.1117. மன்னர்தம் வெகுளி வெந்தீமணிமுகில் காண மின்னிப்பொன்மழை பொழியி னந்துமன்றெனிற் புகைந்து பொங்கித்துன்னினார் தம்மை யெல்லாஞ்சுட்டிடு மென்று செம்பொன்பன்னிரு கோடி யுய்த்துக்கந்துகன் பணிந்து சொன்னான்.1118. மன்னவ வருளிக் கேண்மோமடந்தையோர் கொடியை மூதூர்நின்மதக் களிறு கொல்லநினக்கது வடுவென் றெண்ணியென்மக னதனை நீக்கியின்னுயி ரவளைக் காத்தானின்னதே குற்ற மாயிற்குணமினி யாது வேந்தே.1119. நாண்மெய்க்கொண் டீட்டப் பட்டார்நடுக்குறு நவையை நீக்கலாண்மக்கள் கடனென் றெண்ணியறிவின்மை துணிந்த குற்றம்பூண்மெய்க்கொண் டகன்ற மார்பபொறுமதி யென்று பின்னுநீண்மைக்க ணின்று வந்தநிதியெலாந் தருவ லென்றான்.1120. வாழிய ரிறைவ தேற்றான்மாநிரை பெயர்த்த காளைபீழைதான் பொறுக்க வென்னப்பிறங்கிண ரலங்கன் மாலைசூழ்கதி ராரம் வீழ்நூல்பரிந்தற நிமிர்ந்து திண்டோளூழ்பிணைந் துருமிற் சீறியுடல்சினங் கடவச் சொன்னான்.1121. ஆய்களிற் றசனி வேகமதன்மருப் பூசி யாகச்சீவக னகன்ற மார்பமோலையாகத் திசைகள் கேட்பக்காய்பவன் கள்வ ரென்னவெழுதுவித் திடுவ லின்னேநீபரி வொழிந்து போய்நின்னகம்புகு நினைய லென்றான்.1122. நஞ்சனா னுரைப்பக் கேட்டேநாய்கனு நடுங்கி யுள்ளம்வெஞ்சின வேழ முண்டவிளங்கனி போன்று நீங்கியெஞ்சினான் போல நின்றானேத்தருந் தவத்தின் மிக்கவஞ்சமில் கொள்கை யான்சொலமிர்தினால் வற்புற் றானே.1123. மின்னிலங் கெஃகி னானைப்பெறுகலான் றந்தை மீண்டுதன்னிலங் குறுக லோடுந்தாயழு தரற்று கின்றாளென்னிலை யைற் கென்னயாவதுங் கவல வேண்டாபொன்னலங் கொடிய னாயோர்பொருளுரை கேளி தென்றான்.1124. மதுமடை திறந்து தீந்தேன்வார்தரு கோதை நீமுன்செதுமகப் பலவும் பெற்றுச்சிந்தைகூர் மனத்தை யாகியிதுமக வழியின் வாழேனிறப்பல்யா னென்னு மாங்கட்கதுமெனக் கடவு டோன்றிக்கடைமுகங் குறுக வந்தான்.1125. கறவைகாண் கன்றின் வெஃகிக்கண்டடி பணிந்து காமர்நறவயா வுயிர்க்கு மாலைநாற்றிய விடத்து ளேற்றியறவியாற் காறு மூன்றுமமைந்தநா லமிர்த மேந்தப்பறவைதா துண்ட வண்ணம்பட்டினிப பிரிவு தீர்த்தான்.1126. ஆய்மணிப் பவளத் திண்ணையரும்பெறற் கரகத் தங்கட்டூய்மணி வாச நன்னீர்துளங்குபொற் கலத்து ளேற்றுவேய்மணித் தோளி நிற்பவிழுத்தவ னியம முற்றிவாய்மணி முறுவ றோன்றவந்தனை விதியிற் செய்தேன்.1127. ஆறெலாங் கடலுள் வைகுமருந்தவத் திறைவ னூலுள்வேறெலாப் பொருளும் வைகும்விழுத்தவ வறிதி நீயேயூறிலா வுணர்வி னோக்கியுரைமதி யெவன்கொன் மக்கட்பேறிலா ளல்லள் பெற்றவுயிர்சென்று பிறக்கு மென்றேன்.1128. வம்பவிழ் கோதை தந்தவான்றுவர்க் காயை வீழ்த்தோர்செம்பழுக் காயை வாங்கித்திருநிலத் தெடுத்துக் கொண்டாங்கம்பழ நீண்ட வாட்கணலமரு மணிசெ யம்பூங்கொம்படு நுசுப்பி னாய்க்குத்தந்தனென் பேணிக் கொண்டாய்.1129. பெற்றவந் நிமித்தத் தானும்பிறந்தசொல் வகையி னானுமற்றமின் மணியை யங்கைக்கொண்டவர் கண்டு காட்டக்கற்பகங் காம வல்லியனையநீர் கேண்மி னென்றுமுற்றுபு கனிந்த சொல்லான்முனிவரன் மொழியு மன்றே.1130. ஒன்றுநீர் கவலல் வேண்டாவுலகெலா மாளுஞ் சீர்த்திப்பொன்றிக ழுருவி னானோர்புண்ணியற் பெறுதி ரென்னநின்றநீ யுவந்து நீங்கநிகழ்பொரு ளெனக்குச் செப்பிப்பின்றையு நிகழ்வ துண்டுபேசுவல் கேளி தென்றான்.1131. நிலவுறழ் பூணி னானைநெடுநக ரிரங்கக் கையாத்தலபல செய்து கொல்வானருளிலான் கொண்ட போழ்திற்குலவிய புகழி னானைக்கொண்டுபோ மியக்க னஞ்சல்சிலபகல் கழிந்து காண்டிசிந்தியீ தென்று சொன்னான்.1132. வசையற நிறைந்த கற்பின்மாலையு மாமி தானுந்தசையற வுருகி வெந்துதம்முயிர் நீங்கு மாங்கணொசிதவன் சொற்க ளென்னுநோன்புணை தழுவி நெஞ்சிற்கசிவெனுங் கடலை நீந்திக்கரையெனுங் காலை கண்டார்.1133. திருக்குழன் மகளிர் நையச்சீவக சாமி திண்டோள்வரிக்கச்சிற் பிணிக்கப் பட்டான்மன்னனா லென்னக் கேட்டேதருக்குடை வேழம் வாளார்ஞாட்பினுட் டகைமை சான்றமருப்புட னிழந்த தொத்தார்மன்னுயிர்த் தோழன் மாரே.1134. நட்டவற் குற்ற கேட்டேபதுமுக னக்கு மற்றோர்குட்டியைத் தின்ன லாமேகோட்புலி புறத்த தாகக்கட்டியங் கார னென்னுங்கழுதைநம் புலியைப் பாயவொட்டியிஃ துணர லாமேயுரைவல்லை யறிக வென்றான்.1135. சிலையொடு செல்வ னின்றாற்றேவரும் வணக்க லாற்றார்முலையுடைத் தாயோ டெண்ணித்தந்தையிக் கொடுமை செய்தான்கலைவல்லீ ரின்னுங் கேண்மினின்னதென் றுரைக்கு மாங்கண்விரைவொடு சென்ற வொற்றாள்விளைந்தவா பேசு கின்றான்.1136. இட்டிவேல் குந்தங் கூர்வாளிருஞ்சிலை யிருப்புச் சுற்றார்நெட்டிலைச் சூலம் வெய்யமுளைத்தண்டு நெருங்க வேந்தியெட்டெலாத் திசையு மீண்டியெழாயிரத் திரட்டி மள்ளர்கட்டழற் கதிரை யூர்கோள்வளைத்தவா வளைத்துக் கொண்டார்.1137. பிடியொடு நின்ற வேழம்பெருவளைப் புண்ட வண்ணம்வடிமலர்க் கோதை யோடும்வளைத்தலின் மைந்தன் சீறிவிடுகணை சிலையொ டேந்திவெருவரத் தோன்ற லோடுமடுபுலி கண்ட மான்போலாறல வாயி னாரே.1138. சூழ்கழன் மள்ளர் பாறச்சூழ்ச்சியிற் றந்தை புல்லிவீழ்தரு கண்ண டம்மோய்விளங்குதோள் பிணிப்ப மற்றென்றோழரை வடுச்செய் திட்டேனென்றுதான் றுளங்கி நின்றானூழ்திரைப் பாம்பு சேர்ந்தவொளிமிகு பருதி யொத்தான்.1139. ஒற்றன்வந்த துரைப்பக் கேட்டேயொத்ததோ வென்சொ லென்னாச்சுற்றினார் முகத்தை நோக்கிசசூழிமால் யானை யன்னானுற்றவிவ் விடரைத் தீர்க்குமுபாயநீ ருரைமி னென்றான்பொற்றிரட் குன்றம் போலப்பொலிவுகொண் டிருந்த தோளான்.1140. நிறைத்திங்க ளொளியொ டொப்பான்புத்திசே னினைந்து சொல்லுமறைத்திங்க ணகரை வல்லேசுடுதுநாஞ் சுடுத லோடுமிறைக்குற்றேல் செய்த லின்றியெரியின்வாய்ச் சனங்க ணீங்கச்சிறைக்குற்ற நீங்கச் செற்றாற்செகுத்துக்கொண் டெழுது மென்றான்.1141. காலத்தீ நகரை மேயக்கடியரண் கடிந்த வம்பிற்சாலத்தீச் சவரர் கோலஞ்செய்துநம் மறவ ரீண்டிக்கோலத்தீ வேலி னானைக்கோயிலுள் வளைப்ப விப்பர்லாலைத்தீ யிடங்க டோறுமாகுலஞ் செய்து மென்றான்.1142. சிறைப்புறங் காத்துச் செல்லுமதனனைத் தெருவில் வீழப்பிறைத்தலை யம்பிற் சென்னிபெருநிலத் திடுவ லிட்டான்மறுக்குற்று மள்ளர் நீங்கமைந்தனைக் கொண்டு போகியறைத்தொழி லார்க்குஞ் செல்லாவருமிளை புகுமி னென்றான்.1143. மாற்றவர் மலைப்பி னாங்கேவாட்கடாக் கொண்டு நொய்தாவேற்றுல கேற்றி நும்பின்விரைதர்வே னுலகிற் கெல்லாமாற்றிய நட்பு வல்லேவலிப்புறீஇ யிடுமி னென்றான்கூற்றங்கள் பலவுந் தொக்ககூற்றத்திற் கூற்ற மொப்பான்.1144. காலனைச் சூழந்த நோய்போ னபுலமா விபுலர் சூழவேலினை யேந்தி நந்தன் வெருவரத் தோன்ற லோடுமாலைதன் றாதை தானு மக்களும் வந்து கூடிப்பாலவர் பிறரு மீண்டிப் பாய்புலி யினத்திற் சூழ்ந்தார்.1145. மட்டுவா யவிழ்ந்த தண்டார்த்தாமரை நாமன் சொன்னகட்டமை நீதி தன்மேற்காப்பமைந் திவர்க ணிற்பப்பட்டுலாய்க் கிடந்த செம்பொற்கலையணி பரவை யல்குலிட்டிடைப் பவளச் செவ்வாய்த்தத்தையு மிதனைக் கேட்டாள்.1146. மணியியல் யவனச் செப்பின்மங்கலத் துகிலை வாங்கிக்கணைபுரை கண்ணி யேற்பவுடுத்தபின் செம்பொற் செப்பிற்பிணையலு நறிய சேர்த்திப்பெருவிலை யாரந் தாங்கித்துணைவனுக் குற்ற துன்பஞ்சொல்லிய தொடங்கி னாளே.1147. பொன்னணி மணிசெ யோடைநீரின்வெண் சாந்து பூசித்தன்னுடை விஞ்ஞை யெல்லாந்தளிரிய லோத லோடுமின்னடு வாளும் வேலுங்கல்லொடு தீயுங் காற்றுமன்னுட னேந்தித் தெய்வமாதரைச் சூழ்ந்த வன்றே.1148. ஆரமின் னும்பணை வெம்முலை யாடமைத் தோளினாள்வீரனுற் றதுயர் மின்னென நீக்கிய மெல்லவேநேரமன் னும்வரு கென்றுநின் றாணினைந் தாளரோபாருண்மன் னும்பழி பண்பனுக் கின்று விளைந்ததே.1149. மன்னன்செய் தசிறை மாகட லுட்குளித் தாழ்வுழித்தன்னையெய் திச்சிறை மீட்டன டன்மனை யாளெனினென்னையா வதிவ னாற்றலுங் கல்வியு மென்றுடன்கொன்னும்வை யங்கொழிக் கும்பழிக் கென்செய்கோ தெய்வமே.1150. செல்வனுற் றசிறை செய்யவ ணீக்குமென் றாற்பழியில்லையா யின்னவள் யானெனும் வேற்றுமை யில்லையேசொல்லின்வெள் ளிம்மலை தோடவிழ் தாமரைப் பொன்மலரெல்லையா கும்பொதுப் பெண்ணவள் யான்குல மங்கையே.1151. ஆவதா கபுக ழும்புழி யும்மெழு நாளவைதேவர்மாட் டும்முள மக்களு ளில்வழித் தேர்கலேனோமெனெஞ் சம்மென நோக்கிநின் றாள்சிறைப் பட்டதன்காவற்கன் றிற்புனிற் றாவன கார்மயிற் சாயலே.1152. மாநகர் சுடுத லொன்றோமதனனை யழித்த லொன்றோவானிக ரில்லா மைந்தர்கருதிய ததுவு நிற்கவேய்நிக ரில்ல தோளிவிஞ்சையால் விடுத்துக்கொள்ளப்போயுயிர் வாழ்தல் வேண்டேனெனப்பொருள் சிந்திக் கின்றான்.1153. கச்சற நிமிர்ந்து மாந்தர்க் கடாவிடு களிறு போலவுச்சியு மருங்கும் பற்றிப் பிளந்துயிர் பருகிக் கோண்மாவச்சுற வழன்று சீறி யாட்டினம் புக்க தொப்பக்குச்சென நிரைத்த யானைக் குழாமிரித் திடுவ லென்றான்.1154. மின்னிலங் கெயிற்று வேழம்வேழத்தாற் புடைத்துத் திண்டேர்பொன்னிலங் கிவுளித் தேராற்புடைத்துவெங் குருதி பொங்கவின்னுயி ரவனை யுண்ணுமெல்லைநாள் வந்த தில்லையென்னையிக் கிருமி கொன்றென்றோழனை நினைப்ப லென்றான்.1155. தோழனுந் தேவி மார்தங் குழாத்துளான் றுளும்பு முந்நீரேழ்தரு பருதி தன்மே லிளம்பிறை கிடந்த தேபோற்றாழ்தகை யார மார்பிற் சீவகன் குணங்க டம்மையாழெழீஇப் பாடக் கேட்டோ ரரம்பையைச் சேர்ந்திருந்தான்.1156. வயிரம் வேய்ந்த மணிநீண்முடி வாலொளி வானவன்செயிரிற் றீர்ந்த செழுந்தாமரைக் கண்ணிட னாடலுமுயிரனா னைநினைந் தானுற்ற தோதியி னோக்கினான்மயிலனார்க் குப்படி வைத்தவன் மால்விசும் பேறினான்.1157. இடியு மின்னும் முழக்கும்மிவற் றானுல கந்நிறைந்தொடியு மூழி யிவணின்றுறு கால்வரை கீழ்ந்தெனநடலை நோக்கிக் கதிர்நாணுவ தொப்ப மறைந்தபின்கடலை யேந்தி நிலத்திட்டென மாரி கலந்ததே.1158. விண்ணு மண்ணும் மறியாதுவிலங்கொடு மாந்தர்தங்கண்ணும் வாயும் மிழந்தாங்கடல்கொண்டது காண்கெனப்பெண்ணு மாணும் மிரங்கப்பெருமான்மகன் சாமியையண்ண லேந்தி யகலம்புலிக்கொண்டெழுந் தேகினான்.1159. குன்றுண் டோங்கு திரடோளவற்கொண்டெழுந் தேகலுநன்றுண் டாக வெனநன்னுதல்வாழ்த்தினள் வாழ்த்தலுமொன்றுண் டாயிற் றவளுள்ளழிநோயுறு காளையையென்றுண் டாங்கொல் லினிக்கட்படுநாளெனுஞ் சிந்தையே.1160. சந்தமா லைத்தொகை தாழ்ந்துசாந் தங்கமழ் பூமியுள்வந்தவிண் ணோர்களை வாழ்த்தியேத் திம்மலர் மாலைதூயெந்தை மார்க ளெழுகென்ன வேகவிடுத் தாள்குரல்சிந்தை செய்யுஞ் சிறகர்க்கிளி தோற்குமந் தீஞ்சொலாள்.1161. மலைத்தொகை யானை மன்னன்மைத்துனன் மதன னென்பான்கொலைத்தொகை வேலி னானைக்கொல்லிய கொண்டு போந்தானலத்தகை யவனைக் காணானஞ்சுயிர்த் தஞ்சி நோக்கிச்சிலைத்தொழிற் றடக்கை மள்ளர்க்கிற்றெனச் செப்பு கின்றான்.1162. மன்னனாற் சீறப் பட்டமைந்தனைக் கொல்லப் போந்தாமென்னினிச் சொல்லிச் சேறுமென்செய்தும் யாங்க ளெல்லாமின்னது பட்ட தென்றாலெரிவிளக் குறுக்கு நம்மைத்துன்னுபு சூழ்ந்து தோன்றச்சொல்லுமின் செய்வ தென்றான்.1163. வாழ்வதோ ருபாய நாடி மதியுடம் பட்டு வல்லேசூழ்வினை யாள ராங்க ணொருவனைத் தொடர்ந்து பற்றிப்போழ்படப் பிளந்து வாளிற் புரட்டியிட்டரியக் கண்டேயாழ்கல மாந்தர் போல வணிநக ரழுங்கிற் றன்றே.1164. காய்சின வெகுளி வேந்தேகளிற்றொடும் பொருத காளைமாசனம் பெரிது மொய்த்துமழையினோ டிருளுங் காற்றும்பேசிற்றான் பெரிதுந் தோன்றப்பிழைத்துய்யப் போத லஞ்சிவாசங்கொ டாரி னானைமார்புபோழ்ந் துருட்டி யிட்டேம்.1165. அருள்வலி யாண்மைகல்வி யழகறி விளமை யூக்கந்திருமலி யீகை போகந் திண்புகழ் நிண்பு சுற்றமொருவரிவ் வுலகில் யாரே சீவக னொக்கு நீரார்பெரிதரி திவனைக் கொன்றாய் பெறுகெனச் சிறப்புச் செய்தான்.
பகிர்